Jump to content

கவிதை ரசிப்பேன்!


Recommended Posts

சின்ன சின்னக் கவிதைகள் கூட ஆழமான பல கருத்துக்களை சொல்லி நிற்கின்றன.

தொடர்ந்து பகிருங்கள்! இனிவரும் நாட்களில் நானும் பகிர்ந்து கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

hungry-child.gif

பணம்

வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி...

மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே,

காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்..

என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள்,

வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் ,

பசித்து ஒட்டிய வயிறுகள்!!!

மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது...

பணம் பந்தியில் இருக்காது!

"காலங்கள் மாறும்" என்பது.... வெறும் நம்பிக்கையாய் மட்டும்!!!

man+n+watch.jpg

தற்காலிக நியதிகள்

சேர்வதும்... பின் பிரிவதும்...; பிரிந்து பின் கூடுவதும்...;

சுழலும் உலகோடு வாழ்க்கையும் அதனூடான உறவுகளும்;

கட்டாயத்தின் பேரிலோ... எதனாலோ...

அப்படியே நகர்கின்றன கடிகார முட்கள்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றி பகிர்வுக்கு, இரண்டும் அர்த்தமுள்ள நிஐத்தை தொடும் நல்ல கவிதைகள்

Link to comment
Share on other sites

rainv.jpg

உன்னை

குடை என்ற

சட்டம் கொண்டு..

தடை செய்ய

எனக்கு

மனமில்லை!

என்னிடம் இல்லா

சுதந்திரத்தை

உனக்களித்தேன்

பிழைத்துப்போ..

மழையே

நானொரு

ஈழத்தமிழ்மகள்!

-காரையூர் மதன்

Link to comment
Share on other sites

chinaindia.jpgபாரதம்

--------------

நீ சின்ன சின்ன

குஞ்சுகளுக்குதான்

தலைவன்!

சீன ..

பருந்துகளுக்கு

அல்ல!

Link to comment
Share on other sites

208029_1960030037457_1143987367_2374245_409606_n.jpg

ஒற்றைப்பனை!

எங்கள் ஊர் மண்ணில் நிமிர்ந்து நின்ற

ஒற்றைப் பனைக்குக்கூட வட்டில்லை!

அதனால்தானோ என்னவோ;

நாம் இன்று புலம்பெயர் மண்ணில்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரியாதை:

உச்சியில் இருக்கும்வரை

சீவி சிங்காரித்து அலங்கரிப்பார்

வீழ்ந்துவிட்டால் தூக்கி

எறிந்துவிட்டு மசிரு என்பார்

நிழல்:

ஒளி வெள்ளத்தை

நோக்கி முன்னேறினால்

காழ்புணர்ச்சியுடன்

பின்னோக்கி ஓடுகிறது

Link to comment
Share on other sites

1.கல்லறையும் கருவறையும்

கல்லறையும் இருட்டு தான்

கருவறையும் இருட்டு தான்

ஆனால்,

கல்லறையில் மனிதன் புதைக்கபடுகிறான்

கருவறையில் மனிதன் விதைக்கபடுகிறான்.

2.விடுமுறை

நிலவுக்கு

வானம் கொடுத்தது

ஒரு நாள்

அரசு விடுமுறை

“அமாவாசை”

http://aarvakolaru.wordpress.com/2010/02/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Link to comment
Share on other sites

விடுமுறை

நிலவுக்கு

வானம் கொடுத்தது

ஒரு நாள்

அரசு விடுமுறை

“அமாவாசை”

http://aarvakolaru.w...AE%B3%E0%AF%8D/

இலங்கைக்கு

நிலவு கொடுத்தது

ஒரு நாள்

அரசு விடுமுறை

"பெளர்ணமி"

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயப்படுத்தாமல்:

தண்ணீருக்குள் நீந்தி

பிடித்து விளையாடிய மீன்

கொக்கின் வாயில் அகப்பட்டது

குறிக்கோள் நிறைவேறிற்று

மீனின் குறிக்கோள்

அதுவாய் இருக்கவில்லை..

-

விழியன்

====================

மனித காட்சிசாலை

“இந்தியன்”

“அமெரிக்கன்”

“வெள்ளையன்”

“ஆப்ரிக்கன்”

கூண்டிலடைத்து

அட்டையெழுதி

வரிசையாய் மிருகங்கள் வந்து

சீண்டும் போது

புலப்படுமோ அதன் வலி?

விழியன்

===========

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

My Friend

by Sammy Lane Sharp

We all need someone

To talk to in our life,

A friend to whom we run

In times of stress or strife

A friend who's always there

Throughout the years,

A friend we know will care

And take away our fears.

