Archived

This topic is now archived and is closed to further replies.

Nirupans

இடையில் இன்பத் தீ(ப்)பற்ற வைத்து, உயிரில் காதல் தேன் சிந்த வைக்கிறாயே ஏன்?

Recommended Posts

எப்போதாவது ஒரு நாள் நீ வந்து போகும் தருணங்களில் உன்னைப் பக்குவப்படுத்தி கட்டி வைத்து, என்னுள்ளே திணித்துக் கொள்ள முடியாத காதலனாக நான்.

மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று

மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான்.

Kural+01.jpg

அவள் பற்றிய மொழிகளினை விட, அவளின் ஒவ்வோர் அசைவுகளிலும் தான் நான் என்னைப் பறி கொடுத்திருக்கிறேன். அவள் ஒரு அபிநயக்காரி. உடல் பசியெடுக்கும் நாட்டியத்தில் தன்னை உள்ளிழுத்து நர்த்தனம் புரிந்து, என் மனதை ஆட வைக்கும் ஆடலரசி.

ஆரணி எனும் பெயரினைக் கேட்டாலே அவனியில் என் மனம் இருப்புக் கொள்ளாது, பூமியின் மேல் கற்பனா ஓட்டத்தில் பறந்து செல்ல வைக்கும்.

என் உடலின் காந்த உணர்வினைத் தூண்டக் கூடிய சக்தி மிக்க பெண் அவள். ஆரணியின் அவஸ்தைகளால் என் உடல் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆலோசனைக்காகப் பலரினை நாடினேன். எனினும் தீர்வில்லாத் தமிழர் வாழ்வு போல என் வாழ்வும் இருப்பதால் இனியும் ஆராய்ச்சி வேண்டாம் என நிறுத்தி விட்டேன்.

ஒரு நாள் என் வீட்டின் உள் அறையில், ’களவடாப்பட்ட பரம்பரையின் வரலாற்று நூலொன்றினைப் படித்தவாறு கண்ணயர்ந்து விட்டேன். என் அறைக்கு வெளியே என் தங்கையின் தோழிகள். ஆடியும், பாடியும், மெல்லிய குரல்களில் தம் சம கால வாழ்வின் நிகழ்வுகளை சிரித்தபடி பகிர்ந்தும், பரவசரமாய்ப் பேசியபடியும் இருந்தார்கள். அடடா...கல கலவெனச் சிரிப்பேற்றி என் ஆரணியும் அவர்களோடு பேசிச் சிரிக்கும் சத்தமும் கேட்டது. ’அவஸ்தையில் துடிக்கும் எனக்கு, என் வீட்டு வாசலுக்கு அவஸ்தையினைச் சுகமாக்கும் ஒரு அரும்பு மலர் கோலமிடும் தன் கைகளால் என் உடலில் இன்பக் கீறலிட வந்திருப்பதாக உணர்ந்தேன்.

மெதுவாய் அவளின் மெல்லிய விரல் ஒற்றை வரி எழுத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும் கவிதை போல என்னைத் தழுவி மயக்கத்தில் ஆழ்த்தத் தொடங்கியது. கையில் ஒரு பாற் குடம் கொண்டு, மெய்யில் இரு குடம் கொண்ட மேனகையாய் என் ஆரணி என்னருகே!

இடையினைக் கொடி என்று பலர் சொன்னாலும், அதன் பின்னே இதம் தரும் வீணையின் இரு குடங்கள் மெல்லிதாய் இருத்தல் தானே ஆண்களின் மனதிற்கு இளகிடச் செய்திடும் மருத்துவம் என்பதனை அவளை முதன் முதல் பார்க்கையில் உணர்ந்தேன்.

இடையின் மீது பிரம்மன் மெல்லிய வளைவு கொண்ட சித்திரம் வரைந்திருப்பதனால் என் உடல் அவள் இடையினைத் தாண்ட மறுத்தது.

Vandana-Gupta-4.jpg

ஆனாலும் ஆரணி என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே; இடையினைத் தாண்டி, இதம் தரும் கோபுரக் கலசத்தில் பார்வை பதித்து, சங்காய் இருந்து, ஸ்வரச் சுருதி மீட்ட வைத்து அவள் அன்பில் நான் என் தலை வைக்கும் அலாரம் ஒலிக்கச் செய்யும் கழுத்தை கடந்து சென்று, கொவ்வைப் பழம் போல சிவந்திருந்து, என் கொடும் நோய்க்கு நீரூற்றி மனதில் எச்சில் மூலம் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய உறிஞ்சி மகிழும் உஷ்ணக் கருவியான வாயில் நிலை கொள்ள வேண்டும் எனும் உணர்வைத் தந்தது. ஆனாலும் என் மனம் இடையினைத் தாண்ட மறுத்தது.

‘என்ன நீரூ....

பக்கத்தில் உன் அவஸ்தைக்கு

பழமாக நான் இருக்கின்றேன் - நீயோ

கிறக்கத்தில் வைத்த கண் வாங்காது

என் மேனியில் விழி நிறுத்தி

கிளு கிளுப்பல்லவா தருகிறாய்’

இப்படிக் கவிதை கலந்து பேசுகையில் என் உள்ளம் கடலலை போன்ற இன்ப அலைகள் கலந்து வந்த அவள் பேச்சில் கனிந்து போயிருந்தது.

