• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Recommended Posts

அன்புள்ள நண்பர்களே!

சைவ சமயம் அனைத்து சாதி மக்களையும் மதிக்கும் சமயமாகும். இம்மதம் தான் அறுபத்து மூன்று நாயன்மார்கள் (எல்லா சாதியைச் சேர்ந்த அடியார்களையும்) வணங்கும் பழக்கம் உள்ளது. ஆறுமுக நாவலர் ஐயா சொன்ன பல நூறு கேள்வி பதில்களில் ஒரு கேள்வி பதில் மட்டும் சிலருக்கு கண்ணில் படுகிறது.

நாவலர் ஐயா அப்போதே எச்சாதியில் பிறந்த மனிதனும் ஆன்மீகத்தினால் தன்னன உயர்த்த வேண்டும் நல்ல செய்திகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இதோ சில கேள்வி பதில்கள்.

344. வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம் என்னும் இரண்டினாலுமாவது தம்மிற்றாழ்ந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும்?

அவமதித்தலுஞ் செய்யாது, புறத்து வணங்குதலுஞ் செய்யாது, மனத்தால் வணங்கல் வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர். சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம் முதலியவை சற்றுங் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர், திருவேட மாத்திரமுடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு, அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர் பெரியபுராணத்தினாலே தெளியப்படும.

Share this post

Link to post
Share on other sites

375. மாகேசுர பூசா காலத்திலே மாகேசுர ரல்லாதவரின், யாது செய்தல் வேண்டும்?

குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர் என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து, அவர்களுக்கும் அன்னங் கொடுத்தல் வேண்டும். வறியவருக்குக் கொடுத்தலே கொடை; செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதற் பொருட்டுக் கடன் கொடுத்தல் போலும்.

இலங்கை முழுவதும் ஆங்கில ஆட்சிகாலத்தில் மக்களை கட்டாய மத மாற்றம் செய்யும் போது அதைத் தடுத்து சைவ சமயத்தை காத்தவர் ஆறுமுக நாவலர். அவரை பிடிக்காது போன சிலர் தான் இன்று அவரைப் பற்றி விசமத்தனமான பிரச்சாரம் செய்கிறார்கள்.

எந்த சாதியினராய் இருந்தாலும் அவர் சிவனடியார்களனால் அவர்கள் பிராமணர்களை விட மேலானவர்கள் என்று அன்றே புரட்சி செய்து ஆதாரத்துடன் நிருபித்தவர். தீக்ஷை எடுத்த சிவனடியார்கள் எந்த சாதியாய் இருப்பினும் அவர்கள் மேலானவர்களே!!

367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா?

ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.

Share this post

Link to post
Share on other sites

ஆறுமுக நாவலருக்குப் பக்கத்துக்கு வீட்டுக்காரியைப் பிடிக்காது!

அவளை, அவர் பல தடவைகள், ஏசியிருக்கின்றார்!

ஆனால், ஆறுமுக நாவலர் இறந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக, செத்த வீட்டுக்கு வந்தாள்!

வந்தது மட்டுமல்ல, தலையிலடித்து அழுதாளாம்!

அவள் அழுதபோது,கூறிய வசனம் இது தான்!

வைதாலும், நல் தமிழால் வைகுவையே நாவலா!

எனவே நல்லதை அள்ளுவோம்!

தீயதைத் தள்ளுவோம்!

திருத்தம்! எழுத்துப் பிழை!

Share this post

Link to post
Share on other sites

அன்பர்களே!

பொறுமையாக படித்தால் சைவ சமயத்தில் சமூகத்திற்கான பல நல்ல விசயங்கள் உண்டு. அவைகளை எடுத்து தருகிறேன் தொடர்ந்து படியுங்கள்.

