-
Tell a friend
-
Topics
-
0
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
ஜனாதிபதி விடுத்துள்ள சுதந்திர தின செய்தி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு முதன்மையான நோக்கமாகும். அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி துரிதமாக நகர வேண்டும். அணிசேரா என்றபோதும் தீர்க்கமான பலமுள்ள, பின்வாங்காத, காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண்பதுபோன்ற நிலையான இலட்சியங்களுடன் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கையை தற்போது செயல்படுத்தி வருகின்றோம். உலகின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக்கூடிய இலங்கையர் என்ற வகையில் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-விடுத்துள்ள-சுதந்திர-தின-செய்தி/175-311834 -
Chinese Spy Balloon in US: அமெரிக்க வானில் தென்பட்ட வெள்ளை பலூன் சீனா அனுப்பியதா?
-
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி! அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இது இறையாண்மையை மீறும் செயல் என ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். நீண்ட திட்டமிடப்பட்ட வருகைக்கு முன்னதாக இவ்வாறு நடந்துக்கொள்வது இன்னமும் பொறுப்பற்றது என அவர் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனாவுக்கான பயணத்தை உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி திடீரென ரத்து செய்துள்ளார். இது பல ஆண்டுகளாக அங்கு நடைபெறும் முதல் உயர்மட்ட அமெரிக்க-சீனா சந்திப்பாக இருந்திருக்கும். ஆனால், இது அமெரிக்க வான்வெளியில் தவறாக வீசப்பட்ட வானிலை விமானம் என்று சீனா முன்னதாக வருத்தம் தெரிவித்தது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனிடையே, நேற்று (வெள்ளிக்கிழமை) பென்டகன் இரண்டாவது சீன உளவு பலூன் தென்பட்டதனை உறுதிசெய்தது. இந்த முறை இது லத்தீன் அமெரிக்கா வானில் பறந்ததாக அது கூறியது. பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பேட்ரிக் ரைடர் இதுகுறித்து கூறுகையில், ‘லத்தீன் அமெரிக்காவைக் கடக்கும் பலூன் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். இது மற்றொரு சீன கண்காணிப்பு பலூன் என்று நாங்கள் இப்போது மதிப்பிடுகிறோம்’ என கூறினார். பலூன் இருக்கும் இடம் பற்றிய கூடுதல் விபரங்களை அவர் வழங்கவில்லை. வர்த்தக போர், பாதுகாப்பு, தாய்வான் மற்றும் கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் பெப்ரவரி 5 முதல் 6 வரை பெய்ஜிங்கிற்குச் செல்லவிருந்தார். ஆனால், அமெரிக்க வான்பரப்பில் சீனாவின் கண்காணிப்பு பலூனை அவதானித்த பிறகு இந்த பயணம் இரத்துசெய்யப்பட்டது. https://athavannews.com/2023/1323022
-
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி! உக்ரைனுக்கு தாக்குதல் வரம்பை இரட்டிப்பாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அமெரிக்காவின் சமீபத்திய 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இராணுவ தொகுப்பில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 பெப்ரவரி முதல் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியின் மொத்தத் தொகையை 29.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகக் கொண்டுவருகிறது 150 கிமீ (93 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இந்த தொகுப்பில் அடங்கும். ஆனால், இணைக்கப்பட்ட கிரிமியாவின் சில பகுதிகளைத் தாக்குவதற்கு வெடிமருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்ற ஊகத்தின் பேரில் அதிகாரிகள் பெற மறுத்துவிட்டனர். ‘நடவடிக்கைகள் குறித்த உக்ரைனிய திட்டங்களைப் பொறுத்தவரை, அது அவர்களின் முடிவு’ என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பாட் ரைடர் ஊடகங்களிடம் கூறினார். ‘இது மீண்டும், தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவர்களின் இறையாண்மை பிரதேசம், ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்பப் பெறவும் உதவும்’ என அவர் மேலும் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் பலமுறை உக்ரைனுக்கு தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதை நிராகரித்துள்ளன.போர் விமானங்கள் போன்றவையை கொண்டு உக்ரைன் ரஷ்யாவையே தாக்கும் என்ற அச்சத்தால் இது தவிர்க்கப்பட்டது. https://athavannews.com/2023/1323019
-
By கிருபன் · பதியப்பட்டது
வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார். வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பதிலளிப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளன’ என கூறினார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடினின் கருத்துகளை விபரிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்களிடம், ‘கூட்டு மேற்கு நாடுகளால் புதிய ஆயுதங்கள் வழங்கப்படுவதால், பதிலளிப்பதற்கான அதன் திறனை ரஷ்யா அதிகமாகப் பயன்படுத்தும்’ என்று கூறினார். https://athavannews.com/2023/1322954
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.