யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
தூயா

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது

Recommended Posts

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ? :lol:

Share this post


Link to post
Share on other sites

சட்டியை அடுப்பில் வைத்து நெருப்பை மூட்டி, மாவை ஊத்தினால் அவிந்து வர சரியாக வரும்....!

பாத்துங்கோ மாவைச்சட்டீக்க ஊத்துங்கோ..! :P :P :P

Share this post


Link to post
Share on other sites

இப்பதான் உடனடி அப்பமா இருக்கே தூயா அந்த பைக்கட்டிலேயே போட்டிருக்காங்க செய்முறை. அத பார்த்து அப்படியே செய்யவேண்டியதுதான்.:wink::lol:

Share this post


Link to post
Share on other sites

ஆப்பம்

……ரெண்டு கப் பச்சாpசி, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் _ன்றையும் ஒன்றhக ஒரு மணி நேரம் ஊற வைக் கவும். பிறகு கழுவி விட்டு, ஒரு _டி தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றhக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு கால் டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து ஆப்ப சட்டியில் ஆப்பங்களாக ஊற்றவும். விருப்பப் பட்டால், தேங்காயைத் துருவிப் பால் எடுத்து, தண்ணீர் சேர்க்காமல் வைத்துக் கொண்டு, ஆப்பம் வெந்து கொண்டிருக்கும் போது சிறிய கரண்டி தேங்காய் பாலை நடுவில் விட்டு வேக வைத்து எடுக்கவு :P :P :P

ம்ம்ம்ம் என்க்கு 2 முட்டை அப்பம் அணுப்பணும் சரியா?

Share this post


Link to post
Share on other sites

சிங்களவங்கள் தான் இங்கை அப்பம் சுடுரதில கெட்டிக்காரங்கள். ஒரே நேரத்தில 15 அப்பம் சுடுவாங்கள். அவங்களை கேட்டா சொல்லித்தருவாங்கள். முடிஞ்சா நான் கேட்டு எழுதுறன்.

Share this post


Link to post
Share on other sites

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???

ஆதீபன் உங்களுடைய செய்முறைக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???.

பரவாயில்லை முதலில் கலக்க மறந்திட்டீயள் எண்டால் அப்பத்தை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாசிலை அப்ப சோடாவை கலக்கி குடிச்சுவிடுங்கோ பிரச்சனையில்லை...............

Share this post


Link to post
Share on other sites

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???

ஆதீபன் உங்களுடைய செய்முறைக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

அப்ப சோடாவை கடைசில கலந்தால்- அப்பம் வருதோ இல்லையோ- அல்சர் வராதா? :roll:

Share this post


Link to post
Share on other sites

களத்தில நிறைய பேர் என்னக்கு அல்சர் வர வைக்க பார்க்கினம்..நான் அண்ணாச்சிட்ட போய் சொல்ல போறன்..

Share this post


Link to post
Share on other sites

தூயா இது நம்மக்கு தெரிந்த முறை

பச்சை அரிசி- 2 கப் (உங்க அளவுக்கு எடுங்க)

தேங்காய்,

உப்பு

(தேவைப்பட்டால் ரவை)

பச்சை அரிசியை ஊற வைத்து அரைத்து/இடித்து மா வை எடுங்கள். கொஞ்சம் பெரிய கண்ணுடைய அரிதட்டு பாவிப்பது நல்லது.

அதன் போது வரும் சிறிய குறுணலை புக்கை கஞ்சி காய்ச்ச பாவிக்கலாம். அது முடியா விட்டால்

ரவை ஒரு 100 கிராம் எடுத்து சிறிதளவு கொதிக்கும் நீரில் கலந்து தடிப்பான கூழ் மாதிர் காய்ச்சி கொள்ளுங்கள்.

அரித்து எடுத்த மாவையும், புக்கை கஞ்சிடையும் சேர்த்து தடிப்பாக குழைத்து 8 மணி நேரம் புளிக்க வையுங்கள்

மாவுக்கு போதுமான நீர், உப்பு , அப்ப சோடா சேர்த்து கரைத்துகொள்ளுங்கள். ( முதல் பழகும் போது -நீர் சேர்க்கும் அளவை கண்டு பிடிக்க, சிறிது நீர் சேர்த்து கலந்த பின் சூடான சட்டியில் மாவை வார்த்து பார்க்கலாம். அது சீராக இலகுவாக பரவும் நிலை வரும் வரை நீர் சேர்த்து கலக்குங்கள்.)

