Jump to content

சோ..சுத்தியுடனான நேர்காணல்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியாளர்: வணக்கம்.. உங்களைப் பார்த்தா.. ஊரில இருந்து ஓடி வந்தீக்கிங்கன்னு தெரியுது.. ஆனா ஊரில இருந்து எப்படி.. எப்ப ஓடி வந்தீங்கன்னு.. தான் தெரியல்ல. உங்க தலைமுடி.. தாடியை வைச்சுப் பார்க்கிறப்பா.. கன காலத்துக்கு முன்னாடி ஓடி வந்த கணக்கா இருக்குது. குறிப்பாக உங்களைப் போல ஒருத்தரை இந்தியப் படைகள் காலத்தில.. ஈ என் டி எல் எவ் ஒட்டுக்குழு காம்பில கண்டது போலவும் இருக்குது.. அதனால.. பேட்டி காண முன் நீங்கள் தான் சோபா சுத்தியா.. என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புறன்..

சோபா சுத்தி: கிள்ளிப் பார்த்து.. நுள்ளிப் பார்த்து.. ஏன்.. தமிழச்சி மேல சத்தியமா சொல்லுறன்.. நான் தான் சோபா சுத்தி..!

பேட்டியாளர்: மன்னிக்கனும் கேள்விக்குள்ள போக முதலே உங்களை கிள்ளி.. நுள்ளி காயப்படுத்திப் போட்டன் போல இருக்குது. அது வெறும் வெளிக்காயம் தான்.. இருந்தாலும்.. தமிழச்சியை வேற நினைக்க வைச்சிட்டன்... உள் காயத்தையும் கிளறிவிட்டிட்டன் போல.. கோவிக்காதேங்கோ.

சோபா சுத்தி:: கோவமா.. அப்படின்னா என்ன...! (மவனே வெளில வருவா தானே.. சிறீலங்கா போவா தானே அப்ப.. கவனிச்சிக்கிறண்டா.. மனசுக்க திட்டுறார்.)

பேட்டியாளர்: நல்லா போய்க்கிட்டிருந்த உங்க வலைப்பூ இப்ப வாடி வதங்கி இருக்கே ஏன்..??!

சோபா சுத்தி: அது செழிச்சிருந்தது.. தமிழிச்சி காலத்தில.. யு நோ.. பிகர மடக்க.. எழுதித் தள்ளினது. இப்பதான் எல்லாம் புட்டுக்கிச்சே.

பேட்டியாளர்: போயும் போயும் தமிழிச்சி போன்ற கலியாணம் ஆன ஆன்ரிகளை மடக்க முயற்சிச்சு.. இருக்கீங்களே.. அதன் பின்னாடி ஏதேனும் விசேட நோக்கம் இருக்கா..??!

சோபா சுத்தி: முதலில்.. என் மாக்சியக் கண்களுக்கு தமிழிச்சி ஆன்ரியாக தெரியவில்லை. அப்பாவியாக தெரிந்தார். மடக்கக் கூடிய பிகர் என்பதை அவர் பெரியாரை வைத்து.. பெண்களின் நிர்வாணப் படங்களை போட்டு.. பெரியாரின் வீரதீர முழக்கங்களோடு.. பதிவிரதையாக பவனி வந்து.. பதிவுகளை வலைப்பூ உலகில் படரவிட்டு.. ஆண்களை எல்லாம் மிரட்டிய போதே கண்டிபிடிச்சிட்டன். மற்றும்படி வேற நோக்கம் எதுவும் இல்லை. சுருங்கச் சொல்லனுன்னா.. பட்சி.. தானா வந்து வலைல விழுந்துகிட்டுச்சு.

பேட்டியாளர்: இப்ப உங்க இருவரின் உறவு பற்றி ஓரிரு வரிகள்..

சோபா சுத்தி: மழை விட்டும்.. தூவானம் ஓயவில்லை.

பேட்டியாளர்: நீங்கள் ஈழத்தில் இருந்து ஓடி வந்தவர் என்ற அளவிலும்.. முன்னொரு காலத்தில் வலைப்பூவில்.. இணையவெளியில்.. வெட்டி விழுத்தினவர் என்ற அளவிலும்.. கார்ள் மார்க்ஸிற்கு பிறகு உலகமே வியந்து பார்க்கும் தாடி வைச்சிருக்கும் மாக்சியவாதி என்ற அளவிலும்.. நீங்கள் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீங்க..

சோபா சுத்தி: எனக்கு இவ்வளவு அடைமொழிகள் தந்ததற்கு நன்றி. இதற்கும் மேலவும் என் புகழ் பரவ வேண்டும் என்பது என் ஆசை. அது கிடக்க.. இப்போ உங்கள் கேள்விக்கு பதில் சொல்லனும் என்றால்..

தம்பியில ஆரம்பிச்சு.. இப்ப தம்பில முடிஞ்சிருக்குது என்று சொல்லலாம்.

பேட்டியாளர்: உங்களுக்கு கலைஞரின் வாரிசு என்று அடைமொழியை வேணும் எண்டால் தாறன்.. அதை வாங்கி வைச்சுக் கொண்டு.. ஏன் பேஸ்புக்கில... போட்டுக் கொண்டு.. உங்களின் உந்த தம்பில ஆரம்பிச்சு.. தம்பில முடிஞ்சிருக்கு என்ற கிரந்தத்திற்கு விளக்கம் தர முடியுமா..??!

சோபா சுத்தி: தம்பி உமக்கு என்ன வயசோ தெரியல்ல. நாங்கள் எல்லாம் தோழர் சிவகுமாரனுக்கே குப்பி செய்த ஆக்கள். எங்கட வழிகாட்டலில தான் அவர் குப்பி கடிச்சவர். அப்படி எல்லாம் நாங்கள் போராடி வளர்த்த போராட்டம்.. மாக்சிய எழுச்சி பெற்று.. தோழர் பத்மநாபா.. தோழர்.. டக்கிளசு.. தோழர் சங்கரி.. தோழர் அமிர்தலிங்கம்.. தோழர் வரதராஜப் பெருமாள்.. தோழர் சித்தார்த்தன்.. என்பவர்களின் பேராதரவோடு வளர்ந்து கொண்டிருந்த வேளையில்.. ஏன் தமிழீழக் கனி.. அணில் கொத்திற பருவத்தில.. கனிஞ்சு தொங்கிக் கொண்டிருந்த சமயத்தில்.. தம்பி என்று ஒருத்தர் கிளம்பி வந்து.. எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிப் போட்டு முள்ளிவாய்க்களோட சமாதியாகிட்டார். அதை மகிந்த ராஜபக்சவின் தம்பி செய்து முடித்தார். சாதித்துக் காட்டினார். இதுதான் தம்பில ஆரம்பிச்சு.. தம்பில முடிஞ்ச கதையின்.. ரத்தினச் சுருக்கமும்.. அதன் பின்னால் உள்ள மாக்சியவாதமும்.

