Jump to content

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தால் ஏன் உங்களிடம் கேட்கின்றோம் :rolleyes: அவர்கள் பாவப்பட்ட ஜென்மங்களல்ல நாட்டுக்காகப் போராடிய பெண் போராளிகள்!

அவர்களும் மற்ற எல்லா ஈழப் பொம்பிளையள் போலவும்.. போரை சாட்டி.. அசைலம் அடிக்க.. அல்லது அசைலம் அடிச்சவையை கலியாணம் கட்ட.. அல்லது அசைலம் அடிச்ச தகப்பன் மாரட்ட.. சகோதரங்களட்ட.. வந்து சேருற... மற்றும் இன்னோரென்ன வழிகளில்.. தப்பி பிழைச்சு.. வெளிநாடுகளுக்கு வந்து பத்திரமா இருந்து கொண்டு.... முகப் பூச்சு.. நகப்பூச்சு.. உதட்டுப் பூச்சு.. ஸ்ரெயிட்னர்.. டை.. ஸ்பிறே.. முடி அலங்காரங்கள்.... ஆண்டுக்கு ஐந்து பத்து.. பேட்தே பாட்டிகள்.. கார்களில் கிளம்பி.. பப்கள்... கிளப்புகள்.. ஆட்டங்கள்.. பாட்டங்கள்... யு ரியுப்.. பேஸ் புக்... பொழுது கழித்து.. விதம் விதமா கேம்கள்.. விளையாடிப்.. பார்த்து... நாளுக்கு ஒரு காதல் என்று மினியும் சுடியும் போட்டு சுத்தித் திரிஞ்சு.. இறுதியில்.. தென்னிந்திய இசைக்குழுக்கள் மேடை போட திருமணங்கள் என்றும்.. அப்புறம் பிள்ளை குட்டிகள்.. பெத்து.. அதுகளுக்கு நாலு எழுத்தில பெயர் வைச்சு மகிழ்ந்து... அப்புறம் அதுகளை.. தனியார் வகுப்புக்கள் என்றும்.. பாடம் படிப்பு.. நடனம் நாட்டியம் நீச்சல் பள்ளி.. என்று கூட்டிக் கொண்டு.. ஓடி திரியுற...... இப்படியான வசதியான வாழ்க்கையை வாழ முயற்சிக்காத.. பாவம் செய்த ஜென்மங்கள் என்பதால்.... நாடு நாடு என்று கிடந்ததால்... இன்று.. தையல் மிசினோட கிடந்து மாரடிக்க வேண்டிய.. பாவப்பட்ட ஜென்மங்கள் ஆகி நிற்கின்றனர். அந்த வகையில் அவர்கள் பாவிகளே..! :rolleyes::icon_idea::(

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

கேளாமலே அறிவுரை வழங்கும் பலர் கேட்டாலும் உதவி செய்வதில்லை#

உன் பிரச்சினை ஆக இருப்பின் உன் மூளையை பயன்படுத்தி தீர்வை காணு இன்னொருவர் பிரச்சினையாக இருப்பின்

உன் இதயத்தை பயன் படுத்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில நான் உங்களுக்கு தம்பி... அண்ணன் இல்ல.

:o

சாந்தி அக்கா! என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு...ஒரு சொல்லில நெடுக்ஸ்ஸை ரென்சனாக்கிட்டீங்க...யூத்துக்குப் புடிக்காத வார்த்தையே அண்ணேங்கிறதுதான்.. :lol:

Link to comment
Share on other sites

10 தையல் மிசினை வைச்சு.. மாதாந்தம்.. எவ்வளவு வருமானத்தை அந்த பெண் பிள்ளைகள் ஈட்டுவினம்.. அவையிட நாளாந்த தனிநபர் மற்றும் குடும்பச் செலவுகள் என்ன.. அது போக எவ்வளவு மிஞ்சும்.. அப்படி மிஞ்சினால் அதைச் சேமிக்க என்ன திட்டங்களை செயற்படுத்தி இருக்கீங்க.. வங்கிக் கணக்குகளை திறந்து கொடுத்திருக்கீங்களா.. இந்த தையல் மிசின்களை வைச்சு.. அதில் வரும் சேமிப்பில் அவங்களா தாயகத்தை விட்டு வெளிநாடுகளுக்கு நல்ல வேலை பெற்றுச் செல்ல எவ்வளவு காலம் ஆகும்.. இப்படியான விபரங்களை உடனடியாக தாருங்கள். 10 தையல் மிசினுக்கு பங்களிப்பது பற்றி அப்புறம் தீர்மானிக்கிறம்..??!

சும்மா தையல் மிசின் தையல் மிசின் என்று கொண்டு போய் அதை கொடுத்தா அதை வைச்சு.. அதுகள் என்ன செய்யுறது. ஒரு தையல் மிசினை காலால இயக்கவும் சக்தி வேணும். நூல் வேணும்.! இன்னும் தேய்மானங்கள் வந்தால் திருத்த காசு வேணும்.. அப்புறம் தைக்கிற பொருட்களை விற்க.. ஓடர் எடுக்க.. என்று அதுகளை அலையனும்.. சும்மா தையல் மிசினை கொடுத்தமா.. நம்ம கடமை முடிஞ்சுதா.. அதுதான் காசு கொடுத்தமா.. ஏ கே எழும்பி நின்று அடிபடுமாம்.. என்று கனவு கண்டது போல.. உதுகளையும் கனவுத் தொழிற்சாலையில் கொண்டு போய் வைத்துவிட்டு நீங்கள் இணையத்தில படம் போட்டு நிம்மதி ஆகிடுவியள். பாவம் தையல் மிசினை வாங்கினதுகள்.. பாட்சா படத்தில ரஜனி ஒரு பாடல் முடிய முதல் பணக்காரர் ஆன கணக்கா.. கனவு கண்டுவிட்டு கண்ணீரை தொடச்சுக்க வேண்டியது தான்..!

அதிலும்.. உந்தக் காசுகளைச் சேர்த்து.. ஒரு வங்கிக் கணக்கை திறந்து.. அதில இருந்து மாதாந்தம் ஒரு வட்டி வாற வகைக்கு.. (இலங்கை வர்த்த வங்கியில் நல்ல வட்டிவீதம் கொடுக்கினம்) அதில போட்டு வைச்சீங்கன்னா.. அதுகளுக்கு பின்னாடியும் உதவும்.. வேறு தேவைகள் வந்தா அதைப் பயன்படுத்தவும் முடியும்..! தையல் மிசினை வைச்சு என்ன தூசா தட்டுறது..! :):icon_idea:

நீங்கள் கேட்டிருக்கிற வரவு செலவு மீதி மிச்சம் சேமிப்பு செரிமானம் எல்லாத்தையும் கணக்கிட்டுத்தான் சொல்லீனம் பிள்ளையள் நெடுக்கண்ணாவை உதவச்சொல்லி. (நெடுக்கண்ணா என்ற உரிமை நான் இல்லை. நீங்கள் உசிரைக்குடுத்து உதசிரா நேசிக்கிற தலைவர் வளர்த்த பிள்ளைகள் உங்களை உரிமையோடு நெடுக்காண்ணாட்டை கேட்டு 10மெசின் வாங்கித்தரச்சொல்லிக் கேட்கினம்)

நீங்க எந்த உலகத்தில இருக்கிறியளோ தெரியாது. இந்தப்பிள்ளைகள் கேட்டிருக்கிற தையல் மெசின் எலெக்றிக் மெசின் 32வகையான தையல் வேலைப்பாடு ஆடைகளை அழகுபடுத்தல் போன்ற எல்லாத்தையும் கொண்ட மெசின்.

மற்றும் பழுதாப்போடுமெண்டு அழாதையுங்கோ. அதைத்திருத்திற நுட்பத்தையும் பழகியிருக்கிற பிள்ளைகளப்பா இந்த நெடுக்கண்ணாட்டை உதவி கேட்கிற 10பெண்களும்.