பால் அப்பம் தேவை என்றால்

தேங்காய் துருவி அதிகம் நீர்விடாது நல்ல தடிப்பான பாலாக பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.

பதமாக கரைத்த மாவை சூடானசட்டியில் வார்த்து , நடுவில் சிறிதளவு பாலை சேர்த்து மூடி வேக வைத்து இறக்கினால் அப்பம் தயார்.

குறிப்பு

பால் விட்டு அப்பம் சாப்பிட ஒத்து வராதவர்கள் நீருக்கு பதிலாக பாலை விட்டு மாவை கரைத்து பாலற்ற அப்பம் சுடலாம்.

பாலுக்கு பதிலாக முட்டை விட்டால் முட்டை அப்பம்

போதுமா தூயா.................. :P

Share this post


Link to post
Share on other sites

முக்கியமானதொன்று அப்பச்சோடவுக்குப்பதில் கள்ளு விட்டால் நல்லாயிருக்கும். :!:

Share this post


Link to post
Share on other sites

முக்கியமானதொன்று அப்பச்சோடவுக்குப்பதில் கள்ளு விட்டால் நல்லாயிருக்கும். :!:

ஊரிலை சரிவரும், இங்க என்ன செய்ய, அதான் தூயா சொல்லி இருக்கிறா பட்டர்மில்க் விடலாமாம், விட்டு செய்து பாத்திட்டு ஆரும் சொல்லுங்க.

Share this post


Link to post
Share on other sites

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

Share this post


Link to post
Share on other sites

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

லண்டனில் இப்போது விடிந்து கூட இருக்காது. அப்படியிருந்தும் கள்ளு நினைப்போடு தான் இருக்கின்றியளோ? :oops:

Share this post


Link to post
Share on other sites

ஏதோ நாளை ஞாயிறு லீவு லேட்டா எழும்பலாம் தானே அதற்குள் யாழில் பார்க்காத தலைப்புக்களை பார்க்கலாம் என்றால் நம்ம இளைய தளபதி அப்பத்துக்கு விட கள்ளு இல்லையென்று கவலைப்பட்டார் அது தான் சொன்னன்.

Share this post


Link to post
Share on other sites

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

மதன் கள்ளு விடுறது புளிக்க/நொதித்தல் தாக்கம் நிகழ. அதுக்கு கொஞ்சம் நுண்ணங்கியள் தேவை.போத்தலில வாற கள்ளிலை நுண்ணங்கிகளை எல்லம் கிருமிநீக்கம்/பாஸ்ராக்கம் செய்து அவற்றின் தொழிற்பாடு இல்லாது இருக்கும். அதை விட்டா அப்ப மா புளிக்காது :P .

ஆமா அதுகேன் இளைய தளபதிய கூப்பிடுறீங்க, அந்தாளுக்கு அப்பம் எண்டா என்னெண்டு தெரியுமோ தெரியா :? சங்கீதா செய்து கொடுத்தா தான் உண்டு

Share this post


Link to post
Share on other sites

500 கிராம் வெள்ளைப்பச்சை அரிசிமாவுடன் இளநீர்சேர்க்கவும் அத்துடன் அரை ரிஸ்புூன் ஈஸ்ட்(சிலர் ஈஸ்ட்டுக்கு பதிலாக பாதிகப் பியர் சேர்ப்பதும் உண்டு. ஆனால் எல்லோரும் விரும்பமாட்டார்கள்) சேர்த்து நன்றாக கையால் பிசைந்து சேர்க்கவும். ஓரளவு களிப்பதத்திலே மண் சட்டி அல்லது சில்வர் சட்டியில் வைத்து ஈரதுணியால் மூடிக்கட்டவும். 12 மணிநேரம் கழித்து தேங்காய்ப்பால்(முதல்ப்பால்) சேர்த்து கலக்கவும். அதன்பன் கல்லுச்சட்டியை(சில்வர்சட்டி

Share this post


Link to post
Share on other sites

ஆகா..அப்பம் செய்யும் முறை தாராளமா தந்திருக்காங்க.. தூயா..சோ, செய்து பாருங்கள்..சாப்பிடும் போது கொஞ்சமாக சாப்பிடுங்கள்..எரிச்சலில் சொல்லவில்லை.. தேங்காய் பாலில் செய்வதால்..நிறைய சாப்பிட அப்பச்சட்டி முதலில சுழலுலாப்போல இருக்கும்..அப்புறம் அப்பம் சுழலும்..அப்பிடியே தலையை சுத்தும். உண்மையாகவே எனக்கு சுத்தி இருக்கு..சோ, அடுத்த நாளைக்கும் வைத்து சாப்பிடுங்கள்..அதுவும் ருசியாக இருக்கும்.. :P