பேட்டியாளர்: உங்கள் மாக்சியவாதம்.. நல்லாத் தான் இருக்குது. அப்படியே தலித்தியம் பற்றி ஒரு நாலு வரி... முத்தாய் உதிர்த்தால் என்ன.

சோபா சுத்தி: என்னை கேள்வி கேட்க வாறவை எல்லாரும் உதுகளைக் கேட்கனும் என்று தான் நானே உதுகளைப் பற்றி பக்கம் பக்கமா.. எழுதி.. பேஸ் புக் சுவத்திலும்.. அப்பப்ப.. தீராத நதியிலும் மிதக்க விடுறனான். இப்ப அதைப் பின்பற்றி... நீங்களும் உந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மாக்சியமும்.. தலித்தியமும்.. மையவாதங்களும்.. மாமன் மச்சான் மச்சினி போன்றவை. வேறு பிரிக்க முடியாதவை. அந்த வகையில்.. தலித்தியத்தை தவிர்த்து தமிழீழம் என்பது பிரபாகரன் போன்றவர்களின் கனவே அன்றி அது நனவாக முடியாது. அது முள்ளிவாய்க்காலில் நிரூபணமாகியுள்ளது.

பேட்டியாளர்: நல்லது. கிறீஸ்பூதங்களும்.. தமிழர்களும் பற்றி என்ன நினைக்கிறீங்க..

சோபா சுத்தி: இதைப் பற்றி என் அருமை அக்கா லண்டன் ராஜேஸ்.. தீபம் தொலைக்காட்சியில் தெளிவாச் சொல்லிட்டா. அதற்குப் பிறகும்.. இதனை பெரிய விசயமாக்கிறது அவ்வளவு நல்லதில்ல. இருந்தாலும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புறன்.. நாங்கள் மாக்சியவாதிகள் இருக்கும் வரை கிறிஸ்பூதங்களை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைப்பது.. எமது செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க உதவும்.

பேட்டியாளர்: சும்மா வலைப்பூவில வெட்டியா எழுதிக்கிட்டு திரிஞ்ச உங்களுக்கு இன்று இணைய உலகில்.. உலகம் பூராவும்.. நிறைய பான்ஸ் இருக்கிறதா சொல்லினமே.. அதைப் பற்றி.

சோபா சுத்தி: நான் மாக்சியவாதி என்றாலும்.. கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ளுற ஒருத்தன். என்னுடைய கருத்துக்களைப் படிச்சிட்டு.. பெரியார் தாசன்களும்.. தமிழச்சிகளும்.. பிரியா தம்பிகளும்.. இன்னும் பலரும்.. என்று.. தங்களின் சொந்தப் பெருமையை அதிகரிக்க.. பெரிய நட்பு வட்டத்தையே ஏற்படுத்திக் கொண்டாங்க. அதிலும் தலித்தியம் பேசி தமிழ் சமூகம் வளர்க்கும்.. பெரிய தலைவர்கள் கூட எனக்கு நெருக்கமானாங்க. திராவிட உலகை ஆளுறவங்களும் இப்ப எனக்கு கூட்டாளிங்க. ஆனால் புலிச்சாயம் பூசிய சிலதுகள் மட்டும்.. இன்னும் என்னை சரியா அடையாளம் காண மாட்டேன்னு நிக்குதுங்க. அவர்கள்.. இன்னும் பிரபாகரன்.. உயிரொடு இருக்கிறார் என்ற மாயைக்குள்ள இருக்கிறதால.. இந்த கிரேட்.. மாக்சி லீடர் சோபா சுத்தியின்ர அருமையை இன்னும் உணரல்ல. மிக விரைவில அதை உணர வைக்க.. சிறீலங்கா அரசாங்கத்தோட பேசி.. ஒரு முடிவு செய்வன்.

பேட்டியாளர்: நீங்கள் புலிச் சாயம் என்றத்தான் ஞாபகம் வந்திச்சுது. முந்தி ஒரு காலத்தில.. வலை உலகில்.. உங்களை நல்லவனா தமிழீழ விரும்பியா.. இனங்காட்டிக் கொண்டிருந்த..நீங்கள்.. ஒரு காலக் கட்டத்தின் பின் தீவிர புலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் போல ஆகிட்டீங்களே ஏன்..

சோபா சுத்தி: இஞ்ச பாரும்.. உப்படிக் கேள்விகளைக் கேட்டீர்.. லண்டன் ராஜேஸ் அக்கா பிராவை கழற்றி எறிஞ்ச கணக்கா.. நான் உம்மைத் தூக்கி எறிஞ்சு போடுவன். சும்மா கோவத்தைக் கிளறாதையும். எது புலிக்காய்ச்சல்.. புலிகளின் பாசிசத்தைச் சொல்லுறது புலிக்காய்ச்சல் என்றால்.. அதை நீங்கள் அப்படியே அழைத்துக் கொள்ளுங்கள். எங்கள் மாக்சியக் கண்களுக்கு புலிகள் செய்ததெல்லாம்.. பாசிசமே. சரியே.

பேட்டியாளர்: சாறி.. உங்களின் சூடான பக்கத்தில கைவிச்சிட்டன் போல. மன்னிக்கனும். உங்களைக் கூலாக்க.. உங்களுக்கு எப்படி.. சோபா சுத்தின்னு ஒரு பெயரை நீங்களே பொறிக்கி எடுத்து வைச்சுக் கிட்டீங்க..

சோபா சுத்தி: அது ஒரு சுவாரசியமான விசயம். நாங்கள்.. மாக்சிய வழியில் வளர்ந்த.. பெரியாரின் புதல்வர்கள் இல்லையா. எங்களை வெளில யாரென்று.. பெயரில கூட இனங்காட்டிக்கக் கூடாத ஒரு சந்தர்ப்பத்தில.. இந்தப் பெயர் பெண் வாசகிகள் மத்தியில் சக தோழியாகவும்.. ஆண் வாசகர்களுக்கு ஜொள்ளு வழிய ஒரு வடிகாலாகவும் அமைந்திருந்தது. அதனால் தான்.. இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தான். அது தமிழச்சி போன்ற புரட்சிப் புதல்விகளைக் கூட கவர உதவி இருக்குது. அந்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட தமிழ் பெயர்.. சோபா சக்தி. ஆனால் அதையும் நீர்.. திரித்து.. சோபா சுத்தி என்று அழைக்கிறீர். கவனிச்சுக் கொள்ளும்.

