Jump to content

ஹவானா டைம்ஸ் இல் உருத்திரகுமாரன் பேட்டியும் முள்ளி வாய்க்காலுக்கு கப்பல் வரும் போன்ற முட்டாள் ஆக்கும் வேலையும்


Recommended Posts

by Sos Tamils on Friday, 07 October 2011 at 02:55

ஹவானா டைம்ஸ் இல் உருத்திரகுமாரன் பேட்டியும்

முள்ளி வாய்க்காலுக்கு கப்பல் வரும் போன்ற

முட்டாள் ஆக்கும் வேலையும்

எனது தகவல்கள் பிழையாக இருந்தால் அறிவியுங்கள் .

அல்லது குறிப்பிடுங்கள்

  1. இந்த ஹவான டைம்ஸ் இணைய ஆசிரியர் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு Blog வைத்திருக்கின்றார் அதன் பெயர் http://circlesonline.blogspot.com/ . அவரது profile ஐ அந்து வருடத்தில் பார்வை இட்டோர் தொகை என்ன தெரியுமா . 5332 . மேலே உள்ள இணைப்பில் நீங்களே பார்க்கலாம் .
  2. ஹவான டைம்ஸ் ஆசிரியர் Circles ராபின்சன் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கியூபாவில் குடியேறி பின்னர் கியூபாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அமெரிக்க்கராகும் ஆதாரம் CNN . http://edition.cnn.com/2009/TRAVEL/03/02/havana.localview/index.html
  3. இந்த ஹவான டைம்ஸ் கியூபாவுக்கு எதிராக அமெரிக்காவில் , அமெரிக்கரால் நடத்தப்படும் ஒரு பத்திரிகை .
  4. இந்த பத்திரிகைக்கு கியூபாவில் தடை விதிக்கப்படுள்ளது .
  5. இப்பொழுது புரிகின்றதா எவ்வளவு தூரம் முட்டாளாக்கப் படுகின்றோம் என்று , தொடர்ந்து படியுங்கள் சுவாரசியமான விடயம் இது .

வடிவுக்கரசி என்ற அசிங்கமான பெண்போல ,

தருமர் என்ற பெயரில் உள்ள திருடன் போல ,

மகாலக்சுமி என்ற பெயரில் உள்ள தரிதிரவதி போல ,

கண்ணகி என்ற பெயரில் உள்ள விபச்சாரி போல ,

இந்த ஹவானா டைம்ஸ்

ஒன்றும் கியூபாவிலோ ,

அல்லது ஒரு கியூபனாலோ

அல்லது கியூபாவுக்கு ஆதரவாகவோ

நடத்தப்படும் பத்திரிக்கை

என நீங்கள் நம்பி இருந்தால் இன்னொரு தடவை ஏமார்ந்தீர்கள் போங்க .

இந்த ஹவன ரைம்ஸ்

கியூப அரசுக்கு எதிராக ,

கியூபன் அல்லாத ஒருவராலும்

கஸ்ரோ ஆட்சிக்கு எதிரானவர்களாலும் ,

கியூபாவுக்கு வெளியே நடாததப்படும் பத்திரிகை .

ஆதாரங்களுடன் கீழே உண்டு படியுங்கள் . பரவசம் அடையுங்கள் .

கியுபாவில் உள்ள ஆட்சியை கவிழ்ப்பதற்கும் , கஸ்ரோவைக் கொல்வதற்கும்வேலை செய்பவர்க்ளூடாக கஸ்ரோவினதும் இலத்தீன் அமெரிக்க நாடுகளினதும் ஆதரவைப் பெறப் போகின்றோம் என்ற மாயையை ஹவானா டைம்ஸ் என்ற பேட்டி செய்தி ஊடாக திரு உருத்திர குமாரன் அண்மையில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றார் . ஆதாரம் http://www.havanatimes.org/?p=52152

சற்று கோபப்படாமல் நான் சொல்ல வருவதைப் படியுங்கள் . கற்பனாவாத கனவுகளால், கப்பல் வரும் என அழிந்த புலம் பெயர் முள்ளிவாய்க் கால் வந்து விடக் கூடாது என்பதே என் நோக்கம் . தெரிந்தோ தெரியாமலோ இது நடக்கின்றது புரிகின்றது .

"ஹவானா டைம்ஸ்" HT இல் எழுதியதற்காக பதவி பறி போன கியூப பல்கலைக் கழக பேராசிரியர் கதை முதல் ஏராளம் உண்டு .

ஆதாரத்துடன் கீழே உண்டு , அதற்கு முன் சில குறிப்புக்கள் .

