Jump to content

பரப்புரை செய்யிறார் சின்னத்துரை: சவர்மா கடையில


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் கோவில் விரதம் என்று ஐக்கிய இராச்சியத்தில் சின்னத்துரை வீட்டில் பறக்கும், நீந்தும், நாலு காலில் ஓடும் உயிர் இனங்களை பொரித்து, வறுத்து, அவித்து உண்ண தடை.

வேலையால் திரும்பிய சின்னத்துரையரை சவர்மா கடை வாசலடியில் வந்த வாசம் நிறுத்தி, அவரது வயிற்றிற்கும் மூளைக்கும் போரை தொடக்கி வைத்தது. அந்த போரில் அவரது தொந்தி வயிறு உடன் வெற்றி பெற்றது.

சின்னா: ஒரு கோழி சவர்மா. நல்ல உறைப்பா போடுங்கோ.

சவர்மா: நல்ல உறைப்பாவாகவா?

சின்னா: ஓம். நாங்கள் நல்ல உறைப்பு சாப்பிடுவம்.

சவர்மா: நீ ஸ்ரீ லங்கனா?

சின்னா: இல்லை, ஸ்ரீ லங்காவில் இருந்து தப்பி வந்த ஒரு ஈழ தமிழன். நீ எந்த நாடு?

சவர்மா: லெபனான். ஸ்ரீ லங்கா பிரச்சினையை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஏன் உங்களை கொல்கிறார்கள்?

சின்னா: அவர்கள் இனவெறியர். அவர்களுக்கு ஒரு மொழி, ஒரு மத, ஒரு இன நாடு தேவை.

சவர்மா: அப்படியா? எனது ஸ்ரீ லங்கன் வாடிக்கையாளன் அங்கு இசுலாமியர் எல்லாம் சுகமாக வாழ்வதாக சொன்னானே?

சின்னா: அவன் ஒரு ஸ்ரீ "லை" ங்கன். அங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் வேட்டை ஆடப்படுகிறார்கள். இப்போதும் ஒரு பழைமை வாய்ந்த மசூதியை இடித்து தள்ளி விட்டார்கள். பல வளரும் இசுலாமிய இளையோரை என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார்கள்.

சவர்மா கடைக்காரரின் முகம் கறுத்தது. அவரும் வறுத்த கோழியை ஊண்டி கத்தியால் சடார், சடார் என்று வெட்டி கொண்டே...

சவர்மா: அப்படியா?

சின்னா: ஆமாம். ஸ்ரீ லங்காவின் கொடியிலே அதை அவர்கள் தெளிவாக காட்டி உள்ளார்கள்.

சின்னா தனது கருப்பு பழத்தை(பிளக் பெரி) எடுத்து ஸ்ரீ லங்கா கொடியை கூகிளில் கொண்டு வந்தார்.

சின்னா: பச்சை கலர் இசுலாமியர்களையும், ஆரஞ்சு கலர் தமிழரையும் குறிக்கும். அந்த இரண்டு குறியீட்டையும் எதிர்த்து ஒரு கோபமான சிங்கம் வாளோடு நிற்கிறது. அந்த சிங்கத்தை புத்த மத இலைகள் காக்கிறது.

சவர்மா: ஆமாம். ஆமாம். இந்த கொடி ஒரு இன விரோத கொடி. புத்தர்களுக்கு ஏன் வாள்? ஏன் மூர்க்கம்?

சின்னா பெரு மூச்சு விட்டார்.

சின்னா: உனக்கு விளங்கியிருக்கிறது. பல தமிழர்களும், இசுலாமியரும் இந்த கொடியால் தம்மை போர்த்தியும், உயர்த்தி பிடித்து ஆட்டியும் திரிகிறார்கள்.

சவர்மா: ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் லூசா?

சின்னா: அவர்கள் லூசிலும் பார்க்க மோசமானவர்கள். தம்மை பற்றி ஒன்றும் தெரியாத ஆட்டு மந்தைகள்.

சவர்மா: அந்த ஸ்ரீ லங்கா கார வாடிக்கையாளனிடம் இதை பற்றி கேட்க போகிறேன்.

சின்னா: தாரளமாக நாக்கை பிடுங்குவதை போல் கேள்.

சின்னா உணவை பெற்றுக்கொண்டு. தமிழர் பிரச்சினையை ஆர்வத்தோடு கேட்டதற்காக ஒரு ஐந்து பவுன் டிப்சும் வைத்து சென்றார்.

அவருக்குள் இன்னொரு ஈழ ஆதரவாளரை உருவாக்கியதில் மகிழ்ச்சி.

வீடு செல்வதற்குள் பறப்பனவை பர பரப்பாக வாய்க்குள் செலுத்த தொடங்கினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி நன்றி பகிர்வுக்கு, கதையின் ஊடாக நல்ல கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள், நானும் பல வேற்று இன நண்பர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்,

YouTube இணைப்புகள், ஆங்கில செய்திகள், இப்படி பல...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி நன்றி பகிர்வுக்கு, கதையின் ஊடாக நல்ல கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள், நானும் பல வேற்று இன நண்பர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்,

YouTube இணைப்புகள், ஆங்கில செய்திகள், இப்படி பல...........

