Jump to content

ஆப்பிள் சாப்பிடுங்க


Recommended Posts

ஆப்பிள் எனும் அருமருந்து

ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம்.

ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.

பயன்கள்

கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.

ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' (ளூரநசஉநவin) அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.

குறைகள்

ஊட்டச்சத்துகள், பிற பழவகைகளை ஒப்பிடும் போது ஆப்பிளில் குறைவு

ஆப்பிளின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்ச சொச்சங்கள் இருப்பது.

ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிளை அப்படியே எடுத்துக் கொள்வதும் உண்டு. சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்தும் உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம்.

ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம். ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிடுவது நல்லது.

From:webulagam.com

Link to comment
Share on other sites

ஆப்பிள் இனி வீட்டில் இருந்த மாதிரி தான் :wink:

நன்றி தகவலுக்கு...

Link to comment
Share on other sites

ஆப்பிள் இனி வீட்டில் இருந்த மாதிரி தான் :wink:

ஏனம்மா தூக்கி எல்லாத்தையும் வெளியிலை ஏறியப்போறீங்களா.. ஆப்பிளின் பயன்கள் எவ்வளவற்றை சொல்லியிருக்கிறார் எங்கடை விஜயை நீங்கள் என்னடா எண்டால்.........

Link to comment
Share on other sites

ஏனம்மா தூக்கி எல்லாத்தையும் வெளியிலை ஏறியப்போறீங்களா.. ஆப்பிளின் பயன்கள் எவ்வளவற்றை சொல்லியிருக்கிறார் எங்கடை விஜயை நீங்கள் என்னடா எண்டால்.........

இல்லை அங்கிள். தேடுவர் அற்று இருந்த ஆப்பிள்கள் எல்லாம் இனி வறுத்தும் துவைத்தும் உணவாகப்போகுது என்று சொல்ல வந்தேன். நீங்கள் வேறை....................

Link to comment
Share on other sites

இல்லை அங்கிள். தேடுவர் அற்று இருந்த ஆப்பிள்கள் எல்லாம் இனி வறுத்தும் துவைத்தும் உணவாகப்போகுது

ஜயோ இனி அவ்வளவுதான்..........surprize_2910.gif

Link to comment
Share on other sites

ஆஹா பாடசாலை நாட்களில் என்ட மத்தியான சாப்பாடு அநேகமாக அதுதான். ஆனால் எனக்கு இவ்வளவு விடயும் இருக்கு என்று தெரியா. சரி இனி ஒவ்வொரு நாளும் சாப்பிடுறன் தகவலுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிடுவது நல்லது

அப்பிளின் சத்துக்களில் அதிகளவு தோலின் கீழ்ப்பகுதியில் இருப்தாக படித்த ஞாபகம். நீங்கள் அதனை நீக்கச் சொல்கிறீர்கள் :roll: :roll:

Link to comment
Share on other sites

ஆம் அப்பிளைத் தோலுடன் சாப்பிடுவதே சிறந்தது. தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்ற பயமிருந்தால் அப்பிளை நன்றாக கழுவிவிட்டு பின் சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்ற பயமிருந்தால் ...

பூச்சியைப் பிடித்து ஆப்பிலின் மீது விட்டுட்டு, பூச்சி சாகிறதா என பரிசோதித்து விட்டுச் சாப்பிடுங்கள்!! :)

மற்றும் சாப்பிடும்போது "ஆப்பிள் பெண்ணே நீ யாரோ? ..." பாடியபடி சாப்பிடுங்கள்!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கோ சாப்பிடுங்கோ

Apple%20exposition.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.