Jump to content

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

shanthy

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா.

அன்புடன்

****

இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது.

இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒரு காலத்தில ஒரு போராளி. பிறகு எழுத்தாளன். இப்பவும் எழுத்தாளன் தான். ஆனால் எழுதிற எழுத்துக்கெல்லாம் வேண்டுறது திட்டுத்தான். எல்லாரும் திட்டத்திட்ட எழுதிக் கொண்டு தன்னோடை வாழ்ந்த தனக்குத் தெரிஞ்ச முன்னாள் போராளியளுக்கு தன்னாலை முடிஞ்ச உதவியளைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.

வெளிநாடுகளில தனக்குத் தெரிஞ்சவையளிட்டை கேட்டு உதவிகளை ஒழுங்கு செய்து குடுக்கிறான். இடைக்கிடை இப்படியான கலியாணத்தரகர் வேலையும் (இலவசதரகர்) செய்யிறான்.

அவன் தந்த அந்த நாலுவரி விளக்கத்திற்கு பிறகு மேலும் பெரிய பந்திக்கடிதப் பரிமாற்றம் ஈமெயிலில் நடத்தி அந்தப் பெண்போராளியின்ரை படம் சாதகம் எல்லாம் வந்து சேர்ந்தது ஈமெயில. அந்தப்படம் வந்தாப்பிறகு சரியான கவலையாயிருந்திச்சு.

ஒருகாலம் அவள் தனது சொந்தமென்ற எல்லாத்தையும் நாட்டுக்கெண்டு குடுத்து கிட்டத்தட்ட 20வருசம் போராளியா இருந்தவள். அப்பவே எங்கினையும் ஒரு கலியாணத்தை கட்டி தானும் வெளிநாடு குடும்பம் குழந்தையள் நோகாத அரசியலெண்டு கதைச்சு எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாத்தையும் விட்டிட்டு இலட்சியமும் கொள்கையும் சுமந்து மே 17 , 2009 வரையும் கொள்கைக்காகவே வாழ்ந்து கடைசியில குப்பி கடிக்கவும் மனமில்லாமல் சரணடைஞ்சாள்.

சரணடைஞ்சு அனுபவிச்ச நரகங்களையும் துயரங்களையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கூட கோடிமுறை அழுதிருப்பாள். ஆனால் அதையும் தாண்டி விடுதலையாகி வெளியல வந்தாப்பிறகுதான் அவளுக்கு தான் தனிச்சுப்போனாளெண்டு உணர்வு உறைச்சது.

பெண்போராளிகள் பற்றி உலகத் தமிழினம் கட்டி வைச்சிருந்த கோட்டையில இசைபாடிக்கொண்டிருந்த பெண்போராளிகளின் வாழ்க்கை ஒரு நேரச்சோற்றுக்கே இறைஞ்சுகிற நிலமையில இருக்கிற துயரத்தை அவளும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறாள். இப்ப அவளுக்கு அம்மா அப்பா தங்கைச்சிமாரின் கண்ணீரும் வலியும் வலிக்கத் தொடங்கியிருக்கிறது.

போற்றிப்பாடப்பட்ட பெண்போராளிகள் ஒவ்வொருவரும் படுகிற அவலங்களையெல்லாம் சோற்றோடும் சுதந்திரத்தோடு முடிச்சுப் போட்டு கவுரவச்சாவு சாக நிர்ப்பந்திக்கிற அனைவர் மீதும் அவளுக்கு கோபமாய் வந்தது.

அவளைச் சமாதான காலத்தில் சந்தித்த எத்தனையோ புலம்பெயர் கவுரவர்கள் எவரும் தன்னையோ தன்போன்றவர்களை ஏனெண்டும் திரும்பிப்பாக்காமல் விட்டிருப்பது பற்றிச் சரியான கடுப்பு. அதுக்குப்பிறகுதான் முடிவெடுத்தாள் தானும் திருமணம் செய்து கொள்ளுவமெண்டு. இனவிடுதலைக்காக தன்னையே 20வருடங்கள் இரைகொடுத்தவள் இனிமேல் தனக்கும் ஒருதுணை வேணுமெண்டு முடிவெடுத்திருக்கிறாள். தனது விருப்பத்தை அவளுக்கு மாப்பிளை தேடுகிற தனது போராளி நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள். அவனும் இப்போ அவளுக்காக புறோக்கராகி……..! என்னையும் புறோக்கராக்கி……!

அவன் தந்த அவளது விபரங்களை பரிசிலிருக்கிற ஒரு இலவச புறோக்கரிடம் ஈமெயிலில அனுப்பி 3வாரத்தில் அந்த புறோக்கர் தொடர்பு கொண்டார்.

தங்கைச்சி நீங்கள் தந்த பிள்ளையின்ரை குறிப்புக்கு நல்லதொரு பொருத்தமான பொடியன் கிடைச்சிருக்கிறான். பொடியனுக்கு படமும் பிடிச்சிருக்கு. மேற்கொண்டு விசயங்களை கதைக்க வேணும் என்றார்.

அவளுக்கு வெள்ளி திசையடிச்சுவிட்டது போலத்தானிருந்தது. இலவச புறோக்கர் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் அணுகுண்டைப் போட்டார்.

பொடியன் ஏற்கனவே கலியாணம் முடிச்சு 4பிள்ளையள். ஆனா டிவோஸ். வயது 48. ஆனால் வயது தெரியாத தோற்றம். கொஞ்சம் தண்ணிச்சாமி. மற்றது தெரியும்தான இயக்கத்தில இருந்த பெட்டையளெண்டா கனக்க கேள்வியள் கேப்பினம். ஆனால் இவன் அப்பிடியெல்லாம் கேக்கேல்ல. மற்றது பொடியன் வேதம். அதுமட்டும் தான் குறை. ஆனால் பிள்ளை மதம்மாறாமல் கலியாணம் கட்ட அவை தடையில்லையாம்.

அண்ணை அவளைவிட 11வயது ஆளுக்குகூடிப்போச்சு உது சரிவராது நீங்கள் வேறையாரும் சரிவந்தா சொல்லுங்கோ….இந்தப்பதிலை அவர் எதிர்பார்க்கேல்ல போல…..திருப்பிச் சொன்னார்…..தங்கைச்சி வயதென்ன பெரிய பிரச்சனை மனம்தானே முக்கியம்.

வயது போகட்டும் ஏற்கனவே மணமுறிவு மாப்பிளை தண்ணிச்சாமிதான் இடியெண்டதை அம்மாளறிய நான் சொல்லேல்ல. அவர் அந்த மாப்பிளை பற்றி அதிகமாக பில்டப் போட்டுக் கொண்டு போனார். உது சரிவராதண்ணை விடுங்கோ. அவை வேதக்காறரெண்டா சம்மதிக்காயினம்…..கடைசிக் கடத்தலாக மதத்தை காரணம் சொல்லி அவரைத் துண்டித்துக் கொள்கிறேன்.

4கிழமை முடிஞ்ச பிறகு அவளது போராளி நண்பன் முகப்புத்தகத்தில் வந்திருந்தான்.

அக்கா **** விசயம் ஏதும் சரிவந்ததோ ?

தம்பி ஒண்டும் சரிவரேல்ல. ஆனா ஒண்டு வந்தது. ஏற்கனவே கலியாணம் கட்டி பிரிஞ்சிருக்கிறார். வயது11 கூட.

ரெண்டாந்தாரமெண்டாலும் பறவாயில்லையக்கா பாருங்கோ. அவள் எதெண்டாலும் வாழ ஒரு வழி கிடைச்சாப் போதுமெண்ட நிலமையில இருக்கிறாள். வயது வித்தியாசம் , ரண்டாந்தாரம் பெரிய பிரச்சனையில்லையெண்டு நினைக்கிறேன்…..என்றான் அவன்.

அவனுக்கு பதில் எழுதாமல் முகப்புத்தகத்தை விட்டு வெளியேறினேன். எனக்கு உச்சந்தலையில உளியாலை குத்தினமாதிரியிருந்திச்சு. பெண்விடுதலை பெண்களின் மாற்றம் புரட்சியென்று எழுதியவள். களங்களில் கனவுகளோடும் இலட்சியத்தோடும் கனரகத்துப்பாக்கியோடும் திரிந்தவள். இன்று ரண்டாந்தாரமும் பறவாயில்லையென்ற நிலமைக்கு எப்படி வந்தாள்……..?

