• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

மேகநாதன்

வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன

Recommended Posts

வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி

சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து

விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு...

அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து விளையாடுகிற விளையாட்டு இருக்கே, கொஞ்சநேரம் ஆச்சர்யப்படுத்துகிற நேரத்திற்கு நின்னு பாத்திட்டு போலோமே அதுமாதிரி இந்தப்படத்தில் நடத்திருக்கு. அரவிந்தசாமியும், கௌதமியும், ரஞ்சிதாவும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்காங்க. கடைசி கடைசியாக நாமும் நகரத்தார்களின் மென்மையான வாழ்க்கையை பதிவு செய்திட்டோம். நியாயம் செய்திட்டோம் என்ற சந்தோஷம் வருது. அந்த சந்தோஷம் உங்களுக்கு வந்துவிட்டால் இது ஒரு வெற்றிப்படம். இதில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வளவு விற்பன்னர்கள், அற்புதமான டெக்னிஷியன்கள் இருந்தும் தமிழ்சினிமா பெரிய ஏன் அளவுக்கு போனதில்லை?

நல்ல சினிமான்னு நினைச்சாலே போதும். இங்கே பெரிய வேடிக்கை என்னவென்றால், நம்ம டெக்னிஷியன்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவங்க கிடையாது. அப்படியிருந்தும் இன்னிக்கும் டி.வி.டி.யை பார்த்துத்தான் படம் பண்றோம். படம் பார்த்து படம் பண்றோம். சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அப்படியே அடிக்கு அடி காப்பி பண்ணி படம் செய்திருக்காங்க. அதை செய்திட்டு கதை, வசனம் என்று வேறே பேரைப் போடுறாங்க. என்ன அசிங்கம். மேற்கொண்டு இங்கே ஆஸ்கார் அவார்டுக்கு வேறே போட்டி. ஆஸ்காரே பெரிய அவார்டு கிடையாது. கேன்ஸ் பட விழா தான் பெரிய அவார்டு. இதையே நம்ம ஆட்கள் இன்னும் புரிஞ்சுக்கலை. அதுதான் வேதனை. ஒரு எம்.ஜி.ஆர்., சிவாஜி எங்கவாது பார்க்க முடிஞ்சதா? இளையராஜா மாதிரி மேதை இங்கே தானே கிடைச்சார். எவ்வளவு விஷயங்கள் கிடைத்தும், மேற்கொண்டு பயணம் போகாமல் அப்படியே உட்கார்ந்திருக்கோம்.

தமிழீழம் போய் இருந்திங்க போலேயிருக்கு?

அங்கே போனாலும் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழனுக்கு காதலைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையான்னு கேட்கிறாங்க. உங்களுக்கு பிரச்சினை எப்படியாவது ஐ லவ் யு சொல்லியாகணும். இதைத்தானே காட்டுறீங்கன்னு வேதனைப்படுறாங்க. 'உதிரிப்பூக்கள்' மாதிரி படம் காணோமே என்கிறார்கள். இன்னும் என்னைத் தாண்டி தமிழ்சினிமா வரவில்லையா என்று எனக்கே வேதனையாக இருக்கு. அவங்க வேதனை நியாயமாக இருக்கு. கேரள ஆடியன்ஸ் பாருங்க, அவங்களுக்கு வவீனீமீ ணீஸீபீ னீஷீஸீமீஹ் ஸ்மீக்ஷீஹ் ஜீக்ஷீமீநீவீஷீரள இங்கே நம்முடைய ரசிகனுக்கு நேரத்தின் அருமையும் தெரியாது. பணத்தின் அருமையும் தெரியாது. அது அவங்க குற்றமில்லை. நாம் அதற்கு பழக்கப்படுத்தி வைச்சிருக்கோம். அதே சமயம் நம்ம ஆடியன்ஸிடம் ஒரு நல்ல குணம் உண்டு. ரொம்ப பரிட்சார்ந்த படங்களையும் பார்த்திருங்காங்க. மொழி புரியாமல்கூட பார்த்திருக்காங்க. இவங்க மட்டும் ஒரு தீர்மானத்திற்கு வந்துட்டாங்கன்னா நிச்சயம் நல்ல படங்கள் உருவாகும்.

தமிழீழத்தில் என்ன செய்தீர்கள்?