பேட்டியாளர்: உங்களின் பெயர் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.. அண்மையில்..உங்களின் முன்னாள் நண்பிகளில் ஒருவரான பிரியாதம்பி பேஸ்புக்கில.. உங்களைப் பற்றி உங்களின் இன்னொரு முகம் பற்றி எழுதி இருக்காங்களே அது பற்றி..

சோபா சுத்தி: எனக்கு மட்டுமா இன்னொரு முகம். கண்ணதாசனுக்கு இல்லையா.. கலைஞருக்கு இல்லையா.. ஏன் பெரியாருக்கு இல்லையா. பிரியா தம்பி.. ஏதோ பொறாமையில் எழுதி இருக்கலாம். அதையெல்லாம் கண்டுக்கப்படாது. இன்னொரு முகம் என்பது மாக்ஸிய உலகில் சகஜம்.

பேட்டியாளர்: ஆ... கலைஞர்.. கண்ணதாசன் எண்டத்தான் நினைவு வந்திச்சு.. உங்களுக்கும்.. துக்ளக் சோவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்று சொல்லினமே.. அதைப் பற்றி..??!

சோபா சுத்தி: ஆம்.. உண்டு. அவர் தாடி.. மீசை.. வைக்காத.. ஐயங்கார் வர்க்கம் தந்த தங்கத்.. தலித்தியவாதி. நான் தாடி வைச்ச யாழ்ப்பாண தலித்தியவாதி. அவர் தான் சார்ந்த உயர் சாதிகளுக்காக வாதாடி.. புகழ் வளர்க்கிறார். நான் உயர் சாதியில் பிறந்தவன் என்று சொல்லிச் சொல்லி.. அந்தத் திமிரோடு.. யாழ்ப்பாண தலித்தியம் என்ற ஒன்றை வரைஞ்சு... அதற்கு வடிவம் கொடுத்து.. பேசி புகழ் வளர்க்கிறன். விளங்கிச்சே.. ஐ சே.

பேட்டியாளர்: இறுதியாக.. புலிச் சாயங்கள் விரும்புவது போல.. இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவது தமிழர்களுக்கு விடிவைத் தருமா..??!

சோபா சுத்தி: இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தும் அதேவேளை புலிகளையும் உட்படுத்த வேண்டும். முள்ளிவாய்க்கால் புலிகளின் தவறான கொள்கைகளால் வந்த ஒன்று. அதற்கு இலங்கை அரசையோ.. எம் போன்ற தோழர்களையோ குறை சொல்லக் கூடாது. பிரபாகரன் மாக்சிய சிந்தனையற்று.. ஆயுதங்கள் மீது காதல் கொண்டதால்.. தான் இத்தனையும் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசை இது தொடர்பில் ஏன் தமிழர்கள் தண்டிக்க வேண்டும். அது பகையை ஆழப்படுத்துமே அன்றி தமிழர்களுக்கு விமோசனம் தராது. இதையே தான் இன்று மாக்சியத்தின் உச்ச தலைவர்கள் உயிரோடு இருந்திருந்தாலும் சொல்லி இருப்பர். அதையே தான் நானும் சொல்கிறேன். ஒன்றைக் கவனியுங்கள்... புலிகளை அழிக்க.. நாங்கள் மட்டுமல்ல.. மாக்சியம் பிறந்த வீடான.. ரஷ்சியா.. மற்றும் சீனா.. கியூபா.. வியட்நாம்.. வடகொரியா.. எல்லாமே மகிந்தவிற்கு.. இறுதிப் போரில் தார்மீக உதவி அளித்து நின்றன. அதையே நாங்களும் செய்தோம்.

பேட்டியாளர்: கடும் பனிக்குளிருக்குள்ளும்.. வீட்டுக்குள் பதுங்கிக் கிடந்து கணணியில்.. மாக்சியம் பரப்பி வளர்ந்து வரும் தங்களின் வளர்ச்சி.. யாழ்ப்பாணப் பனை போல.. பெரு வளர்ச்சி காணவும்.. அது தமிழர்கள் மத்தியில் தலித்தியம்.. பைத்தியம்.. வைத்தியம்.. வளர்க்க வேண்டிக் கொண்டும்.. போறன் சொல்லி விடை பொறுறன். எனி உந்தப் பக்கம் வரவே மாட்டன். ஒரு பெரிய தாடி வைச்ச.. மாக்சியவாதியை கண்டு பேட்டி கண்ட அனுபத்தை இன்று பெற்றுக் கொண்டேன் நன்றி.

சோபா சுத்தி: நன்றி. என்னுடைய கருத்துக்கள் இன்று உலகத்தையே தமிழர்களின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்குது. இதைத்தான் நான் பிரபாகரனிடமும் வலியுறுத்தினேன். அவர் அதைக் கேட்கவில்லை. இறுதியில் என்ன நடந்து என்று தெரியும் தானே. அந்த வகையில்.. எனது பிறப்பும் இருப்பும்.. வலையில் என் வாழ்வும்.. தமிழர்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுத் தரும். அதற்காக நான் தமிழச்சி கூட சேர்ந்து என்றாலும் சமூகப் பணி புரியத் தயாராகவே இருக்கிறேன்.

நன்றி வணக்கம்.

பேட்டியாளர்: நன்றி. ( மனசுக்குள்ள.. எவண்டா இந்த தறுதலையை சந்திக்க என்னை அனுப்பினது.)

(யாவும் ஊரறிஞ்சது.)

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

good try

இதை தமிழிலையே எழுதி இருக்கலாமே. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க போல. கூல்..! நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தியின் எழுத்து ஒன்றையுமே மணந்துகூடப் பார்க்காமல் கேள்வி ஞானத்தில் இணையத்தில் கிடைப்பவற்றைப் பற்றிய அனுமானத்தில் எழுதப்பட்டிருக்கின்றது இந்தக் கற்பனைப் பேட்டி. அவ்வளைவுக்கு வேலையில்லாமலா இருக்கின்றீர்கள் நெடுக்ஸ்!!

சோபா சக்தியின் எழுத்துக்களை/பேட்டிகளைப் படித்திருந்தால் இதைவிட நன்றாக கலாய்த்து எழுதியிருக்கலாம்!!!

