Jump to content

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

shanthy

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆனால் டன் வந்து எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டால் அன்றி வேறு வழியில என்னால் உங்களுக்கு பணம் தர வாய்ப்பில்லை. டன்னின் கணக்கிற்கு அனுப்புவதற்கு அவரின் உத்தரவாதம் அவசியம்.

மனிதாபிமானத்தின் முன் மற்றவை உடனடியாக மறக்கப்பட வேண்டும்.

நன்றி.. அக்கா. :):icon_idea:

டண் நேசக்கரத்துடன் இல்லை. வெள்ள அனர்த்த நேரம் வந்தார் பின்னர் பலதரம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் தொடர்பில்லை.

நீங்கள் நேரடியாகவே ஒரு குடும்பத்திற்கு உதவக்கூடிய விபரங்களை தனிமடலில போட்டுவிடுகிறேன். நேரடியாக உரியவர்களுடன் கதைத்து உறுதிப்படுத்திக் கொண்டு உதவியை வழங்குங்கோ.

உங்களை எனது கருத்துகள் காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கோ தம்பி. கருத்துகளால் முரண்படுவோம் ஆனால் தமிழராக ஒன்றுபடுவோம். எல்லோரையும் விட எனது சிரமங்களைப் புரிந்த நீங்கள் எனது பகையில்லை. நீங்கள் தம்பிதான்.

மனிதாபிமானத்தின் முன் எல்லாவற்றையும் 2நாளாக நாங்கள் மோதுப்பட்ட முரண்களையெல்லாம் மறப்போம்.

நன்றிகள் தம்பி. நாளைய நத்தாரை இனிதாக கொண்டாட இனிய வாழ்த்துக்கள்.Christmas-Tree-Lights-4.jpg

Link to post
Share on other sites
 • Replies 80
 • Created
 • Last Reply

ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம்

அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா.

அன்புடன்

****

இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது.

இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒரு காலத்தில ஒரு போராளி. பிறகு எழுத்தாளன். இப்பவும் எழுத்தாளன் தான். ஆனால் எழுதிற எழுத்துக்கெல்லாம் வேண்டுறது திட்டுத்தான். எல்லாரும் திட்டத்திட்ட எழுதிக் கொண்டு தன்னோடை வாழ்ந்த தனக்குத் தெரிஞ்ச முன்னாள் போராளியளுக்கு தன்னாலை முடிஞ்ச உதவியளைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.

வெளிநாடுகளில தனக்குத் தெரிஞ்சவையளிட்டை கேட்டு உதவிகளை ஒழுங்கு செய்து குடுக்கிறான். இடைக்கிடை இப்படியான கலியாணத்தரகர் வேலையும் (இலவசதரகர்) செய்யிறான்.

அவன் தந்த அந்த நாலுவரி விளக்கத்திற்கு பிறகு மேலும் பெரிய பந்திக்கடிதப் பரிமாற்றம் ஈமெயிலில் நடத்தி அந்தப் பெண்போராளியின்ரை படம் சாதகம் எல்லாம் வந்து சேர்ந்தது ஈமெயில. அந்தப்படம் வந்தாப்பிறகு சரியான கவலையாயிருந்திச்சு.

ஒருகாலம் அவள் தனது சொந்தமென்ற எல்லாத்தையும் நாட்டுக்கெண்டு குடுத்து கிட்டத்தட்ட 20வருசம் போராளியா இருந்தவள். அப்பவே எங்கினையும் ஒரு கலியாணத்தை கட்டி தானும் வெளிநாடு குடும்பம் குழந்தையள் நோகாத அரசியலெண்டு கதைச்சு எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாத்தையும் விட்டிட்டு இலட்சியமும் கொள்கையும் சுமந்து மே 17 , 2009 வரையும் கொள்கைக்காகவே வாழ்ந்து கடைசியில குப்பி கடிக்கவும் மனமில்லாமல் சரணடைஞ்சாள்.

சரணடைஞ்சு அனுபவிச்ச நரகங்களையும் துயரங்களையும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கூட கோடிமுறை அழுதிருப்பாள். ஆனால் அதையும் தாண்டி விடுதலையாகி வெளியல வந்தாப்பிறகுதான் அவளுக்கு தான் தனிச்சுப்போனாளெண்டு உணர்வு உறைச்சது.

பெண்போராளிகள் பற்றி உலகத் தமிழினம் கட்டி வைச்சிருந்த கோட்டையில இசைபாடிக்கொண்டிருந்த பெண்போராளிகளின் வாழ்க்கை ஒரு நேரச்சோற்றுக்கே இறைஞ்சுகிற நிலமையில இருக்கிற துயரத்தை அவளும் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறாள். இப்ப அவளுக்கு அம்மா அப்பா தங்கைச்சிமாரின் கண்ணீரும் வலியும் வலிக்கத் தொடங்கியிருக்கிறது.

போற்றிப்பாடப்பட்ட பெண்போராளிகள் ஒவ்வொருவரும் படுகிற அவலங்களையெல்லாம் சோற்றோடும் சுதந்திரத்தோடு முடிச்சுப் போட்டு கவுரவச்சாவு சாக நிர்ப்பந்திக்கிற அனைவர் மீதும் அவளுக்கு கோபமாய் வந்தது.

