Jump to content

"கடவுள்களின் பெயரில்"....பித்தலாட்ட கூட்டங்கள்.....


Recommended Posts

இது சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனை. இது கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டியவை. சொல்லப் போனால் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்பளாக இனம் காணப்படவில்லை. அவர்கள் தவிர்ந்த புதுப்புதுப் பிரிவுகள் தான் இப்படிக் கூட்டம் சேர்க்கினம்.

இந்து மதமும் முன்பு மதமாற்றத்தை மேற்கொண்ட ஒரு மதம் தான். ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்து இருப்பது என்பது அவரவர் விருப்பம். அதனை யாரும் தம் கையில் எடுக்கமுடியாது. ஒரு குழந்தை பிறக்கும் போது அது எந்தவொரு மதத்தையும் சாருவதில்லை. அக்குழந்தை பிறந்து குறிப்பிட்ட காலம் வளர்ந்த பின்னரே அக்குழந்தையை ஒரு மதத்திற்குள் திணிக்கிறார்கள். நீங்கள் கூறலாம் இந்து மதத்திலே அவ்வாறில்லை என்று. இந்து மதம் தன் கட்டுப்பாடுகளை பெரிதாக இறுக்காததே காரணம். மற்றும் படி இதிலும் இவ்வாறான ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. அதையாரும் பின்பற்றுவது குறைவு. சமணம் பலம்பெற்று இருந்த காலத்தில் சைவசமயம் ஒரு இறுகிய கட்டுப்பாட்டுடன் இருந்தது. காலப்போக்கில் அதன் இறுக்கத்தை தளர்த்தியுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்.........

சிவமே அன்பாகும்!

நாத்திகம் பேசும் நல்லவருக்கோ......

அன்பே சிவமாகும்!

நபிகள்... புத்தன்... கிருஸ்ணா....ஜேசு பிறந்தது

புூமியில் எதற்காக?????

அன்பே சிவமாகும் என்று மீண்டும் மீண்டும்

சொன்னார்கள்...... யார்தான் கேட்டார்கள்???

பிறையையும் புூவையும் சிலுவையையும் வைத்து

பித்தலாட்டாம் காட்டி வாழ்கிறது ஒரு கூட்டம்........

அவர்கள் பாதமே மண்ணில் பட விடோம் என

பணி செய்து வாழ்கிறது ஒரு கூட்டம்.

பாவம் வயிற்று பசிக்காக

தன் உடலையே வில்லாய் வளைப்பவரிடம் ஒரு

ஐம்பது பைசா கூடாது இக் கூட்டம்!

கவிஞ்ஞர் காசி ஆனந்தனின் நொறுக்கொன்றுதான்

ஞாபகம் வருகிறது.

ஒரு நாள் ஆயுள் கொண்ட புூவையே

பாதியில் பறித்து புூஜை செய்கிறான்

தான் நூறாண்டு வாழ வேண்டி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.