Jump to content

லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார்


Recommended Posts

மாறுகின்ற உலக சூழலைப் புரிந்து கொள்ளாமல் பழையக் காலத்தில் இருக்கும் சர்வாதிகாரிகள் துப்பாக்கி முகத்தைக் குறிபார்க்கும்போதுதான் யதார்த்தத்தை உணர்வார்கள். அதுவும் தங்களின் உயிர்வாழ்தலுக்கே.. இன்னும் போகவேண்டிய சர்வாதிரிகள் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் ஜனநாயக வேடம் பூண்டுள்ளார்கள்.

The Ides of March என்ற படம் திரைக்கு வருகின்றது. அதிகம் ஜனநாயகம் நிலவும் அமெரிக்காவில் பதவிக்காக நடக்கும் குழிபறிப்புக்கள், சேறு பூசல்களை வெளிக்கொண்டு வருகின்றது. அங்கும் ஜனாதிபதியாக இருதடவைகளுக்கு மேல் இருக்கமுடிந்தால் பல சர்வாதிரிகள் இருந்திருப்பர்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்காவுடன் ஒத்துப்போய்யிருந்தால் தப்பி பிழைத்திருப்பார்...வாழத் தெரியாத மனுசன்...

சவுதிகாரனை போல அமேரிக்காவுக்கு ஒத்து ஒதியிருந்தால் வாழ்ந்திருப்பார்...

சதாம்,பின்லாடன்,..வரிசையில் கடாபியும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுயநல உலகில் பலியானவர் வரிசையில் இப்போது கடாபி அடுத்தது யார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுயநல உலகில் பலியானவர் வரிசையில் இப்போது கடாபி அடுத்தது யார் ?

நிச்சயமாக மகிந்தாவும் இல்லை ஒபாமாவும் இல்லை....அமேரிக்காவுடன் சண்டித்தனம் காட்டுபவர்கள் இனிமேல் கொஞ்சம் சிந்திப்பார்கள் ....புனிதபோர் என்று சொல்லியும் இஸ்லாமிய மக்கள் மற்றும் அரபுலகு இவரை கண்டுகொள்ளவில்லை.....

Link to comment
Share on other sites

நிச்சயமாக மகிந்தாவும் இல்லை ஒபாமாவும் இல்லை....அமேரிக்காவுடன் சண்டித்தனம் காட்டுபவர்கள் இனிமேல் கொஞ்சம் சிந்திப்பார்கள் ....புனிதபோர் என்று சொல்லியும் இஸ்லாமிய மக்கள் மற்றும் அரபுலகு இவரை கண்டுகொள்ளவில்லை.....

ஈரானுக்கு அடிக்கும் வரை ஓயமாட்டார்கள் ஏன் எனில் ஈரானுக்கு அடிக்கனும் என்ற ஆசை அமெரிக்கவை விட சவுதிக்கு தான் ஆர்வம் ஏன் எனில் ஈரான் வருத்தம் தன் நாட்டிலும் வந்துவிடுமோ என்று தான்.

ஆய்வாளர் வேலு வடிவேலு

Link to comment
Share on other sites

இரட்டை முகமும் முதலைக்கண்ணீரும்

- கடாபி சரணடைந்த நிலையில் தலையில் இருமுறை சுடப்பட்டுள்ளார்

- இது ஒரு போர்க்குற்றம் என்கிறது ஐ.நா. :wub:

- சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட முடியாமல் போய்விட்டது என்கிறது இன்னொரு குழு :rolleyes:

Link to comment
Share on other sites

வெளி நாடுகளில் படிக்கும் லிபியமாணவர்கள் நிலை பரிதாபமாகவுள்ளது.இதுவரைகாலமும் வெளி நாடுகளில் படிக்கும் லிபிய மாணவர்களுக்கு அரசுதான் நிதி அளித்து வந்தது.தற்போது அவர்கள் அனாதையாகியுள்ளார்கள்.புதிய அரசின் நிலைப்பாடு தெரியாமல் அவர்கள் தவிக்கிறார்கள்

Link to comment
Share on other sites

21-rice-gaddafi300.jpg

கடாபிக்கு என்மேல் ஒரு 'இது'...! - கண்டோலிசா ரைஸ்

வாஷிங்டன்: மேற்கத்திய நாடுகள் ஆயுத பலத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கர்னல் மம்மர் கடாபிக்கு தன் மேல் ஒருவித மயக்கமே இருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கண்டோலிசா ரைஸ் தெரிவித்துள்ளார்.

