• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

உடையார்

கர்நாடக சங்கீதம் (நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை இதில் இணையுங்கள்)

Recommended Posts

கர்நாடக சங்கீதம்

நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்டு வளர்ந்தது தப்பாட்டம், கரகாட்டம், அரிச்சந்திரா, ராமர், வள்ளித்திருமணம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள். எனவே 23 வயது வரை கர்நாடக சங்கீதம் என்றால் விலை என்ன என்றுதான் கேட்பேன். அப்படி ஒரு ஞானம்! ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation! இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம்! நானும் ராஜாராமும் 10-ம் வகுப்பு முதல் B.E வரை ஏழு வருடங்கள் ஒரே வகுப்பு... ஒரே பெஞ்ச்.


1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் C-DOT-ல் வேலை கிடைத்து பெங்களூர் சென்றேன். அப்போது ராஜாராம் I.I.Sc-ல் M.E முடித்துவிட்டு Ph.D பண்ணிக்கொண்டிருந்தான். எனது கல்லூரி நண்பர்கள் பலர் I.I.Sc பக்கத்தில் யஷ்வந்த்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றில் மாத வாடகையில் தங்கியிருந்தார்கள். நானும் அங்கே சென்று அடைக்கலமானேன். நான் வேலை நேரம் போக பெரும்பாலும் ராஜாராமனுடன் அவன் ஹாஸ்டல் ரூமில்தான் இருப்பேன். அப்போது அவன் கர்நாடக இசை கேசட்டுகளைப் கேட்டுக்கொண்டிருப்பான். நான் அவன் ரூமுக்கு சென்றவுடன் செய்யும் முதல் காரியம் “டேய்.. என்னடா இந்த ஆளு/அம்மா ஆஆஆ.........ன்னு கத்திகிட்டு இருக்காங்க. இதப்போய் கேட்டுகிட்டுயிருக்கே.. I.I.Sc-க்கு வந்து கெட்டு போயிட்டடா” என்று சொல்லி டேப்ரிக்கார்டை ஆப் பண்ணி விட்டு சினிமா பாடல் கேசட்டை சுழல விடுவேன். ஆரம்பத்தில் இதைப்பற்றி ராஜாராம் ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான்.


ஒரு சில மாதங்கள் கழித்து “டேய்.. நானும் ஒன்ன மாதிரிதான் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தேன். என்னோட பிராமின் நண்பர்கள்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். இத கொஞ்சம்.. கொஞ்சமா கேட்டு பாருடா. அப்ப இந்த இசையின் அருமை புரியும்” என்றான்.


Ph.D செய்யும் அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்குமென நினைத்து “சரிடா.. நானும் கேட்டுப்பார்க்கிறேன்” என்றேன்.


”அப்படி வா. வழிக்கு” என்று சொல்லிவிட்டு கர்நாடக இசை என்றால் என்ன? தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாம சாஸ்திரிகள் மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி, காப்பி அப்படீன்னு ராகங்கள் என்று என்னமோ சொன்னான்.

“எனக்கு தெரிஞ்சதெல்லாம் குடிக்கிற காப்பிதாண்டா.. ஆனாலும்
கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி அப்படீன்னு பிகர் பெயர்களா நீ சொல்றதனால.. ஒரு கிக் இருக்கும்போல இருக்குடா!”


”நான் சொன்னது ஒனக்கு ஒன்னும் புரிஞ்ரிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று சொல்லிக்கொண்டே ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டு இத நல்லா கேளு என்றான். கேட்டேன். பிறகு அதே ராகத்திலுள்ள சில சினிமா பாடல்களை போட்டு இந்த பாடல்களையும் கேளு என்றான். கேட்டேன்.


“கர்நாடக சங்கீத பாடலுக்கும்.. இந்த சினிமா பாடல்களுக்கும் என்ன ஒற்றுமை?”


