Jump to content

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கொதிரான இறுதி யுத்தத்தில் கருணாவின் படைகள். காணொளி

Recommended Posts

தலைவர் பிரிந்தாரா?

நான் எழுதியது ஈழத்தில் டெலோ plot என்று இயக்கம் தொடங்கிய உமா சிறியை பற்றி.

நீங்கள் டொரோண்டோ ம்ச்டோனல்ட்ஸ் இல் வேலை செய்யும் சிறியையும் உமாவையும் போட்டு குழப்பியுள்ளிர்கள் போல் உள்ளது.

இதுவரை நான் நினைத்தேன் கள்ள கடத்தலில் பெயர் போன குட்டுமனிணி ஆக்கள் எல்லாம் அங்கதவராக இருந்த டெலொவில் இருந்து தான் விடுதலைபுலிகள் உருவாக்கினார் என்று மற்றது எனக்கு மக்டெனாலில் வேலை செய்யும் சிறிக்கும் பெப்சி உமாக்கு என்ன தொடர்பு என்று எனக்கு தெரியாது.............

அப்போ விடுதலைப் புலிகள் இயக்கதில் இருந்த சிறி சபாரத்தினத்தை அடிச்சு வெளியேற்றியது?

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவையும், அதனைச் சுற்றியுள்ள கடலிலும் உள்ள எரிபொருள் வளங்கள் மீது யார் ஆதிக்கம் வைத்துள்ளார்களோ அவர்களுடன் சமரசம் செய்துகொள்ளத்தான் உலக நாடுகள் விரும்பும். அதனால்தான் தமிழினம் மோசமான அழிவுகளைச் சந்தித்தபோது சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருந்தன. தற்போது இந்த எரிபொருள் வளங்களுக்கு ஏகபோக உரிமையாளர் இலங்கையரசுதான். எனவே எரிபொருள் வளங்களையும் (பிற முதலீட்டு வருமானங்களையும்) பங்குகொள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் வேற்றுமைகளையும் கடந்து இலங்கையரசிற்கு ஒத்துழைக்கின்றன. மேற்கு நாடுகள் சார்ந்த புலம்பெயர் தமிழர்கள் போர்க்குற்றத்தை ஆயுதமாகக் கொடுப்பதற்கு மேற்கு நாடுகளின் பங்குபோடும் வலுவை அதிகரிக்கத்தான் உதவும். தங்களுக்குத் தேவையான பங்குகள் கிடைத்தால் மேற்கு நாடுகள் கூட பேசாமல் இருக்கும். இலங்கை அரசு இதையெல்லாம் நன்கு தெரிந்து காய்களை நகர்த்தி வருகின்றது. எதுவித பேரம் பேசும் சக்தியுமற்ற, கொள்கை ரீதியாக ஆதரவு தரக்கூடிய வலிய நாடுகளின் அனுசரணை கூடக் கிடைக்காத தமிழர்கள் ஐ.நா.வை நம்பி உரிமைகளை வெல்லலாம் என்பது நடக்ககூடிய காரியமாகப் படவில்லை.

Link to comment
Share on other sites

ஆகவேதான் நாம் முதலில் நமது தளத்தை சரியாக ஆராயவேண்டும். இல்லாவிடின் எதிர்காலத்தில் மீண்டும் ஒருதடவை இந்த இடத்திற்கு வந்து நிற்கவேண்டு வரும். அப்போது தமிழர்கள் இலங்கையில் இருப்பதே கேள்விக்குறியாக இருக்கும்

நன்றி கிருபன்.

எனது பார்வையில் நீங்கள் குறிப்பிடும் அந்த "எதிர்கால நாள்" புலிகள் அழிக்கப்பட்ட நாளே வந்துவிட்டது. அன்றிலிருந்து தாயக தமிழர்கள் அழிக்கப்பட்டே வருகின்றனர்.

ஏற்றுக்கொள்ளுவீர்களா?

Link to comment
Share on other sites

இலங்கைத்தீவையும், அதனைச் சுற்றியுள்ள கடலிலும் உள்ள எரிபொருள் வளங்கள் மீது யார் ஆதிக்கம் வைத்துள்ளார்களோ அவர்களுடன் சமரசம் செய்துகொள்ளத்தான் உலக நாடுகள் விரும்பும். அதனால்தான் தமிழினம் மோசமான அழிவுகளைச் சந்தித்தபோது சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருந்தன. தற்போது இந்த எரிபொருள் வளங்களுக்கு ஏகபோக உரிமையாளர் இலங்கையரசுதான். எனவே எரிபொருள் வளங்களையும் (பிற முதலீட்டு வருமானங்களையும்) பங்குகொள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் வேற்றுமைகளையும் கடந்து இலங்கையரசிற்கு ஒத்துழைக்கின்றன. மேற்கு நாடுகள் சார்ந்த புலம்பெயர் தமிழர்கள் போர்க்குற்றத்தை ஆயுதமாகக் கொடுப்பதற்கு மேற்கு நாடுகளின் பங்குபோடும் வலுவை அதிகரிக்கத்தான் உதவும். தங்களுக்குத் தேவையான பங்குகள் கிடைத்தால் மேற்கு நாடுகள் கூட பேசாமல் இருக்கும். இலங்கை அரசு இதையெல்லாம் நன்கு தெரிந்து காய்களை நகர்த்தி வருகின்றது. எதுவித பேரம் பேசும் சக்தியுமற்ற, கொள்கை ரீதியாக ஆதரவு தரக்கூடிய வலிய நாடுகளின் அனுசரணை கூடக் கிடைக்காத தமிழர்கள் ஐ.நா.வை நம்பி உரிமைகளை வெல்லலாம் என்பது நடக்ககூடிய காரியமாகப் படவில்லை.

உலகில் மாற்றங்கள் ஏற்படுவதுதான் வழமை. அதை மறுப்பது விபரீதங்களை தரும்.

அங்கு எரிபொருள் இருப்பது உறுதியானதாக இல்லை. அதிலும் எரிவாயு தான் உள்ளது, அதையும் ...

நீங்கள் சொல்வது படி பார்த்தால், சூடானுடனும் சமரசம் செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. தென்சூடான் பிரிக்கப்பட்டது. இல்லை லிபியாவில் இருந்த கடாபியை தொடர்ந்தும் வைத்து எண்ணெய் வளத்தை எடுத்திருக்கலாம், எடுக்கவில்லை.

எனவே உலகில் மாற்றங்கள் ஏற்படுவதுதான் வழமை.

Link to comment
Share on other sites

கருணா.. 500 பேரோடு போய் முள்ளிவாய்க்காலில்.. புலிகளை அழித்தார் என்பது.. ஒரு அபரிமிதமான தோற்றப்பாடு மட்டுமன்றி.. கருணா பற்றிய பிரமாண்டமான விம்பத்தை தோற்றுவிக்கும் ஒரு ஊடக தந்திரமும் அதில் அடங்கி இருக்கிறது. கருணா சிங்களவனுக்கு உதவி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதைச் சொல்வதற்கான தெளிவான ஆதாரங்களை சேர்ப்பது அவசியம். ஆனால் அதேவேளை.. முள்ளிவாய்க்காலின் முழுமையான நிகழ்ச்சித் திட்டத்துக்குள் நின்று கொண்டிருந்த.. பிராந்திய.. சர்வதேச சக்திகளின் நடவடிக்கைகளே கருணாவையும் ஒரு காரணியாகப் பாவிக்க சிறீலங்காவைத் தூண்டின.. என்பது வெளிப்படை யதார்த்தமாகும்.