கண்டோலிசா ரைஸ் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அவருக்கும் கடாபிக்கும் கடந்த 2008-ல் ட்ரிபோலியில் நடந்த சந்திப்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்குப் பிறகுதான் லிபியா ஜனநாயகப் பாதைக்கு திரும்பும் என கடாபி குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பை தனது தனிப்பட்ட முகாம் அறையில் வைத்துக் கொள்ள விரும்பினாராம் கடாபி. ஆனால் அவரது மாளிகையில் சந்திப்பதாகக் கூறிவிட்டாராம் ரைஸ்.

'ஏன் என் ஆப்ரிக்க ராஜகுமாரி என்னை இன்னும் பார்க்க வரவில்லை' என்று அப்போது தன் உதவியாளர்களிடம் குறிப்பிட்டாராம் கடாபி.

கண்டோலிசாவை முதலில் சந்தித்ததும் கொஞ்சம் 'வழிந்த' கடாபி, சட்டென்று சுதாரித்து தனது நிலைக்குத் திரும்பிவிட்டாராம். பின்னர் தலையை முன்னும் பின்னும் ஆட்டியபடி, "போய் புஷ்ஷிடம் (அன்றைக்கு அவர்தான் அமெரிக்க அதிபர்) சொல்லுங்கள்... இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகள் என்ற தீர்வு சரியல்ல. பாலன்ஸ்டைன் என ஒரே நாடாகத்தான் இருக்க வேண்டும்," என்றாராம்.

அடுத்து கண்டோலிசா சொன்னதை காதிலேயே வாங்கிக் கொள்ளாத கடாபி, தனது உதவியாளர்களை அழைத்து, சந்திப்பு ஓவர் என்பதைப் போல சொல்ல, 'கடாபி இப்படித்தான் போலிருக்கிறது' என நினைத்தாராம் கண்டோலிசா.

பின்னர், கண்டோலிசாவை தனது தனி உணவறைக்கு வரவழைத்து விருந்தளித்த கடாபி, கண்டோலிசா உலகத் தலைவர்களைச் சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை சேகரித்து தான் தயாரித்த ஆல்பத்தைக் கொடுத்தாராம். கூடவே, கண்டோலிசாவுக்காக லிபிய இசையமைப்பாளரைக் கொண்டு தான் உருவாக்கிய 'வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு ரோஜா' என்ற பாடலை பரிசாகத் தந்தாராம்!

முரட்டு கடாபிக்குள் இப்படியொரு காதலா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டு வந்து லிபியா மீது குண்டு வீச தொடங்கியதுடன்.. லிபியாவில் ஜனநாயகம் மலரத் தொடங்கிவிட்டதாக அமெரிக்க சார்பு மேற்குலகம் படம் காட்டிக் கொண்டிருந்தது.

உண்மையில்.. அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல.. இடைக்கால அரசில் இருப்பவர்கள். நேட்டோவிற்கு ஆதரவானவர்களே.. இடைக்கால அரசில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதை கடாபி செய்தா அது அநியாயம்.. சர்வாதிகாரம் என்று சொல்ல எங்களிலும் ஆக்கள் இருக்கினம். அதையே அமெரிக்கா செய்தால்.. எல்லாம் நல்லதற்கே என்று சொல்வோரும் உண்டு.

கடாபி.. சர்வதேச நீதிமன்றால் அறிவிக்கப்பட்ட ஒரு தேடப்படும் குற்றவாளி. அவரை உயிரோடு பிடித்தும் கூட.. சர்வதேச நீதிமன்றில் நிறுத்தாமல்... நேட்டோவும் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டது. இப்போ.. மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள்.. இப்படிச் சொல்கிறார்கள்..

அவர் இருந்து என்ன பயன்.. இப்படி போனதே நல்லது என்று.

இப்படியான கொள்கை வகுப்புக்களின் முன்.. சர்வதேச நீதிமன்றம் ஏன்.. ஐநா ஏன்..??! அமெரிக்காவும் நேட்டோவும் தான் நினைச்சதை செய்ய வேண்டியது தானே..! ஆனால் இதை எல்லாம் எங்கட கிருபண்ணா போன்றவர்கள்.. சர்வாதிகாரமாக இனங்காண மாட்டினம். ஏனோ தெரியல்ல..!

