Jump to content

தமிழ்ப் பழமொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பழமொழிகள் என்றால் அது மிகையாகாது. ஆண்டாண்டு காலமாக எங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து வழங்கிவந்த பழமொழிகளை ஒன்றுதிரட்டி ஓரிடத்தில் சேர்ப்பதென்பது கஷ்டம், கீழே உள்ளவற்றில் இல்லாத ஏதவது பழ மொழிகள் உங்களுக்கு தெரிந்தால், இணைத்துவிடுங்கள், பல பழ மொழிகள் பேச்சு வழக்கில் இருக்கு ஆனா எழுத்துவடிவில்ல இல்லை

========================================

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல இருந்தால் பகையும் உறவாம்.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.

அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.

அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.

அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடியாத மாடு படியாது.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.

அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.

அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.

அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.

அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.

அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.

அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?

அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.

அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.

அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.

அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.

அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.

அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.

அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.

அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.

அவனவன் செய்த வினை அவனவனுக்கு.

அவிசாரி என்று ஆனை மேல் போகலாம் திருடி என்று தெரு மேல் போக முடியுமா?

அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.

அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.

அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.

அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி

அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றுப் போகும்.

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

அறிவீனனிடம் புத்தி கேட்காதே.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.

அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?

அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.

அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.

அற்ப சகவாசம் பிராண சங்கடம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

அற்றது பற்றெனில் உற்றது வீடு.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.

அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

[தொகு] ஆ

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.

ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.

ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!

ஆசை வெட்கம் அறியாது.

ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.

ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.

ஆடிப் பட்டம் தேடி விதை.

ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.

ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.

ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.

ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா

ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.

ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல

ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே

ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!

ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

ஆரால் கேடு, வாயால் கேடு.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆழமறியாமல் காலை இடாதே.

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

ஆழம் தெரியாமல் காலை விடாதே.

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.

ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

ஆனைக்கும் அடிசறுக்கும்.

ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

[தொகு] இ, ஈ

இக்கரைக்கு அக்கரை பச்சை.

இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

இஞ்சி இலாபம் மஞ்சளில்.

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.

இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை

இராச திசையில் கெட்டவணுமில்லை

இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

இருவர் நட்பு ஒருவர் பொறை.

இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

இல்லது வாராது; உள்ளது போகாது.

இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

இளங்கன்று பயமறியாது

இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.

இறங்கு பொழுதில் மருந்து குடி.

இறுகினால் களி , இளகினால் கூழ்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஈர நாவிற்கு எலும்பில்லை.

ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

[தொகு] உ, ஊ

உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.

உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.

உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்

உரம் ஏற்றி உழவு செய்

உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

உலோபிக்கு இரட்டை செலவு.

உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

உளவு இல்லாமல் களவு இல்லை.

உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல

உள்ளது போகாது இல்லது வாராது.

உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.

உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]

ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்

ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.

ஊண் அற்றபோது உடலற்றது.

ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?

[தொகு] எ, ஏ

எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!

எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.

எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?

எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,

எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!

எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.

எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.

எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?

எதார்த்தவாதி வெகுசன விரோதி.

எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.

எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?

எலி அழுதால் பூனை விடுமா?

எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.

எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்

எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது

எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?

எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!

எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!

எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.

எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்

எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.

எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.

எறும்புந் தன் கையால் எண் சாண்

ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை

ஏரி நிறைந்தால் கரை கசியும்.

ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை

ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.

ஏழை என்றால் எவர்க்கும் எளிது

ஏழைபேச்சு அம்பலம் ஏறாது

ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

[தொகு] ஐ, ஒ, ஓ, ஒள

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.

ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது

ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?

ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.

ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.

ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்

ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

[தொகு] க

கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?

கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

கடல் திடலாகும், திடல் கடலாகும்.

கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.

கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.

கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.

கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.

கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.

கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.

கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.

கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.

கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!

கண் கண்டது கை செய்யும்.

கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.

கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.

கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.

கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே

கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.

கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.

கரணம் தப்பினால் மரணம்.

கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்

கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!

கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.

கல்லாதவரே கண்ணில்லாதவர்.

கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

கல்வி அழகே அழகு.

கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.

கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.

களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

கள்ள மனம் துள்ளும்.

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.

கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?

கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

கனிந்த பழம் தானே விழும்.

கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

[தொகு] கா

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.

காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?

காணி ஆசை கோடி கேடு.

காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்

காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.

காப்பு சொல்லும் கை மெலிவை.

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

காய்த்த மரம் கல் அடிபடும்.

காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.

காரண குருவே காரிய குரு!

காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை

காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்

காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!

காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.

காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்

காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!

காற்றில்லாமல் தூசி பறக்குமா?

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

[தொகு] கி, கீ, கு, கூ

கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!

கிட்டாதாயின் வெட்டென மற

கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி

கீர்த்தியால் பசி தீருமா?

கீறி ஆற்றினால் புண் ஆறும்.

குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.

குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.

குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

குணத்தை மாற்றக் குருவில்லை.

குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.

குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

குப்பை உயரும் கோபுரம் தாழும்.

குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

குரங்கின் கைப் பூமாலை.

குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.

குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்

குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?

குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?

குரைக்கிற நாய் கடிக்காது;

கடிக்கிற நாய் குரைக்காது.

குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே

குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

கூழும் சிந்தல, கோப்பையும் உடையல

கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

[தொகு] கெ

கெடுக்கினும் கல்வி கேடுபடாது

கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது

கெடுவான் கேடு நினைப்பான்

கெட்டாலும் செட்டி செட்டியே,

கிழிந்தாலும் பட்டு பட்டே.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

கெட்டும் பட்டணம் சேர்

கெண்டையைப் போட்டு வராலை இழு.

கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

[தொகு] கே

கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.

கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!

கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?

கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.

கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

கேள்விப் பேச்சு மூளா நெருப்பு

[தொகு] கை

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா

கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்

கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்

கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்

கையிலே காசு வாயிலே தோசை

கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

கையூன்றிக் கரணம் போடவேண்டும்.

கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்

[தொகு] கொ

கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்

கொடிக்கு காய் கனமா?

கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.

கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?

கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.

கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?

கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.

கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .

கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

[தொகு] கோ

கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.

கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

கோடி வித்தையும் கூழுக்குத்தான்

கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

கோபம் சண்டாளம்.

கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!

கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?

கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்

கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.

கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

[தொகு] ச, சா, சி, சீ

சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!

சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி

சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?

சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.

சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.

சாண் ஏற முழம் சறுக்கிறது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சித்திரையில் செல்வ மழை.

சிறுதுளி பெரு வெள்ளம்.

[தொகு] சு, சூ

சுக துக்கம் சுழல் சக்கரம்.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

சுட்ட சட்டி அறியுமா சுவை.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே

சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

[தொகு] செ, சே, சை

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?

செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?

செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?

செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

செயவன திருந்தச் செய்.

செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?

செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.

சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.

சேற்றிலே செந்தாமரை போல.

சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

[தொகு] சொ, சோ

சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

சொல் அம்போ வில் அம்போ?

சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.

சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.

சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.

சொல்வல்லவனை வெல்லல் அரிது.

சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..

சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

[தொகு] த

தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

தடி எடுத்தவன் தண்டல்காரனா ?

தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.

தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

தணிந்த வில்லுத்தான் தைக்கும்.

தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.

தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.

தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .

தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)

தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

தருமம் தலைகாக்கும்.

தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

தலை இருக்க வால் ஆடலாமா ?

தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?

தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?

தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.

தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.

தவளை தன் வாயாற் கெடும்.

தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்

தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!

[தொகு] தா

தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்

தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று

தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)

தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்

தானத்தில் சிறந்தது நிதானம்

தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்

[தொகு] து

துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?

துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை

[தொகு] தை

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்

[தொகு] ந

நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.

நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.

நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !

நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்

நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.

நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.

நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

நயத்திலாகிறது பயத்திலாகாது.

நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.

நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.

நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.

நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.

நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.

நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?

நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.

நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.

நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

[தொகு] நா

நா அசைய நாடு அசையும்.

நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?

நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.

நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

நாய் இருக்கிற சண்டை உண்டு.

நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.

நாய் விற்ற காசு குரைக்குமா?

நாலாறு கூடினால் பாலாறு.

நாள் செய்வது நல்லார் செய்யார்.

நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

[தொகு] நி, நீ

நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.

நித்திய கண்டம் பூரண ஆயிசு.

நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?

நித்திரை சுகம் அறியாது.

நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.

நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.

நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.

நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

நீர் மேல் எழுத்து போல்.

நீலிக்குக் கண்ணீர் இமையிலே.

நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

[தொகு] நு, நூ, நெ, நே, நை, நொ, நோ

நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.

நூல் கற்றவனே மேலவன்.

நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.

நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெய் முந்தியோ திரி முந்தியோ.

நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?

நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?

நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

நேற்று உள்ளார் இன்று இல்லை.

நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

நொறுங்கத் தின்றால் நூறு வயது.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

நோய் கொண்டார் பேய் கொண்டார்.

நோய்க்கு இடம் கொடேல்.

[தொகு] ப

துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.

பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.

பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.

பக்கச் சொல் பதினாயிரம்.

பசியுள்ளவன் ருசி அறியான்.

பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்

பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.

பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?

பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.

படையிருந்தால் அரணில்லை.

படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!

பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.

பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.

பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.

பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?

பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.

பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.

பணம் உண்டானால் மணம் உண்டு.

பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.

பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்

பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

பதறாத காரியம் சிதறாது.

பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.

பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.

பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.

பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.

பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?

பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.

பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.

பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே

பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.

பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

[தொகு] பா

பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!

பாம்பின கால் பாம்பறியும்.

பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .

[தொகு] பு, பூ

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.

புத்திமான் பலவான்.

புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

பூவிற்றகாசு மணக்குமா?

பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

[தொகு] பெ, பே

பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது

பெண் என்றால் பேயும் இரங்கும்.

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.

பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.

பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.

பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!

பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

பேசப் பேச மாசு அறும்.

பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.

பேராசை பெருநட்டம்.

பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

[தொகு] பொ, போ

பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.

பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

பொறி வென்றவனே அறிவின் குருவாம்.

பொறுமை கடலினும் பெரிது.

பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?

போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

[தொகு] ம

மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.

மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.

மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.

மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண்டையுள்ள வரை சளி போகாது.

மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?

மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.

மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

மருந்தே யாயினும் விருந்தோடு உண்.

மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.

மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .

மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்

மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.

மவுனம் கலக நாசம்

மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.

மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.

மனமுரண்டிற்கு மருந்தில்லை.

மனம் உண்டானால் இடம் உண்டு.

மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

மனம் போல வாழ்வு.

மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.

மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

[தொகு] மா

மாடம் இடிந்தால் கூடம்.

மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?

மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.

மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.

மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.

மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.

மாரடித்த கூலி மடி மேலே.

மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.

மாரி யல்லது காரியம் இல்லை.

மாவுக்குத் தக்க பணியாரம்.

மாற்றானுக்கு இடங் கொடேல்.

மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?

மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

[தொகு] மு

முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)

முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)

[தொகு] யா

யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).

யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?

[தொகு] மி, மீ, மு, மூ

மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.

மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.

மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

மீ தூண் விரும்பேல்.

முகத்துக்கு முகம் கண்ணாடி

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா

முதல் கோணல் முற்றுங் கோணல்

முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

முருங்கை பருத்தால் தூணாகுமா?

முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?

முன் ஏர் போன வழிப் பின் ஏர்

முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?

முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்

முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு

மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.

மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

[தொகு] மெ, மே, மொ, மோ,மெள

மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.

மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்

மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.

மொழி தப்பினவன் வழி தப்பினவன்

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

மெளனம் மலையைச் சாதிக்கும்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

[தொகு] வ-வே

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.

வடக்கே கருத்தால் மழை வரும்.

வட்டி ஆசை முதலுக்கு கேடு.

வணங்கின முள் பிழைக்கும்.

வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!

வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!

வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.

வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.

வருந்தினால் வாராதது இல்லை.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்

வளவனாயினும் அளவறிந் தளித்துண்

வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.

வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது

வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.

வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.

வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

வாழ்வும் தாழ்வும் சில காலம்.

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

விரலுக்குத் தகுந்த வீக்கம்.

விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு

விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

விதி எப்படியோ மதி அப்படி.

வித்தைக்கு அழிவில்லை.

வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?

விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?

விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.

விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்

விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .

வெளுத்ததெல்லாம் பாலல்ல.

வேலிக்கு ஓணான் சாட்சி.

வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு

வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!

நன்றி - ta.wikiquote.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் ...................யாழ் முழுக்க் ஒரே மூச்சில் எழுதிபோடடர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கிற சாடையில் உடையார் பேரப்பிள்ளைகளுக்கு நல்லாய் தமிழ் படிப்பிகிரன்றார் போல :D

அலைமகள் அக்கோய்.... என்னுடைய மூத்த பிள்ளைகளுக்கு எட்டு வயதுதான் ஆகிறது, அதுக்குள்ள தாத்தா ஆக்கப்பாக்கிறிங்கள்,

நிலமதி அக்கா - என்ன செய்ய பெரிசா வேலை இல்லை, அடுத்த மாத முடிவுவரை இதே நிலைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழமொழிக்காகவே ஒரு நூல் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

மூன்றுரையரையனார் இயற்றிய 'பழமொழி நானூறு' ஒவ்வொரு பாவின் இறுதியிலும் ஒரு பழமொழி கொண்டதாய் நானூறு வெண்பா உடையது.

எடுத்துக்காட்டுக்கு ஒரு பாட்டு:

மானமும் நாணமும் அறியார் மதிமயங்கி

ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து

ஞானம் வினாஅய் உரைத்தல் நகையாகும்

யானைப்பல் காண்பான் புகல்.

இதில் பயின்றுள்ள பழமொழி, "யானையைப் பல் பிடித்துப் பார்க்கப் போவது நகைப்புக்கு இடமாகும்" என்பது. இது இன்றைக்குப் புழக்கத்தில் இல்லை. இதைப் போன்றே அந்த நூலின் பெரும்பாலான பழமொழிகள் மறைந்து போக, சிற்சில மட்டும் இன்றும் மாறாமல் அல்லது மாற்றம் அடைந்து வழங்குகின்றன

பழமொழி நானூறு - ஆசிரியர் மூன்றுறை அரையனார்

பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

தற்சிறப்புப் பாயிரம்

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்

பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா

முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்

இன்றுறை வெண்பா இவை.

