Jump to content

தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்


Recommended Posts

தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேசிய ஆள் அடையாள அட்டையினை வழங்கும் பணியை தொடங்குகிறது.

இத் தேசிய ஆள் அடையாள அட்டை பெறுவது தொடர்பான விளக்கம் கையேடு நாளை மறுதினம் ஈழநாதத்தில் வெளிவரும் என்று தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நன்றி: புதினம் http://www.eelampage.com/?cn=23594

Link to comment
Share on other sites

தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் நாளை திங்கட்கிழமை முதல் தேசிய ஆள் அடையாள அட்டையினை வழங்கும் பணியை தொடங்குகிறது. இத்தேசிய ஆள் அடையாள அட்டை பெறுவது தொடர்பான விளக்கம் அடங்கிய கையேடு ஈழநாதத்தில் வெளிவரும் என்று தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நன்றி: ஈழநாதம்

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்து... அன்னியக் குடியுரிமையோடு இருப்பவர்கள் ஆள்ப்பதிவுத் திணைக்களத்தில் பதிவுசெய்ய என்ன செய்யவேண்டும் எண்ற தகவல்கள் வெளிவந்தால் தயவு செய்து யாராவது இணைப்பு தாருங்கள்... பண்ணியமாய்ப் போகும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. முதலில புலம்பெயர் நாடுகளில நடைபெறுகின்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

புலம் பெயர்ந்து... அன்னியக் குடியுரிமையோடு இருப்பவர்கள் ஆள்ப்பதிவுத் திணைக்களத்தில் பதிவுசெய்ய என்ன செய்யவேண்டும் எண்ற தகவல்கள் வெளிவந்தால் தயவு செய்து யாராவது இணைப்பு தாருங்கள்... பண்ணியமாய்ப் போகும்......!

வணக்கம் தல உங்களின் ஆர்வம் போன்றதுதான் எனது ஆர்வமும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் கிடைத்தால் உடன் இணைக்கின்றேன். ஏனைய உறவுகளும் இது சம்மந்தமான தகவல்கலை அறிந்தால் உடன் அறியத்தாருங்கள்.

நன்றி :lol:

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்து... அன்னியக் குடியுரிமையோடு இருப்பவர்கள் ஆள்ப்பதிவுத் திணைக்களத்தில் பதிவுசெய்ய என்ன செய்யவேண்டும் எண்ற தகவல்கள் வெளிவந்தால் தயவு செய்து யாராவது இணைப்பு தாருங்கள்...

என்ன ஓவர் பில்டப்பாக இருக்கு. அந்த ஈழம் வேண்டாம் என்று தானே புலம் பெயர்ந்த நாட்டில் வந்து தஞ்சம் அடைந்தீர்கள் பிறகு என்ன பெரிய எடுப்பு எடுக்கிறீர்கள் :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயாக்கள்.. தமிழீழ ஆட்பதிவு திணைக்களத்தில பதியிறதுக்கு தமிழீழத்தில இருக்க வேணும் எண்டு சொல்லிட்டால் எல்லாரும் உடனடியாக போக றெடியோ..? இதே களத்தில தான் ஊமை ஒருமுறை எழுதியிருந்தவர்.. தன்ர மனக்கிடக்கையை... நாளைக்கே தமிழீழம் எண்டு புலிகள் அறிவித்தால்.. தங்களை உடனை திருப்பி அனுப்பிப் போடுவாங்களாம்.. அங்கை போய் தான் என்ன செய்யிறதாம்..? பாவம் சரியா கவலைப்படுறார்..

ஆண்டவா.. இவையைப் போல ஆட்களுக்காக எண்டாலும் தமிழீழம் கெதியில கிடைக்க வேணும்..

Link to comment
Share on other sites

உமக்கு நான் சொன்னனானோ....??? :roll: :roll: என்னைப்பற்றி என்ன தெரியும் உமக்கு.....???

*** தணிக்கை

Link to comment
Share on other sites

ஐயாக்கள்.. தமிழீழ ஆட்பதிவு திணைக்களத்தில பதியிறதுக்கு தமிழீழத்தில இருக்க வேணும் எண்டு சொல்லிட்டால் எல்லாரும் உடனடியாக போக றெடியோ..? இதே களத்தில தான் ஊமை ஒருமுறை எழுதியிருந்தவர்.. தன்ர மனக்கிடக்கையை... நாளைக்கே தமிழீழம் எண்டு புலிகள் அறிவித்தால்.. தங்களை உடனை திருப்பி அனுப்பிப் போடுவாங்களாம்.. அங்கை போய் தான் என்ன செய்யிறதாம்..? பாவம் சரியா கவலைப்படுறார்..