:rolleyes::o:icon_idea:

Link to comment
Share on other sites

புதிய வேலைத் திட்டங்களை வென்றெடுக்க, பிரித்தானிய நிறுவனங்களை தயாராகும்படி புதிய பாதுகாப்பு அமைச்சர் பிலிப் ஹமொண்ட் தெரிவித்துள்ளார்.

http://www.thisislon...gs-for-libya.do

லிபியாவிற்கு போக பெட்டியைக் கட்டுங்கப்பா.

எலேய்....... மாட்டை பூட்டுங்க. வண்டியை ஓட்டுங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவிற்கு போக பெட்டியைக் கட்டுங்கப்பா.

எலேய்....... மாட்டை பூட்டுங்க. வண்டியை ஓட்டுங்க

யோவ்... தப்பிலி,

வண்டியும், மாடும் ரெடியாய்.. இருக்கு,

கடாபி 41 வருசத்திலை, சூப்பிப் போட்ட பேரிச்சம்பழக் கொட்டையில் என்ன இழவு இருக்கப் போகுது.

Link to comment
Share on other sites

கடாபி 41 வருசத்திலை, சூப்பிப் போட்ட பேரிச்சம்பழக் கொட்டையில் என்ன இழவு இருக்கப் போகுது.

கடாபி சூப்பிப் போட்டது கொஞ்சக் கொட்டைதான். சனத்திற்கு கொடுக்காமல் வைத்திருந்தது நிறைய.

இனி பிணந்திண்ணிக் கழுகுகளின் ஆட்சிதான்.

Link to comment
Share on other sites

இந்த சுயநல உலகில் பலியானவர் வரிசையில் இப்போது கடாபி அடுத்தது யார் ?

சிரியா.

ஈரான்,வடகொரியாவில் மேற்கு நாடுகளுக்கு ஒரு கண் இருந்தாலும் அணு ஆயுதங்களை இவர்கள் வைத்து இருப்பதால் மேற்கு நாடுகள்,ஏன் இஸ்ரேலும் பின்வாங்குகின்றார்கள்.

Link to comment
Share on other sites

அப்பாடா இனி பிரான்சின்ரை பொருளாதாரம் கொஞ்சம் உயரும் அந்தளவிலை சந்தோசம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஹ்ம்ம்........... 42 வருஷம்....ஆட்சி .......

நிறைய காசு பணம்.......அமெரிக்காவ எதிர்க்கும் முஸ்லிம் திமிர்...

இவ்ளோ இருந்தும் ,, தன்னோட நாட்டு மக்கள... அவரால கவர முடியலியே...

அப்போ அவர் ............ சர்வாதிகாரியேதான்!

ஆனா...

அந்த சர்வாதிகாரிய ஒழிச்சுக்கட்ட லிபிய மக்கா.......... ஒண்ணும் ..

அல்லா... வழிய பின்பற்றல!...

அனகொண்டா(அமெரிக்கா)... வாலை புடிச்சிருகாங்க!

காரியம் முடிஞ்சப்புறம்...

நிச்சயமா .........., கழுத்து , விலாவெலும்புகள், இடுப்பெலும்புகள் , நொருங்க,

அந்த இராட்சத பாம்பு ,, அல்லா புனிதர்களை நோக்கி திரும்பி வரும்!! :)

Link to comment
Share on other sites

லிபியக் கொலைக்களம் ஏகதிபத்திய நலன் சார்ந்ததே, கடாபி வெறும் பலிக்கடா! -இலக்கியா

muammar-al-gaddafi-2.jpgகடாபியின் ஆரம்பகாலத்தில் மேற்குலகுக்கு சிம்ம சொர்ப்பணமாக விளங்கிய கடாபி, உள்நாட்டில் சொந்த மக்களுக்கான ஜனநாயக, அரசியல், கருத்துரிமைகளையும் மறுத்து ஒடுக்கியதால் இதனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், சர்வதேச நிர்ப்பந்தங்களைத் தவிர்க்கவும் மேற்குலகோடு சமரசம் செய்து கொண்டு, ஆட்சியைத் தொடரும் தந்திரத்தைக் கையாண்டார் என்பது யாவரும் அறிவோம். இதன் ஒரு படியாகவே கடாபியின் கட்டளையின் பேரில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க பிரயாணிகள் விமானத்துக்கான நட்டஈடு வழங்கியமை தொடக்கம், பிரித்தானியப் பிரதமர் டோனிபிலேயரோடு திரிபோலியில் ஒப்பந்தம் செய்து கொண்டது வரை கவனங் கொள்ளத்தக்கதாகும்.