கடவுள் வணக்கம்

அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்

விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து

உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்

'பெரியதன் ஆவி பெரிது.'

ta.wikipedia.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழமொழி நானூறு என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்தற்கு அந் நாட்டுமொழியுள் வழங்கும் பழமொழிகள் பெரிதும் பயன்படுகின்றன. பழமொழிகளே அந்நாட்டு மக்களால் அடிப்பட்டுவரும் மன இயல்புகளை எடுத்துக் காட்டுகின்றனவல்லவோ? உலகவழக்காகிய இப்பழமொழிகளின் மேன்மையைக் கருதி இப் பழமொழிகளைக் கையாண்டு பொருள்சிறக்கச் செய்தல் நாவன்மையுடைய கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இயல்பாகிறது. பழமொழிகளைச் சிறந்த உரைநடையாசிரியர் எவரும் கையாளுவர். பழமொழிகள் பயின்றுவரச் செய்யுள்நூல் இயற்றும் தன்மை பேரறிஞர் நூல்களில் காணப்படும். இங்ஙனம் பழமொழியின் பொருட்சிறப்பை யுணர்ந்து அறிஞர் அவற்றைப் போற்றிக் கையாண்டாலும், தமிழ்நாட்டில் வழங்கிய சிறந்த பழமொழிகளைத் திரட்டி, ஒவ்வொரு பழமொழியைக்கொண்டும் தாங் கருதிய சிறந்த பொருள்களை விளக்கமுறுத்தக் கருதிய சமண்சமயப் பெரும் புலவோரான முன்றுறையரையனாரின் செய்கை தனிப் பெருந் தகுதிவாய்ந்ததாய்த் திகழ்கின்றது.

இவர் இயற்றிய இப் பழமொழி நானூற்றில் கடவுள் வாழ்த்து முதலான நானூறு வெண்பாக்களும் நானூறு பழமொழிகளைக் கொண்டு திகழ்கின்றன. பழமொழிகளை மனத்துக்கொண்டு, அவ்வப் பழமொழிகளால் விளக்கற்கேற்ற சிறந்த கருத்துக்களை எடுத்துக் கூறி, அப்பழமொழிகளை இயைபுபடுத்துகின்ற தன்மையால் நூல் இயன்றதனாலேயே, நூற்செய்யுள்களெல்லாம் பால் இயல்பாகுபாட்டுட்படாமல், ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு சிறந்த கருத்தை யுணர்த்தித் தனித்தனியே நின்றன. பயில்வார்க்கு எண்மையாயிருக்குமாறு, இப் பழமொழி நானூற்றுச் செய்யுள்களில் ஒருபொருண் மேலனவற்றைத்

தொகுத்துச் சேர்த்துப், பால் இயல் பாகுபாட்டுள் தமக்குத் தோன்றிய முறையில் ஒருவாறு அடக்கினார் திருமணம் செல்வக்கேசவராய முதலியாரவர்கள். அம்முறைப் பாகுபாட்டுடனேயே பழமொழி நானூறு தற்காலத்து வழங்கிவருகிறது. இப்பழமொழி நானூற்று உரை நூலும் அப் பாகுபாட்டுடனேயே வெளிவருகின்றது.

பழமொழி நானூறு என்னும் தனிப்பெருஞ் சிறப்புடைய இவ்வுயர் நூல் இரண்டு வகையில் பயில்வார்க்கு இன்பந் தந்து நிற்கின்றது. முதலாவது, நூலகத்தே பயின்றுவரும் பழமொழிகளின் பொருட்சிறப்பும், நாட்டில் வழங்கிவரும் அப் பழமொழிகளால் உணரலான தமிழ் மக்களியல்பும் பிறவும் அறிதல்; இரண்டாவது, அப் பழமொழிகளைக் கொண்டு விளக்கப்பெறும் அரிய நூற்கருத்து. பழமொழியின் சிறப்பையும் அவற்றால் விளக்கப்பெறும் நூற்கருத்தின் மாட்சியையும் பின்வரும் எடுத்துக் காட்டுக்களில் காண்க;

"இடைநாயிற் கென்பிடுமாறு" என்பது பழமொழி. ஆடு திருடச்செல்லுங் கள்வர், கிடைக்காவலாக இருக்கும் நாய்க்கு எலும்புத்துண்டத்தை இட்டுவிட்டுத் தாங்கருதியபடி ஆட்டை எவ்வகை இடையூறுமில்லால் திருடிச்செல்லும் இயல்பை இப் பழமொழி உணர்த்தி நிற்கிறது. இங்ஙனமே தம் பகைவரை வெல்லக்கருதினார் ஒருவர் அப் பகைவரோடுடனுறையும் நண்பர்களைத் தம் பக்கமாக ஆக்கிக்கொண்டு, அப் பகைவர்களை எளிதில் வெல்லவேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர்.

"அம்பலம் தாழ்க்கூட்டுவார்" என்பது பழமொழி. ஊர்ப் பொதுவிடமான அம்பலத்தின் வாயிற்கதவுக்குத் தாழிடுவார் என்பது இதன் பொருள். அம்பலத்தில் எக்காலும் பலரும் வரைவின்றி உள்நுழைந்தும் வெளிச்சென்றும் போக்குவரவு செய்தலால், அதன் வாயிற்கதவைத் தாழ்இடல் இயலாதென்பதாம். அக்காலத்து ஊர் அம்பலங்கள் இருந்தமையை இப்பழமொழி உணர்த்துகின்றது. இப் பழமொழியால் விளக்கப்படும் பொருள்

தம்மை நோக்கிக் குறைகூறும் மூடர் வாயை அடக்கப்புகுதல் அறிவிலார் செயலாம் என்பது.

"செய்கென்றான் உண்கென்னுமாறு" என்பது பழமொழி. ஒரு செயலைச் செய்யென்று சொன்னவன் உணவை உண் என்று சொன்னவனாவான் என்பது இதன் பொருள். ஒருவன் ஏவிய செயலைச் செய்தால், அதன் பயன் பின்னே தவறாமல் கிடைக்கும் என்பதாம். அரசன் ஏவிய செயல்களைக் கைம்மேல் என்ன பெற்றோம் என்று கருதாமல் செய்க என்னும் சிறந்த கருத்துக்கு அரணாக இப் பழமொழி வந்தது.

இனி, இந்நூலில் வந்துள்ள பழமொழிகளெல்லாம் உலக வழக்கில் வழங்கினவாறே எடுத்தாளப்படாமல் செய்யுள்நடைக் கேற்பப் பலவாறு உருமாற்றியே வழங்கப்பட்டிருக்கின்றன என்பது மேற்காட்டிய பழமொழிகளாலும் இனிது விளங்கும்.

இனித் தற்காலத்து நாட்டில் வழங்குகின்ற பழமொழிகள் இந் நூலுள் வந்தனவற்றுள் சில கீழே காண்க.

ஆயிரங்காக்கைக் கோர்கல் (249)

இருதலைக்கொள்ளி எறும்பு (141)

இறைத்தோறும் ஊறும் கிணறு (378)

உமிக்குற்றிக் கைவருந்துவார் (348)

ஓடுக ஊரோடு மாறு (195)

குன்றின்மேல் இட்ட விளக்கு (80)

தனிமரம் காடாதல் இல் (286)

திங்களை நாய் குரைத்தற்று (107)

தொளை எண்ணார் அப்பம் தின்பார் (165)

நாய்காணின் கற்காணாவாறு (361)

நாய் வால் திருந்துதல் இல் (316)

நிறைகுடம் நீர் தளும்பல் இல் (9)

நுணலுந் தன் வாயற் கெடும் (114)

பசிபெரி தாயினும் புல்மேயா தாகும் புலி (70)

பாம்பறியும் பாம்பின கால் (7)

பூவோடு நார் இயைக்குமாறு (88)

இனிப், பண்டைக்காலப் பழமொழிகள், இக்காலத்து வழங்காதன, சிறந்த பொருட்சிறப்புடன் இருப்பன சில காண்க.

அயிரை இட்டு வரால் வாங்குபவர் (372)

ஏற்றுக்கன்று ஏறாய் விடும் (81)

ஓர்த்தது இசைக்கும் பறை (37)

கானகத் துக்க நிலா (139)

சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு (86)

சுரை ஆழ அம்மி மிதப்ப (122)

தமக்கு மருத்துவர் தாம் (149)

தம்மை யுடைமை தலை (387)

தீநாள் திருவுடையார்க்கில் (235)

நனிவெந்நீர் இல்லம் சுடுகலா வாறு (51)

நாய்மேல் தவிசிடு மாறு (105)

நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி (236)

பயின்றது வானக மாகிவிடும் (398)

பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ (159)

புலித்தலையை நாய் மோத்தல் இல் (204)

யானைபோய் வால் போகா ஆறு (395)

இனித், தற்காலத்து வழங்கும் பழமொழிகளன்றி அவற்றோடொத்த சில பழமொழிகளும் இந் நூலுட் காணப்படுகின்றன.

தற்காலத்து வழங்கும் பழமொழிகள் : -

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்

அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவான்

இரும்பு பிடித்தவன் கையும் துரும்பு பிடித்தவன் கையும் சும்மா யிரா

காசுகொடுத்துத் தேள் கொட்டிக்கொள்வது போல

ஏறவிட்டு ஏணியை வாங்குதல்

1மயில் போலும் கள்ளி (கரவுடையவள்)

நாளைக்கு வரும் பலாப்பழத்தைவிட இன்றைக் கிருக்கும் களாப்பழமே மேல்

சாண் ஏறினால் முழம் சருக்குகிறது

குட்டிச்சுவரிலே தேள்கொட்ட, நெடுஞ்சுவரிலே நெறிகட்டினது போல

தாம் சாவ மருந்துண்பவர் இல்லை

பதறாத காரியம் சிதறாது

கொக்கின் தலைமேல் வெண்ணெய் வைத்துப் பிடித்தல்

அவற்றோடொத்த இந்நூல் பழமொழிகள் :

இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும் (190)

நல்லறம் செய்வது செய்யாது கேள் (367)

பூண்ட பறையறையா ராயினார் இல் (84)

பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் (3)

மச்சேற்றி ஏணி களவு (136)

மயில் போலும் கள்வர் உடைத்து (194)

முயல் விட்டுக் காக்கை தினல் (370)

முழங்குறைப்பச் சாண் நீளுமாறு (100)

முழந்தாள் கிழிந்தான் மூக்குப் பொதிவு (19)

யாருளரோ தங்கன்று சாக்கறப்பார் (131)

விரையிற் கருமம் சிதையும் (164)

வெண்ணெய் மேல்வைத்து மயில் கொள்ளுமாறு (210)

இனி, இந்நூலின் சிறந்த கருத்துக்கள் பல மற்றைய நீதி நூல்களிலும் தனிப்பெருஞ் சிறப்புடன், உலகியலைப் பெரிதும் ஒட்டிச்செல்வது பெரிதும் உணர்ந்து கொள்ளத்தக்கது. உடன்பிறந்தாராயினும் இருவர் நெடுநாள் உடனுறைந்திருத்தல் இன்னாமையே பயக்கும் எனக் கூறுகிறது ஒரு வெண்பா. இஃது உலகியலை ஒட்டிய சிறந்ததொரு கருத்தன்றோ? அவ் வெண்பாவைக் கீழே காண்க.

கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்

ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்

பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்

திருவொடும் இன்னாது துச்சு.

திருவொடும் இன்னாது துச்சு" என்பது ஈண்டு வந்துள்ள பழமொழி. திருமகளேயாயினும் நெடுநாள்

உடனுறைதல் இன்னாமைக்கே காரணமாகும் என்பது பொருளாம். ஆதலால், எவ்வகை மேம்பட்டோராயினும் உடனுறைதலால் கைப்பும் நீங்கிவாழ்தலால் இன்பமும் தோன்றல் உலகியற்கையாம் என்பதை உணர்த்துகின்றது. பழமொழியும் வெண்பாக் கருத்தும் ஒற்றுமையுற்று நிற்றல் காண்க.

இனி, நண்பராய் ஒழுகுவோர்மாட்டுக் கட்டாயம் இருக்கவேண்டிய சிறந்த ஒரு குணத்தை, ஒரு வெண்பா சிறக்க எடுத்துக் காட்டுகின்றது.

தந்தீமை இல்லாதார் நட்டவர் தீமையையும்

எந்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்

பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!!

ஒருவர் பொறைஇருவர் நட்பு.

"ஒருவர் பொறை இருவர் நட்பு" என்பது ஈண்டு வந்துள்ள பழமொழி. நண்பராய் ஒழுகுவோர் இருவருள் ஒருவர்மாட்டாயினும் பிழைபொறுக்கும் குணம் இருந்தாலன்றி அவர் நட்பு நெடிது நில்லாது என்பது இதன் பொருள். சிறந்த உலகியல் அறிவாம் இத் தன்மையை உலகில் காண்கிறோமன்றே? தனக்கு உரிய நண்பினன் செய்த பிழையாதலின், அப்பிழையைத் தன் பிழையாகவே கருதி அமைக எனக் கூறிய திறத்தைக் காண்க.

இனி, ஒருவர் ஒவ்வொருகால் பொருள்முட்டுப்பாட்டால் இடர் உறுவராயினும், அக் குறையைப் புறத்தார்க்குக் காட்டாமல், பிறர் மதிக்குமாறு தம் புறத்தோற்றத்தைப் பொலியக் காட்டி ஒழுகுக என அறிவுறுக்கின்றது ஒரு வெண்பா :

அகத்தால் அறிவு பெரிதாயக் கண்ணும்

புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்

படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை

உண்டி வினவுவார் இல்.

"உடுத்தாரை உண்டி வினவுவார் இல்" என்பது பழமொழி. சிறக்க உடுத்துப் பொலிவாரைக் காண்போர்

அவர்மாட்டுப் பெருமதிப்புக் கொள்வரே யன்றி, அவரைப் பசியும் வறுமையும், உடையராகக் கருதி உணவிட நினைக்க மாட்டார்கள். இஃது உலக இயல்பாம் : இப்பழமொழிக்கு ஒத்த பொருளையே இதன் முதல் இரண்டடிகளிலும் வைத்தார். இவ்வெண்பாக்களால் ஆசிரியர் பழமொழிகளையே முதலில் மனத்துக்கொண்டு, அவற்றோ டியையத்தக்க சிறந்த கருத்துக்களையே வெண்பாக்களில் வைத்து நூலியற்றிய திறம் தெரிகிறதன்றே!!

இனிப் பண்டை வரலாற்று நிகழ்ச்சிகள் பல இந்நூலகத்தே சிற்சில இடங்களில் குறிக்கப்படுகின்றன. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், மனுநீதி கண்ட சோழன், பொற்கைப் பாண்டியன், பாரி, பேகன், பாரிமகள், கரிகால்சோழன், சேரன் செங்குட்டுவன் என்போரைப்பற்றிய செய்திகள் சில குறிக்கப்படுகின்றன.

தூங்கும் எயிலும் தொலைத்தலால் (155)

கறவைக்கன் (று)ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (242)

தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் (76)

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (74)

பாரி மடமகள் பாண்மகற்கு ... நல்கினாள் (381)

நரை முடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் (6)

சுடப்பட்(டு) உயிர்உய்ந்த சோழன் மகனும் (239)

அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (380)

என வருமிடங்களில் காண்க. மேலும் இராமாயணபாரதக் கதைக் குறிப்புக்களும் சில செய்யுட்களில் குறிக்கப்படுகின்றன.

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து (257)

அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (234)

பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா (356)

என வருமிடங்களில் காண்க. மாவலி (183) வாமனன் (177) மதுகைடவர் (301) என்போரைப்பற்றிய புராணக் குறிப்புக்களும் இந் நூலகத்தே குறிக்கப்படுகின்றன.

