Archived

This topic is now archived and is closed to further replies.

மோகன்

ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய

Recommended Posts

ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்தியா "பல்டி" அடிக்குமா?

vaiko1.jpg

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளின் புதிய வியூகங்கள் தொடர்பான செய்திகள் எல்லாம் "அரசியலில் எதிரியும் இல்லை..நண்பனும் இல்லை" என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

தமிழகத் தேர்தல் களம் இரண்டு அணிகளைக் கொண்டது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான 7 கட்சி கூட்டணி. இதில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சி, தமிழக கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பிரதான கட்சிகள்.

இவர்களுக்கு எதிர் அணியான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். பிரதான கட்சிகளின் கூட்டணி இல்லாமல் இதுவரை தனித்தே நிற்கிறது.

இவர்களைத் தவிர தொல். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், விஜயகாந்தின் கட்சி, கார்த்திக்கைத் தலைவராகக் கொண்டுள்ள பார்வார்டு பிளாக் என சிறு சிறு கட்சிகளும் களத்தில் உள்ளன.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பல தேர்தல்களுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனையானது தமிழகத் தேர்தல் களத்தில் இம்முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஈழத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகளைக் கண்டு தமிழகம் கொதித்து எழுந்தது.

தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, ராமதாஸ் கண்டனக் கூட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து கூட்டணியின் தலைவரான கலைஞர் கருணாநிதியும் தமது கூட்டணிக் கட்சியினரது கருத்தே தமது கருத்து என்று கூறினார்.

ஒரு திருப்பமாக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சென்னையில் சந்திக்க மறுத்தார்.

சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவுக்கும் ஜெயலலிதாவுக்குமான உறவு உலகம் அறிந்தது. இருவரும் இன்னொரு உடன்பிறவா சகோதரிகளாகவே அடையாளம் காணப்பட்டு வந்தனர்.

தமிழகத் தேர்தல் களத்தை மனதில் கொண்டு மகிந்த ராஜபக்சவை ஜெயலலிதா தவிர்த்தாரா, சந்திரிகாவின் வேண்டுகோளை ஏற்று மகிந்த ராஜபக்சவின் மூக்கை உடைத்தாரா என்பது ஜெயலலிதா ஜெயராமுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சரி இப்போது..தேர்தல் களத்துக்கு வருவோம்.

இந்திய மத்திய அரசில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய கட்சிகள் ஒன்றாக இடம்பெற்றிருப்பதன் மூலமே இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய அரசின் வழமையான வல்லாதிக்கப் போக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை.

சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் உதவக் கூடும் என்று ஒவ்வொரு முறையும் செய்திகள் வெளியான போதெல்லாம் புதுடில்லிக்கு ஓடோடிச் சென்ற வைகோ, ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொரு அங்குலத்தையுமே தடுத்தார் என்றால் மிகையில்லை. மகிந்த ராஜபக்சவின் அண்மைய இந்திய வருகையின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூட, இந்தியா-சிறிலங்கா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் கைவிடப்பட்டமைக்கு வைகோவின் பங்கு பாரியதானது.

இந்திய அரசாங்கத்தில் வைகோவின் கட்சி கூட்டணிக் கட்சியாக நீடிக்கும் வரையில் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவின் கால்களும் கைகளும் கட்டப்பட்டுத்தான் இருக்கும். அதற்கு காரணம் வைகோவின் செயற்பாடுகளை அந்தக் கூட்டணியில் உள்ள தமிழகக் கட்சிகள் எதுவும் எதிர்க்கப்போவதில்லை. இதனால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்- இந்திய அரசின் பிரதான கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கடமையும் நெருக்கடியும் இந்திய அரசின் இறுதிநாள் வரை நீடிக்கும்.

ஆனால் இதுநாள் வரை ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொள்கையோடுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதா செயற்பட்டு வருகிறார். உச்சகட்டமாக வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.

தமிழகத்தில் ஈழ விடுதலைப் புலிகளின் கொட்டத்தை ஒடுக்கிய ஒரே முதல்வர் நானே என்றும் கருணாநிதிதான் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர் என்றும் யார் சொல்வார்கள் என்று கேட்டால் அது ஜெயலலிதாதான் என்று எல்லோரும் சொல்லிவிடலாம்.

எதற்காக இந்தப் பீடிகை என்று கேட்கிறீர்களா?

ஆம். நீங்கள் ஊகிப்பதும் நம்ப முடியாத ஒன்றும் இப்போது அரங்கேறப் போவதாக தமிழகத்திலிருந்து உறுதிப்படுத்தப்படுகிற தகவல்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ஆம்.

ஜெயலலிதாவின் அணியில் வைகோ இணைகிறார் என்பதுதான் அது.

பொடா சட்டத்தின் கீழ் தம்மை சிறையிலடைத்த அதே ஜெயலலிதாவுடன் வைகோ இணையக் கூடுமாம்.

தமிழ்நாட்டில் தாம் எப்போதும் கருணாநிதி தலைமையிலான கூட்டணியிலே நீடிப்பதாகவும் கருணாநிதிதான் முதல்வராக பதவியேற்பார் என்றும் வீர முழக்கமிட்டு வந்த வைகோ, அண்மைக்கலமாக இந்த சுருதியை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 21 ஆசனங்களுடன் போட்டியிட்டது மறுமலர்ச்சி தி.மு.க. இம்முறை ஆகக் கூடிய அளவில் ஏறக்குறைய 60 ஆசனங்களை தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கருத்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் வைகோவுக்கு 60 ஆசனங்கள் ஒதுக்கப்படும் என்பது நடக்கவே நடக்காத ஒன்று.