Link to comment
Share on other sites

ஒரு சமூக இலக்கியவாதி, எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என நிறையவே எழுதலாம் விவாதிக்கலாம். ஆனால் அவன் சமூக ஆர்வளனாக இல்லாவிட்டால் சமூகம் அவனை விட்டு தூரமாக சென்றுவிடும்.

நன்றி சுவாரசியமான நேர்காணலுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தியின் எழுத்து ஒன்றையுமே மணந்துகூடப் பார்க்காமல் கேள்வி ஞானத்தில் இணையத்தில் கிடைப்பவற்றைப் பற்றிய அனுமானத்தில் எழுதப்பட்டிருக்கின்றது இந்தக் கற்பனைப் பேட்டி. அவ்வளைவுக்கு வேலையில்லாமலா இருக்கின்றீர்கள் நெடுக்ஸ்!!

சோபா சக்தியின் எழுத்துக்களை/பேட்டிகளைப் படித்திருந்தால் இதைவிட நன்றாக கலாய்த்து எழுதியிருக்கலாம்!!!

சரியாய் சொன்னீங்கள் கிருபன் அத்தோடு இப்படி எழுதி,எழுதியே அவர்களை நாங்களே பெரியவர்களாக்கி விடுவோம் :)

சோபா சுத்தியை இணைய வெளியில் ஆள் உருவம் தெரியாமல்.. வலைப்பூக்களை வாசிக்கும் பழக்கத்தின் அடிப்படையில் அவரின் ஆக்கங்கள் சிலவற்றையும் வாசித்திருக்கிறேன். அப்புறம் வலைப்பூவில் நடந்த அடிப்பாடுகளையும் கண்ணுற்றிருக்கிறேன். அப்புறம் பேஸ்புக் அடிபாடுகள். அப்புறம்.. யாழில் நீங்கள் அவருக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கியதையும் அவரின் பால் தங்களின் ஈடுபாட்டையும் கண்டிருக்கிறேன்.

என்னால்.. குறிப்பிட்டவரிடம்.. எந்த விதமான உறுதியான சமூக.. அரசியல்.. பட்டறிவின் பாலான.. முன்மொழிவுக்கான திறமை இருப்பதை இனங்காண முடியவில்லை. ஆனால் அவர் அநாவசியமாக.. எந்த முகாந்தரமும் இன்றி.. போராட்டத்தையும்.. தேசிய தலைமைத்துவத்தையும் விமர்ச்சிப்பது அத்துணை ஏற்புடையதாக எனக்குத் தெரியவில்லை. அந்த வகையில் அமைந்த ஒன்றே இந்த ஆக்கம். அவருக்கு மற்றவர்களை பற்றி எவ்வளவுக்கு முகாந்தரமின்றி.. விமர்சிக்க முடியுமோ அதேஅளவு அவரைப் பற்றியும் விமர்ச்சிக்க ஆக்கள் இருப்பினம் என்பதை அவர் உணர வேண்டும்.

நிறையவே இவர் பற்றிய பிரியாதம்பியின் ஆக்கங்கள் மற்றும் பிற ஆக்கங்களூடு உந்த சுத்தியைப் பற்றி அறிஞ்சிருக்கிறன். மற்றும்படி.. அவரோடு.. நேரடியா தொடர்பு கொண்டு.. கதைக்க வேண்டிய அளவுக்கு அவர் ஒன்றும் பெரிய சமூகப் பணி ஆற்றும் ஒருவராக எனக்குத் தெரியவில்லை. :):icon_idea:

சரியாய் சொன்னீங்கள் கிருபன் அத்தோடு இப்படி எழுதி,எழுதியே அவர்களை நாங்களே பெரியவர்களாக்கி விடுவோம் :)

யாழில வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கி இருக்கினம்.. அது தெரியல்லைப் போல.. அக்காச்சிக்கு..! அவரை காமடியனா ஆக்கினதுதான்.. அக்காச்சிக்கு கவலையா அமைஞ்சிருக்குப் போல..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நல்லா இருக்கு, தொடருங்கள் உங்கள் நிருபர் பயணத்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சுத்தியை இணைய வெளியில் ஆள் உருவம் தெரியாமல்.. வலைப்பூக்களை வாசிக்கும் பழக்கத்தின் அடிப்படையில் அவரின் ஆக்கங்கள் சிலவற்றையும் வாசித்திருக்கிறேன். அப்புறம் வலைப்பூவில் நடந்த அடிப்பாடுகளையும் கண்ணுற்றிருக்கிறேன். அப்புறம் பேஸ்புக் அடிபாடுகள். அப்புறம்.. யாழில் நீங்கள் அவருக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கியதையும் அவரின் பால் தங்களின் ஈடுபாட்டையும் கண்டிருக்கிறேன்.

இணையத்தில் படித்தது.. ஏதோ இந்தத் திரியில் இணைக்கவேண்டும் போலிருந்தது..

அறத்திற்குப் புறம்பான நான்கு கூறுகள் நம்மிடம் இருக்கக் கூடாதவை. இவை அறமாகா.

அவை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்பன.

அழுக்காறு என்பது பிறருடைய வளர்ச்சியைக் கண்டு ஏற்றுக் கொள்ள முடியாத மனப் பண்பாகும். இதனை பொறாமை என்றும் கூறுவார்கள். ஒருவருக்கு அழுக்காறு இருந்தால் யார் மீது அது ஏற்பட்டிருக்கின்றதோ அவர்க்குக் கெடுதல் செய்ய முற்பட்டு விடுவார்.

அடுத்து அவா. இதனைப் பேராசை என்றும் சொல்லுவோம். அவா என்னும் பேராசை உடையவர், தாம் மட்டுமே தமக்கு மட்டுமே என்ற தன்னலத்தால் பிறர்க்கு உரியதையும் பறித்துக் கொண்டு அவர்க்குக் கெடுதல் செய்து விடுவார்.

மூன்றாவது வெகுளி எனப்படுகின்ற தன்னை மறக்கின்ற சீற்றம், ஆத்திரம். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். இந்த வெகுளியால் ஒருவர் தன்னறிவை இழந்து என்ன செய்கிறோம் ஏது செய்கின்றோம் என்பது கூட அறியாமல் பிறர்க்குக் கேடு செய்துவிடுவார்கள். சில வேளை கொலை கூட செய்து விடலாம்.

நான்காவது இன்னாச்சொல். தனக்குப் பிடிக்காதவருடைய மனத்தைப் புண்படுத்துகின்ற வகையில் அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லித் துன்புறுத்துவது. இன்னல் படுத்துவது இன்னாச்சொல் எனப் படும்.

