Nirupans

ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண் பதிவர்கள்!

Recommended Posts

மெல்லிதாய் மேலெழும்பி

நாள் தோறும் புலர்ந்து மறையும்

வலையுலக நாழிகைகள் நடுவே

தொலைந்து போகின்றன

எங்களின் உணர்வலைகள்!

நிரூபனின் நாற்று

ஆண்கள் மட்டும் தான்

அதிகம் எழுதலாம் என்பதும்

அவர்கள் மட்டும் தான்

தம் உணர்வுகளை

உச்சுக் கொட்டலாம்

என்று கூறுவதும்

யார் இங்கு இயற்றி வைத்த

சட்டமோ தெரியவில்லை!

Women+Slave.jpg

எங்களுக்குள்ளும் சாதாரண

மனிதர்களைப் போன்ற

மன உணர்விருக்கும்,

எம் உணர்வுகளுக்கு

உருவம் கொடுத்து

எழுதிட இணையம்

வாய்ப்புத் தந்தது- ஆனால்

எம் இடையே உள்ள

பச்சோந்திகளும், நரிகளும்

காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்;

காம சுகம் தேடும்

மோகத்தில் அலைந்து

காறி உமிழ நினைக்கிறார்கள்!

நாளைய பெண்களின் விடுதலை

நம் உளத்தில் தோன்றும்

இன்றைய வாழ்வின் சிந்தனை

மனதில் எழும் இன்ப

உணர்வுகள் இவை யாவும்

எழுதினாலும்,

எமக்கான பட்டம் வேசை!

சமையல் குறிப்போடு

சங்கதிகள் பல சொல்லின்

எமக்கான பெயர்

சக்களத்தி!

stop-violence.jpg

காதலைப் பற்றி பெண்

கவிதை பாடினால்

அவளைப் பின் தொடர்ந்து வந்து

காமத்திற்காய் சுகம் தேடி

அலைந்து இம்சையை கூட்டுகின்றன

இதயமற்ற நெஞ்சங்கள்!

முதலில் எம்மைப் பின் தொடர்ந்து

அழகிய கருத்துச் சொல்கிறார்கள் சிலர்

மெதுவாய் மை பூசும் வார்த்தை பேசி

எம் மின்னஞ்சல் எடுத்து

அதில் அன்பெனும் களிம்பு தடவி

சகோதரனாய் உறவாடி,

சற்றே நாம் நிலை தளர்ந்து

ஒரு பொதுவான விடயத்தை

வெளியில் பதிவாக்கிச் சொல்லியதும்,

உனக்கும் அனுபவமோ என கேட்டு

காயம் செய்கின்றன காட்டுப் பன்னிகள்!

நிரூபனின் நாற்று

மூன்று நாள் பதிவெழுதவில்லை எனில்

உனக்கு பீரியட்ஸ் வந்தால்

பதிவுலகிற்கும் பீரியட்ஸோ என

பிளிறுகின்றன சிலம்போசை

எழுப்பும் நயவஞ்சகப் புல்லுருவிகள்!

பெண்கள் இத்தகைய வரையறைக்குள்

வாழ வேண்டும் என்பதில்

மட்டும் கருமமே கருத்தாய் உள்ள

சீழ் கட்டிய செத்து விட்ட

உக்கி உலர்ந்த மனங் கொண்ட

கீழ்த் தரமான ஆண்களோ,

வெளி உலகின் பார்வைக்கு

முக்காடு போட்டு நடந்து,

உள் உலகில்

எம் மெயில் பெட்டி தேடி

மின்னஞ்சல் ஊடே அந்தரங்கம்

விசாரித்து அற்ப சுகம் காண்கிறார்கள்!!

Voilnece+Against+Womne.JPG

இன்பமெனும் வார்த்தை

எம் பதிவுகளில் வந்தால்

உனக்கும் அனுபவமோ என

ஆளைக் கொல்லும்

சுனாமியாய் பொங்குகிறார்கள்!

உடலுறவு எனும்

வார்த்தையை கையாண்டால்

உனக்கும் விருப்பம் இருந்தால்

வெளியே சொல்லென

உணர்ச்சி பொங்க(ப்)

பேசுகிறது இந்தச் சமூகம்!

நிரூபனின் நாற்று

நாம் எது எழுதினாலும்

ஒரு அளவீடு கொண்டு

எம் மனங்களை மட்டும்

அளக்கத் துடிக்கும்

ஆணாதிக்கவாதிகளால்

காற்றில் பறந்து தொலைகின்றன

எம் கற்பனைச் சிதறல்கள்!