இந்த பத்திரிகை ஊடாக கியூபாவின் ஆதரவைப் பெற முடியாது , இலத்தீன் அமெரிக்க அரசுகளின் ஆதரவைப் பெற முடியாது ஏனெனில் அவர்கள் அந்த அரசுகளுக்கு எதிரானவர்கள் . இது நாடுகடந்த அரசை ஆதரித்துக் கொண்டு , அல்லது புலிகளை ஆதரித்துக் கொண்டு சிறீலங்காவை நட்புநாடாக்க முனையும் செயல் எப்படி இருக்குமோ அதை ஒத்த பேட்டி தான் பிரதமர் அண்மையில் கொடுத்த பேட்டி . கியூபாவினதும் , மற்றைய இலத்தீன் அமெரிக்க நாடுகளினதும் , உலக நாடுகளினதும் நட்பு எமக்கு அவசியம் .

"எவர் எவரை அனுகுகின்றோமோ அவர் அவரை அவர் அவர் சார்பு முகங்களூடாக அணுகுவதை " தனிப்பட்ட வாழ்வில் கன கச்சிதமாக நடத்த தெரிந்த உருத்திர குமாரன் எப்படி இதில் தவறினார் ? அல்லது இந்த "பீத் " தமிழ் பெடியள் எங்கே ஹவான டைம்ஸ் பற்றி பார்க்க போகினம் , இவனுகள் எங்கை "ஆங்கிலிசா " படிக்கப் பூரான்கள் எங்கடை "இணைய ஊடக சிப்பாய்கள்" உதவியுடன் புளுடாவோடை புலுடாவை இன்னொரு புலுடா விடுவம் , கிளுகிளுப்பாய் வைச்சிருந்தால் சரி காரியம் நடக்குமா? என்று ஆராயுற குணம் இல்லாத மர மண்டையல் இதுகள் என்ற நினைப்போ தெரியவில்லை .

சரி இனி விடயத்துக்கு வருவோம் ,

Havaana Times கடந்த இரண்டு வருடங்களாக (2009 முதல்) கியூபாவுக்கு வெளியே இருந்து , கியூப ஆட்சியாளர்களுக்கு எதிராக , கியூபர் அல்லாத வெளியாகும் இணையப் பத்திரிகை . பத்திரிகையின் , முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி அதன் ஆசிரியர் Circles Robinson அவர்களால் 15 Oct 2009 எழுதப்பட்ட கட்டுரை http://www.havanatimes.org/?p=15046 இல் இருந்து முக்கியமான வரிகளை அப்படியே பிரதி செய்து அதன் பின் தமிழில் தருகின்றேன் .

  1. Nicaragua, where I have lived since my Cuban residency ran out in June ---கியூபாவில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட பின் நான் நிக்ககூவாவில் இருந்து எழுதி வருகின்றேன்
  2. (Freedom of the press NOT in Cuba)--கியூபாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை
  3. one of our writers was summarily fired from his job as a professor, one of the reasons given was his writing in Havana Times.--எமது இணையத்தில் எழுதிய பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார் , சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று ஹவானா டைம்ஸ் இல் வேலை செய்தமை .
  4. I also had problems at my work place, which I was dependent on for my residency in கியூபா---எனக்கு வேலை இடத்தில் பிரச்சனைகள் தரப்பட்டது . கியூபாவில் வசிப்பதற்கு உரிய வதிவிட அனுமதிக்கு அந்த வேலை அவசியம் .
  5. no distribution of this kind would ever be approved in Castro’s கியூபா--இது போன்ற பத்திரிகையை காஸ்ரோவின் கியூபா ஒரு பொழுதும் அனுமதிக்காது .
  6. (Fidel and Raul like to control and restrict the flow of information ---பிடலும் -ராகுலும் செய்திப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தி , செய்தி மக்களை சென்றடைவதை மட்டுப்படுதுபவர்கள் .
  7. he government rarely tells anyone “directly” to not do something, they would just get arrested --கியூப அரசு எதனை எழுத வேண்டாம் என்று சொல்வதில்லை ஆனால் அவர்கள் கைது செய்து விடுவார்கள் அவ்வளவு தான் .
  8. கியூபாவில் பிரபலமான ஹவான ஜெர்னல் என்ற பத்திரிக்கை வேறு ஹவான டைம்ஸ் வேறு .
  9. ஹவான ஜெர்னல் , இந்த ஹவான டைம்ஸ் கியூப விரோதப் போக்கு பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை 2009 அக்டோபரில் எழுதி உள்ளது இந்த இணைப்பில் படிக்கலாம் . http://havanajournal.com/culture/entry/havana-times-publisher-circles-robinson-looses-job-and-leaves-cuba/

ஹவானா டைம்ஸ் என்பது வெளியிட்ட ஒரு கட்டுரையில் இவ்வளவும் உண்டு . அந்த இணையத்துக்கு சென்று உலாவினால் அடடா அரப்பு அரைச்சிட்டாங்களே என்று அழுவீர்களோ , சிரிப்பஈர்களோ எனக்குத் தெரியாது . நான் என் நண்பர்களுடன் மூச்சடக்க சிரித்துக் கொண்டேன் .