அவளைச் சமாதான காலத்தில் சந்தித்த எத்தனையோ புலம்பெயர் கவுரவர்கள் எவரும் தன்னையோ தன்போன்றவர்களை ஏனெண்டும் திரும்பிப்பாக்காமல் விட்டிருப்பது பற்றிச் சரியான கடுப்பு. அதுக்குப்பிறகுதான் முடிவெடுத்தாள் தானும் திருமணம் செய்து கொள்ளுவமெண்டு. இனவிடுதலைக்காக தன்னையே 20வருடங்கள் இரைகொடுத்தவள் இனிமேல் தனக்கும் ஒருதுணை வேணுமெண்டு முடிவெடுத்திருக்கிறாள். தனது விருப்பத்தை அவளுக்கு மாப்பிளை தேடுகிற தனது போராளி நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள். அவனும் இப்போ அவளுக்காக புறோக்கராகி……..! என்னையும் புறோக்கராக்கி……!

அவன் தந்த அவளது விபரங்களை பரிசிலிருக்கிற ஒரு இலவச புறோக்கரிடம் ஈமெயிலில அனுப்பி 3வாரத்தில் அந்த புறோக்கர் தொடர்பு கொண்டார்.

தங்கைச்சி நீங்கள் தந்த பிள்ளையின்ரை குறிப்புக்கு நல்லதொரு பொருத்தமான பொடியன் கிடைச்சிருக்கிறான். பொடியனுக்கு படமும் பிடிச்சிருக்கு. மேற்கொண்டு விசயங்களை கதைக்க வேணும் என்றார்.

அவளுக்கு வெள்ளி திசையடிச்சுவிட்டது போலத்தானிருந்தது. இலவச புறோக்கர் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் அணுகுண்டைப் போட்டார்.

பொடியன் ஏற்கனவே கலியாணம் முடிச்சு 4பிள்ளையள். ஆனா டிவோஸ். வயது 48. ஆனால் வயது தெரியாத தோற்றம். கொஞ்சம் தண்ணிச்சாமி. மற்றது தெரியும்தான இயக்கத்தில இருந்த பெட்டையளெண்டா கனக்க கேள்வியள் கேப்பினம். ஆனால் இவன் அப்பிடியெல்லாம் கேக்கேல்ல. மற்றது பொடியன் வேதம். அதுமட்டும் தான் குறை. ஆனால் பிள்ளை மதம்மாறாமல் கலியாணம் கட்ட அவை தடையில்லையாம்.

அண்ணை அவளைவிட 11வயது ஆளுக்குகூடிப்போச்சு உது சரிவராது நீங்கள் வேறையாரும் சரிவந்தா சொல்லுங்கோ….இந்தப்பதிலை அவர் எதிர்பார்க்கேல்ல போல…..திருப்பிச் சொன்னார்…..தங்கைச்சி வயதென்ன பெரிய பிரச்சனை மனம்தானே முக்கியம்.

வயது போகட்டும் ஏற்கனவே மணமுறிவு மாப்பிளை தண்ணிச்சாமிதான் இடியெண்டதை அம்மாளறிய நான் சொல்லேல்ல. அவர் அந்த மாப்பிளை பற்றி அதிகமாக பில்டப் போட்டுக் கொண்டு போனார். உது சரிவராதண்ணை விடுங்கோ. அவை வேதக்காறரெண்டா சம்மதிக்காயினம்…..கடைசிக் கடத்தலாக மதத்தை காரணம் சொல்லி அவரைத் துண்டித்துக் கொள்கிறேன்.

4கிழமை முடிஞ்ச பிறகு அவளது போராளி நண்பன் முகப்புத்தகத்தில் வந்திருந்தான்.

அக்கா **** விசயம் ஏதும் சரிவந்ததோ ?

தம்பி ஒண்டும் சரிவரேல்ல. ஆனா ஒண்டு வந்தது. ஏற்கனவே கலியாணம் கட்டி பிரிஞ்சிருக்கிறார். வயது11 கூட.

ரெண்டாந்தாரமெண்டாலும் பறவாயில்லையக்கா பாருங்கோ. அவள் எதெண்டாலும் வாழ ஒரு வழி கிடைச்சாப் போதுமெண்ட நிலமையில இருக்கிறாள். வயது வித்தியாசம் , ரண்டாந்தாரம் பெரிய பிரச்சனையில்லையெண்டு நினைக்கிறேன்…..என்றான் அவன்.

அவனுக்கு பதில் எழுதாமல் முகப்புத்தகத்தை விட்டு வெளியேறினேன். எனக்கு உச்சந்தலையில உளியாலை குத்தினமாதிரியிருந்திச்சு. பெண்விடுதலை பெண்களின் மாற்றம் புரட்சியென்று எழுதியவள். களங்களில் கனவுகளோடும் இலட்சியத்தோடும் கனரகத்துப்பாக்கியோடும் திரிந்தவள். இன்று ரண்டாந்தாரமும் பறவாயில்லையென்ற நிலமைக்கு எப்படி வந்தாள்……..?

