Jump to content

எங்க வீட்டு தக்காளியும், பக்கத்து வீட்டு கருவாடும்

Recommended Posts

Karuvadu%2BThakkali.jpg

வணக்கம்,

தலைப்பை பார்த்து விட்டு, இதென்ன பெரிய சமையல் என நினைச்சிங்க என்றால் அது தப்பு, பெரிய தப்பு. தேவையான பொருட்களில் தான் இந்த கறியின் சுவை உள்ளது. முதலில் அதைப் பார்ப்போம்.

மிக முக்கியமான தேவையான பொருட்கள்:

(1) அடம் பிடித்து, அப்பாவிடம் திட்டு வாங்கி வீட்டில் நீங்களே வைத்த தக்காளி செடியில் இருந்து வந்த தக்காளிக்காய்கள். (குறிப்பாக அந்த செடிக்கு நீங்கள் ஒரு தடவை கூட நீர் ஊற்றியிருக்க கூடாது. வைத்த சில நாட்களிலேயே வேலை என சொல்லி வேறு ஊரிற்கோ/ நாட்டிற்கோ சென்றுவிட வேண்டும்)

(2) பக்கத்து வீட்டில் கொடுத்த கருவாட்டு துண்டு (கருவாடு தரும் பக்கத்து வீட்டுக்காரரா என பொறாமை வேண்டாம்..அந்த பக்கத்து வீடு என் அண்ணன் வீடு) கருவாடு நிச்சயமாக ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும்.

வழமையான தேவையான பொருட்கள்:

* தக்காளிப்பழம் 1

* வெங்காயம் பெரியது 1

* உள்ளி 5 நீளவாக்கில் வெட்டியது

* கறிவேப்பிலை 10 இலைகள்

* மஞ்சள் தூள் 1/2 தே.க

* மல்லி தூள் 1/2 மே.க

* மிளகாய் தூள் 1/2 மே.க

* நீர் 1/2 கப்

* தேங்காய்ப்பால் / சோயாப்பால் 1/4 கப்

* உப்பு தேவைக்கேற்ப

* எண்ணெய் சிறிதளவு

செய்முறை:

1. சின்ன தக்காளி காய்களை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். Background Sound: அம்மா "இனி இங்க ஆராவது மரம் வைக்கிறன் அது இது என்று சொல்லட்டும்"

2. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அது போல தங்காளி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

3. அடுப்பை பற்ற வைத்து, சட்டியை அதில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி லேசாக சூடாக்க வேண்டும்.

4. சூடாக்கிய எண்ணெய்யில் வெங்காயத்தை போட்டு வதக்குங்கள், பின்னர் உள்ளி (வெள்ளைப்பூண்டு), கறிவேப்பிலை, வெட்டிய தக்காளிகாய்கள், கருவாடு போட்டு நன்றாக வதக்குங்கள்.

5. 3 நிமிடங்களில் மஞ்சள் தூளில் ஆரம்பித்து, மேற் கூறிய அத்தனை தூள்களையும் உப்பையும் சேர்த்து நன்றாக கிளறி 1/2 பேணி(கப்) நீர் சேர்த்து 3 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள். சட்டிக்கு மூடி மூடி என்று சொல்லி ஒன்று இருக்கும். அதை இப்போதாவது உபயோகிக்கலாமே. அதனால் மூடியால் மூடி அவியுங்கள்.

6. இப்போது பால் (தேங்காய்ப்பால் சுவைதான், கொழுப்பை குறைக்க விரும்புவோர் சோயாப்பால் சேர்க்கலாம்) சேர்த்து நன்றாக கொதித்து வந்ததும் இறக்கிவிடுங்கள். (அடுப்பில் இருந்து தான்)

7. கறி நிச்சயமாக சுவையாக இருக்கும், தக்காளி செடி வைத்ததற்கும், தண்ணீர் ஊற்றாமல் வேறு ஊருக்கு சென்றதற்கும் பேசியவர்களுக்கும் சாப்பிட குடுத்து சமாதானம் செய்துவிடுங்கள்.