உதவி செய்யிறவை நாங்க தாறதை சேமிச்சு வைச்சு வட்டி வீதம் பாக்கச் சொல்லி உதவுறேல்ல.

2012இல் அண்ணல் ஆனந்தசங்கரியின் அறிக்கைப்போரை முறியடித்த தம்பி நெடுக்ஸ் மாவீரன் என்றொரு பட்டத்தை வழங்கமாறு யாழ்களகளமாழுமன்றத்தை வேண்டுகிறேன்.

10மெசின் தருவியளோ ? இல்லையா ?

Link to comment
Share on other sites

இருந்தால் ஏன் உங்களிடம் கேட்கின்றோம் :rolleyes: அவர்கள் பாவப்பட்ட ஜென்மங்களல்ல நாட்டுக்காகப் போராடிய பெண் போராளிகள்!

நெடுக்கண்ணா இப்பிடியே எழுதிக்கொண்டே போவார் அலைமகள் ஆனால் நடக்காத நடைமுறைக்கு சரிவராத ஆலோசனைகளைத்தன் அள்ளியள்ளிக் குவிப்பார்.

தன்னையொரு தேசியவாதியாக நம்ப வைக்க இப்படி நடிக்கிறதே இவரோடை பணி. இதனை பல வருசமா நாங்கள் யாழில பாக்கிறம் தங்கைச்சி. இடைக்கிடை தம்பியைச் சீண்டிவிடுங்கோ அறிக்கையாய் எழுதிக் கொண்டிருப்பார். தன்ரை ஆலோசனைகள் நடைமுறைக்கு வராதெண்டு தெரியும். என்னேயிறது இலவச ஸ்ரூடன்ற் விசாவின் காலத்தை நீட்ட யூனியில காய வேண்டிய நிலமையை சமாளிக்க இப்பிடித்தான் புலம்புவார் உதையெல்லாம் கண்டுக்காதையுங்கோ. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்டிருக்கிற வரவு செலவு மீதி மிச்சம் சேமிப்பு செரிமானம் எல்லாத்தையும் கணக்கிட்டுத்தான் சொல்லீனம் பிள்ளையள் நெடுக்கண்ணாவை உதவச்சொல்லி. (நெடுக்கண்ணா என்ற உரிமை நான் இல்லை. நீங்கள் உசிரைக்குடுத்து உதசிரா நேசிக்கிற தலைவர் வளர்த்த பிள்ளைகள் உங்களை உரிமையோடு நெடுக்காண்ணாட்டை கேட்டு 10மெசின் வாங்கித்தரச்சொல்லிக் கேட்கினம்)

நீங்க எந்த உலகத்தில இருக்கிறியளோ தெரியாது. இந்தப்பிள்ளைகள் கேட்டிருக்கிற தையல் மெசின் எலெக்றிக் மெசின் 32வகையான தையல் வேலைப்பாடு ஆடைகளை அழகுபடுத்தல் போன்ற எல்லாத்தையும் கொண்ட மெசின்.

மற்றும் பழுதாப்போடுமெண்டு அழாதையுங்கோ. அதைத்திருத்திற நுட்பத்தையும் பழகியிருக்கிற பிள்ளைகளப்பா இந்த நெடுக்கண்ணாட்டை உதவி கேட்கிற 10பெண்களும்.

உதவி செய்யிறவை நாங்க தாறதை சேமிச்சு வைச்சு வட்டி வீதம் பாக்கச் சொல்லி உதவுறேல்ல.

2012இல் அண்ணல் ஆனந்தசங்கரியின் அறிக்கைப்போரை முறியடித்த தம்பி நெடுக்ஸ் மாவீரன் என்றொரு பட்டத்தை வழங்கமாறு யாழ்களகளமாழுமன்றத்தை வேண்டுகிறேன்.

10மெசின் தருவியளோ ? இல்லையா ?

நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் சடைய வேண்டாம்.

அட எலக்ரிசிற்றி மிசினே வேணும். ஊருக்க ஒழுங்கா கரண்ட் வருதோ. கரண்டு பில்லுக் கட்ட அதுவும் மிசினோட சேர்த்துக் கொடுக்கனுமோ இல்லையோ..!

இதிலும் 10 மிசினை வைச்சு உவங்கள் சிங்ளவங்கள் நடத்திற மாதிரி.. ஒரு ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கலாமே.. நேசக்கரத்துக்கும் வருமானமாயிடும்.. தங்கச்சிமாருக்கு வாழ்வும் ஆகிடும்.

ஒன்றில மட்டும் குறியா நிக்கிறீங்க.. 10 மிசினோட.. தங்கச்சிகளின் வாழ்வை மீட்டம் என்று கதை.. கவிதை.. எழுதப் போறீங்க போல...! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா இப்பிடியே எழுதிக்கொண்டே போவார் அலைமகள் ஆனால் நடக்காத நடைமுறைக்கு சரிவராத ஆலோசனைகளைத்தன் அள்ளியள்ளிக் குவிப்பார்.

தன்னையொரு தேசியவாதியாக நம்ப வைக்க இப்படி நடிக்கிறதே இவரோடை பணி. இதனை பல வருசமா நாங்கள் யாழில பாக்கிறம் தங்கைச்சி. இடைக்கிடை தம்பியைச் சீண்டிவிடுங்கோ அறிக்கையாய் எழுதிக் கொண்டிருப்பார். தன்ரை ஆலோசனைகள் நடைமுறைக்கு வராதெண்டு தெரியும். என்னேயிறது இலவச ஸ்ரூடன்ற் விசாவின் காலத்தை நீட்ட யூனியில காய வேண்டிய நிலமையை சமாளிக்க இப்பிடித்தான் புலம்புவார் உதையெல்லாம் கண்டுக்காதையுங்கோ. :icon_idea:

அக்கோய் உங்கள் அளவிற்கு எல்லாம் நாங்கள் தமிழ் தேசியவாதிகளின்னு சொல்லிக்க வேண்டிய ஆட்களில்ல. நாங்கள் சாதாரண மக்கள். எங்கள் உணர்வுகளை மட்டுமே வெளியிடுறம். உங்களைப் போல.. ஐரோப்பாவில.. வானொலிக்கு சண்டை.. நேசக்கரத்துக்கு சண்டை.. பெண்ணியத்துக்கு சண்டை.. புலி ஆதரவுக்கு சண்டை இப்படி எல்லாம் நாங்கள் போடுறது கிடையாது. நான் அறிய நீங்கள் போட்ட சண்டைகள் பல. வேணுன்னா பழைய யாழைத் திறவுங்கோ எல்லாம் புட்டுக்கிட்டு வரும்.

நீங்கள் தானே வந்து எனக்கு ஸுருடண்ட் விசாவை இலவசமா எடுத்துத் தந்துகிட்டு இருக்கீங்க. ஏன் அதை உங்க தங்கச்சிகளுக்கு எடுத்துக் கொடுக்கக் கூடாது. அதுகளும் வந்து நம்மளப் போல காயுங்கள் தானே..! எங்களால பொய் சொல்லி ஊரை ஏய்க்க முடியல்ல.. தாயகத்தின் துயரை வைச்சு எங்களை வளப்படுத்திக் கொண்டு.. அடுத்தவனுக்கு கிள்ளிப் போடுற சேவை செய்யுறதில்ல எங்கட நோக்கம். எங்கட இலக்கு நோக்கி நாங்க போய்க்கிட்டு இருக்கமே தவிர.. கருவாடா காயுற அளவிற்கு நாங்க ஒன்றும்.. ஊரில காய்ஞ்சு போட்டு இங்க வரல்ல அக்கோய். ஒருவேளை நீங்கள் அப்படியோ என்னவோ தெரியல்ல. நீங்கள் தனிநபர் தாக்குதலை ஆரம்பிச்சிருக்கீங்க. அதற்கு முதலாவது பதிலடி இது. உங்களுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு யார் வந்து இதைத் தொடர்ந்தாலும்... நிறைய இருக்கு வரும்..! இது தலைப்பின் போக்கை நிச்சயம் மாற்றும். இதனால் ஒரு பெனிக்கும் பிரயோசனம் வரப் போறதில்ல. ! கொஞ்சம் முன்னாடி ஒரு மிசின் வாங்க எண்டாலும் உதவும் எண்டு நினைச்சன். இந்தப் பதிவைப் படிச்சப் பிறகு அந்த எண்ணத்தை முற்றாக மாற்றி.. ஒரு மிசின் வாங்கக் கூட நான் உங்களுக்கு உதவப் போறதும் இல்ல..!

