• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
SUNDHAL

இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...

Recommended Posts

இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...

கற்பனை: முகில்

பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே.

பத்தாவது:

இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த்துக்குவாங்க. ஏகப்பட்ட வெட்டு, கட்டுகளோட அந்தப் படம் நாலு மணி நேரம் ஓடும். படத்தை விட நெறைய நேரம் துட்டுக்காக வெளம்பரம்தான் ஓடும். அப்புறம் அந்தப் படம் "காமெடி திங்கள்', "லவ்வு செவ்வாய்', பாடாவதி புதன்', "அய்யோ அம்மா வியாழன்', "வெங்காய ஹிட் வெள்ளி'ன்னு எல்லா நாளும் ரீலு அந்து போற அளவுக்கு ஓடும். எப்படா இந்தப் படத்தை "இந்தியத் தொலைகாட்சிகளில கடைசி முறையாக'ன்னு ஒளிபரப்புவாய்ங்கன்னு நம்மளை நெனைக்க வைச்சுருவாங்க.

ஒம்பதாவது:

"ஏ வாங்க வாங்க..வாயு பித்தம் கபம் அஜீரணம் எல்லாத்துக்கும் ஒரே மருந்து இந்த வேர்தான் சார். கபடதுபட வேர். கரக் முரக்னு கசக்கிப் பிழிஞ்சு இதோட சாறைக் குடிச்சாப் போதும். கேஸ் எல்லாம் ஈஸியா பாஸ் ஆகும். லைஃப் பீஸ்புல்லா இருக்கும்'னு பிதாமகன் சூர்யா மாதிரி ஆட்கள் ரோட்டோரமா விக்கிற சரக்கை, கோட், சூட், கூலிங்கிளாஸ் சகிதமா குதிரை மேல ஏறி வந்து டீவியில விப்பாங்க சில ஆட்கள். இவங்க கொடுக்குற காசை வைச்சுத்தான் சில டீவி சேனல்களே ஓடுதுன்னா பார்த்துக்கோங்களேன். இவங்களோட கஸின் பிரதர்ஸ் சிலரு இருக்காய்ங்க. அவங்க பண்ணுற புரோகிராம் என்னன்னு தெரியுமா? ஆங், அதேதான். பச்சக்கல், சிவப்புக்கல், கருங்கல், செங்கல், விக்கல், நக்கல் இப்படி எல்லாத்தையும் கலக்கலா காட்டி "கல்லா'வை நிரப்புற வியாபாரிங்க அவங்க. டார்ச்சர்டா சாமி! டெலிமார்கெட்டிங்கும் இதே வகையறாதான்னு தனியா சொல்லணுமா என்ன!

எட்டாவது:

தவில் அடிக்கிற ஆளு, கதை கட்டுற ஆளு, கண்ணீர் சிந்துற மெகா நடிகை, துணிக்கடை அதிபரு -இப்படி பிரபலங்கள் எந்தத் துறையில இருந்தாலும் கூட்டியாந்து கையில கரண்டியைக் கொடுத்துருவாங்க. கேட்டா "சமையல் டைம்'ன்னு தாளிப்பாய்ங்க. குழிக்கரண்டி, கொத்துக்கரண்டி, ஆப்பச்சட்டி, அகண்ட சட்டின்னு விதவிதமாக் காண்பிப்பாங்க. ஆனா அடுப்பப் பத்த வைச்சிருக்காங்களான்னுதான் தெரியாது. "உப்பு ரொம்ப உப்பா இருக்குங்கறதால நீங்க உப்பை லேசா யூஸ் பண்ணுனாப் போதும்'ன்னு கூட உதவிக்கு காம்பியரிங் பண்ண ஒரு தொகுப்பாளினி வேற படுத்தும். கடைசியா பிளேட்ல இருக்குற பதார்த்தத்தைத் தலைவிதியேன்னு தின்னுட்டு, "சூப்பரா இருக்கு'ன்னு ஒரு நடிப்பு நடிக்கும் பாருங்க. சான்úஸ இல்ல!

ஏழாவது:

எல்லாச் சேனலும் விடாம தொரத்தித் தொரத்திப் பண்ணுற சினிமா விமர்சனத்துக்குத்தான் ஏழாவது இடம். குறைப்பார்வை, நிறைப்பார்வை, வேண்டிய பார்வை, வேண்டாத பார்வைன்னு பல தினுசு இதுல உண்டு. சேனல், அது சார்ந்த கட்சி, அது சார்ந்த ஹீரோ, இதைப் பொருத்துதான் விமர்சனமும், கெüன்ட்டெüன் லிஸ்டும் அமையுங்கிறது டீவி ரிமோட்டுக்குத் கூடத் தெரிஞ்ச உண்மை. அதுலயும் பல படங்களுக்கு முதல்நாளே படம் பார்த்துட்டு வெளியே வர்ற விசிலடிச்சான் ரசிகர்கள்கிட்ட மட்டும் கருத்துக் கேப்பாய்ங்க. "தலீவரு

கலக்கிப்புட்டாருல்ல'ன்னு அவிங்களும் அளப்பானுக. அதை நம்பி தியேட்டருக்குப் போனா

நம்ம தலைவிதி "டார் டார்' ஆயிடும். படத்தைவிட, சில நேரம் டைரக்டரைக் கூட்டியாந்து உட்காரவைச்சு கலாய்ப்பாங்க பாருங்க, அதுதான் சூப்பரா இருக்கும்பா!