இதைவிடவும் இவையள் தங்களை முன்னாள் போராளியளெண்டு சொல்லாமலிருக்கலாம்….யாருக்கோ விலபோட்டா….அத்தியடிக் குத்தியரின்ரை ஆளாயிருக்கலாம்…..அல்லது அரச புலனாய்வா இருக்கலாம்…..உவையெல்லாம் பெண்போராளியள்…சீ….தூ….

அவள் பற்றிய கதையைச் சொல்ல நினைக்கிற என்னை நோக்கி….,

புலம்பெயர் தாயக விரும்பிகள் விடுலையுணர்வாளர்கள் புலத்திலிருந்து களம்காணும் புலப்போராளிகள் யாவரும் என் மூஞ்சியில் துப்பிக் கொண்டிருப்பது போல கனவு காணத்தொடங்குகிறேன்.

01.11.2011

000 000 000

இந்த பதிவுடன் ஒத்த ஒரு சம்பவம்

போரால் பாதிக்கப்பட்ட பெண் (வயது 24) திருமணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றார். தெரிந்தவர்கள் சிலரிடம் சாதகம் மற்றும் புகைப்படங்கள் கொடுத்து தேடினார்கள். அவ்வாறு மாப்பிள்ளை இருந்தால் பார்க்கச்சொல்லி சாதகம் மற்றும் புகைப்படம் கொடுக்கப்பட்ட 52 வயதுடையவருக்கும் பெண்ணுக்கும் கடந்த மாத இறுதியில் கொழும்பில் திருமணம் முடிவானது. மாப்பிள்ளை தேடுவதற்குப் பதிலாக அவரே மாப்பிள்ளையாகிக்கொண்டார்.

இது குறித்து சில சர்ச்சைகள் வாக்குவாதங்கள் ஆரம்பித்தது. பெண்ணுக்கு தாய்தந்தை இறந்து விட்டனர். மாமன் முறையில் ஒருவர் ஆதரவாக இருக்கின்றார். பெண்ணுக்கும் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்மதம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்டவர்களை நோக்கி திருப்பிக்கேட்டார். சிலர் அதற்கு மேலும் உங்களுக்கு மகள் மாதிரி என்றும் மற்றவர் எந்த ஊர் நடைமுறை என்றும் தொடர முற்பட்டனர். ஆனால் இதற்குள் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று மாப்பிள்ளை முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்தச் சம்பவத்தில் நான் ஒரு பார்வையாளன். வாக்குவாதங்களை கேட்டதுண்டு ஆனால் எந்தக் கருத்தும் சொன்னதில்லை. சொல்ல விரும்பியதும் இல்லை.

மற்றவர்களை மாட்டிவிட்டிட்டு.. தாங்கள் தூர விலகி நிற்க விரும்பும் எம்மவர்கள் மத்தியில் இந்த மாப்பிள்ளை எவ்வளவோ திறம்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான திருமணங்கள் மிகச் சாதாரணம். டேற்றிங் என்று எம்மவர்களின் வாரிசுகளும் இப்படி செய்யினம். அப்போ எல்லாம் யாரும் வாய் திறக்க மாட்டினம். அதுவே தாயகம் நோக்கிப் போனால்.. ஐயோ.. அது புள்ள மாதிரி.. வயசு வித்தியாசம்.. மண்ணாங்கட்டின்னு ஆயிரம் நொட்டை பிடிப்பினம். அப்புறம்.. முதிர் கன்னிகள்.. காளைகள் பெருக்கம் என்றும் நீலிக்கண்ணீர் வடிப்பினம்.

இப்படியான ஒரு இரண்டும் கெட்டான்.. கேடு கெட்ட சமூகத்தில் இருந்து இந்த மாப்பிள்ளை போன்ற ஒரு சில செயல்வீரர்கள் சமூகத்தின் அடிப்படைகளில் படிந்து போயுள்ள படைக்கணக்கான போலித் தன்மைகளை மாற்றி சமகாலத் தேவைக்கு ஏற்ப செயற்படுவது.. பாராட்டத் தக்கது.

கட்டினவர் அவாவோட நீண்ட காலம் வாழனும் எண்டால்.. புறணி பாடும்... சொந்த இனத்தவரில் இருந்து கொஞ்சம் தூர விலகி இருப்பதும் நன்று. அப்புறம்.. குடும்பத்துக்க கலகம் பண்ணி.. அதில மகிழ்ச்சி அடையும் எம் இன ஜென்மங்களுக்கு இவர்களும் இரையாகிடுவார்கள். :):icon_idea:

தங்கட சொந்த வாழ்க்கை சம்பந்தமா எதைச் செய்யோணும் எப்படிச் செய்யோணும் எண்டு தீர்மானிப்பது அவன் அல்லது அவளா இருக்கவேணும்...எங்கட அரை அவியல் சமூகமா இருக்கக்கூடாது..நெடுக்ஸ் சொன்னமாதிரி தனி மனித சுதந்திரத்தை விரும்புவர்கள் இன்னும் பல விடயங்களில் வடிவா நாகரீகமடையாத எங்கடை சமூகத்திட்ட இருந்து விலத்தி இருக்கிறது நல்லது...பலவிடயங்களில் எங்கட சொந்த வழ்க்கையை நாங்கள் தீர்மானிக்கிற நிலமை எங்கட சமூகத்தில உருவாகவில்லை..பல விடயங்களை சமூகமே எங்கள் மீது திணித்து அடக்கி வைத்திருக்கிறது.. :(

தம்பி இதைத்தான் சொல்றது நம்ம சண்டையில மற்றவை தலை நீட்டக்கூடாதெண்டு. பாத்தீங்களோ நாங்கள் கருத்தாடினம் அக்கா தம்பி ஒற்றுமையாகீட்டம். :lol:

:o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தம்பி. நாளைய நத்தாரை இனிதாக கொண்டாட இனிய வாழ்த்துக்கள்.