Share this post


Link to post
Share on other sites

தோசை சுடும் போது அல்லது அப்பம் சுடும் போது அவை சட்டியில் ஒட்டாமலிருக்க உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதன் பாதித்துண்டின் வெளிப்பக்கத்தில் முள்ளுக்கரண்டியை குத்தி கைபிடியாக வைத்துக் கொண்டு உள் பகுதியால் எண்ணெய்யை தொட்டு சட்டியில் தடவி விட்டு இப்போது சுட்டுப் பாருங்கள் சட்டியில் ஒட்டவே ஒட்டாது.

Share this post


Link to post
Share on other sites

ஆகா ரொம்ப நன்றி வசம்பண்ணா..எங்க வீட்டில அடிக்கடி ஒட்டி பிரச்சனை குடுக்குறது. இப்படியே செய்து பார்ப்போம்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

மதன் கள்ளு விடுறது புளிக்க/நொதித்தல் தாக்கம் நிகழ. அதுக்கு கொஞ்சம் நுண்ணங்கியள் தேவை.போத்தலில வாற கள்ளிலை நுண்ணங்கிகளை எல்லம் கிருமிநீக்கம்/பாஸ்ராக்கம் செய்து அவற்றின் தொழிற்பாடு இல்லாது இருக்கும். அதை விட்டா அப்ப மா புளிக்காது :P .

ஆமா அதுகேன் இளைய தளபதிய கூப்பிடுறீங்க, அந்தாளுக்கு அப்பம் எண்டா என்னெண்டு தெரியுமோ தெரியா :? சங்கீதா செய்து கொடுத்தா தான் உண்டு

ஏன் மதுவம் ( மா நொதித்தலில் -புளிக்க வைக்கிறதில் பங்கேற்கும் ஒரு வகை பங்கசு நுண்ணங்கி..!) காற்றில் இருக்காதோ... கள்ளுக்க எப்படி மதுவம் வந்தது..அது காற்றில் உள்ள பங்கசும் தான்...காற்றில இருந்துதான் வந்தது. எனவே அப்பம் மாவை தோசை மாவை காற்றிற்கு எக்ஸ்போஸ் பண்ணினாலும் புளிக்குங்கோ..! பட் ரைம் எடுக்குங்கோ...அதிலும் மதுவம் செறிவாகப்பட்ட மாக்கட்டில விக்கிற "ஈஸ்ட்" போடுங்கோ...கெதிசா புளிச்சிடும்..கள்ளுத் தேவையில்லைங்கோ..! :wink: :lol: :idea:

Share this post


Link to post
Share on other sites

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ? :lol:

பிள்ளை தமிழ் கடையில பக்கற் வருது வாங்கும் ஒரு கத்தரிக்கோலை எடும் பக்கற் இன் நுனியில லைட்டா ஒரு வெட்டு அப்பிடியே ஒரு சட்டியில போடும் ம் அப்புறம் பக்கற் ஐ பின் பக்கமா திருப்பும் எல்லாம் விலாவாரியா இருக்கும்

வாசியும் செய்யும் பரிமாறும்

உத விட்டுட்டு .....

:P :P :P :P :P :P :P :P

8) 8) 8) 8)

Share this post


Link to post
Share on other sites

ஆகா ரொம்ப நன்றி வசம்பண்ணா..எங்க வீட்டில அடிக்கடி ஒட்டி பிரச்சனை குடுக்குறது. இப்படியே செய்து பார்ப்போம்.. :lol:

ஏன் பிள்ளை வீட்டில ஆதி காலத்து சட்டியா இருக்கு :oops: :oops:

இப்பத்தானே ஓட்டாமல் இருக்க சட்டி வருது

:wink: :wink: :wink:

Share this post


Link to post
Share on other sites

ஏன் பிள்ளை வீட்டில ஆதி காலத்து சட்டியா இருக்கு :oops: :oops:

இப்பத்தானே ஓட்டாமல் இருக்க சட்டி வருது

:wink: :wink: :wink:

இருக்கும் சிறி லங்கா ல இருந்து வரும் போது சட்டியையும் கொண்டு வந்தினமோ? :P :P :P

Share this post


Link to post
Share on other sites

அப்பம் தயாரிக்கும் முறை

*********************** - தலைப்பை திசைமாற்றும் கருத்து நீக்கப்படுகிறது - யாழினி

அப்பம் எல்லாம் செய்து சாப்பிட்டும் இருப்பினம் இனி சும்மா நகைசுவையாய் பேசினா தப்பா? :cry:

