Jump to content

தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா?


Recommended Posts

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறதா? இந்தியா தலையிடாது. தமிழர்கள் மலேஷியாவில் அடிவாங்குகிறார்களா? பரவாயில்லை, இந்தியா அதிலும் தலையிடாது. தமிழக ஆட்சியாளர்களை பிற நாட்டினர் விமர்சிக்கிறார்களா? அதைப்பற்றியும் இந்தியாவுக்குக் கவலையில்லை.

இப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சிப்பதையும் இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையிலேயே, தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா என்ற சந்தேகத்தை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணங்களை வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

உலக நாடுகள் இலங்கை அரசைக் கண்டித்த போதும், பக்கத்து நாடான இந்தியா சேனல் 4 ஆவணங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் இலங்கை அரசைக் காப்பாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டது.

ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அதில், ‘‘இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இந்தியா தனக்கு ஆதரவு தரும்போது, இந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ்நாடு தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது இலங்கை அரசுக்கு எரிச்சலைக் கிளப்பியது. அதைத்தான் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கோத்தபய, ‘‘ஜெயலலிதா தனது அரசியல் ஆதாயத்துக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார். அவர் ஏதாவது செய்ய நினைத்தால் கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தடுத்து நிறுத்தட்டும். அதை விடுத்து போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் அவர் பேச வேண்டாம்’’ என்று கோபமாகப் பேசியிருந்தார். கூடவே தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ‘அர்த்தமற்ற தீர்மானங்கள்’ என்றும் கிண்டல் செய்திருந்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ஒரு நாடு கேலி செய்வதோ, விமர்சிப்பதோ கண்டனத்துக்குரியது என தமிழகத் தலைவர்கள் கொந்தளித் துப் போனார்கள். ஆனால், கோத்தபய ராஜபக்ஷேவின் பேட்டி வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையிலும், மத்திய அரசு சிறு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றமே கருத்துத் தெரிவிக்கத் தயங்கும் நிலையில், இன்னொரு நாடு அதைக் கேலி செய்வதை இந்தியா எப்படி அனுமதிக்கலாம்? என் றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கும் விடை, ராஜபக்ஷேவின் பேட்டியிலேயே இருக்கிறது. இனப்படுகொலை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ‘‘இந்திய அரசு எங்களுக்கு எல்லாமாக இருந்து உதவி செய்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார் கோத்தபய.

இந்திய அரசு இறையாண்மையுள்ள ஒரு நாடு. அந்நாட்டில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை கேள்வி கேட்பது இந்திய இறையாண்மையைக் கேள்வி கேட்பதுபோல் ஆகாதா? என்று கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

மத்திய அரசின் அமைதியை கேள்வி கேட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, கோத்தபய ராஜபக்ஷேவுக்கு தன்னுடைய பதிலை அழுத்தமாகவே தெரிவித்துள்ளார். ‘‘எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோத்தபய எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கச்சத்தீவு பகுதிகளில் வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம் என்கிற இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அவருக்கு நினைவுபடுத்துகிறேன்’’ என்று கோபமாக பதிலளித்துள்ள அவர், ‘‘சாத்தான் வேதம் ஓத வேண்டாம்’’ என்றும் எச்சரித்துள்ளார்.

‘‘சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததுதான், கோத்தபய இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அளிக்கக் காரணமாகி விட்டது’’ என்ற ம த்திய அரசு மீதான தன் கோபத்தையும் காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டுக் குரல் இந்திய அரசுக்கு ஒருபோதும் கேட்காது என்ற உண்மை இன்னுமா இலங்கைக்குத் தெரியாமல் போய்விடும் என்பதுதான் தமிழர்களின் ஆதங்கமாகவும் இருக்கிறது.

‘‘தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் இலங்கை அரசுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே கோத்தபய ராஜபக்ஷேவின் பேச்சு காட்டுகிறது’’ என்று கூறுகிறார் சீமான். ‘‘தமிழக சட்டமன்றத் தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று கோத்தபய கூறியிருக்கிறார். இந்தத் தீர்மானத்தின் விளைவாகத்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்புச் செயலராக இருப்பதோடு, அமெரிக்க பிரஜையாகவும் இருக்கும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் மறைக்கப் பார்க்கிறார்’’ என்று சொன்னார் சீமான்.

‘‘இலங்கைக்கு மத்திய அரசு சிறு எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லையே?’’ என்ற கேள்விக்கு, ‘‘கோத்தபய பேட்டியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை இலங்கை விமர்சித்த போதும் இந்தியா அமைதியாக இருப்பதற்கு இதுதான் காரணம்’’ என்கிறார் சீமான்.

‘‘டெல்லியில் இருக்கும் இலங்கைத் தூதரை அழைத்து தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்’’ என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

தமிழர்களுக்கும் நான்தான் பிரதமர், தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்பதை பிரதமர் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்துவாரா?