நன்றி

வணக்கம்... ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட ஆசையாய் தான் இருக்குது...நேரம் கிடைக்கும் போது கருவாடு வாங்கி செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்...நன்றி

Link to comment
Share on other sites

பச்சை தக்காளியில் வெள்ளைக்கறி வைத்து சாப்பிட றொம்ப நன்றாக இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வீட்டு தக்காளி கறி சுவை அதிகம். :)

கறுப்பி கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டு பார்த்தனீங்களா :D

Link to comment
Share on other sites

கருவாடும் தக்காளிக்காயும் போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கும் கொஞ்சம் போட்டால் சொல்லி வேலையில்லை.

தூயா தக்காளிக் காயில் செய்யும் வேறு சமையல்கள் ஏதும் தெரியுமா? குளிர் வந்தபடியால் இன்று ஒரு 5 கிலோ அளவில் பறித்து வைத்துள்ளேன். என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதில் ஒரு கிலோவை ரதிக்கு கொடுத்தனுப்புங்கள் :lol:

தக்காளி யாம் செய்யலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எங்க வீட்டு தக்காளியும், பக்கத்து வீட்டு கருவாடும்
எங்கள் ஊர் பழக்கவழக்கங்களில் இதுவுமொன்று.....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவாடை எப்படி ஆக்கி தின்றாலும் அதில் ஒவ்வொரு ருசி இருக்கிறது.

எனக்கு கொஞ்ச எண்ணேய்விட்டு வெண்காயத்துடன் பிரட்டி எடுத்து குழல் புட்டடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இணைப்புக்கு நன்றி தூயா.

நன்றி தூயா.

எனக்கு கருவாடும் கத்தரிக்காயும் போட்டு குழம்பு வைச்சு அடுத்த நாள் விடிய வயல் காட்டில் வேலை செய்துவிட்டு ஓன்பது மணிக்கு பாணுடன் சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். அதே மாதிரி பழச்சோற்றுடன் வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி மோருடன் கலந்து குடித்தால் கலைப்பே தெரியா.

நித்தம் நித்தம் நெல்லு சோறு

நெய் மணக்கும் கத்திரிக்கா

நேத்து வெச்ச மீன் கொழம்பு

என்ன இழுக்குதையா

நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு

வந்து மயக்குதையா

பச்சரிசி சோறு

உப்பு கருவாடு...

சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு

குருத்தான மொள கீற வாடாத சிறு கீற

நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊருது

அள்ளி தின்ன ஆச வந்து என்ன மீறுது

(நித்தம் நித்தம்)

பாவக்கா கூட்டு பருப்போட சேத்து

பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு

சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு

கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா

தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா

(நித்தம் நித்தம்)

பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு...

பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு

சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்

அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல

அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல

இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு

சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க

சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க

(நித்தம் நித்தம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஹொலன்டில் இருந்து வரும் கருவாடு வாங்கலாம். விலையும் அதிகம் இல்லை. கிலோ 5 € தான்.... நல்ல சதைப்பிடிப்பாக இருக்கும். தூயா சொன்ன முறையில்... தக்காளிக் காய் போட்டு செய்து பார்க்க வேண்டும். தக்காளிக் காய் அருமையாகத்தான் வாரச்சந்தைக்கு வரும். கிடைக்காவிட்டால்... பக்கத்து வீட்டுகாரனின் தோட்டத்தில் ஆட்டையை போடவேண்டியது தான்....biggrin.giflaugh.gif

கருவாடும் தக்காளிக்காயும் போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கும் கொஞ்சம் போட்டால் சொல்லி வேலையில்லை.

தூயா தக்காளிக் காயில் செய்யும் வேறு சமையல்கள் ஏதும் தெரியுமா? குளிர் வந்தபடியால் இன்று ஒரு 5 கிலோ அளவில் பறித்து வைத்துள்ளேன். என்ன செய்வது என்று தெரியவில்லை.

தப்பிலி, தக்காளிக்காயில் பால் கறி வைக்கலாம். நன்றாக இருக்கும்.

5 தக்காளிக்காயை எடுத்து .... நான்காக வெட்டவும்.