நெடுக்ஸ் கருணாவா புலிகளா பலபெற்றவர்கள் என்ற கேள்வியே இங்கை வரவில்லை கருணாவை பொறுத்த மட்டில் போராட்டம் சிதைய வேண்டும் அதை குழப்ப 500 பேர் தேவை இல்லை 50 பேர் காணும்....... ஏன் எனில் குழப்புறவனுக்கு ஆள்பலம் தேவை இல்லை குழப்பி போட்டு ஓடி வந்து நிக்க ஒரு இடம் தேவை அது சிங்களவனிடம் கிடைத்தது ஆனால் புலிகளுக்கு கருணா செய்த அனைத்தும் தெரியும் ஆனால் சிங்களவன் பின்னால் ஒழிந்து நின்று சூழ்ச்சி செய்பவனை ஒன்றும் செய்ய ஏலாடஹ் நிலை( சில வேலை இன்னும் கொஞ்ச காலம் என்றால் கருனாவை எப்படியும் நெருங்கி இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை) அதே போல கருணா செய்த படுகொலைகள் கருணா பெயரில் செய்த சிங்கள அரசின் படுகொலைகள் அனைத்தும் கண்காணிப்பு குழுவுக்கும் அரசங்கத்துக்கும் புலிகளுக்கும் தெரியுமா ஆனால் பதில் என்ன? ஒரே பதில் தான் புலிகள் சமாதாணகாலத்தில் சில கலையெடுப்புக்கள் செய்தார்கள் அது அவர்களையே பதம் பார்த்து,,,,,,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்.

எனது பார்வையில் நீங்கள் குறிப்பிடும் அந்த "எதிர்கால நாள்" புலிகள் அழிக்கப்பட்ட நாளே வந்துவிட்டது. அன்றிலிருந்து தாயக தமிழர்கள் அழிக்கப்பட்டே வருகின்றனர்.

ஏற்றுக்கொள்ளுவீர்களா?

இன்னும் ஒரு சுற்றுப் போய்த்தான் எதிர்கால நாள் வரும்.

தமிழ் மக்கள் மூன்று/நான்கு இலட்சம் பேர் அழிக்கப்பட்டுவிட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் தமிழரின் தனித்துவ அடையாளங்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. எதுவித தடையுமற்று அரசாங்கம் தொடரும் வேகத்தைப் பார்த்தால் மகிந்த சிந்தனை விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்றுதான் தெரிகின்றது.

நாம் "பழங்கதைகளை" பேசிக் காலத்தைப் போக்குவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1.இலங்கைத் தீவில் சரிந்து கொண்டிருந்த.. இந்திய வல்லாதிக்கத்தின் நன்மதிப்பை காக்க.. மாலைதீவை இந்திய றோவின் திட்டத்திற்கு அமைய கைப்பற்றி.. சர்வதேச அரங்கில் இந்தியா இந்து சமுத்திரத்தின் பிரதான சக்தி என்று காட்ட எஜமானர்களின் எடுபிடிகளாக உழைத்து அழிந்தது புளொட். சொந்த மக்களுக்காகக் கூட சிங்களப் படைகளுக்கு எதிராக.. புளொட் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது கிடையாது.

2.விடுதலைப்புலிகள் ஏக பிரதிநிதித்துவக் கொள்கையை சிறீலங்காவுடனான பேச்சுக் களத்தில் பாவித்தார்களே அன்றி அரசியல் களத்தில் அல்ல. நியாயமான தமிழ் மக்கள் மீது தார்மீக அக்கறை கொண்டு செயற்பட்ட அனைத்து அரசியல் தலைமைகளையும்.. சிங்களமாகட்டும்.. முஸ்லீம் ஆகட்டும்.. தமிழாகட்டும்.. புலிகள் அரவணைத்தே வந்துள்ளனர்.

3.கருணா.. 500 பேரோடு போய் முள்ளிவாய்க்காலில்.. புலிகளை அழித்தார் என்பது.. ஒரு அபரிமிதமான தோற்றப்பாடு மட்டுமன்றி.. கருணா பற்றிய பிரமாண்டமான விம்பத்தை தோற்றுவிக்கும் ஒரு ஊடக தந்திரமும் அதில் அடங்கி இருக்கிறது.

4.உலகின் பெரிய ஜனநாயக தேசமான அமெரிக்காவில் கூட மக்கள் 100% ஒரு பொதுக்கருத்தடிப்படையில் இணைக்கிச் செயற்படுவதாக இல்லை. பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடே.. முக்கியமான அரசியல்.. கருதுகோள்களாகின்றன.

இந்த பதில்கள் தனியே நெடுக்கால் போவானை நோக்கியதல்ல,

1 இதே போன்ற இது போன்ற வாதங்கள், பலர் வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் என்ன சொல்லவருகிரார்கீர்கள், தனியே அர்ஜுன் நோக்கியதா, அல்லது புளட் நோக்கியதா?

இது என்ன மாதிரி என்றால் ஊசி போன இடம் தோடுவார் உலக்கை போனதை மறந்து என்பது போல. புளட் எஜமானி விசுவாசத்திர்ற்கு செய்தது, அதனால் தமிழ் ஆட்களுக்கு என்ன துன்பமோ தெரியாது- அதிலே மண்டு போன, இன்னும் சிறையில் இருப்பவர்களை தவிர,

இந்தாபார், ராஜீவ் காத்தியை கொல்லுகிறான் என்று கொல்லப்போய்- அது இன்னும் யார் செய்தது என்று தெரியாது என்றும் சொல்லுகிறார்கள், அதனால் யாருக்கு என்ன பலன்? உலகம் முழுக்க தடை, போற வார இடம் எல்லாம் நீதான் அக்லைதாவுக்கு தற்கொலை பழகினவன் என்று கேள்வி?

எண்ணுக்கனக்கில்லாம் சனம் செத்தாப்பிறகும் அவன் மாறுகிறதாய் தெரியவில்லை

கனடா போற்குர்ரத்திர்ற்கு எதிராக பிரேரணை ஒன்று கொண்டு வருகிறது என்றால், -வடிவாக தெரியும் அப்படி ஒன்று வாறது என்றால், இரண்டு பக்கத்திற்கும்தான் வரும் என, -போராட்டம் நடத்துகிறது, புலிகள் போர்க்குற்றம் செய்யவில்லை என்று. சிங்களவனுக்கு நல்ல வசதியாய் போச்சு, உங்கை பார் இவைதான் ஆக்கள் போர் குற்றம் கதைக்கிற ஆக்கள் என்று.

2. நீங்களே இப்படி சொல்லிச்சொல்லி உங்களையே மகிழ்வித்து கொள்ளுங்கள்

3. இதை ஏற்றுக்கொள்ளுகிறேன், இப்படி அவனும் செய்தான், இவனும் செய்தான் எண்டு சொல்லி, கடைசியில் எல்லாரும் போக வாயை பிளந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

4.பொதுக்கருத்தில் இணங்கி செயற்படுவது வேறு, அப்படி இணங்காதவரை, தண்டிப்பது, அல்லது அவன் பொது எதிரியொரு சேரும் மட்டும் தண்டிப்பது வேறு.