ஏனெனில் தமிழகத்தில் உள்ள மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 234.

இதில் தனிப்பெரும்பான்மை பெற திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடக் கூடிய தொகுதிகள் 130-140 வரையாகும். இதர 100 தொகுதிகளை காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., 2 கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு 40-45, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 25 முதல் 27 வரை, மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு 20-22, கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 15-18 என்றுதான் அனேகம் ஒதுக்கீடு செய்ய முடியும்.

ஆகவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் அளவில்தான் இந்த முறையும் போட்டியிட முடியும்.

ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அணியில் அக்கட்சி தனியாக இருப்பதால் தன்னுடன் வரும் ஏதோ ஒரு கூட்டணிக் கட்சிக்கு ஆகக் கூடிய ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

அந்த ஆகக் கூடிய ஆசனங்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உள்ளது.

ஏனெனில் இந்திய மைய ஆட்சி நடத்தும் காங்கிரசின் பிரதான கூட்டணிக் கட்சி தி.மு.க.. அதனால் காங்கிரசு கட்சி, அணி மாறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

பாட்டாளி மக்கள் கட்சிக்கான கதவை முதலிலே மூடிவிட்டதாகக் கூறுவதுபோல் அந்தக் கட்சியின் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை அண்மையில் ஜெயலலிதா தன் பக்கம் இணைத்துக் கொண்டுள்ளார்.

அதனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான சந்தர்ப்பம் இது என்று சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா ஜெயராமின் கணக்கு சரியாகிவிடும் என்பதைப் போல் தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் வைகோ மற்றும் அவர்களது கட்சியினரது செயற்பாடுகள் இருப்பதாக தமிழக பத்திரிகைகளும் சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் தெரிவிக்கின்றன.

அதுவும் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தொடங்கிய முதல் பிரச்சார இயக்கத்தில் வைகோவின் பேச்சுதான் இந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.

தமிழகம் முழுவதும் ஜெயலலிதா ஆட்சியை அகற்ற வலியுறுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தினர்.

விருதுநகரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் காலத்துக்கு முன்பெல்லாம் நான் தி.மு.க. கூட்டணியில்தான் இருப்போம்; கருணாநிதிதான் முதல்வர் என்றெல்லாம் கூறி வந்த வைகோ, விருதுநகர் கூட்டத்தில் அதுகுறித்து எதுவும் பேசாததோடு ஜெயலலிதா எதிர்ப்பு முழக்கத்தை மட்டுப்படுத்தியிருப்பதாக தமிழக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேபோல் அண்மைக்காலங்களில் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும், ஆகக் கூடிய ஆசனங்களை அளிக்காவிட்டால் கூட்டணி மாறுவோம் என்று பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாக பேசி வருகிறார் என்றும் இதை வைகோ கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன என்றும் தமிழக ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க வைகோ தயாராகிவிட்டார் போல்; அதனால்தான் தி.மு.க. மீதான விமர்சனங்களை வைகோ சுட்டிக்காட்டாமல் மவுனமாக இருக்கிறார் என்று தி.மு.க. தரப்பினர் குமுறுகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டங்களிலும் கூட அனைத்து நிர்வாகிகளும் தாங்கள் வகிக்கிற தி.மு.க.வை சாடி வருவதும் அதற்கான காரணங்களை பட்டியலிடுவதுமாகவும் இருந்து வருகின்றனர். அதையும் வைகோ கண்டுகொள்ளுவதில்லை என்றும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதால்தான் அவர்களை வைகோ பேச அனுமதிக்கிறார் என்றும் தி.மு.க. தரப்பு கூறி வருகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊசலாட்ட நிலையை உள்வாங்கிக் கொண்ட தமிழக உளவுத் துறையும் ஜெயலலிதாவின் நிழல் ஆலோசகர் சசிகலா நடராசனும் இது தொடர்பிலான பேச்சுகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அணியில் வைகோ இணைந்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.

என்றைக்கும் ஈழத் தமிழர் பிரச்சனையில் வைகோ ஆதரவானவராகத்தான் இருக்கிறார்.

ஒரு சிக்கலான காலகட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சனையானது இறுதி காலகட்டத்தில் இருக்கும்போது தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு எதிர்நிலை எடுப்பதைத் தடுக்க வைகோவின் கட்சி இந்திய அரசாங்கத்தில் இருக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும் என்பது ஈழத் தமிழ் ஆதரவாளர்களின் விருப்பம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த விடயத்தில் வெளிப்படையாக வைகோவைப் போல் செயற்படாவிட்டாலும் எதிர்க்காமல் இருந்துவருவதால் இந்திய அரசினது நிலைப்பாடானது தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

கடந்த காலத்தில் வைகோ, ஜெயலலிதா அணியில் இருந்த போதும் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா தன் கருத்துகளை மாற்றிக்கொண்டுவிடவில்லை. வைகோதான் கொஞ்சம் அடக்கி வாசிக்க நேரிட்டது என்பதையும் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அணி மாற்றத்துக்காக வைகோ தரப்பிலிருந்து ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் மீண்டும் ஜெயலலிதாவை விட்டு வைகோ விலகவும் செய்யலாம்.