நீங்களும் உங்கட சில கூட்டுகளும் செய்யும் பக்குவற்ற புத்திசாலித்தனமற்ற இப்படியான கருத்துக்களால் தான் நேசக்கரத்திற்கான பங்களிப்புகளுக்கும் கெஞ்சிக் கொண்டு திரிய வேண்டிய சூழலை ஏற்படுத்தி இருக்கீங்க. அதை உணருங்க.. தங்கச்சிகளின் வாழ்வு தன்பாட்டில வளமாகும். :):icon_idea:

Link to comment
Share on other sites

நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் சடைய வேண்டாம்.

பதில் கனதரம் தந்தாச்சு தம்பி நீங்கள் விளங்காதமாதிரி நிக்கிறயள். நீங்களே கேள்வி நீங்களே பதில். இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் தர எனது அறிவுக்கு தெரியவில்லை.

வேணுன்னா பழைய யாழைத் திறவுங்கோ எல்லாம் புட்டுக்கிட்டு வரும்.

அதைத் திறக்கத்தேவையில்லை பழைய களம் இப்பவும் பூட்டாமல் திறந்துதான் மோகன் வைச்சிருக்கிறார். வளமையான சளாப்பல் இதிலையும் நெடுக்குத் தம்பியின் வீரம். இலவச ஸ்ரூடன்ற் வீசாவுக்கெ இந்த வீரமெண்டா ???

கொஞ்சம் முன்னாடி ஒரு மிசின் வாங்க எண்டாலும் உதவும் எண்டு நினைச்சன். இந்தப் பதிவைப் படிச்சப் பிறகு அந்த எண்ணத்தை முற்றாக மாற்றி.. ஒரு மிசின் வாங்கக் கூட நான் உங்களுக்கு உதவப் போறதும் இல்ல..!

பாத்தீங்களோ திரும்பவும் சளாப்பல். :icon_idea: மிசின் என்னத்தை குடுக்குமென்றியள் பிறகு ஒரு மிசினெண்டாலும் குடுக்க யோசிச்சமெண்றியள் இதென்ன தம்பி தியறி பிழைக்குது.

நெடுக்கண்ணாவின் உதவிக்காக தங்கைகள் காத்திருக்கினம் அது மட்டும் உண்மை. :icon_idea:

எங்களால பொய் சொல்லி ஊரை ஏய்க்க முடியல்ல.. தாயகத்தின் துயரை வைச்சு எங்களை வளப்படுத்திக் கொண்டு.. அடுத்தவனுக்கு கிள்ளிப் போடுற சேவை செய்யுறதில்ல எங்கட நோக்கம். எங்கட இலக்கு நோக்கி நாங்க போய்க்கிட்டு இருக்கமே தவிர.. கருவாடா காயுற அளவிற்கு நாங்க ஒன்றும்.. ஊரில காய்ஞ்சு போட்டு இங்க வரல்ல அக்கோய்.

ஓம் தம்பி நீங்கள் காயாத பச்சையம் மிக்க புத்திசாலிப் பையன். இதையொருக்காலும் நான் மறுக்கேல்ல.

தாயகத்தின் துயரை வைச்சு நாம் எல்லாரும் வளமாயிருக்கிறமெண்டு நோகிற தேசியப்புதல்வன் நீங்கள் போய் தாயகத்தில உங்கள் ஆலோசனைகளால் நாட்டை க(த)ட்டியெழுப்புங்கோ.

உங்கடை இலக்கை நீங்கள் அடையிறீங்கள் அதில சந்தேகமேயில்லை. ஏனெண்டா ? வேண்டாம் சுயதணிக்கை.*****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் கனதரம் தந்தாச்சு தம்பி நீங்கள் விளங்காதமாதிரி நிக்கிறயள். நீங்களே கேள்வி நீங்களே பதில். இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் தர எனது அறிவுக்கு தெரியவில்லை.

எங்க பதில் தந்திருக்கீங்க. போடுற காசு எப்படி மீளும்.. அதனால் அந்தப் பிள்ளைகளின் வறுமை எப்படித் தீரும்.. ஏன் கே பியும் மிசின் தான் வாங்கிக் கொடுக்கிறார்.. நீங்களும் அதுதான் செய்யப் போறம் என்றியள். அதேன் சிங்களவன் மட்டும் இலட்சம் இலட்சமா ஆமிக்காரன்ர பெயரில வங்கியில வைப்பு வைக்கிறான். அதையேன் நீங்கள் செய்ய மாட்டன் என்று நிக்கிறியள். போதிய விளம்பரம் வராது என்றோ..??!

அதைத் திறக்கத்தேவையில்லை பழைய களம் இப்பவும் பூட்டாமல் திறந்துதான் மோகன் வைச்சிருக்கிறார். வளமையான சளாப்பல் இதிலையும் நெடுக்குத் தம்பியின் வீரம். இலவச ஸ்ரூடன்ற் வீசாவுக்கெ இந்த வீரமெண்டா ???

களம் இணைக்கப்பட்டிருந்தாலும்.. சாப்டர் திறக்காம அதுகள் எல்லாம் இங்க வராது. உள்ள பொய் புரட்டு எல்லாம் செய்து.. உலகத்தை ஏமாற்றி.. அசைலம் அடைச்சு சொந்த இனத்தை காட்டிக் கொடுத்து பிழைக்கிறதிலும்.. கொலசிப்பிப் ஸ்ருடண்ட் விசா எவ்வளவோ திறம். முடிஞ்சா நீங்கள் ஒரு ஸ்கொலசிப் எடுத்துக் கொடுக்கோ பார்ப்பம். அடுத்தவனட்ட கெஞ்சிக் கூத்தாடி.. வயிறு வளர்க்கிறத நாகரிக்கத்தை.. வளர்க்காம..!

பாத்தீங்களோ திரும்பவும் சளாப்பல். :icon_idea: மிசின் என்னத்தை குடுக்குமென்றியள் பிறகு ஒரு மிசினெண்டாலும் குடுக்க யோசிச்சமெண்றியள் இதென்ன தம்பி தியறி பிழைக்குது.

கெஞ்சிக் கூத்தாடினீங்க.. அதற்காக கொடுக்க முன் வந்தமே தவிர.. மிசினால அந்த தங்கச்சிகளில் வாழ்வு வளமாகிடும் என்று நாங்கள் எப்பவும் நம்பேல்ல..!

நெடுக்கண்ணாவின் உதவிக்காக தங்கைகள் காத்திருக்கினம் அது மட்டும் உண்மை. :icon_idea:

தங்கச்சிமார் உங்களைப் போல ஆக்களை நம்பிச்சினமோ.. நடு வீதி தான்..! இந்தப் பதிவுகளையும் உங்க தங்கச்சிமார் பார்க்க ஏற்பாடு செய்யுங்கோ. எங்களோட நேர வந்து யாழில கதைக்கச் சொல்லுங்கோ. நீங்கள் சொல்லுற படிதான் அவை சொல்லி விட்டவையோ எண்டு அறியாமல் எதையும் உறுதி செய்ய முடியாமல் இருக்கு. அந்தளவுக்கு உங்களில இப்ப எல்லாம் நம்பிக்கை இல்ல..!

