Jump to content

கர்நாடக சங்கீதம் (நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை இதில் இணையுங்கள்)


Recommended Posts

  • Replies 720
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி & யாயினி. பாட்டுக்களை கேட்டுக்கொண்டே பதிவிட்டுக்கொண்டிருந்தேன்.

நன்றி யாயினி உங்கள் அருமையான பதிவுக்கு. என் மனைவியும் அடிக்கடி இப்பாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பா, அடுத்த வருடம் கார்நாடக சங்கீத கச்சேரி என் மனைவியிடம் படிக்கும் பிள்ளைகள் நடத்தப் கோகின்றார்கள், அதுக்கு நல்ல பாட்டுகளை அவ இப்பவே சேகரிக்கத் தொடங்கிவிட்ட. யாயினி உங்களிடம் நல்ல பாட்டுகள் இருந்தால் நேரமிருக்கும் போது தொடர்ந்து இணைத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

கங்காதர ஷங்கர கருணாகரா மாமவ பவசாகரா தாரகா

நிர்குண பரப்ரம்மா ஸ்வரூபா கமகம பூதா பிரபஞ்ச ரஹிதா

நிஜ குஹநிஹித நிதாந்தகனந்த ஆனந்த அதிசய அக்ஷய லிங்க

திமித திமித திமி திமிகிட கிடதோம்

தோம் தோம் கிடதக தரிகிட கிடதோம்

மதங்க முனிவர வந்தித ஈசா

சர்வ திகம்பர மேச்டிதவேசா

நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா

ஈசா சபேஷா சர்வேஷா

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ

--தயானந்த சரஸ்வதி இயற்றிய பாடல்

http://www.youtube.com/watch?v=nK0ASl2W8tE&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி & யாயினி. பாட்டுக்களை கேட்டுக்கொண்டே பதிவிட்டுக்கொண்டிருந்தேன்.

நன்றி யாயினி உங்கள் அருமையான பதிவுக்கு. என் மனைவியும் அடிக்கடி இப்பாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பா, அடுத்த வருடம் கார்நாடக சங்கீத கச்சேரி என் மனைவியிடம் படிக்கும் பிள்ளைகள் நடத்தப் கோகின்றார்கள், அதுக்கு நல்ல பாட்டுகளை அவ இப்பவே சேகரிக்கத் தொடங்கிவிட்ட. யாயினி உங்களிடம் நல்ல பாட்டுகள் இருந்தால் நேரமிருக்கும் போது தொடர்ந்து இணைத்து

ஓம் முடிந்த மட்டுக்கு நல்லவற்றை எடுத்து பதிவிடுகிறேன் உடையார் அண்ணா.

NC Vasanthakokilam - En Palli Kondeerayya - Carnatic Classical

http://www.youtube.com/watch?v=IBj-oddCFFw&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Qew5JAy3gyw

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்

வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!

சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு

சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே

கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்

கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!

பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு

பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்

வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.

கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்

கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு

கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்

துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்

தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்

அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.

நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு

நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு

கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்

மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்

வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

வள்ளிக் கணவன் பேரை[/size][size=3]

வழிப் போக்கர் சொன்னாலும்[/size][size=3]

உள்ளம் குழையுதடி – கிளியே[/size][size=3]

ஊனும் உருகுதடி – கிளியே[/size][size=3]

ஊனும் உருகுதடி![/size]

[size=3]

மாலை வடி வேலவர்க்கு[/size][size=3]

வரிசையாய் நானெழுதும்[/size][size=3]

ஓலைக் கிறுக்காச்சுதே – கிளியே[/size][size=3]

உள்ளமும் கிறுக்காச்சுதே![/size][size=3]

கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே![/size][size=3]

(வள்ளிக் கணவன் பேரை..)[/size]

[size=3]

காட்டுக் கொடி படர்ந்த[/size][size=3]

கருவூரின் காட்டுக்குள்ளே[/size][size=3]