ஆறாவது:

ஆறாவது இடத்துல இருக்குற நிகழ்ச்சி என்னன்னு தெரியுமா..வந்த்த்த்தோமாதரம்... தாய் மண்ணே வணக்கம். அந்த டைப் நிகழ்ச்சிங்கதான். ஊர் ஊராப் போய் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அரங்கத்தைக் கூட்டிருவாய்ங்க. இதுல கலந்துகிட்டுப் பேசணும்னா ஒரே ஒரு தகுதிதான். கரண்ட் கட் ஆகி மைக் ஆஃப் ஆனாலும் மைக் இருக்குற சவுண்டலயே பேசத் தெரியணும். அதுபோக நாலு திருக்குறள், ரெண்டு பாரதியார் கவிதை, முணு குட்டிக்கதை தெரிஞ்சு வைச்சுக்குறது ப்ளஸ் பாயிண்ட். உங்க வாழ்க்கையில சோகமே இல்லாட்டியும், பெரும் சூறாவளியே கடந்து போன மாதிரி ஒரு கதையை நெசம் போலவே சொல்லத் தெரியணும். ஏன்னா அப்பத்தான் புரோகிராம் நடத்துற பெரியப்பா டர்க்கி டவலால வாயைப் பொத்தி அழறதுக்கான சிச்சுவேஷன் கிடைக்குமுங்கோ!

அஞ்சாவது:

"குப்பாப்பட்டி கிராமம். அன்று காலை. வழக்கம்போல அவசரத்துக்கு வயலுக்கு ஒதுங்கப் போன சிவனாண்டியின் சொம்பைக் காணவில்லை. குத்தம். ஓடியது என்ன?' -இப்படித்தான் ஆரம்பிப்பாய்ங்க. "நம்மகிட்ட நாலு சொம்பு இருக்குங்க. அதுல பொத்தல் விழுந்த அந்தச் சொம்பைத்தான் என் பாட்டன் காலத்துல இருந்து குடும்பத்துல மூத்த புள்ளைக உபயோகிக்கிறோம். "அப்படிம்பாரு சிவனாண்டி. அப்படி பத்து நிமிஷம் சொம்பைச் சுத்தி கதை ஓடும். "சொம்பை அடகு வைச்சு சரக்கு அடிக்கலாமுன்னுதான் திருடுனேன்'னு குத்தம் செஞ்ச புலிப்பாண்டி கொஞ்ச நேரங் கழிச்சு பெருந்தன்மையா ஒத்துக்குவாரு. ஆனா இந்த நிகழ்ச்சியில பின்னால வாய்ஸ் கொடுக்கணும்னா நிரந்தரமா தொண்டை கட்டியிருக்கணும்போல. அப்பத்தான் மிரட்டலா இருக்கும்னு நெனைக்கிறாக. இதுல அப்பப்ப நடிகைங்க வீட்டுல நாய் காணாமப் போன சம்பவம் ஸ்பெஷல் எபிசோடா கூத்தடிக்குமுங்கோ!

நாலாவது:

காமெடி புரோகிராமுன்னு சொல்லி வெளம்பரப்படுத்தி அடிக்கடி ஞாபகப்படுத்துவாங்கோ. சரி சிரிக்கலாம்மேன்னு நாமளும் அந்தப் புரோகிராமை நம்பிப் பார்த்தா, எங்கங்க நாம சிரிக்கணும்னு ஞாபகப்படுத்த, நாலு பேர் சிரிக்கிற சவுண்டையும் அவிங்களே அங்கங்க போட்டுக்குவாய்ங்க. பெத்தவங்களைத் திட்டுறது, மத்தவங்களைத் திட்டுறது, செத்தவங்களைத் திட்டுறது, ஊத்திக்கிறது, உளர்றது இதுதான் காமெடின்னு நெனைச்சிக்கிட்டு இவங்க பண்ணுற லொள்ளு இருக்கே, தாங்க முடியலடா சாமி!