எல்லாப் பெண்கள் மொழியும் மென்மையானது என்பதற்கப்பால், நிதானமாக, எவ்வேளையிலும் பதட்டமின்றி வார்த்தைகளை வரிசையாகப் பேசி கவிதை கலந்த பேச்சால் மயக்கக் கூடியவர்கள் பெண்கள் எனும் உண்மையினை மனதில் நிலை நிறுத்தி வைத்ததனை அவள் அன்று உடைத்தெறிந்தாள். ஏதேதோ உளறினாள். வாயில் என் எச்சில் தனை உள்ளிழுத்து வனவாசம் செய்திருந்த என் நோய்க்கு தன் உமிழ் நீர் மூலம் குளிர் நீர் பாய்ச்சினாள்.

’உன்னைப் போல் ஒருவனிடம் என் வாழ்க்கையினை

ஒப்படைப்பது எத்தனை இன்பம் தெரியுமா நிரூ’ என கலவிக் கவி சொன்னாள்.

மெல்லிதாய் சிணுங்கல்கள் செய்து, என் மேனியில் சூடேற்றி விட்டு, நான் தவிக்கும் வேளையில் அணைப்பு மருந்திட்டு அன்பைச் சொரிந்தாள். நான் அவள் இடையில் கட்டியிருந்த ஒட்டியாணம் அவிழ்த்து, உடையினைக் கழற்றத் துடித்த வேளையில் உணர்ச்சியின் மூலம் ’ஷாக்’ அடிக்க வைத்தாள்.

‘இப்போதைக்கு இது போதும்,

முப்பாலும் என்னிடத்தே குடிக்கும்

தப்பான எண்ணம் வேண்டாமே,

முதலில் கழுத்தில் முடிச்சொன்று போடடா கள்வா

பின்னர் என் உடலில் உயிர் குடிக்க

வரம் தருகிறேன் என் காதலா’ என கவியுரைத்தாள்.

அவள் மேனிக்குள் நுழைவதற்குத் தயாராய் இருந்த என் கைக்கு கடிவாளம் போட்டாள். ’இதெல்லாம் அதுக்குப் பிறகு என்றாள். அடடா....என்ன இப்படித் திரி தூண்டி என் உடலை எரிய விட்டு விட்டு;

என்னைத் தவிக்க வைக்கிறாளே இவள்,

எரியாதிருக்கும் திரிக்கு, எண்ணெய் ஊற்றி விட்டு, மேலும் எண்ணெய் வேண்டும் பொழுதில் தன்னைத் தரமால் செல்லுதல் தவறென்று உணராதவளாய் இருக்கிறாளே இவள்!!

வாசலில் என் தங்கை ஷெல்லிகா என்னை அழைத்த சத்தம் கேட்டு மெதுவாய் என் அறையை விட்டு நகர்ந்தேன்.

வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.

வெளியே வீட்டில் அம்மா, அப்பா யாருமே இல்லை. அவளும், என் தங்கையின் தோழிகளும் நானும் தான். அவள் இடையில் ஒட்டியாணம் கட்டி வந்து என் மனதை மீண்டும் அவ் இடத்தில் ஒட்ட வைத்தாள். கண்களால் என்னை எடுத்துக் கொள்ளடா என்பது போலப் பார்வை பார்த்தாள், கண்களால் என் கண்களைத் திசை திருப்பி தன் உடலின் ஒரு குவியப் புள்ளி மீது நிலைக்கச் செய்தாள். இவ்வளவு நேரமும் நான் அவளைக் கரைத்துக் குடித்து என் தேகத் தீயைத் தணிக்க முயற்சி செய்தது எப்படி அவளுக்குத் தெரியும் எனும் ஏக்கத்தில் நான் இருந்தேன். இதற்கு அர்த்தம் கற்பிக்கும் வண்ணம்,

‘வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது,

உள் மனம் பேசாமல் உண்மை சொல்லாது’ எனும் பாடல் வரிகள் அப்போது தான் சந்தித்தவேளை பட இறுவட்டிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

’கண்களால் குறிப்புரைத்தாள் அவள்

குறிப்பறிந்து காரியம் முடிக்க முடியாத

சூழ் நிலை(க்) கைதியாய் நான்!

இடையில் இன்பத் தீப்பற்ற வைத்து

உயிரில் இன்பத் தேன் சிந்த வைக்கிறாயே ஏன்?

’’இப்போதே கேட்டு விட வேண்டும் போல இருந்தது

ஆனாலும் இன்ப அவஸ்தையில் நெளிவதும்

ஓர் இன்பம் என்பதால் வார்த்தைகளை

விழுங்கி விட்டு,

அடுத்து நிலை கொள்ளப் போகும்

அவள் பார்வைக்காய் காத்திருந்தேன் நான்!!

‘யான் நோக்கும் காலை நிலன் நோக்கும், நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும்’: திருக்குறள் 1094

இது என்னுடைய வலையில் பிரசுரமாகிய என் படைப்பின் மீள் பிரசுரம்:

http://www.thamilnattu.com/2011/08/blog-post_22.html

Share this post


Link to post
Share on other sites

வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.

நன்றி நிரூபன், கதை நன்றாக இருக்கிறது உணர்ச்சி பொங்க, இதை நீங்க போசப் பொருளில் இணைத்திருக்கலாம் என நினைக்கிறேன்,

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிரூபன், கதை நன்றாக இருக்கிறது உணர்ச்சி பொங்க, இதை நீங்க போசப் பொருளில் இணைத்திருக்கலாம் என நினைக்கிறேன்,

//

அது பதிவினைக் கொப்பியடிப்போருக்காக எழுதப்பட்டது என் வலையில் எழுதியிருந்தேன்.

இங்கே கொண்டு பதியும் போது அந்த வசனங்களும் சேர்ந்தே வந்து விட்டது.

மன்னிக்கவும் நண்பா.

உங்களின் கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி நண்பா.

Share this post


Link to post
Share on other sites