Link to comment
Share on other sites

கருணா பிரிவின் போது பல நண்பர்கள் இருந்தோம் அப்போது எங்களுடன் யாழ்ப்பாணதை சேர்ந்த ஒரு ஆசிரியரும் இருந்தார் நான் சொன்னேன் கருணா தனக்கு தானே குழிபறித்து விட்டான் என்று அதற்கு அந்த ஆசிரியர் சொன்னார் இனி கருணா நினைத்தாலும் கூட கருணா திருந்த முடியாது ஏன் என்றால் கருனா இருந்த பதவியும் ஊரும் சிங்களவனுக்கு வசதியாகிவிட்டது. எபப்டி டக்கிளஸ் ஊருக்கு 5 10 வைத்து புலிகளுக்கு தலையிடியைக் கொடுக்கிறானோ அதை விட மேலதிகமாக கருணாவல் புலிகளுக்கு தலையிடி இருக்கு. என்று சிங்க்களவன் சரியாக கருணாவை பயன்படுத்தி விட்டான்....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மாற்றங்கள் ஏற்படுவதுதான் வழமை. அதை மறுப்பது விபரீதங்களை தரும்.

அங்கு எரிபொருள் இருப்பது உறுதியானதாக இல்லை. அதிலும் எரிவாயு தான் உள்ளது, அதையும் ...

நீங்கள் சொல்வது படி பார்த்தால், சூடானுடனும் சமரசம் செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. தென்சூடான் பிரிக்கப்பட்டது. இல்லை லிபியாவில் இருந்த கடாபியை தொடர்ந்தும் வைத்து எண்ணெய் வளத்தை எடுத்திருக்கலாம், எடுக்கவில்லை.

எனவே உலகில் மாற்றங்கள் ஏற்படுவதுதான் வழமை.

புலிகளுடன் சமரசம் செய்யத்தானே நோர்வேயூடாக ஒப்பந்தம் வந்தது. ஆனால் அதீத நம்பிக்கையால் அதுவும் சரிவரவில்லை.

அதுதான் இலங்கையரசுடன் சமரசம் செய்துவிட்டார்கள்.. பான் கி மூன் அடுத்த நாலு வருடம் பதவியில் இருப்பார். அதுவரை இலங்கையை ஐ.நா.வால் கிள்ளக்கூட முடியாது!

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு சுற்றுப் போய்த்தான் எதிர்கால நாள் வரும்.

தமிழ் மக்கள் மூன்று/நான்கு இலட்சம் பேர் அழிக்கப்பட்டுவிட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் தமிழரின் தனித்துவ அடையாளங்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. எதுவித தடையுமற்று அரசாங்கம் தொடரும் வேகத்தைப் பார்த்தால் மகிந்த சிந்தனை விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்றுதான் தெரிகின்றது.

நாம் "பழங்கதைகளை" பேசிக் காலத்தைப் போக்குவோம்!

சரி ஏற்றுக்கொள்ளுகிறீர்கள் என மறைமுகமாக சொல்லுகிறீர்கள். நன்றிகள்.

நாம் எல்லோரும் எடுக்கவேண்டியது பேனாவை, அதனால் பலன்களும் நிறையவே வந்துள்ளன. எனவே, தொடர்ந்து எழுதுவோம், பரப்புரை செய்வோம், கைநாட்டுக்களை போடுவோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92450

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவையும், அதனைச் சுற்றியுள்ள கடலிலும் உள்ள எரிபொருள் வளங்கள் மீது யார் ஆதிக்கம் வைத்துள்ளார்களோ அவர்களுடன் சமரசம் செய்துகொள்ளத்தான் உலக நாடுகள் விரும்பும். அதனால்தான் தமிழினம் மோசமான அழிவுகளைச் சந்தித்தபோது சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருந்தன. தற்போது இந்த எரிபொருள் வளங்களுக்கு ஏகபோக உரிமையாளர் இலங்கையரசுதான். எனவே எரிபொருள் வளங்களையும் (பிற முதலீட்டு வருமானங்களையும்) பங்குகொள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் வேற்றுமைகளையும் கடந்து இலங்கையரசிற்கு ஒத்துழைக்கின்றன. மேற்கு நாடுகள் சார்ந்த புலம்பெயர் தமிழர்கள் போர்க்குற்றத்தை ஆயுதமாகக் கொடுப்பதற்கு மேற்கு நாடுகளின் பங்குபோடும் வலுவை அதிகரிக்கத்தான் உதவும். தங்களுக்குத் தேவையான பங்குகள் கிடைத்தால் மேற்கு நாடுகள் கூட பேசாமல் இருக்கும். இலங்கை அரசு இதையெல்லாம் நன்கு தெரிந்து காய்களை நகர்த்தி வருகின்றது. எதுவித பேரம் பேசும் சக்தியுமற்ற, கொள்கை ரீதியாக ஆதரவு தரக்கூடிய வலிய நாடுகளின் அனுசரணை கூடக் கிடைக்காத தமிழர்கள் ஐ.நா.வை நம்பி உரிமைகளை வெல்லலாம் என்பது நடக்ககூடிய காரியமாகப் படவில்லை.

அமெரிக்க சார்பு மேற்குலகம்.. இந்திய.. சீன.. ரஷ்சிய.. பங்குகளோடு சரிசெய்து கொள்ள முனையா. அதற்கு மாற்றீடான இன்னொரு மார்க்கத்தையும் அவை நோக்கும். அதில் இன்னொன்று இருக்கிறது.. இந்த வளங்கள் தமிழர் பகுதிக்குரியவை என்பதை மேற்குலகு நன்கு அறியும். அந்த வகையில் தமிழர்களை அணைத்து.. தங்களின் ஆளுமையை அங்கு அமையக் கூடிய தமிழர்களின் அரசியல் அலகு மீது செலுத்தி.. இந்திய.. சீன.. ரஷ்சிய.. சிறீலங்க.. நாற் தரப்பு ஆதிக்கத்தையும் தமக்கு ஏற்ற வகையில் கொண்டு வர பாவிக்க முனையும்.

ஆக.. இந்த எரிபொருள் வளம்... என்ற மகிந்தவின் அஸ்திரம்.. தமிழர்கள் அதனைக் கையாளும் தன்மையில் தான் அது தமிழர்களை அழிக்குமா.. அல்லது மகிந்தவின் தலையை குறிவைத்து திரும்புமா என்பது குறித்து சொல்ல முடியும்..!

தமிழர்களுக்கு இன்னொரு அம்சமும் இருக்கிறது. இந்த எண்ணெய் வளங்களை தோண்ட முற்பட்டால்.. அப்பகுதியில் வாழ்வாதார மீன் பிடியைக் கொண்டுள்ள.. தமிழக மீனவர்களும்.. மீன் வளங்களும் பாதிப்புக்களை சந்திக்க நேர்வதோடு.. தமிழக அரசுகளின் நீண்ட நாள் கனவான சேதுவும் செத்துப் போயிடலாம்..!

அதுமட்டுமன்றி.. மெக்சிகோ குடாவில்.. BP யின் கடலடி எண்ணைக் கிணறு சார்ந்து நிகழ்ந்த வெடி விபத்தில்.. ஏற்பட்ட மாசு போன்ற ஒரு நிலை உருவானால்.. அதன் பாதிப்பு.. தென்னிந்திய மீனவர்கள் மீதும் சிறீலங்கா மீனவர்கள் மீதும்.. மீன் வளம் மீது கடும் பாதிப்பை உண்டு பண்ணும். இது எண்ணொய் பூதத்தை நம்பி.. மக்களின் மடியில் கைவப்பது போன்றது. பின் அந்த எண்ணெய் பூதமே அரசுகளின் கவிழ்ச்சிக்கும்.. மக்களின் வாக்குகளை சேர்க்கலாம்.