உங்களை மாதிரி மக்களுக்கு எங்களை மாதிரி தல்லைவர்கள் போதுமடா

என கவுண்டனும் செந்திலும் ஏதோ ஒரு படத்தில்

சொன்னதை சொல்லி விழுந்து விழுந்து சிரித்தோம் .

சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் சாமியளா,

" எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு " ,

சாமிகளா கையோட விளக்கத்தையும் சொல்கின்றேன் .

எதையும் தீர ஆராய்ந்து உண்மையை அறிவதே அறிவுடமையாகும் .

.

கியூபாவைப்றி இதனை அவதூறுகளை பரப்பும் இணைய உதவியோடு , கியூபாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அமெரிக்கர் ஒருவர் நடத்தும் இணைய உதவியோடு கியூப உறவு வரும், இலத்தீன் அமெரிக்க உறவு வளரும் என மக்களை ஏமாற்ற துணை போகும்

இணையங்களே ,

அரசியல் அறிவு சூநியங்களே

நிங்கள் தானா அமெரிக்க கப்பல் வரும் ,

என சொன்னவர்கள் என்ற சந்தேகம் எனக்கு வலுக்கின்றது .

தெரிந்து செய்கின்றிர்களா ?

அல்லது அறியாமையா ?

பரம பிதாவே , எல்லாம் வல்ல சிவனே , இறவன் தூதன் நபியே ........

எத்தனை பேரப்பா இருக்கிறியள் யாரவது வரமாட்டீங்களா ????

என் இனத்தின் விடுதலைக்கு உதவமாட்டிங்க்களா ?

எனது தகவல்கள் பிழையாக இருந்தால் அறிவியுங்கள் .

அல்லது குறிப்பிடுங்கள்

முகப்புப் புத்தக இணைப்பு ஒன்றில் இருந்து, உங்கள் கருதுக்கள் என்ன? நாடு கடந்த்த அரசுடன் தொடர்புள்ளவர்கள் அவர்களுக்கு இதனை கவனித்தில் கொண்டு வாருங்கள்.

Link to comment
Share on other sites

தெரிந்து செய்கின்றிர்களா ?

அல்லது அறியாமையா ?

பரம பிதாவே , எல்லாம் வல்ல சிவனே , இறவன் தூதன் நபியே ........

எத்தனை பேரப்பா இருக்கிறியள் யாரவது வரமாட்டீங்களா ????

என் இனத்தின் விடுதலைக்கு உதவமாட்டிங்க்களா ?

எனது தகவல்கள் பிழையாக இருந்தால் அறிவியுங்கள் .

அல்லது குறிப்பிடுங்கள்.

நாரதரே

கியூபாவுக்கு எப்போதாவது போயிருக்கிறீர்களா? கியூபா இலங்கை போல வறிய நாடு. ஐ.நா. மனிதஉரிமை அமைப்பில் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக செயற்பட்ட நாடுகள் இரண்டு: கியூபாவும் பாகிஸ்தானும் தான் அந்த நாடுகள்.

ருத்திரகுமாரன் கியூபா தமிழீழத்துக்கு ஆதரவு தரும் என்று நம்பும் அளவுக்கு முட்டாளல்ல. அவரது செவ்வ நியூ யோர்க் நகரில் வைத்து நீங்கள் 'கண்டுபிடித்தது' போல புலம்பெயர்ந்த கியூபா மக்கள் படிக்கும் பிடல் காஸ்ரோவுக்கு எதிரான ஆங்கில மொழியிலான செய்தித்தாளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கியூபாவின் மொழி இசுபானிய மொழி.

ஆகவே இப்போது உங்களுக்கு ஒரு புதிய வேலை காத்திருக்கிறது. கியூபா தமிழீழம் பெற்றுத்தரும் சாத்தியம் இல்லையென்றால் ருத்திரகுமாரன் ஏன் இந்த செவ்வியை கொடுத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியுமா?

எல்லா கடவுள்களையும் அழைத்திருக்கிறீர்கள். அவர்கள் செய்யாத சின்ன உதவியாக ஒரு தகவல் உங்களுக்கு: கியூபா வறியநாடாக இருப்பதற்கு காரணம் அமெரிக்காவின் பொருளாதார தடை.

வணங்காமண் கப்பலையாவது கண்டுபிடித்து விட்டீர்களா?

Link to comment
Share on other sites

”கியூபா வறியநாடாக இருப்பதற்கு காரணம் அமெரிக்காவின் பொருளாதார தடை.”