Share this post

Link to post
Share on other sites

<p>நான் இருக்கும் மண்ணிலும் சமயம்,தமிழ் மற்றும் பிள்ளைகளுக்கு தேவையான பாடங்களைப் படிப்பிறவர்கள். பரீட்ச்சை என்றாலோ அல்லது பிற விடயங்களுக்கோ எப்படிப் பட்ட கேள்வி பதில்கள் அங்கே தயாரிக்கிறவர்கள் என்பதும் கொஞ்சம் தெரிந்து வச்சு இருக்கிறம்...தற்போதைய கால கட்டத்தில் கோயிலுக்கு போவதையே ஏன் செய்கிறோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது...அப்படி இருக்கையில் சைவம்,சாதி,மதம் பற்றிய பிரிவினை வாத போக்கினைக் கடைப்பிடிக்கும் விதமாக எழுதும் எழுதுக்களையும் வெறுக்கிறோம்..மனிதன் சாப்பிட நேரமில்லாமல் திரிகிற இந்தக் கால கட்டத்தில் சாதி,மதம் போன்றவற்றை வேணும் என்றே புகுத்திக் பிரிவினைகளை தான் ஏற்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீங்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது...என்னைப் பொறுத்த மட்டில் 'தனி ஒருவருக்கு உணவு இல்லையே ஜெயகத்தினையே அளிப்போம்"இப்படித் தான் பாரதியார் கூட சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறாரு... இப்படியானவற்றைத் தான் நான் விரும்பிறன்..உலகத்திலயே இருக்கிறவர்கள் எல்லாரும் மனித ஜாதி.அந்தப் புரிந்துணர்வோடு தான் வாழ்ந்து கொண்டு வாறம்..

Share this post

Link to post
Share on other sites

எனது சிறு குறிப்பு தேவை இல்லாமல் இருக்கலாம் என கருதி எடுத்து விட்டேன்.

Share this post

Link to post
Share on other sites

" விடுதலைப் போராட்டத்துடன் சாதி வேறுபாடுகள் இல்லாத ஒரு சமுகம் உருவான நிலையில், மேலை நாடுகளில் அது குறித்த எதுவித பிரச்சனைகளே இல்லாத நிலையில், 200 வருடத்திற்கு முந்தைய சொல் பிரயோகம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தான் வேண்டுமா? "

அண்ணை நாதமுனி !! " விடிய விடிய ராமாயணம் விடஞ்சால் சீதை ரமனுக்கு என்ன முறை எண்டானாம் " என்ற கணக்காக இதைத் தானே நாங்கள் கருத்துப் பதிவுகள் மூலம் அவரவர் பாணியில் சொன்னோம் . கருத்துகளை வாசித்து விட்டுத்தான் எழுதுகின்றீர்களா ?

" மேலும் ArumukaNavalar இங்கே ஒரு சிறந்த சேவையினை அது தேவைப் படுவோருக்கு சிறப்பாக செய்கின்றார். எய்தவர் இருக்க அம்பை நோவதோ என்பது போல, 200 வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த ஒருவரின் எழுத்து குறித்து இவரினை நோக முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. "

இவ்வாறு எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வாறு மனம் வந்தது நாதமுனி ? அன்னம் பாலில் உள்ள தண்ணீரைப் பிரித்து எடுப்பது போல ஆறுமுகநாவலர் என்ற புனைபெயரை உடையவருக்கு சைவசமயத்தில் உள்ள தேவயற்ற பகுதிகளை விட்டு நல்ல விடையங்களை சொல்லத் தெரியாதா என்ன ? உண்மையிலேயே இறை ஒழுக்கமும் , மனச்சாட்சிக்கு பயந்தவராகவும் இருந்தால் ,கள உறவுகளிடம் தவறாக எழுதியதிற்கு மன்னிப்பு அல்லவா கேட்டருக்க வேண்டும் ? அப்படி ஏதாவது நடந்துள்ளதா நாதமுனி ? ஒருவர் தவறுகள் விட்டிருந்தால் மற்றவர்கள் சுட்டிக் காட்டும் பொழுது மன்னிப்புக் கேட்பது தான் மனிதப்பண்பு . கள உறவுகள் அவ்வாறுதான் நடக்கிறார்கள் , உங்கள் சார்ந்தவர்கள் எப்பிடி ?

Share this post

Link to post
Share on other sites

கோமகன் ஐயா,

மிகவும் தயங்கித் தான் எனது கருத்தினைச் சொன்னேன். ஏனெனில் சில உறவுகளின் நியாயமான ஆதங்கம் என்னைக் கவலை கொள்ள வைத்தது.

எனது கருத்துகள் தப்பு ஆயின் தயவுடன் மன்னித்து கொள்ளுங்கள்.

விடை பெறுகின்றேன்.

நன்றி

Share this post

Link to post
Share on other sites

எனது சிறு குறிப்பு தேவை இல்லாமல் இருக்கலாம் என கருதி எடுத்து விட்டேன்.