ஆனால் கருணாநிதி நல்லவரா? ஜெயலலிதா பரவாயில்லையா? என்பதன் அடிப்படையில் தனது கட்சி நலனைக் கருத்தில் கொண்டு வைகோ எடுக்கப் போகும் முடிவு, ஈழத் தமிழர் பிரச்சனையில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே விடயம் முகப்பிலும் இணைக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

அரசியல்ல இதெல்லம் சகஜம் தான், இருந்தாலும் வைகோ ஜெயாவோடு சேர்ந்து கூட்டனி அமைத்தால் பெரும்பாலும் பல நன்மைகள் வரக்கூடும், வைகோ எந்த விடயத்திலும் விட்டுக்கொடுக்கும் ரகத்தைச்சேர்ந்தவர் அல்ல என்பது பலருக்கு தெரியும், ஒருவித ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் சேருகிறார்கள் போல், இன்று இந்தியா மத்திய அரசை தனது செல்வாக்கால் கலக்கிய வைகோ, தமிழகத்தையும் கலக்கப்போகிறாரா? அல்லது அரசியல் சதுரங்கம் ஆடப்போகிறாரா எண்டு பார்ப்பம்,,, இன்று வரை ஈழத்தமிழர் எவரின் ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை, வைகோவும் தனது என்னொரு முகத்தை காட்டமாட்டார் என்பதே எனது கருத்து,

கூட்டிக்கழிச்சு பெருக்கிப்பார்த்தால் எல்லாம் நன்மைக்கே,,, :idea:

Share this post


Link to post
Share on other sites

ம்ம் வைகோ எது செய்தாலும் ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே தனது காய் நகர்த்தல்களை செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

இது ஏற்கனவே எதிர்பார்க்கப் பட்டதுதான். வை.கோ மீண்டும் ஜெயலலிதாவிடம் சரணடைந்தால் அவரும் அரசியலை பிழைப்பக்காகத்தான் நடத்துகின்றார் என்பது உண்மையாகின்றது. அவர் அ.தி.மு.கவில் இணைந்தால் முன்புபோல் பெட்டிப் பாம்பாகவே காலத்தை கடத்த வேண்டும். அவர் அ.தி.மு.கவுடன் சேர்வதைவிட வேறு வழிகளை அவர் சிந்திப்பது ஆரோக்கியமாக இருக்கலாம். அ.தி.மு.க சென்ற வருட பிற்பகுதியிலிருந்தே வை.கோவுடன் தமது பக்கம் இழுப்பதற்காக 4 கோடிக்கு மேல் பேரம் பேசியுள்ளனர். இவ்விடயம் சென்ற கார்த்திகை மாதத்திலேயே சுட்டிக் காட்டப்பட்ட இணைப்பு:

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#142935

Share this post


Link to post
Share on other sites

வைகோ-ஜெயா கூட்டு....

* இக்கூட்டால் ஈழத்தமிழருக்கு ஏதாவது பாதிப்பேற்படுமா???

* இதற்கு முன் இக்கூட்டு இடம் பெறவில்லையா??

* இப்படியான கூட்டு இதுதான் முதல் தடவையா, தமிழ்நாட்டு அரசியலில்??

இவற்றிற்கான பதில்கள் மறைக்கமுடியாதவை!!

இந்தியாவிலென்ன தமிழ்நாட்டு அரசியலில் இவைகள் காலத்துக்கு காலம் நடைபெற்றவைதான்!! கடந்த காலங்களில் மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர், கருணாநிதியுடன் ஒவ்வொரு தேர்தல்களிலும் மாறி மாறி காங்கரஸ் கூட்டு வைத்தது. சொல்லப்போனால் ஒருமுறை கருணாநிதி சிறை செல்லக் காரணமாகவிருந்த இந்திராகாந்தியுடன், அதன்பின் கருணாநிதி கூட்டு வைத்தவர்தான்!! இந்திய அரசியலில் இவைகள் சகஜம். இதற்கு மேல் வைகோ ஏற்கனவே ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்தவர்தான்!

எல்லாவற்றிற்கும் மேலாக வைகோ அரசியலுக்கு அப்பால் எம்மை ஆதரிப்பவர். இலங்கையில் இந்தியப்படைகளின் நரவேட்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தனதுயிரையும் துச்சமாக மதித்து ஈழம் வந்து தனது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தியவர் வைகோ எனும் உன்னத தமிழ் உணர்வாளன்!! எந்நிலை வரினும் எம்மை வைத்து அரசியல் லாமம் தேட ஒருபோதும் வைகோ முன்வரமாட்டார். சொல்லப்போனால் இக்கூட்டால் எமக்காதரவான பல செயற்பாடுகளே நடைபெறப்போகின்றது.