உங்கடை இலக்கை நீங்கள் அடையிறீங்கள் அதில சந்தேகமேயில்லை. ஏனெண்டா ? வேண்டாம் சுயதணிக்கை.*****

என்ன சுயதணிக்கை.. அதுக்கு மேல எதுவும் தெரியாம என்னத்தை வெட்டி விழுத்திறது. கற்பனையை தான் வெட்டி விழுத்தனும். உங்கட கற்பனைகள் எனக்கு எப்பவுமே பொருந்தி வாறதில்ல. அதனால நடையக் கட்டுங்கோ. உங்கட கற்பனைக்கு பயப்பிடுறதிற்கு.. வேற ஆளைப் பாருங்கோ..! நம்கிட்ட வேண்டாம். அப்புறம் நாங்கள் நிறைய சுயதணிக்கைகளை போட வேண்டி வரும். :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

வீட்டில் மனிசன் பிள்ளையளை ஒழுங்காய் பார்ப்தை விட்டிட்டு உவாக்கு தேவையில்லாத வேலை நெடுக்கு உங்களிற்கு ஒரு பச்சை +

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணா எல்லாரும் வெளிநாட்டுக்கு வந்திட்டால் யாடுக்கண்ணை வேணும் தமிழீழம்? எதுக்கு சிங்களவனை குடியேத்துறான் அது இது என்று சவுண்டு விடுறிங்கள்?

அப்போது அகதியாக புலம்பெயர் தமிழரை குடிபெயர வைத்து பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருந்தால் இலங்கை அரசும் அதை கனகச்சிதமாக செய்தது.. இப்போ அப்படி செய்யுமா? அதுவும் இறுதிப்போர் நடைபெற்ற பகுதிகளில் இருந்த மக்கள்,முன்னாள் போராளிகளை வெளியவிட்டு(போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியே கசிந்துவிடும் என்று) தன் தலைக்கே மண்ணள்ளி போடும் முட்டாள் தனத்தை சிங்கள் அரசு செய்யுமா? எல்லாரும் கட்டுநாயக்கா தாண்டி தானே வரவேணும்?

அதை விட மேற்குலகில் மாணவர் விசாவில்.,அல்லது வேலை விசாவில் வர என்ன என்ன தகுதி வேண்டும் என்று தெரியும் தானே?

மத்தியகிழக்கு நாடுகளில் இருக்கிறவர்கள் எல்லாரும் கொழுத்த வசதியான ஆக்களா இருக்கினமோ?

தையல் மெசின் வாங்கவோ போராடப்போனவை என்று கேட்கும் நீங்கள் அப்போ வெளிநாடு போய் வசதியா வாழவேணும் என்று நினைச்சோ போராடப்போனவை என்று கேட்டால் எவ்வளவு அபத்தம் என்பதை புரிந்துகொண்டீர்களா?

சொந்த இனத்திடம் உதவி கேட்பதில் தவறில்லை அப்படி ஒரு உதவி கிடைக்காது விடின் அவர்கள் சிங்களத்தின் காலில் விழுவது நடைபெறாது என்பதையும் எதிர்பார்க்க முடியாது தானே. விரைவில் அது நடந்தாலும் நடக்கும்.

தையல் மெசினை வச்சு முன்னேறாத ஆக்களும் இருக்கினம், தையல் மெசினை வச்சு தனது பொண்ணுக்கு சீதனம் குடுத்து நல்லாக திருமணம் செய்து வச்ச தாயையும் கண்டிருக்கிறேன். அதது அவரவரின் திறமை,முயற்சியிலேயே தங்கியுள்ளது.

யாராவது அப்படி இவர்களுக்கு பணம் கொடுப்பேன் என்றால் சொல்லுங்கள்

ஒருவர் அல்லது இருவருக்காவது இத்தாலிக்கு வர வேர்க் பொமிற் க்கு கதைக்கிறேன்.

Link to comment
Share on other sites

வேற ஆளைப் பாருங்கோ..! நம்கிட்ட வேண்டாம். அப்புறம் நாங்கள் நிறைய சுயதணிக்கைகளை போட வேண்டி வரும். :lol::D:icon_idea:

இதென்னடா கோதாரி உங்களை எப்ப பாத்தனான் ? உங்களிட்டை என்னத்தை தாவெண்டு நான் கேட் நீங்கள் தந்து..... :icon_idea: அதானே பாக்கிறம் பறந்தடிச்சு சுயதணிக்கை எப்பிடி செய்யிறியளெண்டு. :lol:

10 தையல் மெசின் ??? நெடுக்கு அண்ணாவை எதிர்பார்த்தபடி தங்கைகள் இருக்கினம். :icon_idea: :icon_idea: :icon_idea:

எல்லாரும் வெளிநாட்டுக்கு வந்திட்டால் யாடுக்கண்ணை வேணும் தமிழீழம்?

இலவச ஸ்ரூடன்ற் வீசாவில வந்த நாங்கள் போய் ஆளத்தான வேறயாருக்கு ஜீவா ?

மத்தியகிழக்கு நாடுகளில் இருக்கிறவர்கள் எல்லாரும் கொழுத்த வசதியான ஆக்களா இருக்கினமோ?

தையல் மெசின் வாங்கவோ போராடப்போனவை என்று கேட்கும் நீங்கள் அப்போ வெளிநாடு போய் வசதியா வாழவேணும் என்று நினைச்சோ போராடப்போனவை என்று கேட்டால் எவ்வளவு அபத்தம் என்பதை புரிந்துகொண்டீர்களா?

தம்பி ஜீவா உங்களுக்கு ஆயிரம் பச்சைப்புள்ளி போட வேணும்.

யதார்த்தத்தை புரிந்துள்ள உங்களுக்கும் தியறியை மட்டும் படிச்சு பரீட்சையில வெண்டவைக்கும் வித்தியாசம் தான்.

தையல் மெசினை வச்சு முன்னேறாத ஆக்களும் இருக்கினம், தையல் மெசினை வச்சு தனது பொண்ணுக்கு சீதனம் குடுத்து நல்லாக திருமணம் செய்து வச்ச தாயையும் கண்டிருக்கிறேன். அதது அவரவரின் திறமை,முயற்சியிலேயே தங்கியுள்ளது.

ஆயிரமாயிரம் பச்சையிந்த வரிகளுக்கு ஜீவா. உடனும் பறக்க முடியாது ஒரு ஊன்றுதடி தாங்கோண்டு கையேந்திறவையாலை படிப்படியாய் தான் முன்னேற முடியும். அந்த உண்மை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் பரியும்.

Link to comment
Share on other sites

யாராவது அப்படி இவர்களுக்கு பணம் கொடுப்பேன் என்றால் சொல்லுங்கள்

ஒருவர் அல்லது இருவருக்காவது இத்தாலிக்கு வர வேர்க் பொமிற் க்கு கதைக்கிறேன்.

பணம் கொடுக்க ஏலாது ஜீவா இலவச ஆலோசனையெண்டா கேளுங்கோ.

ஒரு ஊன்றுதடி குடுக்க முடியாமல் இருக்கிறம் இதில எப்பிடித் தம்பி இத்தாலிக்கு ?

Link to comment
Share on other sites

இதென்னடா கோதாரி உங்களை எப்ப பாத்தனான் ? உங்களிட்டை என்னத்தை தாவெண்டு நான் கேட் நீங்கள் தந்து..... :icon_idea: அதானே பாக்கிறம் பறந்தடிச்சு சுயதணிக்கை எப்பிடி செய்யிறியளெண்டு. :lol:

10 தையல் மெசின் ??? நெடுக்கு அண்ணாவை எதிர்பார்த்தபடி தங்கைகள் இருக்கினம். :icon_idea: :icon_idea: :icon_idea:

இலவச ஸ்ரூடன்ற் வீசாவில வந்த நாங்கள் போய் ஆளத்தான வேறயாருக்கு ஜீவா ?

தம்பி ஜீவா உங்களுக்கு ஆயிரம் பச்சைப்புள்ளி போட வேணும்.

