Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அப்பிடி போடு..... போடு.....


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்: கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு!

மாணவன்: சரி சார்

ஆசிரியர்: நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil:

----------------------------------------------------

லெக்சர்: என்னப்பா ஸ்டூடண்ட் நீ?

நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :?

ஸ்டூடண்ட்: நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink:

----------------------------------------------------

ஆசிரியர் : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல

"எப்படி சொல்லுறீங்க?"

ஆசிரியர் : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்!

--------------------------------------------------

ஒரு மாணவன்: வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவன்னு சொல்லுறியே நீ அவ்ளோ புத்திசாலியா?

[

மற்றவன்: நீ வேற :evil: அவர் சரியா சொல்லி குடுக்காததால எல்லா மாணவர்களும் வெளியில போய்விட்ட பிறகு- வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவன் இவன் ஒருத்தன் தான்னு சொன்னன்! :lol:

--------------------------------------------------

ஆசிரியர்: ரெளடியோட பையன ஸ்கூல்ல சேர்த்தது தப்பா போச்சு! :lol:

"ஏன்?"

ஆசிரியர்: தலையை சீவிக்கிட்டு வாடான்னா- யார் தலையை என்கிறான்! :?

----------------------------------------------------

"கள்ளநோட்டு அடிச்சதுக்கான தண்டனையை இரட்டிப்பாக்கிட்டாங்களா? ஏன்? "

"கோர்ட்ல போட்ட ஃபைன் 10000 தயும் கள்ள நோட்டிலயே கட்டினாராம்"

---------------------------------------------

வக்கீல்: மை லார்ட்.... என் கட்சிக்காரர் ஒரு நல்ல மனிதர் -நேர்மையானவர்-யாரிடமும் கொடுமையாக நடந்து கொள்வதை வெறுப்பவர்-எல்லோரிடமும் அன்பு செலுத்துவதில்- என் கட்சிக்காரர் சிறந்தவர்...

கட்சிக்காரர்: (சத்தமாக) யோவ் வக்கீல் என்ன விளையாடுறியா? காசு வாங்கிட்டு என்ன பத்தி சொல்லுய்யானு சொன்னா வேற யாரோ பத்தி சொல்லிகிட்டு இருக்கியே தொலைசிடுவன் தொலைச்சு :evil:

----------------------------------------------------

நீதிபதி: திரும்ப திரும்ப ஒரே தப்பை செஞ்சிட்டுவந்து இப்பிடி கோர்ட்ல நிக்கிறியே உனக்கு வெக்கமாயிலயா?

திருடன்: திரும்ப திரும்ப என்னை நீங்களே விசாரிக்கிறீங்களே- உங்களூக்கு வெக்கமா இல்லையா எஜமான்?

------------------------------------------------

ஒரு ஊழல் வழக்கில்!

வக்கீல் 1 : அந்த ஊழல் வழக்கில் சமரசம் பேச ரூபா 10000 வாங்கினீங்களா?

வக்கீல்-2 (இரண்டு மூன்றுமுறை கேட்டபோது கூட காதில விழாததுபோல் பேசாம இருக்கிறார். உடனே நீதிபதி பேசுகிறார்)

நீதிபதி: கேள்விக்கு பதில் சொல்லணும் தெரியுமா?

வக்கீல்-2 : தெரியும்- ஆனா அவர் கேள்விய உங்ககிட்ட கேட்டதா நினைச்சன்! :roll:

----------------------------------------------------

நன்றி: வெப்-உலகம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :P :P :P :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

----------------------------------------------------

நீதிபதி: திரும்ப திரும்ப ஒரே தப்பை செஞ்சிட்டுவந்து இப்பிடி கோர்ட்ல நிக்கிறியே உனக்கு வெக்கமாயிலயா?

திருடன்: திரும்ப திரும்ப என்னை நீங்களே விசாரிக்கிறீங்களே- உங்களூக்கு வெக்கமா இல்லையா எஜமான்?