இனி, அக்காலச் சமண் சமயத்தவர்கள், பழமொழிகளைப் பெரிதும் போற்றிக் கையாண்டார்கள் எனக் கருதற்குச் சில செய்திகள் இடந் தருவனவாகக் காணப்படுகின்றன. இப்பழமொழி நானூறு சமண்சமயப் பெரும்புலவோரான முன்றுறையரையனாரால் இயற்றப்பட்டதென்பது வெளிப்படை. நீதிநூல்களுள் திருக்குறளுக்கு அடுத்தபடியாக எண்ணப்படும் நாலடிநானூறு பல சமண்சமயப் பெரும்புலவோரால் இயற்றப்பட்டதென்பதே பல்லோரின் துணிபாயிருக்கின்றது. மற்றை நூல்களைவிட அந் நாலடி நானூறு, பழமொழிகளைப் போற்றிக் கையாண்டிருக்கும் தன்மை ஈண்டு நினைத்தற்குரியதாகின்றது, நாலடி நானூற்றில்,

ஒருவர் பொறை இருவர் நட்பு,

கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு,

தட்டாமற் செல்லா(து) உளி,

கருநரைமேற்சூடேபோற் றோன்றும்

என இங்ஙனம் பல பழமொழிகள் வந்துள்ளன. இவை இந் நூலுள்ளும் காணப்படுவனவே.

இனிச், சமண்சமயத்தைச் சார்ந்து மீண்ட நாவுக்கரசர் திருவாரூர்ப் பதிகம் ஒன்றுள், ஒவ்வொரு செய்யுளின் ஈற்றிலும் ஒவ்வொரு பழமொழி அமையப் பாடியிருப்பதை நோக்கவும் சமண்சமயத்தவர் பழமொழிகளைப் போற்றிக் கையாளு மியற்கையையே நினைக்கச் செய்கிறது.

கனிஇருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே,

முயல்விட்டுக் காக்கைப்பின் போன ஆறே,

அறம்இருக்க மறம்விலைக்குக் கொண்ட ஆறே

என இங்ஙனம் வருகின்றன பத்துப் பழமொழிகளும்.

பழமொழிகளை எடுத்தாளுதல் யாவர்க்கும் இயல்பாயினும், நாலடி நானூறோடு மற்ற நூல்களை வைத்து ஒப்பு நோக்க நாலடி நானூற்றில் பழமொழிகள் சிறப்பாக

எடுத்து ஆளப்பட்டிருப்பதும், இப்பழமொழி நானூற்றுப் பழமொழிகளோடு அவை தொடர்புற்று நிற்பதும் தெளிய உணரப்படும். இவ்விரு நூலும் ஏறக்குறைய ஒருகாலத் தனவே எனத் துணியவும் இடம் ஏற்படுகிறது.

இத்தகைய சிறந்த பழமொழி நானூறு என்னும் நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்று உண்டு. அட்டாவதானம் சுப்பராயச் செட்டியார் சில பாட்டுகட்குமட்டும் உரை எழுதி மூலத்தோடு அச்சிட்டு வெளிப்படுத்திய பதிப்பும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் முதல் இருநூறு பாட்டுகட்குமட்டும் உரை எழுதி இரண்டு பகுதிகளாக அச்சிட்ட பதிப்பும் உண்டு. செல்வக்கேசவராய முதலியார் பதிப்பு, பால் இயல் பாகுபாட்டுடன் பதவுரையும் பிறவும் சேர்த்து வெளியிடப்பட்டதாகும். யாம் வெளியிடும் இவ்வுரைநூல் சிறந்த பதவுரையுடனும், விளக்கவுரையுடனும், பழமொழிகளை எடுத்துக்காட்டி விளக்க முறுத்திக்கொண்டு செல்லலின், இவ்வகை உரை நூல் இச்சிறந்த பழமொழி நானூற்றுக்கு வேண்டப்படுவதாயிற்று. இவ்வுரையினை இயற்றியவர் புலவர் திரு, ம. இராசமாணிக்கம் பிள்ளை அவர்களாவர். இத்துணைச் சிறந்த பழமொழி நானூற்றை இவ்விளக்கவுரையுடன் தமிழ்நாடு ஏற்றுப் பெரும்பயன் அடையுமென்று நம்புகிறோம்.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழமொழி நானூறு

தற்சிறப்புப்பாயிரம்

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்

பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா

முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்

இன்றுறை வெண்பா இவை.

(சொற்பொருள்.) பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி - அசோக மரத்து நீழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு - பழைய பழமொழிகள் நானூறுந் தழுவி, முன்றுறை மன்னன் - முன்றுறை யரசர், இன்துறை வெண்பா இவை - இனிய பொருட்டுறைகள் அமைந்த வெண்பாக்களாகிய இந்நூற் பாட்டுக்களின், நான்கடியும் இனிதா(க)- நான்கு அடிகளையும் சுவைதோன்ற, செய்தமைத்தான் -யாத்தமைத்தார்.

(கருத்து.) இறைவனை வணங்கி,இப் பழமொழி நானூறும் பாடப் பெற்றன.

(விளக்கம்.) பிண்டியின் நீழற் பெருமானை வழுத்துவதால் ஆசிரியர் சைன சமயத்தினர் என்பது தெளிவு. பண்டைப் பழமொழிகொண்டு என்றது, முன்பு உலக வழக்கில் வழங்கி வந்த பழமொழிகளின் கருத்துக்களைத் தழுவி என்பதற்கு. ‘இவை நான்கடியும் செய்தமைத்தான்' என்று கூட்டிக்கொள்க; இனிய பொருட்டுறைகளாவன : அறம், பொருள், இன்பம், வீடு என்றவற்றின் கூறுபாடுகள். இந்நூலாசிரியரான முன்றுறையரையனாரே இப்பாயிரமும் இயற்றினா ரென்பாரு முளர்.

கடவுள் வணக்கம்

அரிதவித்(து) ஆசின்(று) உணர்ந்தவன் பாதம்

விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்(து)

உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்

பெரியதன் ஆவி பெரிது.

(சொ-ள்.) அரிது அவித்து - முக்குற்றங்களையும் அருமையாகக் கெடுத்தலான், ஆசு இன்று - குற்றமின்றி, உணர்ந்தவன் பாதம் - முற்ற அறிந்த கடவுளின் திருவடிகளையே, விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து - அகன்ற கடலால் சுற்றப்பட்ட அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில், உரியதனிற்கண்டு - உரிமைப் பொருளைப் போலக் கருதி, உணர்ந்தார் ஓக்கமே - அறிந்தவர்களது உயர்வே, பெரியதன் ஆவிபோல பெரிது - பேருடம்பினையுடைய ஆவியைப் போன்று பெரியது.

(க-து.) கடவுளின் திருவடிகளைஉரிமையாக வணங்கினார்களது உயர்வே மிகச் சிறந்தது.

(வி-ம்.) முக்குற்றங்கள் : - காமம், வெகுளி, மயக்கம், கெடுத்தல் அருமைதோன்ற அரிதவித்து என்றார். குற்றமற உணர்தலாவது - ஐயந்திரிபின்றி அறிதல். பெரிது : குறிப்பு வினைமுற்று. முக்குற்றங்களையும் கெடுத்தாலன்றிக் குற்றமற உணரலாகாமையின் அவித்து என்பது ஏதுப் பொருட்கண் வந்த வினையெச்சம். பெரிய உடம்பின்கண் உள்ள ஆவி பெரியதாய்ப் பரவியிருக்கும். கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப் பெரியதன் ஆவி என்றாரேனும், பெரியதன் ஆவிபோல ஓக்கமே பெரிது என்பது கருத்தாகக் கொள்க. பின் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். ‘பெரியதன் ஆவி பெரிது' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

நூல்

1.கல்வி

1. ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்

போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்

சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை

மரம்போக்கிக் கூலிகொண் டார்.

(சொ-ள்.) ஆற்றச் சுரம் போக்கி - மிகவும் வழியைக் கடக்கவிட்டு, உல்குகொண்டார் இல்லை - தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை, மரம்போக்கிக் கூலிகொண்டார் இல்லை - ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை. (அவைபோல), ஆற்றும் இளமைக்கண் - கல்வியைக் கற்றற்குரிய இளமையில், கற்கலான் - கல்லாதவன், மூப்பின்கண் போற்றும் - முதுமையின்கண் கற்று வல்லவனாவான், எனவும் புணருமோ என்று சொல்லுதலும் கூடுமோ?இல்லை.

(க-து.) கற்றற்குரிய இளமைப் பருவங் கழிவதற்கு முன்னேகல்வி கற்கவேண்டும்.

(வி-ம்.) மரம், தன்னாற் சமைந்த ஓடத்தின்மேல் நிற்றலால் ஆகுபெயர். ஆற்றுதல் - செய்தல். கற்றலும் ஒரு செயலாதலால் 'ஆற்றும்' எனவும், அதற்குரிய காலம் இளமையே என 'ஆற்றும் இளமைக்கண்' எனவும் கூறப்பட்டது. கற்கலான் :எதிர்மறை வினைப்பெயர்.

(1) 'சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை.' (2) 'மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை' - இவை இப் பாட்டில் வந்த பழமொழிகள். 'தும்பைவிட்டு வாலைப் பிடியாதே' என்பது இவற்றையொத்த பழமொழியாய் இக்காலத்து வழங்கி வருகின்றது.

(1)

2. சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்

கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி

உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்

கற்றொறுந்தான் கல்லாத வாறு.

(சொ-ள்.) சொல்தொறும் சோர்வுபடுதலால் - (கற்றார் முன்பு) ஒன்றைச் சொல்லுந்தோறும் குற்றம் உண்டாதலால்,

சோர்வின்றி - மனத்தளர்வின்றி, கல்தொறும் கல்லாதேன் என்று - கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி, வழியிரங்கி - கல்லா தொழிந்த நாட்களுக்கு வருந்தி, உற்று ஒன்று சிந்தித்து - மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து; உழன்று ஒன்று அறியுமேல் - வருந்தி அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின், கல்தொறும் - பின்னும் நூல்களைக் கற்குந்தோறும், தான் கல்லாதவாறு - தான்கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவன்.

(க-து.) படிக்குந்தோறும் அறியாதவனாகநினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.

(வி-ம்.) வழியிரங்குதல் - ஓர் இன்பத்தை அடையும் பொழுது அங்ஙனம் அடையாது நின்ற நாளுக்கு வருந்துதல், சோம்பலின்றி அறியாதவனாக மதித்து ஆராயவே இந்த அறிவு தோன்றும். அது தோன்றுமாதலால் மேலும் மேலும் கற்றலான ஊக்கம் பிறக்கும். அதனான் மிகுந்த இன்பம் பெறலாம். சிறந்த பொருள்களை அறியும் அருமை நோக்கியே ஆசிரியர் 'உற்று ஒன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேல்' என அறியும் அருமைப்பாடு விளக்கினார்.

(2)

3. விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்

துளக்கம்இன்(று) என்றனைத்தும் தூக்கி விளக்கு

மருள்படுவ தாயின் மலைநாட என்னை

பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.

(சொ-ள்.) மலைநாட - மலைநாட்டையுடையவனே, விளக்கு - விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை, விலைகொடுத்துக் கோடல் - விலைப்பணம் கொடுத்துக் கொள்வது, விளக்கு துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி - விளக்கினால் பொருள் வேறுபாடு இல்லை என்று விளக்கின் தன்மை முழுமையும் ஆராய்ந்தேயாகும், விளக்கு மருள்படுவதாயின் - விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்யின், என்னை - பொருள்கொடுத்துப் பெற்ற அதனால் அவர்க்கு வரும் பயன் யாது? (ஆதலால்), பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள் - பொருளைக்கொடுத்து இருளைக் கொள்ளார்.

(க-து.) ஞான நூல்களைக் கற்றல் வேண்டும்.

(வி-ம்.) விளக்கு - உண்மை நிலையை விளக்கிக் காட்டுதலின் இப்பெயர் பெற்றது. துளக்கம் - அசைவு; அஃதாவது பொருள் நிலை வேறுபாடு.

'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'

என்ற புறநானூற் றடிகளும் ‘ஆசிரியனை வழிபட்டுப் பொருள் கொடுத்துக் கற்றல் நன்று' என்பதை வலியுறுத்துகின்றன. குறித்தபொருள் மறைந்து நிற்க வேறுபொருள் கூறப்பட்டமையின் இச் செய்யுள் ஒட்டு அணியைச் சேர்ந்ததாகும். விளக்கு என்றமையால் பிறப்பின் தன்மையை விளக்கக் கூடிய ஞான நூல் குறித்த பொருளாகக் கொள்ளப்பட்டது. 'பொருளைக் கொடுத்து இருளைக் கொள்ளார்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(3)

4. ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு

வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவ தில்.

(சொ-ள்.) ஆற்றவும் கற்றார் அறிவுடையார் - மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார், அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுக ளில்லை, அந்நாடு வேற்று நாடாகா - அந்த நாடுகள் அயல் நாடுக ளாகா, தமவேயாம் - அவ்வறிவுடையோர் நாடுகளேயாம், ஆயினால் - அங்ஙனமானால், ஆற்று உணா வேண்டுவது இல் - வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை.

(க-து.) கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம்சிறப்பு.

(வி-ம்.) 'அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்' ஆதலான் செல்லுகின்ற இடந்தோறும் ஆண்டுள்ளோர்களால் வரவேற்கப்பட்டு வேண்டிய நலனை வேண்டியாங்கு எய்துவாராதலின், வழியிடையமுது வேண்டுவதில்லை யென்றார். கற்கலான நூல்களை மிகுதியாகக் கற்றவர்களையே அறிவுடையா ரென்றார்.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5. உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்

கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை

முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்

கற்றலிற் கேட்டலே நன்று.

(சொ-ள்.) உணற்கு இனிய இன்னீர் - குடித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர், பிறிது உழி இல் என்னும் - வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும், கிணற்று அகத்துத் தேரை போல் - கிணற்றினுள்ளே வாழும் தவளையைப்போல், ஆகார் - தாமுங் கருதாமல், கணக்கினை - நூல்களை, முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின் - நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும், கேட்டலே நன்று - (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று. (கற்றலிற் கேட்டலே இனிது.)

(வி-ம்.) தேரைபோ லாதலாவது தாம் விரும்பிச் செய்யும் கற்றதனாலன்றிக் கேட்டறிதலினாற் பயனில்லை என்று கருதுதல். தாம் பல நாளுங் கற்றறிந்ததில் தளர்வு வந்துழி, அறிஞர்வாய்க்கேட்ட கேள்வி ஊன்றுகோல் போல உதவுமாதலின், கேட்டலே நன்று என்றார். வருந்திக் கற்றலினும் கேட்டல் மிக இனிது என்பார், 'முற்றப் பகலும் முனியாது இனிதோதிக் கற்றலின்' என்று கற்றலின் அருமையை விளக்கினார். கணக்கு - வரையறை. மக்கள் நடத்தவேண்டிய வாழ்க்கையை வரையறை செய்தலின் நூல்கள் கணக்கு என்ற பெயரைப் பெற்றன. கணக்கினை அறிந்தோர் கணக்காயர் எனப்படுவார்.

(5)

6. உரைமுடிவு காணான் இளமையோன் என்ற

நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்

சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை

கல்லாமல் பாகம் படும்.