இவற்றையும்.. மேற்குலகம் கவனிக்கும். மேற்குலகம் வெறும்.. அரசியல் சார்ந்து மட்டும் இராஜதந்திரம் வகுப்பதில்லை. அதன் கவனிப்பு சுற்றுச் சூழல்.. அரசியல்.. பொருண்மியம்.. சமூகம்.. இராணுவம்.. பிராந்தியம்.. என்று பல அரங்கில் இருக்கும். ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல.. SWOT.. PEST, என்று எத்தனையோ அலசல் முறைகளைக் கையாழும் மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள்.. இப்படியான விடயங்களில் பன்முக அணுகுமுறைகளைக் கையாண்டு.. தமது ஆதிக்கம் வலுப்பெறக் கூடிய நீண்ட கால வழிமுறைகளையும் குறுக்கால வழிமுறைகளையும்.. தெரிவு செய்வார்கள்.

தமிழர்கள்.. இந்தச் சூழலை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே அன்றி.. எதிரிகளுக்கு விலைபோகும் இணக்க அரசியல் வழியை மட்டும் தொடர்ந்து கடைப்பிடித்தால்.. மீட்சி என்பதற்கு இடமே இல்லை..! மகிந்த தனக்காக உந்தித் தள்ளி உள்ள எண்ணெய் பந்தை தமிழர்கள் சரிவர கையாண்டால்.. அதன் நன்மையை தமிழர்களே அதிகம் அடைய முடியும்..! அதில் தமிழக சொந்தங்களையும் இணைத்துக் கொள்வது.. அந்நிய கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்கள் பற்றி கவனம் செலுத்தவும் முக்கியம் அளிக்கவும்.. அதிகம் தூண்டும்.

அமெரிக்க எண்ணெய் தேவையை அதிகம் பூர்த்தி செய்யும்.. BP தற்போது ஐரோப்பா.. அமெரிக்கா கடந்து ஆசியா.. தெற்காசியா நோக்கி தனது எண்ணெய் தோண்டலை.. விரிவு படுத்தி வருகிறது...

http://www.bp.com/sectiongenericarticle.do?categoryId=171&contentId=2000620

post-2989-0-85406400-1318632238_thumb.jp

இது 2009 இல் BP. கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக மெக்சிகோ.. குடா வெடி விபத்தி ஏற்படுத்திய கசப்பான.. சூழல்களும்.. சுற்றுச் சூழல் விதிமுறைகளும்.. BP இந்தியா.. சீனா.. தெற்காசியா.. ரஷ்சியா நோக்கி திரும்ப வழிசெய்திருக்கிறது.

Link to comment
Share on other sites

அதுதான் இலங்கையரசுடன் சமரசம் செய்துவிட்டார்கள்.. பான் கி மூன் அடுத்த நாலு வருடம் பதவியில் இருப்பார். அதுவரை இலங்கையை ஐ.நா.வால் கிள்ளக்கூட முடியாது!

முதலில் ஐ.நா. ஒரு ஆணைக்குழுவை நியமிக்காது என்றோம் - நடக்கவில்லை.

அறிக்கை வெளியில் வராது என்றோம் - வந்தது.

வந்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பமாட்டார்கள் என்றோம் - அனுப்பிவிட்டார்கள்.

அடுத்து... விரைவில்.

Link to comment
Share on other sites

இங்கு நான் இந்த காணொளியை இணைத்தற்கு கொஞ்ம் பயன் இருக்கின்றது என நினைக்கிறேன். அடுத்ததாக சுகனின் கருத்துக்கள் உண்மையானவை அனைத்து இயக்கங்களுமே தவறுகள் விட்டிருக்கின்றன. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற நினைப்பிலேயே பொதுவாக எல்லா இயக்கங்களும் நடந்திருக்கிறார்கள். அதே நேரம் அர்ஜீன் சொல்வது போல புலிகள் தான் மற்றைய இயக்கங்களை முதலில் அழிக்க முற்பட்டது என்பது போலவும் அதனால்தான் அவர்களிற்கு வேறு வழியில்லாமல் எதிரியுடன் இணைந்தார்கள் என்பது தவறானது. புலிகள் இயக்கத்தினை முதலில் ஒழிப்பதற்கு அல்லது ஒடுக்குவதற்கு புளொட் அதிகளவு முயற்சி செய்தது. 84 களில் புளொட்டின் உறுப்பினர்கள் அதிகம். அவர்கள் யாராவது புலி அமைப்பை சேர்ந்தவர் எண்டு தெரிந்தாலே கலைத்து கலைத்து அடிப்பார்கள். நான்கூட அடிவாங்கியிருக்கிறேன் புளொட்டிடம்;அதன் உச்சம் தான் சுழிபுரம் கொலைகள்.

அடுத்ததாக ரெலோ யாரை யார் கை முந்துவது என்கிற போட்டி நடந்தது தாஸ் குழுவினர் ஒரு இரவு இரவுக்காவலில் வீதியில் இரவுக் காவலில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பினர் 3 பேரை மருதனாமடம் சந்தியில் சுட்டுக் கொன்றனர். அதற்கு பின்னர் சண்டிலிப்பாய் கல்வளையில் அமைந்திருந்த ரெலோ முகாமில் இரண்டு புலி உறுப்பினர்களை கைது செய்ய முற்பட்டனர் தகராறு ஆகி இரண்டு புலி உறுப்பினர்களும் கைக்குண்டை கழற்றி கையில் வைத்து வெடிக்கவைக்கப் போகிறோம் என்று விட்டு கிட்டுவிற்கு செய்தியனுப்பிய பொழுது கிட்டு சொன்ன விடயம் சரணடையுங்கள் நான் உங்களை வெளியிலை எடுக்கிறன் எண்டதுதான். (அந்த இருவரில் நான் ஒருவன்) பின்னர் கிட்டுவே நேரடியாக வந்து கதைத்து எடுத்தார் அதன் பின்னர் ஒரு கிழைமையில் தாஸ் ரெலோவினாலேயே கொல்லப்பட்டார். பின்னர்தான் முரளி காக்கா வை ரெலோ கைது செய்ததை தொடர்ந்து புலிகள் ரெலோ சண்டை தொடங்கியத

இறுதியாக கருணா விடையம். கருணாவின் பிரிவின் போது ஆரம்பகால கோரிக்கைகள் நியாயமானதுதான் காரணம் வட கிழக்கில் சாதி மதத்தினை ஒழிப்தற்காக பாடுபட்ட புலிகள் இயக்கத்தால் புலிகள் இயக்கத்திலேயே பிரதேச பிரிவை ஒழிக்கமுடியாமல் போனது சோகமானது காரணம் புலிகளின் ஆரம்பத்திலிருந்தே யாழ் வன்னி என்கிற பிரச்சனை இருந்தது இதனை யாரும் மறுக்க முடியாது அதன் ஆரம்பம்தான் மாத்தையா கிட்டு மோதல். அது காலப்போக்கில். வன்னி கிழக்கு ஆகிப்போனது. இந்த பிரிவு முதலாவது ஆனையிறவுச்சமரில் வெளியாகிருந்தது.(ஆகாய வெளிச்சமர்) ஆனாலும் அது அமத்தி வாசிக்கப்பட்டதால் தொடரந்தது . இல்லாவிட்டால் அந்த சமரிலேயே ஆனையிறவு கைப்பற்றபப் பட்டிருக்கும். ஆனால் கருணாவின் கோரிக்கைகளின் நியாயத்தை வைத்து பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டி சமரசத்திற்கான பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த காலத்திலேயே கருணாவும் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது தவறானது

ஆனையிரவு சண்டை நேரம் என்றால் கர்காலனால் தான் அந்த பிரச்சனை முதல் முதல் எடுக்க பட்டது...... சரியா?