பெருஞ் சீரகம், கடுகு, வெங்காயம் போட்டு சிறிது தாழித்து...

அதற்குள் தக்காளிக்காய், நீள வாக்கில் அரிந்த பச்சை மிளகாய், மஞ்ஞள் தூள், சிறிது நீர் விட்டு மூடிய பின் கொதிக்க விடவும்.

நன்Kஉ கொதித்த பின், சிறிது பால் விட்டு இறக்கவும்.

உப்பு போட மறக்க வேண்டாம்,

Link to comment
Share on other sites

அதில் ஒரு கிலோவை ரதிக்கு கொடுத்தனுப்புங்கள் :lol:

ஒரு கிலோ என்ன இரண்டு கிலோவே அனுப்புகிறேன். கோழிச் சாம்பாருக்கு போட்டுச் சமைக்க நன்றாக இருக்கும். :lol:

தக்காளி யாம் செய்யலாமே

நன்றி ஈழப்பிரியன் செய்து பார்க்கிறேன். :)

தப்பிலி, தக்காளிக்காயில் பால் கறி வைக்கலாம். நன்றாக இருக்கும்.

நன்றி சிறி . செய்து பார்க்கிறேன்.

இன்னும் நிறைய கிலோக் கணக்கில் வரும் போல் உள்ளது. அவ்வளவர்றையும் சமைக்க முடியாது. ஏதும் தமிழ்க் கடைக்குத்தான் கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கு கட்டா (திரிய பாரை) கருவாடுதான் நன்றாக இருக்கும். :wub:

Link to comment
Share on other sites

சாப்பிட ஆசையாய் தான் இருக்குது...நேரம் கிடைக்கும் போது கருவாடு வாங்கி செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்...நன்றி

வணக்கம் ரதி, நலம் தானே? நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்..முயற்சி செய்து பாருங்கள்..

பச்சை தக்காளியில் வெள்ளைக்கறி வைத்து சாப்பிட றொம்ப நன்றாக இருக்கும்...

சிலர் அதில் கத்தரிக்காயும் சேர்ப்பார்கள்...நீங்க சொல்லும் வெள்ளைக்கறிக்கு தேங்காய்ப்பால் தான் கறிக்கு சுவையை கொண்டுவரும், இல்லையா?

உங்க வீட்டு தக்காளி கறி சுவை அதிகம். :)

நன்றி கறுப்பி :)

கருவாடும் தக்காளிக்காயும் போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கும் கொஞ்சம் போட்டால் சொல்லி வேலையில்லை.

தூயா தக்காளிக் காயில் செய்யும் வேறு சமையல்கள் ஏதும் தெரியுமா? குளிர் வந்தபடியால் இன்று ஒரு 5 கிலோ அளவில் பறித்து வைத்துள்ளேன். என்ன செய்வது என்று தெரியவில்லை.

நிச்சயம்..தக்காளி பழ இருக்கா? காயா?

எங்கள் ஊர் பழக்கவழக்கங்களில் இதுவுமொன்று.....

அதில் தான் சுவை அதிகம்.. கிகிகி

கருவாடை எப்படி ஆக்கி தின்றாலும் அதில் ஒவ்வொரு ருசி இருக்கிறது.

எனக்கு கொஞ்ச எண்ணேய்விட்டு வெண்காயத்துடன் பிரட்டி எடுத்து குழல் புட்டடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இணைப்புக்கு நன்றி தூயா.

அதென்னமோ உண்மை தான்... கருவாட்டு சம்பல் போல சுவை எதற்கிருக்கு? :)

நன்றி தூயா.

எனக்கு கருவாடும் கத்தரிக்காயும் போட்டு குழம்பு வைச்சு அடுத்த நாள் விடிய வயல் காட்டில் வேலை செய்துவிட்டு ஓன்பது மணிக்கு பாணுடன் சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். அதே மாதிரி பழச்சோற்றுடன் வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி மோருடன் கலந்து குடித்தால் கலைப்பே தெரியா.

அதென்ன சரியா 9மணி?!!!