(சொ-ள்.) உரைமுடிவு காணான் - வழக்கினது முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன், இளமையோன் - சிறுவயதினன், என்ற - என்றிகழ்ந்த, நரை முதுமக்கள் உவப்ப - நரைமயிருள்ள முதியோர் இருவரும் மகிழும்படி, நரை முடித்து - நரைமயிரை முடியின்கண் முடித்து வந்து, சொல்லால் முறைசெய்தான் சோழன் - (அவர்கள் கூறிய) சொற்களைக் கொண்டே நீதி கூறினான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன், குலவிச்சை கல்லாமல் பாகம் படும் - தத்தம் குலத்திற்குரிய அறிவு அந்நூல்களைக் கல்லாமலே இனிதுஅமையும்.

(க-து.) குலவித்தை கல்லாமலே அமையும்.

(வி-ம்.) உரை - சொல். இருதிறத்தாரும் உரைத்தலின் உரை, வழக்கு எனப்பட்டது. குற்றமுடையாராய்த் தண்டிக்கப்பட்டோரும், அரசன் வழக்கினை ஆராய்ந்து நீதி கூறி அறிவு

கொளுத்தும் முறையைக் கண்டு, மனச் செம்மை யுடையராய் மகிழ்வெய்துவார்கள் என்பார், 'நரைமுதுமக்கள் (இருவரும்) உவப்ப முறைசெய்தான்' என்றார். சாட்சிகள் முதலிய பிற காரணங்கள் கொண்டு ஒரு வழக்கினை முடிவு செய்தலினும் வழக்குடையோர் சொற்களைக் கொண்டே தீர்ப்புக் கூறுதல் மிகவும் நுண்ணுணர்விற்று. முறைசெய்தல் - ஒருபாற் கோடாது கோல் ஓச்சுதல். (1) உரைமுடிவுகாணான், (2) இளமையோன் என்ற இரண்டு குறைகளையும், (1) சொல்லாலும், (2) நரை முடித்தலாலும் நிறைவு செய்தான். 'குலவித்தை கல்லாமலே உளவாம்' என்பது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

(6)

7. புலமிக் கவரைப் புலமை தெரிதல்

புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க

பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே

பாம்பறியும் பாம்பின கால்.

(சொ-ள்.) நலமிக்க பூ புனல் ஊர - நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே!, பாம்பின கால் பாம்பறியும் - பாம்பினுடைய கால்களைத் தமக்கு இனமாகிய பாம்புகளே அறியுந் தன்மையுடையன. அதுபோல், புலமிக்கவரைப் புலமை தெரிதல் - அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் தெரிந்துகொள்ளும் திறம், புலம் மிக்கவர்க்கே புலனாம் - (அவர்கள் போன்ற) அறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும், பொதுமக்கட்கு ஆகாது - கல்வியறிவில்லாதவர்களுக்கு விளங்காது.

(க-து.) கற்றோர் பெருமையைக் கற்றோர்அறிவார்.

(வி-ம்.) பொது, சிறப்பின்மைக் கருத்தில் வந்தது. பாம்பின : அகரம் ஆறாவதன் பன்மை. 'பாம்பின் கால்களைப் பாம்புகளே அறியும்.' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(7)

8. நல்லார் நலத்தை உணரின் அவரினும்

நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல

மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்

அயிலாலே போழ்ப அயில்.

(சொ-ள்.) நல்ல மயில் ஆடும் மாமலை வெற்ப - கண்களுக்கினிய மயில்கள் (தோகையை விரித்து ஓகையொடு) நடமாடும் சிறந்த மலைநாட்டை யுடையவனே!, என்றும் - எக்காலத்தும். அயில் அயிலாலே போழ்ப -இரும்பைக் கூரிய இரும்பினாலேயே பிளப்பர் -

(அதுபோல), நல்லார் நலத்தை உணரின் - கற்றவாறமைந்த நற்குணமுடையோர்களது அறிவின் நன்மையை அறிவதாயின், அவரினும் நல்லார் உணர்ப- அவர்களைவிடக் கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிஞர்களே அதனை அறிவார்கள், பிறருணரார் - கல்வி ஒன்றே உடையஒத்தாரும் அவையின்றி இழிந்தாரும் அறியமாட்டார்கள்.

(க-து.) நல்லார் அறிவினை அவரினும்நல்லாரே அறிவர்.

(வி-ம்.) இரும்பினை அதையொத்த கூர்மையற்ற வேறோர் இரும்பு கொண்டு பிளத்த லியலாதாகலின் நல்லார் நலத்தையும் அவரை ஒத்தோரால் அறிந்துகொள்ளக்கூடாது. ஆகவே பிறர் என்பது கல்வி ஒழுக்கம் என்ற இரண்டிலும் ஒன்றே உடையாரும் இரண்டு மின்றி இழிந்தாரு மாவர்.நல்லார் நலத்தை அவரினும் நல்லார் அறிவர்.

'இரும்பை இரும்புகொண்டு துணித்தல் வேண்டும்.' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(8)

9. கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்.

(சொ-ள்.) அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை யுடையவனே!, நிறைகுடம் நீர்தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித் தலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்குரிய செயல்களாம். அறியாதார் - கற்றதோடமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

(க-து.) கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்துபேசமாட்டார்கள்.

(வி-ம்.) 'அறியாதார்' என்றதனாலும் உண்மையை ஓராதவர்க்குள்ள மறதி வயப்பட்டு 'பொச்சாந்து புகழ்ந்துரைப்பர்' என்றதனாலும் நூல்களை மட்டும் கற்றுக் குறை குடத்தை ஒத்தனர் என்பது பெறப்பட்டது. முன்னும் ஒருகால் தன்னைப்

புகழ்ந்து கூறி மறதி வயப்பட்டு மீண்டும் மீண்டும் புகழ்ந்து உரைப்பர் என்று உரை கூறினும் ஆம். 'நிறை குடம் நீர்தளும் பல் இல்லை' - இது செய்யுளிற் கண்ட பழமொழி.

(9)

10. விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்

கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்

பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்

மதிப்புறத்துப் பட்ட மறு.

(சொ-ள்.) விதிப்பட்ட நூலுணர்ந்து - நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து, வேற்றுமையில்லார் - நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்விற்கும் வேறுபாடு இல்லாதவர்கள், கதிப்பவர் நூலினைக் கையிகந்தாராகி - மாறுபட்டு எழுந்தோர்களுடைய நூலின் கொள்கைகளைத் தம் வன்மையால் வென்று, பதிப்பட வாழ்வார் - தலைமைப் பேறுற வாழ்கின்ற அறிஞர்கள், பழியாய செய்தல் - இகழ்தற்குரிய செயல்களைச் செய்தல், மதிப்புறத்துப் பட்ட மறு - திங்களின்கண் இலங்கும் களங்கம் போல் விளங்கித்தோன்றும்.

(க-து.) அறிவுடையோர் மாசுற்ற செயல்களைச் செய்வாராயின் அதுதேசுற்றுத் தோன்றும்.

(வி-ம்.) மதிப்புறம், புறம் : ஏழனுருபு. மதியின் புறத்தில் ஊர்கோளென வளைந்து விளங்கித் தோன்றும் களங்கம் போல அறிவுடையோர் செய்த பழியாயின அவரைச் சூழ்ந்து நின்று விளங்கும் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். இதற்கு மதிப்புறம், மதியின் ஓரம் என்று பொருள் கொள்க. 'மதிப்புறத்துப் பட்ட மறு' - இஃது இச்செய்யுளின்கண் எடுத்தாண்ட பழமொழி.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பழமொழிகள், இது வரை கேள்விப்படாத நல்ல பழமொழிகள்.

இணைப்பிற்கு நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி, நானும் சில பழமொழிகள் கோள்விப்படவில்லை, இனியாவது தெரிந்து வைத்திருப்பம் படிப்பதற்கு வயது ஏது, 60 வயதில் Phd செய்தவனும் இருக்கிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார்

ஊரில் இருக்கும் அத்தனை பழமொழிகளையும் இணைத்துவிட்டு இருந்தால் இன்னும் இணையுங்கள் என்கின்றீர்கள்

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார்

ஊரில் இருக்கும் அத்தனை பழமொழிகளையும் இணைத்துவிட்டு இருந்தால் இன்னும் இணையுங்கள் என்கின்றீர்கள்

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

நன்றி வாத்தியார் பகிர்வுக்கு, ஆனா இதில் இல்லாத இன்னும் பல பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகள் வட்டாரத்திற்கு வட்டாரம் எமக்கு தெரியாமல் இருக்கு,

எனக்கு தெரிச்ச சில எழுதினால் நிழலிக்கு BP எகிறிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2.கல்லாதார்

25]
11. கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்

தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்

அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை

நாவல்கீழ்ப் பெற்ற கனி.

(சொ-ள்.) கற்றானும் கற்றார் வாய்க் கேட்டானும் - நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும், இல்லாதார் - கல்வி கேள்வி இல்லாதவர்கள், தெற்ற உணரார்

பொருள்களை - பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள், அறிவில்லான் மெய்தலைப் பாடு - கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல், எற்றேல் - எத்தன்மைத் தெனில், நாவல்கீழ் பெற்ற கனி - நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றி, பிறிதில்லை -கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.

(க-து.) கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களைஅறியமாட்டார்கள்.

(வி-ம்.) 'கற்றானும், கேட்டானும்' என்ற இடங்களில் ஆயினும் என்பது ஆனும் எனக் குறைந்து நின்றது. கல்வி கேள்விகளில்லாதவன் உண்மைப் பொருள்களை அறிதல் அருமை என்பதற்கு, 'நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது உவமையாகக் கூறப்பட்டது. திருவள்ளுவனாரும் 'தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்' என்று அறிதல் அருமையை விளக்கினார். 'நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(1)

25]
12. கல்லாதான் கண்டகழிநுட்பம் கற்றார்முன்

சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்

வினாமுந் துறாத உரையில்லை இல்லை

கனாமுந் துறாத வினை.

(சொ-ள்.) நல்லாய் - நற்குணம் உடைய பெண்ணே!, கல்லாதான் கண்ட கழிநுட்பம் - நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள், கற்றார் முன் சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது அப்பொருள் வலியிழத்தலால், வினா முந்துறாத உரையில்லை - வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனா முந்துறாதவினை இல்லை - கனாவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை. (கல்வியின்றி விளங்கும் நுண்பொருளும்இல்லை.)

(க-து.) கல்லாதான் கண்ட நுண்பொருள்விளங்குதல் இல்லை.

(வி-ம்.) நூலறிவு இன்மையின் ஆராய்ந்தறிந்த பொருள் இல்லையென்பார், 'கண்ட கழி நுட்பம்' என்றார். கழி நுட்பம் என்பதற்குக் கல்லாதான் மிகுந்த நுண்பொருளாகத் தான் நினைந்திருக்கின்ற கழிநுட்பம் என்று உரைகூறினும் அமையும். குறித்த பொருளை மறைத்து வேறு பொருள்களைக்கிளத்தலின

இறுதி இரண்டடிகளும் ஒட்டு அணியின்பாற் பட்டதாகும். 'வினா முந்துறாத விடையில்லை,' 'கனா முந்துறாத வினையில்லை' - இவ்விரண்டும் இச் செய்யுளிற் கண்ட பழமொழிகள்.

(2)

25]
13. கல்லாதான் கண்டகழிநுட்பம் காட்டரிதால்

நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்

சொல்லால் வணக்கி வெகுண்(டு)அடு கிற்பார்க்கும்

சொல்லாக்கால் சொல்லுவது இல்.

(சொ-ள்.) கல்லாதான் கண்ட கழிநுட்பம் - நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையுற அறிந்ததாக நினைக்கும் மிக்க நுண்பொருளை, காட்டரிதால் - பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆனபின்), ஒருவன் - கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன், நல்லேம் யாம் என்று நன்கு மதித்தல் என் - நல்ல பொருள் விளக்கம் உடையேம் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எக்காரணம் பற்றி?, சொல்லால் வணக்கி வெகுண்டு அடுகிற்பார்க்கும் - தமது சொற்களால் தவத்திற்குப் பகையாயினாரைப் பணியச்செய்து, பணியாராயின் சினந்து கொல்லுகின்ற முனிவர்களுக்கும், சொல்லாக்கால் - தாங் கருதியதை எடுத்துச்சொல்ல முடியாத விடத்து, சொல்லுவது இல் -தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இலவாம்.

(க-து.) கற்றார்க்குச் சொல்வன்மை இன்றியமையாது வேண்டப்படும் பொருள்.

(வி-ம்.) ‘ஒன்னார்த் தெறலும்' என்றபடி தீயோரை வணக்குதல், வெகுண்டு அடுதல் முதலியன தவஞ்செய்வார் தம் சொல்லாற்றலால் நிகழ்த்துவன. சொல்வன்மை யில்லாராயின், தவத்தினது ஆற்றலாகிய சாபஅருள் அவருக்கு இல்லை யென்பதாம். ‘முற்றத்துறந்த முனிவர்கட்கும் சொற்றிறம் வேண்டும்'இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(3)

25]
14. கல்வியான் ஆய கழிநுட்பம் கல்லார்முன்

சொல்லிய நல்லவுந் தீயவாம் - எல்லாம்

இவர்வரை நாட! தமரையில் லார்க்கு

நகரமும் காடுபோன் றாங்கு.

(சொ-ள்.) எல்லாம் இவர் வரை நாட - எல்லாப் பொருள்களாலும் விரும்பப்படும் மலைநாட்டை உடையவனே!, தமரை

இல்லார்க்கு - (முன்னர்ப் பெற்றிருந்து பின்னர்) உறவினரை இல்லார்க்கு, நகரமும் காடு போன்றாங்கு - நகரமும் காட்டை ஒத்துத் துன்பம் பயத்தல்போல, கல்வியான் ஆய கழி நுட்பம் - நூல்களைக் கற்றதனாலாய மிக்க நுண்பொருள்களுள், கல்லார் முன் சொல்லிய நல்லவும் தீயவாம் - நூல்களைக் கல்லார் முன்பு கூறிய நல்லனவும் பொருளற்றனவாகத் தீயவாய் முடியும்.

(க-து.) கற்றார், கல்லார் அவையின்கண்சிறந்த பொருள்களைக் கூறாதிருக்கக்கடவர்.

(வி-ம்.) தீயவாய் முடிதலாவது நுண்பொருள்கள் உள்ளன, அவையிலவாய் முடிதல்.ஆசிரியர் வள்ளுவனாரும்,

25]'அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்தங்கணத்தர்

அல்லார்முன் கோட்டி கொளல்'

என்று பயனற்றொழியு மென்பதையே குறித்தார். 'தமரையில்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு' என்பது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

(4)

25]
15. கல்லா தவரிடைக்கட்டுரையின் மிக்கதோர்

பொல்லாத(து) இல்லை ஒருவற்கு - நல்லாய்

இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை

ஒழுக்கத்தின் மிக்க உயர்வு.

(சொ-ள்.) நல்லாய் - நற்குணமுடைய பெண்ணே!, இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை - தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு இல்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை - தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு ஒருவற்கு இல்லை, (ஆகையால்), ஒருவற்கு - கல்வியறிவு உடைய ஒருவனுக்கு, கல்லாதவரிடை - நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக்கூறும்; கட்டுரையின் மிக்கதோர் பொல்லாதது இல்லை - கட்டுரையைப் பார்க்கிலும் தீமைதருஞ் செயல் பிறிதொன்றில்லை.