அங்கே கிளிநொச்சியில் ஆதவன் திரைப்படக்கல்லூரி இருக்கு. சினிமாவை சொல்லித்தர கூப்பிட்டாங்க. மூணு மாசம் போய் இருந்தேன். போரும், துப்பாக்கி வாசனையின் எச்சமும் இருந்தாலும், அங்கே சகஜவாழ்க்கை வந்துவிட்டது. தமிழ்வடிவத்தின் பலவித பிரிவுகளை ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. '1996' என்று அரைமணி நேரம் ஓடக்கூடிய படம் எடுத்தோம். நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத தமிழீழ மக்களை நடிக்கவச்சேன். அவங்க வாழ்க்கையை எடுத்து, அவர்களுக்கே பாடம் சொல்லித்தந்தேன். 'நடிப்பு என்பது' பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். நின்னு நிதானிச்சு ஆழமாக வாழ்க்கையின் தரிசனத்தை தந்த இடம் தமிழீழம். பெரிய மரியாதையோடு என்னை வைச்சு நடத்தினாங்க. இங்கேயிருந்து பயணப்படுகிற தூரத்தில் இருந்துகிட்டு, ரத்தமும் சதையுமாக வேறே மாதிரி வாழ்க்கை இருக்கு. வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி தமிழீழம்.

நீங்க ஊருக்கு போயிருந்த சமயத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சிருக்கார்...

சினிமா எடுத்த ஒரு பாமரன் மாதிரித்தான் நான் பேசுறேன். பெரிய பெரிய கொள்கைகள், யோசனைகள் சொன்னவங்களை எல்லாம் பார்த்தாச்சு. கொள்கையின்னு சொல்லாமல் இருக்கிறதே பெரிய கொள்கையாக இருக்கு. கொள்கைன்னு சொல்லிட்டு, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிட்டு குடும்பத்திற்காகவே பாடுபடுறாங்க இல்லையா, அப்படி எதுவும் சொல்லாமல் இருக்கார் இல்லையா, அதுதான் சிறந்த கொள்கை. யார் வேண்டுமானாலும் சொல்லாமல் செய்தால் நல்லது. யார் வேண்டுமானாலும் சத்தம் போடாமல் நல்லது செய்திட்டுப் போங்கள். உரக்க சத்தம் போட்டு, கூவிப் பார்த்து நமக்கே அலுத்துப்போச்சு இல்லையா.

உங்கள் மகன் 'சச்சின்' ஜான் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?

அவன் சினிமா பக்கமே போகாமல் படிப்பு உண்டு, தான் உண்டுன்னு தான் இருந்தான். ராஜாதான் அவனை இசையில் அக்கறைப்பட வைச்சார். இன்னிக்கும் ஜான் இசையில் ரொம்ப நேர்த்தியானவன். எந்தப்பாடலை கேட்டாலும், எந்த இசையை கேட்க நேர்ந்தாலும் அதனோட ஆதி அந்தம் சொல்வான். அவனோட பலம், பலவீனம் எல்லாம் நான் டைரக்டராக இருப்பதுதான். என்னை மாதிரியே படம் எடுக்கணும்னு நினைப்பாங்க. இன்னொரு மகேந்திரன் எதுக்குன்னு நினைக்கமாட்டாங்க. விஜய் படக்கதையை நான் ஜான்கிட்டே கேட்கவும் இல்லை. அவன் சொல்லவும் இல்லை. அவன் படத்தில் சில குறைகள் இருந்தது. எல்லாவற்றையும் களைந்து அவன் சிறந்த டைரக்டராக வெளிப்படுவான்னு எனக்கு எண்ணம் இருக்கு.

இனிமேல் படங்களில் சிகரெட் பிடிக்கிற காட்சி இடம்பெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்போறாங்க?

பெண்களை படங்களில் எவ்வளவு கீழ்த்தனமாக காண்பிக்க முடியுமோ, அவ்வளவும் கூச்சப்படாமல் செய்கிறோம். டபுள்மீனிங், எல்லா குளோசப்பும் தொப்புளை நோக்கிப் போகுது. படங்களில் ஏராளமாக வன்முறையை அனுமதிக்கிறோம். ஆனால் நமக்கு என்னடா என்றால் புகைபிடிக்கக்கூடாது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட இதுமாதிரி ஒரு சட்டம் கொண்டு வரமாட்டாங்க. மதுக்கடைகளை திறந்து வைச்சிருக்கோம். ஆனால் குடி குடியைக்கெடுக்கும் என்ற வாசகம். எங்கே பார்த்தாலும் சிகரெட் வகைவகையாய் கிடைக்கும். ஆனால் சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது. நிஜமாகவே சட்டம் போடுகிற ஆட்சியாளர்களை நினைச்சால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

இப்ப இருக்கிற இயக்குநர்களைப் பற்றிச் சொல்லுங்க?