யதார்த்தத்தை புரிந்துள்ள உங்களுக்கும் தியறியை மட்டும் படிச்சு பரீட்சையில வெண்டவைக்கும் வித்தியாசம் தான்.

ஆயிரமாயிரம் பச்சையிந்த வரிகளுக்கு ஜீவா. உடனும் பறக்க முடியாது ஒரு ஊன்றுதடி தாங்கோண்டு கையேந்திறவையாலை படிப்படியாய் தான் முன்னேற முடியும். அந்த உண்மை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் பரியும்.

நெடுக்குத்தம்பி என்னமாதிரி ஒரு தையல் மெசின் தருவியள் தானே....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் மூலம் உதவுவதில் நெடுக்ஸ்சுக்கு விருப்பமில்லா விட்டால் இந்த திரியில் வந்து உதவி செய்வதைப் பற்றி கருத்து எழுதி இருக்க கூடாது...நேசக் கரத்தின் செயற்பாடுகள் பிடிக்கவில்லை என்டால் அதை விமர்சிக்க உரிமையுண்டு ஆனால் உதவி என்டு கேட்டு வரும் போது உங்கள் அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை அதனால் கொடுக்க விரும்பவில்லை என எழுதினால் அதில் காரணமுண்டு அதை விடுத்து அப்படி உதவி செய்யலாம்,இப்படி உதவி செய்யலாம் என எழுதியிருக்க கூடாது[இலவசமாக அறிவுரை சொல்லி இருக்க கூடாது.] நிதியுதவி செய்வதா? இல்லையா? என்பதை கள உறவுகள் தீர்மானிக்கட்டும்.

அதே நேரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர்,ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் தரம் கெட்டுப் போய் ஒருவர் தனக்கு உதவி செய்ய விருப்பமில்லை என்று சொன்ன பிறகும் திரும்ப,திரும்ப உதவி செய் என கேட்பதும் அப்பட்டமான அநாகரீகமும்,தனி மனித தாக்குதலுமாகும்...யாழில் உள்ள நெடுக்ஸ் போன்ற ஓர் இருவரை நம்பியா நேச‌க்கர‌த்தை நட‌த்துகிறீர்கள்?...எதற்காக சாஸ்திரி நேச‌க்கர‌த்தை விட்டு விலகினதாக அறிவித்தார் தான் கருத்துக்களத்தில் எழுதும் போது மற்றவர் திருப்பி தாக்கினால் அது நேச‌க்கர‌த்தை பாதிக்கும் என்று தானே! ஆனால் அதையே நீங்கள் செய்யும் போது அது நேச‌க்கர‌த்தை பாதிக்காதா?...சாஸ்திரி என்னவோ எழுதினார் சாந்தி இனி மேல் தேவையற்ற விடையத்தில் கருத்தாட‌ல் செய்ய மாட்டார் என்று ஆனால் நீங்கள் என்னவோ விடுறேனா பார் என நிற்கிறீங்கள்...உங்களுக்கே தெரிந்திருக்கும் முந்தி எத்தனை பேர் யாழ் மூலம் உதவி செய்தார்கள் தற்போது எத்தனை பேர் உதவி செய்கிறார்கள் என இப்படியே போய் கொண்டு இருங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

Link to comment
Share on other sites

ரதி,

நீங்கள் தவறாக விளங்கீட்டிங்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுநாதர் அதுதான் தட்டிக்கொண்டிருக்கிறேன் நெடுக்குத் தம்பி கட்டாயம் கண்திறப்பார். அதுதூன் தொடர் முயற்சி.

முன்னரை விடவும் யாழின் மூலம்தான் ரதி உதவிகள் அதிகமாக செய்கிறார்கள். ஒவ்வொன்றாக எழுதாமல் அதுதான் கணக்கறிக்கையில் போடுகிறோம். நீங்கள் கணக்கறிக்கையை பார்த்தால் புரியும்.

நெடுக்குத் தம்பியிடமிருந்து ஒரு தையல் மெசின் கிடைக்குமெண்ட நம்பிக்கை எனக்கிருக்கு. :lol:

Link to comment
Share on other sites

மொத்தத்தில் ............. பாவம் அந்த மக்கள்! இன்றுவரைக்கும் அவர்களுக்குத் தேவைப்பட்ட "வணங்காமண்" உதவிகள் சென்றடையவில்லை.

ஒரு துளியேனும் உதவியைச் செய்துவிட்டு...... விமர்சனங்கள் முன்வைக்கவேண்டும்! இல்லையெனில்,

உதவி செய்ய முனைபவர்களை விமர்சிப்பதைத் தன்னும் நிறுத்த வேண்டும்! முறைகேடு நடப்பதாக அறிந்தால் , ஆதரங்களோடு போடுங்கள்!!

அதைவிடுத்து... தயவுசெய்து,வேண்டாமே வீண் பழி சுமத்தல்கள்!!!

யாழ் நிர்வாகத்தின் கவனத்திற்கு:

நம் மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்கள் குறித்து யாழில் கருத்தெழுதுவதை தவிர்க்க ஆவன செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு அவை சம்மந்தமாக எழுதப்படும் கருத்துக்கள் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய உதவிகளைக் குறைக்கும் வல்லமை வாய்ந்தவை!

தங்கள் விருப்பம். இது எனது தாழ்மையான வேண்டுகோள் மாத்திரமே!

நன்றி

அப்படி என்டால் கேபியும் உதவி செய்கிறார் என்று கொஞ்சப் பேர் அவருக்கு சார்பாக பதிவுகள் கொண்டு வந்து இணைக்கிறார்கள் அவர்களையும் விமர்சிக்காமல் தவிர்க்கலாமே கவிதை அவர்களும் உதவி தானே செய்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையல் மெசினை வச்சு முன்னேறாத ஆக்களும் இருக்கினம், தையல் மெசினை வச்சு தனது பொண்ணுக்கு சீதனம் குடுத்து நல்லாக திருமணம் செய்து வச்ச தாயையும் கண்டிருக்கிறேன். அதது அவரவரின் திறமை,முயற்சியிலேயே தங்கியுள்ளது.

யாராவது அப்படி இவர்களுக்கு பணம் கொடுப்பேன் என்றால் சொல்லுங்கள்

ஒருவர் அல்லது இருவருக்காவது இத்தாலிக்கு வர வேர்க் பொமிற் க்கு கதைக்கிறேன்.

நீங்கள் கண்டதைப் போல நானும் கண்டிருக்கிறேன்.. தையல் மிசினை வைச்சு போதிய அளவிற்கு உழைக்க முடியாமல்.. குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல்... தனக்குத் தானே தீயிட்டு மாண்டு போன ஒரு தாய். யாழ் நகரில்.. கைலாசப் பிள்ளையார் கோவிலடியில் கோவில் வீதியில் நடந்த சம்பவம் இது. பின்னர் அந்தக் குடும்பத்திற்கு பாடசாலை ரோன்ரறிக் கழகம் மூலம் உதவி செய்த ஞாபகம் இருக்கிறது.

இங்கு நீங்கள் சிலர் எழுதுவது போன்ற நிலை தாயகத்தில் இல்லை. ஒரு தையல் மிசினை வைச்சுக் கொண்டு போதிய வருவாய் ஈட்டக் கூடிய நிலை அங்கில்லை. அதுவும் தைத்த ஆடைகள் மலிவாக கிடைக்கும் நிலையில்.. யார் உடுப்புத் தைக்கப் போகினம்..!

ஒரு தையல் மிசினுக்கு ஆகும் செலவை வங்கியில் வைப்புச் செய்து கொடுத்தால் சூழ் நிலைக்கு ஏற்ப அவர்கள் அந்தப் பணத்தை சேமிக்க.. வேறு தொழில்வாய்ப்புக்களுக்கு முதலீடாக்க முடியும் தானே. அதை இட்டு ஏன் சிந்திக்கிறீர்கள் இல்லை..???!

