Jump to content

சுகமே.... சுவாசமே.......

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, உங்கள் கதையின் கருப் பொருளும், அதனைக் நகர்த்திச் சென்ற வடிவமும் அருமை, பாராட்டுகளாக ஒரு பச்சை மட்டுமே போட முடிந்தது!

அப்படி என்று முழுதாகச் சொல்ல முடியாது சாத்திரி!

வீட்டில் ஒருவர் புகைப் பிடித்தாலே போதும் அந்தப் புகையச் சுவாசிப்பதால் கர்ப்பிணிகளுக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் ஆபத்து நேரிட பல காரணிகள் உள்ளது. அதாவது கர்ப்பிணிப் பெண்கள் புகைப் பிடிக்காமல் அருகில் இருப்பவர் புகைப் பிடிப்பதால் கூட பல ஆபத்துக்கள் கர்ப்பிணிப் பெண்களால் எதிர் நோக்கப் படுகிறது, இதைப் பலர் அலட்சியப் படுத்துவது தவிர்க்க வேண்டிய ஒன்று. இல்லையேல் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.

http://www.bbc.co.uk...e_smoking.shtml

(அதோடு சகாரா அக்காவின் கதையில் கர்ப்பம் தரித்திருக்கும் மைதிலிக்கு ஆஸ்த்துமா இருப்பதாகவும் குறிப்பிடு இருக்கிறார், அதனால் குழந்தை தாயின் வயிற்றினுள் மரணித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளது என்றே நினைக்கிறன்.)

நன்றி குட்டி.

புகைத்தல் என்பது மிகவும் அபாயமான பின்விளைவுகளை உருவாக்கக்கூடியது.

எனக்குத் தெரிந்த ஒருவரின் குழந்தை குறைமாதத்தில் பிறந்து வெப்பமூட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள் ஆறு வாரங்களாக வைத்திருந்தார்கள். குறைமாதத்தில் பிறந்த அக்குழந்தைக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளதாகவும் சுவாசிக்கும் சக்தி குறைவாக இருந்ததாகவும் வைத்தியர்கள் தம்முடைய முழுநேரக் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். அக்குழந்தையின் தாயார் நல்ல சுகதேகி. அவரிடம் குழந்தை குறைமாதத்தில் பிறப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் இந்தக்கதையில் உள்ளதுபோல் அவசரப்பிறப்பு. குழந்தையை தொடர்ச்சியாக கவனித்து வந்த வைத்திய அதிகாரிகளின் தகவலின்படி அக்குழந்தையின் தந்தையின் புகைப்பழக்கம் குழந்தையைத் தாக்கியிருக்கிறது என்பதாகும். அதன் பின்னர் அத்தந்தை தன் புகைப்பழக்கத்தை நிறுத்தியே விட்டார். இப்போது அக்குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா! ஒரு பெரியவிடயத்தை உங்கள் சிறுகதையில் அழகாக...... அர்த்தத்துடன் சொல்லியிருக்கின்றீர்கள்.

நன்றி கு.சா அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் பரீட்சைக்குப் படிக்கிறார் போலை.. :unsure: ஆள் இந்தப்பக்கம் கொஞ்சம் தலையைக் காட்டினால் நல்லாயிருக்கும்..! :wub:

எனக்கெண்டால்????? இது ஊரிலை எதுக்கெடுத்தாலும்..விதானைமாரையும்...சனசமூகதலைவர்மாரையும் கூப்பிடுறமாதிரி கிடக்கு? :icon_idea:

Link to comment
Share on other sites

இப்ப லண்டனில் யாருக்கும் பரீட்சை சமயமில்லையே?

யூனியில் அரியஸ் என்றால் கூட அது முடிஞ்சிருக்குமே? நெடுக்கர் அரியஸ் வைக்கிற ஆள் மாதிரி தெரியேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் சகோதரி

நான் எதுவும் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் எழுதாமல் இருந்தாலே எனக்கு கோபம் வரும். இங்கு பன்றிக்குட்டிகள் சிலிர்த்துக்கொண்டு திரிவதற்கு தங்கள் போன்றோரின் ஒதுங்குதலே வழி கோலுகிறது. அந்த வழியை அடைக்க தங்கள் போன்றோரைவிட்டால் நாம் எங்கு போவது??? தயவு செய்து தொடருங்கள்.

குறிப்பு: என் மனைவியின் பெயரை எப்படி தெரிந்துகொண்டீர்கள்? :icon_idea:

இதில் யார் யார் பன்றிக்குட்டிகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும் விசுகு <_< <_< <_<

Link to comment
Share on other sites

புகைத்தல் எனும் பழக்கம் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியது !

