Jump to content

வாகைசூடவா!


Recommended Posts

வித்யாசமா யோசிச்சுகிட்டே இருக்காங்க!

ரொம்ப புடிச்சிருக்கு இந்த படம்!

Player மாத்தி மாத்தி பார்க்கணும் , இரண்டுலயும்!!

http://speakfreevoipcalls.blogspot.com/2011/10/watch-vagai-sudava-2011-tamil-movie.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vaagaisoodavaa.jpg

அஞ்சறைப் பெட்டிக்குள் துளசி செடி முளைத்த மாதிரி அப்படியொரு படம். டைட்டிலிலேயே துவங்கிவிடுகிறது டைரக்டோரியல் டச்! சித்தாள் ஒருவர் தன் தலையில் தானே கல்லடுக்கிக் கொள்ளும் அந்த காட்சியை பார்க்கவே இன்னொரு முறை தியேட்டருக்கு போகலாம்.

66 களில் நடக்கிறது கதை. மகனை அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவுக்காக 'கிராம சேவக்' என்ற அமைப்பின் மூலம் 'கண்டெடுத்தான் காடு' கிராமத்திற்கு வாத்தியாராக போகிறார் விமல். சில மாதங்கள் வகுப்பெடுத்தால் சர்டிபிகேட்டும், கொஞ்சம் சம்பளமும் கிடைக்கும். இந்த சர்டிபிகேட் வாங்கினால் அரசு வேலை நிச்சயம். இந்த பழங்கால விதியின்படி அந்த கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு சந்திக்கும் பனித்துளி காதலும், படீர் திடீர் எதிர்ப்புகளும்தான் படம்.

ஏரியல் ஷாட்டிலிருந்து எண்ணி பார்த்தால் இருபது குடிசைகளும் ஒரே ஒரு செங்கல் சூளையும்தான் காட்சி பின்னணி. ஆனால் இதற்குள் எத்தனையெத்தனை வித்தைகள் காட்டுகிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்? வல்லவர்களுக்கு வெற்று சூனியம் கூட வெனீஸ்தான்!

கொத்தடிமைகள் போல குடும்பம் குடும்பமாக கல் அறுக்கிறார்கள் செங்கல் சூளையில். 'சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல புள்ளைங்களை அனுப்பி வைங்க. பாடம் சொல்லித் தர்றேன்' என்று கெஞ்சுகிற விமலை அலட்சியமாக நோக்குகிறது அந்த ஊர்(?) எப்படியோ போராடி அவர்களுக்கு சில கணக்குகளையும், எழுத்துக்களையும் சொல்லித் தருகிறார் அவர். கணக்கு கேட்காமலே வேலை செய்யும் இந்த அடிமைகள் வாத்தியார் வந்தபின் கணக்கு கேட்பது முதலாளி பொன்வண்ணனை உறுத்துகிறது. அவரது கண்ணசைவில் அடி பின்னி எடுக்கிறார்கள் வாத்தியாரை. அடிக்கு பயந்த வாத்தியார் ஊரை விட்டு போனாரா? இவர் மீது காதல் கொண்ட அந்த ஊர் அழகி இனியாவை ஏற்றுக் கொண்டாரா? சட்டென்று மழை நின்ற மாதிரி முடிந்து போகிறது படம். குடையை மடக்கிய பின்பும் குளிர் போகாதல்லவா? அதுதான் இந்த மொத்த படமும்...

இதுவரைக்கும் எங்கேயிருந்தாரோ இந்த இனியா. இனிமேல் தமிழ்சினிமாவின் மூச்சுக்காற்றில் இவரது பெயரும் எழுதப்பட்டிருக்கும். லேசாக இமைத்தால் கூட அதிலும் ஒரு அர்த்தத்தை போட்டு அசர வைக்கிறார் மனுஷி. வாத்தியாரின் ஓலை குடிசைக்கு வெளியே இருக்கும் மூங்கிலில் அப்படியே தலைசாய்ந்து நிற்கும் ஒய்யாரமும், தன் காதலை நாசுக்காக சொல்லி புரிய வைக்க முயலும் அழகும் கண்ணை விட்டு அகலாது. தன் காதல் அவருக்கு புரிந்துவிட்டதாக நினைத்து ஒரு நடை நடக்கிறாரே, ஹைய்யோ...! இதற்கு முன்பு ஓராயிரம் முறை கேட்டிருந்தாலும், 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலை இந்த படத்தில் கேட்கும்போது நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது.