Link to comment
Share on other sites

என்னமோ தமிழர்கள் வரலாறு தூரோகிகளால் விழ்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சார்பு மேற்குலகம்.. இந்திய.. சீன.. ரஷ்சிய.. பங்குகளோடு சரிசெய்து கொள்ள முனையா. அதற்கு மாற்றீடான இன்னொரு மார்க்கத்தையும் அவை நோக்கும். அதில் இன்னொன்று இருக்கிறது.. இந்த வளங்கள் தமிழர் பகுதிக்குரியவை என்பதை மேற்குலகு நன்கு அறியும். அந்த வகையில் தமிழர்களை அணைத்து.. தங்களின் ஆளுமையை அங்கு அமையக் கூடிய தமிழர்களின் அரசியல் அலகு மீது செலுத்தி.. இந்திய.. சீன.. ரஷ்சிய.. சிறீலங்க.. நாற் தரப்பு ஆதிக்கத்தையும் தமக்கு ஏற்ற வகையில் கொண்டு வர பாவிக்க முனையும்.

ஆக.. இந்த எரிபொருள் வளம்... என்ற மகிந்தவின் அஸ்திரம்.. தமிழர்கள் அதனைக் கையாளும் தன்மையில் தான் அது தமிழர்களை அழிக்குமா.. அல்லது மகிந்தவின் தலையை குறிவைத்து திரும்புமா என்பது குறித்து சொல்ல முடியும்..!

தமிழர்களுக்கு இன்னொரு அம்சமும் இருக்கிறது. இந்த எண்ணெய் வளங்களை தோண்ட முற்பட்டால்.. அப்பகுதியில் வாழ்வாதார மீன் பிடியைக் கொண்டுள்ள.. தமிழக மீனவர்களும்.. மீன் வளங்களும் பாதிப்புக்களை சந்திக்க நேர்வதோடு.. தமிழக அரசுகளின் நீண்ட நாள் கனவான சேதுவும் செத்துப் போயிடலாம்..!

அதுமட்டுமன்றி.. மெக்சிகோ குடாவில்.. BP யின் கடலடி எண்ணைக் கிணறு சார்ந்து நிகழ்ந்த வெடி விபத்தில்.. ஏற்பட்ட மாசு போன்ற ஒரு நிலை உருவானால்.. அதன் பாதிப்பு.. தென்னிந்திய மீனவர்கள் மீதும் சிறீலங்கா மீனவர்கள் மீதும்.. மீன் வளம் மீது கடும் பாதிப்பை உண்டு பண்ணும். இது எண்ணொய் பூதத்தை நம்பி.. மக்களின் மடியில் கைவப்பது போன்றது. பின் அந்த எண்ணெய் பூதமே அரசுகளின் கவிழ்ச்சிக்கும்.. மக்களின் வாக்குகளை சேர்க்கலாம்.

இவற்றையும்.. மேற்குலகம் கவனிக்கும். மேற்குலகம் வெறும்.. அரசியல் சார்ந்து மட்டும் இராஜதந்திரம் வகுப்பதில்லை. அதன் கவனிப்பு சுற்றுச் சூழல்.. அரசியல்.. பொருண்மியம்.. சமூகம்.. இராணுவம்.. பிராந்தியம்.. என்று பல அரங்கில் இருக்கும். ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல.. SWOT.. PEST, என்று எத்தனையோ அலசல் முறைகளைக் கையாழும் மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள்.. இப்படியான விடயங்களில் பன்முக அணுகுமுறைகளைக் கையாண்டு.. தமது ஆதிக்கம் வலுப்பெறக் கூடிய நீண்ட கால வழிமுறைகளையும் குறுக்கால வழிமுறைகளையும்.. தெரிவு செய்வார்கள்.

தமிழர்கள்.. இந்தச் சூழலை சரியான பயன்படுத்திக் கொண்டாலே அன்றி.. எதிரிகளுக்கு விலைபோகும் இணக்க அரசியல் வழியை மட்டும் தொடர்ந்து கடைப்பிடித்தால்.. மீட்சி என்பதற்கு இடமே இல்லை..! மகிந்த தனக்காக உந்தித் தள்ளி உள்ள எண்ணெய் பந்தை தமிழர்கள் சரிவர கையாண்டால்.. அதன் நன்மையை தமிழர்களே அதிகம் அடைய முடியும்..! அதில் தமிழக சொந்தங்களையும் இணைத்துக் கொள்வது.. அந்நிய கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்கள் பற்றி கவனம் செலுத்தவும் முக்கியம் அளிக்கவும்.. அதிகம் தூண்டும்.

தமிழர்களின் பேரம்பேசும் சக்தி விடுதலைப் புலிகள் என்பதால்தான் புலிகளின் தலைமையை மேற்கு நாடுகள் காப்பாற்ற முனைந்தன. எனினும் இந்தியாவின் உறுதியான ஆதரவு காரணமாக இலங்கையால் விடுதலைப் புலிகளின் தலைமையை அழித்தபோது மேற்கு நாடுகள் ஒன்றும் செய்யமுடியவில்லை. தற்போதுள்ள தமிழரின் தலைமை ஒருபோதும் பேரம் பேசும் நிலைக்கு வராது. அதனால்தான் போர்க்குற்றத்தை மேற்கு நாடுகள் தமக்கு சாதகமான பேரம் பேசலுக்குப் பாவிக்க முனையலாம். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க அவர்களுக்குத் தற்போது எதுவித தேவையுமில்லை!

Link to comment
Share on other sites

தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க அவர்களுக்குத் தற்போது எதுவித தேவையுமில்லை!

நீங்கள் சொல்லுவது அங்கு இரணில் ஆட்சி இருக்குமாயின் சரியாக இருந்திருக்கும்.

அங்கு மகிந்த ஆட்சியும் அது சீனாவுடன் நெருங்கி செல்வதும் இன்று கூட்டமைப்பை வாசிங்க்டன் வரை அழைக்கும் வரையும், கூட்டமைப்பு ஐ.நா. வரை செல்லும் துணிவையும் தந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பேரம்பேசும் சக்தி விடுதலைப் புலிகள் என்பதால்தான் புலிகளின் தலைமையை மேற்கு நாடுகள் காப்பாற்ற முனைந்தன. எனினும் இந்தியாவின் உறுதியான ஆதரவு காரணமாக இலங்கையால் விடுதலைப் புலிகளின் தலைமையை அழித்தபோது மேற்கு நாடுகள் ஒன்றும் செய்யமுடியவில்லை. தற்போதுள்ள தமிழரின் தலைமை ஒருபோதும் பேரம் பேசும் நிலைக்கு வராது. அதனால்தான் போர்க்குற்றத்தை மேற்கு நாடுகள் தமக்கு சாதகமான பேரம் பேசலுக்குப் பாவிக்க முனையலாம். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க அவர்களுக்குத் தற்போது எதுவித தேவையுமில்லை!

அப்படிச் சொல்ல முடியாது. போர்க்குற்றம் என்பதும் இந்திய சீன. ரஷ்சிய முத்தரப்பு விடயம்..! லிபியா மீதான கிறுங்குப் பிடியிலும்.. இவர்கள் மூவரும்.. மேற்குலகை எதிர்த்தனர். ஆனால்.. பலவீனமான லிபியப் போராளிகளை பலசாலி ஆக்கி... இந்த மூன்று பேரினதும் எண்ணத்தில் மண்ணைத் தூவியது மேற்குலகம்.