இதைவிடவும் இவையள் தங்களை முன்னாள் போராளியளெண்டு சொல்லாமலிருக்கலாம்….யாருக்கோ விலபோட்டா….அத்தியடிக் குத்தியரின்ரை ஆளாயிருக்கலாம்…..அல்லது அரச புலனாய்வா இருக்கலாம்…..உவையெல்லாம் பெண்போராளியள்…சீ….தூ….

அவள் பற்றிய கதையைச் சொல்ல நினைக்கிற என்னை நோக்கி….,

புலம்பெயர் தாயக விரும்பிகள் விடுலையுணர்வாளர்கள் புலத்திலிருந்து களம்காணும் புலப்போராளிகள் யாவரும் என் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருப்பது போல கனவு காணத்தொடங்குகிறேன்.

01.11.2011

000 000 000

Link to post
Share on other sites
 • Replies 80
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

பல பெண்கள் முதல் தார திருமணமே பத்து வயது வித்தியாசத்தில் செய்து இருக்கிறார்கள்.கொஞ்சப் பேர் கஸ்டப்படுகிறார்கள்,கொஞ்சப் பேர் நன்றாக இருக்கிறார்கள் ஆனால் அவர் குடிகாரன் அத்தோடு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது தான் உதைக்குது...எது,எப்படியோ அந்தப் பெண்ணுக்கு சீக்கிரம் மணமாகி,சந்தோசமாக வாழ என வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் தாரமோ மூன்றாம் தாரமோ, பாதுகாப்பிற்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்ற கேவலமான நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். காரணம் ஏனென்று தெரியும்.

எனக்குத் தெரிந்த ஒருத்தர் திருமண முறிவின் பின் தனது பழைய மனைவியிடம் சவால் விட்டு, சிறிலங்கா சென்று ஒரு ஒரு முன்னாள் போராளியை பதிவுத் திருமணம் செய்து விட்டு வந்தார். பலகாலமாகியும் இன்னும் அந்தப் பெண்ணை இங்கு கூப்பிடவில்லை. வழமை போல மப்பும் மந்தாரமுமாக அவர் வாழ்க்கை செல்கிறது.

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

புலம்பெயர் தாயக விரும்பிகள் விடுலையுணர்வாளர்கள் புலத்திலிருந்து களம்காணும் புலப்போராளிகள் யாவரும் என் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருப்பது போல கனவு காணத்தொடங்குகிறேன்.

சாந்தி வந்தால் ஒரே டமாஸ்தான். :D

புலம்பெயர் விடுதலை வீரர்களையும் பெண்ணியவாதிகளையும் சும்மா விடுங்கோவன்.

பகல் கனவு, விடுதலையின் பெயரால் சேர்த்து வைத்துள்ள பணத்திற்கு நல்லது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட ரதி , தப்பிலி நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் தாரமோ மூன்றாம் தாரமோ, பாதுகாப்பிற்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்ற கேவலமான நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். காரணம் ஏனென்று தெரியும்.

மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் விரும்பியவர்கள் தோற்றுப்போய் திரும்பிப் பார்க்கிற நேரம் மாற்றங்களை வழிமொழிந்து வரவேற்றவர்கள் யாரையும் காணாத துயரம் அவர்களை இந்த நிலமைக்கு இட்டுள்ளதாகவே நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒருத்தர் திருமண முறிவின் பின் தனது பழைய மனைவியிடம் சவால் விட்டு, சிறிலங்கா சென்று ஒரு ஒரு முன்னாள் போராளியை பதிவுத் திருமணம் செய்து விட்டு வந்தார். பலகாலமாகியும் இன்னும் அந்தப் பெண்ணை இங்கு கூப்பிடவில்லை. வழமை போல மப்பும் மந்தாரமுமாக அவர் வாழ்க்கை செல்கிறது.

கூப்பிடாமல் விட்ட அந்த நபர்கூட பறவாயில்லை. கூப்பிட்டு வைத்துக் கொண்டு செய்கிற அக்கிரமங்கள் நிறையவே நடந்திருக்கிறது.

களத்தில் நின்றபோது குட்டையாய் வெட்டப்பட்ட தலைமுடியோடு வெளிநாடு வந்து யாரைப்பார்க்க இந்தக் குட்டை முடியென்றும் , வெளியில் போய் வந்தால் உடற்பரிசோதனை செய்கிற சிலரையும் இந்த 2ம் 3ம் தார மணங்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.

சாந்தி வந்தால் ஒரே டமாஸ்தான். :D

புலம்பெயர் விடுதலை வீரர்களையும் பெண்ணியவாதிகளையும் சும்மா விடுங்கோவன்.

பகல் கனவு, விடுதலையின் பெயரால் சேர்த்து வைத்துள்ள பணத்திற்கு நல்லது.

என்னை வைச்சு காமெடி கீமடி பண்ணலையே ? :lol:

எனக்கு அடிவாங்கித் தாறதெண்ட முடிவோடை நிக்கிறியள். :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் இவைக்கெல்லாம் ஒரு அன்னை தெராசா இல்லம் கட்டிக் கொடுக்கலாம் என்று யோசிக்கிறன். ஏன் கலியாணம் கட்டினா தானா வாழலாம். அன்னை தெராசா போலவும் வாழலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் நல்லம். பாதுகாப்பான வாழ்வும்.. பிறருக்கு உதவி வாழுதலும் என்ற நிம்மதியாவது கிடைக்கும். இப்படி இரண்டாம் தாரத்துக்கு... மூன்றாம் தாரத்துக்கு என்று ஆசைப்பட்டு.. அவங்களட்ட அடியும் உதையும் ஏச்சும் இழிப்பும் பழிப்பும் வாங்கிச் சாகிறதிலும்.. இது எவ்வளவோ மேல். ஏன் சாந்தியக்கா... இப்படியான வழிமுறைகளைப் பற்றி நீங்க சிந்திக்க மாட்டியளோ..????! பிரச்சனைகளைக் குறைக்கிற வழியைத் தேடாமல்.. கூட்டிற வழியைத் தானே தேடிக் கொடுக்குறீங்க.. முதல் முறையா கலியாணம் கட்டி வெளிநாட்டுக்கு வந்தவையே பலர் நிம்மதியான வாழ்வற்று.. அல்லாடினம்.. இந்த இலட்சணத்தில்....???!

மேலும் இந்தப் பெண் பிள்ளைகளுக்கு அன்னை தெராசா இல்லம் பற்றிய தொடர்புகளை ஏற்படுத்தி அதனை வன்னியில் வடக்குக் கிழக்கில் இயங்க வைப்பதன் மூலம் இவர்களுக்கு சமூகப் பயனுள்ள வாழ்வும்.. சமூகப் பாதுகாப்பும் அளிக்க முடியும் என்று நினைக்கிறன்..! இதற்காக சர்வதேச மகளிர் அமைப்புக்களின் தொடர்புகளையும் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற முடியும் என்றும் நினைக்கிறன்.

http://www.motherter...org/layout.html

http://www.motherter...ring/v_cal.html (கொழும்பு முகவரியும் உண்டு.)

அதுமட்டுமன்றி.. நான் யுனில இருக்கிறப்போ.. இடம்பெற்றிருந்த...

http://www.bkwsu.org/

http://www.bkwsu.org..._html/bkhistory (இதன் கிளை.. கொழும்பு.. திருமலை.. கண்டி என்றெல்லாம் உண்டு.)

இந்த அமைப்பும் கொழும்பில பிரமாண்டமாக இருக்குது. அவர்களைத் தொடர்பு கொண்டு.. வன்னியில்.. வடக்குக் கிழக்கில் உள்ள பெண்களின் நிலையை விளக்கினால்.. அவர்கள் சர்வதேச மட்டத்தில் இருந்து உங்களுக்கு வேண்டிய தங்களால் ஆன உதவிகளைச் செய்வார்கள்.

இன்று.. மேரி கியூரியின் பிறந்த தினமும் கூட.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை இவர்கள் யார் மூலமென்றாலும் உதவி பெறுவதுதான் ஒரே வழி .

ஆதிலட்சுமி பற்றி ஏதும் விபரம் தெரியுமா சாந்தி?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதிலட்சுமி பற்றி ஏதும் விபரம் தெரியுமா சாந்தி?

ஆதிலட்சுமி பற்றி தெரியும். தனிமடலில் எழுதுகிறேன் பாருங்கோ அர்யுன்.