Christmas-Tree-Lights-4.jpg

நன்றி அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனதும் நத்தார் புதுவருட வாழ்த்துகள். :)

Link to post
Share on other sites

அடப்பாவிங்களா...ரண்டு பேரும் மாத்திமாத்தி வாழ்த்தை சொல்லிக்கிறாங்க....பாசத்தைக் கொட்டிக்கிறாங்க...பாத்துக்கொண்டிருந்த நம்பழுக்கு நேராச் சொல்லவேண்டாம் சைட்டாயாவது ஒரு வாழ்த்துச்சொன்னாங்களா..??? :o:lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா உண்மையில் நெடுக்ஸ்சை நான் சீண்ட வேண்டுமென்று சீண்டவில்லை. கட்டாயம் அதை இதை செய்யச்சொல்லியும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஒரு விடயத்தை பதிவு செய்துள்ளேன். அதற்கான கருத்தைத்தானே தரவேணும். ஆனால் இங்கு நடந்தது நீங்கள் முழுவதும் வாசிச்சிருக்கிறீங்கள். எல்லாரும் உதவ வேணும் ஒற்றுமையாக எங்கள் பலத்தையும் அந்த மக்களுக்கு குடுக்க வேணும் அதுக்கான ஒரு சிறுதுளிதான் எனது பங்கு. ஆனால் அதனை எத்தனை முறை ஏளனம் தனிப்பட்ட காழ்ப்பு என தலைப்புகள் நீங்கள் அறியாததல்ல. மன்னித்துக் கொள்ளுங்கள் எனது கருத்துகள் உங்களை சங்கடப்படுத்தியிருந்தால்.

சந்தி அக்கா என்ன சின்னப்பிள்ளைத்தனமா??? இதுக்கு எல்லாமா நாங்க கோவிப்பம்??? :D

we are friends akka :)

எப்பவும் நேசக்கரத்துடன் இணைந்திருப்போம். முடியும் போதெல்லாம் என்னாலான உதவிகளைச் செய்வேன் அக்கா.

Link to post
Share on other sites

தம்பி இதைத்தான் சொல்றது நம்ம சண்டையில மற்றவை தலை நீட்டக்கூடாதெண்டு. பாத்தீங்களோ நாங்கள் கருத்தாடினம் அக்கா தம்பி ஒற்றுமையாகீட்டம். :lol:

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்;வ்வ்..........................................

Link to post
Share on other sites

அடப்பாவிங்களா...ரண்டு பேரும் மாத்திமாத்தி வாழ்த்தை சொல்லிக்கிறாங்க....பாசத்தைக் கொட்டிக்கிறாங்க...பாத்துக்கொண்டிருந்த நம்பழுக்கு நேராச் சொல்லவேண்டாம் சைட்டாயாவது ஒரு வாழ்த்துச்சொன்னாங்களா..??? :o:lol:

இதுக்குத்தான் நாங்கள் ஓரமா நிண்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறது..! :lol:

சுபேஸ் தம்பிக்கு ஸ்பெஸல் வாழ்த்து ஸ்கைப்பில எல்லாத்தம்பிகளுக்கும் முன்னம் சொல்லீட்டேன் மறந்திட்டீங்களோ ? கருத்துக்களத்தில் தம்பிகளுடன் அக்காச்சி முரண்படுவேன் ஆனால் நாங்கெல்லாம் ஒன்றே குலம் ஒருவனே தேவனென்ற கொள்ளையைப் பின்பற்றுவமெல்லோ. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவுடன் ஒத்த ஒரு சம்பவம்

போரால் பாதிக்கப்பட்ட பெண் (வயது 24) திருமணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றார். தெரிந்தவர்கள் சிலரிடம் சாதகம் மற்றும் புகைப்படங்கள் கொடுத்து தேடினார்கள். அவ்வாறு மாப்பிள்ளை இருந்தால் பார்க்கச்சொல்லி சாதகம் மற்றும் புகைப்படம் கொடுக்கப்பட்ட 52 வயதுடையவருக்கும் பெண்ணுக்கும் கடந்த மாத இறுதியில் கொழும்பில் திருமணம் முடிவானது. மாப்பிள்ளை தேடுவதற்குப் பதிலாக அவரே மாப்பிள்ளையாகிக்கொண்டார்.