இவ்வாறு தமக்கும் பிறர்க்கும் பெருந்துன்பத்தைத் தருகின்ற பெருங்கேட்டினை ஏற்படுத்துகின்ற நான்கு கேடுகளையும் விட்டொழித்து தம்மைப் போல பிறரையும் எண்ணி மனித நேயம் பேணுவது சிறப்பல்லவா.

இது தமக்கான அல்லது தமக்குரியவர்கள் மீதான நியாயமான விமர்சனங்களைக் கூட ஏற்க முடியாதவர்களும் சொல்வது தான். இது தமிழர்களின் அன்றாட புறக்கணிப்புக்கான எந்தனங்களின் வடிவம்.

ஒருவரின் வளர்ச்சி என்பது.. அவரா மதிப்பிட்டு வருவதல்ல. சமூகம் அவருக்கு.. அவருடைய கருத்துக்கு அளிக்கும் முக்கியத்துவம்.. அதனால் சமூகம் அடையும் பலன் என்ற முக்கிய காரணிகளை உள்ளடக்கியுள்ளது. ஓரிருவர் விழுந்து விழுந்து பாராட்டுவதோ.. திட்டுவதோ.. அல்ல.. சமூக அங்கீகாரம் என்பது.

வள்ளுவன்.. 1330 பாக்களை ஏன் பாடினான். இப்படி 4 பாக்களோடு ஏன் நிறுத்திக் கொள்ளவில்லை. காரணம்.. சமூகத்தின் பல தளங்கள். அத்தனை தளங்களையும் சந்திக்கிறவன் தான் சமூக அங்கிகாரம் பெறுகின்ற படைப்பாளி.

அடிப்படையில்.. சோபாசுத்தி பற்றி எங்களுக்கெல்லாம் எந்த அக்கறையும் கிடையாது. ஒரு வலைப்பதிவர் என்பதற்கு அப்பால்.. அவர் மீது நாங்கள் வைக்கும் கருத்து.. அவரின் பொதுக் கருத்து எங்களினதோடு எங்கோ முரண்பட்டுக் கொள்வதின் விளைவே அன்றி.. அவர் உந்தப் படைப்புக்களோடு.. சந்திரமண்டலத்துக்கு போனால் கூட நமக்கு.. போட்டி... பொறாமை.. வெகுளி.. அழுக்காறு.. வா என்றாலும் வராது கிருபண்ணா.

அவரின் வலைப்பூவுக்கு அப்பால்.. அவர் யாருன்னு கூட தெரியாது. ஆனால் அவருக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கிய தங்களின் தனி முடிவே சமூகத்தின் முடிவாகாது.. கிருபண்ணா. உங்களுக்கு அவரின் எழுத்துப் பிடிச்சிருக்கலாம்.. அதற்காக அவரை சமூகப் படைப்பாளி வள்ளுவருக்கு நிகராக முன்னிறுத்தப் பாடுபடுவது.. கொஞ்சம் ஓவர். சகிக்க முடியாததும் கூட..! :):D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் வலைப்பூவுக்கு அப்பால்.. அவர் யாருன்னு கூட தெரியாது. ஆனால் அவருக்கு வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கிய தங்களின் தனி முடிவே சமூகத்தின் முடிவாகாது.. கிருபண்ணா. உங்களுக்கு அவரின் எழுத்துப் பிடிச்சிருக்கலாம்.. அதற்காக அவரை சமூகப் படைப்பாளி வள்ளுவருக்கு நிகராக முன்னிறுத்தப் பாடுபடுவது.. கொஞ்சம் ஓவர். சகிக்க முடியாததும் கூட..! :):D:icon_idea:

வலைப்பூவுக்கு அப்பால் அவரின் எழுத்துக்களைப் படிக்காமல் அவருக்கு வேரும் விழுதும் பகுதியில் அந்தஸ்த்து கொடுத்தது சரியா / பிழையா நீங்கள் கருத்துக்கூறமுடியாது. அவரைச் சமூகப் படைப்பாளியா இல்லையா என்பதைச் சமூகம்தான் தீர்மானிக்கும், ஆனால் தமிழ் எழுத்தாளர்களில் அவர் முக்கியமானவர் என்பதை பிறருக்குத் தெரியாமல் ஒளித்துப் படிப்பவர்கள்கூட மறைவான இடத்தில் ஏற்றுக்கொள்வர்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில வேரும் விழுதும் அந்தஸ்து வழங்கி இருக்கினம்.. அது தெரியல்லைப் போல.. அக்காச்சிக்கு..! அவரை காமடியனா ஆக்கினதுதான்.. அக்காச்சிக்கு கவலையா அமைஞ்சிருக்குப் போல..! :):lol::icon_idea:

எனக்கு சாஸ்திரி அண்ணாவின் கதைகள் பிடிக்கும் என்பதற்காக சாஸ்திரி அண்ணாவை பிடிக்க வேண்டும் என இல்லைத் தானே[சாஸ்திரி அண்ணா மன்னிக்க வேண்டும்]...என்னை விட உங்களுக்கு தான் அவரால் பாதிப்பு அதிகம் இல்லா விட்டால் இப்படி உங்கட பொன்னான நேரத்தை விட்டுட்டு அவரை கதாநாயகன் ஆக்குவீங்களா? :lol: உங்களுக்கு அவரை பிடிக்காட்டிபேசாமல் விட்டுத் தள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலைப்பூவுக்கு அப்பால் அவரின் எழுத்துக்களைப் படிக்காமல் அவருக்கு வேரும் விழுதும் பகுதியில் அந்தஸ்த்து கொடுத்தது சரியா / பிழையா நீங்கள் கருத்துக்கூறமுடியாது. அவரைச் சமூகப் படைப்பாளியா இல்லையா என்பதைச் சமூகம்தான் தீர்மானிக்கும், ஆனால் தமிழ் எழுத்தாளர்களில் அவர் முக்கியமானவர் என்பதை பிறருக்குத் தெரியாமல் ஒளித்துப் படிப்பவர்கள்கூட மறைவான இடத்தில் ஏற்றுக்கொள்வர்! :icon_mrgreen:

வலைப்பூவுக்கு அப்பால் அவரின் கருத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டிய அவசியமோ.. தேவையோ எனக்கு வரல்ல. அப்படி ஒரு தேவை இருப்பதாகவும் நான் உணரல்ல..! அப்படி உணரத்தக்க ஆக்கங்களை அவர் படைத்ததாகவும் எனக்குத் தெரியல்ல..!