நன்றி உடையார். தமிழரில் இன்னும் பலர் பரப்புரை செய்யவேண்டும் என்பதே எனது ஆசை. அதை தூண்ட இந்த முயற்சி. இது மூன்றாவது தொடர்.

உங்களது பரப்புரை சேவை தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளவி, கிரிகெட் விளையாட்டை வைத்துதான் கூட பரப்புரை செய்யக் கூடியதாக இருக்கும, வெள்ளையள் கேட்பார்கள் ஏன் இலங்கைக்கு ஆதரவு இல்லை என்று, அப்ப ஒரு பிடி பிடித்தால் சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குளவி, கிரிகெட் விளையாட்டை வைத்துதான் கூட பரப்புரை செய்யக் கூடியதாக இருக்கும, வெள்ளையள் கேட்பார்கள் ஏன் இலங்கைக்கு ஆதரவு இல்லை என்று, அப்ப ஒரு பிடி பிடித்தால் சரி

எனக்கு ஈழத்து ஆதரவளார்கள் என்று கூறிவிட்டு ஸ்ரீ லங்கா கொடியை ஆட்டிக்கொண்டு கிரிக்கெட் பார்க்க போகும் தமிழரை கண்டால் பொத்திக்கொண்டு வரும். சிங்களவனே தன்னை பிரிடிஷ் அரச பரம்பரை போல் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் கொடியுடன் வாருவான் ஆனால் எங்கடையள திருத்த முடியாது.

அந்த ஆதங்கமும் கதையில் வெளிப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

குளவி.. என்ன கனநாளா காணேல்ல? :rolleyes:

நல்ல கதையோட வந்திருக்கிறீர்கள்.. இணைப்புக்கு நன்றிகள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவியார் கதை கூவுது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை குருவி

எங்கேயப்பா அடிக்கடி காணாமல் போகின்றீர்கள்?

நானும் இப்படித்தான் 5 நிமிடம் எங்காவது கோப்பி குடிக்க உட்கார்ந்தாலும் நாடுபற்றி ஏதாவது பேசப்பார்ப்பேன்.

ஆனால் இயற்கையில் அதிகம் பேசுவது எனக்கு பிடிக்காது.

Link to comment
Share on other sites

அவருக்குள் இன்னொரு ஈழ ஆதரவாளரை உருவாக்கியதில் மகிழ்ச்சி.

கடைசியாக நியூயோக் பிரயாணம் பற்றி ஒன்று என நினைக்கிறேன், அருமையாக எழுதினீர்கள், இப்பொழுது இது. நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி.. என்ன கனநாளா காணேல்ல? :rolleyes:

நல்ல கதையோட வந்திருக்கிறீர்கள்.. இணைப்புக்கு நன்றிகள்..! :)

சமூக கள வேலைகள் நிறைய இருந்த படியால் நேரம் மட்டு மட்டாகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் யாழை இரு முறையாவது கருப்பு பழத்தில் பார்த்துவிடுவேன். :D

குளவியார் கதை கூவுது.....

நன்றி புத்தர்.

அருமை அருமை குருவி

எங்கேயப்பா அடிக்கடி காணாமல் போகின்றீர்கள்?

நானும் இப்படித்தான் 5 நிமிடம் எங்காவது கோப்பி குடிக்க உட்கார்ந்தாலும் நாடுபற்றி ஏதாவது பேசப்பார்ப்பேன்.

ஆனால் இயற்கையில் அதிகம் பேசுவது எனக்கு பிடிக்காது.

நன்றி அண்ணா. எனக்கும் ஒவ்வொரு நாளும் வந்து யாழ் வாசகர்களை அறுக்க ஆசை தான் ஆனால் நேரத்திற்கு பஞ்சம்.

இனி கொஞ்சம் திடமாக வட்டமிட்டு திரிய முனைகிறேன்.

கடைசியாக நியூயோக் பிரயாணம் பற்றி ஒன்று என நினைக்கிறேன், அருமையாக எழுதினீர்கள், இப்பொழுது இது. நன்றிகள்.

அகூதா, உங்களுடைய ஞாபக சக்தி அருமை. ஆமாம் நியூ யோர்கில யூதர் ஒருவருக்கு பரப்புரை செய்தவர் சின்னதுரை.

மற்றும் சளைக்காமல் இந்த தளத்திற்கு நீங்கள் அளிக்கும் செய்திகள், கட்டுரைகள் அருமை. உங்களது தமிழ் சேவை தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் பல தனிப்பட்டவர்கள் இனப்பற்றுடன் நிறையச்செய்கிறார்கள்..அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்..அமைப்புக்கள் தமிழர்களுக்கு தலைமைதாங்குவதைப் பற்றி சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி அருமையாக இருக்கிறது.தொடரட்டும் தங்கள் முயற்சி.

நன்றி புலவர்.

இப்படித்தான் பல தனிப்பட்டவர்கள் இனப்பற்றுடன் நிறையச்செய்கிறார்கள்..அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்..அமைப்புக்கள் தமிழர்களுக்கு தலைமைதாங்குவதைப் பற்றி சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள்... :(

உண்மை சுபேஸ். தலைமை, தலைமை என்று எமது தலை மையை வெளிற வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.