தனது உடற்கட்டை நினைத்து பிரஸ்தாபிக்கும் விமலிடம் 'பால் வருமா சார்' என்று கேட்டு கதிகலங்கடிக்கிறாள் அந்த சிறுமி. ரேடியோவுக்குள் ஆள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை அக்கு வேறாக்குகிறார்கள் சிறுவர்கள். தன்னை முட்டுவதற்காகவே திரியும் கிடா ஆட்டையும், வம்படியாக வகுப்புக்கு வராமல் ஏய்க்கும் சிறுவர்களையும் சமாளிக்கும் விமல், அடைகிற அத்தனை அவஸ்தைகளும் அழகான நகைச்சுவை ப்ளே கிரவுண்ட்.

'டூ நாலெட்டு' தம்பி ராமய்யாவும் அவரது கணக்கும், சிரிப்பும், 'குருவி சத்தம் கேட்குது' என்று ஓடும் குமரவேலும், 'அவரு பைத்தியம் இல்லீங்க தம்பி' என்று கிராமத்து மனம் காட்டும் நம்பிராஜனும், ஆண்டையாக கம்பீரம் காட்டும் பொன்வண்ணனும், தென்னவனும் இன்னும் இன்னும் பெயர் தெரியாத அத்தனை சிறுவர்களும் நம் மனசில் கற்களை அடுக்கி பங்களாவே கட்டுகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிக்க வைக்கிறார் கே.பாக்யராஜ்.

நடிகர், நடிகைகளை நேர்த்தியாக தேர்ந்தெடுத்த சற்குணம், அதற்கு கொஞ்சமும் குறையாமல் தொழில் நுட்ப கலைஞர்களையும் துணைக்கழைத்துக் கொண்டிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டி.ஜிப்ரானின் 'போறானே...' 'சர சர சாரக்காத்து' பாடல்கள் இனிமை. பின்னணி இசையிலும் தனித்து நிற்கிறார். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒவ்வொரு பிரேமிலும் கூட கதையை சொல்லியிருக்கிறார். குறிப்பாக விமல் போன பின் அந்த குடிசையையே இனியா பார்த்துக் கொண்டிருக்கும்போது அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங். பீரியட் பிலிம்களில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக மிக அவசியமானது. அதை உணர்ந்து நிறைவு செய்திருக்கிறார் அவரும்.

இவர்கள்தான் இப்படி போட்டி போட்டுக் கொண்டு சபாஷ் பெறுகிறார்கள் என்றால் கிராபிக்ஸ் கலைஞர்களும் சளைக்கவில்லை. ஒரு காட்சியில் இனியாவின் முகத்தில் மினுக்கட்டாம் பூச்சியை பொட்டாக வைக்க நினைத்த சற்குணத்தின் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். குளத்தில் மிதக்கும் நிலவை அள்ளி பக்கத்தில் எறிகிறாரே விமல், அதிலும் கூட! இப்படி படம் முழுக்க ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்காத கிராபிக்ஸ்சும் கவர்கிறது.

'கமர்ஷியலா இல்லீயே....', 'மெசேஜ் சொன்னா புரியுமா நம்ம ஜனங்களுக்கு...' இப்படியெல்லாம் பேசி வம்பளப்பவர்கள் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும். இப்படம் வாகை சூடும்!

பொத்துங்க சார் ப்ளீஸ்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Tamilcinema.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி நன்றி பகிர்வுக்கு, தொடக்கம் கொஞ்சம் பார்த்தேன் அசத்தலா இருக்கு தொடக்கமே,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி - மீன் பனை மரத்தில் ஏறுமா? என்ன வகை என்று தெரியுமா?

விதைக்கல........... அறுக்கிறாய்........விதைக்கல........ அறுக்கிறாய்.............: இதைத்தான் பலர் செய்கிறம்

நல்லதொரு படம், வித்தியாசமா எடுத்திருக்கிறார்கள், இன்னும் பாதி பாக்கலை நாளைதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.