மூணாவது:

மெகா சீரியலுக்கு மூணாவது இடமுங்கோ! எல்லா உறவு முறையையும் தலைப்பா வைச்சு சீரியல் வந்துடுச்சு. இனிமே "பக்கத்து வீட்டுப் பெரியம்மா', "எதிர்த்த வீட்டுச் சித்தி'ன்னுதான் தலைப்பு வைக்கணும். "அப்பா'ன்னு ஒரு சீரியலை நீங்க பத்து வயசுல பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா, நீங்களே "அப்பா' ஆகுற வரைக்கும் அந்த சீரியல் ஓடும். அதோட நிறுத்துவாங்களா, மாட்டாங்க. மிட்நைட் ஒரு மணிக்கு அதே சீரியலை மறு ஒளிபரப்பு வேறே பண்ணுவாய்ங்க! மார்க்கெட் போன கோலிவுட் அக்கா நடிகைங்க எல்லாம் ஆளுக்கொரு சீரியல்ல "நடமாடும் பெண் தெய்வங்களா' திரிஞ்சுக்கினு இருக்காங்க. நம்மளோட அன்றாடப் பிரச்சினைகளோட அபி, செல்வி, காஞ்சனா, கல்கி, சரசுன்னு பல பேரோட பிரச்சினைகளையும் சுமந்துக்கிட்டு வாழுறோமே நாமெல்லாம் டபுள் கிரேட்!

ரெண்டாவது:

லாங் லாங் அகோ ஆரம்பிச்சுது, "சாங்கை டெடிகேட் பண்ணுற' இந்த டைப் நிகழ்ச்சிசங்க. "உதறிட்டுப் போன காதலிக்கு', "உசிரை விட்டுப் போன பாட்டிக்கு'ன்னு போன் பண்ணி பாட்டுக் கேக்குறதையே பல பேர் முழு நேரத் தொழிலா வைச்சிருக்காங்க. "இந்த ஜென்மத்துல உங்க கிட்ட நான் பேசுவேன்னு நெனைச்சுசேப் பார்க்கல', "உங்க லைனுக்காக பொறந்ததுல இருந்தே ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். "நீங்க ஐஸ்வர்யா ராய் மாதிரியே இளிக்கீங்க'ன்னு ஸ்டாண்டர்டா சில வசனங்கள் ரீப்பீட் ஆகிட்டே இருக்கும். அதுவும் தொகுப்பாளினிங்க பேசுற டமிலைக் கேக்கறப்போ, அவங்க நாக்கை இழுத்து வைச்சு வசம்பை எடுத்து "நறநற'ன்னு தேய்க்கணும்னு வெறி வரும் நமக்கு. கல்லறைல புதைஞ்சு போனவங்கிட்ட கூட இவங்க பேசுறது ஒரே வசனம்தான். "கீப் டிரையிங்கு. கீப் ஆன் டிரைங்யிங்கு!'

மொதலாவது:

