-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Kavallur Kanmani · பதியப்பட்டது
காவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் -- -
நீங்கள் சொல்வது சரிதான்.இந்த செய்தியை நானும் படித்தேன்.இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலை மாறி எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.
-
நன்றாக இருக்கின்றது. சில விடயங்கள் நெருடலாக இருந்தாலும் கதையை நகர்த்தும் விதம் வாசிக்கத் தூண்டுகிறது...பாராட்டுக்கள்
-
By தமிழ் சிறி · Posted
விழுந்த லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை, ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும், அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான். அவனிடம் அதிக பணம் கையில் இருந்ததை கண்டு, பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்.. அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது. மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும், அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்... வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஒரு தொழிற்சாலைக்கு... பொருட்களை வாங்குபவர்கள் தான் முதலாளி என்ற, கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால், பத்து வாடிக்கையாளரை இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள். ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே... பத்துப் பேருக்கு... அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு. அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது. வாங்கிய புதுக் காரை... புது நண்பன், இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய், திருத்த முடியாத அளவுக்கு, விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து... மிஷேல்... மேலும் இடிந்து, போனான். வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்... வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை, குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று... வங்கி அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில் விற்று விட்டது. இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று, மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார். மிஷேலுக்கு... 🌠 வெள்ளி திசை 🌟 அடித்து, 🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று.... எல்லாம் போன பின்தான்... மெல்ல புரிய ஆரம்பித்தது. 😎 ➡️ தொடரும்.... ✍️
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.