Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணைத் தற்கொலை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_41230614_anne_turner203.jpg

Dr Turner,(66) என்பவர் supranuclear palsy எனும் மூளைக் கலங்கள் சிதைவடைவதால் தோன்றும் இயலாமை நோயினால் பாதிகப்பட்டிருந்தார். மிகச் சமீபத்தில் அதன் அவஸ்தையில் இருந்து விடுபடுவதற்காக சுவிஸ்லாந்தில் பிறிதொரு மருத்துவக் குழுவினரின் பரித்துரையின் அடிப்படையில் மாத்திரைகள் மூலம் தற்கொலை செய்ய அனுமதிகப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார். இவ்வகையில் தற்கொலைகள் தூண்டப்படுவது மனித உரிமைகள் பற்றி கருசணை கொண்டோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..!

குறித்த supranuclear palsy நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரில் மூளையில் சில வகைக் கலங்கள் தொடர்ந்து அழிவுறுவதால் கண்ணசைவு..கை கால் அசைவுகள்.. பேச்சு. விழுங்குதல் போன்ற அன்றாட தேவைகளுக்கு அவசியமான இயக்கங்கள் சீர்குலைந்து விடுகின்றன. இறுதியில் அவர் மரணப்படுக்கைக்கு செல்ல வேண்டியதாகிறது. இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிகம் தாக்கும் எனினும் இள வயதிலும் இதன் தாக்கம் சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்..!

http://kuruvikal.blogspot.com/ மற்றும் bbc.com

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்...ரொம்ப பரிதாபமாக இருக்கின்றது.

அப்படியான நோய்கள் ஐரோப்பாவில் அதுவும் நான் வசிக்கும் நாட்டிலும் இருக்கின்றது. நேரில் கூட அவர்களோடு வேலை செய்திருக்கின்றேன்.. அவர்கள் தானாக இயல்பாக நடக்கவே கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு left.. right சொல்லித்தான் நடக்க வைப்பார்கள்..நடக்கும் போது யாராவது குறுக்கால் சென்றாலோ..கதை கேட்டாலோ..அப்படியே நின்று விடுவார்கள்..மீண்டும் நடக்க ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கணும். சாப்பிடுவது கூட..கஷ்டம் தான். ரொம்ப பாவமாக இருக்கும்.

ஆனால் இப்படி கருணை தற்கொலை கேட்டு செய்து கொண்டதாக நான் அறியவில்லை. ஒரு பக்கதிலிருந் து பார்த்தால்..(அவர்களை நேரில் கண்டால்)அது நியாயம் போலவே தோன்றும். ஆனால் மறு பக்கம்..சட்டம் வேறு சொல்கிறதே. :roll:

இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிகம் தாக்கும் எனினும் இள வயதிலும் இதன் தாக்கம் சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்..!

ம்ம் கூட வயது வந்தோர்க்கு தான் வரும் நோய். ஆனால் சிறு வயதிலேயே..சிறுவர்களுக்கு/இடை வயதுள்ளோருக்கு கூட வரும் நோய் epilepsy என்பார்கள். அந்த நோய் தொடர்ந்து மருந்துகள் பாவிக்காமல் தொடருமானால்..அதன் அற்றாக்குகளினால் ஒரு காலகட்டத்தின் பின் மூளை செல்கள் சேதமடைந்து..இந்த நோய் உருவாகும் சந்தர்ப்பமும் கூட இருக்குமாம். சிறுவர்களுக்கு இது கூட வருமென்றால்..அந்த நோயின் தாக்கத்தினால் வருமாம். ஆனால் இப்போது தான் மருந்துகள் நிறையவே இருகின்றன. அதையும் தாண்டி..சில நாட்களுக்கு முன்...பள்ளியில் நல்ல புள்ளிகள் பெற்றதால் தாய் ஒரு சிறுவனை (அவர் குழந்தையை) game விளையாட அனுமதித்தாராம். சிறுவன் 12 மணி நேரம் தொடர்ந்து விளையாடியதால்..கேமிலிருந்து வந்த நிற ஒளியினால்..அவருக்கு எபிலெப்சி அற்றாக் வந்து டாக்டர்களால் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக இறந்து போனாராம். :(

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ப்ரியசகி..! இவ்வகை நோய்கள் பற்றியும், நோயாளிகளுடன் நீங்கள் பெற்ற நேரடி அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதுக்கு..! :P

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் குருவிகள் உங்கள் தகவல்களுக்கு.

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ப்ரியசகி. களத்தில் இதைப்பற்றி பெரியப்பு ஒரு கட்டுரையை இணைத்து இருந்தார். அதை இங்கு இணைக்கின்றேன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7537