(க-து.) கற்றார் கட்டுரை, கல்லாதாரிடைப் பொல்லாதாகவே முடியும்.

(வி-ம்.) தீமையைத் தருதலாவது நல்லார் கூறும் சிறந்த அறிவுரைகள் யாவற்றையும் தீயோர் தீய செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வது.

25]'ஒழுக்கத்தின் எய்துவர்மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி'

என்றலின், ஒழுக்கத்தினும் இழுக்கத்தினும் உயர்வு இழிவு இல்லை என்றார். (1). 'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை' (2) 'ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை' - இவை இச் செய்யுளிற் கண்ட பழமொழிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25]
16. கற்(று)ஆற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்

சொல்தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்றெனின்

தானும் நடவான் முடவன் பிடிப்(பு)ஊணி

யானையோடு ஆடல் உறவு.

(சொ-ள்.) கல்லாதார் - அறியாதவர்கள், கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து - நூல்களைக் கற்று (அவைகளிற் கூறியபடி) செயலிற் செய்வாரைக் கோபமூட்டி, சொல்தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - சொற்களைக் கொழித்துக்கொண்டு (மன எழுச்சியால் அவரோடு மாறுகொண்டு) மிக்கு எழுதல், எற்று எனின் - எத்தன்மைத்தெனின், தானும் நடவான் முடவன் - தானும் நடக்கமுடியாதவனாகிய காறகூழையன், பிடிப்பு ஊணி - ஊன்றுகோலை ஊன்றி, யானையோடு ஆடல் உறவு -யானையோடு விளையாடல் உறுதலோடு ஒக்கும்.

(க-து.) கல்லார் கற்றாரோடு வாதஞ்செய்யின் அவமானம் அடைவர்.

(வி-ம்.) முடவன் உயிர் இழப்பான், கல்லார் அவமானம் அடைவர். தாற்றுதல் - கொழித்தல், ‘தாற்றுதல்' என்பது தாத்தல் என வழக்கில் வழங்கிவருகிறது. பிடிப்பு ஊணி - பற்றுக்கோடாக ஊன்றப்படுவது. (ஊன்றுகோல்) ஊன்றப்படுவது - ஊணி. இதுவழக்கில் ஊணுதல் என்று வழங்கப்படுகிறது.

'முடவன் பிடிப்பு ஊணி யானையோடாடல் உறவு -' இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

(6)

3.அவையறிதல்

25]
17. கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்

வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர் - வேட்கையால்

வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன

கொண்டு புகாஅர் அவை.

(சொ-ள்.) வேட்கையால் வண்டு வழிபடரும் வாள் கண்ணாய் - (காம) விருப்பினால் (கண்களைப்பெடை வண்டுகள் எனக் கருதி)

ஆண் வண்டுகள் பின் செல்லாநின்ற வாள்போலுங் கண்களையுடைய பெண்ணே!, வித்தகர் - அறிஞர், கேட்பாரை நாடி - தாம் கூறும் பொருள்களைக் கேட்கத்தக்காரைத் தேடி, கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை உரைப்பர் - தம்மால் கூறப்படும் பொருளிடத்து அவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து சொல்லுவார்கள்,அவை தோற்பன கொண்டு புகார்-அவையின்கண் தோல்வியடைதற்குரியனவற்றைக் கொண்டு போகார்.

(க-து.) கற்றார் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுவர்.

(வி-ம்.)'நாடி' என்றதனால் அறிவாரைத் தேடி உரைத்தல் வித்தகர்க்கு இயல்பு என்பது பெறப்பட்டது.கேட்பாரையும் கிளக்கப்படும் பொருட்கண் வேட்கையையும் அறிந்து கூறுதலின் வித்தகர் என்றார். தோற்பன - அவையிலுள்ளார் விரும்பாத பொருள்கள். தாம் விரும்பியவாறு, அப்பொருள்களை அவையிலுள்ளார் விரும்பாமையின் தோற்பதற்குரிய ஆயின.

18. ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு

25]
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா

பெருவரை நாட! சிறிதேனும் இன்னா(து)

இருவர் உடன்ஆடல் நாய்.

(சொ-ள்.) பெரு வரை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, இருவர் நாய் உடன் ஆடல் - (ஒரே காலத்தில்) இருவரும் ஒரு நாயைக்கொண்டு வேட்டை ஆடுதல், சிறிதேனும் - சிறிது காலமாயினும், இன்னாது - இனியது ஆகாது. (அதுபோல), ஒருவர் உரைப்ப - (மாறுபடுவோர் இருவருள்) ஒருவர் இப்பொருள் இத் தன்மைத்தென்று கூற, உரைத்தால் - மற்றொருவரும் இத் தன்மைத்தென்று கூறினால், அதுகொண்டு - அப்பொருளைக்கொண்டு, இருவர் ஆவாரும் எதிர் மொழியல் - மாறுபடுவோர் இருவரும் (ஒரே காலத்தில்) வாதஞ்செய்தால், பாலா - தகுதியுடையதாகுமா?ஆகாது.

(க-து.) வாதம் செய்வோர் ஒருவர்பின் ஒருவராகப் பேசுதல்வேண்டும்.

(வி-ம்.) வேட்டம் விரும்பிப் புகுந்த இருவர் இரண்டு நாயைக்கொண்டு வேட்டம் புரிந்தாலன்றித் தாம் நினைத்த வேட்டம் முடிவு பெறாது. வேட்டம் முடிவு பெறாமையின் அஃது இன்னாதது ஆயிற்று. வாதஞ் செய்வோர் இருவரும் தங்கருத்தை

ஒருவர்பின் ஒருவராகக் கூறினாலன்றி அவர்கள் கொண்ட கருத்தை நிலைபெறச்செய்ய முடியாது.

'சிறிதேனும் இன்னாது இருவர் உடன் ஆடல் நாய்' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

(2)

25]
19. துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்

பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி

மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள்

கிழிந்தானை மூக்குப் பொதிவு.

(சொ-ள்.) இருவர் துன்னி தொடங்கியமாற்றத்தில் - வினவுவானும் விடை கொடுப்பானுமாகிய இருவரும் கூடிச் சொல்லத் தொடங்கிய வார்த்தையின்கண், பின்னை உரைக்கப்படற் பாலான் - பின்னாக விடைகூறத் தக்கவன், முன்னி மொழிந்தால் - வினாவறியாது முற்பட்டு ஒன்றனைக் கூறினால், மொழியறியான் - விடை கூறுதலறியாதவனாய் முடியும், கூறல் - வினாவிற்கு முன்னர் விடைகூறுதல், முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு - முந்தாள் கிழிந்துபுண்பட்டவனை அஃது அறியாது மூக்கை இழைகொண்டு கட்டுவதோடுஒக்கும்.

(க-து.) வினாவறிந்து விடை கூறுதல் வேண்டும்.

(வி-ம்.) முழந்தாள் கிழிந்தமை அறியாது மூக்கை இழைகொண்டு மூடியதுபோன்று வினாவின் தன்மையறியாது விடை கூறுதல் ஆகும். 'முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு' - இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20. கல்லாதும் கேளாதும் கற்றார் அவைநடுவண்

சொல்ஆடு வாரையும் அஞ்சற்பாற்று - எல்அருவி

பாய்வரை நாட! பரிசுஅழிந் தாரோடு

தேவரும் ஆற்றல் இலர்.

(சொ-ள்.) எல் அருவி பாய்வரை நாட - விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!, பரிசு அழிந்தாரோடு - பண்பு இல்லாதவர்களோடு, தேவரும் ஆற்றல் இலர் - தேவர்களும் ஒருசொல் கூறுதற்குக்கூட வலிமை யில்லாதவர்களாய் முடிவர். ஆகையால் கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண் சொல் ஆடுவாரையும் - நூல்களைக் கல்லாதும், கற்றாரிடம் கேளாதும் அறிஞர்களது அவையிடைச் சிலசொல் சொல்லுத லுடையாரையும், அஞ்சற்

பாற்று - (இவரோடு வாதாடின் நாம் தோற்போம் என்றெண்ணி) அஞ்சும் தகுதியைஉடையது.

(க-து.) கற்றார் கல்லாரோடு வாதாடுதல்கூடாது.

(வி-ம்.) பரிசு - பண்பு : அஃதாவது நற்பண்பு. தேவரும் கயவரும் தம்மை நியமிப்பாரின்றி விரும்பியவாறு செய்தொழுகுதலின் ஒப்பாராயினும், நன்மை தீமை அறியாராகிய கயவரின் அறிவாராகிய தேவர் இழிந்தவராதலின், கயவரோடு ஒருசொல் கூறுதற்குக்கூட ஆற்றல் இல்லாது போயினர். குறிப்பால் இகழ்ந்தவாறு. சொல்லாடுவாரையும் என்ற உம்மையால் கல்லாரையும், கேளாரையும் காண்டற்கும் அஞ்சவேண்டும் என்பது பெறப்பட்டது. 'பரிசழிந்தாரோடு தேவரும் ஆற்றல் இலர்' - இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

21. அகலம் உடைய அறி(வு)உடையார் நாப்பண்

புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்

வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ

பாண்சேரிப் பல்கிளக்கும் ஆறு.

(சொ-ள்.) அகலம் உடைய அறிவு உடையார் நாப்பண் - கல்வி கேள்விகளில் விரிவு உடைய இயற்கை அறிவினார் இடையில், புகல் அறியார் - நுழைதற்குத் தகுதியற்ற கயவர்கள், புக்கு - புகுந்து, அவர் தாமே இகலினால் வீண் சேர்ந்த புன்சொல் விளம்பல் - (தம் சொற்களை யாரும் விரும்பாமல் இருக்கவும்) தாமே மாறுபாட்டினால் வீணான பயனற்றவற்றைக் கூறுதல், பாண்சேரிபற்கிளக்கும் ஆறு அது அன்றோ - பாணர்கள் தெருவில் ஒருவன் வாய்திறந்து பாடுவதைப்போல அஃது ஆகும்அல்லவா!

(க-து.) கற்றாரிடைக் கல்லார் வீண்வார்த்தைகளைப் பேசாதொழிதல் வேண்டும்.

(வி-ம்.) பல்கிளத்தல் - வாய்திறந்து பாடுதல், அவர் இழிவு தோன்றப் பல்கிளத்தல் என்றார். 'பாண் சேரிப் பற்கிளக்கும் ஆறு' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

22. மானமும் நாணும் அறியார் மதிமயங்கி

ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து

ஞானம் வினாஅய் உரைத்தல், நகையாகும்

யானைப்பல் காண்பான் புகல்.

(சொ-ள்.) மானமும் நாணும் அறியார் - கல்லார் தம் மானமும் நாணும் அழிதலை அறியாராய், மதிமயங்கி - புத்தி மயக்கத்தை யடைந்து, ஞானம் அறிவார் இடைப்புக்கு - பல நூல்களையும் அறிவார் நடுவிற் புகுந்து, தாமிருந்து - அவர்களை ஒப்பத் தாமும் இருந்து, ஞானம் வினாய் உரைத்தல் - நூல்களை வினாவி உரைக்கப்புகுதல், யானை பல் காண்பான் புகல் - யானையைப் பல்பிடித்துப் பார்க்கப் புகுதல் போல், நகையாகும் - யாவர்க்கும் நகைதருஞ்செயலாகும்.

(க-து.) கற்றார் அறிவின் திறனைக் கல்லார் அறிய முயலுதல்நகைப்பிற் கிடனாம்.

(வி-ம்.) மானம் - தந்நிலையிற்றாழாமையும் தாழ்வு வந்துழி வாழாமையுமாம். நாணம் - தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையராந்தன்மை. ஞானம் - வீடுபயக்கும் உணர்வு - அவ்வுணர்வை நூல்கள் தருதலின் நூல்களுக்காயிற்று. ஞானம் : ஆகுபெயர். மதிமயங்கி எனவே ஞானம் அறியார் இடைப்புகுதலே அவர்க்கு இயல்பு என்பதாம். ஞானம் வினாவி உரைத்தலோடு அமையாது அவரோடு ஒப்ப வீற்றிருந்த செய்கை நகைப்பிற்கிடனாயிற்று. 'யானைப் பல் காண்பான் பகல்' என்பதும் ஒரு பாடம். 'பகல்' என்று கூறுதலிற் பொருட்சிறப்பு ஒன்று மின்மையின் 'புகல்' (புகுவதனோடொக்கும்) என்பதே பாடமாகக் கொள்ளப்பட்டது. (இது தி. சுப்பராயச் செட்டியார் கொண்ட பாடம்.) 'யானைப்பல் காண்பான் புகல்' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

23. அல்லவையுள் தோன்றி அலஅலைத்து வாழ்பவர்

நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் - கல்வி

அளவிறந்து மிக்கார் அறி(வு) எள்ளிக் கூறல்

மிள(கு) உளு உண்பான் புகல்.

(சொ-ள்.) அல்லவையுள் தோன்றி அல அலைத்து வாழ்பவர் - கல்வியறிவு இல்லாதார் அவையுள் முற்பட்டு (நல்லன) அல்லவற்றைக் கூறி (புல்லரை) வென்று வாழ்பவர், நல்லவையுள் புக்கிருந்து - கல்வியறிவு உடையார் அவையுள் தானே புகுந்து, நாவடங்க கல்வி அளவு இறந்து மிக்கார் அறிவு - பிறர் நாவடங்கும்படி கல்வியில் எல்லையின்றி அறிந்த அறிவுடையோர் அறிவினை, எள்ளிக்கூறல் - இகழ்ந்து கூறுதல், மிளகு உளுஉண்பான் புகல் - (சிறந்த உணவுகள் இருக்க) மிளகின் உளுவை (உண்ணப் புகுவதனோடு ஒக்கும்).

(க-து.) கல்லார் கற்றாரை இகழ்ந்து கூறின் தீமையைஅடைவர்.

(வி-ம்.) அல்லவையை அலைத்து வாழ்ந்த அத்துணிபு கொண்டு - நல்லவையையும் அலைத்து வாழ எண்ணுவராயின் மிளகின் உளுவை உண்டவன் அடையும் பயனை அடைவர்.

மிளகு, சாதிக்காய், ஏலக்காய் முதலியவற்றில் உள்ள உளுவைஉண்டவர் பிழைத்தல் அரிதென்பர்.

'மிளகு உளு உண்பான் புகல்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

24. நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்

புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்

புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில் லேற்றி

இடைக்கலத்து எய்து விடல்.

(சொ-ள்.) நல்லவை கண்டக்கால் நா சுருட்டி - கல்லார் கல்வி அறிவுடையோர் அவையைக் கண்ணுறுவராயின் தமது நாவினை மடக்கி, நன்றுணராப் புல்லவையுள் - நன்மை தீமை இன்ன தென்றறியாத புல்லர்கள் வாழும் அவையின்கண், தம்மைப் புகழ்ந்து உரைத்தல் - தம்மைத் தாமே இல்லன கூறிப் புகழ்ந்துரைத்தல், புல்லார் புடை தறுகண் அஞ்சுவான் - பகைவரிடத்துள்ள அஞ்சாமையைக் கண்டு பின்வாங்குகின்றவன், இல் உள் வில் ஏற்றி - வீட்டின் உள்ளே வில்லின்கண் அம்பை ஏற்றி, இடைக்கலத்து எய்து விடல் -கருங்கலங்களிடையே எய்வதனோடு ஒக்கும்.