Thanks to kumudam reporter

to see the picture of this new...

http://www.thedipaar.com/news/news.php?id=32649

Link to post
Share on other sites
  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]தமிழ் நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் இல்லை என்ற வகையில் தான் ஹிந்திய காட்டுமிராண்டி அரசு நடந்து கொள்கிறது![/size]

  • Like 1
Link to post
Share on other sites
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐயா, பச்சை பச்சை என லஜ்ஜை இல்லாமல் பிச்சை புகும் எச்சை குணம் அறவே அற்றவர் பாஞ்ச்  அவர் கருத்தில் தெறிக்கும் பன்ஞ்ச் என்பதை நான் அறிவேன். ஆனாலும், பாஞ்சின் கருத்தில் நான் கொண்ட  இச்சை, கொடுக்க வேண்டியது மனம் பச்சை நிர்வாகம் என் ஆசைக்கு கட்டியது கச்சை.  ஆகையால் வரிகளில் எழுதினேன் என் கருத்தை. பிகு நன்றி - டி ஆர் 🤣  
    • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, ஆனி, 2007 இரு துணைப்படைக் கூலி குழுக்களிடையே மோதல் - அறுவர் பலி அம்பாறை மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த துணைப்படைக் கூலிகள் மீது போட்டித் துணைப்படைக் கூலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. அம்பாறையிலிருந்து பொத்துவில் நோக்கி இரு முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த கருணா துணைப்படைக் கூலிகள் மீது இன்ஸ்பெக்டர் ஏற்றம் பகுதியில் வைத்து போட்டித் துணைப்படைக் குழுவான பிள்ளையான் குழு மறைந்திருந்து தாக்கியதில் ஆறு கருணா துணைப்படைக் கூலிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அண்மைய நாட்களில் கருணா பிள்ளையான் ஆகிய துணைப்படைக் கூலிகளின் தலைவர்களுக்கிடையே நடந்துவரும் மோதலினையடுத்து, பொலொன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் எனும் ராணுவப் புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கூலியின் குழுவினரில் 8 பேரை கருணா துணைப்படைக் கூலிகள் கடத்திச் சென்று கொன்றிருந்தனர். இதற்குப் பழிவாங்கும் முகமாகவே கருணா துணைப்படைக் கூலிகள் மீது பிள்ளையானின் அடியாட்கள் இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. கொல்லப்பட்ட தமது சகாக்களில் மூவரின் உடல்களைத் தூக்கிக் கொண்டு தப்பியோடிய கருணா துணைப்படைக் கூலிகள் ஏனைய மூவரையும் விட்டுவிட்டுச் சென்றதாகவும், பின்னர் பொலிஸார் அந்த மூவரின் உடல்களை கோமாரி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த 3 கருணா துணைப்படைக் கூலிகள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.  
    • நாம் இன்றுவாழும் உலகம் உருவாகி அதில் தோன்றிய உயிரினங்கள் எழுப்பிய சத்தங்களுடன், இன்று எழும் சத்தங்களும் காற்றோடு கலந்து தங்கிக் காற்றோடு அலைகிறதாம், அவை என்றுமே காற்றைவிட்டு அகன்று அழியாது எனவும், காற்றில் கலந்திருந்தாலும், அவை கலைந்து இருப்பதால், அது தெளிவின்றிப்   பேரிரைச்சலாக எங்கள் காதுகளில் கேட்பதாகவும் படித்த ஞாபகம் உண்டு. சத்தங்களை ஒன்றிணைத்து அறியும் வல்லமை உடையவர்கள் தோன்றும்போது கற்காலத்திற்கு அப்பாலும் நாம் வாழும் பூமிபற்றி அறியமுடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்கள். படித்த ஞாபகம் உள்ளதே தவிர, அது எந்தப் புத்தகம், யாருடைய வெளியீடு என்பது ஞாபகமில்லை.🤔      
    • தற்போது இருக்கும் ஆதார அடிப்படைகள் பிரகாரம் நீங்கள் கூறுவது சரியானது ஆனால் இப்போது இருக்கும் ஆதாரங்கள் முழு மனித இனத்தை ஆய்வறியும்  அளவுக்கு போதுமானதாக இல்லை ... அப்படி இருந்து இருந்தால் கீழடி பற்றி  மண்ணை கிளாராமலே நாங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வரு இடமும்  எதோ ஒரு புதிய தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது.  தவிர சீனா பகுதிகளில் மேற்கு நாடுகளின் ஆய்வுகள் மிக மிக குறைவு  அங்கு என்ன எல்லாம் புதைந்து கிடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.  கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்ற வரலாறு மாறுவது  என்பது எளிதானது அல்ல. எகிப்த்து பிரமிட்டுக்களும் மாயன்களின் பிரமிட்டுகளும்  ஒரே நேர் கோட்டில் இருப்பது தற்செயலா? தாய் செயலா? என்பதை படிப்பவர்கள்  மட்டுமே அறிந்துகொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கொலம்பஸ் அமெரிக்காவை  கண்டு பிடித்த்தில் இருந்து வரலாறு தொடங்குகிறது 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.