Jump to content

அவளுக்காக வாழ வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலம் வெகு வேகமாக ஓடிவிட்டது போல் இருந்தது அவனுக்கு . சோமசுந்தரம் தன் தாய் நாட்டை விட்டு வெளியேறி இருபது வருடங்கள் . எல்லோராலும் " சோமு "என்று அன்பாக் அழைக்கபட்டவன். வீட்டுக்கும் ஊருக்கும் நல்ல பிள்ளை .காரணம் மூன்று பெண சகோதரிகளுக்கு இளையவனாக் பிறந்தவன். நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தந்தை அயலில் உள்ள பட்டணத்தில் , பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர். வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவார். தாயார் வீட்டு வேலைகளை யும் மக்களையும் கவனித்து கொள்வார். பெண்கள் பள்ளியில் கவனமாய் படித்து .வந்தனர். .தாயார் ஆண்பிள்ளை என்று அவனில் மிகுந்த பாசம் வைத்தது இருந்தார். வேண்டியதெல்லாம் எப்படியாவது காசு சேர்த்து வாங்கி கொடுப்பார்.அவனுக்கு துணி துவைப்பது , அக்கா மார்தான். சில சமயம் வெளி வேளைகளில் உதவி செய்வான். அவனும் உயர் கல்வி முடித்தும் மேற மேற் படிப்புக்காக செல்ல காத்திருந்தான் . அப்போது தான் தாயகத்தில் போரின் ஆரம்ப காலம் . இயக்கங்களுக்கு ஆட் சேர்ப்பு செய்துகொண்டு இருந்தார்கள். குடும்ப உறவுகள் அவனை விடத் தயாராக் இல்லை. வெளி நாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிலையம் மூலம் அவன் நாட்டை விட்டு வெளியேறி னான். காலம் தன் பாட்டுக்கு ஓடிக் கொண்டே சென்றது. ஐரோப்பிய நாடோன்றுக்கு சென்றவன் அந்நாடடு பாஷை படிக்க வேண்டிய நிர்பந்தம் பாஷை படிப்பதும் பகுதி நேர வேலை செய்வதுமாய் ...இருந்தான். அந்நிலையில் மூத்த சகோதரிக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலை. இவன் வருவதற்காய் அடைமானம் வைத்த வீடு சீராக் கொடுக்க வேண்டி இருந்தது. உழைத்த காசெல்லாம் ..அனுப்பி அவள் காரியம் முடித்தான்.

இந்த நிம்மதியில் தந்தையார் மூன்றாம் மாதம் காலமாகி விட்டார் .

குடும்பச சுமை இவன் மேல் விழுந்தது. இரண்டா வது மூன்றா வது சகோதரிகளுக்கு திருமணம் செய்து நிமிர்கையில் இவனுக்கு வயது முப்பத்தைந்து ஆகி விட்டது .பின் தாயார் தான் முதுமையை எண்ணி இவனை திருமணம் செய்ய வற்புறுத்தினார். ஊரில் இருந்து ஒரு பெண்ணை பேசி .அவளும் அவனுடன் இணைந்து இல் வாழ்வை ஆரம்பித்தனர். வருடங்கள் உருண்டோடின. அவர்களுக்கு குழந்தை ப் பாக்கியம் கிடைக்கவில்லை . பத்து வருடங்கள் ஓடி விட்டன. ஒரு தடவை அவனை பார்க்க நோயுற்ற தாயார் ஆசைப்பட்டார் .ஊர் போய் சேர்ந்ததும் தனக்கு காலம் இன்னும் அதிகம் காத்திராது மகன் வழிப் பேரனைக் காண வேண்டும் என் தாயார் ஆசைப் பட்டார். அவர்களுக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? அந்தப் பாக்கியம் அதுவரை அவர்களுக்கு கிட்ட் வில்லை என உள்ளூரக் கவலைப் பட்டாலும் தெய்வ நம்பிக்கையோடு இருந்தார்கள்.

அவர்கள் மீண்டும் ஐரோப்பா வந்ததும் சோமுவின் மனைவி கர்ப்பமுற்றாள் . சோமு மிகவும் மகிழ்ந்து போனான். இந்த சுப செய்தி கேட்டு தாயார் இருவாரங்களில் கண்ணை மூடி விட்டார் முன்பெல்லாம் சோமுவின் மனைவி சில சுப விசெடங்களுக்கு போக , முன் நிற்க, தயங்குவாள். உறவுகள் ஏதும் சொல்லிவிடுவார்களோ என்று ,.தன் சாபம் குறை நீங்கியதாக் மகிழ்ந்தாள். எண்ணி பத்தாம் மாதம் அழ கான பெண குழந்தைக்கு தாயானாள் . சோமு மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். அவர்களிடையே ஒரு புதுப் பிணைப்பு உணர்வு ஏற்பட்டது. சோமுவின் மனைவி மிகவும் கண்ணுங் கருத்துமாக் குழந்தை ஜானுவை பராமரித்தாள் . சோமுவின் வேலை முடிந்ததும் வந்த களை தீர்வது மழலையின் சிரிப்பினால் தான். ஓர் சொர்க்கமே கண்டது போல் இரு வரும் மகிழ்ந்தனர் .. குழல் இனிது யாழ் இனிது மழலைச்சொல் கேளாதவர் என்பார்கள். ஒவ்வொரு பிறந்த தினமும் அழகாக அலங்கரித்து கொண்டாடுவார்கள். தங்கள் கவலை போக்க வந்த செல்வம் . என களிப்போடு வாழ்கின்றனர்.