இது குறித்து சில சர்ச்சைகள் வாக்குவாதங்கள் ஆரம்பித்தது. பெண்ணுக்கு தாய்தந்தை இறந்து விட்டனர். மாமன் முறையில் ஒருவர் ஆதரவாக இருக்கின்றார். பெண்ணுக்கும் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்மதம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்டவர்களை நோக்கி திருப்பிக்கேட்டார். சிலர் அதற்கு மேலும் உங்களுக்கு மகள் மாதிரி என்றும் மற்றவர் எந்த ஊர் நடைமுறை என்றும் தொடர முற்பட்டனர். ஆனால் இதற்குள் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று மாப்பிள்ளை முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்தச் சம்பவத்தில் நான் ஒரு பார்வையாளன். வாக்குவாதங்களை கேட்டதுண்டு ஆனால் எந்தக் கருத்தும் சொன்னதில்லை. சொல்ல விரும்பியதும் இல்லை.

சுகன், நீங்கள் குறித்தது போல ஒரு முன்னாள் பெண்போராளி 20வயது வித்தியாசத்தில் திருமணமாகியுள்ளாள். அவள் தற்போது அனுபவிக்கிற வேதனையை இங்கே எழுத முடியாது.

ஒரு இனத்தின் அடையாளமாகவும் குறியீடாகவும் இருந்தவர்கள் பெண்போராளிகள். ஆனால் 2009 யுத்த முடிவு அவர்களை சாமான்ய சமூகத்தின் அடிநிலைப் பெண்களாகத் தற்போது கொண்டு வந்திருக்கிறது. ஆண்துணை திருமணம் இல்லையென்றால் வாழ முடியாதென்ற வளக்கத்தை அவர்களும் ஏற்பவர்களாக காலம் மாற்றியிருக்கிறது. இந்த மாற்றத்தைத்தான் மேல் கதையில் எழுதினேன். கதை ரணகளமாய் இப்பதான் ஒய்ந்திருக்கு.

வயது வித்தியாசம் மதமெல்லாம் எனது பிரச்சனையல்ல மேலுள்ள கதைக்கு உரியவள் ஒருகாலம் நாங்கள் அடையாளப்படுத்திய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் மாற்றங்களினை விரும்பிய எழுத்துகளையும் எழுதியவள். திருமணம் இல்லாமல் போராளியாய் வாழ்ந்து சமூகத்தை முன்னேற்றுவதைத்தவிர வேறு கனவில்லையென்று வாழ்ந்தவள். இன்று அவளது நிலமை ஆயிரமாயிரம் பேரின் நிலமைக்கு காரணமான காரணி பற்றி இங்கு கதைக்க முடியாது. ****சுயதணிக்கை***

பெண்விடுதலை பெண்களின் மாற்றம் புரட்சியென்று எழுதியவள். களங்களில் கனவுகளோடும் இலட்சியத்தோடும் கனரகத்துப்பாக்கியோடும் திரிந்தவள். இன்று ரண்டாந்தாரமும் பறவாயில்லையென்ற நிலமைக்கு எப்படி வந்தாள்……..?

எப்படி இந்த நிலைமை இன்று அவர்களிற்கு ஆனது? நியாயமான கேள்விதான். ஆனால் பதிலை நமக்கு கொடுக்க ஒரு தகுதியில்லை என்றே எனக்குத தோன்றுகிறது.

மண், மக்கள், என்று அவர்கள் வாழ்த்த காலத்தில் " எங்கடை பிள்ளைகள் " என்று கொண்டாடிய அனைத்து மனிதரும் தற்சமயம் சுயநலமாய் மாறிவிட்டார்கள். மனிதரின் உண்மை முகமூடிகளை அறியமுடியாதபடி அவர்கள் தங்களைத் தாங்களே பணிகளில் மூழ்கியிருந்திருக்கலாம். போரின் கொடூரத்தின் பின் தாம் போன பாதையில் நின்றபடி திரும்பிப் பார்த்த வேளையில் அவர்கள் பின்னல் வெறுமை மட்டும் தானே இருந்திருக்கும். இந்நிலையில் அவர்களிற்கு என்றொரு ஆறுதலான தோள் தேவைப்படும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்ட நிலைக்கு எலோரும் ஒரு காரணம் தானே. அவர்களும் ஒரு சாதாரண மனிதர்

கல்கி உங்களுக்கான முதல் +1 நான் தான் போட்டுள்ளேன். பணிகளில் மூழ்கியிருந்தவர்கள் எங்களை தமிழரை நம்பியிருந்துவிட்டார்கள். இப்போது எல்லாம் முடிந்த பின்னர் திரும்பிப்பார்க்கிறார்கள். தங்களை உச்சத்தில் வைத்தவர்கள் பின்னே நிற்கிறார்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் இன்று அவர்கள் அனாதைகளாகி நிற்கிறார்கள். துயரம்தான் மிஞ்சுகிறது.

இதுக்குத்தான் நாங்கள் ஓரமா நிண்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறது..! :lol:

:oஇசை இதில உள்குத்தொண்டும் இல்லைத்தானே. இசைத்தம்பிக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

களத் தம்பிகள் , தங்கைள் , தாத்தாக்கள் , பாட்டிகள் எல்லோருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பதிவுடன் ஒத்த ஒரு சம்பவம்

போரால் பாதிக்கப்பட்ட பெண் (வயது 24) திருமணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றார். தெரிந்தவர்கள் சிலரிடம் சாதகம் மற்றும் புகைப்படங்கள் கொடுத்து தேடினார்கள். அவ்வாறு மாப்பிள்ளை இருந்தால் பார்க்கச்சொல்லி சாதகம் மற்றும் புகைப்படம் கொடுக்கப்பட்ட 52 வயதுடையவருக்கும் பெண்ணுக்கும் கடந்த மாத இறுதியில் கொழும்பில் திருமணம் முடிவானது. மாப்பிள்ளை தேடுவதற்குப் பதிலாக அவரே மாப்பிள்ளையாகிக்கொண்டார்.