Share this post


Link to post
Share on other sites

வைக்கோ வின் நகர்வுகள் தூரநோக்கம் கொண்டவை. நல்லது தான் நடக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

கடந்த காலத்தில் வைகோ, ஜெயலலிதா அணியில் இருந்த போதும் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா தன் கருத்துகளை மாற்றிக்கொண்டுவிடவில்லை. வைகோதான் கொஞ்சம் அடக்கி வாசிக்க நேரிட்டது என்பதையும் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுதான் கடந்த காலம்..எதிர்காலம் எப்படியோ..?! வை கோ திமுக கூட்டணியை விட்டு விலகின் மத்திய அரசுடனான கூட்டணியில் நிலைப்பாரா..??! நிலைக்காவிடில் எப்படி அழுத்தங்களை கொடுப்பார் ஆளும் தரப்புக்கு..??! :idea:

Share this post


Link to post
Share on other sites

எவர் எப்படியோ, மற்ற எல்லா இந்தியத் தலைவர்களைப் பார்க்கவும் வைகோ சிறந்தவர். எந்த நிலையிலும் தனது ஈழக் கொள்கைகளை மாற்றாதவர். உண்மையில் அதனால் அவருக்கு எவ்வித அரசியல்லாபமும் கிடையாது. பிரச்சனைகள் தான் அதிகம். அப்படியிருந்தும் எமக்காக குரல் கொடுத்த அவர் கொள்கை மாற்றமாட்டார் என்பது நம்பிக்கை.

காசு கொடுத்ததல்லாம் பொய்க்கதை. தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இப்படிப்பட்ட புரளியைக் கிளப்பி விடுவதில் சிலர் சூரர்.

Share this post


Link to post
Share on other sites

¾Á¢úò¾¢¨ÃôÀ¼í¸Ç¢ø ¾ü§À¡Ð À£Êò¾¢ÕìÌõ ´Õ Ò¾¢Â §¿¡ö Àïî ¼ÂÄ¡ì «Ð §À¡ø þùÅ¢¼Âò¾¢ø ¦º¡øÄ §ÅñÎõ¦ÁýÈ¡ø : ¾¢.Ó.¸.×¼ý ¨Å째¡ §¾÷¾¨Ä ºó¾¢ôÀÐ àìÌ §À¡ðÎ즸¡ûÅÐ §À¡ýÚ «.¾¢.Ó.¸.×¼ý §º÷ÅÐ ÍÉ¡Á¢ ÅÕõ ±ýÚ ¦¾Ã¢óÐõ ¸¼ü¸¨Ã¢ø ¸¡ò¾¢ÕôÀÐ §À¡ýÚ.

¬É¡ø ´Õ Å¢¼Âõ «Å÷ Á£Ð ±ÉìÌ ¬Â¢Ãõ ¸ÕòЧÅÚÀ¡Î¸û þÕó¾¡Öõ ¦º¡ø¸¢§Èý,®Æò¾Á¢Æ÷ Å¢¼Âò¾¢ø «Å÷ þý¦É¡Õ «ö¡ ÀÆ.¦¿ÎÁ¡Èý

Share this post


Link to post
Share on other sites

வைகோவை தடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் குள்ளநரித்தனத் திட்டங்களில் ஒன்று. உண்மையான தம்பி பாசம் என்று ஒன்று கருணாநிதியிடம் இருந்திருக்குமானால், எதற்கு வைகோ தொடர்பான செய்திகளை தனது குடும்ப ஊடகமான சண் தொலைக்காட்சியில் இருட்டடிப்புச் செய்ய வேண்டும்?

உண்மை இதுதான், கருணாநிதி தனது வலைக்குள் வைகோவை விழுத்தி வைகோவின் ம.தி.மு.கவை ஒழிக்கவே திட்டமிடுகிறார்.

கட்சிக்காக அடிமட்டத்திலிருந்து உழைத்த எவருக்கும் கருணாநிதி பதவி கொடுத்ததாக வரலாறு இல்லை. எப்போதும் தனது குடும்ப அரசியலைத்தான் கருணாநிதி நடத்தி வருகிறார்.

உதாரணத்திற்கு முரசொலிமாறன் மறைந்தவுடன் திடீரென தயாநிதி மாறனை அரசியலுக்குள் கொண்டுவந்து மத்திய அமைச்சர் பதவியும் பெற்றுக் கொடுத்தார்.

அன்றிலிருந்து கட்சிக்காக உழைத்த தீப்பொறி ஆறுமுகம், ராதரவி, எஸ்.எஸ்.சந்திரனுக்கு கருணாநிதி செய்தவை யாவரும் அறிந்த ஒன்று. இப்படி எமக்கு தெரியாத பலர் கருணாநிதியின் குடும்ப அரசியலை வெறுத்து ஒதுங்கியிருப்பார்களோ யார் கண்டது.

கருணாநிதி அன்றிலிருந்து குடும்ப அரசியல்தான் நடத்தி வருகிறார். கருணாநிதிதான் எம்.ஜி.ஆரையும் உருவாக்கினார். ஜெயலலிதாவையும் உருவாக்கினார். அதேபோன்று வைகோவையும் இன்று உருவாக்கினார், உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

எனது கருத்தின் படி ஜெயலலிதா உண்மையில் மிகவும் நேர்மையானவர். அதாவது அவர் ஒரு விடயத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்துவிட்டால் அதனை இறுதிவரை எதிர்த்து நிற்பவர். ஆதரவு வழங்குவது என்று முடிவு எடுத்துவிட்டால் இறுதி வரை ஆதரித்து நிற்பவர். ஆனால் கருணாநிதி அப்படிப்பட்டவரல்ல. கழுவுகிற மீனில் நழுவுகிற ஆசாமி.

அவர் ஒரு விடயத்திற்கு ஆதரவு கொடுக்கிறாரா இல்லையா என்பது அவருக்கே தெரியாது என்பதுடன், தான் எந்த நிலையில் இருப்பதாக அவருக்கே தெரியாது.