இப்போ போதெல்லாம் சோமு தன் மகளை சரியான முறையில் வளர்க்க தன்னால் முடியுமா தனக்கு வயதாகிறதே என எண்ணிக்கலங்குவான். அவளுக்காக என சேமிக்கிறான். இன்னும் வாழ வேண்டும் மகளின் சுப காரியம் வரையாவது தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து அந்த மகிழ்வைக் காணவேண்டும் என ஆசைப் படுகிறான். மகளுக்காக வாழ வேண்டும் . மனைவிக்கு நாற்பத்தி மூன்றும் அவனுக்கு நாற்பத்தி எட்டுமாகிறது. நாமும் அவர்களுக்கு சுக நலனும் நீடிய ஆயுளும் கொடுக்க வேண் டுவோம்.

Link to comment
Share on other sites

காரண காரியங்களுக்காகவே அன்பு என்ற போர்வையில் ஆண் வளர்க்கப்படுகின்றான் . அதில் மாற்ரங்கள் வரும்பொழுது உறவுகளிலும் இடைவெளி .

மனித வாழ்க்கை தொடர்சங்கிலி அதில் காட்சிகள் தான் மாறும் . ஆனால் , இதில் உள்ளுடன் ஒன்றே . இதை வீ சீ ஆர் போல றீப்பிளே செய்ய வசதியிருந்தால் எவ்வளவு சந்தோசம் . உங்கள் படைப்பு அதையே தொட்டுச்செல்வது அருமை நிலாமதி அக்கா :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பச்சுமை காரணமாய் பலவற்றை தியாகம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ..கறுப்பி ...உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ 'ப்ரோக்ராம்' செய்யப்பட்ட மாதிரியே சராசரி யாழ் இளைஞனின் வாழ்வு வாழ்ந்து முடிக்கப் படுகின்றது!

பொறுப்புக்கள் இவர்கள் மீது வெளிப்படையாகச் சுமத்தப் படுவதில்லை!

ஆனாலும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க மனசு கேட்பதில்லை!

அந்த வாழ்க்கையை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள் நிலாமதி!

கோமகன் சொன்னது போல வாழ்க்கை வீடியோ பிளேயர் மாதிரி இருந்தால், எவ்வளவு நல்லது?

Link to comment
Share on other sites

நிலா அக்கா!சொந்தங்களின் சுமைகளை சுமப்பதை நாம் சுமையாக எண்ணுவதில்லை!

ஆனாலும்... காலநேரங்கள் எமக்காகக் காத்திருப்பதில்லை! அது அதன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கும்! அங்குதான்.... எங்களை நாங்கள் தொலைக்கின்றோம்! :(

எளிமையாக சொல்லப்பட்ட உங்கள் கதையில் நிறைய விஷயங்கள் பொதிந்து இருக்கின்றன.

நன்றி அக்கா! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா, நல்லதொரு கதை, இது நிஐக்கதையா? பல யாழ் இளைஞர்களின் வாழ்கையே இதுதான், குடும்ப சுமை காரணமாக, தங்கள் கல்யாணம் செய்ய 35 தாண்டிடும், அதற்குபின் பிள்ளைகள் 20 யை தாண்ட, பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து வாழ்வை enjoy பண்ண கஷ்டமா இருக்கும்,

வாழ்நாள் முழுக்க மற்றவர்களுக்கா வாழ்ந்தே வாழ்வை முடித்துவிடுவேம், அதிலும் ஒரு சுகம் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் டமிழ் பெற்றோரின் பிள்ளைகளுக்கு உந்த பிரச்சனை இல்லை,எல்லோரும் 25 வயசுக்குள் கலியாணம் கட்டி போடுறாங்கள் ...கொடுத்த வைச்சவங்கள்...கதைக்கு ஒரு பச்சை .....நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் டமிழ் பெற்றோரின் பிள்ளைகளுக்கு உந்த பிரச்சனை இல்லை,எல்லோரும் 25 வயசுக்குள் கலியாணம் கட்டி போடுறாங்கள் ...கொடுத்த வைச்சவங்கள்...கதைக்கு ஒரு பச்சை .....நிலாமதி

இல்லை புத்தன் அவர்கள் லிவிங் ருகெதர் என்று கன பேர் கல்யாணம் கட்டாமல் இருக்கினம், அல்லது divorce,

எனக்கு தெரிச்சு பல பெற்றோருக்கு இது ஒரு பெரிய கவலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி .........உடையார் ....கவிதை ...புங்கையூரான்..புத்தன் என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நல்ல பதிவு நிலாமதியக்கா.

பலருக்கும் இதே கதை தான். என்ன ஒரு வித்தியாசம் சோமுவுக்கு குழந்தை உடனே கிடைக்கவில்லை. ஒருவிதத்தில் இதுவும் நல்லதுக்கு தான். இந்த 10 வருட காலத்தில் கொஞ்சம் பணத்தை சேமித்திருப்பார்.

48 எல்லாம் ஒரு வயதா என்ன? இங்கே உள்ள சிலர், இதெல்லாம் தாண்டியும் இன்னும் ஆட்டம் போடுகிறார்கள். :D

Link to comment
Share on other sites

புலத்தில் பலரின் நிலை இதுதான். கடமை, படிப்பு எல்லாம் நிறைவு செய்து மணம் முடித்து பிள்ளை பெறுவது அல்லது திருமணம் முடித்தும், உழைத்து சம்பாதித்த பின் பிள்ளை பெறுவது. பின்பு பிள்ளைகளை வளர்ப்பதற்கு தேவையான சக்தி இருக்காது. நாடி நரம்பெல்லாம் ஒடி ஓய்ந்து விடும். இதற்குத்தான் காலத்தே பயிர் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.

நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.