வாங்கோ யாழ்ப்பாணம் பக்கம் வருவிங்கள் தானே? அப்போ ஈ.பி.டி.பி ட சொல்லி கொடுத்து விடுறன் :twisted:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • அந்த சவூதி சேக்குகளாக வந்து போனவர்கள் யாரெண்டும் சொல்லுங்க
    • இரா.சம்பந்தன்: "புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு" LAKRUWAN WANNIARACHCHI தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தொடர்புப்படுத்துவதை, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். கேள்வி :- இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? பதில் :- இதுவொரு படு மோசமான தாக்குதல். இதை நாங்கள் மிகவும் பலமாக கண்டிக்கின்றோம். 300ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  500ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றார்கள். இவ்விதமான பயங்கரமான செயல்களை பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்விதமான சம்பவங்கள் இனிமேல் நடைபெறகூடாது. அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உரிய நேரத்தில், உரிய காலத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இது தவிர்க்கப்படாமல் இடமளித்தது, ஒரு பெருந்தவறு என நாங்கள் கருதுகின்றோம். அதற்கு யார் பொறுப்பு என்பதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அது விடயம் சம்பந்தமாகவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் முழுமையான விசாரணைக்கு உள்ளடக்கப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய ஸ்திரமான கருத்து.  கேள்வி :- நாங்கள் ஒரு 30 வருட காலம் யுத்தத்தை சந்தித்த ஒரு நாடு. அதுவும் தமிழ் பேசும் சமூகம் ஒரு போராட்டத்தை ஏற்படுத்திய ஒரு நாடு. இந்த போராட்டத்தையும், இந்த தாக்குதலையும் நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்? பதில் : தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கி போராட்டம். அதில் நடைபெற்ற சம்பவங்கள் சம்பந்தமாக நாங்கள், முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, அந்த போராட்டத்தின் பின், அந்த போராட்டத்தின் அடிப்படையில் ஒரு காரணம் இருந்தது. நீண்ட காலமாக தமிழ் மக்கள் தமது உரிமையை பெறுவதற்காக ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக ஒப்பந்தங்களின் மூலமாக, ஒத்துழைப்புக்களின் மூலமாக பல வகைகளில் சாத்திய ரீதியில், அகிம்சை வழியில் போராடி, தமது உரிமைகளை பெற முடியாத நிலையில், தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்தப்பட்ட ஒரு சூழலில், இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இது ஒரு வேற விதமான போராட்டம். அடிப்படைவாதிகளுடைய போராட்டம். தங்களுடைய சில நம்பிக்கைகளை தாங்கள் நிலை நாட்ட வேண்டும். எவ்விதத்திலாவது அதை நிலைநாட்ட வேண்டும் என்று எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயத்தின் அடிப்படையில், ஒரு நீதியின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் அல்ல. இதுவொரு அடிப்படை போராட்டம். அதனால்; அது இரண்டையும் ஒத்து பார்க்க முடியாது.  கேள்வி : முஸ்லிம் சமூகமும், இலங்கையில் தமிழ் பேசக்கூடிய ஒரு சமூகம். தற்போது அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள். ஒரு போராட்ட வடிவத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள். இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? பதில் :- பொதுவாக சொல்வதாக இருந்தால், தற்போது நடைபெற்றிருக்கின்ற சம்பவத்தை அவர்கள் துப்பரவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அதை கண்டிக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் பேசிய முஸ்லிம் தலைவர்கள் கூட அதை மிகவும் உறுதியாக, அதை மிகவும் நிதானமாக, அதை மிகவும் திடமாக கண்டிக்கின்றார்கள். இந்த போராட்டத்திற்கும், தங்களுக்கும் இடையில் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏற்றுக் கொள்ளபோவதில்லை என்று கூறுகின்றார்கள். இந்த சம்பவத்திற்கு இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் எவ்விதத்திலும் தொடர்புப்படுத்துவது ஒரு நியாயமான நிலைமையாக இல்லை.  