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது வேறை லெவல்...... ⁑ ⁑ ⁑ தேத்தண்ணி கடையிலை வேலை செய்திருப்பாரோ? 😂    
    • தைமாதத்துக்கு பிறகு  மற்றவர் வெள்ளைமாளிகைக்கு வந்தாப்பிறகு என்னென்ன திருவிளையாடல் நடக்குதோ ஆருக்குத்தெரியும்? 🙃
    • பகிர்வுக்கு நன்றி சுமே.  இப்படி மூலிகை மருந்து, குடி நீர், இலேகியம் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாது உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அல்லது கடும் வருத்தங்களுக்குள்ளாகியவர்களின் அனுபவங்களை நாலாவது ஆளாக உங்களிடம் இருந்து அறிகின்றேன். சம்பவம் 1:  அந்த பெண் அழகிய சீனப் பெண். அவரது தாராள மனசு அவரது ஆடைகளின் தெரிவில் தெரியும். என் அலுவலகத்தில் இன்னொரு பிரிவில் சூப்பர்வைசராக பணி புரிகின்றார். நான் எழுதும் மென்பொருள் பகுதிகளை அவர் பிரிவு சார்பாக Testing மற்றும் தரப்பரிசோதனை செய்பவர். நட்பானவர். திடீரென 3 வாரங்களாக அவரைக் காணவில்லை. 3 வாரங்களின் பின்னர் அவர் பகுதி நேரம் மட்டும் வேலை செய்து வந்தமையால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 5 வாரங்களின் பின் அவரை தொடர்பு கொள்ள முடிந்தது. என்ன பிரச்சனை என்று கேட்க, ஆரம்பத்தில் தயங்கியவர் பின் என்ன நடந்தது என விவரித்தார். சுமே மேலே சொன்ன தன் கதையில் சுமேக்கு பதிலாக அவரது பெயரை போட்டு வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவருக்கும் நிகழ்ந்து இருக்கு. ஒரு சீன கடையில் வாங்கிக் குடித்த மூலிகை பானம், அவர் கல்லீரலினை மோசமாக தாக்கி ICU வில் 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டு, பின் மெல்ல மெல்ல தேறி வந்துள்ளார். அவரது மருத்துவர் தன் அறிக்கையில் அவர் குடித்த பானம் தான் பிரச்சனை என்று அறிக்கையிட்டு இருக்கின்றார். சம்பவம் 2: இங்கு இருக்கும் சென்னையை சேர்ந்த என் நண்பனின் மனைவியின் தம்பி இப்படி பல குடினீரை குடித்துக் கொண்டு வந்து இருக்கின்றார். கொரானா தன்னை அண்டாது என்று இருந்து இப்ப pancreatitis பாதிக்கும் மேல் பழுதாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். சம்பவம் 3: விற்றமின்கள் பல அடங்கிய immune booster இனை என் நண்பனில் ஒருவர் (மூன்றாம் வகுப்பில் இருந்து நண்பன்) இங்கு கனடாவில் (மார்க்கம்) வாங்கி கொரனாவுக்கு எதிரான நோயெதிர்ப்பை அதிகரிக்கின்றேன் என்று தினமும் குடித்து வந்தவர். 2 மாதங்களுக்கு முன்னர் வழக்கமான இரத்த பரிசோதனை செய்யும் போது போன வருடத்தை விட பன்மடங்கு அளவு அவரது வெள்ளை நிற குருதி சிறு துணிக்கைகள் அதிகமாகி  (கிட்டத்தட்ட 500 மடங்கு) இப்ப அதைக் குறைக்க சிகிச்சை எடுக்கின்றார். பெரியளாவில் குறையுதும் இல்லை. இது இப்படியே போனால் புற்றுனோயை உருவாக்கலாம் என்ற பயம் உள்ளது. சம்பவம் 4: சுமேயின் அனுபவம் ------------ கொரனா வந்த பின் இங்கு கடைகளில் நிறைய வகைகளில் மூலிகைகள், மூலிகை பானங்கள் விற்கின்றனர். அவற்றில் என்ன இருக்குது என்று அவர்கள் வரிசையிட்டு இருப்பினும் எம் உடல் அவற்றை எப்படி உள்வாங்குகின்றது என்பது பற்றி விளக்கம் இல்லை. அத்துடன் அப்படி வரிசையிட்டு இருப்பவை உண்மையாகவே அப் பானத்தில் இருக்கின்றதா எனவும் தெரியாது. அத்துடன் இவை எந்த தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் தாண்டி வந்திருக்காத பானங்களாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். முக்கியமாக இலங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எந்தளவுக்கு சுகாதார முறைகளை பின்பற்றி செய்திருப்பார்கள் என ஊகிக்க முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒருவருக்கு வேலை செய்யும் ஒரு மருந்து / மருத்துவம் இன்னொருவருக்கு வேலை செய்யும் என்று இல்லை. அது அவரவர் உடல் நிலை, உணவு முறை, பரம்பரை ,  வாழும் இடம் ஆகியனவற்றில் தங்கியிருக்கும். அப்பத்தாவுக்கு வேலை செய்த மூலிகை பேராண்டிக்கும் வேலை செய்யும் என்று இல்லை. கணவனுக்கு பொருந்திய மருந்து மனைவிக்கு பொருந்தாது. முக்கியமாக, தகுந்த மருத்துவரின் ஆலோசனை இன்றி எதனையும் மருந்தாக உட் கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம்.
    • சிங்களம் தனது பூர்வீகத்தை முன்னிறுத்தி மனதில் வைத்து வரலாறுகளை அசைபோட்டு அசைபோட்டு  தனது இருப்பை மேம்படுத்துகின்றது. எம்மவர்களோ நாளைக்கு கிடைக்கும் பிலாப்பழத்தை விடை இன்று கிடைக்கும் கிலாக்காய் உத்தமம் என சொல்கின்றார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.