வைகோவை சரியாக கையாளாது விட்டால் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி மீண்டும் மண்கவ்வப் போவது என்பது உறுதி. கருணாநிதியால் தான் திமுகவுக்கே அழிவு காலம். ஆனால் கருணாநிதி இதனைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் கருணாநிதி அரசியலுக்கு வந்து பணத்தை சுரண்டி எடுத்துவிட்டால். தமிழ்நாட்டு அரசியலில் ஊழலை அறிமுகப்படுத்தியதே கருணநரிதிதான்.

இங்கே நான் ஜெயலலிதா நல்லவரென்று கூற வரவில்லை. கருணாநிதியை விட எவ்வளவோ மேல் ஜெயலலிதா. அண்மையில் கருணாநிதி விடுத்த ஈழத்தமிழர் ஆதரவு தொடர்பான அறிக்கையைக்கூட பாருங்கள். மத்திய அரசு ஈழத்தமிழர்கள் விடயத்தில் எடுக்கிற முடிவைத்தான் தமது கட்சி ஆதரிக்கும் எனில், நாளை ஈழத் தமிழர்களை அழிக்க இந்தியா உதவினால், இவர் ஆதரிப்பார் என்றுதானே அர்த்தம்?

வைகோ தூய்மையான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர். அன்றும் இன்றும் என்றும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர். அவர் எந்த கூட்டணிக்குச் சென்றாலும் தனது கொள்கையில் இம்மியளவும் குறையாது ஆதரவு வழங்குபவர்.

என்னைப் பொறுத்த வரை வைகோ, தமிழ்நாட்டு அரசியலில் அவரது கட்சியையும், அவரையும் நிலை நிறுத்த வேண்டுமானால் சந்தர்ப்பத்திற்கு அல்லது அன்றைய சூழ்நிலைக்கேற்ப எந்தக் கட்சிகளுடனும் கூட்டுச் சேர்வதில் தப்பேதும் இருப்பதாக தென்படவில்லை என்பதுடன், ஈழத் தமிழர்கள் தொடர்பான ஆதரவு நிலையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, தற்போது ஈழத் தமிழர்கள் தொடர்பான விழிப்புணர்வு நிலை தமிழகத் தமிழர்களிடம் பாரியளவில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே வைகோவின் முடிவினால் எமக்கு பெரிதாக பாதிப்பு எதுவுமம் ஏற்படாது என்றே நம்புகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

இந்திய அரசியலில் உள்ள கட்சிகளில் மிகவும் தீவிரமான தமிழ்தேசிய விரோதக் கொள்கையுடைய கட்சி "காங்கரஸ் கட்சியே"!! அவர்களிடமே தன் கொள்கையில் உறுதியாகவிருந்த வைகோவா, இவ்வரப்போகும் கூட்டணிக்காக தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்கப் போகிறார்??????????

தமிழ்நாட்டின் விடிவெள்ளியான வைகோ எடுக்கும் எந்த ஒரு நகர்வும் எம் தேசியத்துக்கு எக்காலத்திலும் எதிராக இருக்கப் போவதில்லை மாத்திரமன்றி தமிழ்தேசியத்தை நிச்சயமாக பலப்படுத்த பயன்படும்.

Share this post


Link to post
Share on other sites

இந்திய அரசியலில் உள்ள கட்சிகளில் மிகவும் தீவிரமான தமிழ்தேசிய விரோதக் கொள்கையுடைய கட்சி "காங்கரஸ் கட்சியே"!! அவர்களிடமே தன் கொள்கையில் உறுதியாகவிருந்த வைகோவா, இவ்வரப்போகும் கூட்டணிக்காக தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்கப் போகிறார்??????????

தமிழ்நாட்டின் விடிவெள்ளியான வைகோ எடுக்கும் எந்த ஒரு நகர்வும் எம் தேசியத்துக்கு எக்காலத்திலும் எதிராக இருக்கப் போவதில்லை மாத்திரமன்றி தமிழ்தேசியத்தை நிச்சயமாக பலப்படுத்த பயன்படும்.

நிச்சயமாகக் கனென். ஆனால் வைகோவினைப் பற்றி எங்களுக்க தவறான செய்திகள் பரப்பப்படுவதை கண்டு கொள்ளவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தமிழரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்

சர்வ கட்சி மாநாட்டை கூட்டுமாறு ஜெயலலிதாவிடம் நெடுமாறன் வேண்டுகோள்

இலங்கையில் இராணுவ அட்டூழியங்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவும் சிங்கள கடற்படையின் கொடூர தாக்குதல்களுக்கு இரையாகும் தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் சர்வ கட்சி மாநாடொன்றை உடனடியாக நடத்தி இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பாதுகாப்பு உடன்பாடு என்னும் வஞ்சக வலை விரித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அதில் சிக்க வைக்கும் நோக்கோடு டில்லி வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தனது திட்டம் நிறைவேறாது தோல்வியுடன் திரும்ப வேண்டியேற்பட்டது.

இவ்வாறான நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரான தங்களை சந்தித்து பேசுவதன் மூலம் தமிழ்நாடு தனக்கு ஆதரவாகவுள்ளதென உலக நாடுகளின் கண்களில் மண் தூவும் நோக்கத்துடன் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி போட்ட திட்டமும் தவிடு பொடியானது. தமிழக மக்களின் கொதிப்புணர்வைப் புரிந்து கொண்டு மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நாம் பாராட்டுகின்றோம்.

