Jump to content

இன்று விநாயகர் சதுர்த்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

1

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள். அதை வலியுறுத்துவதுதான்

‘மாமலாராள் நோக்குண்டாம்’ என்னும் சொற்பதங்கள்

2

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை

இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!

விநாயகப் பெருமானை எப்போதும் நமது புத்தியில் வைத்து வணங்க வேண்டும். நல்ல புத்தியைக் கொடுப்பார். நம்மை வழிதவறிப் போக விடமாட்டார். நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே

உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்

3. விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாத சிலம்பு பலஇசை பாடப்

பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்

வண்ண மருங்கில் வளர்ந்தழ தெறிப்பப்

பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடி கொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாவிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளிமார்பும்

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழம் நுகரு மூஷிக வாகன

இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்

பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமது பொருளென

வாடர் வகைதான் மகிழ்ந் தெனக் கருளிக்

கோடாயுதத்தாற் கொடு வினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்

தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருனை யினிதெனக் கருளி

கருவிக ளொடுக்குங் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்குந் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்க மருந்தே

ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறாதாரத் தங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழ பாம்பின் நாவிலுணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலா லெழுப்புங் கருத்தறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக நூலமுஞ் சதுர்முக சூட்சமும்

எண்முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரிஎட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்

கருத்தினிற் கபால வாயில் காட்டி

இருத்திமுத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்தெனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கு மனமும் இல்லா மனோலயந்

தேக்கியே என்றன் சிந்தை தெரிவித்து

இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன

அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் னுள்ளே சதாசிவங் காட்டி

சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங்காட்டி

அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமு நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சுக் கரத்தி னரும் பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தென்னை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!

அனைத்துப் பாடல்களுமே ஒளவையார் அருளிச் செய்தவையாகும்!

நன்றி - http://pandiyan74.wordpress.com

மற்ற பாடல்களை கேட்காவிட்டிலும் இந்த பாட்டை மட்டுமாவது, கண்ணை மூடி கேளுங்கள்

http://www.youtube.com/watch?v=-VZjkiRHAkc

Link to comment
Share on other sites

நல்ல புத்தியைக் கொடுப்பார்”

நல்லபுத்தி அவருக்கே இல்ல....

கல்யாணம்பண்ணாமலே இரண்டு காதலிகள்!

ஞானப்பழத்தை தம்பிக்கு கொடுக்காம...குறுக்கு வழில அமுக்கிட்டாரு!

“நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே

உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்”

பாடத்தை சரிவர விளங்கிக்கொள்ளாமல் தப்பு தப்பா படித்தால்...அதையும் மறந்துபோக செய்யமாட்டாரா?

படித்தவை அப்படியே மனசில தங்க செய்வது விநாயகரல்ல!

விளங்கி(விருப்போடு) படித்தல் & ஞாபகத்திறன்!

என்ன இதெல்லாம் உடையாரண்ணா?

உலகம் எங்கியோ போயிருச்சி.............

இன்னும் சாமி ...பூதம் என்னுகிட்டு! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல புத்தியைக் கொடுப்பார்”

நல்லபுத்தி அவருக்கே இல்ல....

கல்யாணம்பண்ணாமலே இரண்டு காதலிகள்!

ஞானப்பழத்தை தம்பிக்கு கொடுக்காம...குறுக்கு வழில அமுக்கிட்டாரு!

“நீங்கள் மாணவர் என்றால் படித்தவை அப்படியே

உங்களுடைய புத்தியில் தங்கச் செய்வார். மறந்துபோகும்படி விட்டு விடமாட்டார்”

பாடத்தை சரிவர விளங்கிக்கொள்ளாமல் தப்பு தப்பா படித்தால்...அதையும் மறந்துபோக செய்யமாட்டாரா?

படித்தவை அப்படியே மனசில தங்க செய்வது விநாயகரல்ல!

விளங்கி(விருப்போடு) படித்தல் & ஞாபகத்திறன்!

என்ன இதெல்லாம் உடையாரண்ணா?

உலகம் எங்கியோ போயிருச்சி.............

இன்னும் சாமி ...பூதம் என்னுகிட்டு! :rolleyes:

நன்றி அறிவிலி, நீங்கள் அறிவு பூர்வமாக தீவிரமாக யோசிச்சு பதில் எழுதுகின்றீர்கள், உங்கள் பதிலை கீழே உள்ள திரிக்கும் தருங்கள் என் பதிலும் அதில் உள்ளது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91045

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

,itfs; gbf;Fk; tprak; my;y.

mt;itahupd; tho;tpy; ,J eilngw;wJ.

cq;fsJ tho;tpNy ,J elf;ftpy;iy vd;why; vd;d ed;ik?

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்

தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருனை ,,னிதெனக் கருளி

கருவிக ளொடுக்குங் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்குந் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்க மருந்தே

ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறாதாரத் தங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதி நீங்கள் எழுதிய எழுத்து விளங்கவில்லை, இதில் முயற்ச்சி செய்து பாருங்கள் www.w3tamil_wk\index.html

http://wk.w3tamil.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

,jid ghkpdp vOj;J nfhz;Ljhd; vOjpNdd;.

vdf;F jkpopy; ilg; nra;tJ rpwpJ fbdk;.

Mdhy; Mq;fpyk; ngupa jpwnkd;Wk; ,y;iy.

% it Njb mbf;f 3 epkplk; vLf;fpwJ.

Link to comment
Share on other sites

நானும் மோதகம் தாருவாங்கள் என்று கோயிலுக்கு போனேன்... படுபாவிகள் ஒரு பாதி மோதகம் கூட எனக்கு தரவில்லை... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மோதகம் தாருவாங்கள் என்று கோயிலுக்கு போனேன்... படுபாவிகள் ஒரு பாதி மோதகம் கூட எனக்கு தரவில்லை... :lol:

அடப்பாவமே. கோயிலில் மோதகம் அவித்திருக்க மாட்டாங்கள்போலும். டேக் இட் இசி யா.

Link to comment
Share on other sites

அடப்பாவமே. கோயிலில் மோதகம் அவித்திருக்க மாட்டாங்கள்போலும். டேக் இட் இசி யா.

பிள்ளையாருக்கு பக்கத்தில் இருந்தது நான் பார்த்தேன் ஜய்யர் அமிக்கிவிட்டார் மோதகத்தை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மோதகம் தாருவாங்கள் என்று கோயிலுக்கு போனேன்... படுபாவிகள் ஒரு பாதி மோதகம் கூட எனக்கு தரவில்லை... :lol:

சுஜி என்னிடம் சொல்லி இருந்தால் நான் மோதகம் பார்சலில் அனுப்பி வைச்சு இருப்பனே...:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி உடையார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.