Link to post
Share on other sites

சாந்தி தலைப்பை மட்டும் படிச்சிட்டு கனபேர் விழுந்தடிச்சு உள்ளை ஓடிவரப்போகினம் கவனம். :lol: :lol: :lol:

Link to post
Share on other sites

சாந்தி தலைப்பை மட்டும் படிச்சிட்டு கனபேர் லிழுந்தடிச்சு உள்ளை ஓடிவரப்போகினம் கவனம். :lol: :lol: :lol:

அனுபவம் போசுது :lol: :lol:

Link to post
Share on other sites

அனுபவம் போசுது :lol: :lol:

எனது அனுபவத்தை பாத்தீங்களெண்டால் இரண்டில்லை இருபதை தாண்டும். எதுக்கு அதெல்லாம் மற்றபடி நாங்கள் நல்லவங்கள் எண்டு சும்மா ஒரு இதுதான் :lol: :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யக்கோவ் ,அந்தப் பெண்ணின் அல்லல் அல்லது வீழ்ச்சி புரியாமல் பேசுகிறீர்கள்.

(

யக்கோவ் என்பது தமிழ் யக்கோவ், அதாவது 'அக்கா;; சிங்கள யக்கோவ் அல்ல :-) )

Link to post
Share on other sites

< ஒருகாலம் அவள் தனது சொந்தமென்ற எல்லாத்தையும் நாட்டுக்கெண்டு குடுத்து கிட்டத்தட்ட 20வருசம் போராளியா இருந்தவள். அப்பவே எங்கினையும் ஒரு கலியாணத்தை கட்டி தானும் வெளிநாடு குடும்பம் குழந்தையள் நோகாத அரசியலெண்டு கதைச்சு எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாத்தையும் விட்டிட்டு இலட்சியமும் கொள்கையும் சுமந்து மே 17 , 2009 வரையும் கொள்கைக்காகவே வாழ்ந்து கடைசியில குப்பி கடிக்கவும் மனமில்லாமல் சரணடைஞ்சாள்.>

< அவளைச் சமாதான காலத்தில் சந்தித்த எத்தனையோ புலம்பெயர் கவுரவர்கள் எவரும் தன்னையோ தன்போன்றவர்களை ஏனெண்டும் திரும்பிப்பாக்காமல் விட்டிருப்பது பற்றிச் சரியான கடுப்பு. அதுக்குப்பிறகுதான் முடிவெடுத்தாள் தானும் திருமணம் செய்து கொள்ளுவமெண்டு. இனவிடுதலைக்காக தன்னையே 20வருடங்கள் இரைகொடுத்தவள் இனிமேல் தனக்கும் ஒருதுணை வேணுமெண்டு முடிவெடுத்திருக்கிறாள். தனது விருப்பத்தை அவளுக்கு மாப்பிளை தேடுகிற தனது போராளி நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள். அவனும் இப்போ அவளுக்காக புறோக்கராகி……..! என்னையும் புறோக்கராக்கி……!>

என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு பகுதியும் முரண்பாடாக இருக்கின்றது சாந்தி . ஓர் ஆணும் சரி , பெண்ணும் சரி தங்களைப் பொது சேவையில் அர்பணிக்கும் பொழுது , திருமணபந்தம் தங்கள் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கின்றது என்ற பொதுவான எண்ணப்பாடு உள்ளது . இதை எமது சமூகவாழ்வில் நாம் கண்கூடாகப் பார்கின்றோம் . அதற்காக அந்தப்பெண் கலியணம் செய்யக்கூடாது என்று நான் சொல்லவில்லை . இவ்வளவு காலமும் கலியாணம் செய்யாதவா , சமூகநற்பணிகளில் ஈடுபடுவது நல்லது என்றே எனக்குப்படுது . ஏனெனில் ஆண்கள் எல்லோருமே புனிதர்கள் இல்லை . அது நிரந்தர சித்திரவதைமுகாமாகவே இருக்கும் :( :( :( .

Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

நான் இவைக்கெல்லாம் ஒரு அன்னை தெராசா இல்லம் கட்டிக் கொடுக்கலாம் என்று யோசிக்கிறன். ஏன் கலியாணம் கட்டினா தானா வாழலாம். அன்னை தெராசா போலவும் வாழலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் நல்லம். பாதுகாப்பான வாழ்வும்.. பிறருக்கு உதவி வாழுதலும் என்ற நிம்மதியாவது கிடைக்கும். இப்படி இரண்டாம் தாரத்துக்கு... மூன்றாம் தாரத்துக்கு என்று ஆசைப்பட்டு.. அவங்களட்ட அடியும் உதையும் ஏச்சும் இழிப்பும் பழிப்பும் வாங்கிச் சாகிறதிலும்.. இது எவ்வளவோ மேல். ஏன் சாந்தியக்கா... இப்படியான வழிமுறைகளைப் பற்றி நீங்க சிந்திக்க மாட்டியளோ..????! பிரச்சனைகளைக் குறைக்கிற வழியைத் தேடாமல்.. கூட்டிற வழியைத் தானே தேடிக் கொடுக்குறீங்க.. முதல் முறையா கலியாணம் கட்டி வெளிநாட்டுக்கு வந்தவையே பலர் நிம்மதியான வாழ்வற்று.. அல்லாடினம்.. இந்த இலட்சணத்தில்....???!

மேலும் இந்தப் பெண் பிள்ளைகளுக்கு அன்னை தெராசா இல்லம் பற்றிய தொடர்புகளை ஏற்படுத்தி அதனை வன்னியில் வடக்குக் கிழக்கில் இயங்க வைப்பதன் மூலம் இவர்களுக்கு சமூகப் பயனுள்ள வாழ்வும்.. சமூகப் பாதுகாப்பும் அளிக்க முடியும் என்று நினைக்கிறன்..! இதற்காக சர்வதேச மகளிர் அமைப்புக்களின் தொடர்புகளையும் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற முடியும் என்றும் நினைக்கிறன்.

http://www.motherter...org/layout.html

http://www.motherter...ring/v_cal.html (கொழும்பு முகவரியும் உண்டு.)

அதுமட்டுமன்றி.. நான் யுனில இருக்கிறப்போ.. இடம்பெற்றிருந்த...

http://www.bkwsu.org/

http://www.bkwsu.org..._html/bkhistory (இதன் கிளை.. கொழும்பு.. திருமலை.. கண்டி என்றெல்லாம் உண்டு.)

இந்த அமைப்பும் கொழும்பில பிரமாண்டமாக இருக்குது. அவர்களைத் தொடர்பு கொண்டு.. வன்னியில்.. வடக்குக் கிழக்கில் உள்ள பெண்களின் நிலையை விளக்கினால்.. அவர்கள் சர்வதேச மட்டத்தில் இருந்து உங்களுக்கு வேண்டிய தங்களால் ஆன உதவிகளைச் செய்வார்கள்.

இன்று.. மேரி கியூரியின் பிறந்த தினமும் கூட.

நெடுக்ஸ் உங்களின் ஆலோசனைகள் அச்சாவாக உள்ளது. இந்தப்பெண் போன்ற பலருக்கு நீங்கள் சொன்னது போல தங்குமிடம் வாழ்வாதாரம் அவசரம் செய்யப்பட வேண்டியுள்ளது. நீங்கள் படித்தவர். பிறமொழியறிவு ஆற்றல் உள்ளவர். மேற்சொன்ன இடங்களில் ஏதேனும் ஒன்றில் கதைத்து பாதிக்கப்பட்ட 10பெண்களுக்கான பாதுகாப்பிடத்தை பெற்றுத்தந்தால் பேருதவியாக இருக்கும்.

அல்லது ஒரு அன்னைதெரேசா இல்லம் அமைத்துக் கொடுத்தாலும் அங்கே வந்து வாழ பலர் தயாராக உள்ளார்கள். நான் சாதாரண ஒரு பெண் என்னால் இப்படியெல்லாம் புரட்சிகரமாக சிந்திக்கத் தெரியவில்லை. ஒரு அன்னைதெரேசா இல்லமோ இல்லது ஏதோ இத்தகைய பெண்களுக்கான ஒரு வழியை இல்லது வாழ்விடத்தை ஏற்படுத்தித் தாருங்கள். என்னிடமுள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை உங்களிடம் தந்துவிடுகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்களின் ஆலோசனைகள் அச்சாவாக உள்ளது. இந்தப்பெண் போன்ற பலருக்கு நீங்கள் சொன்னது போல தங்குமிடம் வாழ்வாதாரம் அவசரம் செய்யப்பட வேண்டியுள்ளது. நீங்கள் படித்தவர். பிறமொழியறிவு ஆற்றல் உள்ளவர். மேற்சொன்ன இடங்களில் ஏதேனும் ஒன்றில் கதைத்து பாதிக்கப்பட்ட 10 பெண்களுக்கான பாதுகாப்பிடத்தை பெற்றுத்தந்தால் பேருதவியாக இருக்கும்.