ஆறுமுகநாவலருக்கு வகுப்பு எடுக்கும் இடத்தில் நாமெல்லாம்........??? :( :( :(

Share this post

Link to post
Share on other sites

ஆறுமுகநாவலருக்கு வகுப்பு எடுக்கும் இடத்தில் நாமெல்லாம்........??? :( :( :(

ஏன் அண்ணா ஆறுமுகநாவலருக்கு நாங்கள் வகுப்பெடுக்க கூடாதா?...எங்கட தேசிய தலைவரே பலபேருடைய ஆலோசனைகளைக் கேட்டுத் தான் முடிவெடுக்கிறவர்

Share this post

Link to post
Share on other sites

எனது சிறு குறிப்பு தேவை இல்லாமல் இருக்கலாம் என கருதி எடுத்து விட்டேன்.

வணக்கம் நாதமுனி . உங்கள் கருத்துக்களை குவாட் செய்து ஒருவர் கருத்து எழுதியபின் உங்கள் கருத்துக்களை முற்றுமுழுதாக நீக்குவது களவிதிகளுக்கு முற்றிலும் முரணானது . நீங்கள் களவிதிகளைப் படிக்கவில்லையா ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

Share this post

Link to post
Share on other sites

ஏன் அண்ணா ஆறுமுகநாவலருக்கு நாங்கள் வகுப்பெடுக்க கூடாதா?...எங்கட தேசிய தலைவரே பலபேருடைய ஆலோசனைகளைக் கேட்டுத் தான் முடிவெடுக்கிறவர்

இல்லை

இல்லை

இல்லை என்பது தான் எனது நிலை ரதி

காரணம் அவர் வாழ்ந்த சூழல் மிகவும் பயங்கரமானது.

அந்நிய மனிதர்கள்

ஆக்கிரமி◌ப்பாளர்கள்

அந்நிய மொழித்திணிப்பு

அந்நநிய மதத்திணிப்பு

இவற்றிற்கு நடுவே தனியாக நின்று அவர் தமிழுக்கும் சமயத்துக்கும் செய்த சேவைகள் அளப்பெரியன.

அவற்றுள் அவர் சைவ சமய நெறி சார்ந்து எடுத்த சில நடவடிக்கைகள் அந்த நேரத்தில் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய உலகில் அவை மாற்றமடைந்துள்ளன.

அவற்றை வைத்துக்கொண்டு எம் போன்றோர் ஆறுமுகநாவலுக்கு வகுப்பெடுப்பது பரிதாபத்துக்குரியது.

தலைவரைப்பற்றி எழுதியிருந்தீர்கள்

எனக்கு இந்த இருவர் பற்றியும் வகுப்பெடுக்க எவருக்கும் தகுதியில்லை என்பதே உண்மை.

அண்ணா நீங்கள் மேற் சொன்ன கடுமையான கால கட்டத்தில் வாழ்ந்த நாவலர் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?

மனிதர்கள் மதம் மாறமல் இருப்பதற்காகவது சாதி வேற்றுமையை ஒழித்திருக்க வேண்டும்...சம உரிமை கொடுத்திருக்க வேண்டும்.அதற்காக போராடி இருக்க வேண்டும் அப்படி அந்தக் காலத்திலேயே அவர் போராடியிருந்தால் பெரும்பான்மையான மக்கள் மதம் மாறி இருக்க மாட்டார்கள்...மக்கள் மதம் மாறக் கார‌ணமே இவரும்,அவரை விமர்சிக்க தவறி அவரோடு சேர்ந்து அந்தக் காலத்தில் ஆதர‌வு கொடுத்த மக்களும் தான்.

மதங்கள் உருவாக்கப்பட்டதே நல்வழி போதிக்கத் தான் இப்ப,இங்கு இதைக் கொண்டு போடுபவராவது அந்தக் காலத்தில் ஆறுமுக நாவலர் சொன்ன தேவையில்லாத கருத்தை விட்டு,விட்டு மக்களை நல் வழிப் படுத்தும் கருத்துக்களை போட‌லாமே!...அவர் தான் போட்டது பிழை எனச் சொல்லவும் இல்லை அதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை...புலிகள் மக்களை ஒரு வழிப்படுத்த சாதி வேற்றுமைகளை நீக்கினார்கள் அந்த புலிகளையும்,தேசியத்தையும் உயிர் மூச்சாக நினைக்கும் உங்களால் எப்படி சாதி வெறியர்களையும் ஆதரிக்க முடியுது?