மத்திய கிழக்கிற்கு போனவர்களில் எத்தனை சதவீதம் பேர் கஸ்டப்படுகினம். அதேவேளை தையல் மிசினை வைச்சுக் கொண்டு எத்தினை சதவீதம் பேர் பெரிய பணக்காரர் ஆகி இருக்கினம்..???! ஒருவேளை உணவிற்கே வழியின்றி உள்ள குடும்பங்களே அதிகம். ஏழைகள் என்பதால் அவர்களுக்கு ஒரு தையல் மிசினோடு.. வாழ்க்கை அமைக்கலாம் என்று சொல்லுறீங்களே.. இதையே உங்கள் அக்கா தங்கைக்கு என்று ஏற்பாடு செய்து கொடுப்பீர்களா...??! நிச்சயமாக இல்லை.

என்னைப் பொறுத்த வரை நான் சாரணிய இயக்கத்தில்.. லியோவில.. றோற்றியில் இருந்து போர் சமாதானம் இரண்டு காலத்திலும் மக்களுக்கு சிறிய சிறிய உதவிகளை என் பள்ளிக் காலத்திலும் செய்திருக்கிறேன். மக்களின் நேரடி துன்பங்களை வறுமைகளை செருப்பின்றி பள்ளிக்கு போகும் குழந்தைகளை.. பாடசாலை சீருடை தோய்க்க சவர்காரம் வாங்க முடியாத.. ஏன் படிக்க மண்ணெண்ணை வாங்க முடியாத எத்தனையோ குடும்பங்களை எங்கள் பள்ளிக் காலத்தில் கண்டிருக்கிறோம். வறுமை.. பொருண்மிய தடைகள் மத்தியில்.. சர்வதேச செஞ்சிலுவையின் வீதி விளக்கில் படித்த மாணவ நண்பர்களையும் எமக்குத் தெரியும்.

நாங்கள் யதார்த்ததிற்கு அப்பால் நின்று இதைச் செய்யுங்கோ அதைச் செய்யுங்கோ என்று சொல்லவில்லை. பிரச்சனை வெளிநாட்டில் உள்ளவைக்கு தாயக நிலைமைகளை சரிவர கணிப்பிட்டு செயற்பட முடியாத தன்மை மிகுந்து கிடப்பது தான். இதில் இருந்து நீங்கள் வெளிவராமல் உங்களோடு கருத்துப் பகிர்ந்து ஒரு பிரயோசனமும் இல்ல. படிச்ச நீங்களே முரண்டு பிடிக்கும் போது மற்றவர்கள்..???!

நேசக்கரம் மூலம் உதவுவதில் நெடுக்ஸ்சுக்கு விருப்பமில்லா விட்டால் இந்த திரியில் வந்து உதவி செய்வதைப் பற்றி கருத்து எழுதி இருக்க கூடாது...நேசக் கரத்தின் செயற்பாடுகள் பிடிக்கவில்லை என்டால் அதை விமர்சிக்க உரிமையுண்டு ஆனால் உதவி என்டு கேட்டு வரும் போது உங்கள் அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை அதனால் கொடுக்க விரும்பவில்லை என எழுதினால் அதில் காரணமுண்டு அதை விடுத்து அப்படி உதவி செய்யலாம்,இப்படி உதவி செய்யலாம் என எழுதியிருக்க கூடாது[இலவசமாக அறிவுரை சொல்லி இருக்க கூடாது.] நிதியுதவி செய்வதா? இல்லையா? என்பதை கள உறவுகள் தீர்மானிக்கட்டும்.

அதே நேரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துபவர்,ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் தரம் கெட்டுப் போய் ஒருவர் தனக்கு உதவி செய்ய விருப்பமில்லை என்று சொன்ன பிறகும் திரும்ப,திரும்ப உதவி செய் என கேட்பதும் அப்பட்டமான அநாகரீகமும்,தனி மனித தாக்குதலுமாகும்...யாழில் உள்ள நெடுக்ஸ் போன்ற ஓர் இருவரை நம்பியா நேச‌க்கர‌த்தை நட‌த்துகிறீர்கள்?...எதற்காக சாஸ்திரி நேச‌க்கர‌த்தை விட்டு விலகினதாக அறிவித்தார் தான் கருத்துக்களத்தில் எழுதும் போது மற்றவர் திருப்பி தாக்கினால் அது நேச‌க்கர‌த்தை பாதிக்கும் என்று தானே! ஆனால் அதையே நீங்கள் செய்யும் போது அது நேச‌க்கர‌த்தை பாதிக்காதா?...சாஸ்திரி என்னவோ எழுதினார் சாந்தி இனி மேல் தேவையற்ற விடையத்தில் கருத்தாட‌ல் செய்ய மாட்டார் என்று ஆனால் நீங்கள் என்னவோ விடுறேனா பார் என நிற்கிறீங்கள்...உங்களுக்கே தெரிந்திருக்கும் முந்தி எத்தனை பேர் யாழ் மூலம் உதவி செய்தார்கள் தற்போது எத்தனை பேர் உதவி செய்கிறார்கள் என இப்படியே போய் கொண்டு இருங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இந்த இடத்தில் ரதி அக்காவின் கருத்துக்களோடு நிறையவே உடன்பட முடிகிறது. அந்த வகையில் எனது தையல் மிசினை காட்டி ஏழை மக்களை ஏழ்மையின் மடியில் கிடத்தி வைக்க நான் யாருக்கும் உதவி செய்யமாட்டேன். அதிலும் மாதாந்தம் 50 பவுண்களை வழங்கி.. உதவி அற்றவர்களை பராமரிக்கும்.. ஆட்களோடு இணைந்து தற்போது போல.. அந்த உதவியை தொடர்ந்து செயற்படுத்துவதை செய்வேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

அப்படி என்டால் கேபியும் உதவி செய்கிறார் என்று கொஞ்சப் பேர் அவருக்கு சார்பாக பதிவுகள் கொண்டு வந்து இணைக்கிறார்கள் அவர்களையும் விமர்சிக்காமல் தவிர்க்கலாமே கவிதை அவர்களும் உதவி தானே செய்கிறார்கள்

எனது கருத்தினை மீண்டுமொருமுறை வாசியுங்கள். தெளிவாக, பொதுவாக சொல்லியிருக்கின்றேன்.

விமர்சிப்பதில் தப்பில்லை. ஆனால், குறை சொல்லும்போது ஆதாரத்துடன் சொல்லவேண்டும்.

நன்றி ரதி அக்கா! :)

மொத்தத்தில் ............. பாவம் அந்த மக்கள்! இன்றுவரைக்கும் அவர்களுக்குத் தேவைப்பட்ட "வணங்காமண்" உதவிகள் சென்றடையவில்லை.

ஒரு துளியேனும் உதவியைச் செய்துவிட்டு...... விமர்சனங்கள் முன்வைக்கவேண்டும்! இல்லையெனில்,

உதவி செய்ய முனைபவர்களை விமர்சிப்பதைத் தன்னும் நிறுத்த வேண்டும்! முறைகேடு நடப்பதாக அறிந்தால் , ஆதரங்களோடு போடுங்கள்!!

அதைவிடுத்து... தயவுசெய்து,வேண்டாமே வீண் பழி சுமத்தல்கள்!!!

யாழ் நிர்வாகத்தின் கவனத்திற்கு:

நம் மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்கள் குறித்து யாழில் கருத்தெழுதுவதை தவிர்க்க ஆவன செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு அவை சம்மந்தமாக எழுதப்படும் கருத்துக்கள் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய உதவிகளைக் குறைக்கும் வல்லமை வாய்ந்தவை!

தங்கள் விருப்பம். இது எனது தாழ்மையான வேண்டுகோள் மாத்திரமே!