அல்லது ஒரு அன்னைதெரேசா இல்லம் அமைத்துக் கொடுத்தாலும் அங்கே வந்து வாழ பலர் தயாராக உள்ளார்கள். நான் சாதாரண ஒரு பெண் என்னால் இப்படியெல்லாம் புரட்சிகரமாக சிந்திக்கத் தெரியவில்லை. ஒரு அன்னைதெரேசா இல்லமோ இல்லது ஏதோ இத்தகைய பெண்களுக்கான ஒரு வழியை இல்லது வாழ்விடத்தை ஏற்படுத்தித் தாருங்கள். என்னிடமுள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை உங்களிடம் தந்துவிடுகிறேன்.

தெல்லிப்பழை துர்க்காதேவி பெண்கள் புகலிடம்.. இராமகிருஷ்ண மிசன்.. பிரம்ம குமாரிகள்.. திருமலை.. யாழ் அலுவலகங்கள்.. சிறீல சிறீ ரவிசங்கர் ஆச்சிரமம்.. YMHA.. YMCA இவற்றில் நீங்கள் தமிழிலையே கதைச்சு.. இந்தப் பெண்களின் மறுவாழ்விற்கு உதவக் கேட்கலாம்..!

மேலும்.. எனக்குத் தெரிய புலம்பெயர்ந்துள்ள பலர் இப்படியான பெண்களிற்கான நிதி உதவியை தமது மாதாந்தக் கடமையாகச் செய்து வருகின்றனர். எங்களால் தற்போதைய நிலையில் இந்தப் பெண்களுக்கு உதவி செய்ய முடியாது. அவைக்கு கைகால் நல்லா இருந்தால் வேலைக்குச் சென்று சம்பாதிச்சும் வாழலாம் தானே..! முன்னாள் போராளிகள் என்பதற்காக வீட்டில் வைச்சு சாப்பாடு கொடுக்கனுன்னா..தலைவர் வளர்த்தவர்... இல்லையே..!

உள்ளதை வைச்சு வாழத் தெரியனுமே தவிர இல்லாததற்கு பறக்க வெளிக்கிட்டால்.. வாழ்க்கை கஸ்டமாகத்தான் இருக்கும். இவர்களின் அடிப்படை நிதி உதவியை பூர்த்தி செய்யவும்.. அதில் இருந்து ஒரு நிரந்தர வருமானத்திற்கும் வழிகாட்டி விட்டாலே போதும். அவர்கள் வாழ்ந்து கொள்வார்கள். :):icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவைக்கு கைகால் நல்லா இருந்தால் வேலைக்குச் சென்று சம்பாதிச்சும் வாழலாம் தானே..! முன்னாள் போராளிகள் என்பதற்காக வீட்டில் வைச்சு சாப்பாடு கொடுக்கனுன்னா..தலைவர் வளர்த்தவர்... இல்லையே..!

அவையள் நெடுக்கண்ணா தங்களை இருக்க வைச்சு சோறு போடுவாரெண்டு நம்பியிருக்கேல்ல. சம்பாதிச்சு சொந்தக்காலில நிக்க விரும்புகினம் ஆனால் நெடுக்கண்ணா நீங்கள் கருணை காட்டி 10பெண்களுக்கு 10தையல் மெசின் வாங்கித்தரச்சொல்லிக் கேட்கினம் (10தையல் மெசினுக்கு 333000ரூபா (2200€)

தலைவர் நல்லாத்தான் வளர்த்துவிட்டவர். தலைவரை உயிருக்கு உயிராய் நேசிக்கிற நெடுக்கண்ணாவிடமிருந்து இப்படியான ஆலோசனைகள் இதுவரையும் கிடைக்காததாலைதான் இப்பிடியான யோசினையள் அவைக்கு வராமல் போட்டுது. இப்ப நெடுக்கண்ணாவின் ஆலோசனை கிடைச்சிட்டுது அதை நடைமுறைப்படுத்த ஆகலும் 2200€ கேட்கினம்.

நீங்களே நேரடியா அவையிட்டை குடுக்கலாம்.

என்னமாதிரி விபரத்தை அனுப்பவோ நெடுக்ஸ் ?

உள்ளதை வைச்சு வாழத் தெரியனுமே தவிர இல்லாததற்கு பறக்க வெளிக்கிட்டால்.. வாழ்க்கை கஸ்டமாகத்தான் இருக்கும்.

இதென்ன கோதாரியாப்போச்சு. நிமிந்து எழும்பி நிக்கிறதுக்கு ஒரு ஊன்றுதடிதான் எதிர்பாக்கினம் பிள்ளைகள். ஆளுக்கொரு ஊன்றுதடி குடுத்தீங்களெண்டா போதும். (இலவச ஆலோசனை கொடுக்க கனபேர் இருக்கினமாம். நீங்கள் கொள்ளையாளர் இலட்சியவாதியி உங்களிட்டை உரிமையோடு ஊன்றுதடி தாங்கோண்டு கேட்கிறம்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவையள் நெடுக்கண்ணா தங்களை இருக்க வைச்சு சோறு போடுவாரெண்டு நம்பியிருக்கேல்ல. சம்பாதிச்சு சொந்தக்காலில நிக்க விரும்புகினம் ஆனால் நெடுக்கண்ணா நீங்கள் கருணை காட்டி 10பெண்களுக்கு 10தையல் மெசின் வாங்கித்தரச்சொல்லிக் கேட்கினம் (10தையல் மெசினுக்கு 333000ரூபா (2200€)

தலைவர் நல்லாத்தான் வளர்த்துவிட்டவர். தலைவரை உயிருக்கு உயிராய் நேசிக்கிற நெடுக்கண்ணாவிடமிருந்து இப்படியான ஆலோசனைகள் இதுவரையும் கிடைக்காததாலைதான் இப்பிடியான யோசினையள் அவைக்கு வராமல் போட்டுது. இப்ப நெடுக்கண்ணாவின் ஆலோசனை கிடைச்சிட்டுது அதை நடைமுறைப்படுத்த ஆகலும் 2200€ கேட்கினம்.

நீங்களே நேரடியா அவையிட்டை குடுக்கலாம்.

என்னமாதிரி விபரத்தை அனுப்பவோ நெடுக்ஸ் ?

இதென்ன கோதாரியாப்போச்சு. நிமிந்து எழும்பி நிக்கிறதுக்கு ஒரு ஊன்றுதடிதான் எதிர்பாக்கினம் பிள்ளைகள். ஆளுக்கொரு ஊன்றுதடி குடுத்தீங்களெண்டா போதும். (இலவச ஆலோசனை கொடுக்க கனபேர் இருக்கினமாம். நீங்கள் கொள்ளையாளர் இலட்சியவாதியி உங்களிட்டை உரிமையோடு ஊன்றுதடி தாங்கோண்டு கேட்கிறம்)

முதலில நான் உங்களுக்கு தம்பி... அண்ணன் இல்ல.

இரண்டாவது.. பிரச்சனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சோறு போடுறது யார் என்பதல்ல பிரச்சனை.. சம்பந்தப்பட்ட பெண்களின் மறுவாழ்வை உறுதி செய்வது எப்படி என்பது தான் பிரச்சனை.

சோறு என்றால்.. மகிந்தவோடு சேர்ந்து நின்றாலும் சோறு கிடைக்கும்..! சங்கரி காலில போய் விழுந்தாலும் சோறு கிடைக்கும். அதற்கும் எங்களை தான் எதிர்ப்பார்க்கனுன்னு அவசியம் இல்லயே..!

தலைவரை உயிருக்கு உயிரா நேசிக்கிறம் தான். ஏன்னா அவர் கொள்கைக்காக வாழ்ந்தவர். கொள்கைக்காக இறுதி வரை போராடினவர். கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.

தையல் மிசின் வாங்கிக் கொடுத்திட்டா மட்டும் சரியான வருமானம் வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்..????! ஊரில தையல் மிசின் வைச்சிருந்த பெண்கள்.. குடும்பங்கள் பல.. வறுமைக் கோட்டின் கீழ் தான் வாழ்ந்தன. ஏன் அவர்களால் அந்த தையல் மிசின்களை வைச்சு.. வறுமைக் கோட்டின் மேல் வாழ முடியல்ல..?! இதற்கு தங்கள் பதில் என்ன..??!