விட்டுப் பிரிந்தானடி – கிளியே[/size][size=3]

வேலன் என்னும் பேரோனடி[/size][size=3]

கிளியே வேலன் என்னும் பேரோனடி![/size]

[size=3]

கூடிக் குலாவி மெத்த[/size][size=3]

குகனோடு வாழ்ந்த தெல்லாம்[/size][size=3]

வேடிக்கை அல்லவடி – கிளியே[/size][size=3]

வெகு நாளின் பந்தமடி![/size][size=3]

கிளியே வெகு நாளின் பந்தமடி[/size][size=3]

(வள்ளிக் கணவன் பேரை..)[/size]

[size=3]

மாடுமனை போனாலென்ன?[/size][size=3]

மக்கள் சுற்றம் போனாலென்ன?[/size][size=3]

கோடிச் செம்பொன் போனாலென்ன? – கிளியே[/size][size=3]

குறுநகை போதுமடி![/size][size=3]

கிளியே முருகன் குறுநகை போதுமடி![/size]

[size=3]

எங்கும் நிறைந் திருப்போன்![/size][size=3]

எட்டியும் எட்டா திருப்போன்![/size][size=3]

குங்கும வர்ணனடி – கிளியே[/size][size=3]

குமரப் பெருமானடி![/size][size=3]

கிளியே குமரப் பெருமானடி[/size]

[size=3]

வள்ளிக் கணவன் பேரை[/size][size=3]

வழிப் போக்கர் சொன்னாலும்[/size][size=3]

உள்ளம் குழையுதடி – கிளியே[/size][size=3]

ஊனும் உருகுதடி – கிளியே[/size][size=3]

ஊனும் உருகுதடி[/size]

http://www.youtube.com/watch?v=fvjgydtoIfc&feature=player_embedded

[size=3]

சென்னிகுல நகர் வாசன் – தமிழ்த்[/size][size=3]

தேரும் அண்ணாமலை தாசன் – செப்பும்[/size][size=3]

ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்[/size][size=3]

புனை தீரன் அயில் வீரன்[/size][size=3]

தீரன் அயில் வீரன்[/size]

[size=3]

வண்ண மயில் முருகேசன் – குற[/size][size=3]

வள்ளி பதம் பணி நேசன் – உரை[/size][size=3]

வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம் நான்[/size][size=3]

வரவாதே சொல் வன்மாதே[/size]

[size=3]

சன்னிதியில் துஜஸ்தம்பம் – விண்ணில்[/size][size=3]

தாவி வருகின்ற கும்பம் – என்னும்[/size][size=3]

சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்[/size][size=3]

தாங்கும் உயர்ந்தோங்கும்[/size]

[size=3]

அருணகிரி நாவில் பழக்கம் – தரும்[/size][size=3]

அந்தத் திருப்புகழ் முழக்கம் – பல[/size][size=3]

அடியார்கணம் மொழிபோதினில்[/size][size=3]

அமராவதி இமையோர்செவி[/size][size=3]

அடைக்கும் அண்டம் புடைக்கும்[/size][size=3]

அடைக்கும் அண்டம் புடைக்கும்[/size]

[size=3]

கருணை முருகனைப் போற்றி – தங்கக்[/size][size=3]

காவடி தோளின்மேல் ஏற்றி – கொழும்[/size][size=3]

கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமேகதி[/size][size=3]

காண்பார் இன்பம் பூண்பார்[/size][size=3]

காண்பார் இன்பம் பூண்பார்[/size]

[size=3]

சென்னிகுல நகர் வாசன் – தமிழ்த்[/size][size=3]

தேரும் அண்ணாமலை தாசன் – செப்பும்[/size][size=3]

ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்[/size][size=3]

புனை தீரன் அயில் வீரன்[/size][size=3]

தீரன் அயில் வீரன்[/size][size=3]

[/size]

[size=3]

நாத விந்து கலாதி நமோ நம[/size][size=3]

