Jump to content

நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

நீலம்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

தோழி

காலமாய் நுரைகள் உடைகிற மணலில்

சுவடுகள் கரைய

சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?

கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்

நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.

மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்

உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.

ஆண்டு பலவாகினும்

நரையிலா மனசடா உனக்கென்றாய்.

தோழி

இளமை என்பது வாழும் ஆசை.

இளமை என்பது கற்றிடும் வேட்கை.

இளமை என்பது முடிவிலா தேடல்;

இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.

இளமை என்பது வற்றாத ரசனை

இளமை என்பது நித்திய காதல்.

இளமை என்பது

அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

Link to comment
Share on other sites

ஐய்ய்.. இது நல்லா இருக்கே..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளமை ஊஞ்சலாடுகின்றது,

இடமிருந்து வலமாக!

இளமை என்பது இதயத்தின் துடிப்பு!

இளமை என்பது, இரவின் கூவல்!

இளமையின் கண்ணில், விம்பம் அசையும்!

இளமையின் பார்வையில், உலகம் இனிக்கும்!

இளமை போயினும், நினைவுகள் வாழும்!

நினைவின் காலத்தில், விம்பம் உறையும்!

இதயத்தின் துடிப்பும்,மெதுவே நகரும்!

நினைவுகள் மட்டும், உயரே பறக்கும்!

இறக்கைகள் கூட மெதுவாய் வலிக்கும்!

இளமை, இன்னும் ஊஞ்சாலாடுகின்றது!

வலமிருந்து இடமாக!

உங்கள் கவிதை அருமை, வ.ஐ.ச.ஜெயபாலன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Poet பகிர்வுக்கு,

புங்கை அசத்துறீங்க, மனதுக்கு ஏது வயசு, நினைவுகளில் & பழகும் நண்பர்களில் தங்கியிருக்கு,

Link to comment
Share on other sites

அன்புக்குரிய இசைக்கலைஞன் புங்கைஊரான், உடையார், நுணாவிலான் உங்களுக்கு என் நன்றிகள். இப்போதெல்லாம் கவிதை வாசிக்கிறவர்கள் கருத்துச் சொல்கிறவர்கள் குறைந்துவிட்டது. உற்சாகமாக இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய இசைக்கலைஞன் புங்கைஊரான், உடையார், நுணாவிலான் உங்களுக்கு என் நன்றிகள். இப்போதெல்லாம் கவிதை வாசிக்கிறவர்கள் கருத்துச் சொல்கிறவர்கள் குறைந்துவிட்டது. உற்சாகமாக இல்லை

யார் சொன்னது?

இங்கு பதிவிடப்படும் கவிதைகளை வாசிக்கிறோம் பொயட்

கருத்தெழுவதுதான் குறைவு....நீங்கள் உற்சாகமாக எழுதுங்கள். :)

Link to comment
Share on other sites

நீலம்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

அழகான வரிகள் அண்ணா....நல்ல கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைக்கு கருத்த எழுத என்னைப்போல் பயந்தும் இருக்கலாம் அல்லவா?

கவிதை நல்லாயிருக்கு என்று நான் சொன்னால் சிரிப்பு வராதா தங்களுக்கு?

கவிஞர்க்கு அழகு கோபம்

பிடித்திருக்கிறது - உங்களை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைகளைப் பிரதி எடுத்துவைத்து வாசித்துவாசித்து மகிழ்ந்தவன்...உங்களின் "அம்மா" கவிதை எத்தனைதடைவை வாசித்திருப்பேன்...தோற்றுப்போனவர்களின் பாடல்...என்னத்தைச்சொல்ல...தமிழ் துள்ளிவிளையாடும் உங்கள் கவிதைகளை வாசித்த பின் மனம் மயங்கி எதுவும் எழுத வார்த்தைகள் வருகுதில்லையே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் திண்ணையில் இந்தக் கவிதையைப் பதிந்தபோதே பிடித்திருந்தது. !

Link to comment
Share on other sites

.........................................

நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.

...........................................................................

............................................................................

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

குறும்பான, யதார்த்தமான வரிகள் நன்றாக உள்ளது. சில வரிகளில் பலபொருள் அடக்கம்.