பாலாகிட்டே இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவரைப்பருங்க புரடியூசராக மாறிக்கிட்டு இருக்கார். அதையும் தப்புச்சொல்ல முடியாது. நல்ல பெயரை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கலாம். சேரன் இன்னிக்கும் தனித்தன்மையோடு செயல்படுகிறார். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் இதுவே பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா பண்றது செக்ஸ் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. மூடி மறைச்சு, மூடி மறைச்சு என்னத்தைக் கண்டோம். அதை அவர் அழகுணர்ச்சியோடு செய்தால் போதும். ஆனால் அவர் எல்லாத்தையும் ஈஸியாக எடை போடுகிறார். நடிக்கிறதை விட டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக வெளிப்படுவார். நல்ல கமர்ஷியல் படங்கள் செய்வது கஷ்டம். கே.எஸ்.ரவிக்குமார் அந்த விதத்தில் நேர்த்தி. அவரும் ரஜினியும் பிரிஞ்சதது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இரண்டு பேரும் நல்ல காம்பினேஷன். கமர்ஷியல் சினிமாவில் ரவிக்குமார், ரஜினி காம்பினேஷன் அவ்வளவு கச்சிதம். ரஜினியை 100 சதவீதம் புரிந்தவர் ரவிக்குமார். ரஜினிக்கேற்ற மாதிரி நான் கூட கச்சிதமாக படம் பண்ணலை. இதை சாதாரணமாக படம் பார்க்கிற பாமரனாகப் பேசுறேன். டிக்கெட் வாங்கி படம் பார்க்கிற ஆளாகத்தான் பேசுறேன்.

இன்றைய நடிகர்களை யாரைப்பிடிச்சிருக்கு?

கார்த்திக் மாதிரி சிறந்த ரஸீபீமீக்ஷீஜீறீணீஹ் பண்ற நடிகர் கிடையாது. அவர் இப்ப வில்லனாகப் பண்றாராம். சரி, அதில் கூட வித்தியாசம் காட்டுவார். அமிதாப்பச்சன் மாதிரி இன்னும் இருபது வருஷம் கழிச்சு விக்ரம் வருவார்னு தோணும். எல்லா வேடங்களையும் அவரால் செய்ய முடியும். விஜய் வேறு வகை. அவரையும் குழந்தகளுக்கு பிடிக்குது. அவர் ரொம்ப மெனக்கெடாமல் மனசை கொள்ளை அடிச்சிட்டுப் போய்விடுவார். நம்பிக்கை அளிக்கிற இன்னொரு வரவு சூர்யா. எனக்கென்னவோ ஹீரோக்களை விட காமெடியன்களை மெச்சத்தோணும். தமிழ்நாட்டு காமெடியன்களை நாம் கொண்டாடணும். ரொம்ப நாளாக சிரிச்சு கைதட்டி அவங்களை மறந்திட்டு வர்றோம்.

குஷ்புவும், சுகாசினியும் ஏற்படுத்திய பிரச்சினைகள்...

எப்பவும் செய்தியில் அடிபடணும்னு சில பேர் நினைக்கிறாங்க, அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி, யாராவது குதர்க்கமாகப் பேசினால், நாம் சகித்துக்கொண்டே இருப்போம். இந்த மாதிரி பப்ளிசிட்டி தேடுகிறவர்களை பற்றி என்ன அபிப்பிராயம் சொல்ல.

குமுதம்

நா.கதிர்வேலன்,

தகவல் மூலம்- நிதர்சனம்.கொம்

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கையை கற்றுக்கொடுக்கின்ற பூமி நமது தாயகம் என்று சொல்லி பெருமையடைய வைத்திருக்கின்றார் இயக்குனார் மகேந்திரன்.

தகவல்களை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் மேகநாதன்.

Share this post


Link to post
Share on other sites