நன்றி

Link to comment
Share on other sites

அதிலும் மாதாந்தம் 50 பவுண்களை வழங்கி.. உதவி அற்றவர்களை பராமரிக்கும்.. ஆட்களோடு இணைந்து தற்போது போல.. அந்த உதவியை தொடர்ந்து செயற்படுத்துவதை செய்வேன்.

நன்றி.

சரி நெடுக்குத்தம்பி நேற்று இன்று 2நாள் உங்களிட்டை ஒரு தையல் மெசின் கேட்டு நீங்களும் இல்லாத பொல்லாத கதையெல்லாம் சொல்லிக் களைச்சிட்டீங்கள்.

போறதுதான் போறீங்கள் தையல் மெசின்தான் தரேல்ல பறவாயில்லை ஒரு நூல்கட்டையெண்டாலும் வாங்கித்தந்திட்டுப் போங்கோ.

தையல் மெசின் தராட்டியும் கட்டாயம் ஒரு நூல்கட்டை தராம நெடுக்குத் தம்பி போகமாட்டாரெண்ட நம்பிக்கையிலதான் இதை எழுதியிருக்கிறேன். இனி உங்கடை விருப்பம்.

ஒரு நூல்கட்டையெண்டாலும் நெடுக்குத்தம்பி ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கண்டதைப் போல நானும் கண்டிருக்கிறேன்.. தையல் மிசினை வைச்சு போதிய அளவிற்கு உழைக்க முடியாமல்.. குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல்... தனக்குத் தானே தீயிட்டு மாண்டு போன ஒரு தாய். யாழ் நகரில்.. கைலாசப் பிள்ளையார் கோவிலடியில் கோவில் வீதியில் நடந்த சம்பவம் இது. பின்னர் அந்தக் குடும்பத்திற்கு பாடசாலை ரோன்ரறிக் கழகம் மூலம் உதவி செய்த ஞாபகம் இருக்கிறது.

இங்கு நீங்கள் சிலர் எழுதுவது போன்ற நிலை தாயகத்தில் இல்லை. ஒரு தையல் மிசினை வைச்சுக் கொண்டு போதிய வருவாய் ஈட்டக் கூடிய நிலை அங்கில்லை. அதுவும் தைத்த ஆடைகள் மலிவாக கிடைக்கும் நிலையில்.. யார் உடுப்புத் தைக்கப் போகினம்..!

ஒரு தையல் மிசினுக்கு ஆகும் செலவை வங்கியில் வைப்புச் செய்து கொடுத்தால் சூழ் நிலைக்கு ஏற்ப அவர்கள் அந்தப் பணத்தை சேமிக்க.. வேறு தொழில்வாய்ப்புக்களுக்கு முதலீடாக்க முடியும் தானே. அதை இட்டு ஏன் சிந்திக்கிறீர்கள் இல்லை..???!

மத்திய கிழக்கிற்கு போனவர்களில் எத்தனை சதவீதம் பேர் கஸ்டப்படுகினம். அதேவேளை தையல் மிசினை வைச்சுக் கொண்டு எத்தினை சதவீதம் பேர் பெரிய பணக்காரர் ஆகி இருக்கினம்..???! ஒருவேளை உணவிற்கே வழியின்றி உள்ள குடும்பங்களே அதிகம். ஏழைகள் என்பதால் அவர்களுக்கு ஒரு தையல் மிசினோடு.. வாழ்க்கை அமைக்கலாம் என்று சொல்லுறீங்களே.. இதையே உங்கள் அக்கா தங்கைக்கு என்று ஏற்பாடு செய்து கொடுப்பீர்களா...??! நிச்சயமாக இல்லை.

என்னைப் பொறுத்த வரை நான் சாரணிய இயக்கத்தில்.. லியோவில.. றோற்றியில் இருந்து போர் சமாதானம் இரண்டு காலத்திலும் மக்களுக்கு சிறிய சிறிய உதவிகளை என் பள்ளிக் காலத்திலும் செய்திருக்கிறேன். மக்களின் நேரடி துன்பங்களை வறுமைகளை செருப்பின்றி பள்ளிக்கு போகும் குழந்தைகளை.. பாடசாலை சீருடை தோய்க்க சவர்காரம் வாங்க முடியாத.. ஏன் படிக்க மண்ணெண்ணை வாங்க முடியாத எத்தனையோ குடும்பங்களை எங்கள் பள்ளிக் காலத்தில் கண்டிருக்கிறோம். வறுமை.. பொருண்மிய தடைகள் மத்தியில்.. சர்வதேச செஞ்சிலுவையின் வீதி விளக்கில் படித்த மாணவ நண்பர்களையும் எமக்குத் தெரியும்.

நாங்கள் யதார்த்ததிற்கு அப்பால் நின்று இதைச் செய்யுங்கோ அதைச் செய்யுங்கோ என்று சொல்லவில்லை. பிரச்சனை வெளிநாட்டில் உள்ளவைக்கு தாயக நிலைமைகளை சரிவர கணிப்பிட்டு செயற்பட முடியாத தன்மை மிகுந்து கிடப்பது தான். இதில் இருந்து நீங்கள் வெளிவராமல் உங்களோடு கருத்துப் பகிர்ந்து ஒரு பிரயோசனமும் இல்ல. படிச்ச நீங்களே முரண்டு பிடிக்கும் போது மற்றவர்கள்..???!

இந்த இடத்தில் ரதி அக்காவின் கருத்துக்களோடு நிறையவே உடன்பட முடிகிறது. அந்த வகையில் எனது தையல் மிசினை காட்டி ஏழை மக்களை ஏழ்மையின் மடியில் கிடத்தி வைக்க நான் யாருக்கும் உதவி செய்யமாட்டேன். அதிலும் மாதாந்தம் 50 பவுண்களை வழங்கி.. உதவி அற்றவர்களை பராமரிக்கும்.. ஆட்களோடு இணைந்து தற்போது போல.. அந்த உதவியை தொடர்ந்து செயற்படுத்துவதை செய்வேன்.

நன்றி.

நெடுக்ஸ் அண்ணா இதிலை உங்களுடன் சண்டை போடுவதோ இல்லை எங்கள் திறமையை காட்ட வேண்டும் என்றோ நான் கருத்து எழுதுவதில்லை. இது நெடுக்ஸ் அண்ணா போன்ற மனநிலையில் இருப்பவர்கள் சிந்திக்கவே தான். நாங்கள் யதார்த்தத்துக்கு அப்பால் நடைமுறைச்சாத்தியம் இல்லாத அல்லது குறைவான விடையங்களை அலசுவதை தவிர்த்து நடைமுறைச்சாத்தியமான விடயங்களையே சிந்திக்க வேண்டும்.20,000 அல்லது 30,000ரூபாவுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? வெளிநாட்டுக்கு அது மத்திய கிழக்கு நாடுகளாக இருந்தால் கூட முன்னாள் போராளிகள்,அல்லாது போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு சாத்தியம் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இலங்கை அரசை தாண்டி அவர்களால் வரமுடியுமா?

அண்மையில் யாழ்மாவட்ட ராணுவத்தளபதி வெளியிட்ட கருத்தை செய்திகளில் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முன்னாள் போராளிகள் இலங்கையை விட்டு வெளியேறமுடியாது என்று கருத்துப்பட அறிக்கை விட்டிருக்கிறார், அதை விட இலங்கை புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் இருக்கிறவர்களால் அவ்வளவு இலகுவில் இலங்கையை விட்டு வெளியேற முடியுமா????