”எல்லா பாடல்களும் ஒரு சில சமயங்களில் கேட்கும்போது ஒரே மாதிரியா இருந்ததுடா”


“Good…இந்த பாடல்கள் எல்லாம் ஒரே ராகம்டா”


சட்டென ஏதோவொரு ஈர்ப்பு ஏற்பட்டது. மேலும் ராஜா பல முக்கியமான ராகங்களின் கர்நாடக சங்கீத பாடல்கள் மற்றும் அந்த ராகத்திலுள்ள பாடல்கள் எல்லாவற்றையும் சொல்லி எழுதிக்கொடுத்து கேசட்டுகளை கொடுத்து கேட்க சொன்னான். அந்த சமயத்தில் என்னிடம் டேப் ரிக்கார்டர் கிடையாது. கர்நாடக இசையை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் உடனே ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி ராஜாராம் கொடுத்த கேசட்டுகளையும், பாடல்களையும் கேட்க ஆரம்பித்தேன். கர்நாடக இசை கேட்க ஆரம்பித்தவுடன் எனக்கு முதலில் பிடித்தது.. பாடகர் பல விதங்களில் ஸ்வரங்கள் பாடுவது அதை வயலினிஸ்ட் பாலோ செய்வது. மிருதங்க வித்வானின் தனி ஆவர்த்தனம் ஆகியவை. இந்த ஆர்வத்தில் தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தேன்.


பையனுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்துவிட்டதை தெரிந்துகொண்ட ராஜா அடுத்த தூண்டிலை எனக்கு வீசினான்.


”இந்த வெள்ளிக்கிழமை சாயங்கலாம் மல்லேஸ்வரம் கோவிலில் கச்சேரி இருக்கு நான் போறேன்.. நீயும் வற்றியாடா?” என்றான்.

சரியென்று சொல்லிவிட்டு கச்சேரிக்கு ராஜாராம் மற்றும் அவன் I.I.Sc நண்பர்களுடன் சென்றேன். ஹைதராபாத் சகோதரர்களின் கச்சேரி. அந்த கச்சேரி ஒரு மறக்க முடியாத அனுபவம். ஹைதராபாத் சகோதரர்களில் ராகாவாச்சாரிக்கு கனீரென்ற குரல்... சேஷாத்திரிக்கு சற்று மென்மையான குரல். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பாடுகிறார்கள்.... மிருதங்கத்தில் திருவாரூர் பக்தவச்சலம் அதகளமாக பின்னி பெடலெடுக்கிறார்... வயலின் வித்வானும் அருமையாக வாசிக்கிறார். கர்நாடக இசை, ராகங்கள் பற்றி எதுவும் தெரியாத நான் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் மெய்மறந்து கேட்டேன். கச்சேரி முடிந்ததும் ராஜாவிடம் சொன்னது.


”ராஜா.. இனிமேல் எங்கு கச்சேரிக்கு போனாலும். என்னையும் கூட்டிக்கிட்டு போடா”

அடுத்து சென்ற கச்சேரி கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் கச்சேரி. எனக்கு சிறு வயதிலிருந்து நாதஸ்வரம், மேளம் கேட்க மிகவும் பிடிக்கும். காரணம்.. எட-அன்னவாசல் கிராமத்திலிருக்கும் என் அம்மா வழி தாத்தா வீட்டிற்கு பக்கத்தில் நாதஸ்வர, மேள வாத்திய கலைஞர்கள் வாழ்ந்தார்கள். சிறுவனாக தாத்தா வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வாசிப்பை கேட்பேன். கதரியின் சாக்ஸபோன் இசை நாதஸ்வர இசை போன்று இருந்ததால் சட்டென்று சாக்ஸ் இசை மீது அளவில்லா ஆர்வம். சாக்ஸபோன் ஒரு வெஸ்டர்ன் இசைக்கருவி அதில் கர்நாடக சங்கீத சுரங்கள் வாசிப்பது மிகவும் கடினம். கதரி ஒரு ஜீனியஸ் என்றான் ராஜா. அன்றிலிருந்து இன்றுவரை கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசைக்கு நான் அடிமை!