அதேபோல்.. போர்க்குற்றம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு.. தமிழர்களின் ஆதரவை தேடாது.. மேற்குலகம்.. ஒன்றும் செய்ய முடியாது. லிபிய அதிபருக்கு எதிராக NTC ஐ உருவாக்கி பலப்படுத்தியது போல.. தமிழர்களை தங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த.. மேற்குலகம் பலப்படுத்த முனையும்.

குறிப்பாக.. தாயக.. புலம்பெயர்.. தமிழக.. தமிழர்களில் பெரும்பான்மையானோர் ஒரு கருத்தொருமிப்பை காட்டினால்.. அதை மேற்குலகம்.. வரவேற்கும். அதையே கிலாரியின் தமிழக விஜயம் கோடிட்டுக் காட்டியது.

சிங்களத்தை பூரணமாக பகைக்கூடிய சூழலை தவிர்த்து.. சிங்களம்.. இந்திய.. சீன.. ரஷ்சிய ஆதிக்கத்துக்குள் ஆடுவதில் இருந்து கட்டுப்படுத்த.. நிச்சயம் மேற்குலகம் தமிழர்கள் அபிமானிகள் ஆகியே ஆக வேண்டிய சூழல் இருக்கிறது. இதனை தமிழர்கள்.. மேற்குலகோடு நெருங்கிச் சென்று பாவிக்க வேண்டும். தமிழர்கள் மேற்குலகோடு நெருங்கினால்.. இந்திய.. சீன அரவணைப்புக்களும் அவர்களைத் தேடி வரலாம். நிச்சயம்.. இந்திய அரவணைப்பு வரும். காரணம்.. தமிழகம்..! இந்தச் சூழல்.. இன்றைய சிங்கள.. இந்திய.. அரவணைப்பை விட.. பலமாகலாம்.

அப்படியான சூழலில்.. தமிழர்கள் அடையக் கூடிய பலன் அதிகம். விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி இந்தியா பழிவாங்க.. மேற்குலகம்.. ரகசியமாக அரவணைத்ததை நாம் கவனிக்க வேண்டும். இந்திய பழிவாங்கலுக்கு ஒத்தூதுவது போல ஊதிக் கொண்டு.. மேற்குலகம்.. புலிகளை அரவணைக்கவும் தவறவில்லை. சிங்களத்திற்கு ஒத்தூதவும் தவறவில்லை..!

ஆக.. இது எமக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லி நிற்கிறது. இந்த மேற்குலகின் இக்கட்டான சூழலை எமக்கு சார்பாக பாவிப்பது அவசியம். அதற்கு தெளிவான.. அரசியல் தலைமையும்.. இராஜதந்திர கட்டமைப்பும்.. பிராந்திய ரீதியில் தமிழர்கள் பலம்பெருந்திய சக்திகளாக பெரும்பான்மை கருத்தியலோடு ஒன்றுப்பட்டு நிற்கின்றனர் என்ற இனங்காட்டலும் அவசியம். இது.. தாயக.. புலம்பெயர்.. தமிழக.. உலகத் தமிழினத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் இன்னும் உறுதிபட சாத்தியப்படுத்தப்பட முடியும். விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை அகற்றி.. அவர்களின் அரசியல் இருப்பை தமிழர்கள் தக்க வைத்துக் கொள்வதும் அவசியம். பலவீனமான ஒட்டுக்குழு அரசியல் தலைமைகளை நம்பி மேற்குலகம்.. தமிழர்களுக்கு உதவாது.

போர்க்குற்றம்.. மகிந்தவின் எண்ணெய் வள அறிவிப்பு.. என்பன எமக்கான ஒரு நல்ல கருவிகள்..! அதனை சரியாக பாவிக்க வேண்டும். அந்த பாவனையின் தன்மையில் தான்.. தமிழினத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

இந்தக் காணொளி இறுதிப் போருக்கு முன்னதானது. இதில் கருணாவின் பங்கு எப்படி இறுதிப்போரில் தமிழரின் அழிவிற்குக் காரணமாக இருந்திருக்கும் என்பது தெளிவாகவேயுள்ளது. இப்படிப்பட்ட தமிழரின் இழப்பிற்கு கருணாவே உள்ளுற மனம் வருந்தியிருப்பான்.

Link to comment
Share on other sites

//முன்னர் நான் எழுதிய கருத்துக்களில் ஒரு அமைப்பை நிறுவும்போது அதில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கி கட்டமைப்பை உருவாக்குங்கள். குறிப்பாக மதம் பிரதேசம் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். நீங்கள் கேட்டீர்கள் எதிரி எமது முரண்பாட்டை பயன்படுத்துவதை எவ்வாறு தடுக்கலாம் என்று. அதற்கான அடிப்படை நாம் ஏற்படுத்தும் அமைப்பின் கட்டமைப்பின் வலிமையிலேயே தங்கியுள்ளது. நாடுகடந்த அரசில் ஒரு இஸ்லாமியப் பிரதிநிதியும் இல்லை. ஆனால் தற்போது இலங்கையில் வாழும் தமிழர்களில் இஸ்லாமியத்தமிழர்களின் எண்ணிக்கை சரிபாதியாகின்றது. இதை தனியே நா க அரசுக்கு சொல்லவில்லை ஒவ்வொரு அமைப்பையும் சொல்கின்றேன்.

//

நாடு கடந்த்த அமைப்பில் அங்கம் வகிக்கத் தயாராக இருக்கும் ஒரு இசுலாமியச் சகோதரரைக் காட்டுங்கள். நாடு கடந்த அரசு புலத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அவை, அதில் எந்த இசுலாமியச் சகோதரர் ஆவது போட்டி இட்டாரா? தமீழீழம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் எந்த இசுலாமியராவது செயற்பட ஆயுத்தமாக இருக்கிறாரா? நாங்கள் இவ்வாறு பல யோசனைகளைச் சொல்லலாம் நடைமுறையில் எது சாத்தியம் என்பது செயற்பாட்டின் மூலம் தான் தெரிய வரும்,கூட்டமைப்பு யாழ்ப்பாணத்திற்க்கு ஒரு இசுலாமியரையும், அம்பாறையில் ஒரு சிங்களவரையும் நியமித்தது அவர்கள் என்ன செய்தார்கள்?

Link to comment
Share on other sites

//இது அடிமைக்குணத்தில் உள்ள பிரச்சனை. இந்தக் குணத்தை தான் எதிரி பயன்படுத்துகின்றான். மாறவேண்டியது குணமே. நாம் சரியாய் இருந்தால் எதிரியோ இந்திய ரோவோ எப்படி எம்மை பயன்படுத்த முடியும்? நான் எங்களிடம் உள்ள பிரச்சனையை உற்றுநோக்குகின்றேன். ஏன் எமக்கு அதிக கோபம் ஏன் அதிக பிடிவாதம் ஏன் அதிக உணர்ச்சிவசப்படுதல் இது எங்கிருந்து பழக்கப்படுகின்றது. இவற்றை கண்டுபிடித்து சரிசெய்யாதவரை எம்மை எதிரி பயன்படுத்துவதில் இருந்தும் விடுபட முடியாது.

இதே சிங்களவன் எத்தனையோ சண்டைகளை வழிநடத்திய பல நூறு சிங்கள காவலர்களை கொன்ற கருணாவை நிதானமாக தனது தேவைக்காக கையாழ்கின்றான். (காரியம் முடிந்தவுடன் போட்டுத் தள்ளலாம் அது வேறு விடயம்) இந்த நிதானம் எமக்கேன் இல்லை? இப்படி எத்தனை பேரை பயன்படுத்துகின்றான் !!. ஒரு வயலில் நெல்லுக்கு நடுவில் புல்லிருந்தால் புடுங்கி வரம்பில் போட்டுவிடுதல். அவ்வளவுதான். ஆனால் நெல் எது புல் எது என்று தெரியாதளவுக்கு இருக்கும் சமூகத்தில் புல்லை புடுங்கி காலுக்குள் போட்டு கசக்கி உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். வெட்டொன்று துண்டு ரெண்டு என்னும் போக்கு எல்லாவிடத்திலும் பொருந்தாது.