அதுவரை எட்ட நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்க்கத்தைய உளவு நிறுவனங்கள், லிபிய மண்ணில் கால் பதித்து விட்டன எனலாம். குறிப்பாக பிரித்தானியாவின் M.I.5 இவ்விடயத்தில் பிரதான பங்கை வகிக்கின்றது. பச்சைக்கொமினிசம், பச்சைசோசலிசம், என்று கூறி வந்த கடாபியிடம் சோசலிசம் இல்லாவிட்டாலும், குறைந்தபட்ச முதலாளித்துவ சனநாயகத்தை மக்களுக்கு வழங்க மறுத்ததோடு, ஆங்காங்கே துளிர் விட்ட சனநாயகத்துக்கான முனைப்புக்களையும் வன்முறையின் மூலம், ஒடுக்கி ஆண்டது மாத்திரமல்லாமல், நாற்பது இனக் குழுமங்களுக்கு மேல் வாழும் லிபிய மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு மாறாக, பிரித்தாளக் கூடிய இராணுவத்தன்மை கொண்ட நிர்வாகத்தையே கடாபி அரசு செய்து வந்தது.

மேற்கத்தைய ஊடகங்கள் குறிப்பிடுவது போல் உலகின் மிகக்கொடிய ஆட்சியாளன், சித்திரவதையாளன், என்பது கடாபிக்கு மாத்திரம் பொருந்தக் கூடியதல்ல. இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், இந்துனேசியா, மலேசியா, பங்காளதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகள் தேர்தல் முறையையையும், அரசியல் யாப்பையும், பாராளுமன்றத்தையும், நீதித்துறையும் அமுலில் வைத்துக் கொண்டு, அரச பயங்கரவாதம், முறைகேடான தேர்தல், நீதித்துறையை கட்டுபாட்டுக்குள் அடக்குதல், பத்திரிகையாளர்களை கொலை செய்தல், இனவாதத்தை பாராளுமன்றத்திலேயே பதிவு செய்தல் போன்றவைகளை செய்வதொன்றும், மேற்கத்தைய நாடுகளுக்கோ, ஊடகங்களுக்கோ தெரியாதவிடயமல்ல. கடாபியின் ஆட்சி உலகின் மிகச் சிறந்த ஆட்சியுமல்ல, அதே வேளை மிக மோசமான ஆட்சியுமல்ல. கடாபியின் ஆட்சியை விட மிக மோசமான ஆட்சிகள் இன்னும் உலகிலுள்ளன . குறிப்பாக தென்கிழக்காசிய, தென்னமரிக்க, ஆபிரிக்க நாடுகளில் நாம் காணலாம். இந்நாடுகள் மேற்கத்தைய மூலதனச் சுரண்டலுக்கோ, உலகமயமாக்கலுக்கோ அல்லது மேற்கத்தைய சீரளிவுக்கெதிராக கதவை மூடாமல் இருக்கும் வரையே இந்த சனனாயகக் காவலர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.

கடாபியின் ஆட்சியில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்த போதிலும், நீண்ட காலமாக எண்ணெய்க் கம்பனிகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தமையும், ஏகாதிபத்தியங்களை சினம் கொள்ளச் செய்தன என்பது கவனம் கொள்ளத்தக்கது. கடைசி காலத்தில் பன்னாட்டு எண்ணெய் நிறுவனக்களும் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். கடாபியின் கட்டுப்பாடு நிறைந்த பொருளாதாரக் கொள்கையாலும், அபரிமிதமான எண்ணெய் வருவாயாலும், ஒரு உள்கட்டுமானம் நிறைந்த அபிவிருத்தியடைந்த நாடாகவும், வாழ்க்கைத்தரம் உயர்ந்த நாடாகவும் லிபியா திகழ்ந்ததோடு, ஒரு தேசியப் பொருளாதாரத் திரட்சியை கொண்டிருந்ததால் தொன்கணக்கான தங்கத்தையும் கையிருப்பில் வைத்திருந்ததை திவாலாகி வரும் ஏகாதிபத்தியங்களால் சகிக்க முடியவில்லை.