பெண் ஒரு வரம்பினுள்

வாழ வேண்டும் என(க்)

கூப்பாடு போட்டு

வெளியே சமூக காவலர்களாய்

நடிக்கும் சிறிய மனங்களின்

நரகச் செயல்களால்

நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம்

எழுத்துக் கிறுக்கல்கள்!

ஆணாதிக்கம் என்றால்

வெளியே நல்லவர் போல் நடித்து

பெண் பதிப்புக்களை

நல்லவராய் விமர்சித்து

பின் அவள் மெயில் பெட்டியூடே

அந்தரங்கம் கிளறுவது தான் என்பது

என்னைப் போல்

எத்தனை அப்பாவிப் பெண்களுக்குப் புரியுமோ?

Women+Abusing.jpg

எதிர்காலம் தொலைக்கப்பட்டு

எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்

நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும்

பெண்களின் உணர்வுகளில்

எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ!

ஐயகோ ஆணாதிக்கமே

காலாச்சாரம் கட்டி(க்)

காக்கத் துணியும்

காவல் போலிசுகளே!

இப்படி எத்தனை பெண்களின்

வாழ்க்கையினை சீரழித்து(ச்)

சுகம் காண்பீர்!!

பண்டைய நாகரிக மரபில் திளைத்து

படித்து பட்டம் பெற்றும்

பெண்ணுக்கான வரம்பு

இது என நிர்ணயம் செய்யும்

இன்றைய ஆணாதிக்கவாதிகள்

இருக்கும் வரை

எம் உணர்வுகள்

வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!!

பிற் சேர்க்கை: வலையுலகில் இந்த வருடத்தின் நடுப் பகுதியில் காலாச்சார காவலர்களால் விரட்டியடிக்கபட்டு, தற்போது, சைபர் கிரைம் வழக்கினை அக் கலாச்சாரக் காவலர்களுக்கெதிராகத் தொடுத்துச் சென்னையில் தானும் ஒரு புதுமைப் பெண் என்பதை நிரூபிக்கும் முகமாய், வலைப் பதிவு மூலமாக நண்பராகிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரபல பதிவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற, முகம் தெரியாத அந்தச் சகோதரிக்கு என் இக் கவிதை சமர்ப்பணம்!

****************************************************************************

http://www.thamilnat...og-post_06.html

Edited by Nirupans
  • Like 5

Share this post

Link to post
Share on other sites

நிரூபன்,

ஏற்கனவே உங்கள்வலைப்பூ பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் தளத்தில் வரும் ஆக்கங்களை (இத் தளத்தில் வரும் பதிவுகளை, அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்) என்ற எழுத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கவிதைகளை இங்கு இணைக்கவில்லை.

நல்ல கவிதைகள். சமகால எழுத்துக்கள் பாராட்டுக்கள். யாழ் களம் ஊடாக உங்கள் எழுத்துக்கள் வருவதில் மகிழ்ச்சி.

Share this post

Link to post
Share on other sites

மிகவும் அழகிய, ஆழமாக என்னைப் பாதித்த கவிதை. உங்கள் வலைப் பூவையும் பார்த்தேன்.அழகு!!!

Share this post

Link to post
Share on other sites

நல்ல கவிதை நிருபன், வாழ்த்துக்கள்.

உங்களின் புரிந்துணர்விற்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரம்,

மிகவும் அழகிய, ஆழமாக என்னைப் பாதித்த கவிதை. உங்கள் வலைப் பூவையும் பார்த்தேன்.அழகு!!!

உங்களின் புரிதலுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.

நிரூபன்,

ஏற்கனவே உங்கள்வலைப்பூ பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் தளத்தில் வரும் ஆக்கங்களை (இத் தளத்தில் வரும் பதிவுகளை, அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்) என்ற எழுத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கவிதைகளை இங்கு இணைக்கவில்லை.

நல்ல கவிதைகள். சமகால எழுத்துக்கள் பாராட்டுக்கள். யாழ் களம் ஊடாக உங்கள் எழுத்துக்கள் வருவதில் மகிழ்ச்சி.

ஹா...ஹா...அந்த அறிவிப்பு என் பதிவுகளைத் தலைப்பை மாற்றிச் சிலர் தமது இணையத் தளங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

அதனால் தான் அவ்வாறு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தேன். நீங்கள் விரும்பின் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி அக்கா.