அதுபோக.. தமிழ் எழுத்தாளர்களில் அவர் முக்கியமானவர் என்று நீங்கள் சொல்வதற்கு இணங்க.. எந்தெந்த அடிப்படைகளில் நீங்கள் அவரை முக்கியமானவர்.. என்பதை வரையறுக்கிறீர்கள் என்றால்.. நமக்கும்.. அந்த முக்கியத்துவங்கள் பற்றி அறிய முடியும்.. அதுமட்டுமன்றி.. அவை சமூகத்திற்கான முக்கியத்துவங்களா அல்லது உங்கள் அளவிலான முக்கியத்துவங்களா என்றும் பகுத்தாய முடியும். நீங்கள் சொல்வதனால்.. அவர் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்போ நம்ம சோழியண்ணாவை.. ஒரு முக்கியமான தமிழ் படைப்பாளி என்றால் சமூகம் ஏற்றுக் கொள்ளும். அந்தளவுக்கு இந்த மனிதர் இருப்பதாக கூட எனக்கு ஒன்றும் அப்படி தெரியல்ல. நீங்கள் அவருக்கு முக்கியம் அளிப்பதால்.. எல்லோருக்கும் அவர் முக்கியமானவர் என்பதாக முடியாது.. கிருபண்ணா. :):icon_idea:

எனக்கு சாஸ்திரி அண்ணாவின் கதைகள் பிடிக்கும் என்பதற்காக சாஸ்திரி அண்ணாவை பிடிக்க வேண்டும் என இல்லைத் தானே[சாஸ்திரி அண்ணா மன்னிக்க வேண்டும்]...என்னை விட உங்களுக்கு தான் அவரால் பாதிப்பு அதிகம் இல்லா விட்டால் இப்படி உங்கட பொன்னான நேரத்தை விட்டுட்டு அவரை கதாநாயகன் ஆக்குவீங்களா? :lol: உங்களுக்கு அவரை பிடிக்காட்டிபேசாமல் விட்டுத் தள்ளுங்கோ

இதில் கதாநாயகன் ஆக்கவில்லை அக்கா.. காமடியன் ஆக்கி இருக்குது. அதைத்தான் அவர் வலைப்பூவிலும் செய்து வருகிறார். ஆனால் சிலர் அவருக்கு.. அளிக்கும் அங்கீகாரம்.. அதீதமானது. அதை உணர்த்தவே இந்தப் பதிவு. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுபோக.. தமிழ் எழுத்தாளர்களில் அவர் முக்கியமானவர் என்று நீங்கள் சொல்வதற்கு இணங்க.. எந்தெந்த அடிப்படைகளில் நீங்கள் அவரை முக்கியமானவர்.. என்பதை வரையறுக்கிறீர்கள் என்றால்.. நமக்கும்.. அந்த முக்கியத்துவங்கள் பற்றி அறிய முடியும்.. அதுமட்டுமன்றி.. அவை சமூகத்திற்கான முக்கியத்துவங்களா அல்லது உங்கள் அளவிலான முக்கியத்துவங்களா என்றும் பகுத்தாய முடியும். நீங்கள் சொல்வதனால்.. அவர் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதற்கு விளக்கம் அளிக்க எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள்/ படைப்பாளிகள் பற்றிய உங்கள் புரிதல்கள் வலைப்பூ, இணையவெளியைத் தாண்டவேண்டும் என்றால், நீங்கள் தமிழிலுள்ள பல புத்தகங்களை நூல் நிலையங்களில் அல்லது காசு கொடுத்தாவது வாங்கிப் படிக்கவேண்டும். முதற்கட்டமாக http://www.noolaham.org இல் கிடைக்கும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பியுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு விளக்கம் அளிக்க எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள்/ படைப்பாளிகள் பற்றிய உங்கள் புரிதல்கள் வலைப்பூ, இணையவெளியைத் தாண்டவேண்டும் என்றால், நீங்கள் தமிழிலுள்ள பல புத்தகங்களை நூல் நிலையங்களில் அல்லது காசு கொடுத்தாவது வாங்கிப் படிக்கவேண்டும். முதற்கட்டமாக http://www.noolaham.org இல் கிடைக்கும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பியுங்கள்!

இந்த நூலகம் பற்றி நான் நீண்ட காலத்திற்கு முன்னரே யாழில் இணைப்புக்களைப் போட்டிருக்கிறன் கிருபண்ணா. சாறி.. இது ஏற்கனவே என் பேபரிட் லிஸ்டில் இருக்குது. :):D:icon_idea:

நீங்கள் குறிப்பிடும் நபரே தீராநதி.. வலைப்பூக்கள் வழியாகத்தான் தமிழ் எழுத்துலக்குக்குள் குறிப்பாக இணைய வழி எழுத்துலகுக்குள் புகுந்து கொண்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார். நூலகத்தில் எவரும் நூல்களை அனுப்பினால் போடுவார்கள். இங்கே சில நூலகங்களில் தேசம் பத்திரிகையும் கிடக்கிறது. தி எக்கனோமிக்ஸும் இருக்கிறது. எது சிறந்தது..????! :):icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூலகம் பற்றி நான் நீண்ட காலத்திற்கு முன்னரே யாழில் இணைப்புக்களைப் போட்டிருக்கிறன் கிருபண்ணா. சாறி.. இது ஏற்கனவே என் பேபரிட் லிஸ்டில் இருக்குது. :):D:icon_idea:

நீங்கள் குறிப்பிடும் நபரே தீராநதி.. வலைப்பூக்கள் வழியாகத்தான் தமிழ் எழுத்துலக்குக்குள் குறிப்பாக இணைய வழி எழுத்துலகுக்குள் புகுந்து கொண்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார். நூலகத்தில் எவரும் நூல்களை அனுப்பினால் போடுவார்கள். இங்கே சில நூலகங்களில் தேசம் பத்திரிகையும் கிடக்கிறது. தி எக்கனோமிக்ஸும் இருக்கிறது. எது சிறந்தது..????! :):icon_idea::D

இணையத்தில் எல்லாம் இருக்குமென்றால் ஏன் இப்பவும் புத்தகங்கள் அச்சுக்குப் போகின்றன? ஏன் kindle அமோகமாக விற்கின்றது? படிப்புக்குத் தேவையான புத்தகங்களைத் தவிர வேறு அச்சில் வந்த புத்தகங்களையும் படித்தால் பார்வையில் விசாலிக்கும்.