(க-து.) கல்லார் தம்மினத்தாரிடையே தம்மைப் புகழ்ந்து கொள்வர்.

(வி-ம்.) நாச்சுருட்டி எனவே அவர்நாநீளம் உடையார் என்பது பெறப்பட்டது.

புல்லார் - பகைவர், தம்மைச் சேராதவர் என்பது பொருள். புல்லுதல் - தழுவுதல், தம்மைத் தழுவுதல். புல்லார் - தம்தைத் தழுவுதல் இல்லாதோர், பகைவர். 'இல்லுள் வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

25. நடலை இலராகி நன்(று) உணரார் ஆய

முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்

உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல்

கடலுளால் மாவடித் தற்று.

(சொ-ள்.) நடலை இலராகி நன்று உணரார் ஆய முடலை முழுமக்கள் - மனத்தின்கண் கவலை யிலராய் நன்மை தீமை அறியாதவராகிய மனவலியுள்ள கயவர்கள், மொய் கொள் அவையுள் - நெருங்கியுள்ள அவையில், உடலா ஒருவற்கு - அலைத்து வாழ்கின்ற கயவன் ஒருவனுக்கு, உறுதி உரைத்தல் - உயிர்க்குப் பயன்தரத் தக்கனவற்றைக் கூறுதல், கடலுள் மாவடித்தற்று - கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும்.

(க-து.) கயவற்கு உறுதிப்பொருள்களைக்கூறுதலாகாது.

(வி-ம்.) கன்னெஞ்சம் உடையார் என்பார் முடலை முழு மக்கள் என்றார். அவர் இழிவு தோன்ற 'மொய்கொள் அவை' என்றார். அவருக் குரைத்த உறுதிகள் யாவும் கமருள் உகுத்த அமுது எனப் பயன்படாது ஒழியும் என்பதாம். ஆல் : அசை. 'கடலுளால் மாவடித் தற்று' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4.அறிவுடைமை

26. அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்

பிறிதினால் மாண்ட(து) எவனாம் - பொறியின்

மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன

அணியெல்லாம் ஆடையின் பின்.

(சொ-ள்.) பொறியின் - சாணையாற் கழுவுதலையுடைய, மணி பொன்னும் - இரத்தினாபரணமும் பொன்னாபரணமும், சாந்தமும் மாலையும் இன்ன அணி எல்லாம் - கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும், ஆடையின் பின் - அழகுறச் செய்வதில் உடையின் பின்னேவைத்து எண்ணத்தக்கனவாம். ஆதலால், அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் - அறிவினாலாகிய பெருமை ஒருசிறிதும் பெறாத ஒருவன், பிறிதினால் மாண்டது எவனாம் - செல்வத்தைப் பெற்றதனால் மாட்சிமையுடையதனால் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்?

(க-து.) செல்வம் உடையோரினும் அறிவுடையாரேசிறந்தோர் ஆவர்.

(வி-ம்.) ஆடையில்லானை அணிகள் அழகுறச் செய்யாமை போல அறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது என்பதாம். பொறித்தல் - பொலிவுபெறச் செய்தல்; கலன்களைப் பொலிவு பெறச் செய்தலின் பொறி என்பது சாணை என்னும் பொருளதாயிற்று. செல்வம் இரண்டனுள் கல்விச் செல்வம் பிரிக்கப்பட்டமையின் பிறிதுஎன்பது செல்வம் என்னும் பொருளதாயிற்று.

'மணிபொன்னும் சாந்தமும்மாலையும் இன்ன

அணியெல்லாம் ஆடையின் பின்.'

இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(1)

27. ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண்(பு) ஒருவன் போல்கலார்

பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்

காய்கலா ஆகும் நிலா.

(சொ-ள்.) பாய் இருள் நீக்கும் மதியம்போல் - பரவிய இருளைப் போக்கும் சந்திரனைப்போல, பல் மீனும் நிலா காய்கலா ஆகும் - பல விண்மீன்கள் ஒன்றுகூடினும் நிலவை எறிக்கமாட்டா. (அதுபோல), அறிவிலார் ஆயிரவரானும் தொக்கக்கால் - அறிவு இல்லாதவர்கள் ஆயிரம்பேர் திரண்டனராயினும், மாஇரு ஞாலத்து - பெருமையை உடைய பெரிய இவ்வுலகின் கண, மாண்பு ஒருவன் போல்கலார் - அறிவினால் மாட்சிமைப்பட்ட ஒருவனைப்போல் விளங்கார்.

(க-து.) அறிவிலார் பலர் திரண்டாலும் அறிவுடையான் ஒருவனைஒவ்வார்.

(வி-ம்.) ஆனும் என்பது ஆயினும் என்பதன் சுருக்கம். பல நட்சத்திரங்கள் திரண்டாலும் ஒரு சந்திரனைப்போல் உலகிற்குப் பயன்படாமை போல, அறிவிலார் பலர் திண்டாலும் அவரால் உலகிற்குப் பயன் ஒரு சிறிதும் இல்லையாகும். ஆயிரவரானும் என்பது எண் இறந்தமையைக் குறிப்பது. 'பல்மீனும் மதியம்போல் நிலாக்காய்கலா ஆகும்' - இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழ்கினும்நூல்

வல்லான் ஒருவனையே மானுவரோ? - அல்லாரும்

எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்தோர்

வெண்ணிலா ஆமோ விளம்பு.

என்னும் நீதிவெண்பாவும் இக்கருத்தை நன்கு விளக்கும்.

(2)

28. நற்(கு)அறி(வு) இல்லாரை நாட்டவும் மாட்டாதே

சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல்

வெற்(பு)அறைமேல் தாழும் இலங்குஅருவி நன்னாட!

கற்றறிவு போகா கடை.

(சொ-ள்.) வெற்பு அறை மேல் தாழும் இலங்கு அருவி நன்னாட - மலையினின்றும் பாறையின்மேல் விழும் விளங்குகின்ற அருவி பாயும் நல்ல நாட்டை உடையவனே!, சொல்குறி - சொல்லால் குறிக்கப்படும் பொருளை, துடிகொண்டு - உடுக்கையைக் கொண்டு (அதன் கண்), பண் உறுத்துவபோல் - பண் உண்டாக்குவதைப்போல, நன்கு அறிவு இல்லாரை - மிகவும் இயற்கையறிவு இல்லாரை, நாட்டவும் மாட்டாது - கல்வி யறிவைப் போதித்ததனால் சிறந்தவனாக நிலைநாட்ட முடியாது. (ஆகையால்), கற்றறிவு கடைபோகா - நூல்களைக் கற்றலால் ஆகிய அறிவு முற்றிலுஞ்செல்லாது.

(க-து.) கல்வியறிவோடு இயற்கை யறிவும் உடையான் சிறந்து விளங்குவான்.

(வி-ம்.) துடி தட்டினாலன்றி ஓசை உண்டாகாதவாறு போல, இயற்கை யறிவில்லான் அறிவுறுத்தபோதன்றி மற்றைய நேரங்களில் அறியான். நன்கறிவு என்பது நற்கறிவு என வலித்தல் விகாரம் பெற்றது. 'கற்றறிவு கடைபோகா' - இஃது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

(3)

29. ஆணம் உடைய அறிவினார் தம்நலம்

மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்

மான்அமர் கண்ணாய்! மறம்கெழு மாமன்னர்

யானையால் யானையாத் தற்று.

(சொ-ள்.) மான் அமர் கண்ணாய் - மான் விரும்பும் கண்ணை உடையாய், ஆணம் உடைய அறிவினார் - மனத்திட்பம் உடைய அறிஞர்கள், தம் நலம் மானும் அறிவினவரை தலைப்படுத்தல் -

தம்மைக் கல்வி யறிவால் ஒத்த அறிஞர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளுதல், மறம் கெழும் மாமன்னர் - வீரம் பொருந்திய பேரரசர்கள், யானையால் யானை யாத்தற்று - யானையைக் கொண்டு யானைகளைப் பிடித்ததனோ டொக்கும்.

(க-து.) அறிவுடையார் அறிவுடையாரையே சேர்த்துக் கொள்வர்.

(வி-ம்.) அமர் - விரும்புதல். 'அளிநிலை பொறாது அமரிய முகத்தள்' என்ற அகநானூற்று அடியிலும் இப்பொருளில் வந்தது. ஆணம் - மனத்திட்பம், 'ஆணை மருத்துயரம் ஆணம் உடைமையின்' என்று பெருங்கதையடியிலும் இப்பொருளில் வந்தது; 'யானையால் யானையாத் தற்று' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30. தெரிவுடையா ரோடு தெரிந்(து) உணர்ந்து நின்றார்

பரியார் இடைப்புகார் பண்புஅறிவார் மன்ற

விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!

அரிவாரைக் காட்டார் நரி.

(சொ-ள்.) விரியா இமிழ்திரை வீங்குநீர் சேர்ப்ப - பரவி ஒலிக்கின்ற அலைகள் மிகுதியும் உடைய கடற்கரையை உடையவனே!, அரிவாரை காட்டார் நரி - நெல்லரிவோர்களுக்கு (அவ்வேலை கெடும்படி) நரியைக் காண்பியார் (அதுபோல), தெரிவு உடையாரோடு - ஆராய்ச்சி உடையாருடன், தெரிந்து உணர்ந்து நின்றார் - ஆராய்ந்து உண்மை கண்டுணர்ந்தார், பரியார் இடைப்புகார் - நுண்ணறிவு இல்லாரிடம் செல்லார், பண்பு அறிவார் மன்ற - அவர் குணங்களை ஒருதன்மையாக அறிவார் ஆதலான்.

(க-து.) அறிவுடையார் தம் போன்றாரைஅறிவிலாரிடம் அழைத்துச் செல்லார்.

(வி-ம்.) அறிவிலார் குணங்களை அறிவாராதலால் அவரைக் காட்டி வீணே காலங்கடத்தித் தம் வேலையைக் கெட்டொழியார் என்பதாம் தெரிதல் - உண்மையை ஆராய்தல், தெரிவு - உண்மையை அறியும் அறிவு (ஆராய்ச்சி), தேர்தல், தேர்வு முதலியவும் முறையே இவையடியாகத் தோன்றியன. மன்ற : தேற்றப் பொருளில் வந்தது. 'அரிவாரைக் காட்டார் நரி' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

31. பொற்பவும்பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்

சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்

அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்

பெரி(து)ஆள் பவனே பெரிது.

(சொ-ள்.) வில் கீழ் அரிபாய்பரந்து அகன்ற கண்ணாய் - வில்லைப்போன்றபுருவத்தின்கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும்அகன்ற கண்ணை உடையாய்!, பொற்பவும் - நன்மையையும், பொல்லாதனவும் -தீமையையும், புனைந்து - நிரல்படப் புனைந்து, இருந்தார் - மருங்கு இருந்தார், சொல்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ - சொற்களால் கூறவும்வேண்டுமோ?, பெரிது ஆள்பவனே பெரிது அறியும் - எல்லாவற்றையும்தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும்அறிவான்.

(க-து.) கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்துநடப்பான்.

(வி-ம்.) சொல் பெய்து எனவே சொல்லுஞ் சொல்பயனின்றாய் முடியுமென்பதாம். 'பெரிது ஆள்பவனே பெரிதுஅறியும்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(6)

32. பரந்த திறலாரைப்பாசிமேல் இட்டுக்

கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்(து) எழுந்து

வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய் விண்இயங்கும்

ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்.

(சொ-ள்.) நிரந்து எழுந்து - நிரல்படஉயர்ந்து, வேயின் திரண்டதோள் - மூங்கில் போன்றதிரண்ட தோள்களையும், வேல் கண்ணாய் - வேல்போன்றகண்களையும் உடைய பெண்ணே!, விண் இயங்கும் ஞாயிற்றைகைமறைப்பார் இல் - வானிற் செல்லும் சூரியனைக் கையால்மறைப்பவர்கள் இல்லை (மறைக்க முடியாது.) (அதுபோல),பரந்த திறலாரை - மிகுந்த அறிவு ஆற்றல் உடையவர்களை,பாசிமேல் இட்டு - பாசியைப்போன்ற அடாத சிலசொற்களையும் செயல்களையும் அவர் மேலிட்டு, கரந்துமறைக்கலும் ஆமோ - அவர் புகழை மறைத்து ஒளிக்கவும் முடியுமோ? (மறைக்க முடியாது.)

(க-து.) அறிவுடையார் புகழை மறைப்பின்மறைபடாது என்பதாம்.

(வி-ம்.) பாசியை உவமை கூறலின் மிக்க படிற்றுரைகளை இடைவிடாது உரைப்பர் என்பதுபெறப்பட்டது. அவர்மேல் பழித்தற்குரியன இல்லை யென்பார் இட்டுக் கூறினார் என்றார். 'ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லை' - இஃது இச்செய்யுளில், வந்த பழமொழி.

(7)

33. அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்

திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால்

பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்

திருவினும் திட்பம் பெறும்.

(சொ-ள்.) பெருவரை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, திரு உடையர் ஆயின் - செல்வம் உடையவர்களுக்கு ஆயின், அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும் திரிந்தும் வரும் - (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன, பிரிவின்று - (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை, அதனால் - அத்தன்மையால், திருவினும் திட்பம் பெறும் -செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.

(க-து.) அறிவுச்செல்வம் பொருட்செல்வம்போல் பிரிதலில்லாமையால் அதனையேதேடுதல் வேண்டும்.

(வி-ம்.) 'திரிந்தும் வருமால்' எனவே அறிவுச்செல்வம் திரியாது என்பதும், அறிவுச் செல்வத்தை நாம் தேடுதல் வேண்டும் என்பதும் பெறப்படும். 'திருவினும் திட்பம் பெறும்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.

நன்றி - tamilvu.org

30. தெரிவுடையா ரோடு தெரிந்(து) உணர்ந்து நின்றார்

பரியார் இடைப்புகார் பண்புஅறிவார் மன்ற

விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!

அரிவாரைக் காட்டார் நரி.

(சொ-ள்.) விரியா இமிழ்திரை வீங்குநீர் சேர்ப்ப - பரவி ஒலிக்கின்ற அலைகள் மிகுதியும் உடைய கடற்கரையை உடையவனே!, அரிவாரை காட்டார் நரி - நெல்லரிவோர்களுக்கு (அவ்வேலை கெடும்படி) நரியைக் காண்பியார் (அதுபோல), தெரிவு உடையாரோடு - ஆராய்ச்சி உடையாருடன், தெரிந்து உணர்ந்து நின்றார் - ஆராய்ந்து உண்மை கண்டுணர்ந்தார், பரியார் இடைப்புகார் - நுண்ணறிவு இல்லாரிடம் செல்லார், பண்பு அறிவார் மன்ற - அவர் குணங்களை ஒருதன்மையாக அறிவார் ஆதலான்.

(க-து.) அறிவுடையார் தம் போன்றாரைஅறிவிலாரிடம் அழைத்துச் செல்லார்.