நானும் ராஜாராமும் மாதா மாதம் HMV சென்று M.S.சுப்புலட்சுமி, D.K.பட்டம்மாள், M.L.வசந்தகுமாரி, T.N.சேஷகோபாலன்,T.Vசங்கரநாரணன், ஹைதராபாத் சகோதரர்கள், மகாராஜபுரம் சந்தானம், கதிரி கோபால்நாத், மாண்டலின் சீனிவாசன், சுதா ரகுநாதன் etc., போன்ற சங்கீத வித்வான்களின் கேசட்டுகளை பட்டியல் போட்டு வாங்கினோம். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது!


சென்னை டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகள் கேட்பதற்காக நானும் ராஜாராமனும் 1992-ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை சென்று வரும் அளவிற்கு என் கர்நாடக சங்கீத ஆர்வம் வளர்ந்துவிட்டது. அதன்பிறகு, பாஸ்டன், சிங்கப்பூரில் கச்சேரிகள் நடக்கும்போது வாய்ப்பு கிடைக்கும்போது கச்சேரிகளுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன்.


நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவனல்ல. இன்றுவரை எனக்கு ராகங்களின் ஆரோகனம், ஆவரோகனம் பற்றி எதுவும் தெரியாது. ஹம்சத்வனி, ஆபேரி, சண்முகப்பிரியா, கரகரப்பிரியா, கல்யாணி, நாட்டை, மோகனம், சிவரஞ்சனி, சுப பந்துவரளி etc., போன்ற முக்கியமான ராகங்களின் பாடல்களை கேட்டு Pattern Recognition முறையில் ராகங்களை தெரிந்து கொள்ள முடியும். நான் கர்நாடக சங்கீதம் கேட்க கற்றுக்கொண்டது Pattern Recognition மற்றும் சினிமா பாடல்களின் மூலமாகத்தான்.

உதாரணமாக “சண்முகப்பிரியா” ராகத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ராகத்திலுள்ள “சரவணபவ என்னும் திருமந்திரம்” என்ற இந்த பாடலைக் கேளுங்கள்.

இதே ““சண்முகப்பிரியா” ராகத்திலுள்ள சினிமாப் பாடல்கள்:


மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... (தில்லானா மோகனாம்பாள்)
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே... (பழைய பாடல் – படம் தெரியவில்லை)
தம்.. தம். தன தாளம் வரும் (புதிய வார்ப்புகள்)
கண்ணுக்குள் நூறு நிலவா.. (வேதம் புதிது)
தகிட.. தமிதி.. தந்தான.. (சலங்கை ஒலி)
இப்படி கேட்டு “கர்நாடக சங்கீதம்” தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளலாம். திரைப்படப்பாடல்கள் மூலமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள சிகாகோவிலுள்ள தமிழ் மொழி அறக்கட்டளையின் நிறுவனர் திரு. ராம்மோகன் அவர்களின் முயற்சியில் “திரைப்படப் பாடல்களில் மரபிசை” என்ற தலைப்பில் 7 CD-கள் உள்ள தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் விவரம் இங்கே.


http://www.kural.org/products.php


எனக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால்.. என் குழந்தைகள் இருவரும் தற்போது கர்நாடக சங்கீதம் கற்றுகொண்டு வருகிறார்கள். மகளின் பெயர் சுருதி!


வேலை டென்சன் மற்றும் மன அழுத்தங்கள் இருக்கும்போது நான் ரிலாக்ஸ் செய்யும் முறை இதுதான். ஒரு மணி நேரம் வியர்த்துக்கொட்ட மெது ஓட்டம் அல்லது ஜிம்மில் workout. பிறகு வெண்ணீரில் நல்ல குளியல். Bose- ஹோம் தியேட்டரில் ஒரு கர்நாடக இசைவட்டை சுழலவிட்டுவிட்டு கையில் பியர்! அடடா.... அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.