அயல் நாட்டு ஜனாதிபதியொருவரை மாநில முதல்வரொருவர் சந்திக்க மறுப்பது இதுவே முதல் தடவையாகும். துணிவுடன் செயற்பட்ட தமிழ் நாட்டு முதலமைச்சர் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவர்.

இதேவேளை, சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் கச்சதீவை திரும்ப பெற வேண்டுமென்பதை வலியுறுத்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம் எழுதி தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, தமிழ் நாடு முதலமைச்சர் இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் சிங்கள இராணுவ வெறியாட்டத்திற்கு இரையாகிக் கதறும் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கும் பணியிலும் அவர் ஈடுபட வேண்டும்.

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக் காலத்தில் ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் உதவினார். ஈழத் தமிழர்களுக்கு காவலராக விளங்கினார். அவர் வழியில் செயற்பட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும். சர்வகட்சிக் கூட்டமொன்றினை உடனடியாக கூட்டி, சிங்கள இராணுவ அட்டூழியங்களுக்கு இரையாகும் ஈழத் தமிழர் பிரச்சினை, சிங்கள கடற்படைக்கு இரையாகும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஆறு கோடி தமிழ் மக்களின் முதலமைச்சர் என்ற வகையில் இந்த வரலாற்றுக் கடமை ஜெயலலிதாவுக்கு உண்டு என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நன்றி: தினக்குரல்

Share this post


Link to post
Share on other sites

தமிழக அரசுக்கு உதவ பிரதமருக்கு வைகோ கோரிக்கை: அதிமுக கூட்டணிக்கு தயாராகிறார்

மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு கோரிய ரூ. 13,000 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேசிய துயர் துடைப்பு நிதிக்கான விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தற்போது விதிமுறைகள் மிகவும் பழையவை, தற்காலத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் உள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் தமிழகம், கடுமையான மழை மற்றும் வெள்ளத்தின் சீற்றதிதற்கு இலக்கானது. நானும், எங்களது இயக்கத்தினரும் டெல்லியில் தங்களை நேரில் சந்தித்து மழை, வெள்ள துயர் துடைப்புப் பணிகளுக்கு தமிழக அரசு கோரிய நிதியை ஒதுக்குமாறு கோரினோம். தாங்களும் உடனடியாக ரூ. 1,000 கோடியை பரிவுடன் ஒதுக்கினீர்கள்.

நாங்கள் ஏற்கனவே கோரியபடி, தமிழக அரசு கோரியுள்ள ரூ. 13,000 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த இயற்கை சீற்றத்தால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த பயிர்கள் பயனற்றுப் போய் விட்டன. விவசாய நிலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

அவர்களுக்கு போதுமான நிதியுதவி செய்யாவிட்டால், அவர்கள் சந்தித்துள்ள துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் மீளவே முடியாது.

எனவே, நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 8000மும், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 10,000மும், தென்னை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கு ரூ. 12,000மும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை பேரிடர் நிவாரண நிதி பெறுவதற்கான விதிமுறைகளை மாற்றி அமைத்து தமிழக அரசு கோரியுள்ள ரூ. 13,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

மழை, வெள்ள நிவாரண நிதி விஷயத்தில் திமுக கூட்டணியின் நிலைப்பாட்டை மீறி தமிழக அதிமுக அரசுக்கு உதவ வேண்டும் என்று பிரதமரை வைகோ வலியுறுத்தியிருப்பது அரசியல்ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதிமுக கூட்டணிக்கு அடிபோடவே வைகோ இந்தக் கோரிக்கையை வைப்பதாகத் தெரிகிறது.

''எங்கள் லட்சியம் அரசியல் அதிகாரம்:

முன்னதாக விழுப்புரத்தில் மதிமுக தொண்டர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:

அரசியல் பரபரப்பு அதிகம் மிகுந்திருக்கிற காலகட்டத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பாசறை என்றால் சிப்பாய்களை தயார்படுத்துவது என்று பொருள். நீங்களும் சிப்பாய்கள்தான்.

நாம் போர்க்களத்தில் இருக்கிறோம். போர்க்களத்தில் இருப்பவர்களுக்கு சமரசம் கிடையாது. சமரசம் செய்து கொள்ளவும் கூடாது. அப்படிச்செய்தால் அவன் சிப்பாயே அல்ல.

தமிழக மக்கள் அனைவரின் பார்வையும் நம் மீதே திரும்பியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக நாம் எத்தனையோ துயரங்களை, தோல்விகளை சந்தித்துள்ளோம். தாய் மொழிக்காக, இனத்திற்காக பாடுபட நினைக்கும் தொண்டர்கள் என்னுடன் வரலாம்.

எனது தோளில் உள்ள கருப்புத் துண்டை எடுத்து விட்டால் அதிக சீட் பெறலாம் என்று எனது நண்பர் ஒருவர் கூறினார். இந்தக் கருப்பு பெரியார் கொடுத்தது. இதை எடுத்தால்தான் சீட் கிடைக்கும் என்றால் அந்த சீட்டும் வேண்டாம், அப்படிப்பட்ட வெற்றியும் வேண்டாம்.

