• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

BLUE BIRD

காலக்கெடு முடிவடைந்தது- கனடா பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை!

Recommended Posts

காலக்கெடு முடிவடைந்தது- கனடா பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை!

Published on September 22, 2011-1:48 pm · No Comments

canada1-150x150.jpgசிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று கனடா சமர்ப்பிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நேற்றுமாலை ஜெனிவாவில் நடத்தியதாகவும், இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஐரோப்பிய நேரம் ஒருமணிவரை இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரியவருகிறது. ஐ.நா.மனித உரிமை பேரவை உத்தியோகபூர்வமாக இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை

இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற வேளை இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, போலந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து வரவேற்றிருந்தன. இந்தியா , மாலைதீவு அச்சமயம் மௌனமாக இருந்தன.

ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான், உட்பட ஆசிய நாடுகள் எதிர்த்திருந்தன.

இந்நிலையில் கனடா இப்பிரேரணையை சமர்ப்பிப்பதில் பின்வாங்கியிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பாக இன்று நண்பகல்வரை மனித உரிமை பேரவை இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.

மனித உரிமை பேரவையின் 18ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும் காலக்கெடு இன்று ஐரோப்பிய நேரம் நண்பகல் ஒருமணியுடன் நிறைவடைந்துள்ளது.

http://www.thinakkathir.com/?p=19070

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • திகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் In இலங்கை     August 6, 2020 2:55 pm GMT     0 Comments     1297     by : Litharsan திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 20,011 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் 10,401 வாக்குகளைப் பெற்றுள்ளது. அகில இலங்கை தமிழ் மகா சபா 10,130 வாக்குகளைப் பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6,380 வாக்குகளைப் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 3,110 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2,721 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 231 வாக்குகளைப் பெற்றுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 163 வாக்குகளைப் பெற்றுள்ளது. பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 75,020 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 56,091 செல்லுபடியான வாக்குகள் – 54,228 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,863 http://athavannews.com/திகாமடுல்ல-மாவட்டம்-கல்/
    • இதை தன் முகனூலில் முதலில் போட்ட ஜெரா தம்பி இப்ப அதை நீக்கியுள்ளார்.
    • பிரதமர் மஹிந்தவுக்கு மோடி வாழ்த்து       2020 பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் நிலையில், இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அலைபேசி ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரதமர-மஹநதவகக-மட-வழதத/175-254023
    • தமிழர் பிரதிநிதித்துவம் கருணாவால் காவு வாங்கப்பட்ட பின்னர், அதாவுல்லாவின் கட்சியில் இருந்து ஒருவர் தெரிவானால் அம்பாறை வாழ் தமிழ் மக்களுக்கு மேலும் மோசமான நிலையைத் தான் தோற்றுவிக்கும். எதற்காக கருணா இறக்கப்பட்டாரோ அது நிறைவேறிக் கொண்டு இருக்குது.
    • யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள்? முக்கிய தலைவர் விருப்பு வாக்கில் பின்னணி August 6, 2020 யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருப்பதாக உத்தியோகப்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன அதனைவிட ஈ.பி.டி,பி., தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ்க் காங்கிரஸ், சுதந்திரக் கட்சி என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெறுவதாகவும் தெரிகின்றது. தமிழரசுக் கட்சிக்கான 3 ஆசனங்களில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முக்கியமான தலைவர் ஒருவர் பின்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த மேலதிக தகவல்கள் சற்று நேரத்தில்.   http://thinakkural.lk/article/60504