(வி-ம்.) அறிவிலார் குணங்களை அறிவாராதலால் அவரைக் காட்டி வீணே காலங்கடத்தித் தம் வேலையைக் கெட்டொழியார் என்பதாம் தெரிதல் - உண்மையை ஆராய்தல், தெரிவு - உண்மையை அறியும் அறிவு (ஆராய்ச்சி), தேர்தல், தேர்வு முதலியவும் முறையே இவையடியாகத் தோன்றியன. மன்ற : தேற்றப் பொருளில் வந்தது. 'அரிவாரைக் காட்டார் நரி' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

31. பொற்பவும்பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்

சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்

அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்

பெரி(து)ஆள் பவனே பெரிது.

(சொ-ள்.) வில் கீழ் அரிபாய்பரந்து அகன்ற கண்ணாய் - வில்லைப்போன்றபுருவத்தின்கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும்அகன்ற கண்ணை உடையாய்!, பொற்பவும் - நன்மையையும், பொல்லாதனவும் -தீமையையும், புனைந்து - நிரல்படப் புனைந்து, இருந்தார் - மருங்கு இருந்தார், சொல்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ - சொற்களால் கூறவும்வேண்டுமோ?, பெரிது ஆள்பவனே பெரிது அறியும் - எல்லாவற்றையும்தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும்அறிவான்.

(க-து.) கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்துநடப்பான்.

(வி-ம்.) சொல் பெய்து எனவே சொல்லுஞ் சொல்பயனின்றாய் முடியுமென்பதாம். 'பெரிது ஆள்பவனே பெரிதுஅறியும்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(6)

32. பரந்த திறலாரைப்பாசிமேல் இட்டுக்

கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்(து) எழுந்து

வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய் விண்இயங்கும்

ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்.

(சொ-ள்.) நிரந்து எழுந்து - நிரல்படஉயர்ந்து, வேயின் திரண்டதோள் - மூங்கில் போன்றதிரண்ட தோள்களையும், வேல் கண்ணாய் - வேல்போன்றகண்களையும் உடைய பெண்ணே!, விண் இயங்கும் ஞாயிற்றைகைமறைப்பார் இல் - வானிற் செல்லும் சூரியனைக் கையால்மறைப்பவர்கள் இல்லை (மறைக்க முடியாது.) (அதுபோல),பரந்த திறலாரை - மிகுந்த அறிவு ஆற்றல் உடையவர்களை,பாசிமேல் இட்டு - பாசியைப்போன்ற அடாத சிலசொற்களையும் செயல்களையும் அவர் மேலிட்டு, கரந்துமறைக்கலும் ஆமோ - அவர் புகழை மறைத்து ஒளிக்கவும் முடியுமோ? (மறைக்க முடியாது.)

(க-து.) அறிவுடையார் புகழை மறைப்பின்மறைபடாது என்பதாம்.

(வி-ம்.) பாசியை உவமை கூறலின் மிக்க படிற்றுரைகளை இடைவிடாது உரைப்பர் என்பதுபெறப்பட்டது. அவர்மேல் பழித்தற்குரியன இல்லை யென்பார் இட்டுக் கூறினார் என்றார். 'ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லை' - இஃது இச்செய்யுளில், வந்த பழமொழி.

(7)

33. அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்

திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால்

பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்

திருவினும் திட்பம் பெறும்.

(சொ-ள்.) பெருவரை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, திரு உடையர் ஆயின் - செல்வம் உடையவர்களுக்கு ஆயின், அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும் திரிந்தும் வரும் - (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன, பிரிவின்று - (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை, அதனால் - அத்தன்மையால், திருவினும் திட்பம் பெறும் -செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.

(க-து.) அறிவுச்செல்வம் பொருட்செல்வம்போல் பிரிதலில்லாமையால் அதனையேதேடுதல் வேண்டும்.

(வி-ம்.) 'திரிந்தும் வருமால்' எனவே அறிவுச்செல்வம் திரியாது என்பதும், அறிவுச் செல்வத்தை நாம் தேடுதல் வேண்டும் என்பதும் பெறப்படும். 'திருவினும் திட்பம் பெறும்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

5. ஒழுக்கம்

34. விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார்

ஒழுங்(கு) உடையர் ஆகி ஒழுகல் - பழத்தெங்கு

செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ

நெய்த்தலைப்பால் உக்கு விடல்.

(சொ-ள்.) பழத்தெங்கு செய் தலை வீழும் புனல்ஊர - தெங்கம்பழம் வயலின்கண் விழுகின்ற நீர் நிறைந்த மருதநிலத்தலைவனே!, விழுத்தொடையர் ஆகி விளங்கி தொல் வந்தார் - சிறந்த தொடர்ச்சியை உடையாரை உடையது ஆகிப் புகழால்

விளக்கம் உற்றுத் தொன்றுதொட்டு வந்த குடியின்கட் பிறந்தார், ஒழுக்குடையர் ஆகி ஒழுகல் - தத்தமக்குரிய ஒழுக்கத்தினை உடையராகிக் குடிக்கேற்ப ஒழுகுதல், நெய் தலை பால் உக்குவிடல் அஃது அன்றோ - ஆவின் நெய்யிடத்து ஆவின்பாலை ஊற்றிவிடல் போல் அஃது இனிமையைத்தரும் அல்லவா?

(க-து.) தங்குடிக்கேற்ப நல்லொழுக்கினனாய் ஒழுகுதல் இனிமையைப் பயப்பதாகும்.

(வி-ம்.) பழைய குடியாவது 'கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி.' சிறந்த தொடர்ச்சியை உடைமையாவது நாங்கூர்வேள் புகார்ச்சோழற்குப் பெண் கொடுத்தமை போன்ற வீரக்குடிமக்கள் தொடர்ச்சியைப் பெறுதல், விழுத் தொடர்ச்சி விளங்குதல். தொன்றுதொட்டு வருதல், இவை குடிக்கு ஏற்றப்பட்டன.

'நெய்த்தலைப் பால் உக்குவிடல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(1)

35. கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்

ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்

பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

(சொ-ள்.) தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலை நாட - தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே, பார்ப்பாரும் - பார்ப்பனரும். நாய்கொண்டால் - நாய் கதுவியதாயினும், உடும்பு தின்பர் - உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர், (அதுபோல) கள்ளியகிலும் கருங்காக்கைச் சொல்லும் போல் - கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம்நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல, எள்ளற்க யார் வாயின் நல்லுரையை - கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக. (போற்றுதல் செய்க.)

(க-து.) சிறந்த பொருள்களை இழிந்தார் கூறினராயினும் இகழாது போற்றுதல் வேண்டும்.

(வி-ம்.) கள்ளியையும், கருங்காக்கையையும், நாயையும் இழிந்த பொருளாகக் கூறி அவற்றின்கண் உள்ளன சிறந்தன என்று கூறினார்; உடும்பின் புலால் மிகச் சிறந்த சுவையுடையது என்பது கருதியே பார்ப்பாரும் உண்பர் என்றார்.

காக்கை கரைவதை விருந்தினம் வருவதற்குஅறிகுறி என்று கொள்ளுவர்.

‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பது திருக்குறள்.

(2)

36. தந்நடைநோக்கார் தமர்வந்த வா(று) அறியார்

செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது,

நின்நடை யானே நடஅத்தா! நின்னடை

நின்நின்று அறிகிற்பார் இல்.

(சொ-ள்.) அத்தா - அத்தனே!, நின் நடை நின் நின்று அறிகிற்பார் இல் - நினது ஒழுக்கத்தை உன்னிடத்தினின்றும் அறிதலுடையார் இல்லை, (நீயே அறிவாய் ஆகையால்) தம் நடை நோக்கார் தமர்வந்தவாறு அறியார் - தமது ஒழுக்கத்தை ஆராய்தலிலராய்த் தம் சுற்றத்தார் ஒழுகிவந்த வரலாற்றையும் அறிதலிலராய், செம்நடை சேராச் சிறியார் போலாகாது - செவ்விய நடையைச் சேராத அறிவிற் சிறியார் போல் ஒழுகாது, நின் நடையானே நட -நினக்கு விதிக்கப்பட்ட நின்குடிக்கேற்ற ஒழுக்கத்தின்படியேஒழுகக் கடவாயாக.

(க-து.) ஒவ்வொருவரும் தத்தம்குடிக்கேற்ப ஒழுகுதல் வேண்டும்.

(வி-ம்.) பிறர் நினது ஒழுக்கத்தை அறிதல் அருமையின் உண்மையாகவே ஒழுகுக என்பார், 'நின்னடையானே நட' என்றார். செம்மையாகிய நடை செந்நடை எனப்பட்டது. அஃதாவது தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கினை உடையராதல், தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கினை நூன்முறையான் ஆராய்தலும், தம் உறவினர் எங்ஙனம் ஒழுகிவந்தார் என அவர் ஒழுக்கினை ஆராய்தலும் நன்னெறியில் நிற்றற் குரியவழிகளாம்.

'நின்னடை நின்னின்று அறிகிற்பார் இல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(3)

37. நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்

பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே

கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்

ஓர்த்தது இசைக்கும் பறை.

(சொ-ள்.) பறை ஓர்த்தது இசைக்கும் - உடுக்கை நாம்நினைத்த ஓசையையே ஒலியாநிற்கும், (அதுபோல) கூர்த்த நுண்

கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் - கூரிய நுட்பமான நூற்பொருளைக் கேட்டுணர்ந்த இயற்கையறிவு உடையவர்களுக்கேயானாலும், நீர்த்தன்று - நீர்மையுடையது அன்று (என்று), ஒருவர் நெறி யன்றி கொண்டக்கால் - அவருள் ஒருவர் முறைபிறழ்ந்து கருதிய இடத்து, பேர்த்து தெருட்டல் பெரியார்க்கும் ஆகாது - மீண்டும் அவரைத் தெளிவித்தல் தவத்தால் பெரியவர்களுக்கும் முடியாது. (அவர் கொண்ட கொள்கையின் கண்ணேயே நிற்பர்.)

(க-து.) பிறர் ஐயுறாவண்ணம் ஒழுகுதல்வேண்டும்.

(வி-ம்.) அறிவுடையாரையே தெளிவித்தல் இயலாதெனின் அஃதில்லாரைத் தெளிவித்தல் இயலாது என்பது சொல்லாமே அமையும். பறை நாம் நினைத்த ஓசையை ஒலிப்பதில் வழுவாததுபோல அறிவுடையாரும் கொண்ட கொள்கையினின்றும் சிறிதும் தெளியார். ஆகவே பிறர் ஐயுற்ற பின்னர் அவரைத் தெளிவித்தல்அரிதாகலான் ஐயுறாவண்ணம் ஒழுகுதல் வேண்டும். பெரியோர்க்கும்ஆகாது என்பது தெளிவித்தல் இயலாது என்பதை வலியுறுத்துவது.

'போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின், தேற்றுதல் யார்க்கும் அரிது' என்பது இக்கருத்துப்பற்றி எழுந்த திருக்குறள்.

'ஓர்த்தது இசைக்கும் பறை' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(4)

38. தம்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்

எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்

வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது

அயல்வளி தீர்த்து விடல்.

(சொ-ள்.) தம் குற்றம் நீக்கிலர் ஆகி - (அறிவிலார்) தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகி, பிறர் குற்றம் தீர்த்தற்கு எங்கேனும் இடைப்புகுதல் - பிறருடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல், வியன் உலகில் எங்கும் - அகன்ற உலகின்கண் எவ்விடத்தும், வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல் - வெள்ளாடு தனது வளியான் உண்டாய நோயைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு வாதத்தான் வரும் நோயைத்தீர்த்து விடுதலோ டொக்கும்.

(க-து.) ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றங் களைய முற்படுதல் வேண்டும்

(வி-ம்.) தன்வளி, அயல்வளி என்ற இடங்களில் வளி என்பது வளியான் உண்டாய நோய் என்னும் பொருளைக் குறிக்கின்றது. வாதத்தான் உண்டாகிய நோயைப் பால் முதலியவற்றால் நீக்குதலின் அயல்வளி தீர்த்தலாயிற்று. மழைக்காலங்களில் வீசும் சாரற்காற்றுக்காற்றாது ஆடுகள் நோய்வாய்ப் புகுதலின் சாரற் காற்றால் உண்டாகும் நோய் தன்வளி எனப்பட்டது. 'எங்கேனும் இடைப்புகுதல்' எனவே மக்கள் பிறர் குற்றங்களையும் பெருவிருப்பினர்என்பதைக் குறித்தாராயிற்று.

வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளிதீர்த்துவிடல் - இஃது இச்செய்யுளில் வந்தபழமொழி.

(5)

39. கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை

முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய

கல்தேயும் தேயாது சொல்.

(சொ-ள்.) நெடுவரை - பெரிய சக்கரவாளமாகிய மலைகளால், முற்றும் - சூழப்பட்ட, நீர் ஆழி வரை யகத்து - நீரை உடைய கடலால் வரையறுக்கப்பட்ட பூமியின்கண், ஈண்டிய கல் தேயும் - தொக்க மலைகள் தேய்வடையும், சொல் தேயாது - பழிச்சொல் மாறுதலில்லை. (ஆகையால்), கெடுதல் எனப்பட்ட கண்ணும் - (இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை எய்தாதொழியின்) யான் கெடுவேன் என்று கருதப்பட்ட இடத்தும், தனக்கு ஓர் வடுஅல்ல செய்தலே வேண்டும் - தனக்கு ஒருசிறிதும் பழியைப் பயவாத செயல்களைச் செய்தலையே ஒவ்வொருவனும் விரும்புதல்வேண்டும்.

(க-து.) தான் அழிய வரினும் பழியொடு பட்டவைகளைச் செய்யவேண்டா.

(வி-ம்.) மாறாது கிடத்தலால் பழியை வடு என்றார். நில்லாத உடம்பை ஒழித்து நிலையுடைய பழியை நீக்குக என்பார் 'வேண்டும்' என்றார். 'கெடுவல் எனப்பட்ட கண்ணும்'என்பது வடுவல்ல செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்திற்று.

'கல் தேயும் சொல் தேயாது' என்பது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

(6)

40. பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு

மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்தின்

தணியாது விட்டக்கால் தண்கடல் சேர்ப்ப!

பிணியீ(டு) அழித்து விடும்.

29

(சொ-ள்.) தண் கடல் சேர்ப்ப - குளிர்ந்த கடல் நாடனே!, மருந்தின் தணியாது விட்டக்கால் - (ஒருவர் கொண்ட நோயை) மருந்துகொண்டு நீக்காவிட்டால், பிணி ஈடு அழித்துவிடும் - அந்நோய் அவரது வலியைப் போக்கிவிடும். (ஆதலால்), பொருந்தாபழி என்னும் பொல்லா பிணிக்கு - பொருத்தமில்லாத பழி எனப்படும் தீய நோய்க்கு, மருந்தாகி நிற்பதாம் மாட்சி - அந் நோயைத் தீர்க்கும் பொருளாக நிற்பது ஒழுக்கமேயாம்; (அதுகொண்டுநீக்குதல் வேண்டும்.)

(க-து.) ஒருவன் தான் கொண்ட பழியைஒழுக்கத்தாலன்றி நீக்கமுடியாது.

(வி-ம்.) பழி ஒருவனுக்கு இழிவை எய்துவித்தலின் 'பொருந்தாப்பழி' என்று கூறப்பட்டது. பிணி தன்னுடையார் இறப்பத் தானும் நீங்கும் தன்மையது. பழிப்பிணி தங்குடியின் கண் உள்ளாரையும் தொடர்ந்து பற்றலின் ' பொல்லாப் பிணி'என்று கூறப்பட்டது.