ஆண்டவா.. இவையைப் போல ஆட்களுக்காக எண்டாலும் தமிழீழம் கெதியில கிடைக்க வேணும்..

அது தான் இவோன் தமிழீழம் கிடைச்சால் நாம் அங்கை போய் என்ன தெருத்தெருவாக பிச்சை எடுப்பதோ ? நாம் அவப்போது விடுமுறையில் எமது குடும்பத்த பார்க்க செல்வோமே தவிர அங்கு போய் யார் நிரந்தரமாக தங்குவது. நாங்கள் உள்ளதுகளை உள்ள படி தான் சொல்வோம் ஓவர் எடுப்புகள் எல்லாம் எடுக்க மாட்டோம். நான் புலம் பெயர்ந்தது உழைப்பதற்காகவே அன்றி நாட்டு போர் சூழல் காரணமாக இல்லை. என்னைத்தவிர எம் குடும்பத்தவர் அனைவரும் தமிழீழத்தில் தான் அதுவும் என் சகோதரர்கள் தமிழீழப் பணி செய்த வண்ணமே இருக்கிறார்கள் சற்று அடக்கி வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

உமக்கு நான் சொன்னனானோ....??? :roll: :roll: என்னைப்பற்றி என்ன தெரியும் உமக்கு.....???

*** தணிக்கை

தல நீங்கள் எனக்கு சொன்னதோ யாருக்கு சொன்னதோ என்பது இப்ப பிரச்சனை இல்லை. எனக்கு நாடே வேண்டாம் நான் ஓடித்தப்புகிறேன் என தான் நாம் இங்கு வந்தோம். அங்கே எவ்வளவு சனங்கள் எப்படி எப்படி எல்லாம் கஸ்டப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரிலும் இரத்தத்திலும் நாட்டைக்கட்டி அங்கு ஒரு ஆட்பதிவுத்திணைக்களத்தை நிறுவி அங்கு தங்களையே தாங்கள் பதியவைக்கும் போது ஓடி வந்த நாம் என்ன தெனாவட்டு இருந்தால் அங்கு போய் எம்மையும் பதிய நிற்போம்.

*** தணிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் அவப்போது விடுமுறையில் எமது குடும்பத்த பார்க்க செல்வோமே தவிர அங்கு போய் யார் நிரந்தரமாக தங்குவது. நாங்கள் உள்ளதுகளை உள்ள படி தான் சொல்வோம்

உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?

ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...

Link to comment
Share on other sites

தல நீங்கள் எனக்கு சொன்னதோ யாருக்கு சொன்னதோ என்பது இப்ப பிரச்சனை இல்லை. எனக்கு நாடே வேண்டாம் நான் ஓடித்தப்புகிறேன் என தான் நாம் இங்கு வந்தோம். அங்கே எவ்வளவு சனங்கள் எப்படி எப்படி எல்லாம் கஸ்டப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரிலும் இரத்தத்திலும் நாட்டைக்கட்டி அங்கு ஒரு ஆட்பதிவுத்திணைக்களத்தை நிறுவி அங்கு தங்களையே தாங்கள் பதியவைக்கும் போது ஓடி வந்த நாம் என்ன தெனாவட்டு இருந்தால் அங்கு போய் எம்மையும் பதிய நிற்போம்.

*** தணிக்கை

முதலில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். புலம் பெயர்நாட்டில் ஏதிலிகளாய் மட்டும் அல்ல , மாணவர்களாய் , உத்தியோகத்தர்களாயும் ஈழத்தவர்கள் உள்ளார்கள்.... அது முக்கியமான விடயமல்ல. தமிழீழ வளர்ச்சியில் இங்குள்ளவர் பங்கு அதிகம்.... ஆகவே எனக்கோ அல்லது புலம் பெயர் தமிழர் அனைவருக்கும் தாயகம் பற்றி பேசவும் அதற்கான தகுதியும் இருக்கிறது.