பக்கத்து வீட்டுகாரனின் தோட்டத்தில் ஆட்டையை போடவேண்டியது தான்....biggrin.giflaugh.gif

உப்பு போட மறக்க வேண்டாம்,

1) அவ்வ்வ்வ்வ்வ் நானாச்சும் கருவாட்டுக்கு தான் பக்கத்து வீட்டில சுட்டேன் ;) இது ஓவர்...கிகிகி

2) உப்பை பார்த்து போடவேணும்...கருவாட்டிலயும் நல்ல உப்பு இருக்கும்..

இதற்க்கு கட்டா (திரிய பாரை) கருவாடுதான் நன்றாக இருக்கும். :wub:

உண்மை ... திரியா பாரைகருவாட்டு சம்பல் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து சமையல் செய்து சாதனைகள் படைத்து வரும் தூயா அவர்களுக்கு அவுஸ்திரெலியா தொலைக்காட்சியான அலைவரிசை 10 வழங்கும் http://www.masterchef.com.au/home.htm விருது வழங்கப்பட இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன சரியா 9மணி?!!!

wub:

வெயிலுக்கு முதல் தோட்டத்துக்கு போய் வேலை செய்கிற வழக்கம், வீட்டில் அம்மா எழும்பி கடையில் பாண் வாங்கிக் கொண்டு வர தோட்டத்திற்கு 9 மணியாகிவிடும் அப்படி கொஞ்சம் வர பித்தினாலும் வெள்ளரி பிச்சுகள், வெண்டிக்காய், பிஞ்சு மிளகாய், சுட்ட மரவள்ளி கிழங்கு... வாயிற்றுக்குள் போய்விடும்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து சமையல் செய்து சாதனைகள் படைத்து வரும் தூயா அவர்களுக்கு அவுஸ்திரெலியா தொலைக்காட்சியான அலைவரிசை 10 வழங்கும் http://www.masterchef.com.au/home.htm விருது வழங்கப்பட இருக்கிறது.

அவ்வ்வ்வ்வ்வ் என்னைய கிண்டலடிப்பதே உங்களுக்கு வேலையாகி போச்சு கந்தப்பு

Link to comment
Share on other sites

வெயிலுக்கு முதல் தோட்டத்துக்கு போய் வேலை செய்கிற வழக்கம், வீட்டில் அம்மா எழும்பி கடையில் பாண் வாங்கிக் கொண்டு வர தோட்டத்திற்கு 9 மணியாகிவிடும் அப்படி கொஞ்சம் வர பித்தினாலும் வெள்ளரி பிச்சுகள், வெண்டிக்காய், பிஞ்சு மிளகாய், சுட்ட மரவள்ளி கிழங்கு... வாயிற்றுக்குள் போய்விடும்.

ஆஹா கேட்கவே நல்லாயிருக்கே...பிஞ்சு மிளகாயும் சுட்ட மரவள்ளி கிழங்கும்... யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

தக்காளி காய்ல செய்த கறி சாப்பிட்டா... தோல் சம்பந்தமான நோய் உள்ளவங்களுக்கு அலர்ஜிக் ..ஆகும்

எங்கிறாங்களே...சரியா தெரியலியே! இத நம்ம நெடுக்கை கூப்பிட்டுத்தான் விளக்கம் ,கேட்கணும் :unsure:

தோல் சம்மந்தமான நோய் உள்ளவர்களுக்கு தக்காளி சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுவது என்பது நான் அறிந்து கொண்ட வரையில் உண்மை தான்.நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளி காய்ல செய்த கறி சாப்பிட்டா... தோல் சம்பந்தமான நோய் உள்ளவங்களுக்கு அலர்ஜிக் ..ஆகும்

எங்கிறாங்களே...சரியா தெரியலியே! இத நம்ம நெடுக்கை கூப்பிட்டுத்தான் விளக்கம் ,கேட்கணும் :unsure:

தோல் நோய்.. எக்சிமா (ECZEMA) உள்ளவர்களுக்கு மட்டும் தக்காளி ஒவ்வாமை தருவதில்லை.. மேலும் பிறருக்கும் இது ஒவ்வாமையாக அமையும். தக்காளி மட்டுமல்ல..நைட்சேட் (nightshades) வகை உணவுகள்.. (உருளைக்கிழங்கு.. மிளகாய்.. பெப்பர்.. ) இவைகளும் இந்த வகை ஒவ்வாமை தரலாம்.