ஏகாதிபத்தியங்களின் பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு அமைவாக லிபியப் பொருலாதாரத்தை திசை திருப்பி விடக்கூடிய ஒரு ஆட்சியை ஏற்படுத்துவதும், எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் ஏகாதிபத்தியங்களின் தேவையாக இருந்தன. இதற்கு உள்முரண்பாடு நிறைந்த சமூகப்பிரிவு கொண்ட பிராந்திய ரீதியாக கடாபியின் ஆட்சியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஏகாதிபத்தியம் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டது. உண்மையில் துனிசியாவில் நடந்த அரச மாற்றத்துக்கான போராட்டத்திலும், எகிப்தில் நடந்த போராட்டத்திலும் பல குறைபாடுகளும் முழுமையற்ற நிலை இதுவரை நிலவுகின்ற போதிலும், அவை ஏகாதிபத்தியங்களின் காலடியில் இருந்து தோன்றியவைகள் அல்ல என்பதே எனது கணிப்பு. மாறாக ஏகாதிபத்தியங்களோடு சமரசம் என்ற நிலையை அடைந்து விட்டவை எனலாம். ஆனால் லிபியக் கிளர்ச்சி முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக உருவாகி காதிபத்திய நலன் சார்ந்து தனது சொந்த பொருளாதாரத்தையும், நாட்டையும் சிதைக்கும் கொலைக்களம் மாத்திரமே தவிர, ஒட்டு மொத்த லிபியா மக்களுக்கான விடுதலையாகப் போவதில்லை. இதற்கு முன்னுதாரணமாக இன்றைய N.T.C. அரசில் கடாபியின் அரசில் அங்கம் வகித்த பல அமைச்சர்கள் அங்கம் வகிப்பதை என்னவென்று சொல்வது.

இடைக்கால N.T.C. அரசின் தலைவர் ஜலீல் கடந்த டிசம்பர் மாதம் வரை கடாபியின் மந்திரி சபையில் அங்கம் வகித்தவராவார். புரட்சியாளர்கள் அனைவரும் ஒழுக்க விதி கொண்ட நிறுவனமயப் படுத்தப்பட்டவர்களல்ல. மாறாக ஒவ்வொரு பழங்குடி தலிவர்களின் வழிகாட்டலில் இணைந்தவர்களே. இவர்களுள் இஸ்லாமியத் தீவிரவாதிகளும் அடக்கம். இப் போராட்டக்காரர்களுக்கு கடாபியின் ஆட்சியை அகற்றுவதும், கடாபியின் குடும்பத்தைக் கொல்லுவதிலும் உள்ள ஆர்வமும் ஈடுபாடும், அதன் பின்னர் என்ன செய்வதென்பதில் எத்தகைய நோக்கும் இல்லாதவர்கள். தொலைக்காட்சியில் இவர்களை காணும்போது புரட்சியாளர்களுக்கான எவ்வித தன்மைகளையும் காண முடியவில்லை. ஊடகங்களின் காமராக்களை கண்டவுடன் துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி சுடுவதும், கடாபியின் படங்களை போட்டு மிதிப்பதும், கிழிப்பதும் சலிப்பின்றி செய்கிறார்கள். 1969 இல் ஒரு புரட்சியாளனாக பதவிக்கு வந்த கடாபி தேர்தல், நீதித்துறை, அரசியல்அமைப்பு, ஊடகம் போன்ற துறைகளை ஏற்படுத்தி மக்களுக்கான சனநாயகத்தை வழங்காது அரசை தனது குடும்பச் சொத்தாக மாற்றி தனது குடும்பவாரிசுகளை உயர் பதவிகளில் இருத்தியதோடு, இனங்களை கூறுபோட்டு ஆட்சி செய்ததின் விளைவே ஏகாதிபத்தியங்களின் வலையில் சொந்த மக்கள் விக்காரமாயின.

