Jump to content

சொல்வதெல்லாம் உண்மை ஈழப்பெண்ணின் கதறல் -1,2


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது

அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை

மீட்பர்களற்ற வதைமுகாம்கள்

மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட

அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

பசி மயக்கத்தில் கேட்பாரற்று

உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில்

சருகாகின தனிமைக் கூடுகள்.

அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள்

உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன.

கூடி அழ ஆளின்றி

மானிட மரணங்கள் மலினப்படுகின்றன.

தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து

சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது.

tamil-tigers_167858t.jpg

ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி

பெண்மை கறையுற்று நனைகிறது.

மறைப்புகள் அற்ற திறந்த வெளி

இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது

அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை

அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன.

நைந்த ஆடையின் கிழிசல்களுக்குள்ளால்

வதையின் ரணங்களை வானமே பார்க்கிறது.

வற்றிய உடல்களை விரித்தும் ஒடுக்கியும்

சுவாசம் பிடிவாதமாய் ஒட்டி அசைக்கிறது.

அக்கினிச் சிறையுடைக்கும் மீட்பர்களுக்காக

மானுட உய்வு காத்துக் கிடக்கிறது.

http://www.youtube.com/watch?v=OFq8WbrjgCk

http://www.youtube.com/watch?v=HzJbIFviadY

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நேற்று இதை Newsbot இணைத்த Part1 திரியில் பார்த்தனான், கவிதையுடன் Part 2 இணைத்திருக்கின்றீர்கள். பிறகு lunch time பார்ப்பம், நன்றி. ஆட்சி மறியபடியால் தான் இப்படியாவது தமிழ் நாட்டு மக்களுக்கு சென்றடைய கூடியதாக இருக்கு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேட்டதும் எதோ ஒரு சொல்லமுடியாத வலி ஏற்பட்டது. தலைப்பினை முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்று Z தொலைக்காட்சியில் வந்தது போல எழுதியிருந்தால் அதிக பேர் பார்த்திருப்பார்கள். ஊர்ப்புதினத்தில் இதனை நீங்கள் இணைத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

இந்த ஒலிபரப்பை மக்களை பார்க்கவிடாமல் சிறீலங்காவில் இராணுவத்தினர் தடை செய்ததாக அறிகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கேட்டதும் எதோ ஒரு சொல்லமுடியாத வலி ஏற்பட்டது. தலைப்பினை முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்று Z தொலைக்காட்சியில் வந்தது போல எழுதியிருந்தால் அதிக பேர் பார்த்திருப்பார்கள். ஊர்ப்புதினத்தில் இதனை நீங்கள் இணைத்திருக்கலாம்.