நாவலரையும்,தலைவரையும் ஒப்பிடாதீங்கோ...தலைவரின்ட‌ கால் தூசிக்கும் அவர் வர‌ மாட்டார்...நாவலரையும் பார்க்க தமிழை வளர்த்த கண பேர் இருக்கினம்...உண்மையை சொல்லப் போனால் இவர் எமக்கு நன்மையை விட தீமை தான் அதிகம் செய்திருக்கிறார் இவரால் தான் எங்கட‌ பெரும்பான்மை மக்கள் மதம் மாறினவை.

உண்மையான விமர்சனங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம்...விமர்சனங்கள் தான் ஒரு மனிதனை பக்குவப்பட‌ வைக்கும் என்பது எனது கருத்து.

Share this post

Link to post
Share on other sites

இங்கு கருத்து எழுதிய பலர் ஆறுமுக நாவலர் தமிழை வளர்த்தவர்

என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதேவேளை அவர் சாதியையும் வளர்த்தார் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சமயம் என்பது நம்பிக்கை

சாதி என்பது அடக்குமுறை

இரண்டையும் கலந்து குழப்புதல் ஆகாது.

இந்து சமயம் சாதிவெறியைத் தூண்டுகின்றது என்பதை எவரும்

எற்றுக்க்கொள்ள மாட்டார்கள்.

இந்து சமயத்தையும் அதில் இருக்கும் சில ஓட்டைகளையும் பயன்படுத்தி

ஒருசில அடிப்படைவாதிகளினாலேயே இப்படியான சாதிவெறி பிடித்த

கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

இவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளச்

சமயத்தைப் பாவிக்கின்றனர்.

அப்படியானவர்களை இனம் கண்டு கொண்டால்

சாதி இரண்டு ஒளிய வேறில்லை என்பது புலப்படும்.

ஆறுமுக நாவலரைத் திட்டுவதால் சாதி ஒளியும்

என்றால் நானும் சேர்ந்து திட்டத் தயார்.

மூலம் எங்கோ இருக்கின்றது.

வாலைப் பிடித்து என்ன பயன்.

Share this post

Link to post
Share on other sites

வாத்தியாரின் கருத்தை வரவேற்கிறேன். சில குறைகளை களைய வேண்டும், அதற்காக அந்த மதத்தையே பிழையென்று கருதுதல் ஆகாது. சாதியையும் சமயத்தையும் எப்போது கலந்தார்களோ தெரியாது?

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் எனப் பட்டாங்கியில் உள்ளபடி' அப்படீன்னு யாரோ சொன்னதாக ஞாபகம். அப்படிப் பார்த்தால் மொத்தத் தமிழனுமே தலை குனிய வேண்டும்.

சாதியத்தால்தான் இந்தக் கேவலமான நிலை. அந்தக் காலத்தில் வாழ்ந்த ஆறுமுகநாவலரின் சாதிய கொள்கை தொடர்பாக, இங்கு பதியும் ஆறுமுக அண்ணன் கொஞ்சம் கவனம் எடுப்பது நல்லது.

Share this post

Link to post
Share on other sites

எனக்கு இந்த சைவ - வினா விடை என்றால் பயம். சின்னனில ஒரு 100.. 150 கேள்விகளை தந்து படிடா என்று விடுவாங்க. கடவுளே.. நான் அதுகளோட பட்டபாடு. இன்று அவை ஒரு பவுணுக்கு கூட எனக்கு வருவாய் தருதில்ல..! வெறும் காத்து தாங்க வருது.. உதுகளைப் படிச்சு..????!

திருநீறு பூசியே.. 10... 15 வருசமாகுது..! அதைப் பற்றிய கேள்வி மட்டும் 3 பக்கத்துக்கு படிச்சன்.. என்ன பயன்.....???!

அதுவும் இல்லாம.. விவேகானந்தா சபை என்று ஒரு சைவ சோதினை வைப்பாங்க. அதில ஏ எடுத்தா.. ஸ்கூலில ஒரு கீரோ. வெளில.. அது.. ஜீரோ..! தேவையா நமக்கு இதுகள் எல்லாம்..???! :):icon_idea:

Share this post

Link to post
Share on other sites

அண்ணா நீங்கள் மேற் சொன்ன கடுமையான கால கட்டத்தில் வாழ்ந்த நாவலர் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா?