அதே போன்று கடாபி போன்ற ஹீரோயிச அரசியல்வாதிகள் பலர் இவ்வுலகில் இருந்த போதிலும், சர்வதேச அளவில் தனது பார்வையை அகட்டிய ஒரு சிலரில் கடாபியையும் குறிப்பிட முடியும். அதில் ஆங்காங்கே ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காகப் போராடிய இயக்கங்களுக்கு உதவியமை, குறிப்பாக பாலஸ்தீன விடுத்தலை இயக்கம், சவுத் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ். இவை கடாபியின் வரலாற்றில் அழிக்க முடியாத பகுதிகள் . இந் நிலையில் இரண்டு மாதங்களின் முன் இடைக்கால அரசு அறிவித்தது, கடாபி கைதானால் அவர் நாகரீகமாக நடத்தப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றது. ஆனால் நேற்று கடாபி உயிருடன் பிடிபட்டு பின்னர் சித்திரவதை செய்து பகிரங்கமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் இங்கே நாய்க்கு அடித்தாலும் மனித உரிமை, மிருக உரிமை பேசுபவர்கள் கடாபி உயிருடன் பிடிபட்ட பின் சட்டத்தின் முன் நிறுத்தாது சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏனெனெனில் இவர்களின் விருப்பம்தா ன் நிறைவேற்றப்பட்டுள்ளது வெளிப்படை.

உலகம் ஒரு புதிய சந்தைக்காக ஏகாதிபத்தியங்களால் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சி தான் முள்ளிவாய்க்கால், ஆப்கான், ஈராக் மற்றும் இன்றைய லிபியக் கொலைக்களமும். இந்த நிலை தொடரும் அறிகுறி நிறையவே தென்படுகின்றது. மக்களின் வாழ்வைச் சூறையாடி, கொலைக் களங்களை உருவாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சரியான பாடம் புகட்டவும், துரத்தியடிக்கவும் உழைக்கும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டு, ஒன்றிணைந்து போராடுவதுமே நம் முன்னுள்ள ஒரே வழி.

இலக்கியா. 21.10.11

http://www.ndpfront.com/?p=25567

Link to comment
Share on other sites

'கடாபியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்'

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது.

கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக் கிழமையோ உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரம் வியாழக்கிழமை கடாபி கொல்லப்பட்டதற்கு தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக லிபிய இடைக்கால அரசின் இராணுவக் கமாண்டர் ஒமரன் இல் ஒவேப் பிபிசியிடம் தெரிவித்தார்.

மிஸ்ரட்டா நகரிலுள்ள இறைச்சி சேமித்து வைக்கப்படும் இடமொன்றில், கிடத்தி வைக்கப்பட்டுள்ள கடாபியின் சடலம் உருக்குலையத் தொடங்கியுள்ளது.

சடலத்தைப் பார்க்க அலை மோதுகின்ற மக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தியபடி, சென்றுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

கடாபியின் சடலத்துக்கு என்ன நடக்கவேண்டும் என்பது பற்றி வெவ்வேறு தரப்பினரிடையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவியதாக பிபிசி செய்தியாளர் கூறினார்.

http://www.bbc.co.uk...andedover.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இனி பிரான்சின்ரை பொருளாதாரம் கொஞ்சம் உயரும் அந்தளவிலை சந்தோசம். :icon_mrgreen:

அதுமட்டுமில்லை பெற்றோலும் குப்பைமலிவிலைவிக்கப்போகுது...ஐய்..ஐய் ஐசடக்கா :icon_idea:

Link to comment
Share on other sites

நான்தான் தலையில் சுட்டேன்

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=HOiOiLfeRyc&feature=related&skipcontrinter=1

one comment: This video proves that these rebels were mere animals. Gaddafi should have faced his punishment in court, not savaged beaten and murdered. How does that make these people any better than he was?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய இறைச்சிக் கடை குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள கடாபியின் உடல்