புலம் பெயர்ந்த ஒருவர்... அல்லது தற்காலிகமாக வெளிநாட்டில் தங்கிய ஒருவர் நாட்டுக்காக இரத்தம் சிந்தவில்லை அல்லது உயிர்த் தியாகம் செய்யவில்லை என்பதை கேட்க்க சிரிப்புத்தான் வருகிறது.... எல்லோருக்கும் தாயகத்துக்குப் பாடுபடாதவர்களிற்கும் அவர்கள் நாட்டில் உரிமை இருக்கிறது.... அதற்க்கு நான் விதிவிலக்கு அல்ல....!

*** தணிக்கை

Link to comment
Share on other sites

உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?

ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...

நான் கட்டாயம் போவேன் இவோன்...!

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா....??? யாழ்ப்பாணத்தில் காணிகளின் விலை அதிகரிப்பு..! காரணம் இங்குள்ளவர்கள் அங்கு வீடுகள்.. காணிகள் வாங்குவதில் காட்டும் நாட்டம். நாணும் வெறும் காணி வாங்கி விட்டுட்டன்.... அதாவது மக்களின் மன வோட்டம் தாயகத்துக்கு திரும்பிப்போவது பற்றித்தான் இருக்கிறது இல்லாவிட்டால் எதற்காக காணிகள்....???

பணம் முக்கியம்தான்.. அதுக்காக பணமே வாழ்க்கை கிடையாது... இங்கு வியாபாரியாக இருக்கும் ஒருவன் சொல்லக்குடியது... என்னால் எங்கும் வியாபாரம் செய்யமுடியும்.... நான் கல்விகற்றதுறையில் தமிழீழத்தில் எனக்கு வேலை கிடைக்காது எண்று என்பதெல்லாம் வீண்பேச்சு தன்னம்பிக்கை இல்லாதவரின் வீண்வாதம்... தாயகம் திரும்புவோரில் எனது பெயரும் இருக்கிறது

Link to comment
Share on other sites

தம்பி தல உங்களின் வாழ்க்கைதுணை (உயிர்) இப்பவும் தாயகத்திலைதான் இருக்கிற விசயம் இவைக்கு தெரியேலை அதுதான் இப்பிடி கதைச்சுப் போட்டினம் விட்டுத்தள்ளுங்கோ.......... தமிழனுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது அதை சுவாசிக்க எல்லோரும் விரும்புவார்கள் தான்...........அதை வேண்டாம் எண்டு நிராகரிப்பவன் உண்மையான தமிழனாக இருக்கமுடியாது

Link to comment
Share on other sites

உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?

ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...

இவோன் எமது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். நான் ஒருவன் தான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் எனது 15 வது வயதில் இங்கு வந்தேன். இங்கு வந்து 8 ம் வகுப்பில் இருந்து எனது கல்வியை இங்கு தொடர்ந்தேன் 3 வருடங்கள் தொடர்ந்து படித்தேன். மாலையில் உணவகத்தில் வேலை காலையில் பாடசாலை இப்படி எனது வாழ்க்கையை 3 வருடங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓட்டிப்பார்த்தேன் முடியவில்லை. எமது குடும்ப நிலைக்கு பெருந்தொகை பணம் தேவைப்பட்ட படியால் பாடசாலைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்ய தொடங்கினேன். இன்று நான் எனக்கு இருந்த பொறுப்புக்கள் யாவற்றையும் தீர்த்துவிட்டேன். ஆனாலும் இன்றும் எனது குடும்பத்தவர்களை நான் தான் பார்த்துவருகிறேன்.

எனக்கு வதிவிட அனுமதி பற்றி கவலை இல்லை ஏனெனில் எனக்கு ஜேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது.

நான் 11 வருடங்கள் இங்கு வாழ்ந்து பழகிவிட்டேன். இங்கு பெறும் ஊதியம் போல் இலங்கையில் ஒரு போதுமே பெற முடியாது. இதனால் எனக்கு அங்கு சென்று வாழ விருப்பமில்லை. ஏனெனில் எமது ஏழ்மை நிலையை போக்கணும் என்றால் நான் இங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் அங்கு சென்று வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடக்கிற விடயங்களை பற்றி கதைக்கலாம் தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது சுயநல எண்ணங்களைப் புூர்த்தி செய்வதற்காக தமிழீழத்தைப் பற்றி கதைப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

முதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் சுயநலமற்ற மரணத்தின் மீது உங்களின் சுகபோக வாழ்க்கைக்கு கனவு காணாதீர்கள். அது பச்சைக் காட்டுமிரண்டித்தனம்