இசை என்பது நாம் கேட்டு மகிழ கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான கலை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலையும் இந்த அவசர வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த இசையை தினமும் கேட்டு மகிழுங்கள். குறிப்பாக படுக்க போகும் முன்பு கண்ட குப்பை சீரியல்களையும், செய்திகளையும் TV-யில் பார்க்காமல் அமைதியான இசையை கேட்டுக்கொண்டு ஒரு நல்ல புத்தகத்தை ஒரு அரை மணி நேரம் படியுங்கள். ஆனந்தமாக தூக்கம் வரும்!எனக்கு கர்நாடக இசையை சொல்லிக்கொடுத்து அறிமுகப்படுத்திய என் நண்பன் ராஜாராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!


M.S.சுப்புலெட்சுமி அம்மாவின் தெய்வீக குரலில் இந்த கரகரப்பிரியா ராக பாடலைக் கேட்டு பாருங்கள்! You'll start liking carnatic music!
நன்றி - ரவிச்சந்திரன்
vssravi.blogspot.com

Share this post


Link to post
Share on other sites

மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கும் ராகங்களில் ஒன்று "சுத்த தன்யாசி". இது மேளகர்த்தா ராகமான நடபைரவியின் ஜன்யமாகும். இந்த ராகம் :உதய ரவிச்சந்திரிகா" என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ க2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 ப ம1 க2 ஸ

முதலாவது "பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடல். சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைக்கப்பட்ட பாடல். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. சிவாஜி, மற்றும் எம்.ஆர்.ராதா இருவரின் ஏட்ட்க்குப் போட்டிகும், அங்க சேஷ்டைக்களுக்காகவும் புகழ்பெற்றது

நன்றி-simulationpadaippugal.blogspot.com

Share this post


Link to post
Share on other sites

சாருகேசி ராகம் ஒரு மென்மையான ராகம் என்பதற்கு ஒரு உதாரணம் "சிங்காரவேலன்" படத்தில் வந்த "தூது செல்வதாரடி கிளியே" என்ற பாடல்.

http://www.youtube.com/watch?v=7nTjaJMTxcI&feature=player_embedded#at=61


Share this post


Link to post
Share on other sites


'பக்கா' வாத்தியங்கள்

நந்தீஸ்வரர் மத்தளம்.
நாரதர் தம்பூரா.
சரஸ்வதி வீணை.
சிவனார் டமரு.
கிருஷ்ண பரமாத்மா புல்லாங்குழல்.


இப்படிக் கடவுளர் அனைவரும் வாத்தியம் இசைப்பவர்கள் தான். பக்க வாத்தியம் என்று தற்போது மேடையில் ஓரத்தில் உட்காரவைத்தாலும் அதில் சிறப்பாக கொடிகட்டி பறந்து அதை பக்கா வாத்தியமாக மாற்றியவர்கள் பலர். குறிப்பிட்டுச் சொல்லப் பலபேர் (பலபேர்) இருப்பதால் வித்வான்கள் பற்றி எழுதப்போவதில்லை. சங்கீதப் பதிவாக இதை விஸ்தரித்து எழுதவில்லை என்றாலும் இன்று நான் கேட்ட ஒரு வாத்திய கோஷம் என்னை இது எழுத உசுப்பிவிட்டது.கடம் - விக்கு விநாயக்ராம்


முதலில் இந்த வீடியோ. குடும்பமாக உட்கார்ந்து இசைக்கிறார்கள். கை விளையாடுகிறது.
கீழ்காணும் வீடியோவில் மேதை விக்குவின் கைப்பக்குவம் நன்கு விளங்குகிறது.

தட்டிக் கொடுக்கிறார்...
தடவிக் கொடுக்கிறார்...
குட்டுகிறார்...
குத்துகிறார்...
அடிக்கிறார்...
வாசிக்கிறார்..
நாலு தட்டு தட்டிவிட்டு நம்மையும் கையை தட்ட சொல்கிறார்...

இவர் செய்யும் வித்வத்தை ஜாகிர் ஹுசைன் ரசிப்பதை பார்ப்பது கூட ஒரு அழகுதான்.

http://www.youtube.com/watch?v=Vun2nEpgznY&feature=player_embedded

ஷஷாங்க் சுப்ரமண்யம் - வேங்குழல் நாதம்.