ISHARA S.KODIKARA கேள்வி :- இந்த தாக்குதல் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்ற அடிப்படையில் கூறுகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறினார்கள். இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டு பார்க்கின்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படி நோக்குகின்றது? பதில் : தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று இலங்கை நாடும், உலகத்தில் வேறு பல நாடுகளும் அடையாளம் கண்டதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய சில செயல்கள் பயங்கரவாதத்தை வெளிகொணர்ந்ததாக அமைந்தது.  ஆனால் அவர்களுடைய போராட்டத்திற்கு பின்னால் ஒரு அடிப்படைவாதம் இருக்கவில்லை. ஜனநாயக உரிமைகளை பெறுவதற்காகவும், ஜனநாயக உரிமைகள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட காரணத்தாலும், ஆட்சி அதிகாரங்கள் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழ் மக்களும் இந்த நாட்டில் சம பிரஜைகளாக வாழ விடப்படாத காரணத்தினாலுமே அவர்களுடைய போராட்டம் நடந்தது. ஆனபடியால், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராட்டத்திற்கும், தற்போது நடந்துள்ள நிகழ்வுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி நோக்குவது தப்பான நிலைப்பாடு. கேள்வி :- முழு உலகையும் எடுத்துக் கொண்டால், ஒரு இஸ்லாமிய தீவிரவாதமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படை தன்மை என்னவாக இருக்கும்? பதில் :- ஆனால் எல்லா முஸ்லிம் மக்களும் அவ்விதமான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என சொல்ல முடியாது. ஒரு அடிப்படைவாத இயக்கம் இருக்க தான் செய்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ். அவர்கள் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றார்கள். தாங்கள் தான் இந்த செயலை செய்தது என்று. ஆனால் முஸ்லிம் மக்களையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பையும் நாங்கள் ஒன்றாக பார்க்க முடியாது. ஆனேகமான நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள். அவர்களுக்கு குறைகள் இருந்தாலும், அவர்கள் இந்த வழியில் அதனை கையாளவில்லை. அந்த அடிப்படைவாத இயக்கத்தின் ஊடாக அதை கையாளவில்லை. அவர்கள் அதை வேறு விதமாக கையாளுகிறார்கள். ஆனபடியால், உலகில் வாழ்கின்ற சகல முஸ்லிம் மக்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பையும் ஒரே விதத்தில், ஒரே கண்ணோட்டத்தில் பார்வையிடுவது தவறென்று நான் கருதுகின்றேன். கேள்வி : உளவுத்துறை தகவலில் ஒரு குழப்ப நிலைமை தற்போது காணப்படுகிறது. உளவுத்துறை தகவல் சரியாக பரிமாறப்படவில்லை என்று கூறப்படுகிறது. தமக்கும் அந்த உளவுத்துறை தகவல் கிடைக்கவில்லை என்று நேற்றைய தினம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதுகுறித்து நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்? பதில் :- அவ்விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் நான் அறிந்த வகையில் எங்களுடைய நேச நாடுகள், அயல் நாடுகள் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவ்விதமான தாக்குதல் நடைபெறக்கூடிய ஒரு நிலைமை உண்டு என்பதை பல நாட்களுக்கு முன்பதாக இலங்கையில் பாதுகாப்பு ரீதியாக உளவு ரீதியாக செயல்படுகின்ற அதிகாரிகளுடன் பகிர்ந்திருக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் அதற்கு மேலதிகமாக அது ஏன் பரிமாறப்பட வேண்டிய விதத்தில், பரிமாறப்படவில்லை. அது மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விடயத்தில் தற்போது போதிய தகவல் இல்லை. இந்த விடயங்கள் எல்லாம் முறையாக விசாரிக்கப்பட்டு, நாட்டு மக்கள் உண்மையை அறிய வேண்டியது அத்தியாவசியம்.  கேள்வி :- மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.? பதில் :- மக்களுக்கு நாங்கள் சொல்லக்கூடியது. விசேஷமாக பாதிப்படைந்த மக்களுக்கு உங்களுடைய பாதிப்பும், உங்களுடைய இழப்புகளும், ஏற்பட்ட அழிவுகளும், உங்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களும் எங்களுக்கு பெரும் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. நாங்கள் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வது மாத்திரமல்ல. உங்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகளை தொடர்ந்து, சிறப்பாக எங்களால் இயன்றளவு ஆற்றுவதற்கு நாங்கள் பின் நிற்க மாட்டோம். அதை நாங்கள் செய்வோம்.   https://www.bbc.com/tamil/sri-lanka-48048826    