Share this post

Link to post
Share on other sites

பாராட்டுகள் நிருபன் கவிதை மிகவும் நன்றாகவும்,யதார்த்தமாகவும் உள்ளது தொடர்ந்தும் உங்கள் கவிதைகளை பகிருங்கள்

Share this post

Link to post
Share on other sites

அருமையான கவிதை. தொடர்ந்து எழுதுங்கள், நிருபன்.

Share this post

Link to post
Share on other sites

உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.,

உங்களின் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites

நிரூபன்! அருமையானதொரு கவிதை! பல யதார்த்த நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது.

நல்லதொரு எழுத்து நடை! நல்ல எழுத்தாளனுக்கான தைரியம்! பாராட்டுக்கள்!

பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண்களின் மீதான அடக்குமுறைகள் அனைத்துமே நல்லதொரு மாற்றத்தினை நோக்கி மாறவேண்டியவை! இப்பொழுது எல்லாமே மாறிக்கொண்டுதான் வருகின்றன என்பது சற்று ஆறுதல்.

நடைமுறையில், பெண்களை ஆண்கள் பார்க்கும் பார்வையில் நல்மாற்றங்கள் அவசியம்.

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

பி.கு: தங்களின் பதிவுகள் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன்! பலதும் அருமையானதாக இருக்கும்!

ஆனால் ஈழம் சம்மந்தமான சில ஆக்கங்களில் எனக்கு உடன்பாடு இல்லை(இது எனது தனிப்பட்ட கருத்து)

நான் எதை குறிப்பாகச் சொல்கின்றேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இதை சொல்லுறீங்களா?

ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!

http://www.thamilnat...-post_3068.html

அரசியலையும் கவிதையையும் பிரித்து பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். :icon_idea:

Edited by சித்தன்

அன்பிற்குரிய உறவுகளே,

வலியும் வேதனையும் அதனை அனுபவித்தவனுக்குத் தான் தெரியும், மேற்படி பதிவுக்கான எனது விளக்கங்களை அந்தப் பதிவின் கீழே கொடுத்திருக்கிறேன்.

தலைவரை நேசித்த- மதிக்கும் பல ஆயிரம் உள்ளங்களுள் நான் ஒரு சிறு தூசு, என் மன உணர்வு அவர் மீதான மதிப்பினைக் கடந்து என் தரப்பு விளக்கத்தினை நான், அங்கு வாழ்ந்த மக்கள் பட்ட துன்பங்களின் உணர்வுகளை மாத்திரம் பேசுவதாகும், இறுதி நேரம் வரை நம்பியிருந்த என்னைப் போன்ற மக்களின் உணர்வுகளை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்ட பின்னர் இந்தப் பதிவினை எள்ளி நகையாடுதல் சிறப்பானதல்லவா..

நான் இங்கே வந்து விடுதலைப் புலிகள் பற்றி வாழ்த்துப் பாடி, உங்களோடு அரசியல் பேசினால் தான் நீங்கள் மேற்படி பதிவினைச் சுட்டலாம். மீண்டும் மீண்டும் அந்தப் பதிவினை வைத்து நையாண்டி செய்வது தான் எமக்கான வேலையா?

ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே பதிவினை வைத்து நையாண்டி செய்து குத்திக் காட்டுவ்தை விடுத்து, அங்கே வாழ்ந்த ஏனைய கடை நிலை மக்களின் உணர்வுகளோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள் நண்பர்களே..

இப்படியான செயல் வேண்டாமே.

நேசமுடன்,

நிரூபன்

நிரூபன்! சித்தன் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்! அரசியலையும் கவிதையையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று! அதுவும் ஒரு வகையில் நியாயம்தான்!

அதற்கான தங்களின் பதிலுக்கு பொறுப்பாளி நானாகத்தான் இருக்கவேண்டும் என எண்ணுகின்றேன்!

அதனாற்தான் இப்பதிலை எழுதுகின்றேன்.....

நிரூபன்!

தமிழினத்துக்கு கிடைத்த அருமையான ஒரேயொரு தலைவர் அவர் மட்டுந்தான்!