//

அடிமைகளாக இருப்பது, போராடுவது என்னும் நிலைகள் உலகில் எங்கும் இருக்கிறது, இது எமக்கு மட்டுமே உரிய விடயம் அல்ல.

போராட வேண்டுமெனில் போராடுவதற்கான அமைப்பு , செயற் திட்டம் இவை எல்லாம் வேண்டும். நான் உங்களிடம் கேட்டுக் கொண்டிருப்பது இவை பற்றியே .புலம் பெயர் தேசத்தில் செய்யக் கூடியவற்றை நாமும், களத்தில் செய்யக் கூடியவற்றைக் களத்தில் நிற்பவர்களும் செய்வதன் மூலமே நாங்கள் முன் நகர முடியும்.செயற்பாடின்றி வெட்டியாக , தொடர்ந்து கடந்த காலத்தில் வாழ்வதால் ப்யன் ஏதும் இல்லை.

சமூக இயங்கு தளத்தை நாமே மாற்ற வேண்டும், அதற்கு அமைப்பு செயற்திட்டம் அவசியம்.இவை எதுவுமே இன்றி வெறுமனே கதை அளந்து கொண்டிருப்பவர்கள் இணைய உலகில் பலர் இருக்கிறார்கள்.கதைப்பது இலகு செயற்படுவதே சிரமமானது. ஒரு சிறிய திட்டமோ சிறிய அமைப்போ செயற்படு்வதே முக்கியமானது. எப் பொழுதும் மற்றவன் மீதும் அமைப்புக்கள் மீதும் குறை சொல்லிக் கொண்டிருப்பதால் எவருக்கும் பயன் ஏதும் இல்லை.

பிழையான வழிமுறையின் மீதான விமரிசனம் என்பது சரியான வழி முறையில் செல்வது என்பதில் நான் நம்பிக்கை உடையவன்.

Link to comment
Share on other sites

மிக அப்பட்டமான வரலாற்றுத் திரிபுகள்.

சக இயக்கப் படுகொலைகளை சுழிபுரத்தில் ஆரம்பித்து வைத்தது ப்லொட்.உள் இயக்க முரண்பாடுகளுக்காகப் படுகொலை சித்திரவதை எல்லாம் முதல் முதல் செய்தது ப்லொட். இது வரலாறு.

சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் நடாத்தப் பட்ட சுந்தரம் படுகொலையே எமது ஆயுதப் போராட்டத்தில் நடத்தப் பட்ட முதலாவது சகோதரப் படுகொலையாகும். இதிலே மற்றைய இயக்கங்கள் சளைத்தவர்களல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. சுந்தரம் படுகொலை செய்யப் பட்டதற்குப் பதிலடியாக இறைகுமாரன், உமைகுமாரன் என்ற இரு புலி உறுப்பினர்கள் உடனடியாகவே புளொட்டினால் அதே முறையில் படுகொலை செய்யப் பட்டனர்.

Link to comment
Share on other sites

அடிமைகளாக இருப்பது, போராடுவது என்னும் நிலைகள் உலகில் எங்கும் இருக்கிறது, இது எமக்கு மட்டுமே உரிய விடயம் அல்ல.

போராட வேண்டுமெனில் போராடுவதற்கான அமைப்பு , செயற் திட்டம் இவை எல்லாம் வேண்டும். நான் உங்களிடம் கேட்டுக் கொண்டிருப்பது இவை பற்றியே .புலம் பெயர் தேசத்தில் செய்யக் கூடியவற்றை நாமும், களத்தில் செய்யக் கூடியவற்றைக் களத்தில் நிற்பவர்களும் செய்வதன் மூலமே நாங்கள் முன் நகர முடியும்.செயற்பாடின்றி வெட்டியாக , தொடர்ந்து கடந்த காலத்தில் வாழ்வதால் ப்யன் ஏதும் இல்லை.

சமூக இயங்கு தளத்தை நாமே மாற்ற வேண்டும், அதற்கு அமைப்பு செயற்திட்டம் அவசியம்.இவை எதுவுமே இன்றி வெறுமனே கதை அளந்து கொண்டிருப்பவர்கள் இணைய உலகில் பலர் இருக்கிறார்கள்.கதைப்பது இலகு செயற்படுவதே சிரமமானது. ஒரு சிறிய திட்டமோ சிறிய அமைப்போ செயற்படு்வதே முக்கியமானது. எப் பொழுதும் மற்றவன் மீதும் அமைப்புக்கள் மீதும் குறை சொல்லிக் கொண்டிருப்பதால் எவருக்கும் பயன் ஏதும் இல்லை.

பிழையான வழிமுறையின் மீதான விமரிசனம் என்பது சரியான வழி முறையில் செல்வது என்பதில் நான் நம்பிக்கை உடையவன்.

செயற்பாடு குறித்து உங்கள் அக்கறையை மறுதலிப்பதற்கில்லை. ஏதோ ஒரு முனைப்பின் முக்கியத்துவத்தை முன்வைக்கின்றீர்கள். முன்னர் ஒரு முறை நீங்களள் பல அமைப்புகளின் நோக்கு ஒரு இலக்காக இருக்கட்டும் என்று இதே அடிப்படையில் கருத்தை முன்வைத்தது ஞாபகம் இருக்கின்றது.

இந்த கருத்தின் மீதான எனது கேள்விகளை என்னவெனில் சிறிய அளவில் பலநூறு அமைப்புக்கள் தற்பொழுது இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது. இதேபோல் பல ஆயுதப்போராட்ட அமைப்புக்கள் தமழீழம் என்ற ஒரு இலக்கை நோக்கித்தான் ஆரம்பித்தது ஆனால் முடிவு என்னவாயிற்று?

பல நூறு சிறு குழுக்களின் செயற்பாட்டின் பலமும் பலவீனமும் என்ன? எமது சமூகத்தளத்தில் பல குழுக்களின் தோற்றப்பாட்டில் முரண்பாடுகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அந்த முரண்பாடுகள் இலக்கை நோக்கிய பயணத்தை மறுவளமாக தன்னகத்தே திருப்பிக்கொள்ளும். இதை வரலாற்று ரீதியாக எம்மைநாம் இரையாக்கிய அனுபவத்தில் இருந்து புரிந்துகொள்ளமுடியும்.

இலக்கு ஒன்றாக இருக்கும்போது எதற்காக அதை அடைவதற்கான அமைப்புக்கள் நூற்றுக்கும் மேற்பட்டதாக இருக்கவேண்டும்? இதற்கான அடிப்படை என்ன? முன்னைய வரலாற்றை முன்வைத்து சிங்களம் என்ற ஒரு ஒடுக்குமுறைச் சக்திக்கு எதிராக ஏன் முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கம் அதன் முடிவென்ன?

ஒரு இலக்கை நோக்கி பல நூறு குழுக்களையும் அமைப்புக்களையும் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள முரண்பாடுகளே தோற்றுவிக்கின்றது. ஏற்றதாழ்வுகளும் வெறுப்புணர்வுகளும் மேலாண்மைத்தனமும் சுயநலம் அடையாளத்தேடல் இந்த உருவாக்கத்தில் தொக்கிநிற்கின்றது. இதனால் தான் இலக்கை நோக்கிய ஒரு அவசியத்தில் கூட பல குழுக்கள் அமைப்புகள் ஒருமுகப்படமுடியவில்லை.