Link to comment
Share on other sites

அதிகமான புலம் பெயாந்தவர்களின் அவா தமிழீழமே ஒரு சில செக்கு மாடுகளைத்தவிர. இங்கு வருபவர்கள் அனைவரும் நிம்மதி என்பது எம் மண்ணில் தான் என்று பெருமூச்சு விட்டுச் செல்வது இங்கிருக்கும் எமக்குத் தெரியும். ஒரு சில ஒட்டுன்னிகளைத் தவிர. ஆகவே நமக்கெல்லாம் நிம்மதி வேண்டுமேனில் தமிழீழம் மலரவேண்டும். அதற்கு முடிந்ததைச் செய்வோம். அந்நியனின் காலடி நக்கித் திரிந்தது போதும். எம் மண்ணின் தட்டுமானப் பணிகளை வரவேற்போம். மலரும் தமிழீத்தை வரவேற்கத் தயாராவோம். ஒவ்வோரு உண்ணத தமிழனின் கனவு இதுவே. கொடுத்த உயிர்களை நினைத்தாவது விலைகளை நினைத்தாவது வரவேற்போம்.

நன்றி

Link to comment
Share on other sites

ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்குவதா அல்லது தாயகம் மீண்டும் திரும்பி வாழுவதா என்பது தொடர்பாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதனை நீங்கள் உங்கள் நிலையில் இருந்து பார்த்தால் இப்படியான கருத்துக்கள் தான் வரும். இங்கு புலம்பெயர்ந்து வாழும் பலர் தாயகம் விடுதலை அடைந்ததும் மீண்டும் சென்று வாழ விரும்புகிறார்கள். தாயகத்தில் ஒன்றும் இல்லை என்று கூறுகிறீர்கள். அங்கு இவ்வளவு சம்பளம் எடுக்கமுடியாது என்று கூறுகிறீர்கள். ஏன் முடியாது. அதற்கு சில காலம் ஆகலாம் என்று மட்டுமே கூலாமே தவிர முடியாது என்று கூறவியலாது. இன்று உலகில் எந்தவொரு வளமும் இல்லாத சிங்கப்பூர் ஒரு முன்மாதிரியாக நிற்கும் போது, ஜப்பான் நிமிர்ந்து நிற்கும் போது ஏன் எம்மால் முடியாது. இன்று ஜேர்மனியில் இருந்து கணிசமான சம்பளம் பெறுகிறார்கள் என்றால் அதனை எப்படி அடைந்தார்கள். இரண்டாம் உலகப்போரின் முடிவில் கையில் பணம் இல்லாது மற்றைய நாட்டிடம் கடன் வாங்கித்தான் தமது நாட்டைக் கட்டிவளர்த்தார்கள். அதுவும் மிகவும் குறுகிய காலத்தில். வரலாறு இப்படி உதாரணங்களைக் காட்டி நிற்கும் போது ஏன் எம் தாயகத்தால் முடியாது.

இவை அனைத்து தமிழரிடமும் உள்ள கல்வியறிவினையும் கொண்டே அடையலாம். அவ்வறிவினை வழங்கப் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கல்விகற்றுக்கொண்டிருக்கும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனவருடம் வடதமிழீழத்துக்கு சென்றிருந்தேன். தமிழீல எல்லையில் இருந்து எங்கட பிள்ளைகள் அன்பாக வரவழைத்தவிதம், பாண்டியன் சுவையுற்று உணவு, யாழ்ப்பாணத்துத்தமிழ்,கிணத்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு யாழ்ப்பாணத்தில் தான் கடைசிக்காலத்தில் வாழ விருப்பம்.ஆனால் ஆச்சி இங்கை சொகுசு வாழ்க்கைக்குப்பழகிவிட்டா

எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் கடைசி வரியில் பிளெட்டை மாத்தினீர்கள் பார்த்தீர்களா..? சபாஷ்..

அதற்கென்ன..? ஆச்சி இருக்கிறா என்றதற்காக நீங்களும் இருக்க முடியுமென்றால்.. நீங்கள் யாழ்ப்பாணத்தில் போய் இருந்தால் கண்டிப்பாக ஆச்சியும் வருவா..