தலைப்பும் நிறத்தைத்தான் குறிக்கிறதா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீலம்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

சும்மா முசுப்பாத்தி விடாதையுங்கோ,

"வாழுகிறது" என்பது என்ன எண்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

அதை பற்றியும் கவிதை சொல்லுங்கோவன். பிறகு சொல்லுகிறான் எனக்கும் வாழும் வயசோ அல்லது வாழ்ந்த வயசோ, அல்லது இனித்தான் ...ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய இசைக்கலைஞன் புங்கைஊரான், உடையார், நுணாவிலான் உங்களுக்கு என் நன்றிகள். இப்போதெல்லாம் கவிதை வாசிக்கிறவர்கள் கருத்துச் சொல்கிறவர்கள் குறைந்துவிட்டது. உற்சாகமாக இல்லை

வணக்கம் பொயட் யாழில் கருத்தெழுதும் எல்லோரையும் கலாய்க்கிறோம் உங்களை விட்டுவிடுவோமா என்ன.... இதை வாசித்துப்பாருங்கள் உங்கள் கவிதையை எப்படி மாற்றி அமைத்திருக்கிறேன்...ஹிஹி

போக்கிரித்தோழனே!,

நரையில்லா மனசுடன்

காலங் காலமாய்

நுரைகள் உடைகிற மணலில்

சுவடுகள் கரைய....

சிப்பிகள் தேடிய உலா

இன்னுமா உனக்குள்

உயிர்த்துக்கிடக்கிறது...

நீயோர் திசையிலும்

நானோர் திசையிலும்

காலநதிப் பிளவில்

காணாமல் போய்

ஆண்டுகள் பலவாகி

மீண்டோம்.

கடலிலும் வானிலும்

தொடர்கிற நீலமாய்

நம்மிலும் ஏதோ

படர்கிற தென்றாய்..

கொத்திய நாரையின்

அலகு பிளந்து

குதித்த மீனின் களிப்பில்

இதயம் பேசியது.

தோழீ...

உனக்கு அரிதாரம் பூசத்தெரியாதா என்றாய்

தோழனே...

நட்புக்குள் எதற்கு அரிதாரம்?

பொயட் இனிமேல் உற்சாகமாக கவிதை எழுதுங்கள். திரையுலகத்தோடு திசைமாறிப்போய்விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

நீலம்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

தோழி

காலமாய் நுரைகள் உடைகிற மணலில்

சுவடுகள் கரைய

சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?

கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்

நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.

மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்

உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.

ஆண்டு பலவாகினும்

நரையிலா மனசடா உனக்கென்றாய்.

தோழி

இளமை என்பது வாழும் ஆசை.

இளமை என்பது கற்றிடும் வேட்கை.

இளமை என்பது முடிவிலா தேடல்;

இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.

இளமை என்பது வற்றாத ரசனை

இளமை என்பது நித்திய காதல்.

இளமை என்பது

அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

ரொம்பவும் இரசிக்க வைக்கும் வரிகள்!

மனதை இளமையாய் வைத்திருந்தால் ..... சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு தான்!:)

Link to comment
Share on other sites

அன்பின் விசுக்கு, உனக்கு என்னைப் பிடிக்கும் அதனால் நான் என்ன எழுதினாலும் பிடிக்கும் இல்லையா. சுபேஸ் நீங்கள் என் அம்மா கவிதையையும் அம்மாவையும் நினைவூட்டியதற்க்கு நன்றி. கிருபன் தமிழ் கவிஞர்களுக்கு கிடைக்ககூடிய உச்சப்பரிசு உங்களைப் போன்றவர்களின் அன்புதானே. தப்பிலி எல்லைகள் அற்ற எதுவும் நீலம் அல்லவா. நீலம் றோமான்ரிக்கான வர்ணம். வல்கனோ வாழ்க்கை என்பது நீங்கள் நினைத்து திருப்திபட்ட திருப்திப் படக்கூடிய காதலும் வீரமும் கருணையும் சேவையும் ஞானமும் மிக்க தருணங்கள்தான் என்று நினைக்கிறேன். வல்வை பதில் எழுது உந்துதல் அதிகரிக்குது. அதுசரி உங்கள் கணவர் அமைதியானவரா கோபக்காராரா? கவிதை நீங்கள் சொல்வது உண்மை. நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு தங்களைப் பாத்தித்த கவிதை என்று தமிழகத்தில் பலர் பாராட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் விசுக்கு, உனக்கு என்னைப் பிடிக்கும் அதனால் நான் என்ன எழுதினாலும் பிடிக்கும் இல்லையா. சுபேஸ் நீங்கள் என் அம்மா கவிதையையும் அம்மாவையும் நினைவூட்டியதற்க்கு நன்றி. கிருபன் தமிழ் கவிஞர்களுக்கு கிடைக்ககூடிய உச்சப்பரிசு உங்களைப் போன்றவர்களின் அன்புதானே. தப்பிலி எல்லைகள் அற்ற எதுவும் நீலம் அல்லவா. நீலம் றோமான்ரிக்கான வர்ணம். வல்கனோ வாழ்க்கை என்பது நீங்கள் நினைத்து திருப்திபட்ட திருப்திப் படக்கூடிய காதலும் வீரமும் கருணையும் சேவையும் ஞானமும் மிக்க தருணங்கள்தான் என்று நினைக்கிறேன். வல்வை பதில் எழுது உந்துதல் அதிகரிக்குது. அதுசரி உங்கள் கணவர் அமைதியானவரா கோபக்காராரா? கவிதை நீங்கள் சொல்வது உண்மை. நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு தங்களைப் பாத்தித்த கவிதை என்று தமிழகத்தில் பலர் பாராட்டுகிறார்கள்.