நீலமேக ஷ்யாமளானாக புல்லாங்குழல் ஊதுகிறார். தலையில் மயிலிறகு மிஸ்ஸிங் அவ்வளவுதான். அவர் ஊதும் காற்று அந்தத் துளைகளில் என்ன பாடுபட்டு நாதவெள்ளமாக வெளிவருகிறது? குழல் வாயால் ஊத பார்த்திருக்கிறேன், அதை அடித்துப் பார்த்திருக்கிறீர்களா? அற்புதம்.
குன்னக்குடி வைத்தியநாதன்.


நெற்றியின் வலது கோடியிலிருந்து இடது கோடி வரை ஒரே பட்டையாய் திருநீறு. நடுவில் பழைய ஒரு ரூபாய் நாணயம் சைஸுக்கு குங்குமம். பளபளா என்று ஜிப்பா. ஒரு பட்டு வேஷ்டி. கருடாழ்வார் மூக்கு. காது இடிக்கும் வரை உதட்டை விரித்து ஒரு பெரீய்ய சிரிப்பு. சினிமா மெட்டுக்களை வயலினில் வாசித்து நிறைய இளைஞர்களை தான் பக்கம் திருப்பினார். வாசிக்கும் போது காண்பிக்கும் முகபாவங்கள் அற்புதம். அந்த பாவத்திலே நம்மை மெஸ்மரைஸ் செய்துவிடுவார். திருவையாற்றில் ஆராதனையின் போது நடுநாயகமாக உட்கார்ந்து தாளம் போடும் அழகே தனி. இறைவனடி சேர்ந்த வயலின் மேதையின் "இஞ்சி இடுப்பழகா" பிட்.

பண்டிட் ரவிஷங்கர் - சிதார்


இதுதான் ஹிந்தியில 'சித்தாரு' என்று கமல்ஹாசன் கலாய்த்து பாடியதால் வீணைக்கும், சித்தாருக்கும் உருவ ஒற்றுமை தவிர்த்து வேறென்ன என்று பார்த்தால் வீணைக்கு நாலு தந்தி சித்தாருக்கு ஏழு தந்தி. மகள் அனுஷ்காவுடன் சேர்ந்து இசைத்த கச்சேரி. மீட்ட ஆரம்பித்து உள்ளே செல்ல செல்ல தன்னை மறந்து அவர் அனுபவித்து இசைப்பது கேட்காமலே இனிக்கிறது.

http://www.youtube.com/watch?v=-KXk_8_8oLY&feature=player_embedded

உமையாள்புரம் சிவராமன் - மிரு'தங்கம்'


செம்மங்குடியின் திருச்சி கச்சேரி. நடுவில் கண்ணில் அடிக்கும் ப்ளாஷ் லைட்டை அணைக்கச் சொல்கிறார். தனியாவர்த்தனம் வாசிக்கும் உமையாள்புரம் சிவராமனின் டெடிகேஷன். மலைக்க வைக்கிறார். வாசிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும்போது நமக்கு கைரெண்டும் உதறுகிறது.வீணை எஸ். பாலச்சந்தர்
சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பியவர் என்பது இந்த "அமிர்தவர்ஷினியில்" தெரிகிறது. ஆனந்தாமிர்தகர்ஷினி அமிர்தவர்ஷினி என்று வீணை மீட்டும் போது இசை மழை பொழிகிறது. நேரம் செல்ல செல்ல விண்ணைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அடைமழையாய் காதுகளை வந்தடைகிறது வீணைகானம். வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு என்ற பாரதியார் பாடல் சட்டென்று நினைவுக்கு வந்து பாடாய்ப் படுத்துகிறது.
நன்றி - http://www.rvsm.in/2011/02/blog-post_04.html

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

உடையார் - குறை நினைக்காமல் பாட்டுக்களை இணைக்கும் போது, என்ன பாட்டு என்று குறிப்பிடுவீர்களா?

Share this post


Link to post
Share on other sites