அப்பிடீங்கிறீங்க யூட்??

கியூபா வறிய நாடா ஆனதுக்கு அமெரிக்கா காரணம்... ரைட்டு.!!.......

பட்..........கியூபா இன்னுவரை வறியநாடா இருப்பதற்க்கு காரணம் ,,,

அமெரிக்கா இல்ல...........

இன்னும் அது நம்பிகிட்டு இருக்குற ,, இத்துப்போன கம்யூனிசம்!!

Link to comment
Share on other sites

”கியூபா வறியநாடாக இருப்பதற்கு காரணம் அமெரிக்காவின் பொருளாதார தடை.”

அப்பிடீங்கிறீங்க யூட்??

கியூபா வறிய நாடா ஆனதுக்கு அமெரிக்கா காரணம்... ரைட்டு.!!.......

பட்..........கியூபா இன்னுவரை வறியநாடா இருப்பதற்க்கு காரணம் ,,,

அமெரிக்கா இல்ல...........

இன்னும் அது நம்பிகிட்டு இருக்குற ,, இத்துப்போன கம்யூனிசம்!!

- பொதுவுடமை என்பது அந்த தூய வரைவிலக்கணப்படி எந்த நாட்டிலும் கிடையாது. சீனா, வட கொரியா, கியூபா போன்றன தமது நாடுகளில் திறந்த பொருளாதார கொள்கைகளையும் சிறு பகுதிகளில் உள்ளடக்கி உள்ளன.

- அண்மையில் கியூபா மேற்குகல பொருளாதார கொள்கைகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. புலோரிடா மாநிலம் கியூபாவிலிருந்து மிக அருகாமையில் உள்ளதும் அந்த மக்கள் மீது அமெரிக்க தடை உள்ளதும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய தடை.

- ஒருநாள் காஸ்ரோ இறந்தபின் நாடு மீது அமெரிக்கா செல்வாக்கு அதிகரித்து காலப்போக்கில் அதன் ஒரு உத்தியோகபூர்வற்ற மாநிலமாக வரும், போர்ட்டோ ரிக்கோ போன்று.

Link to comment
Share on other sites

//முகப்புப் புத்தக இணைப்பு ஒன்றில் இருந்து, உங்கள் கருதுக்கள் என்ன? நாடு கடந்த்த அரசுடன் தொடர்புள்ளவர்கள் அவர்களுக்கு இதனை கவனித்தில் கொண்டு வாருங்கள். //

முதலில் நான் எழுதியதை மீண்டும் வாசித்து விட்டு எழுதவும், தெளிவாக எனது முகப்புப் புத்தக இணைப்பில் இருக்கும் Sos Tamils என்பவரால் எழுதப்பட்டதை இங்கு போடுகிறேன், நாடுகடந்த அரசின் கவனத்துக்கு என.

கியுபா இருக்கும் அமெரிக்கக் கண்டத்தில் இருப்பவர்களுக்கு நாங்கள் அய்ரோப்பாவில் இருந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்க்கு அமோக ஆதரவு வழங்கிய நாடுகளில் கியுபா ஒன்றாக இருக்கிறது, அதற்க்குக் காரணம் சிறிலாங்கா, கியுபாவின் அமெரிக்க எதிர்ப்பை வெகுவாகப் பாவித்து உள்ளது.பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதினிதிகள் கியுபாப் பிரதினிதியுடன் பேசி அவருக்கு எமது போராட்டம் பற்றி விளக்க முனைந்த்தனர்.ஆனால் அவருக்கு எமது மக்களுக்கு என்ன நடந்தது எமது போராட்ட வரலாறு ஒன்றும் தெரியாது.

சேயை தலையில் தூக்கி வைதிருக்கும் நாம், எமது பொதுவுடமைக் கட்சிகள், வட அமெரிக்காவில் இருக்கும் நாடு கடந்த அரசு என எவராவது இந்த தப்ப பிப்பிராயங்களை நீக்க முயற்சி செய்தார்களா? உருதிரகுமாரனின் பேட்டியை முதலில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் இவரவது சரியான வழியில் காய் நகர்துகிறார் என்று அதன் பின்னர் முக நூல் வழியாக இந்தக் கட்டுரை கண்ணில் பட்டது ,அதன் இணைய இணைப்புக்களைப் பார்த்து அவை சரியான தகவல் என உறுதி செய்தபின் இங்கு இணைத்தேன்.அதன் நோக்கம் நாம் சரியான வழியில் உண்மைகளைப் பேசி செயற்பட வேண்டும் என்பதால்.

மற்றும் வணக்காமண் பற்றி அதை செய்தவர்களிடம் தான் கேட்க்க வேண்டும்.<p class="rep_bar clearfix right" id="rep_post_695367">

  • 0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.