இன்று கௌரவமான இடம் (கூட்டணியில் கூடுதல் இடங்கள்) என்பது குறித்த விவாதம் நடந்து வருகிறது. நான் எனது தம்பிமார்களை பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலை வரை கொண்டு போய் வைப்பேன்.

நாம் கட்சி ஆரம்பித்து 13 ஆண்டுகள் ஆகின்றன. பஞ்ச பாண்டவர்களுக்கும் 13 ஆண்டுகள்தான் சிறைவாசம். வரப் போகிற தேர்தல் நமக்கு மறுமலர்ச்சி கொடுக்கும் தேர்தலாக இருக்கும். எனது தம்பிமார்களின் நலனை உணர்ந்து, புரிந்து அதற்கேற்ப செயல்படுவேன். 2001ம் ஆண்டு நாம் தேர்தலில் போட்டியிட்டபோது கடுமையான தோல்வியை சந்தித்தோம்.

அப்போது எந்தக் கூட்டணியுடன் (திமுக) பேச்சு நடத்தினோமோ அந்தக் கூட்டணியில் இருந்தவர்கள் (பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள்), நாம் தனித்துப் போட்டியிடப் போவதை அறிந்து அதிமுகவுடன் போய் சேர்ந்து கொண்டார்கள்.

நாம் தியாகம் செய்யத் தயங்காதவர்கள். தியாகத்தால்தான் லட்சியத்தை அடைய முடியும். ஒரு மதிமுக தொண்டன் 100 பேருக்கு சமம், ஆயிரம் பேருக்கு சமம். நமது லட்சியம், அரசியல் அதிகாரத்தை அடைவது. அதில் என்ன தவறு இருக்க முடியும்? அதை அடையாமல் நாம் ஓயவும் மாட்டோம் என்றார் வைகோ.

திமுக தவிர பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளையும் மறைமுகமாகத் தாக்கியுள்ளார் வைகோ. இதனால் திமுக கூட்டணியில் அவர் தொடர்வது மேலும் சந்தேகமாகி வருகிறது.

திமுகவிடம் வைகோ 60 சீட்கள் கேட்பதாகக் கூறப்படுகிறது. பாமகவுக்கு இணையான சீட் (40 இடங்கள்) வேண்டும் என்று கோரியுள்ளதாகக் கூறுகின்றனர். இதில் ஒரு சீட் குறைந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயங்க மாட்டேன் என்பதை திமுகவிடம் அவர் தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.

Thats Tamil

Share this post


Link to post
Share on other sites

வைகோ ஒரு செல்லாக்காசு.... அவருக்கு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் வாக்குகள் இருந்தாலே பெரிய விஷயம்.... அவர் திமுக கூட்டணியின் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வெற்றி பெறப்போவது திமுக கூட்டணி தான்..... காங்கிரஸ் தனியாக நின்றாலோ அல்லது அதிமுகவுடன் இணைந்தாலோ தான் திமுக மண்ணைக் கவ்வும்.....

Share this post


Link to post
Share on other sites

விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் இணைந்து போட்டியிட்டால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று ஒரு கருத்துகணிப்பை செய்திகளில் படித்தேனே?

Share this post


Link to post
Share on other sites

இல்லை அய்யா... தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.வும், அதிமுகவும் கிட்டத்தட்ட 35 சதம் வாக்குகளை தன் வசம் வைத்திருக்கிறது.... (அதிமுக ஓரிரு சதம் கூடுதல்)

இந்த இரு கட்சிகளில் ஒன்று காங்கிரசுடன் (15 சதம் வாக்குகள்) இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி.....

மீதி இருக்கும் 15 சதவீத வாக்குகள் தான் மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், விஜயகாந்த் மற்றும் மீதமுள்ள நூற்றுக் கணக்கான கட்சிகளுடையது....

கணக்கு போட்டு பாருங்கள்.... வெற்றி யாருடையது என்று கணிப்பது ரொம்ப சுலபம்.....

Share this post


Link to post
Share on other sites

அரசியல்ல இதெல்லம் சகஜம் தான், இருந்தாலும் வைகோ ஜெயாவோடு சேர்ந்து கூட்டனி அமைத்தால் பெரும்பாலும் பல நன்மைகள் வரக்கூடும், வைகோ எந்த விடயத்திலும் விட்டுக்கொடுக்கும் ரகத்தைச்சேர்ந்தவர் அல்ல என்பது பலருக்கு தெரியும், ஒருவித ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்கள் சேருகிறார்கள் போல், இன்று இந்தியா மத்திய அரசை தனது செல்வாக்கால் கலக்கிய வைகோ, தமிழகத்தையும் கலக்கப்போகிறாரா? அல்லது அரசியல் சதுரங்கம் ஆடப்போகிறாரா எண்டு பார்ப்பம்,,, இன்று வரை ஈழத்தமிழர் எவரின் ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை, வைகோவும் தனது என்னொரு முகத்தை காட்டமாட்டார் என்பதே எனது கருத்து,

கூட்டிக்கழிச்சு பெருக்கிப்பார்த்தால் எல்லாம் நன்மைக்கே,,, :idea:

நீங்கள் சொல்வது சரியே டன்...

இறுக்கமான அரசியல் சூழ்நிலை காரணமாக வை.கோ.

தவிர்க்க முடியாமல் ஏதும் முடிவு எடுத்து இருக்கலாம்!

இல்லாட்டில் எங்கயோ இருக்கிற எங்களூக்காக பேசி- 1 1/2 வருசம் சிறைல இருந்திருப்பாரா?