A friend who's always near,

Waiting for our call,

To wipe away our tears,

And lift us when we fall.

A loving friend indeed,

On whom we can depend

To fulfill our every need -

Thank you, precious friend

நல்ல கவிதை - www.eluthu.com

நல்ல கவிதை படித்து

நாட்களாயிற்று

சிரியேன் ஒருமுறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் -

பணம் படைத்த

பெரிசுகள் கறுப்பை

வெள்ளையாக மாற்றறுவதற்கு

திரணியுடன் திமிரெடுத்து

தியானம் பழக வந்தவர்களை

திமிரடக்கி திரணியற்றவளாக்கி

சயனதில் வீழ்த்துவதற்கு

உருவாக்கப்பட்ட பினாமி

Link to comment
Share on other sites

நட்பு!

நான் நீர் வேணுமென்று கேட்டேன்.....

கடவுள் .. எனக்கு

சமுத்திரத்தை தந்தார்!

நான் பூ வேணுமென்று கேட்டேன்...

கடவுள் எனக்கு

பூந்தோட்டத்தையே த்ந்தார்!

நான் மரம் வேணுமென்று கேட்டேன்...

கடவுள் எனக்கு...

ஒரு வனத்தையே பரிசளித்தார்!

நான் அவரிடம்

நட்பு ,,வேணும் என்றேன் ..

அவர்

உன்னை எனக்கு

பரிசளித்தார்!

Link to comment
Share on other sites

வரம் ஒன்று தந்தான்

இறைவன் இலவசமாக

அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய

காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே

கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு

வரை விலக்கணம் தனைக் கூறியது

கன்னங்களின் ஓரம்

காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்

பொன்னகையில் பார்ப்பதை விட

புன்னகையில் பார்ப்பது என்னை

பகல் நேர பௌர்ணமிகளாய்

தோன்றியது சிலருக்கு ....

எனை நோக்கி அனுதாபம்

அடைந்த சில நட்புகளை

மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்

காயம் கண்ட இதயமதை மீண்டும்

காயப்படுத்திய உறவுகளை இன்னும்

ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது

காட்சிகளும் மாறியது

கனவுகள் போல

கண்கள் கண்ட கனவுகளும்

கலைந்து சென்றது

கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு

விடை தேடுகின்றேன்

நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது

இறைவனோ மௌனம் காக்கின்றான்

கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்

வரும் கால வாழ்வை எண்ணி

யாரறிவார் இவள் மனதை.......

கவிஞர்:பாரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamil.jpg

நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன் :)

பசியில் வயிறு பத்தி எரியும்

ஏழைகள் பலர் இருக்க

கற்பூரம் பத்தி எரியும்

தட்டிற்கு பத்து டலர்

பக்கத்தில் நிற்கும் மாமிக்கு

வயிறு பத்தி எரிவதற்காக

வஞ்சகம் இல்லாமல் உடையாருக்கும் ஒரு பச்சை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.கல்லறையும் கருவறையும்

கல்லறையும் இருட்டு தான்

கருவறையும் இருட்டு தான்

ஆனால்,

கல்லறையில் மனிதன் புதைக்கபடுகிறான்

கருவறையில் மனிதன் விதைக்கபடுகிறான்.

http://aarvakolaru.w...AE%B3%E0%AF%8D/

இதிலையும் எம்மவர்கள் விதிவிலக்கு.அங்கும் விதைக்கப்பட்டார்கள்.

Link to comment
Share on other sites

இந்த உலகம் அழியாதா

அழியாதா இந்த உலகம்

இறைவா! அழித்துவிடு

இந்த கொடும் உலகத்தை

சுயநலம் தாண்டவமாடும்

இந்த உலகத்தை அழித்துவிடு

ஒரு பக்கம் நான் மட்டும்

வாழ்ந்தால் போதும் என்று

உணர்வோடு வாழ்வோர் பலர்

அதற்க்காக கொலைசெய்பவரும் அவர்களே

மனித உணர்வில்லாமல் பணத்தாசையினால்

மிருகமாக வாழ்வோரும் அவர்களே

ஒவ்வொரு உயிரையும் நீதான் படைத்தாய்

அவர்களில் பலரும் அவர்களே

அவர்களில் குற்றங்கள் இருக்கிறதா

அல்லது உன்னிடமா?