மனிதர்கள் மதம் மாறமல் இருப்பதற்காகவது சாதி வேற்றுமையை ஒழித்திருக்க வேண்டும்...சம உரிமை கொடுத்திருக்க வேண்டும்.அதற்காக போராடி இருக்க வேண்டும் அப்படி அந்தக் காலத்திலேயே அவர் போராடியிருந்தால் பெரும்பான்மையான மக்கள் மதம் மாறி இருக்க மாட்டார்கள்...மக்கள் மதம் மாறக் கார‌ணமே இவரும்,அவரை விமர்சிக்க தவறி அவரோடு சேர்ந்து அந்தக் காலத்தில் ஆதர‌வு கொடுத்த மக்களும் தான்.

மதங்கள் உருவாக்கப்பட்டதே நல்வழி போதிக்கத் தான் இப்ப,இங்கு இதைக் கொண்டு போடுபவராவது அந்தக் காலத்தில் ஆறுமுக நாவலர் சொன்ன தேவையில்லாத கருத்தை விட்டு,விட்டு மக்களை நல் வழிப் படுத்தும் கருத்துக்களை போட‌லாமே!...அவர் தான் போட்டது பிழை எனச் சொல்லவும் இல்லை அதற்காக மன்னிப்பு கேட்கவும் இல்லை...புலிகள் மக்களை ஒரு வழிப்படுத்த சாதி வேற்றுமைகளை நீக்கினார்கள் அந்த புலிகளையும்,தேசியத்தையும் உயிர் மூச்சாக நினைக்கும் உங்களால் எப்படி சாதி வெறியர்களையும் ஆதரிக்க முடியுது?

நாவலரையும்,தலைவரையும் ஒப்பிடாதீங்கோ...தலைவரின்ட‌ கால் தூசிக்கும் அவர் வர‌ மாட்டார்...நாவலரையும் பார்க்க தமிழை வளர்த்த கண பேர் இருக்கினம்...உண்மையை சொல்லப் போனால் இவர் எமக்கு நன்மையை விட தீமை தான் அதிகம் செய்திருக்கிறார் இவரால் தான் எங்கட‌ பெரும்பான்மை மக்கள் மதம் மாறினவை.

உண்மையான விமர்சனங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம்...விமர்சனங்கள் தான் ஒரு மனிதனை பக்குவப்பட‌ வைக்கும் என்பது எனது கருத்து.

எம்மை காத்தவர்களை விமர்சிகக்க முன்

அவரைப்பற்றியும் அவராற்றிய பணிகள் பற்றியும் அவர்மீதான மக்களின் மதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளுங்கள் ரதி.

மற்றும்படி உங்கள் கருத்துக்களுக்கு எதிரானதல்ல எனது கருத்தும்.

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.

சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.

கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசை தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.

நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயா சாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.

ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஷ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.

நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திர முந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

www.swisstamilsangam.blogspot.com

www.aarumuganaavalar.blogspot.com

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102113&hl=

Share this post

Link to post
Share on other sites

இங்கு கருத்து எழுதிய பலர் ஆறுமுக நாவலர் தமிழை வளர்த்தவர்

என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதேவேளை அவர் சாதியையும் வளர்த்தார் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சமயம் என்பது நம்பிக்கை

சாதி என்பது அடக்குமுறை

இரண்டையும் கலந்து குழப்புதல் ஆகாது.

இந்து சமயம் சாதிவெறியைத் தூண்டுகின்றது என்பதை எவரும்

எற்றுக்க்கொள்ள மாட்டார்கள்.

இந்து சமயத்தையும் அதில் இருக்கும் சில ஓட்டைகளையும் பயன்படுத்தி

ஒருசில அடிப்படைவாதிகளினாலேயே இப்படியான சாதிவெறி பிடித்த

கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

இவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளச்

சமயத்தைப் பாவிக்கின்றனர்.

அப்படியானவர்களை இனம் கண்டு கொண்டால்

சாதி இரண்டு ஒளிய வேறில்லை என்பது புலப்படும்.

ஆறுமுக நாவலரைத் திட்டுவதால் சாதி ஒளியும்

என்றால் நானும் சேர்ந்து திட்டத் தயார்.

மூலம் எங்கோ இருக்கின்றது.

வாலைப் பிடித்து என்ன பயன்.

வாத்தியார் இங்கு யார் மதத்தைப் பற்றி தப்பாகப் பேசினது :unsure:

எம்மை காத்தவர்களை விமர்சிகக்க முன்

அவரைப்பற்றியும் அவராற்றிய பணிகள் பற்றியும் அவர்மீதான மக்களின் மதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளுங்கள் ரதி.