இது குறித்து சில சர்ச்சைகள் வாக்குவாதங்கள் ஆரம்பித்தது. பெண்ணுக்கு தாய்தந்தை இறந்து விட்டனர். மாமன் முறையில் ஒருவர் ஆதரவாக இருக்கின்றார். பெண்ணுக்கும் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்மதம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்டவர்களை நோக்கி திருப்பிக்கேட்டார். சிலர் அதற்கு மேலும் உங்களுக்கு மகள் மாதிரி என்றும் மற்றவர் எந்த ஊர் நடைமுறை என்றும் தொடர முற்பட்டனர். ஆனால் இதற்குள் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று மாப்பிள்ளை முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்தச் சம்பவத்தில் நான் ஒரு பார்வையாளன். வாக்குவாதங்களை கேட்டதுண்டு ஆனால் எந்தக் கருத்தும் சொன்னதில்லை. சொல்ல விரும்பியதும் இல்லை.

இந்த விசயத்தில கதைக்கிறதுக்கு எனக்கு அருகதையும் விருப்பமும் இல்லாவிட்டாலும்... ஒரு விடயம் என் மனதினை உறுத்தும் காரணத்தால் சொல்கின்றேன். தயவுசெய்து, தப்பாக யாரும் எடுக்க வேண்டாம்!

அவருக்கு 52வயது. அந்தப் பிள்ளைக்கு 24வயது. இன்னும் 8 அல்லது 10 வருசத்தில அவருக்கு முதுமை முத்திவிடும். அவருடைய ஆயுள் கூட நிச்சயம் அற்ற ஒன்று. அப்போது அந்தப் பெண்ணுக்கு 32 அல்லது 34 வயதுதான் இருக்கும். அதற்குப்பின் அந்த பெண்ணின் வாழ்க்கை..... ???????? மீண்டும்....... ஒரு கிழவன் கூட கிடைக்க மாட்டான்..... வாழ்க்கை கொடுக்க!

இப்படியான விடயங்கள் தற்காலிக கரையேற்றங்கள் என்பது இன்னும் கொஞ்சக் காலத்தில் தற்போதையதைவிட பாதகமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பது எனது எண்ணம். மனதுகள் ஒன்றுசேர்தல் என்பதுதான் திருமணம் என்றாலும் வாழ்க்கை என்று வரும்போது அது அயிரத்தெட்டு விடயங்களை கவனித்து இறுதிவரை ஒன்றாக வாழவேண்டும் என்ற ஒன்றிலேயே முக்கியமாகின்றது.

இப்படியான திருமணங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

சமுதாயம் ஆயிரம் சொல்லும்! அதையெல்லாம் காதிற் போட்டால் அந்த சமுதாயத்துக்குள்ளேயே வாழமுடியாதவர்கள் ஆகிவிடுவோம்.

தற்பொழுது எங்கள் சமுதாயத்துக்குள் 25 முதல் 40 வயது வரையுள்ள மனைவியற்ற புருசர்கள் எத்தனைபேர் இருக்கின்றார்கள்?அவர்கள் எல்லாருக்கும் .......................... ..........(தங்கள் எண்ணத்துக்கு விடப்படுகின்றது)

உங்கள் கருத்து ஒரு பெண்ணை.. ஒரு விதமான போகிப்பவள் என்ற பார்வையூடு எடுத்துக் கொள்கிறது. அப்படி இருந்தாலும் கூட இன்றைய நவீன அறிவியல் உலகில்.. இருந்து கொண்டும்... இப்படி பழைய 17ம் நூற்றாண்டுச் சிந்தனையில்.. ஆண் - பெண் உறவை கட்டிக் கொண்டு அழுவதில் எந்தப் பயனும் இல்லை. இது அதிநவீன காலம். நிறைய மாற்றங்கள் உண்டு. இன்றைக்கு ஓய்வூதிய வயதெல்லையே 67 என்றாகிவிட்டது. பல இளம் பெண்கள் வயதான ஆண்களையும்.. இளம் ஆண்கள் வயதான பெண்களையும் குடும்ப அங்கத்தவர்களாக தேர்வு செய்வது சாதாரணமாகியுள்ளது.

ஒரே வயதில் திருமணமான ஆக்கள் எத்தனையோ பேர் விவாகரத்தில போய் நிற்கினம். எத்தனையோ பேர் வாழ்விழந்து நிற்கினம்.