அவர்களில் மட்டும் குற்றமாக இருந்தால்

நீ அவர்களை மட்டும் அழித்துவிடு

அல்லது குற்றம் உன்னிடம்தான்

என்றால் இந்த உலகத்தை அழித்துவிடு

இறைவா! அழித்துவிடு

இந்த கொடும் உலகத்தை

சுயநலம் தாண்டவமாடும்

இந்த உலகத்தை அழித்துவிடு.

கவிஞர்:சபேஷ்

Link to comment
Share on other sites

உண்மை

பி.கோபி, கிருஷ்ணகிரி

பாதங்களை பாதுகாத்தாலும்

பாதுகாப்பில்லாத இடம்தான்

எப்போதும் செருப்புகளுக்கு!

வறுமை

கூடல்

சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்

எதிரே பசியோடு

ஏழைச் சிறுவன்!

அடை மழை

விஜய் நிமி

நிலா பெண்ணுடன்

கொண்ட காதல் தோல்வி...

ஓயாமல் அழுகிறது

வானம்...

ஊனம்

வித்தகன்

ஓவியம் வரைகையில்

தூரிகை உடைந்ததோ?

பிரம்மனுக்கு!

முதியோர் இல்லம்!

கவித்துவா (எ) பிரகல்யா

விழுதுகள் விரட்டி அடித்ததால் ...

ஆல மரங்கள் அடைக்கலம் புகுந்தன!!

கருச்சிதைவு ..!

கவித்துவா (எ) பிரகல்யா

ஒரு வளர்பிறை

பௌர்ணமி ஆகாமல்....

'அமாவாசை' ஆனது!!

வாழ்க்கை

ஆர்.ஈஸ்வரன், வெள்ளக்கோவில்

கிளறினால்

கிடைக்கும் வாழ்க்கை

கற்றுக்கொடுக்கும் கோழி

மதக்கலவரம்

கவித்துவா

கருவறையில் பத்திரமாய் கடவுள்கள்..

தெருவெங்கும் கல்லறையாய் அப்பாவிகள்!!

தூண்டில் மீன்

ஒ.எஸ்.பாலாஜி

மீன் கூட பிழைத்திருக்கும் -

தக்க தருணத்தில் வாய் மூட கற்று இருந்தால்!

அன்பு

த. நாகலிங்கம், புதுச்சேரி

அவசர வாழ்க்கையின்

தூரத்து சொந்தம் - அன்பு!

அவள்

தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.

நகம் வெட்டினாள்

வீடு முழுக்க

பிறை நிலாக்கள்!

கை எழுத்து

பைங்கிளி

எழுதுகோல் பிடித்த கைகளில்

எலி பிடித்ததால்....

கடிபட்டது.... தமிழ்!

(அடடே யாழ்ல நம்ம தமிழுக்கும் பொருந்துதே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி நீங்கள் இணைக்கும் கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது,

வறுமை

Quote: "வறுமை -

சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்

எதிரே பசியோடு

ஏழைச் சிறுவன்"

கஞ்சி போட்ட சேட்டை

வயிறு அழ

அயன் பண்ணுகிறான்

ஏழைச் சிறுவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருமி - சாப்பிட்ட கையால் காகத்தை கூட கலைக்கமாட்டார்கள் (பள்ளியில் படித்தது)

பார்ப்பனர்கள் கதவை மூடி

சாப்பிடுவார்கள் நாய் காக்கை

கூட நுழைந்துவிடக் கூடாது

என்பதற்காக எங்கே அவற்றை

துரத்தப் போய் கையில் ஒட்டிய

உணவு தெறித்து அவற்றுக்கு

உணவாகிவிடுமோ என்ற பயத்தில்

Link to comment
Share on other sites

அறிவிலி நீங்கள் இணைக்கும் கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது,

வறுமை

Quote: "வறுமை -

சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்

எதிரே பசியோடு

ஏழைச் சிறுவன்"

வறுமை பத்தி ,

என்னால சும்மா கவிதை மட்டும் இணைக்க தெரியுது உடையாரண்ணா...

அதை தீர்க்குறது எப்டி என்னு , நிஜவாழ்வில் சிந்திக்கிறவர் நீங்க!

அந்த கவிதைகளைவிட,,, நீங்கதான் ரொம்ப அழகு!!

Link to comment
Share on other sites

இரண்டு வகை

ஒவ்வொரு மனிதரிலும் இரண்டுபேர் !

ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்

இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக்கிடக்கிறார்.

-கலீல் ஜிப்ரான்

நல்லதொரு கருத்து இது பலருக்கு பொருந்தும்... நன்றி அறிவிலி இணைப்பிற்க்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதவை

பூ வைத்தாள்

பொட்டு இட்டாள்

கணவன் படத்திற்கு!

த.நாகலிங்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.