வருமானம் இல்லாதவர்களுக்கு வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு ஆக்கிரமிப்பு.. சிறீலங்கா அரசு நிவாரணங்களை வழங்கும் தானே. அது சோறு போடக் காணாதா..???! இது சோறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. பிரச்சனை அவர்களுக்கும் வெளிநாடுகளில் நீங்கள் எல்லோரும் வாழும் வசதியோட வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கனும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. நீங்கள் மட்டும்.. கார் ஓடித் திரியலாம்.. சீசனுக்கு சீசன்.. கொலிடே போய் வரலாம்.. நாட்டுக்காக போராடிய அவங்க.. தையல் மிசினோட மாரடிக்கனும் என்பது என்ன தலை விதியா..???!

ஏன் அவங்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடிக் கொடுக்கக் கூடாது. மேற்கு நாடுகளில்.. மத்திய கிழக்கில்.. சிங்கப்பூர்.. மலேசியாவில்... கனடாவில் இதற்கான வாய்ப்பே இல்லையா. இருக்கு.. ஆனால் ஏன் செய்து கொடுக்கிறீர்கள் இல்லை. அவர்கள் உங்கள் அளவிற்கு வளர்ந்திடுவார்கள் என்ற பயமா..??! அதனால் தான் அவர்களை தையல் மிசினோடும்.. கோழிக்கூட்டோடும் அடைச்சு வைக்கப் பார்க்கிறீங்க..! இப்படின்னும் எங்களால குற்றம் காண முடியும்..!

இவற்றால் என்ன... பயன்..??! இதனால் அவர்களுக்கு மறுவாழ்வு அமைஞ்சிடுமா..????! நான் உதவி செய்யனுன்னா.. அவங்களுக்கு உங்களைப் போல வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ.. வெளி நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க.. நானும் அந்த திட்டத்தில் என்னை இணைத்துக் கொள்ளுறன்..! தையல் மிசின்.. கோழிக்குஞ்சு.. கறவை மாடு.. ஜமுனா பாரி ஆடு.. இதெல்லாம்.. 1000 ரூபா தினமும் ஒரு மனிதனுக்கு செலவுக்கு தேவைப்படும் நாட்டில நிரந்தர வருமானத்துக்கு உருப்படியான ஆரோக்கியமான மறுவாழ்விற்கு உதவப் போறதில்ல. எனக்கு இப்படியான உப்புச்சப்பற்ற பயனற்ற.. சும்மா விளம்பரம் தேடும் திட்டங்களுக்கு உதவும் எண்ணம் ஏதும் இல்லை..! :):icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உந்த உப்புச்சப்பில்லாத ஆய்வு விளக்க அறுவது பக்க அறிக்கையைத்தான் தருவியளெண்டு தெரியும். 10தையல் மெசின் வாங்கிக்குடுங்கோ 10பேருக்கு நீங்கள் சொல்ற வேலைகளுக்கும் மேலால் பிள்ளையள் உழைச்சுக்காட்டுவினம்.

சுயமா ஒண்டைச் செய்ய முடியாத போது சுயவிளம்பரமெண்டு வளமையாக தப்பிக்கிற தியறிதான் உங்கள் பாணி பணி.

நீங்கள்தான் இருக்கிறதை வைச்சு பறக்க ஆசைப்படுகினமெண்டு அழுகிறயிள் பிறகு அமெரிக்கா ஐரோப்பா கொலிடே கார் கனவெண்டு கதைவிடுறியள். கதைவிடுறதில நெடுக்குத் தம்பிக்கு நிகரேது. :icon_idea: 10தையல் மெசின் குடுப்பியளோ ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சோறு போடுறது யார் என்பதல்ல பிரச்சனை.. சம்பந்தப்பட்ட பெண்களின் மறுவாழ்வை உறுதி செய்வது எப்படி என்பது தான் பிரச்சனை.

இதற்கு ஏதாவது தீர்வு இல்லை மாற்றுத்திட்டம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள் நெடுக்ஸ் அண்ணா மக்கள் நலச்சேவையில் இருப்பவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

சோறு என்றால்.. மகிந்தவோடு சேர்ந்து நின்றாலும் சோறு கிடைக்கும்..! சங்கரி காலில போய் விழுந்தாலும் சோறு கிடைக்கும். அதற்கும் எங்களை தான் எதிர்ப்பார்க்கனுன்னு அவசியம் இல்லயே..!

இதை தான் அதுகள் செய்தால் தேசியத்தின் தூண்கள் காவலர்களால் துரோகிகளாகவும்,ஈனமா இனமாகவும் சித்தரிக்கிறீர்களே???

தலைவரை உயிருக்கு உயிரா நேசிக்கிறம் தான். ஏன்னா அவர் கொள்கைக்காக வாழ்ந்தவர். கொள்கைக்காக இறுதி வரை போராடினவர். கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.

இதுக்கும் தலைவரா ?????? பாவம் அவரை விட்டிடுங்கோ..

தையல் மிசின் வாங்கிக் கொடுத்திட்டா மட்டும் சரியான வருமானம் வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்..????! ஊரில தையல் மிசின் வைச்சிருந்த பெண்கள்.. குடும்பங்கள் பல.. வறுமைக் கோட்டின் கீழ் தான் வாழ்ந்தன. ஏன் அவர்களால் அந்த தையல் மிசின்களை வைச்சு.. வறுமைக் கோட்டின் மேல் வாழ முடியல்ல..?! இதற்கு தங்கள் பதில் என்ன..??!

எதுவுமே இல்லாமல் இருப்பதை ஏதாவது சொந்தக்காலில் நிற்பது பரவாயில்லை தானே?

ஏன் அவங்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடிக் கொடுக்கக் கூடாது. மேற்கு நாடுகளில்.. மத்திய கிழக்கில்.. சிங்கப்பூர்.. மலேசியாவில்... கனடாவில் இதற்கான வாய்ப்பே இல்லையா. இருக்கு.. ஆனால் ஏன் செய்து கொடுக்கிறீர்கள் இல்லை. அவர்கள் உங்கள் அளவிற்கு வளர்ந்திடுவார்கள் என்ற பயமா..??! அதனால் தான் அவர்களை தையல் மிசினோடும்.. கோழிக்கூட்டோடும் அடைச்சு வைக்கப் பார்க்கிறீங்க..! இப்படின்னும் எங்களால குற்றம் காண முடியும்..!

வெளிநாட்டுக்கு யாரும் சும்மா அனுப்பிறாங்களா?

இவற்றால் என்ன... பயன்..??! இதனால் அவர்களுக்கு மறுவாழ்வு அமைஞ்சிடுமா..????! நான் உதவி செய்யனுன்னா.. அவங்களுக்கு உங்களைப் போல வெளிநாட்டில் வசதியான வாழ்க்கை வாழ.. வெளி நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க.. நானும் அந்த திட்டத்தில் என்னை இணைத்துக் கொள்ளுறன்..! தையல் மிசின்.. கோழிக்குஞ்சு.. கறவை மாடு.. ஜமுனா பாரி ஆடு.. இதெல்லாம்.. 1000 ரூபா தினமும் ஒரு மனிதனுக்கு செலவுக்கு தேவைப்படும் நாட்டில நிரந்தர வருமானத்துக்கு உருப்படியான ஆரோக்கியமான மறுவாழ்விற்கு உதவப் போறதில்ல. எனக்கு இப்படியான உப்புச்சப்பற்ற பயனற்ற.. சும்மா விளம்பரம் தேடும் திட்டங்களுக்கு உதவும் எண்ணம் ஏதும் இல்லை..! :):icon_idea:

இதுக்கு தான் உங்களுடைய பொன்னான கருத்துக்களை கேட்க ஆவலாய் உள்ளோம்.

தையல் மெசின் கேழிகுஞ்சை விடுங்கோ நானே ஒரு பத்து பேருக்கு இங்கை வேiலை ஒழுங்கு செய்து குடுக்கிறன்.கூப்பிட்டு விடுங்கோ அது மட்டும் போதுமானது. அதையும் விட்டால் காதல் கலியாணம் வேண்டாம் போராட்டத்திற்காக போய் 20 வரும் போராடி ஒரு பெண் இருக்கிறார் நீங்கள் கலியாணம் செய்யவேண்டாம் குடும்பம் நடத்தவேண்டாம். ஒரு அழைப்பு (ஸ்பென்சர் )குடுக்க முடியுமா?? ஏன் குப்பி கடிக்கவில்லையென கேட்கவேண்டாம். .. இவைக்கு தேசியம். விடுதலைப்போராட்டம். தலைவர். கலாச்சாரம். உணர்வு . பெண்ணியம். விஞ்ஞானம் . இவை தவிர்ந்த ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன்.