இது அடுத்தவர் சொல்லி செய்யும் காரியமல்ல. அந்தத் தனிமனிதர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அவர்களுக்கு அறிவுரை வழிகாட்டல் செய்யக் கூடிய தகுதி இந்தச் சமூகத்திற்கு இருப்பதாக கருதவே முடியாது. அந்தளவிற்கு அறிவியல் தனமற்ற.. மனிதத்துவமற்ற.. சிந்தனைகளோடு எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சிந்தனைகளைக் கட்டிக் கொண்டு மடமையில் ஊறிக் கிடக்கிறது. காலம்.. அறிவியல் கலந்து மாறி உள்ள போதும் எம்மவர்கள் மனங்கள் இன்னும் மாறவில்லை என்பதற்கு தங்கள் பதிவு நல்ல உதாரணம்.

84 வயது தாத்தாவுக்கு 54 வயது பெண் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் இன்றைய அறிவியல் உலகில் நடக்க அங்கீகரிப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு மருத்துவ உலகமோ.. அறிவியலோ தடைவிதிக்கவில்லை. ஆனால் இவை எதுவுமே அற்று ஆராய்தல் அற்று வெறும் சமூகக் கூப்பாடுகள்.. அதற்கு தடை போடுவது தான் வேடிக்கையாக உள்ளது. இதனை அறிவுள்ள மனிதர்கள் புறந்தள்ளி தங்கள் தங்கள் சுய ஆளுமை.. இயலுமைக்கு ஏற்ப.. முடிவுகளை எடுப்பதையே அறிவியலும்.. மனிதமும் வரவேற்கிறது. அதுவே தனிமனித சுதந்திரத்தை தக்க வைக்கவும் உதவும்..!

உங்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிவியல் ரீதியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து அறிவியல் ரீதியாக விடயங்களை அணுகுங்கள். சமூகம் விதைத்துள்ள மடமைகள் சார்ந்து இவற்றை நோக்குவது சரியல்ல..! :):icon_idea:

Link to post
Share on other sites

மற்றவர்களை மாட்டிவிட்டிட்டு.. தாங்கள் தூர விலகி நிற்க விரும்பும் எம்மவர்கள் மத்தியில் இந்த மாப்பிள்ளை எவ்வளவோ திறம்.

மேற்கு நாடுகளில்.. இப்படியான திருமணங்கள் மிகச் சாதாரணம். டேற்றிங் என்று எம்மவர்களின் வாரிசுகளும் இப்படி செய்யினம். அப்போ எல்லாம் யாரும் வாய் திறக்க மாட்டினம். அதுவே தாயகம் நோக்கிப் போனால்.. ஐயோ.. அது புள்ள மாதிரி.. வயசு வித்தியாசம்.. மண்ணாங்கட்டின்னு ஆயிரம் நொட்டை பிடிப்பினம். அப்புறம்.. முதிர் கன்னிகள்.. காளைகள் பெருக்கம் என்றும் நீலிக்கண்ணீர் வடிப்பினம்.

இப்படியான ஒரு இரண்டும் கெட்டான்.. கேடு கெட்ட சமூகத்தில் இருந்து இந்த மாப்பிள்ளை போன்ற ஒரு சில செயல்வீரர்கள் சமூகத்தின் அடிப்படைகளில் படிந்து போயுள்ள படைக்கணக்கான போலித் தன்மைகளை மாற்றி சமகாலத் தேவைக்கு ஏற்ப செயற்படுவது.. பாராட்டத் தக்கது.

கட்டினவர் அவாவோட நீண்ட காலம் வாழனும் எண்டால்.. புறணி பாடும்... சொந்த இனத்தவரில் இருந்து கொஞ்சம் தூர விலகி இருப்பதும் நன்று. அப்புறம்.. குடும்பத்துக்க கலகம் பண்ணி.. அதில மகிழ்ச்சி அடையும் எம் இன ஜென்மங்களுக்கு இவர்களும் இரையாகிடுவார்கள். :):icon_idea:

25 வயதுப் பெண் 50 வயசான ஆணை கட்டுவதை ஏற்கும் நீங்கள் 45 வயசுப் பெண் 25 வயதான ஆணை திருமணம் செய்வதை ஏற்பீர்களா?

திருமணம் என்பது அவர‌வர் விருப்பம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் தற்போது அந்தப் பெண் ஒரு பிடியும் இல்லாமல் தத்தளிக்கிறார் இவரை கட்டியாவது வெளிநாடு வந்தால் போதும் என்ட‌ நிலையில் இருக்கிறார்.வெளி நாட்டிக்கு வந்து கொஞ்ச‌ நாளில் வாழ்க்கை புரிய தொட‌ங்கின பின்னர் தான் தான் அவச‌ர‌ப்பட்டு விட்டோம் என்பது அவருக்கு புரியும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்து ஒரு பெண்ணை.. ஒரு விதமான போகிப்பவள் என்ற பார்வையூடு எடுத்துக் கொள்கிறது. அப்படி இருந்தாலும் கூட இன்றைய நவீன அறிவியல் உலகில்.. இருந்து கொண்டும்... இப்படி பழைய 17ம் நூற்றாண்டுச் சிந்தனையில்.. ஆண் - பெண் உறவை கட்டிக் கொண்டு அழுவதில் எந்தப் பயனும் இல்லை. இது அதிநவீன காலம். நிறைய மாற்றங்கள் உண்டு. இன்றைக்கு ஓய்வூதிய வயதெல்லையே 67 என்றாகிவிட்டது. பல இளம் பெண்கள் வயதான ஆண்களையும்.. இளம் ஆண்கள் வயதான பெண்களையும் குடும்ப அங்கத்தவர்களாக தேர்வு செய்வது சாதாரணமாகியுள்ளது.