அவரின் அருமை பெருமைகளை நான் இங்கு சொல்ல வரவில்லை! ஆனால், சில யதார்த்தங்களைப் பேசும் நாம் பல யதார்த்தங்களை மறந்து விடுகின்றோம்! இப்பொழுது நடக்கின்ற விடயங்களை உற்றுநோக்கிப் பார்த்தாலே, அதைப் புரிந்துகொள்ள முடியும்! என்ன நடக்குது?????????????????

வெற்றிடத்தில் குழம்பிப் போயிருக்கும் தமிழ் தலைமைத்துவத்தில் யாரும் இல்லை!

கேட்க நாதியற்ற அனாதைகளாக நாங்கள்.........!!!!!!

இப்பொழுதும் உறுதியாகச் சொல்கின்றேன் ........... யாரும் யாரையும் ஏமாற்றவில்லை.............!!!!

இதை இறுதிவரைக்கும் அங்கிருந்த பலருடன் பேசியபின்பே கூறுகின்றேன்!

(இது எனது தனிப்பட்ட கருத்து இல்லை)

Edited by கவிதை

Share this post

Link to post
Share on other sites

நிரூபன் தப்பாக நினைக்கக் கூடாது! நான் ஏதாவது தப்பாக கூறியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்! சொல்லவேண்டுமென்று தோன்றியது! அதுதான் சொன்னேன்! அவை என்னுள் மாற்றம் அடையமுடியாத கருத்துக்கள்!

தங்களின் எழுத்துக்களை புரிந்துகொள்ள முடிகின்றது! ஆனாலும்... அந்தப் பதிவின்மேல் எனக்கு........................................ கொஞ்சம் காட்டம் இருந்தது. உங்களிடம் சொன்னபின் மனப்பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்!

உங்களின் மனதில் உள்ளதை எழுதுங்கள்! என்றும் உங்கள் எழுத்துக்களை யாழ்கள உறவுகளாய் வரவேற்போம்.

Share this post

Link to post
Share on other sites

அன்பிற்குரிய உறவுகளே,

p>

ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே பதிவினை வைத்து நையாண்டி செய்து குத்திக் காட்டுவ்தை விடுத்து, அங்கே வாழ்ந்த ஏனைய கடை நிலை மக்களின் உணர்வுகளோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள் நண்பர்களே..

இப்படியான செயல் வேண்டாமே.

நேசமுடன்,

நிரூபன்

போராட்டம் வெற்றியடைந்திருந்தால் தெற்காசியாவின் புரட்சி புலி , என எல்லோரும் கவி படைத்திருப்போம்....தோல்வி என்ற படியால் கடைநிலை மக்கள் பற்றி புலம்புகிறோம்....சாருநிவேதிக்கா போல் எல்லா ஆண்களும் இருப்பார்களா என்ன?

Share this post

Link to post
Share on other sites

நல்ல கவிதை...

இக்கவிதை முற்று முழுதாக சாருவிற்காக எழுத்ப்பட்டிருப்பது தெரிகிறது.

Share this post

Link to post
Share on other sites

நல்ல கவிதை...

இக்கவிதை முற்று முழுதாக சாருவிற்காக எழுத்ப்பட்டிருப்பது தெரிகிறது.

உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரம்,

இக் கவிதை சாருவிற்காக எழுதப்படவில்லை.

சென்னையில் பாதிக்கபட்ட இன்னோர் பெண்ணுக்காக எழுதப்பட்டிருக்கிறது.

Share this post

Link to post
Share on other sites

நிரூபன் தப்பாக நினைக்கக் கூடாது! நான் ஏதாவது தப்பாக கூறியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்! சொல்லவேண்டுமென்று தோன்றியது! அதுதான் சொன்னேன்! அவை என்னுள் மாற்றம் அடையமுடியாத கருத்துக்கள்!

தங்களின் எழுத்துக்களை புரிந்துகொள்ள முடிகின்றது! ஆனாலும்... அந்தப் பதிவின்மேல் எனக்கு........................................ கொஞ்சம் காட்டம் இருந்தது. உங்களிடம் சொன்னபின் மனப்பாரம் குறைந்ததாய் உணர்கின்றேன்!

உங்களின் மனதில் உள்ளதை எழுதுங்கள்! என்றும் உங்கள் எழுத்துக்களை யாழ்கள உறவுகளாய் வரவேற்போம்.

//

நான் தப்பாக நினைக்கலை. உங்கள் உணர்வினை நீங்கள் சொல்லியிருக்கிறீங்க.

நன்றி சகோதரம்,

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.