------------------------------------------------

நன்றி இங்கு இனைத்தமைக்கு வர்ணன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பாம்பின் கால் பாம்பறியும். தமிழன் கால் தமிழன் அறிவான்.  ஏன் தமிழன் இப்படி???? வர்னாச்சிரமத்திற்கு அடிமையாக இன்றும் வாழ்வதால்.!!
  • சேனையூரும் விளக்கீடும் :: பால சுகுமார் பக்கங்கள் -1 எந்த பண்டிகையானாலும் சேனையூருக்கு ஒரு தனித்துவ பண்பு உண்டு. கார்த்திகை விளக்கீட்டிலும் அந்த பண்பாட்டு தனித்துவத்தை உணர்த்தும் பல விடயங்களை நாம் பேச முடியும். விளக்கீட்டுக்கு முதல் நாள் மாலை நேரம் நாங்கள் பந்தக் கம்பு வெட்டுவதற்காக ஊரை அண்டிய சிறு காட்டுப் பகுதிக்கு சென்று கம்பு வெட்டி வருவது வழக்கம். சிறுவர்களாக இருக்கும் போது அப்புச்சி அழைத்துச் செல்வார். கொஞ்சம் வளர்ந்த பின்பு நாங்களே போவோம். பந்தக் கம்பு வெட்டும் போது சில மரங்களைத்தான் தெரிவு செய்வோம், பன்னை, உலுமந்தை, காட்டு வேப்பிலை, சில சமயங்களில் கறுத்த பாவட்டை. எங்கள் தேவைக்கேற்ப கம்புகள் அமையும் நேரியதா அவை, இரு கவர், மூன்று கவர், பல் கவர் தெரிவு செய்து வெட்டி வீட்டுக்கு கொண்டு வந்து அவற்றின் பட்டையயை சீவி அழகாக்க வேண்டும். அப்புச்சி இவற்றை பொறுமையாக செய்வார். பின்னர் பழைய வேட்டி வெளுத்து வைத்தது அதனைக் கிழித்து கம்பங்களில் சுற்றி அவற்றை எண்ணையில் தோய்த்து ஊற வைத்து பின்னர் அடுக்கி வைத்து மாலையானதும் அப்புச்சிதான் முதல் பந்தத்தை கொழுத்துவார். அம்மா வீட்டு விளக்கை வீட்டுக்குள் ஏற்றி வைக்க. நாங்கள் பந்தங்களை எங்கள் வளவு முழுவதும் குடத்தடி, வாழையடி, சாமியடி, மாட்டு மால் அடி, கடப்படி, கோட்டத்தடி, கிணற்றடி என வளவே பந்தங்களால் நிறையும் அந்த நாட்களில் சுட்டி விளக்குகள் இல்லை பந்தம்தான். வாசலில் உலக்கையயை நாட்டி உலக்கை பூணில் தேங்காயின் ஒரு பாதியயை வைத்து அதனுள் வெள்ளைத் துணியயை திணித்து பெரு விளக்காய் அது எரியும். நாங்கள் கட்டிய பந்தங்கள் சிலவற்றைக் கோயிலுக்கு கொண்டுபோய் கோயில் வளவில் குத்தி விட்டு வரவேண்டும் ஊரவர் அனைவரும் கோயில் வளவில் பந்தம் ஏற்றி அழகு பார்ப்பர்.   எங்கள் ஊரில் இன்னொரு விசேசம் எல்லோர் வீடுகளிலும் கிணறு இருக்கும் கிணற்றுக்கு துலா இருக்கும் அந்த துலாவின் உச்சியில் பல்கவர் உள்ள பந்தத்தை கட்டி விடுவோம் அது உயரத்தில் வானில் வெளிச்சத்தை பரப்ப யார் வீட்டு துலா நீண்ட நேரம் வெளிச்சம் தருது என்று சொல்லி அவதானித்து அடுத்த நாள் பெருமையாக பேசிக் கொள்வோம். அப்புச்சி அடிக்கடி துலாவை பதித்து பந்தங்களுக்கு எண்ணை தீட்டுவார் அதனால் எங்கள் வீட்டு துலாப் பந்தம் அதிக நேரம் எரியும். சம்பூர் பத்திரகாளி முகக்கலையயை தாங்கிக் கொண்டு காளி வணக்க முறை சார்ந்தவர்கள் விளக்கீடு அன்று காலை பறை மேளத்துடன் வீடு வீடாய் சென்று காணிக்கை பெறுவது வழக்காயிருந்தது. ஆனால் சம்பூர் பத்திரகாளிக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் நிகழ்ந்த பின் அந்த மரபு இல்லாமல் போயிற்று. அம்மா விளக்கடிக்கு படையலிடுவார் சின்னப்பிள்ளையில் அம்மாவிடம் கேட்பேன் என்னத்துக்கம்மா என்று உத்தியாக்களுக்கு என்று சொல்வார். உத்தியாக்கள் என்றால் நம் குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர். அவர்கள் இந்த நாளில் வீட்டுக்கு வருவதாக ஒரு நம்பிக்கை அந்த மரபு இன்றும் தொடர்கிறது. நம் முன்னோரை நினைவு கொள்ளும் நாளாகவும் இது அமைகிறது. விளக்கடிக்கு வைத்தல் என அந்த மரபை கொண்டாடுவோம். நம் முன்னோர்களை நினைவு கொள்வோம். திருஞானசம்பந்தர் மயிலைப் பதிகத்தில் தொல் கார்த்திகை நாள் என விளக்கீட்டைக் குறிப்பிடுகிறார். “வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான் தொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ என்கிறார்.” விளக்கீடு வந்தால் மகள் நினைவுகளும் அதனோடு சேர்ந்து வரும். மட்டக்களப்பில் மோட்டபைக்கை எடுத்துக் கொண்டு விளக்கீடு நாட்களில் மட்டக்களப்பு நகரை சுற்றி வருவோம் எந்த வீட்டில் விளக்கீடு அழகாயிருக்கென்று என் பின்னாலிருந்து எல்லாவற்றையும் ரசித்து வருவாள். ஊரை சுற்றி முடிய மாமாங்க குளக் கரையில் நிலவை ரசித்துக் கொண்டு பல கதைகள் பேசி மகிழ்வோம். தோன்றும் போது தொடர்ந்து எழுதுவோம்…. ஆசிரியர் குறிப்பு :   சேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம் பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் ஈழத்தின் நாட்டுக்கூத்து கலையை பாதுகாப்பதில் இன்றும் பெரும்பணியாற்றி வருகின்றார்.  https://vanakkamlondon.com/world/2020/11/92688/ 
  • ஆம் சரகலை, மற்றும் எளிய குண்டலினி யோகா தியானம் செய்வேன். இத் துறையில் உப பேராசிரியர் பட்டம்  வரை பயின்றேன்.  நன்றியுடன்  கவிப்புயல் இனியவன்  
  • சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின் சிங்கள தாயொருவர் சிங்கள பொலிசாரின் காலில் விழுந்து மன்றாடுகிறார். சிங்கள கோத்தபாயாவுக்கு வோட்டு போட்டவர்களுக்கு இந்த நிலை நிச்சயம் வரும் என்று எமக்கு தெரியும். ஆனால் இந்தளவு விரைவாக வரும் என எதிர்பார்க்கவில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.