தமிழில் வரும் குப்பைப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை ஆகையால் உங்கள் கேள்விக்கு விடை தரமுடியவில்லை. எனினும் பழமைவாதக் கட்சி சார்ந்த தி எக்னோமிஸ்ற் இல் உள்ளவற்றை ஒரு கிள்ளு உப்பையும் கலந்துதான் படிக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் எல்லாம் இருக்குமென்றால் ஏன் இப்பவும் புத்தகங்கள் அச்சுக்குப் போகின்றன? ஏன் kindle அமோகமாக விற்கின்றது? படிப்புக்குத் தேவையான புத்தகங்களைத் தவிர வேறு அச்சில் வந்த புத்தகங்களையும் படித்தால் பார்வையில் விசாலிக்கும்.

தமிழில் வரும் குப்பைப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை ஆகையால் உங்கள் கேள்விக்கு விடை தரமுடியவில்லை. எனினும் பழமைவாதக் கட்சி சார்ந்த தி எக்னோமிஸ்ற் இல் உள்ளவற்றை ஒரு கிள்ளு உப்பையும் கலந்துதான் படிக்கவேண்டும்!

கிருபண்ணா.. இந்த அச்சுப் பிரதிகள் பற்றியும்.. இலத்திரனியல் பிரதிகள் பற்றியும் ஒரு கட்டுரை ஒன்றை யுனில் எழுதிய ஞாபகம். இரண்டிலும்.. பாதக சாதக விளைவுகள் உள்ளன. நாங்கள் இன்று அதிகம் இலத்திரனியல் சார்ந்த பிரதிகளையே நாடுகின்றோம். பெரிய பெரிய நிறுவனங்களே இலத்திரனியல் பிரதிகளையும் அச்சுப் பிரதிகளோடு அல்லது அதற்கு மேலதிகமாக வெளியிடுகின்றன.

அதுமட்டுமன்றி பல மாடி கொண்ட நூலகங்களில் தேடிப்படிக்க வேண்டியவற்றை கிண்டில் என்ற இலத்திரனியல் நூலகம்.. தன்னகத்துக்குள் அடக்கி விடுகிறது. இது தேடும் நேரத்தைக் குறைத்து நூல்களை விரைவாக படிக்க உதவுவதோடு.. குறிப்பெடுத்தல்... எடுத்துக் கையாள்தல் என்று பல வழிகளில் நூலை பயன்படுத்த இலகுவில் உதவுகிறது.

கிண்டில்.. இலத்திரனியல் பிரதிகளின் அடிப்படையை நம்பி இயங்கும் ஒரு கருவி. இன்றைய சமூகம்.. அது வயதானவர்களாக இருக்கட்டும் இளையவர்களாக இருக்கட்டும்.. இலத்திரனியல் பிரதிகளை கையாள்வதையே அதிகம் விரும்புகின்றனர். தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி.. பிரதிநூல்களின் வளர்ச்சியில் பெரும் முட்டுக்கட்டையைப் போட்டுள்ளது என்பது நிஜமான உண்மை.

தி எக்கனோமிஸ்ட் ஓடு.. தேசத்தை படிக்க வேண்டிய அளவுக்கு தேசத்தில் கட்டாயமானது என்ற ஒன்றில்லை..! அதுதான் முக்கியமாக நோக்க வேண்டிய ஒன்று. அதேபோல் தான் சோபாசக்தியும்.. என்பது எனது நிலைப்பாடு. :):icon_idea:

Link to comment
Share on other sites

இதை தமிழிலையே எழுதி இருக்கலாமே. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க போல. கூல்..! நன்றி. :lol:

நான் பாட்டியில பகிடி விடுகின்றதென்றவுடன் எத்தனை பேர் துள்ளி குதித்தார்கள்.தாங்கள் தேவாரம் பாடுபவர்களை பார்த்து எல்லோரும் பாட வேண்டும் என நினைத்து தான் எமது போராட்டம் அழிந்தது .

இதே மாதிரி ஒரு இன்டர்வியு நான் யாராவது ஒரு "தளபதியை " எடுத்தால் தாங்குமா யாழ்?

மற்றது சோபாசக்தி எழுத்தில் நீங்கள் எட்டிப்பார்க்க முடியாத இடத்திற்கு போய்விட்டார்.அதை தமிழ் உலகம் ஒப்புக்கொண்டும் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாட்டியில பகிடி விடுகின்றதென்றவுடன் எத்தனை பேர் துள்ளி குதித்தார்கள்.தாங்கள் தேவாரம் பாடுபவர்களை பார்த்து எல்லோரும் பாட வேண்டும் என நினைத்து தான் எமது போராட்டம் அழிந்தது .

இதே மாதிரி ஒரு இன்டர்வியு நான் யாராவது ஒரு "தளபதியை " எடுத்தால் தாங்குமா யாழ்?

மற்றது சோபாசக்தி எழுத்தில் நீங்கள் எட்டிப்பார்க்க முடியாத இடத்திற்கு போய்விட்டார்.அதை தமிழ் உலகம் ஒப்புக்கொண்டும் விட்டது.

சீக்கிய பொற்கோவில் தாக்குதலில் புளொட்.. மாலைதீவைக் கைப்பற்றி தமிழீழம் அமைக்கும் முயற்சியில்.. புளொட்.. ஆனால் ஈழத்தில்.. சோத்துப் பார்சல் சேகரிப்பில் மட்டும் புளொட்.. என்றும்... ஒரு பேட்டியை தங்களை வைத்தும் எடுக்கலாம்.. சுவாரசியமா இருக்கும். நீங்கள் தாங்குவீர்களா..???! :lol::D

சோபாசக்தி பற்றி நீங்களும் கிருபண்ணாவும் மட்டுமே இங்கு அதிகம் கதைக்கிறீர்கள். மற்ற எவரும் அல்ல. வலைப்பூ உலகிலும்.. பலருக்கு இவரைத் தெரியாது. தன்னை தெரியப்படுத்தனும் என்பதற்காகவே.. சாதி.. விடுதலைப் போராட்டம்.. பெரியார்.. மற்றும் தமிழச்சி.. போன்ற பிரச்சனைக்குரிய விடயங்களினூடு.. தன்னை ஒரு விசித்திரமானவன் என்ற வகையில் காண்பிக்க முயல்பவர்.இது பற்றி முன்னரே உங்களுக்கு சொல்லி இருக்கிறேன்.