'நன்னன் மருகன் அன்றியும் நீயும்

முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்

பாடுநர்க் கடைத்த கதவின் ஆடுமழை

அணங்குசால் அடுக்கம் பொழியும்நும்

மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே'

எனப் பெருந்தலைச் சாத்தனார் இளவிச்சிக்கோவைப்புல்லாததற்குக் கூறிய சான்றுகளாலும் இஃது அறியத்தக்கது. ஒழுக்கம் தன்னை யுடையானை மாட்சிமைப் படுத்தலின் ஈண்டு மாட்சிஒழுக்கமெனப்பட்டது.

'மருந்தின் தணியாது விட்டக்கால் பிணி ஈடு அழித்துவிடும்' -இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

நோயை மருந்துகொண்டே நீக்காவிடின் அந்நோய் கொண்டானது வலிமையைக் கெடுப்பது போன்று, பழிப்பிணியை ஒழுக்கமெனும் மருந்துகொண்டு நீக்காவிடின் கொண்டானுக்கு இழிவை எய்துவிக்கும்.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

41. உரிஞ்சி நடப்பாரைஉள்ளடி நோவா

நெருஞ்சியும் செய்வ(து) ஒன்(று) இல்லை - செருந்தி

இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப!

பெரும்பழியும் பேணாதார்க்கு இல்.

(சொ-ள்.) செருந்தி இருங்கழி தாழும் எறிகடல் தண் சேர்ப்ப - செருந்திமரங்கள் பெரிய உப்பங்கழியின்கண் தாழ்ந்து

விளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே!, உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவ நெருஞ்சியும் செய்வதொன்று இல்லை - அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சிமுள்ளும் ஊறு செய்வதில்லை, பெரும் பழியும் பேணாதார்க்கு இல் - மிக்கபழியும் தன்னை அஞ்சிப் பாதுகாவாதவர்களுக்குமனவருத்தம் செய்தல் இல்லை.

(க-து.) நல்லோர் பழிக்கு அஞ்சுவர்,தீயோர் அஞ்சார்.

(வி-ம்.) பேணாதவர்க்கு மனவருத்தம் இல்லை என்று குறிப்பால்தீயோரை இகழ்ந்தவாறு.

'நன்றறி வாரிற் கயவர் திருவுடையர், நெஞ்சத்து அவலம் இலர்.' இஃது இக் கருத்துப்பற்றி எழுந்த திருக்குறள்.

'பெரும்பழியும் பேணாதார்க்கு இல்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(8)

42. ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்

கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்

தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்

நாவிற்கு நல்குர(வு) இல்.

(சொ-ள்.) ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும் - பசுக்கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும், கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறும் - ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லா நிற்கும். (ஆகையால்) தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா - தேவர்க்கு உரைப்பது இது மக்கட்கு உரைப்பது இது வெனல் வேண்டப்படுவதன்று, தீங்கு உரைக்கும் நாவிற்கு - தீமையை எடுத்துக்கூறும் நாவினுக்கு, நல்குரவு இல் - வறுமை இல்லையாகலான்

(க-து.) பழித்துரைக்கப் புகுவார்க்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர்என்பதில்லை.

(வி-ம்.) கோவலன் இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது. இந்திரன் சினந்து ஏவிய மழையைக் கண்ணன் மலைகொண்டு தடுத்து ஆக்களைக் காப்பாற்றிய செய்தி, 'ஆவிற் கரும்பனி தாங்கிய மாலை' என்று குறிக்கப்படுகின்றது. ஆக்களைக் காவல்செய்தல் சிறந்த அறமென்பார், 'ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்' என்றார். 'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்' என்பர் பிறரும். மாலையும் உம்மை உயர்வு சிறப்பு. 'தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்' என்பது பழமொழி.

6. இன்னா செய்யாமை

43. பூவுட்கும் கண்ணாய் பொறுப்பர் எனக்கருதி

யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா

தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும்

நோவச்செய் நோயின்மை இல்.

(சொ-ள்.) பூ உட்கும் கண்ணாய் - தாமரையும் (ஒப்பாதற்கில்லையே யென்று) வருந்தும் கண்ணை உடையாய்!, தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும் - தேவர்களுக்கும் இயலாதகாழ்த்த அன்புடையார்க்காயினும், நோவச்செய் - துன்புறுத்தினால், நோயின்மை இல் - துன்புறாதிருப்பது இல்லை (பொறுமையிலராவார்.) (ஆகையால்) பொறுப்பார் எனக்கருதி - எத்துணைத் தீங்கு செயினும் பொறுமையுடன் இருப்பார்கள் என்று தாமே நினைத்து, யாவர்க்கேயாயினும் - எத்துணை எளியராயினும், இன்னா செயல் வேண்டா -தீங்கினைச் செய்தல் வேண்டாவாம்.

(க-து.) எவர்க்குந் தீங்கியற்றல்வேண்டா.

(வி-ம்.) 'தேவர்க்கும் கைகூடாத் திண்ணன்பு' என்பது அன்பின் உயர்வைக் காட்டுவது. அன்புடையாரிடமும் ஏனையோரிடமும் தீச்செயல்களைச் செய்தல் வேண்டா.

(1)

44. வினைப்பயன் ஒன்றின்றிவேற்றுமை கொண்டு

நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்

புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்

தனக்கின்னா இன்னா பிறர்க்கு.

(சொ-ள்.) புனம் பொன் அவிர் சுணங்கின் பூம்கொம்பர் அன்னாய் - புனத்திற்படும் பொன்போல விளங்கும் தேமலையுடைய பூங் கொம்பை யொப்பாய்!, தனக்கு இன்னா பிறர்க்கு இன்னா - தனக்குத் துன்பந்தருவன பிறருக்குந் துன்பந் தருவனவாம் (ஆதலால்), வினைபயன் ஒன்று இன்றி - செய்கின்ற செயலிற் பயனொரு சிறிதுமில்லாமல், வேற்றுமை கொண்டு - பகைமை ஒன்றே கொண்டு, நினைத்து - ஆராய்ந்து, பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் - பிறர்வருந்தத் தக்கனவற்றைச் செய்தலை ஒழிதல் வேண்டும்.

(க-து.) பிறரையும் தம்மைப்போல நினைத்துத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும்

(வி-ம்.) பயனொன்றுமின்றிப் பகையால் பல போலிச் சான்றுகளை ஆராய்ந்துகொண்டு துன்பம் செய்வார் என்பார், 'நினைத்துச் செய்யாமை' என்றார். 'தனக்கின்னா இன்னா பிறர்க்கு' -இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.

'தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ, மன்னுயிர்க் கின்னா செயல்' என்ற திருக்குறள் கருத்தும் இங்கே நினைத்தற்குரியது.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

45. ஆற்றா ரிவரென்றடைந்த தமரையும்

தோற்றத்தா மெள்ளி நலியற்க - போற்றான்

கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்

உடையானைக் கவ்வி விடும்.

(சொ-ள்.) போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் - காப்பாற்றாதவனாகி வாயிலை அடைத்து வைத்து அடித்தவிடத்து, நாயும் உடையானைக் கவ்விவிடும் - நாயும் தன்னை உடையானைக் கவ்வித் துன்புறுத்தும். (ஆகையால்), அடைந்த தமரையும் - தம்மையடைந்த சுற்றத்தார்களையும், ஆற்றார் இவர் என்று - நம்மை எதிர்க்க வலியிலர் என்று நினைத்து, தோற்றத்தாம் எள்ளி நலியற்க - பிறருக்கு வெளிப்படுமாறு தாம் ஒருவரையும் இகழ்ந்து துன்புறுத்தா தொழிக.

(க-து.) நம்மையடைந்த சுற்றத்தார்களைஇகழ்ந்து நலியாதிருத்தல் வேண்டும்.

(வி-ம்.) அடைந்த உறவினர் எளியராயினும், நாய்கதுவினாற்போலத் தம்மால் இயன்ற சிறு தீங்கினையாவதுஇயற்ற முற்படுவர்.

'போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும்உடையானைக் கவ்வி விடும்.'

இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(3)

46. நெடியாது காண்கிலாய் தீயெளியை; நெஞ்சே!

கொடியது கூறினாய் மன்ற - அடியுளே

முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் கண்டு விடும்.

(சொ-ள்.) நெஞ்சே கொடியது கூறினாய் - நெஞ்சே! தீய செயல்களைப் பிறர்க்குச் செய்யுமாறு கூறினாய். (ஆதலால்) நீயெளியை -

நீ அறிவு இல்லாதாய், நெடியது காண்கிலாய்! - (பிறர்க்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை) நெடுங்காலத்திற்குப் பின் அறியாய், அடியுளே - அந்த நிலையிலே, பிறன்கேடு முன் பகல் கண்டான் - பிறன் ஒருவனுக்குத் தீங்கினைப் பகலின் முதற்பகுதிக்கண் செய்தான், தன் கேடு பின்பகல் மன்ற கண்டுவிடும் - தனக்கு வரும்தீங்கினைப் பகலின் பிற்பகுதிக்கண் தப்பாமல்அடைவான்.

(க-து.) முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.

(வி-ம்.) நெஞ்சே, தீங்கின் பயனை அடைதற்கு நீண்ட நாட்கள் செல்லும் என்று நினைத்தலை ஒழி. உடனேயே பயனை அடைவாய். ஆதலால், யார்மாட்டும் தீங்குசெய்ய நினைத்தலை விட்டுவிடு. 'பிறர்க்(கு) இன்னா முற்பகல் செய்யின் தமக்(கு) இன்னா, பிற்பகல் தாமே வரும்.' இஃது இக்கருத்துப்பற்றியெழுந்த திருக்குறள்.

'முன்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பின்பகல் கண்டு விடும்' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(4)

47. தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்

மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்

ஆற்றா(து) அவர் அழுத கண்ணீர் அவைஅவர்க்குக்

கூற்றமாய் வீழ்ந்து விடும்.

(சொ-ள்.) தோற்றத்தால் பொல்லார் - குடிப்பிறப்பால் தீய செயல்களை யுடையவர், துணையில்லார் - ஒரு துணையும் இல்லாதவர், நல்கூர்ந்தார் - வறுமையுடையார், மாற்றத்தால் செற்றார் - சொற்களால் பகைவரை ஒத்தார், என - என்றிங்ஙனம் நினைத்து, வலியார் ஆட்டியக்கால் - குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவையிலாரை நலிந்த இடத்து, ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை - தாங்க இயலாது அவர்கள் தங்கண்களினின்றும் பரப்பிய கண்ணீராகிய அவையே, அவர்க்கு கூற்றமாய் வீழ்ந்துவிடும் - தம்மை நலிந்த அவர்க்குக் கூற்றாய் விழாநிற்கும்.

(க-து.) எளியார் அழுத கண்ணீர் அவர்தம்மை நலிந்தார்க்குக் கூற்றாய் முடியும்.

(வி-ம்.) தோற்றம், துணை, செல்வம் முதலியன இன்மை எளிமையைக் குறிப்பன. நலியப்பட்டார் கண்களினின்றுஒழுகும் ஒவ்வொரு துளியும் நலிந்தார் வாழ்வை அறுக்கும் வானின் கூரிய பல் என்று அறிக.

'ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்துவிடும்' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(5)

48. மிக்குடையர் ஆகிமிகமதிக்கப் பட்டாரை

ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்

நற்(கு)எளி(து) ஆகி விடினும் நளிர்வரைமேல்

கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்.

(சொ-ள்.) நளிர் நரைமேல் கல் கிள்ளி கை உய்ந்தார் இல் -விளங்குகின்ற மலைமேல் உள்ள கல்லைக் கிள்ளுதலைச் செய்து கை வருந்துதலைத் தப்பினார் இல்லை, (ஆதலால்) மிக்கு உடையர் ஆகி மிக மதிக்கப்பட்டாரை - செல்வம் மிக உடையவர்களாகி அறிவுடைமையால் மிகவும் மதிக்கப்பட்டாரை, ஒற்கப்பட முயறும் என்றல் - அவர்கள் வருந்துமாறு தீய செயல்களைச் செய்வோம் என்று நினைத்தல், நற்கு எளிது ஆகிவிடினும் - மிகவும் எளிமையானாலும். இழுக்கு ஆகும் - செயலிற் செய்தால் மிக்கதுன்பமே உண்டாகும்.

(க-து.) அறிவு செல்வம் என்றிவைஉடையாரைத் துன்புறுத்தலாகாது.

(வி-ம்.) அறிவு செல்வம் என்ற இரண்டுமுடையாரைத் துன்புறுத்த நினைப்பாராயின், கல்லைக் கிள்ளிக் கைவருந்தினார் போல, நினைத்துச் செய்பவர் துன்புறுவரேயன்றி அவர்க்கு ஊறுஉண்டாவது இல்லை.

முயல் + தும் - முயறும் : தன்மைப் பன்மைமுற்று.

நன்கு என்பது நற்கு என வலிந்து நின்றது.

கல்வி, செல்வம் என்ற இரண்டனுள் ஒன்றே உடையாரை ஒரு வேளை நலிய நினைப்பின் கைகூடினும் கூடும். இரண்டும் உடையாரை எஞ்ஞான்றும் துன்புறுத்த இயலாது என்பார், 'மிக்குடையராகி மிக மதிக்கப் பட்டாரை'என்றார்.

'கல் கிள்ளிக் கைஉய்ந்தார் இல்' இஃது - இச்செய்யுளில் வந்த பழமொழி.

(6)

49. நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின்

கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் - சான்றவர்க்குப்

பார்த்(து) ஓடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின்

பேர்த்துநாய் கவ்வினார் இல்.

(சொ-ள்.) நாய் கதம்பட்டு கவ்வின் - நாய் சினந்து கவ்விய இடத்து, பார்த்து ஓடி சென்று - ஆராய்ந்து ஓடிப் பின்சென்று, பேர்த்து நாய் கவ்வினார் இல் - மீண்டும் நாயினைக் கவ்வித் துன்புறுத்தினவர்கள் ஒருவரும் இலர், நீர் தகவு இல்லார் நிரம்பாமை தம் நலியின் - நல்ல நேர்மையான குணங்களில்லாதவர்கள் அறிவு நிரம்பாமையால் தம்மைத் துன்புறுத்துவராயின், கூர்த்து - மன ஊக்கங்கொண்டு, அவரை தாம் நலிதல் சான்றவர்க்கு கோள் அன்று - அவர்களைத் தாம்துன்புறுத்துதல் அறிவு சான்றவர்க்குக் கொள்கையன்று.

(க-து.) அறிவிலார் தீங்கு செய்தாராயின் அதைப் பொருட்படுத்திப் பெரியோர்தீங்கு செய்யமாட்டார்கள்.

(வி-ம்.) சான்றவர் கோளாவது : தமக்கு இன்னா செய்தார்க்கும் அவர் நாண இனிமைதரும்செயலைச் செய்தலேயாகும்.

'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு' என்பது திருக்குறள்.

அறியாமையால் தீங்கு செய்தலின்அறிவுடையார் பொருட்படுத்த வேண்டுவதில்லை.

'நாய் கவ்வின் பேர்த்தும் நாய்கவ்வினார் இல்' -இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

நன்றி - tamilvu.org

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.