தயவு செய்து.. வெளிநாடுகளில் கிடைக்கின்ற வசதியும் வாய்ப்பும், தனி மனித வாழ்வை மேம்படுத்தக் கிடைக்கின்ற வாய்ப்பு, அங்கே எனக்கு இல்லை. அதனால் அங்கு செல்ல முடியாதுள்ளது என்ற உண்மையைச் சொல்லுங்கள்.. அது நேர்மை.. அதை விட்டுப் போட்டு.. தண்ணி நல்லம் .. காத்து நல்லம்.. ஆனா.. ஆச்சி விடுறாவில்லை என்ற சாட்டுக்களை சொல்லாதீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லதம்பி குறை நினைக்கவேண்டாம். என்னைப்போல பல வயதானவர்கள் தமிழீழத்தில் வாழவே விருப்பம். பலர் பிள்ளைகளுக்கு, கணவன்,மனைவிகளுக்குப்பயந்து விருப்பமில்லாமல் வெளினாடுகளில் வாழ்கினம். எனக்குத்தெரிந்த ஒருவர் 70 வயது இருக்கும். அவர் வைத்திய தாதியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வேலை செய்யவிருப்பம். ஆனால் அவரின் பிள்ளைகள் அவர் அங்கு போகத்தடுக்கிறார்கள். எதாவது வருத்தம் வந்தால் ஆர் பாப்பினம் என்று அவர்களின் பிள்ளைகள் கேக்கினம். எல்லாச்சொத்துக்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து,அவர்களிடம் கையெந்திக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற வயோதிபர்கள் தமிழீழத்துக்கு போகவிரும்பியும் மனைவி,கணவர்,பிள்ளைகளிடன் பேச்சுகளுக்கு எதிர்பேசாமலும் வெளினாடுகளில் வாழ்கினம்.

Link to comment
Share on other sites

சரி.......சரி..இப்ப என்னத்துக்கு அடிபடுகிறீயள் எல்லாரும் எங்கடை பிரச்சனையை சாட்டா வைச்சுக் கொண்டு வெளிநாட்டுக்கு போனீங்கள் இதில் பாதுகாப்பு படிப்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக இருந்திருக்கலாம் ஆனா இப்போ நீங்கள் அப்பிடியான வாழ்க்கைக்கு பழகி விட்டீங்கள் இனி ஒரு தீர்வு கிடைத்தாலும் உங்களால் எமது மண்ணில் வந்து வாழ முடியுமா எண்டது சந்தேகமே...........நீங்கள் ஓம் எண்டாலும் உங்களின் தமிங்கிலம் பேசும் பிள்ளைகள் ஒத்து வரமாட்டார்கள் என்பது யதார்த்தம் எத்தனையோ வீடுகளில் பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள் என்றவுடன் வீட்டிலில் அவர்களுக்கு என்று வெளிநாட்டுபாணியில் பாத்துறூம் கட்டியதைப் பாத்திருக்கிறேன் சும்மா ஊரைப் பாத்து சனத்துக்கு லெவல் காட்டியிட்டுப் போக வரலாம் ஆனால் முழு மனத்துடன் அங்கு வருவீர்கள் எண்டு சொல்வது வெறும் பம்மாபத்து...........இதுதான் உண்மை (அல்லாட்டி அந்த நாடுகள் கட்டாயமாக திருப்பி அனுப்பவேணும்)

நீங்கள் நினைக்கலாம் முகத்தான் மாத்திரம் என்ன திறமோ எண்டு நான் மட்டும்நான் இங்கு இருக்கிறேன் என்ரை மனுசி இப்பவும் ஈழத்தில்தான் வருடத்தில் கிடைக்கும் 1மாத லீவுதான் எமக்கு இனிய நாட்கள் ஊரில் இருக்கும் மனுசிக்கு கோல் எடுத்து கேட்டன் எப்பிடி சந்தோஷமாக இருக்கிறீங்களா? எண்டு அவள் சொல்லுறாள் கேட்டு வாசலுக்கை ஆமிக்காரன் நிக்கிறான் எப்பிடியப்பா சந்தோஷமாக இருக்கிறதெண்டு இதுதான் ஈழத்தில் இருப்பவர்களின் நிலை போராட்ட காலத்தில் தப்பிப் பிழைத்து பிறகு போய் வாழ நினைப்பது கூட ஒரு வகையில் சுயநலம்தான்..................(தவறாக எழுதியிருந்தால் மன்னியுங்கள்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.