மற்றும்படி உங்கள் கருத்துக்களுக்கு எதிரானதல்ல எனது கருத்தும்.

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.

சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.

கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே இதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதற்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேராசை தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.

நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயா சாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.

ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஷ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.

நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திர முந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.

தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.

www.swisstamilsangam.blogspot.com

www.aarumuganaavalar.blogspot.com

http://www.yarl.com/...topic=102113=

ஆறுமுகநாவலர் பற்றி சின்னனிலேயே சைவப் பாடத்தில் படிச்சிட்டேன் :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

மீண்டும் ஒருமுறை

இந்த அண்ணனுக்காக... :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

ஆறுமுக நாவலருக்கு வகுப்பெடுப்பதில் வந்து நிற்குது.

இனி .............???

ஆறுமுகநாவலருக்கே... பாடம் கற்பிக்கும் அளவில், பலர் இங்கு உள்ளார்கள்.

ஆறுமுகநாவலர் இருந்திராவிட்டால்... எப்பவோ தமிழன் தனது அடையாளத்தை தொலைத்திருப்பான் என்பது, இவர்களுக்கு விளங்காதது, ஆச்சரியம் அல்ல.

Share this post

Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • Tholar Balan 8 நிமிடங்கள்  ·    •பிரான்சும் இந்தியாவும்! பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சேர்ஜியா மகேந்திரன் துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள். பிரான்ஸ்க்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர்களான செல்லப்பா மகேந்திரன் தேவி தம்பதிகளின் புதல்வியான சேர்ஜியா சட்டம் படித்து இன்று துணை முதல்வராக வந்துள்ளார். ஆனால் இந்தியாவில் 1983ம் அண்டு முதல் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர் குடியுரிமை பெறவும் முடியவில்லை. உயர் கல்வி பெறவும் முடியவில்லை. மாறாக இந்த கொரோனோ காலத்திலும் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் அவலநிலை. இந்த லட்சணத்தில் இந்திய பிரதமர் மோடி தனக்கு பின்னால் இருப்பதாக சம்பந்தா ஐயா பெருமையாக கூறுகிறார். என்னே கேவலம் இது!              
  • கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே! கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே! வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே! ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே! (கோபியரே கோபியரே) நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே! பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே! சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்! மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்! (கோபியரே கோபியரே) ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்! தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்! நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன் நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!! (கோபியரே கோபியரே)    
  • வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரக் கோரி போராட்டம்! கொரோனா வைரஸ் நிலைமையால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரக்கோரி சுதந்திரத்துக்கான மகளிர் அமைப்பு இன்று (08) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் சேமலாப திணைக்கள முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.     https://newuthayan.com/வெளிநாட்டில்-உள்ள-இலங்கை/  
  • இசைக்கலைஞனை உடனடியாக மேடைக்கு வருமாறு வேண்டப்படுகிறர்.
  • அமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று   சென்னை மின்துறை அமைச்சர் தங்கமணிக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கூடுதல் டிஜிபிக்கும் தொற்று உறுதியானதை அடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று பரவினாலும் நிவாரணப் பணி, அரசுப் பணிகளில் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, செயல்பட்டு வருகின்றனர். இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பழனி, சதன் பிரபாகர், குமரகுரு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், ஆர்.டி.அரசு, மஸ்தான், தங்க பாண்டியன் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு அம்மன் அர்ச்சுணன், பா.வளர்மதி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி சிகிச்சையில் குணமான நிலையில், நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர் தங்கமணிக்கும் அவரது மகனுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர், முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த நிலையில் அமைச்சர் தங்கமணியும் அந்நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. அமைச்சர் தங்கமணி நேற்று முதல்வர் பழனிசாமியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை துறைச் செயலர்கள், மின்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். ஐசிஎம்ஆர் விதிப்படி அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதிக்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இதேபோன்று காவல்துறை கூடுதல் டிஜிபி ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊர்க்காவல்படை கூடுதல் டிஜிபியாக இருப்பவர் ராஜீவ்குமார். இவரது மனைவிக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இவரும் பரிசோதித்துக் கொண்டார். அதில் அவருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். https://www.hindutamil.in/news/tamilnadu/563321-corona-infection-to-minister-thangamani-chennai-ips-officer-also-affected-1.html