இவர் ஆணா... பெண்ணா என்பதைக் கூட.. பிரியாதம்பி.. (இந்திய வலைப்பதிவர்) இவரை புட்டுபுட்டு வைச்ச பின் தான் தெரியும். அதுசரி.. அவர் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் தான் சொல்லுறீங்களே தவிர.. நான் உணரவில்லையே. தமிழ் கூறும் உலகம் ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறீர்களே.. அந்த தமிழ் கூறும் உலகம் எது. மாற்றுக் கருத்துக்கு மாணிக்கங்களும்.. தமிழ் கூறும் உலகில் தான் உள்ளனர்.. முஸ்லீம் படைப்பாளிகளும் உள்ளனர்.. இப்படி தமிழ் கூறும் உலகம் பல படிமானங்களைக் கொண்டது. நீங்கள் எந்த தமிழ் கூறும் உலகம் பற்றி சொல்லுறீங்க...??!

சோபாசக்தியின் ஆக்கங்களை யாழுக்கு கொண்டு வருவதில்.. கிருபண்ணா முதன்மையானவர். நீங்கள் இரண்டாமவர். உங்கள் இருவரையும் தவிர வேறு எவரும் அவரின் ஆக்கங்களை இங்கு கொண்டு வருவதாக நான் உணரவில்லை. முகநூலிலும்.. அவரின் ஆக்கங்களை மக்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர் ஒரு சமூக அங்கீகாரம் உள்ள ஒருவராக இருப்பதை நான் காணவில்லை. நிலைமை இப்படி இருக்க.. நீங்களோ.. தமிழ் கூறும் உலகமே அங்கீகரித்து.. உச்சாரக் கொப்பில்.. தொங்கிக் கொண்டிருக்கிறார்.. சோபாசக்தி என்று காட்ட விரும்புவதன்.. நோக்கம் என்ன..???! :rolleyes::o:icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாவது............

அவரு தமிழ் உலகில் பெரிய ஆளு! நீங்க தமிழனாக இருப்பதால் உங்களுக்கு தெரியவில்லை. ஏன்னா தென்னந் தோப்புக்குள் நின்று பார்த்தால் அருகில இருக்கிற தென்னைதான் தெரியும் தள்ளி நிற்கும் உயரமான தென்னையை அது மறைச்சிடும்.

ஆதால நீங்க தென்னம் தோப்பவிட்டு வெளிலே வாங்க............. நீங்க படிக்கிற யுனிவேர்சிட்டீல கேட்டுபாருங்க! செகேச்பியரே மறுபிறவி எடுத்து வந்ததா பேசிக்கிறாங்க .......

பெரியாரின் புத்தகத்தை படிச்சு ஒரு கொப்பி.....

பேனில் ராஜ்குமார் புத்தகத்தை படிச்சு ஒரு கொப்பி

B .R . அம்பத்கர் புத்தகம் படிச்சு ஒரு கொப்பி

அயங்காலி புத்தகம் படிச்சு ஒரு கொப்பி................

இது போதாது இப்ப இருக்கிற அருந்ததி ராய் புத்தகத்த படிச்சு ஒரு கொப்பி அடிச்சிட்டு யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்கு அவாவுக்கு எதிரா ஒரு பேட்டி.

இந்தியாவுக்கு போய் செய்யுறதெல்லாம் மலையாள கேரளா காரிகளுடன் கிடப்பதும் குடிப்பதும் . அது போதாது அங்க போற பொண்ணுகள பிடிச்சு இழுக்கிறதும்.

கேட்ட கேடு போதாது இதிலே இலக்கியம் வளர்கிறாரம் .............. அவருக்கு சங்கம் வைகிறார்கள் உலக புத்தகங்களை படிச்சு முடிச்ச மேதைகள். இவர்களின் நினைப்பு எதோ இவர்கள்தான் புத்தகம் படிப்பதாக ( நினைப்புதானம் பிழைப்ப கெடுக்கிறது) இதிலே அடுத்தவனுக்கு தத்துவம் குண்டு சட்டிக்க குதிரை ஓடுறோமம். இவர்கள் பூமி பந்தில ஓடுறதலதான் நாங்கள் இவர்களுடைய விசித்திரங்களை பட புத்தகத்தில் படிக்கிறோம்.

புலிஎதிர்ப்பு வாந்திக்கு வக்காலத்து தேட போய் ஒரு பாழ் கிணத்துக்குள் கிடந்துகொண்டு பார்த்தால் .............. செத்த சித்தி ஒசரமதான் தெரிவாரு . கொஞ்சம் படிஎலே ஏறி மேலே வாங்கோ .......... உலகம் ரொம்ப பெரிசு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ, படிச்சவங்க, பெரியவங்க அடி படுகிற திரி போல கிடக்கு!

எதுக்கும் வெளியால நிண்டு பார்க்கிறது தான் புத்தியாகப் படுகின்றது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

என்னவோ, படிச்சவங்க, பெரியவங்க அடி படுகிற திரி போல கிடக்கு!

எதுக்கும் வெளியால நிண்டு பார்க்கிறது தான் புத்தியாகப் படுகின்றது! :icon_mrgreen:

புங்கை.. நானும் உங்க கட்சிதான்..! :unsure: ஒதுக்கமா நிண்டு வேடிக்கை பார்க்கிறதுதான் நல்லது..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஷோபாசக்தி / ஆவது எப்படி?

புலிகளை துரோகி என்றேன்.

அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள்.

ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன்.

பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள்.

பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது,

புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன்.

எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள்.

போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன்.

சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன்.

என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள்.

வெளிப்படையாக வரவா என்றேன்.

இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான்

எங்களுக்கு வசதி என்றார்கள்.

இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன்.

அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வனாந்தரங்களிலும்

வீசப்பட்ட மக்களைக் காட்டினார்கள்;

கூடவே எலும்புக் கூடுகளையும்.

இப்போது நான் சொன்னேன்

அவர்களே அவர்களை அழித்துக் கொண்டார்கள் என்று.

இனி எனது நூல்கள்

ஜெர்மன், டேனிஷ், பிரெஞ்ச் மொழிகளிலும் வரும்....

நானும் மாற்றுக்கருத்துப் பாரம்பரியத்தில் வந்த ஒருவனாவேன்.

- யாழினி

www.keetru.com

Link to comment
Share on other sites

து தான் எமது போராட்டம் அழிந்தது .

அவனவ்ன் ஷோபா செற்றி , ஷில்பா செட்டி பத்தியெல்லாம் கவுந்தடிச்சு , தம்முக்கட்டி , கொட்டாவிவிட்டெல்லாம் ....

ஆராய்ஞ்சிகிட்டு இருக்குற நேரத்துல, கப்ல பூந்து , நம்ம அர்ஜுன் அண்ணா .....

தன்னோட விளையாட்ட காட்டிவிட்டாரே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.