வேத மந்திர ஸ்வரூபா நமோ நம[/size][size=3]

ஞான பண்டித ஸ்வாமி நமோ நம – வெகுகோடி[/size]

[size=3]

நாம சம்பு குமாரா நமோ நம[/size][size=3]

போக அந்தரி பாலா நமோ நம[/size][size=3]

நாக பந்த மயூர நமோ நம – பரசூர[/size]

[size=3]

சேத தண்ட வினோதா நமோ நம[/size][size=3]

கீத கிண்கிணி பாதா நமோ நம[/size][size=3]

தீர சம்பிரம வீரா நமோ நம – கிரிராஜ[/size]

[size=3]

தீப மங்கள ஜோதி நமோ நம[/size][size=3]

தூய அம்பல லீலா நமோ நம[/size][size=3]

தேவ குஞ்சரி பாகா நமோ நம – அருள்தாராய்[/size]

[size=3]

ஈதலும் பல கோலால பூஜையும்[/size][size=3]

ஓதலும் குண ஆசார நீதியும்[/size][size=3]

ஈரமும் குரு சீர்பாத சேவையும் – மறவாத[/size]

[size=3]

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை[/size][size=3]

சோழ மண்டல மீதே மனோஹர[/size][size=3]

ராஜ கம்பீர நாடாளு நாயக – வயலூரா[/size]

[size=3]

ஆதரம் பயிலாரூரர் தோழமை[/size][size=3]

சேர்தல் கொண்டவரோடே முன்னாளதில்[/size][size=3]

ஆடல் வெம்பரி மீதேறி மாகயி – லையிலேகி[/size]

[size=3]

ஆதி அந்தவுலாவாசு பாடிய[/size][size=3]

சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்[/size][size=3]

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் – பெருமாளே…[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம்

அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!

(அசைந்தாடும்)

இசையாறும் குழல் கொண்டு வந்தான்

இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்

திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும்

திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்

எங்காகிலும் எமது இறைவா இறைவா

என மனநிறை அடியவரிடம்

தங்கு மனத்துடையான் - அருள்

பொங்கும் முகத்துடையான்

ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட

மயிலின் இறகாட மகர குழையாட

மதி வதனமாட மயக்கும் விழியாட

மலரணி களாட மலர்மகளும் பாட

இது கனவோ நனவோ என

மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

(அசைந்தாடும்)

357636479_eb4e42d604_m.jpg

அசை போடும் ஆவினங்கள் கண்டு

இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று

நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்

ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!

திசைதோறும் கோபாலன் நின்று - மிக

எழில் பொங்க நடமாட

எதிர் நின்று ராதைபாட

(எங்காகிலும் எமது இறைவா இறைவா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்

பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்

(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்

நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்

பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்

ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்

ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்

(அமரஜீவிதம்)

Link to comment
Share on other sites

தொடர்ந்து அருமையான கர்னாடக சங்கீதப் பாடல்களை இணைத்து வரும் உடையாருக்கும், யாயினி தங்கைக்கும் என் நன்றிகள். கடுமையான வேலைப் பழு தரும் நெருக்கடியை நீங்கள் இணைக்கும் பாடல்கள் போக்கடித்து மனதை அமைதியாக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(ஆனந்த பைரவி)

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா தேவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா தேவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்

நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(கல்யாணி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்

நல்லாட்சி வைதிடும் நாயகியே

நல்லாட்சி வைதிடும் நாயகியே நித்ய

கல்யாணியே...

கல்யாணியே கபாலி காதல் புரியும்

கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த

உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(பாகேஸ்ரீ)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்

வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

பாகேஸ்ரீ தாயே

பாகேஸ்ரீ தாயே பார்வதியே

பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த

லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

(ரஞ்சனி)

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்

கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்

தஞ்சமென அடைந்தேன்...

தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்

ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாயம்மா

http://www.youtube.com/watch?v=weyRdtfvpI4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.