1. PEOPLE WITH ARTHRITIS (மூட்டு நோய்கள் உள்ளவர்கள்.) – Some researchers believe that arthritis is misdiagnosed in people who are in fact just suffering joint aches and swelling arising from consumption of nightshades. One in three arthritics react badly to nightshades. These individuals frequently have a sensitivity to the solanine chemicals present in these foods. It can take up to six months of exclusion of nightshades from the diet to achieve a beneficial effect. Lupus and Still’s disease are also associated with tomato consumption.

2. MACROBIOTICS (தானிய மற்றும் பிற ஒவ்வாமை உள்ளவர்கள்) – since the 1960s, the macrobiotic diet has recommended avoidance of all nightshades. This proven diet for health and longevity is followed by celebrities such as Sadie Frost, Gwyneth Paltrow, Chris Martin of Coldplay and Madonna.

3. CHILDREN WITH ECZEMA (எக்சிமா வகை தோல் நோய் உள்ள குழந்தைகள் மற்றும் பிறர்)– for some children the elimination of nightshades from the diet helps clear eczema, particularly around the mouth.

4. GASTRO ESOPHOGAL REFLUX DISEASE (சமிபாட்டுக் குறைபாடு.. உண்ட உணவு வாயால் வருதல்.. உள்ளவர்கள்.)– consumption of nightshade vegetables, particularly tomatoes, can causes a reaction where the stomach contents are pushed back up the esophagus towards the throat with symptoms of heartburn, chest pain, choking while lying down and asthma symptoms when sleeping.

5. THOSE QUITTING SMOKING (புகைப்பிடித்தலை கைவிடுபவர்கள்)– some programmes to help people give up cigarettes also recommend giving up nightshade foods in order to completely eliminate low level nicotine intake and consequent re-addiction.

6. BLOOD GROUP DIET(குருதி வகை சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்கள்) – Dr. Peter d’Adamo’s Blood Type Diet recommends people of blood types A and B to avoid all nightshade foods. This represents about half the population of most European countries.

7. CYSTITIS ( சுச்சா போகும் போது எரிவு, நோ), LUPUS (தோலில் சிவப்பான அடையாளங்கள் தோன்றி இருப்பவர்கள்.. மூட்டு நோ உள்ளவர்கள்.), PSORIASIS (தோல் நோய் உள்ளவர்கள்)– giving up nightshades can help relieve symptoms of cystitis, lupus and psoriasis.

Sources: 1. http://www.tomatofree.co.uk/tomato-allergy

2. http://www.nhs.uk/Conditions/Pages/hub.aspx

Link to comment
Share on other sites

சாப்பாடுகள்னு வரும்போது , விழுந்தடிச்சு ஒரு கட்டு கட்டாம.......இப்டி சைட் எஃபக்ட்டும் ... இருக்குன்னு சொல்லவும்வேணும் இல்லியா?

அப்போதானே டாக்டர் பீஸ் & உயிர் ,எஸ்கேப் ஆவும் எல்லாருக்கும்!

இதுக்குத்தான் சொல்றது ...ஊருக்கு ஒரு நெடுக்கு வேணும்னு!

ரொம்ப தாங்க்ஸ் நெடுக்கு & யாயினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தூயா! :D

Link to comment
Share on other sites

சிலர் அதில் கத்தரிக்காயும் சேர்ப்பார்கள்...நீங்க சொல்லும் வெள்ளைக்கறிக்கு தேங்காய்ப்பால் தான் கறிக்கு சுவையை கொண்டுவரும், இல்லையா?

கத்தரிக்காய் சேர்க்காமல் பச்சை தக்காளிக்கு பால் விட்டு வெள்ளைக்கறியாக வைத்தால் புளிப்பு தன்மையாக இருக்கும் வெள்ளை சோறுடன் சாப்பிட்டால் நன்றாகவே இருக்கும்....

என்ன தப்பிலி அண்ணா சைட் பிசினஸ் பண்ணுகிறீர்களோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.