அண்ணையா தம்பியா எண்டதெல்லாம் பிறகு

Link to post
Share on other sites

போராட்டத்திற்காக போய் 20 வரும் போராடி ஒரு பெண் இருக்கிறார் நீங்கள் கலியாணம் செய்யவேண்டாம் குடும்பம் நடத்தவேண்டாம். ஒரு அழைப்பு (ஸ்பென்சர் )குடுக்க முடியுமா?? ஏன் குப்பி கடிக்கவில்லையென கேட்கவேண்டாம். .. இவைக்கு தேசியம். விடுதலைப்போராட்டம். தலைவர். கலாச்சாரம். உணர்வு . பெண்ணியம். விஞ்ஞானம் . இவை தவிர்ந்த ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன்.

எனது நண்பியின் சகோதரி ஒருவரும் (19 வருடம் போராடிய ஒரு பெண் போராளி) உள்ளா, ஒரு போராளிக்கு உதவிக் கரம் கொடுக்க முடியுமா????? மாணவர் விசாவில் உள்ளேன், கூப்பிட முடியாது என்று சொல்ல வேண்டாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஏதாவது தீர்வு இல்லை மாற்றுத்திட்டம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள் நெடுக்ஸ் அண்ணா மக்கள் நலச்சேவையில் இருப்பவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

நீங்களும் அதே போராட்ட மண்ணில் வாழ்ந்து விட்டுத் தானே வந்தனீர்கள். நான் ஏலவே எனது திட்டத்தைச் சொல்லிட்டன். அந்த முன்னாள் போராளிகளுக்கு ஆக்கிரமிப்பு சிறீலங்காவில் பாதுகாப்பில்ல. அவங்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு இணங்க தகுதி பெற.. ஒரு 3 தொடக்கம் 6 மாத வேலைக்கேற்ற தொழிற்பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அழைத்து வருவது தான் என்னைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வுக்கும் வாழ்க்கைத் தரம் உயரவும் வழிவகுக்கும். இதை விட வேற எந்தத் திட்டங்களும் அவங்கள் உருப்பட உதவப் போறதில்ல. அந்த வகையில் தையல் மிசின்களை.. கோழிக்குஞ்சுகளை.. ஜமுனா பாரிகளை.. கொடுத்து.. நாங்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டு.. அவர்களை ஏமாற்றி நாங்கள் விளம்பரம் தேட முனைய மாட்டோம்..!

இதை தான் அதுகள் செய்தால் தேசியத்தின் தூண்கள் காவலர்களால் துரோகிகளாகவும்,ஈனமா இனமாகவும் சித்தரிக்கிறீர்களே???

நான் சொன்னது சோற்றுக்கு வழியில்லை என்றால் காட்டிக் கொடுக்கனும் என்ற அவசியம் இல்லை. அதைச் செய்யாமலே சிறீலங்கா அரசின் உதவியை பெற்றுக் கொள்ள உரிய வழி வகைகளை ஆராயலாம். அதற்காக மகிந்தவின்.. சங்கரியின் காலில் விழுவது என்றாலும் விழந்தான் வேண்டும். அதற்காக பசியிருந்து சாக முடியுமோ..???!

இதுக்கும் தலைவரா ?????? பாவம் அவரை விட்டிடுங்கோ..

அவரை இழுத்து வைச்சு என்னிடம் கேள்வி கேட்டவர்களிடம் போய் இதனைச் சொல்லுங்கள். அதுவே சாலச் சிறந்தது.

எதுவுமே இல்லாமல் இருப்பதை ஏதாவது சொந்தக்காலில் நிற்பது பரவாயில்லை தானே?

இது சொந்தக் காலில் நிற்க உதவிறம் என்ற பெயரில்.. தூசி தட்ட ஒரு மூலையில் பணத்தையும் உழைப்பையும் முடக்கும் செயல். நான் தாயகத்தில் வாழ்ந்த போது கண்ட உண்மைகளில்.. தையல் மிசினை வைச்சு உழைச்சு முன்னேறினவையைக் காட்டிலும்.. வீட்ட வளவை வித்துப் போட்டு.. அடகு வைச்சுப் போட்டு.. இயக்கத்துக்கு தெரியாமலும்.. தெரியவும் பிள்ளைகள.. வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சவை தான் இப்ப வசதியா புலம்பெயர்ந்தும்.. தாயகத்திலும் வாழினம். அந்தச் சந்தர்ப்பங்களை போராட்டம் விடுதலை என்று தவற விட்ட இந்த அக்கா தங்கச்சிகளுக்கு அதை பெற்றுக் கொடுக்கனும் என்பதே எனது அவா. சும்மா.. சுய காலில நிற்க விடுறம் என்று.. மாட்டையும் தையல் மிசினையும் தலையில கட்டி பறணில ஏற்றி விடுற ஏமாற்று வேலைகள் தேவையில்ல..!

வெளிநாட்டுக்கு யாரும் சும்மா அனுப்பிறாங்களா?

ஏன் இவ்வளவு இலட்சம் பேர் வெளிநாட்டுக்கு ஓடி வர அதுகள் அங்க போர் செய்யல்லையோ. அந்த வகையில் அத்தனை இலட்சம் பேரும் ஆளுக்கு ஒரு 100 டொலரோ.. பவுனோ கொடுத்தா.. பாதிக்கப்பட்டவையை வடிவா இங்க தொழில் விசாக்கள் எடுத்து கூப்பிடலாம். உந்தச் சிங்களப் பொம்பிளையள் எல்லாம் வருகுதுகள்.. எங்கள் தமிழிச்சிகளுக்குத் தான் தடையோ. அப்படிச் செய்ய உங்களுக்கு மனசில்ல என்று சொல்லுறது..??!

இதுக்கு தான் உங்களுடைய பொன்னான கருத்துக்களை கேட்க ஆவலாய் உள்ளோம்.

நீங்கள் எதிர்பார்த்த என் பொன்னான கருத்துக்களை பதிவிட்டிருக்கிறேன்.. படியுங்கள். உணருங்கள். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உந்த உப்புச்சப்பில்லாத ஆய்வு விளக்க அறுவது பக்க அறிக்கையைத்தான் தருவியளெண்டு தெரியும். 10தையல் மெசின் வாங்கிக்குடுங்கோ 10பேருக்கு நீங்கள் சொல்ற வேலைகளுக்கும் மேலால் பிள்ளையள் உழைச்சுக்காட்டுவினம்.

சுயமா ஒண்டைச் செய்ய முடியாத போது சுயவிளம்பரமெண்டு வளமையாக தப்பிக்கிற தியறிதான் உங்கள் பாணி பணி.

நீங்கள்தான் இருக்கிறதை வைச்சு பறக்க ஆசைப்படுகினமெண்டு அழுகிறயிள் பிறகு அமெரிக்கா ஐரோப்பா கொலிடே கார் கனவெண்டு கதைவிடுறியள். கதைவிடுறதில நெடுக்குத் தம்பிக்கு நிகரேது. :icon_idea: 10தையல் மெசின் குடுப்பியளோ ?

10 தையல் மிசினை வைச்சு.. மாதாந்தம்.. எவ்வளவு வருமானத்தை அந்த பெண் பிள்ளைகள் ஈட்டுவினம்.. அவையிட நாளாந்த தனிநபர் மற்றும் குடும்பச் செலவுகள் என்ன.. அது போக எவ்வளவு மிஞ்சும்.. அப்படி மிஞ்சினால் அதைச் சேமிக்க என்ன திட்டங்களை செயற்படுத்தி இருக்கீங்க.. வங்கிக் கணக்குகளை திறந்து கொடுத்திருக்கீங்களா.. இந்த தையல் மிசின்களை வைச்சு.. அதில் வரும் சேமிப்பில் அவங்களா தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு நல்ல வேலை பெற்றுச் செல்ல எவ்வளவு காலம் ஆகும்.. இப்படியான விபரங்களை உடனடியாக தாருங்கள். 10 தையல் மிசினுக்கு பங்களிப்பது பற்றி அப்புறம் தீர்மானிக்கிறம்..??!