எந்த நிகழ்ச்சியாலயும் அடிச்சுக்கவே முடியாத நெம்பர் ஒன் இடத்துல இருக்குற நிகழ்ச்சி ஒண்ணு, ஒண்ணரை, ஏழரை, எட்டு செய்திகள்தான். ஏழரையைக் கேக்குறவன், எட்டைக் கேட்காம வுட்டா அஜீரணக் கோளாறு வந்துடும். ஆனா ரெண்டையும் கேக்குறவன் அரை லூஸô மாறிடுவாங்குறதும் உண்மை. மீதி சேனல் நியூசைக் கேக்கலாமுன்னு பாத்தா அதுல அப்படியொரு நியூசே வராது. எல்லாத்தையும் தாண்டி நடுநிலைமை செய்திகள் தெரிஞ்சுக்கணும்னா ஒரே வழிதாங்க இருக்கு. டீவியை வீட்டுல நடுவுல வைச்சிருங்க. "மியூட்'ல வைச்சிருங்க. டீவிக்கு பின்னாடி நீங்க உட்கார்ந்துக்கோங்க. செய்தி கேளுங்க. இப்ப எப்படி இருக்கு!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிறைத்துறையினர் வேண்டுமென்றெ செல்போன் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரை தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இந்நிலையில், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஏடிஜிபிக்கு அனுப்பி வைக்க நளினி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘நானும் எனது கணவரும் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எனது பெற்றோருக்கு வயது அதிகமாகிவிட்டது. அவர்கள் உடல்நலத்ைத கருத்தில் கொண்டு என்னையும், எனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். சிறையில் இருவரையும் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: நளினி மிகவும் சோர்வாக காணப்படுகிறார். நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நளினி என்னிடம் பேசுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் ஒரு கைதியின் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சிறை அதிகாரிகள் யாரோ வேண்டுமென்றே செல்போன் வைத்துள்ளார்கள். எனது அறையில் செல்போன் வைத்து சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், தெரியாமல் வேறு கைதியின் அறையில் மாற்றி ைவத்துவிட்டார்கள். என் மீது செல்போன் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். நளினிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் கோரிக்ைக வைத்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567697
  • மனித மனத்தை போல ஆழமான இடம் உலகில் வேறெங்கும் இல்லை. எனவே இந்த இரெண்டு உதாரணக்களையும் இப்படித்தான் என என்னால் கூறமுடியாது. ஆனால் பின்வரும் காரணங்கள் இருக்கலாம்.  1. எமது மக்கள் மத்தியில் மிகவும் அறியபடாத ஒரு விடயம் A-sexual. இப்படியானவர்களுக்கு பாலியல் உணர்வு அறவே இருக்காது. உறவிலோ, ஏனையவர்கள் மீதோ கிஞ்சித்தும் ஈர்ப்பு இருக்காது. இப்படி ஒருவர் இருக்கும் போது - திருமணத்தின் அடிப்படையே உடலுறவு எனும் போது, இப்படி ஒரு உறவில் நாட்டம் இல்லாமல் இருப்பது இயல்புதானே? 2. இரெண்டவதாக நாம் பெரிதும் அறியாத விடயம் - தன்பாலினக்கவர்சி. The Sex Spectrum என தேடிப் பாருங்கள். எப்படி ஒளியானது   VIBGYOR என நிறப்பிரிகை அடைகிறதோ அதே போல் பாலினநிலை (sexuality) “ஆண்-ஆண் மட்டும்”, “ஆண்-பெண் மட்டும்”, “ஆண்-ஆண் அல்லது பெண்”, “பெண்-பெண்” மட்டும் என பிரிகை அடைகிறது. இதில் மக்கள் தொகையில் கணிசமானவர்கள் ஒவ்வொரு பிரிப்பிலும் அடங்குவார்கள். இதை தவிர queer, trans, pansexual என மேலும் பல வகைகள் உண்டு. ஒரு காலத்தில் LGB பின் LGBT பின் LGBTQ இப்போ LGBTQ+. எமது சமூகத்தில் ஆண்-பெண் மட்டும் என்ற பகுப்பு மட்டுமே அங்கீகரிக்கப் பட்டது. ஏனையவை ஏதாவது ஒன்றில் தனது பிள்ளையும் அடக்கம் என்று அறிந்தால், நமது பெற்றார்களில் பலர் அவமானத்தாலே கூனி குறுகி அதுவே அவர்களை கொன்று விடும். அந்தளவு இறுக்கமானவை எமது சமூக தளைகளும், விழுமியங்களும். வெளியே தெரிந்தால் பழிப்பும் கேலியும். இப்படி இருக்கையில் இதை பெற்றோரிடமும் சமூகத்திடமும் சொல்லமல் மறைத்து “கல்யாணத்தில் இஸ்டமில்லை” என்ற இலகுவான முகமூடியை போட்டுக் கொள்வோரும் உளர். பிகு: எனகுத் தெரிந்த ஒரு தமிழ் பிள்ளை இப்படிதான். அவருக்கு ஒரு பெண் சிநேகிதி உண்டு (வெள்ளையினம்). அந்த சினேகிதியின் பெற்றார் இருப்பது வடக்கில். அவர்கள் இந்த உறவை ஏற்றுள்ளார்கள். தோழிகள் இருவரும் அவர்கள் வீட்டிலும், வெள்ளையின தோழியின் பெற்றாரின் வீட்டிலும் தம்பதிகளாயும், தமிழ் பெற்றாரின் முன்பு உற்ற தோழிகளாகவும் வாழ்கிறார்கள். தமிழ் பெற்றார் வரன் தேடிக் களைத்து- இப்போ அவளுக்கு இதில் இஸ்டமில்லை என கைவிட்டு விட்டார்கள். ஆனல் இன்று வரை உண்மை தெரியாது. எல்லாரி கதையும் இப்படி இல்லை ஆனால் இப்படியான பல ஆழமான காரணக்கள் இருக்கும். 
  • குமாரசாமி அண்ணை.... ஆதவன் செய்தி நிறுவனமும், கோத்தபாயா...  ஆட்சியில், தொழில் நடத்த வேண்டும் என்று தான்.... அடக்கி வாசித்து, செய்தி போட்டிருக்கின்றார்கள். தமிழினி... உண்மையான, செய்தியை... இணைக்காமல் இருந்திருந்தால்....   காத்தோடு....  கரைந்த,  செய்தியாக இருந்திருக்கும். 
  • நானும் ஓரளவுக்கு ஆர் இன்னார் எண்டு கண்டு படிப்பன். இருந்தாலும் தலையங்கத்திலை இலங்கை சிறுமி எண்டவுடனை நான் கனக்க யோசிக்கேல்லை. முகமே பாக்கத்தேவையில்லை. 😎