வயிற்றில் வளரும் கருவைப் பாதிக்கும் என்பதற்காக மட்டுமில்லை ... அக்குழந்தையின் தந்தையும் நீண்ட காலம் தேகாரோக்கியத்தொடு வாழ அப்பழக்கத்தினை அடியோடு கைவிட வேண்டும்!

நல்ல ஒரு கருத்தினை தங்களது கதையில் மிருதுவாகப் புகுத்தியுள்ள கதையாக்கத்திற்கு பாராட்டுக்கள் அக்கா!

சில மாதங்கள் முன்னாடி வரைக்கும் நானும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாயிருந்தேன்! அதிலிருந்து விடுபட்டதில் இருந்து .... கொஞ்சம் ஆறுதல். இப்பொழுது என்னவளின் அன்புக்கு நான் அடிமை! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நல்ல கதை தொடர்ந்து உங்கள் ஆக்கம்கள் வரட்டும்...

இதில் யார்  யார் பன்றிக்குட்டிகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும் விசுகு <_< <_< <_<

:o
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் சகோதரி

நான் எதுவும் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் எழுதாமல் இருந்தாலே எனக்கு கோபம் வரும். இங்கு பன்றிக்குட்டிகள் சிலிர்த்துக்கொண்டு திரிவதற்கு தங்கள் போன்றோரின் ஒதுங்குதலே வழி கோலுகிறது. அந்த வழியை அடைக்க தங்கள் போன்றோரைவிட்டால் நாம் எங்கு போவது??? தயவு செய்து தொடருங்கள்.

உங்கள் வரவிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி விசுகு அண்ணா......

இருப்பினும்.... மனதில் மகிழ்ச்சி இல்லை...

விசுகு அண்ணா நீங்கள் யாரைக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நானறியேன், ஆனாலும் எழுத்துலகத்தில் உள்ளவர்களைத்தான் நீங்கள் சாடுகிறீர்கள். உங்கள் சாடலுக்கான காரணமும் அதை இச்சிறுகதையின் கருத்துப்பதிவிடத்தில் இடவேண்டிய தேவையும் ஏதென்று புரியவில்லை. எது எவ்வாறாயினும் ஒருவரைத் தூக்கி மற்றையோரைத்தாக்கும் கருத்துகளை வரவேற்க விரும்பவில்லை. அததோடு உங்களுடைய இக்கருத்து எழுத்துத்துறையில் இருக்கும் அனைவரையும் புண்படுத்தக்கூடியது. வளர்ந்துவரும் படைப்பாளிகளையும் முடக்கிப் போடக்கூடியது. ஒருவரை ஊக்குவிப்பதற்காக மற்றவர்களை மட்டந்தட்டுவது ஏற்புடையதல்ல. எதிரியாக இருப்பவராயினும் மாற்றுக்கருத்துடையவராயினும் அநாகரீகமாக விமர்சிப்பது தவிர்க்கப்படவேண்டும். அதுவே ஒரு நல்ல கருத்தாளர்களாக எதிர்காலத்தில் பலரை உருவாக்கும். இந்த யாழ்க்கருத்துக்களத்தில் உள்ளவர்களுக்கும் மாற்றுக்கருத்தாளர்களை மதிக்கவும் தெரியும் மன்னிக்கவும் தெரியும் என்பதை உணர்த்தவேண்டும். மீண்டும் இத்தகைய அநாகரீகமான கருத்துக்கள் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து பிறக்காது என்று நம்புகிறேன்.

புகைத்தல் எனும் பழக்கம் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியது !

வயிற்றில் வளரும் கருவைப் பாதிக்கும் என்பதற்காக மட்டுமில்லை ... அக்குழந்தையின் தந்தையும் நீண்ட காலம் தேகாரோக்கியத்தொடு வாழ அப்பழக்கத்தினை அடியோடு கைவிட வேண்டும்!

நல்ல ஒரு கருத்தினை தங்களது கதையில் மிருதுவாகப் புகுத்தியுள்ள கதையாக்கத்திற்கு பாராட்டுக்கள் அக்கா!

சில மாதங்கள் முன்னாடி வரைக்கும் நானும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாயிருந்தேன்! அதிலிருந்து விடுபட்டதில் இருந்து .... கொஞ்சம் ஆறுதல். இப்பொழுது என்னவளின் அன்புக்கு நான் அடிமை! :wub:

உங்கள் வரவிற்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி கவிதை.

அக்கா நல்ல கதை தொடர்ந்து உங்கள் ஆக்கம்கள் வரட்டும்...

நன்றி சுபேஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லும் அளவிற்கு கதை விளங்காமல் இல்லையே சகாரா அக்கா.... நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடர்நது எழுதுங்கோ...:)

Link to comment
Share on other sites

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.