Jump to content

இதை தினமும் கடைபிடியுங்கள்

Recommended Posts

*தினமும் காலையில் அருகில் உள்ள பார்க்குக்குச் சென்று வாக்கிங் மேற்கொள்ளுங்கள். பூங்கா இல்லாவிட்டாலும் பாதுகாப்பான இதரப் பகுதிகளை தேர்ந்தெடுத்து நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இந்த பயிற்சி உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

* உணவுக்கட்டுப்பாட்டை தவறாமல் மேற்கொள்ளுங்கள். கொரிக்கும் உணவுகள், மில்க்ஷேக், வேகவைத்த உருளைக்கிழங்கு, காரம் நிறைந்த மசாலாக்கள் போன்றவைகளை, சுவைக்கு அடிமையாகி தினமும் சுவைக்காதீர்கள்.

* எப்போது எந்த செயலை செய்வதற்கு முன்னாலும் அந்த செயல் தனிப்பட்ட முறையில் உங்களுக்கோ, உங்கள் கவுரவத்திற்கோ எந்தவிதத்திலும் இழுக்கை ஏற்படுத்துமா? என்று ஆராயுங்கள். நீங்கள் இன்றல்லது நாளை வெட்கப்படும் அளவுக்குரிய எந்த செயலையும் செய்துவிடவேண்டாம்.

* நீங்கள் செலவிடும் ஒவ்வொரும் ரூபாயும் மதிப்புமிக்கது என்று உணருங்கள். அதே நேரத்தில் தேவையான செலவுகளை செய்வதற்கும் தயங்காதீர்கள். சிலர் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள். ஆனால் அந்தப் பணத்தை அவர்களுக்கு சேமிக்கத்தெரியாது. சேமிப்பும் அவசியம் என்பதை உணருங்கள். கிரடிட் கார்டு இப்போது எல்லோருடைய கைகளிலும் இருக்கிறது. அதனைக் கண்டபடி செலவிட பயன்படுத்திவிடக்கூடாது. அது போல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடன் வாங்கிவிடவேண்டும் என்றும் நினைக்காதீர்கள். கடன் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற ஒரு பொருளை வாங்கிவிட வேண்டும் என்று ஒரு போதும் திட்டமிடக்கூடாது.

* குழந்தைகளிடம் கோபத்தைக்காட்ட வேண்டாம். அவர் களிடம் முடிந்த அளவுக்கு பொறுமையை கடை பிடியுங்கள்.

* கணவரோடு உங்களுக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அவரை குற்றவாளி போல் மற்றவர்கள் முன்னால் சித்தரிக்க முயற்சிக்கவேண்டாம். முடிந்த அளவு அவரோடு பொருந்தி வாழ முயற்சி செய்யுங்கள்.

* மாதத்திற்கு ஒரு புதிய புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் அறிவை புதுப்பித்துக்கொள்ளமுடியும

Link to comment
Share on other sites

இதெல்லாம் டெய்லி போலோ பன்னி வாழ்ககையில முன்னேற பாருங்கப்பா எல்லாரும்..ஆ சொல்ல மறந்திட்டன் டெய்லி குளிக்கவும் மறந்திடாதிங்க...அதுல குளிக்க சொல்லனு குளிக்காம இருக்கிறேல...

:lol::D நீங்கள் செய்த்துட்டு தானே சொல்லுறியள் சுண்டல்..அப்ப சரி சந்தோசம்.. :P

Link to comment
Share on other sites

சீ சீ அந்த கெட்ட பழக்கம் எல்லாம் நமக்கு இருக்கா என்ன... :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் டெய்லி போலோ பன்னி வாழ்ககையில முன்னேற பாருங்கப்பா எல்லாரும்..ஆ சொல்ல மறந்திட்டன் டெய்லி குளிக்கவும் மறந்திடாதிங்க...அதுல குளிக்க சொல்லனு குளிக்காம இருக்கிறேல...

பன்னி வாழ்க்கையா?

நீங்கள் தமிழை ரெம்பக் கெல்லுவதாலே, அர்த்தம் எல்லாம் மாறிப் போகுது

Link to comment
Share on other sites

ke ke ke இதெல்லாம் கண்டுக்க கூடாது நாங்க சின்ன பசங்க இப்படி தான் தப்பு பன்ணுவம்...

Link to comment
Share on other sites

மிஸ்ரர் சுண்டல் இவளவையும் தினமும் செய்வதெண்டால் வேலைக்கு எப்பப்பா போறது இது வேலையில்லா பெண்களுக்குதான் உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல், பாராட்டுக்கள்.

தமிழைக்கொலை செய்தால் கள உறுப்பினரிடமிருந்து தண்டனை கிடைக்கும் என்பதனை மறக்காமல் இருங்கள். பிழை விட்டவுடன் சும்மா கி கி கி என்று சிரித்து "நாங்க சின்னப் பசங்க" என்று மழுப்பவேண்டாம். இவ்வளவு நல்ல விடயத்தை இணைத்துவிட்டு ஆங்கிலம் கலக்காது நல்ல தமிழில் எழுதியிருந்தால் இன்னும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்திருக்கும்.

ஆசிரியர் களத்திலும் ஆசிரியராகத் தான் இருக்கின்றார். ஏலவே எனக்கும் தமிழ் வாத்திமாருக்கும் ஒத்து வருவதில்லை. பார்ப்போம். :roll: 8)

Link to comment
Share on other sites

தினசரி வாழ்க்கையில் பெரும் பகுதி நேரத்தை புன்னகையுடன் செலவிடுங்கள். புன்னகை வாழ்க்கைக்கு மிகத்தேவையானது. அது உங்களைப்பற்றி மற்றவர்கள் மனதில் ஈர்ப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

தம்பி பயனுள்ள தகவல்கள்..........எல்லாரும் போலோ பண்ணினால் நல்லம்.....ஆனா ஒரு சிக்கல் மேலே சொன்னமாதிரிதான் நான் எப்பவும் இருக்கிறது ஆனா ஊருக்கை வேறை மாதிரியெல்லோ கதைக்கிறாங்கள்.......(அதுதான்னப்

Link to comment
Share on other sites

நீங்கள் செலவிடும் ஒவ்வொரும் ரூபாயும் மதிப்புமிக்கது என்று உணருங்கள். அதே நேரத்தில் தேவையான செலவுகளை செய்வதற்கும் தயங்காதீர்கள். சிலர் நல்ல உழைப்பாளியாக இருப்பார்கள். ஆனால் அந்தப் பணத்தை அவர்களுக்கு சேமிக்கத்தெரியாது. சேமிப்பும் அவசியம் என்பதை உணருங்கள். .

**************************************

எவ்வளவோ முயற்சி செய்கின்றேன். சரிவருகுது இல்லையே :)

நல்ல ஒரு அறிவுரையை இங்கு இனைத்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

தம்பி பயனுள்ள தகவல்கள்..........எல்லாரும் போலோ பண்ணினால் நல்லம்.....ஆனா ஒரு சிக்கல் மேலே சொன்னமாதிரிதான் நான் எப்பவும் இருக்கிறது ஆனா ஊருக்கை வேறை மாதிரியெல்லோ கதைக்கிறாங்கள்.......(அதுதான்னப்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.