வை.கோ என்ற மனிதனை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எந்த இடத்திலும் ஒரு விமர்சன பொருளாய் ஆக்க கூடாது!

எங்கள் நாட்டில பிறந்த சில ...ஹ்ம்ம் யாரோ எல்லாம் நாங்கள் செய்த தியாகத்தை கொச்சை படுத்தி - எட்டப்பராய் திரியும் போது- வை.கோ என்பவர் எமக்காய் பட்ட துன்பம் ஏராளம்!

வை.கோ எங்களூக்கு எதிராய் தன் இன்னொரு முகத்தை காட்டிய இடம் ஏதும் இருக்கா? இருந்தால் சொல்லுங்க - அறிந்து கொள்கிறேன்!! :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

முதலில் எல்லோரும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள்.

வைகோ இலங்கை அரசியல்வாதியில்லை

Share this post


Link to post
Share on other sites

வைகோ ஒரு செல்லாக்காசு.... அவருக்கு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் வாக்குகள் இருந்தாலே பெரிய விஷயம்.... அவர் திமுக கூட்டணியின் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வெற்றி பெறப்போவது திமுக கூட்டணி தான்..... காங்கிரஸ் தனியாக நின்றாலோ அல்லது அதிமுகவுடன் இணைந்தாலோ தான் திமுக மண்ணைக் கவ்வும்.....

அதைப் பற்றி எமக்குக் கவலையில்லை. கள்ளஓட்டைப் போட்டு, அல்லது மற்றவர்களின் மதிப்பை வைத்து வெற்றி பெறும் சாதாரண அரசியல்வாதியாகக் கூட இருக்கலாம்.

ஆனால் ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் உண்மையானவர் அவர் என்பது மட்டும் தான் சொல்லமுடியும். மற்றவர்கள் போல் மதில்மேல் புூனையாகவோ, குள்ளநரித்தனம் மிக்கவராகவோ அவர் இருக்கிவில்லை. அந்த உணர்விற்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.

அது எமக்குப் போதும்.

Share this post


Link to post
Share on other sites

முதலில் எல்லோரும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள்.

வைகோ இலங்கை அரசியல்வாதியில்லை

நிச்சயமாக. அதை விட வார்த்தை தடுமாறும் இந்திய அரசியல்வாதியும் கிடையாது

Share this post


Link to post
Share on other sites

முதலில் எல்லோரும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள்.

வைகோ இலங்கை அரசியல்வாதியில்லை

மீரா எதையாவது கொஞ்சமாவது தெரிந்தபின் பேசுங்க.

வை.கோ இப்போ நீங்க சொல்லுறதையும் தன்னோட மடி கணணியில பார்த்து கொண்டு இருக்கலாம்.

"இவ்ளோ காலம் நான் பட்ட கஸ்டம் வீணாய்போச்சே"

என்று அந்த மனிதனுக்கு உங்க அலட்டல் கருத்து மூலம்

மனசு நோக பண்ணாமல்- வேற வேலை இருந்தா பாருங்க மீரா-!

வை.கோ- போல எங்கட விடுதலை இயக்கத்துக்கும்- தலைவருக்கும்- விசுவாசமா இருந்த ஒரு அயல் நாட்டு அரசியல்வாதியை - எங்காவது நீங்க கண்டு இருக்கிங்களா? இல்லை இனி காண முடியுமா? :? 8)

Share this post


Link to post
Share on other sites

வர்ணன்.

நான் நினைக்கின்றேன். சுத்துமாத்துதனத்தையும், தமிழருக்கு இவ்வளவு ஏமாற்றத்தையும் கொடுத்த இலங்கை அரசியல்வாதிகளைக் கருத்தில் கொண்டு தான் மீரா அப்படிச் சொல்லியிருக்ககூடும்.

எதுக்கும் அவரே தெளிவுபடுத்தட்டும்

Share this post


Link to post
Share on other sites

தமிழகத்தேர்தலில் தி.மு.க அல்லது அ.தி.மு.க வினைத்தவிர வேறு ஒருவரும் வெல்லமுடியாது. ம.தி.மு.க சென்ற தேர்தலில் தனியாகப்போட்டியிட்டு எல்லாத்தொகுதியிலும் தோல்வியடைந்தார். ம.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை தி.மு.க அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டுவைப்பதன் முலம் சில தொகுதிகளில் வெல்லலாம். அத்துடன் ம.தி.மு.க,பாட்டளிமக்கள் கட்சியுடன் கூட்டுவைப்பதினால் தி.மு.க, அ.தி.மு.க வினருக்கும் அதிக வாக்குகள் கிடைக்கிறது. ம.தி.மு.கவுக்கு குறைந்த தொகுதிகளினைக் கலைஞர் ஒதுக்குவதினால் ம.தி.மு.க

அ.தி.மு.க வுடன் கூட்டணி வைக்க இம்முறை முயர்ச்சிக்கிறது.

கனோன் சொன்னதுபோல ஈழத்தமிழர்களுக்கு எதிரான காங்கிரசுக்கட்சியுடன் வை.கோ கூட்டணியில் இப்பொழுது இருந்தாலும் வை.கோ எமக்குக்குரல் தருபவர்.அவர் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தாலும் எம்மைக்கைவிடமாட்டார்.

Share this post


Link to post
Share on other sites