ஆகா... கவிஞருக்கு உற்சாகம் வந்துவிட்டது.... எழுதும் உந்துதலை அதிகரிக்கத்தானே உங்களை முன்னெப்போதுமே பார்த்திராதவள் பார்த்துப் பழகியவள்போல் கவிதை எழுதினேன்... :rolleyes:

ஆமா ஏன் கணவரை அமைதியானவரா கோபக்காரரா என்று கேட்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

”ஆமா ஏன் கணவரை அமைதியானவரா கோபக்காரரா என்று கேட்கிறீர்கள்? ”- வல்வை

பதில் கவிதை எழுதலாமா என தீர்மானிக்குமுன் ஒரு பாதுகாப்புக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

”ஆமா ஏன் கணவரை அமைதியானவரா கோபக்காரரா என்று கேட்கிறீர்கள்? ”- வல்வை

பதில் கவிதை எழுதலாமா என தீர்மானிக்குமுன் ஒரு பாதுகாப்புக்குத்தான்.

பதில் கவிதை எழுதமுன் பாதுகாப்பா?

என்ன கவிஞரே ஏடாகூடமாக ஏதாவது எழுத எண்ணமோ?...

என் கணவர் கோபக்காரரா என்று கேட்டிருந்தீர்கள்....

அவர் வார்த்தைகள் இன்றி என்னை வாசிக்கத்தெரிந்தவர்... அவர்தான் நான்... நானதான் அவர் என்னை நானே எப்படி கோபக்காரியா அமைதியானவளா என்று அறிவது? கவிஞரே.. நின்று குழம்புங்கள் :icon_idea: ஹாஹா

உங்கள் பதில்கவிதையை எழுதுங்கள் கவிஞரே முடிந்தால் நானும் என் கற்பனைகளைப் புடம்போட்டு பதில் வரைவுகளை தருகின்றேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவியே, என்பணி செய்துகிடப்பதே என்பதுபோல் தங்களுக்குக் காலமிட்டபணி கவிதை செய்துகிடப்பதே சோர்வடையாதீர்கள். தங்கள் கவிதையை நன்றென்றிடவோ அன்றேல் நன்றில்லை என்பதற்கோ எனக்கு பெரறிவு இருக்குதெனக் கூறமுடியாது.தயவு செய்து மன்னிக்கவும் "தோழா உனக்கெத்தனை வயசு தோழி எனக்குச் சாகும்வரைக்கும் வாழும்வயசு" எங்கிருந்திந்த வரிகள் வந்தது வாழ்கையின் வயதை ஒரு வரிக்குள் அடக்கி விட உம்மால் மட்டும்தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு கவிஞரும் (அன்பு)போரைத் தொடங்கினால் நனைவது நாமாக இருக்கும். தொடங்குங்கள்.

Link to comment
Share on other sites

நீலம்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

அதுக்கு பதில் ...

தோழி என்ன சொல்லிருப்பாள்? :rolleyes:

இதை வைச்சும் ஒண்ணு எழுதுங்க ,, கவிஞரே! :)

பை-த வே..............

நீங்களும் ,, எங்க தேச அடையாளம்! :)

Link to comment
Share on other sites

நன்றி வல்வை சாகீரா. விசுக்கு நல்ல யோசனைதான் ஆனாலும் எங்கோ உதைக்குது. நன்றி இள ஞாயிறு. என் கடன் கவிதை எழுதிக் ”கிடப்பதே” நல்ல அறிவுரைதான். ஆனால் புலவனும் வறுமையும் பிணைந்த ஈழத் தமிழ் கவிஞன்நான் என்பதை மறந்து பேசலாமா? அறிவிலி உங்கள் அன்பு மனம் வாழ்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.