சரி அப்படியானவர்கள் அங்கு தான் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் சுயமாக தொழில் செய்ய எம்மிடம் உதவி கேட்பதில் தப்பில்லை தானே? அதுக்கு தையல் மெசின் தான் குடுக்கவேண்டும் என்று இல்லை ஆனால் அவர்களுக்கு தெரிந்த தொழில் தானே நெடுக்ஸ் அண்ணா செய்ய முடியும்? ஒரு வேளை இது நேசக்கரத்தின் திணிப்பாக இருந்தால் தப்பு தான் அதை விடுத்து அவர்களே விரும்பி நான் தையல் பண்ண மெசின் வேணும் உதவுங்கோ என்று கேட்டால் இதில் நேசக்கரத்தை குற்றம் சாட்டுவது பொறுப்பற்ற செயல் தானே??? வேணும் என்றால் சாந்தி அக்கா இன்னும் கொஞ்சம் தெளிவான கருத்தை கொடுக்கலாம் அல்லது ஒலிப்பதிவை இணைத்தால் தேவையற்ற சந்தேகத்தை தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

நெடுக்ஸ் அண்ணா மறுபடியும் சொல்கிறேன் நான் உங்களை உதவி செய்யவில்லை அல்லது குற்றம் கண்டு பிடிப்பது என் நோக்கமில்லை.

உங்களைப்போல தான் நானும் சாரணர் இல் இருந்து பள்ளிக்கூடத்தில் இருந்த அத்தனையிலும் கலந்து கொண்டவன் இருந்தனான். உதவி செய்ய வேண்டும் என்பது ஏதோ யாழ்களத்துக்கு வந்த பிறகு வந்த ஒன்று இல்லை அண்ணா.

ஊர் கோயில் பிரச்சனையில் இருந்து எதுவாக இருந்தாலும் எதிர்க்க பழகியவன் அதேபோல பாலம்,மதவிலும் இருந்தனான். அதனாலை எல்லாரையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் நினைக்கிறது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எல்லாரும் உதவணும் அவர்களை முன்னேற்ற எல்லாரும் பாடுபடவேணும் என்று தான். உங்களை போல அறிவாளிகள் எல்லாரும் வெளிய நிக்கிறதை விட நல்ல ஜடியாக்களை எமது சமூகத்துக்காக தரவேண்டும் என்றே தவிர யதார்த்தத்துக்கு புறம்பான தேவையற்ற கருத்துக்களையும் யாரும் ஒரு சிலர் மேல் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்திற்கு போற உதவிகள் போகாமல் இருக்க கூடாது என்பதர்காகவே தவிர உங்களுடன் மல்லுக்கட்ட அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நூல்கட்டையெண்டாலும் நெடுக்குத்தம்பி ?????

அக்கா.. தம்பின்னு வந்தாப் பிறகு எனி அடிபட்டு பிரயோசனம் இல்ல. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டமில்ல. அதுதான் இந்தக் கருத்துச் சண்டையின் நோக்கம். வேற ஒன்றும் இல்ல. அக்கா கேட்டு நடப்பீங்க அல்லது நடக்கக் கூடிய சூழல் வந்தா மாற்றி யோசிப்பிங்க என்று நம்புறம்.

உங்களுக்கு என் நத்தார் பரிசில 30% தாறன். இதுவரைக்கும் 100 பவுன் வரை தான் நத்தார் பரிசா வந்திருக்குது. அதில் 30 % தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் அதிகம் பங்களிப்பு வந்தா.. பங்களிப்பு தொகை கூடும். ஆனால் டன் வந்து எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டால் அன்றி வேறு வழியில என்னால் உங்களுக்கு பணம் தர வாய்ப்பில்லை. டன்னின் கணக்கிற்கு அனுப்புவதற்கு அவரின் உத்தரவாதம் அவசியம்.

மனிதாபிமானத்தின் முன் மற்றவை உடனடியாக மறக்கப்பட வேண்டும்.

நன்றி.. அக்கா. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நெடுக்குத்தம்பி நேற்று இன்று 2நாள் உங்களிட்டை ஒரு தையல் மெசின் கேட்டு நீங்களும் இல்லாத பொல்லாத கதையெல்லாம் சொல்லிக் களைச்சிட்டீங்கள்.

போறதுதான் போறீங்கள் தையல் மெசின்தான் தரேல்ல பறவாயில்லை ஒரு நூல்கட்டையெண்டாலும் வாங்கித்தந்திட்டுப் போங்கோ.

தையல் மெசின் தராட்டியும் கட்டாயம் ஒரு நூல்கட்டை தராம நெடுக்குத் தம்பி போகமாட்டாரெண்ட நம்பிக்கையிலதான் இதை எழுதியிருக்கிறேன். இனி உங்கடை விருப்பம்.

ஒரு நூல்கட்டையெண்டாலும் நெடுக்குத்தம்பி ?????

சாந்தி அக்கா தயவு செய்து குறை நினைக்க வேண்டாம்,

நெடுக்ஸ் அண்ணா தான் ஏதோ காரணங்களுக்காக தரமாட்டார் எண்டால் நீங்கள் அவரை ஏளனம் செய்வது போல மெசின் தாறியோ,நூல்க்கட்டை தாறியோ என்பது ஒரு பொறுப்பான செயலாக எனக்கு தோன்றவில்லை. :(

யாருக்கும் தரவேண்டிய அவசியம் இல்லை. அவரவர் விரும்பினால் தரலாம் அதுக்காக அவரை இப்படி வம்புக்கு இழுப்பது நீங்கள் விரும்பிச்செய்யும் ஒன்றாகவே இருக்கிறது,‍. :(

நான் ஏதும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். :)

அக்கா.. தம்பின்னு வந்தாப் பிறகு எனி அடிபட்டு பிரயோசனம் இல்ல. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டமில்ல. அதுதான் இந்தக் கருத்துச் சண்டையின் நோக்கம். வேற ஒன்றும் இல்ல. அக்கா கேட்டு நடப்பீங்க அல்லது நடக்கக் கூடிய சூழல் வந்தா மாற்றி யோசிப்பிங்க என்று நம்புறம்.

உங்களுக்கு என் நத்தார் பரிசில 30% தாறன். இதுவரைக்கும் 100 பவுன் வரை தான் நத்தார் பரிசா வந்திருக்குது. அதில் 30 % தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் அதிகம் பங்களிப்பு வந்தா.. பங்களிப்பு தொகை கூடும். ஆனால் டன் வந்து எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டால் அன்றி வேறு வழியில என்னால் உங்களுக்கு பணம் தர வாய்ப்பில்லை. டன்னின் கணக்கிற்கு அனுப்புவதற்கு அவரின் உத்தரவாதம் அவசியம்.

மனிதாபிமானத்தின் முன் மற்றவை உடனடியாக மறக்கப்பட வேண்டும்.

நன்றி.. அக்கா. :):icon_idea:

i like you neduks anna :)

Link to comment
Share on other sites

ஜீவா உண்மையில் நெடுக்ஸ்சை நான் சீண்ட வேண்டுமென்று சீண்டவில்லை. கட்டாயம் அதை இதை செய்யச்சொல்லியும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஒரு விடயத்தை பதிவு செய்துள்ளேன். அதற்கான கருத்தைத்தானே தரவேணும். ஆனால் இங்கு நடந்தது நீங்கள் முழுவதும் வாசிச்சிருக்கிறீங்கள். எல்லாரும் உதவ வேணும் ஒற்றுமையாக எங்கள் பலத்தையும் அந்த மக்களுக்கு குடுக்க வேணும் அதுக்கான ஒரு சிறுதுளிதான் எனது பங்கு. ஆனால் அதனை எத்தனை முறை ஏளனம் தனிப்பட்ட காழ்ப்பு என தலைப்புகள் நீங்கள் அறியாததல்ல. மன்னித்துக் கொள்ளுங்கள் எனது கருத்துகள் உங்களை சங்கடப்படுத்தியிருந்தால்.

அக்கா.. தம்பின்னு வந்தாப் பிறகு எனி அடிபட்டு பிரயோசனம் இல்ல. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டமில்ல. அதுதான் இந்தக் கருத்துச் சண்டையின் நோக்கம்.

தம்பி இதைத்தான் சொல்றது நம்ம சண்டையில மற்றவை தலை நீட்டக்கூடாதெண்டு. பாத்தீங்களோ நாங்கள் கருத்தாடினம் அக்கா தம்பி ஒற்றுமையாகீட்டம். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.