ஊர்ப்புதினத்தில் இணைத்துள்ளேன் கந்தப்பு

Link to comment
Share on other sites

.... இப்படியான ஒலி/ஒளிகள் வேற்றுமொழியில் ஒலிமாற்றம் செய்யப்பட்டு ....யூரியுப், ஃபேஸ்புக் போன்றவற்றில் இணைத்தால் ... பலரை சென்றடையும்!!! ... இவற்றைப்போல் பல ஆவணங்கள்: எம்முள்ளேயே/எம்மொழியில் முடங்குகின்றன!!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தனுவுடன் ஒரு உரையாடல். (யாவும் கற்பனை அல்ல)   கேள்வி- உன்னை ஒரு பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறுகிறதே? தனு- ஏன் அப்படி சொல்கிறார்கள்?   கேள்வி – குண்டு வெடிக்க வைத்தமையினால்? தனு- அப்படியென்றால் பகத்சிங் என்ன பூவையா வீசினார்? பாராளுமன்றத்திற்கு குண்டு விசிய பகத்சிங்கை ஆங்கிலேய அரசு பயங்கரவாதி என்று தூக்கில் இட்டுக் கொன்றது. ஆனால் இதே இந்திய அரசு அவரை சுதந்திர போராட்ட தியாகி என்று பாராட்டுவதை கவனியுங்கள்.   கேள்வி- அப்படியென்றால் …? தனு- இந்திய அரசு என்னை பயங்கரவாதி என்று முத்திரை குத்தினாலும் எனது தமிழ் மக்கள் நான் ஒரு விடுதலைப் போராளி என்பதை நன்கு அறிவார்கள்.   கேள்வி - இருப்பினும் ராஜீவ் காந்தியை கொல்வது தவறு இல்லையா? தனு- இந்தியாவில் வேறு யாராவது தலைவர்களை நாம் கொன்றிருக்கிறோமா? இல்லையே. ராஜீவ் காந்தியை மட்டும் ஏன் கொல்ல வேண்டி வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.   கேள்வி- இந்திய அமைதிப்படை ஈழத்தில் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கான தண்டனையா இது? தனு- இந்திய ராணுவம் மேற்கொண்ட அக்கிரமங்கள் மட்டுமன்றி அந்த அக்கிரமங்கள் குறித்து இந்திய நீதிமன்றம் ஒன்றில்கூட எமக்கு நியாயம் வழங்கப் படவில்லையே.   கேள்வி- புரியவில்லை? தனு- ராஜீவ் காந்தி கொலை என்பது பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட தண்டனை.   கேள்வி- இருந்தாலும் இந்தியா சென்று ராஜீவ் காந்தியைக் கொன்றது என்ன நியாயம்? தனு- பஞ்சாபில் 400 இந்திய மக்களைக் கொன்ற டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று உத்தம்சிங் கொன்றார். அவரை தியாகி என்று இந்திய அரசு கௌரவித்துள்ளது. அவர் செய்தது நியாயம் என்று பாராட்டுபவர்கள்.. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழரைக் கொன்றவரை இந்தியா சென்று நான் கொல்வது எப்படி அநியாயம் என்று கூறமுடியும்?   கேள்வி- என்ன இருந்தாலும் பிரியங்கா, ராகுல் இருவரும் தம் இளம் வயதில் தந்தையை இழப்பது கொடுமை அல்லவா? தனு- பிரியங்கா போன்று 800 க்கு மேற்பட்ட எமது பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். ராகுல் போன்று பல்லாயிரம் குழந்தைகள் தமது தாய் தந்தையரை இழந்திருக்கிறார்கள். ராகுல் பிரியங்காவிற்காக கவலைப்படுபவர்கள்... ஏன் எமது தமிழ் குழந்தைகளுக்காக கவலைப்படவில்லை?   கேள்வி- பெண்கள் தற்கொலைத் தாக்குதல் செய்வது தவறு இல்லையா? தனு- குயிலி என்ற பெண் தற்கொலை தாக்குதல் செய்து வரலாற்றில் எமக்கு வழி காட்டியுள்ளார். குயிலி செய்தது தவறு என்று யாரும் எமக்கு சொல்லவில்லையே?   கேள்வி- பயங்கரவாத இயக்கங்கள் அப்பாவி பெண்களை மூளைச் சலவை செய்து போதை மருந்து செலுத்தி தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்களே? தனு- இந்திய ராணுவத்தின் பல அக்கிரமங்கள் என் கண் முன்னே நடந்திருக்கின்றன. இந்த பொறுப்பை நானே கேட்டுப் பெற்றேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து உண்மையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.   கேள்வி- நிஜமாகவா? அச்சம் எதுவும் இல்லையா? தனு- கடந்த 3 நாட்களாக நான் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனது தோழி சுபா தான் செல்கின்றேன் எனக் கேட்டார். நான் விரும்பியிருந்தால் இந்த தாக்குதலில் இருந்து விலகியிருக்க முடியும். ஆனால் நான் வற்புறுத்தி இந்த வாய்ப்பைப் பெற்றேன்.   கேள்வி- என்னதான் துணிச்சல் பெற்ற ஆண்களாக இருந்தாலும் தூக்குமேடைக்கு செல்லும்போது அவர்கள் கால்கள் சோர்ந்துவிடும். அரைவாசி மயங்கிய நிலையிலேயே அவர்களை இழுத்துச் சென்று தூக்கில் இடுவார்கள் என அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் உன்னால் எப்படி கொஞ்சம் கூட மரணபயம் இன்றி முகத்தை இயல்பாக வைத்திருக்க முடிந்தது? தனு- இந்திய ராணவத்தால் பாதிக்கப்பட்ட என் உறவுகளே என் மனக்கண்முன் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நினைவே என்னை இயக்குகிறது.   கேள்வி- இதனால் சாதிப்பது என்ன? தனு- இனி இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் ஈழத்தில் தலையிடமுன் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திப்பார்கள். ஒரு இனத்தை அதன் சொந்த மண்ணில் தாக்கினால்... அது எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் திருப்பி அடி கிடைக்கும் என்று... வரலாறு இனி இயம்பும்.   அங்கயற் திலகம்  
  • ராஜீவ்காந்தி  மரணம், கொலை அல்ல.  அது, ஈழத்தில் அவர் இழைத்த குற்றங்களுக்காக...  அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை. தோழர் பாலன்
  • கண்முன்னால் நடக்கும் உக்கிரேன் மக்களின் இறப்புக்களையும் அழிவுகளையும் கொண்டாட்ட மனநிலையில் இருந்துகொண்டு இரசித்துக்கொண்டும் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திக்கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் அமெரிக்காவின் தலைமையில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட அழிப்புக்களையும், சிரியாவில் ரஷ்யாவின் ஆதரவோடு ஆசாத் மேற்கொண்ட பயங்கர அழிப்புக்களையும் பார்த்து நிச்சயம் கண்ணீர் உகுத்திருக்கமாட்டீர்கள். மனிதாபிமானமும், அடிப்படை விழுமியங்களும் இல்லாதவர்கள்தான் மக்களின் அழிவுகளைப் பார்த்து மகிழ்ந்து திளைப்பார்கள். அராபியர் மீதும், முஸ்லிம்கள் மீதும் பிற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் எவ்வளவு அனுதாபம் காட்டுவார்கள் என்பதை யாழ் களத்திற்கு வருவபவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை.   
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.