சும்மா தையல் மிசின் தையல் மிசின் என்று கொண்டு போய் அதை கொடுத்தா அதை வைச்சு.. அதுகள் என்ன செய்யுறது. ஒரு தையல் மிசினை காலால இயக்கவும் சக்தி வேணும். நூல் வேணும்.! இன்னும் தேய்மானங்கள் வந்தால் திருத்த காசு வேணும்.. அப்புறம் தைக்கிற பொருட்களை விற்க.. ஓடர் எடுக்க.. என்று அதுகளை அலையனும்.. சும்மா தையல் மிசினை கொடுத்தமா.. நம்ம கடமை முடிஞ்சுதா.. அதுதான் காசு கொடுத்தமா.. ஏ கே எழும்பி நின்று அடிபடுமாம்.. என்று கனவு கண்டது போல.. உதுகளையும் கனவுத் தொழிற்சாலையில் கொண்டு போய் வைத்துவிட்டு நீங்கள் இணையத்தில படம் போட்டு நிம்மதி ஆகிடுவியள். பாவம் தையல் மிசினை வாங்கினதுகள்.. பாட்சா படத்தில ரஜனி ஒரு பாடல் முடிய முதல் பணக்காரர் ஆன கணக்கா.. கனவு கண்டுவிட்டு கண்ணீரை தொடச்சுக்க வேண்டியது தான்..!

அதிலும்.. உந்தக் காசுகளைச் சேர்த்து.. ஒரு வங்கிக் கணக்கை திறந்து.. அதில இருந்து மாதாந்தம் ஒரு வட்டி வாற வகைக்கு.. (இலங்கை வர்த்த வங்கியில் நல்ல வட்டிவீதம் கொடுக்கினம்) அதில போட்டு வைச்சீங்கன்னா.. அதுகளுக்கு பின்னாடியும் உதவும்.. வேறு தேவைகள் வந்தா அதைப் பயன்படுத்தவும் முடியும்..! தையல் மிசினை வைச்சு என்ன தூசா தட்டுறது..! :):icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தையல் மெசின் கோழிக் குஞ்சை விடுங்கோ நானே ஒரு பத்து பேருக்கு இங்கை வேiலை ஒழுங்கு செய்து குடுக்கிறன்.கூப்பிட்டு விடுங்கோ அது மட்டும் போதுமானது.

அதையும் விட்டால் காதல் கலியாணம் வேண்டாம் போராட்டத்திற்காக போய் 20 வரும் போராடி ஒரு பெண் இருக்கிறார் நீங்கள் கலியாணம் செய்யவேண்டாம் குடும்பம் நடத்தவேண்டாம். ஒரு அழைப்பு (ஸ்பென்சர் )குடுக்க முடியுமா?? ஏன் குப்பி கடிக்கவில்லையென கேட்க வேண்டாம். .. இவைக்கு தேசியம். விடுதலைப்போராட்டம். தலைவர். கலாச்சாரம். உணர்வு . பெண்ணியம். விஞ்ஞானம் . இவை தவிர்ந்த ஒரு பதிலை எதிர் பார்க்கிறேன்.

அண்ணையா தம்பியா எண்டதெல்லாம் பிறகு

அவையள் எங்களுக்காக போராடினதிலும்.. நீங்கள் எல்லாம் அசைலம் அடிக்க அதிகம் போராடி இருக்கினம். அந்த வகையில் அவர்களுக்கு அதிகம் கடமைப்பட்டவர்கள் நீங்கள். நாங்கள் ஏலவே செய்யக் கூடிய உதவிகள் செய்து அடைய வேண்டிய பலாபலன்களையும் எதிரிகள் மூலம் அடைஞ்சிட்டம். இப்ப நாங்களே நிற்கதியாகத் தான் நிற்கிறம்..! அந்த வகையில் அவர்கள் மூலம் அதிக நன்மை அடைந்தவர்கள்.. வெளிநாடுகளில் வளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள்.. அவர்களை கூப்பிட்டு விடுவதால் ஒன்றும் கெட்டுப் போகப் போறதில்ல.

நாங்கள் அவர்கள் மூலம் எந்த நன்மைகளையும் எங்கள் சொந்த வாழ்வுக்காக செய்து கொள்ளவில்லை. இருந்தாலும்.. எங்களால் ஆன உதவிகளை அவர்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில்.. உபயோகமான வழிகளில் செய்கிறோம்.. தொடர்ந்து செய்வோம். (என்ன செய்தோம் என்று சொன்னாலும் சுயதம்படம் எண்டுவியள். அதிலும் போய் சேர வேண்டிய உதவிகள் சம்பந்தப்பட்டவர்களைப் போய் சேர்ந்தாலே போதும் என்று இருப்பது மேல்.) அதுபற்றிய விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் நமக்கில்ல..!

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் இந்த எழுத்துப் பூச்சாண்டிகள் நம்கிட்ட வாயாது..! நேசக்கரத்தின் ஆரம்பம் முதல் நாங்களும் நடக்கிறதுகளை அவதானிச்சிக்கிட்டு தான் இருக்கம்..! நேசக்கரத்துக்கு தேவையான புத்திமதிகளும் சொல்லி இருக்கம். கேட்பதும் விடுவதும்.. அவரவர் விருப்பம். சொல்வதைக் கேட்டால்.. நாங்களும் மதிப்பம்.. பங்களிப்பம். இல்லைன்னா.. உதவி செய்ய எத்தனையோ வழி இருக்கு அதால உதவுவம்..! நேசக்கரத்தை தான் நம்பி இருக்கனுன்னு அவசியம் இல்ல. :icon_idea::)

எனது நண்பியின் சகோதரி ஒருவரும் (19 வருடம் போராடிய ஒரு பெண் போராளி) உள்ளா, ஒரு போராளிக்கு உதவிக் கரம் கொடுக்க முடியுமா????? மாணவர் விசாவில் உள்ளேன், கூப்பிட முடியாது என்று சொல்ல வேண்டாம்.

உங்களுக்கு அண்ணா... தம்பி.. மச்சான்.. இப்படி ஒருத்தரும் கனடாவில.. ஐரோப்பாவில.. அவுஸ்திரேலியாவில.. நியூசிலாந்தில.. மத்திய கிழக்கில.. சிங்கப்பூரில.. அமெரிக்காவில இல்லையோ..??! நாங்கள் எடுத்துவிட்டால்.. எடுத்து விடுறவை வேலையும் செய்ய முடியாது திண்டாடவே வேண்டி இருக்கும். ஆனால் அசைலம் அடிச்சவை கூப்பிட்டால்.. அது வேற கதை. அரசாங்கப் பணம் கிடைக்கும்.. அரசாங்க வீடு கொடுப்பினம்.. அரசாங்க வேலை இல்லா ஊதியம் கொடுப்பினம்.. இப்படி.. சும்மா இருந்தே சொகுசாக வாழலாம். அதைச் செய்தீங்கன்னா.. புண்ணியமாப் போகும். எங்களைப் போன்ற பாவப்பட்ட படிக்கிற ஜென்மங்களை நோக்கி.. அந்தப் பாவப்பட்ட ஜென்மங்களை ஒப்படைக்கிறதால.. அதுகளுக்கு இன்னும் இன்னும் துன்பமே தவிர விடிவு வராது. :):icon_idea:

இருந்தால் ஏன் உங்களிடம் கேட்கின்றோம் :rolleyes: அவர்கள் பாவப்பட்ட ஜென்மங்களல்ல நாட்டுக்காகப் போராடிய பெண் போராளிகள்!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மகாராஷ்டிராவில் ஏப்ரல் 14 முதல் முழு பொது முடக்கம் - 15 நாட்களுக்கு 144 தடை 13 ஏப்ரல் 2021 பட மூலாதாரம், UDDHAV THACKERAY மகாராஷ்டிராவில் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.  இது தொடர்பாக தமது சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக மாநில மக்களிடையே பேசிய உத்தவ் தாக்கரே, "மாநிலத்தில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது," என்று தெரிவித்தார். "தற்போது மாநிலத்தில் 523 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. 4,000 கோவிட் மருத்துவ நிலையங்கள் உள்ளன. மாநிலத்தில் 3.5 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மாநிலத்தில் தினமும் 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் அன்றாட ஆக்சிஜன் பயன்பாடு 850 முதல் 900 மெட்ரிக் டன் வரை உள்ளது. எனவே, மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்ய மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை வரவழைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்."  "கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை என்பதால் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தும் நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது," என்று உத்தவ் தாக்கரே பேசினார்.  மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் அதன் போக்குவரத்தை சமாளிக்க ராணுவத்தின் உதவியை கோரியிருக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே.  புதிய கட்டுப்பாடுகள் என்ன? மாநிலம் முழுவதும் ஏப்ரல் 14 முதல் பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அதவும் அந்த சேவைகள் காலை 7 முதல் இரவு 8 மணிவரை மட்டுமே இயக்கப்படும்.  உணவகங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளில் தங்களுடைய உணவுப் பொட்டலங்களை டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும்.  அலுவலகங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும். உள்ளூர் சூழ்நிலைகளைப் பொறுத்து, ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்கள், வீட்டுப் பணியில் உள்ளவர்களை அத்தியாவசிய சேவை பட்டியலில் கொண்டு வருவது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும்.  இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 14 முதல் 15 நாட்களுக்கு அமலில் இருக்கும்.  உச்சம் தொடும் கொரோனா மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 50 ஆயிரத்தை தாண்டுகிறது.  இந்த நிலையில் மகாராஷ்டிராவில் எந்த நேரமும்  முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் எனும் அச்சத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப  மும்பையின் லோக்மான்யா திலக் ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க வேகமாக சென்றுகொண்டிருக்கிறார்கள்.  உள்ளூரில் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளதால் பலரும் சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்கிறார்கள்.  இந்த நிலையில்தான் அம்மாநிலத்தில் முழுமையான பொது முடக்கம் அறிவிக்கப்படுவதுத தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முடிவில் சமூக ஊடகங்கள் வாயிலாக இன்று இரவு 8.30 மணியளவில் மாநில மக்களுக்கு அவர் அரசு எடுக்கவிருக்கும் முடிவுகளை விளக்கவுள்ளார்.  கடந்த ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்குடன், இந்திய பிரதமர் மோதி திடீரென நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்த நிலையில், பல லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியமால் தவித்தனர். அவர்கள் நடந்தே நூறு கிலோ மீட்டர் முதல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் வரை பயணம் செய்த கதைகளும் செய்திகளில் அடிபட்டன.  இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட 50% அளவு, மகாராஷ்டிரா மாநிலத்திலேயே உள்ளது.  மகாராஷ்டிராவில் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், கடந்த 10ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, முழு பொது முடக்கத்தை தவிர அரசுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தினார்.  இதேபோல, மாநில கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை குழுவுடனும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தில் கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அளவு, ரெம்டெசிவீர் வைரஸ் எதிர்ப்பு மருந்து கையிருப்பு நிலவரம், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிலவரம், சிகிச்சை நடைமுறைகள், கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள், விதிகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  நாக்பூரில் மருத்துவமனை சேதம் பட மூலாதாரம், JN HOSPITAL நாக்பூரின் காந்த்ரி பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவர்களின் உறவினர்கள் திடீரென்று மருத்துவமனையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையில் ஒரு நோயாளி உயிரிழந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தவறியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் பிரச்னை எழுப்பினர். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனையில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.  பட மூலாதாரம், HOPE HOSPITAL இதேபோல ஹோப் மருத்துவமனையில் உள்ள தரை தளத்தில் கோபத்தில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள், அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். அங்குள்ள வரவேற்பறையில் பெட்ரோலை ஊற்றி அந்த பகுதிக்கு சிலர் தீ வைத்தனர். இதனால், காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியதாயிற்று.  பட மூலாதாரம், JN HOSPITAL NAGPUR  ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையில் 29 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு நோயாளியின் உறவினர்கள் குற்றம்சாட்டுவது போல ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அந்த மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரியான விஜயா மேனே கூறுகிறார். சம்பவ நாளில் 60 முதல் 70 ஆக்சிஜன்கள்வரை கையிருப்பில் இருந்தன என்று அவர் தெரிவித்தார்.  இதேவேளை, அமித் பரத்வாஜ், ஹுக்கும்சந்த், கிரண் போத்கே, கல்பனா காடூ, நமிதா மங்கர் உள்ளிட்ட நோயாளிகள் கொரோனா பாதிப்புக்கு பிறகு உயிரிழந்துள்ளதாகவும் அவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் கோய்லா ஷிராமிக் சபா தலைவர் ஷிவ் குமார் யாதவ் தெரிவித்தார். இதற்கிடையே, கோவிட் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விதர்பா மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் சிகிச்சை வழங்க முன்வரும்போது, அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடிய இத்தகைய செயல்பாடுகள் தடுக்கப்பட வேண்டும் என்று அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-56735199  
  • இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், GETTY IMAGES   படக்குறிப்பு, கோப்புப்படம் இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள் 1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ) 2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ) 3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ) 4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ) பட மூலாதாரம், GETTY IMAGES   படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ 5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா 6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா 7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா 8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா 9. அல்கய்தா அமைப்பு 10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம் 11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன. நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES   படக்குறிப்பு, 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது செய்யக் கூடாதவை தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின், (அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது. (ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது. (இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது, (ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது. (உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது. (ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது. (எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது. (ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது. (ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது. (ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது, (ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது. (ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது (ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது. எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வினைகள் பட மூலாதாரம், GETTY IMAGES   படக்குறிப்பு, கோப்புப்படம் இது இவ்வாறிருக்க, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளான சிலோன் தௌஹீத் ஜமாஅத் மற்றும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியவை, தாம் தடைசெய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தன. எவ்வாறாயினும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடைசெய்யப்பட்டால், நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தமது சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த இயக்கம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது.  மேலும் ஈஸ்டர் தினத் தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, எவ்வித நியாயமான ஆதாரங்களுமின்றி தமது இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்தி இருப்பதையிட்டு தாம் விசனமடைவதாகவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தாம் ஒரு தடவையேனும் அழைக்கப்படவில்லை என்றும், இது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் நியமங்களுக்கு முரணானதாகும் எனவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறிப்பிட்டிருந்தது. அதேவேளை தம்மீதான தடையை, இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.   https://www.bbc.com/tamil/sri-lanka-56741831  
  • இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம்   2006 கார்த்திகை மாதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களின் நலன்களுக்கான ஐ நா வின் விசேட பிரதிநிதி அலன் ரொக் இக்கடத்தல்கள்பற்றி விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 2003 ஆம் ஆண்டு ஐ நா வுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட சிறுவர் நலன் தொடர்பான இணக்கப்பாடு குறித்து மீள் உறுதிப்படுத்துவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்புடன் ஒத்துழைத்து வேலை செய்வதாக அரசும், புலிகளும் இணங்கியிருந்ததுடன் தமது படைகளில் இருக்கும் சிறுவர்களை நீக்கிவிடுவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. தனது 10 நாள் விஜயத்தின் இறுதியில் நாட்டின் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த அலன், ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் தனது விசாரணைகள்பற்றித் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.  இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின்படி தமது படைகளிலிருந்து சிறுவர்களை நீக்குவதை புலிகள் முற்றாகக்ச் செய்யவில்லையென்று கடிந்துகொண்ட அலன், கருணா குழு தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களைக் கடத்திச் செல்வதாகக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்துபேசிய அவர் 2006 இன் இறுதி 6 மாதங்களில் மட்டும் கருணா 135 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், கடத்தல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.  கருணாவின் சிறுவர் கடத்தல்களுக்குத் துணைபோவதாக அரச ராணுவத்தைச் சாடிய அலன் ரொக், கருணாவுக்கான பாதுகாப்பினையும், அவ்வப்போது கருணாவின் கடத்தல்களில் பங்களிப்பினையும் அரச ராணுவம் செய்துவருவதாக  மேலும் கூறினார். அலன் ரொக் தலைமையிலான குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்களின் பெற்றோருடன் உரையாடியிருந்தது. இக்கலந்துரையாடல்களிலிருந்து கருணா குழுவின் கடத்தல்களில் அரச ராணுவம் பெருமளவு பங்களிப்பினை வழங்கியிருந்ததாக அலன் ரொக் கூறுகிறார். அரச ராணுவத்தின் படைப்பிரிவுகள் கருணா குழுவினருடன் கடத்தல்களில் நேரடியாகவே பங்குகொண்டிருந்ததை சாட்சிகள் வாயிலாக இக்குழு அறிந்துகொண்டது. பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அலன் ரொக், அரசும் கருணா குழுவும் யுனிசெப் அமைப்பின் ஆலோசனைப்படி சிறுவர்களை தமது படைகளிலிருந்து விடுவிப்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினார்.  அத்துடன் அரச ராணுவத்தினர் கருணா குழுவுக்காக சிறுவர்களைக் கடத்துவது தொடர்பான விசாரணைகளை உடனடியாகவே ஆரம்பிக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அலன் ரொக் கூறினார். அரச ராணுவத்தினர் கடத்தல்களில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டால் தாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மகிந்த தன்னிடம் கூறினார் என்று அவர் மேலும் கூறினார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.