    • பர்தாவுடன் கைதுசெய்யப்பட்டது புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா? nethnews.lk இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பர்தா அணிந்த ஆண் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய இந்த நபர் புத்த சமயத்தை சேர்ந்தவர் என்று அவ்வாறு பகிரப்பட்டு வரும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  2009ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர் இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் இதுவாகும். "முஸ்லிம் பெண்ணை போன்று உடை உடுத்தியுள்ள புத்த சமயத்தை சேர்ந்த ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலுள்ள தேவாலயங்களில் தாக்குதல் நடத்திய முரடர்களில் இவரும் ஒருவர்" என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் இந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளதுடன் இதை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த காணொளி தொடர்பான பின்னணி தகவல்களை ஆராய்ந்ததில், இது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் பெரும்பான்மையினராக உள்ள புத்த சமயத்தை சேர்ந்தவர்களுக்கும், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்குமிடையே கடந்த சில ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த கண்ணோட்டத்தில், சிலர் இந்த காணொளியை பரப்பியுள்ளதாக தெரிகிறது.  Anadolu Agency இருந்தபோதிலும், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை அந்நாட்டு காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உள்ளூரை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் இஸ்லாமியவாத அமைப்பே காரணமென்று இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க, "இந்த தாக்குதல் வெறும் உள்நாட்டினரால் மட்டும் நிகழ்த்தப்பட்டதல்ல" என்று தெரிவித்தார். அதே சமயத்தில், இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்பதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு நேற்று தனது ஊடக பிரிவின் வழியே அறிவித்துள்ளது. காணொளியின் உண்மைத்தன்மை  36 நொடிகள் நீடிக்கும் அந்த காணொளியில், பர்தா அணிந்துள்ள நபரொருவரை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இந்த காணொளியை முதல் முறையாக யார் வெளியிட்டது என்பது குறித்து இணையத்தில் தேடினோம். அதில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் ஆண்டு 'நேத் நியூஸ்' எனும் இலங்கையை சேர்ந்த உள்ளூர் ஊடகம் இதை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.  அந்த செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியின்படி, இலங்கை தலைநகர் கொழும்புவை அடுத்துள்ள ராஜ்கிரியா பிராந்தியத்தில் காணொளியில் விசாரிக்கப்படும் நபர் பர்தா அணிந்து மூன்று சக்கர வாகனத்தில் வந்ததாகவும், அவரை பார்த்து சந்தேகமடைந்த அதன் ஓட்டுநர், காவல்துறையினரிடம் தெரிவித்ததன் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 'எக்ஸ்பிரஸ் நியூஸ்' எனும் செய்தித் தளமும் அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 'நேத் நியூஸ்' செய்தி நிறுவனத்துக்கு சொந்தமான 'நேத் எப்எம்' எனும் ஃபேஸ்புக் பக்கத்தில், தற்போது வைரலாகி வரும் காணொளி உண்மையில் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று சில தினங்களுக்கு முன்பு விளக்கமளித்துள்ளது.  "விழிப்புணர்வு! இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது; ஆனால், இது 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட காணொளியாகும்" என்று அந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   https://www.bbc.com/tamil/sri-lanka-48041250  
    • உங்க ளுக்கு ஆதாரம் ரொம்ப முக்கியமாக தேவைப்பட்டால், காத்தான்குடில போனைப் போட்டு கேளுங்க. வியாபாரிகள், விவசாயிகள் முடங்கிப்போய் உள்ளனர். ஆஸ்பத்திரி கூட போகப்பயப்படுகின்றனர். கதிகலங்கிப் போயுள்ளனர். மக்கள் அலறி விலகிச்செல்வதால், இஸ்லாமிய உடையுடன் பெண் வெளியே செல்ல முடியாத நிலை. வேலை செய்யுமிடங்களில், திடீர் சந்தேகம். இது போன்ற தாக்குதல்களின் பின், இப்போது ரஸ்ய, மாஸ்கோவின் வீதிகளில், முஸ்லீம் உடையுடன், தொப்பியுடன் யார் சென்றாலும் மக்கள் தாக்குவதால், தமது கலாச்சாரத்தை துறக்கவேண்டிய நிலை. அன்று தமிழர் பட்ட அவலத்தை, இந்த ஜிகாதிக் கூட்டம் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்துள்ளது. சிங்களவர் காத்திருந்த தருணத்தை இவர்களே தங்கத்தட்டில் கொடுத்துள்ளனர். நாட்டின், சிங்களவரும், தமிழர்களும் சேர்ந்தே வெறுக்கும் பேரவலம். அல்லாவின் பெயரால், இந்த ஜிகாதிகள்  சபிக்கப்படுகிறார்கள். நீஙகள் ஆதாரம் கேட்கிறீர்கள். 🥵