  • Sunday, October 23, 2011, 21:12

லிபியாவில் புரட்சி படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல் மிஸ்ரதா நகரில் காய்கறி சந்தையிலுள்ள பழைய இறைச்சி கடை ஒன்றின் பாரிய குளிரூட்டிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.அவரது மகன் முட்டாசிம் கடாபியின் உடலும் அங்குதான் உள்ளது. கடாபி சண்டையின் போது சுட்டுக் கொல்லப்படவில்லை. உயிருடன் பிடித்து அவரை தெருவில் இழுத்து வந்து அடித்து கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபையின் மனித உரிமை குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக கடாபியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆனால், பிரேத பரிசோதனை நடத்த மிஸ்ரதாவின் ராணுவ கமாண்டர்கள் (உயர் அதிகாரிகள்) மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுகுறித்து மிஸ்ரதா ராணுவ கவுன்சில் செய்தி தொடர்பாளர் பாதி அல்- பஷாகா கூறும் போது, கடாபியின் உடல் காய்கறி மார்க்கெட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் இன்றோ, அல்லது என்றும் பிரேத பரிசோதனை நடத்தப்படமாட்டாது, அவரது சாவு குறித்தும் மட்டும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “கடாபியின் உடலை பிரேத பரிசோதனை மூலம் யாரும் திறந்து பார்க்க அனுமதிக்க மாட்டோம். இடைக்கால அரசின் ராணுவ கமாண்டர் அப்துல் ஹக்கிம் பெல்காஜ் அவரது உடலை பார்வையிட வருகை தர உள்ளார் என்று கூறினார். இதே கருத்தைதான் மற்ற 2 ராணுவ தளபதிகளும் தெரிவித்தனர்.இதுகுறித்து இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் கூறும் போது, “சிர்த் நகரில் நடந்த சண்டையின் போது கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இதற்கிடையே, “கடாபியை சுட்டது நான் தான் என பெங்காசியை சேர்ந்த புரட்சி படை வீரர் சனாத் அல்-சதக் அல் உரேபி பெருமையுடன் தெரிவித்துள்ளார். காயத்துடன் சாக்கடை குழாய்க்குள் பதுங்கியிருந்த கடாபியை நான்தான் பார்த்தேன். அவரை 2 தடவை துப்பாக்கியால் சுட்டேன். அதில், ஒரு குண்டு அவரது கையின் அக்குழில் பாய்ந்தது. மற்றொன்று அவரது தலையில் பாய்ந்தது. இருந்தும் அவர் உடனடியாக சாகவில்லை. 1/2 மணி நேரம் அவர் உயிருடன் இருந்தார். சிர்த் நகர வீதியில் அவரை நடத்தி அழைத்து சென்றோம். குழந்தைகளும், சில பெண்களும் அவரை சூழ்ந்தபடி வந்தனர். அப்போது அவர் தங்க துப்பாக்கி வைத்திருந்தார். அவரை பெங்காசி நகருக்கு கொண்டு செல்ல விரும்பினோம். ஆனால் மிஸ்ரதா வீரர்கள் அங்கு கொண்டு சென்று சுட்டு கொன்றனர்”

http://www.tamilthai.com/?p=28893

Link to comment
Share on other sites

தந்தையை கொன்றவர்களை பழிவாங்குவேன் கடாபியின் மகன் சபதம்

gadafi13.jpg

தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்குவேன் என்று புரட்சி படையினரால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சயீப் அல்- இஸ்லாம் ஆவேசமாக கூறியுள்ளார்.

கடாபிக்கு 2 மனைவிகள் மூலம் 7 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.அவர்களில் 2 பேர் தங்கள் குடும்பத்துடன் அல்ஜீரியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். நேட்டோ படை குண்டு வீச்சில் ஒருவர் பலியாகிவிட்டார்.முட்டாசிம் என்ற மகன் கடாபியுடன் கொல்லப்பட்டார்.

மற்றொரு மகனான சயீப் அல்- இஸ்லாம் என்பவர் தலைமறைவாகி விட்டதால் உயிருடன் இருக்கிறார். இந்நிலையில் அவர் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசினார்

அப்போது,”நான் சாகவில்லை,இன்னும் உயிருடன் இருக்கிறேன்.லிபிய மக்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன். என் தந்தையை கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன்.அதுவரை எனது போராட்டம் ஓயாது” என்று ஆவேசமாக கூறினார்.

http://www.alaikal.com/news/?p=85997

Link to comment
Share on other sites

புரட்சிப்படையின் நோக்கங்களைக் கண்டு உதவிய நேட்டோ நாடுகளுக்கு இப்ப கலக்கமாம்..! :rolleyes:

இஸ்லாமியச் சட்டம், பலதார திருமணத்துக்கு எதிரான கட்டுப்பாடு நீக்கம் என அடிப்படை இஸ்லாம் கோட்பாடுகளுக்குச் செல்கிறார்கள்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தலிபான்?

இரானிய, ரசிய, சீன...... உதவிகள்???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.