பல சிறு அமைப்புகள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டே இருக்கின்றது. இதற்குள் எதிரி தனது பலத்தை பிரயோகிக்கின்றான். ஒன்றை ஒன்று துரோகி என்கின்றன வெறுப்புணர்வுகள் விரிவடைகின்றது. இவ்வாறான அடிப்படையில் இலக்கை நோக்கிய பார்வை எமக்குள்ளாகவே திரும்புகின்றது. இவ்வாறன முனைப்பில் மக்கள் இலக்கை அடைவது என்ற நம்பிக்கையை இழக்கின்றார்கள்.

ஒரு அமைப்பை உருவாகுவதற்கும் போராடுவதற்குமான அடிப்படை தகுதியை இழந்து நிற்கும் ஒரு இனக்குழுமம் எவ்வாறு எதையும் பேசாமல் கதைக்காமல் தன்னை தயார்ப்படுத்த முடியும்?

Link to comment
Share on other sites

சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் நடாத்தப் பட்ட சுந்தரம் படுகொலையே எமது ஆயுதப் போராட்டத்தில் நடத்தப் பட்ட முதலாவது சகோதரப் படுகொலையாகும். இதிலே மற்றைய இயக்கங்கள் சளைத்தவர்களல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. சுந்தரம் படுகொலை செய்யப் பட்டதற்குப் பதிலடியாக இறைகுமாரன், உமைகுமாரன் என்ற இரு புலி உறுப்பினர்கள் உடனடியாகவே புளொட்டினால் அதே முறையில் படுகொலை செய்யப் பட்டனர்.

சுந்தரம் படுகொலை செய்யப்பட்டது பிரபாகரனை அவர் உருவாக்கிய புதிய புலிகள் இயக்கத்தில் இருந்தே வெளியேற்றி அவரைத் தனிமைப் படுத்திய காரணத்தால், அவர் தமீழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்து இருந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட கொலை.அது புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலை அல்ல. அந்தக் கொலைக்கும் இயக்க மோதலுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. அது இருவருக்கிடையிலான தனி நபர் பழிவாங்கும் நடவடிக்கை.

ஆனால் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தின் சுவரொட்டி ஒட்டச் சென்ற சாதாரண மாணவர்கள். அவர்களைப் படுகொலை செய்வதற்காக இருந்த ஒரே காரணம் அவர்கள் புலிகளின் சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்பது மட்டுமே.

Link to comment
Share on other sites

//இலக்கு ஒன்றாக இருக்கும்போது எதற்காக அதை அடைவதற்கான அமைப்புக்கள் நூற்றுக்கும் மேற்பட்டதாக இருக்கவேண்டும்? இதற்கான அடிப்படை என்ன? முன்னைய வரலாற்றை முன்வைத்து சிங்களம் என்ற ஒரு ஒடுக்குமுறைச் சக்திக்கு எதிராக ஏன் முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கம் அதன் முடிவென்ன?//

இலக்கு ஒன்றாக இருக்கலாம் ஆனால் அதை அடையும் வழி பற்றிய கருத்து முரண்பாடுகள் இருக்கும். இதனாலையே பல அமைப்புக்கள் தெளிவான வழி தெரியாத காலகட்டங்களில் உருவாகின்றன.எமது போராட்டத்திலும் இது நடந்தது.பல வழிகள், பல அமைப்புக்கள், பல தலைவர்கள், இவற்றில் இருந்தே தெளிவான ஒரு வழியும் தலமையும் உருவாகும்.அதுவரை எமக்குச் சரியென தெரியும் வழியில், அந்த வழிச் செல்லும் அமைப்புடன், அமைப்பாளர்களுடன் இணைந்து வழிச் செல்வதே முக்கியமானது. கடந்து வந்த பாதை பற்றிய அனுபவதினூடாக முன் செல்வதே இலக்கு நோக்கிய பயணமாக இருக்க முடியும்.அதனை விடுத்து இனிப் ப்யணிக்க முடியாது என்று தரித்து இருந்து பழம் கதை பேசிக் கொண்டிருப்பதால் நாம் முன் நோக்கிச் செல்லப் போவதில்லை.

பல குழுச் செயற்பாட்டின் பலம், சரியான செயற்பாட்டை அடையாளம் காட்டும்.எதிரியால் பல் வேறு திசைகளில், தளங்களில் இயங்க வேண்டி இருக்கும். ஒரு தலமை என்றால் இலகுவில் வீழ்த்த முடியும். பலவீனமான நிலையில் பல குழுச் செயற்பாடே சிறந்தது.மேலும் சர்வதேசச் சூழல் பல் துருவ நிலையாக இருக்கிறது.ஒவ் வொரு துருவ நிலையிலும் ஒவ்வொரு குழு சார்ந்து இயங்குவது பலம் சேர்க்கும்.உதாரணத்திற்க்கு கூட்டமைப்பு இந்தியா சார்ந்தும், நாடுகடந்த அரசு அமெரிக்கா மேற்குலகம் சார்ந்து இயங்குவதும் மேலும் சீனச் சார்புக் குழுவும், சோசலிஸ்ட்டுக்கள் ,தேசிய இனப் போராட்டக் குழுக்கள் சார்ந்து, தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய நிலை சார்ந்து நாம் தமிழர் இயங்குவது என இவை அனைத்துமே பலம் சேர்க்கும். ஏனெனில் ஒவ்வொரு துருவச் சக்தியும் அது சார்ந்து இயங்கும் குழுவை முன் நிலைப்படுத்தும்.

இதில் ஆளை ஆள் போட்டி போட்டு தமக்குள் இவை சண்டை இடுமாயின் அக் குழுக்கள் மக்களால் நிராகரிக்கப்படும்.ஈற்றில் எந்தத் துருவம் எமது இலக்கை அங்கீகரிக்கிறதோ அது சார்ந்த குழுவும் அதன் வழியும் முன் நிலைப்படுத்தப்படும்.

Link to comment
Share on other sites

//ஒரு அமைப்பை உருவாகுவதற்கும் போராடுவதற்குமான அடிப்படை தகுதியை இழந்து நிற்கும் ஒரு இனக்குழுமம் எவ்வாறு எதையும் பேசாமல் கதைக்காமல் தன்னை தயார்ப்படுத்த முடியும்? //

போராடுவதற்கான உந்துதல் பேச்சாலோ கதைகளாலோ உருவாவதில்லை, போராடுவதற்கான உந்துதல் அடக்குமுறையில் இருந்தே பிறக்கிறது.உந்துதலில் இருந்து போராடுவதற்கான உரையாடலும் அதைத் தொடர்ந்து செயற்பாடும் , போராட்டத்தை முன் நகர்துகின்றன.

வெறும் பேச்சோடு முடிந்த இயக்கம் ப்லொட். அதே போல் பல இயக்கங்கள் பல சித்தாந்தங்கள் பேசினர் ஆனால் அவர்களின் நடைமுறைக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இருக்கவில்லை. பேச்சை நடைமுறைப் படுத்திய புலிகள் முன்னணிச் சக்தியாகினர்.

அதனாலையே செயற்பாடற்ற சித்தாந்தமும் ,சித்தாந்தம் அற்ற செயற்பாடும் குப்பையிலே என மாவோ சொன்னர் என்று நினைக்கிறேன்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.