ஒரே வயதில் திருமணமான ஆக்கள் எத்தனை பேர் விவாகரத்தில போய் நிற்கினம். எத்தனை பேர் வாழ்விழந்து நிற்கினம்.

இது அடுத்தவர் சொல்லி செய்யும் காரியமல்ல. அந்தத் தனிமனிதர்கள் எடுக்க வேண்டிய முடிவு. அவர்களுக்கு அறிவுரை வழிகாட்டல் செய்யக் கூடிய தகுதி இந்தச் சமூகத்திற்கு இருப்பதாக கருதவே முடியாது. அந்தளவிற்கு அறிவியல் தனமற்ற.. மனிதத்துவமற்ற.. சிந்தனைகளோடு எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சிந்தனைகளைக் கட்டிக் கொண்டு மடமையில் ஊறிக் கிடக்கிறது. காலம்.. அறிவியல் கலந்து மாறி உள்ள போதும் எம்மவர்கள் மனங்கள் இன்னும் மாறவில்லை என்பதற்கு தங்கள் பதிவு நல்ல உதாரணம்.

84 வயது தாத்தாவுக்கு 54 வயது பெண் குழந்தை பெற்றுக் கொடுப்பதும் இன்றைய அறிவியல் உலகில் நடக்க அங்கீகரிப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு மருத்துவ உலகமோ.. அறிவியலோ தடைவிதிக்கவில்லை. ஆனால் இவை எதுவுமே அற்று ஆராய்தல் அற்று வெறும் சமூகக் கூப்பாடுகள்.. அதற்கு தடை போடுவது தான் வேடிக்கையாக உள்ளது. இதனை அறிவுள்ள மனிதர்கள் புறந்தள்ளி தங்கள் தங்கள் சுய ஆளுமை.. இயலுமைக்கு ஏற்ப.. முடிவுகளை எடுப்பதையே அறிவியலும்.. மனிதமும் வரவேற்கிறது. அதுவே தனிமனித சுதந்திரத்தை தக்க வைக்கவும் உதவும்..!

உங்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிவியல் ரீதியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து அறிவியல் ரீதியாக விடயங்களை அணுகுங்கள். சமூகம் விதைத்துள்ள மடமைகள் சார்ந்து இவற்றை நோக்குவது சரியல்ல..! :):icon_idea:

நான் என்னுடைய கருத்தினை மட்டும் சொன்னேன். அது என் மனதுக்குள் உறுத்திய விடயம். அதைத்தான் சொல்லியிருந்தேன். அதில் தவறுகள் இருக்கலாம்.... இல்லாமல் விடலாம். அது வேறு விடயம்! ஆனால், இதைப்பற்றி தங்களுடன் "வீண்விவாதம்" பண்ண நான் தயாராக இல்லை.

நன்றி வணக்கம் (.)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

25 வயதுப் பெண் 50 வயசான ஆணை கட்டுவதை ஏற்கும் நீங்கள் 45 வயசுப் பெண் 25 வயதான ஆணை திருமணம் செய்வதை ஏற்பீர்களா?

நாங்கள் ஏற்கிறமோ இல்லையோ.. அறிவியல் ரீதியாக சட்ட ரீதியாக.. மருத்துவ ரீதியாக இதற்குத் தடை இல்லை.

நாங்கள் தனிமனிதர்கள் எங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப முடிவுகளை எடுத்தாலும்.. அறிவியல் சார்ந்து.. சட்டம் சார்ந்து.. மருத்துவம் சார்ந்து முடிவெடுக்குமிடத்தில்.. 45 வயசுப் பெண்ணை 25 வயசு ஆண் திருமணம் செய்வதில் எந்தத் தடையும் கிடையாது. அப்படி பல இடங்களில் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் தெரிவு செய்துள்ளதைக் காண முடிகிறது. பல உலகப் பிரபல்யங்கள் கூட அப்படி செய்திருக்கிறார்கள். :):icon_idea:

நான் என்னுடைய கருத்தினை மட்டும் சொன்னேன். அது என் மனதுக்குள் உறுத்திய விடயம். அதைத்தான் சொல்லியிருந்தேன். அதில் தவறுகள் இருக்கலாம்.... இல்லாமல் விடலாம். அது வேறு விடயம்! ஆனால், இதைப்பற்றி தங்களுடன் "வீண்விவாதம்" பண்ண நான் தயாராக இல்லை.

நன்றி வணக்கம் (.)

அறிவியல் விவாதத்தை வீண்விவாதம் என்று சொல்லக் கூடிய நிலையில் உள்ள ஒரு சமூக அங்கத்தவரை உருவாக்கியுள்ள இந்தச் சமூகம் பற்றி தான் நான் இப்போ கவலைப்படுகிறேன். உங்கள் முடிவுக்கு அல்ல..!

தங்கள் விருப்பை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. :):icon_idea:

Link to post
Share on other sites

25 வயதுப் பெண் 50 வயசான ஆணை கட்டுவதை ஏற்கும் நீங்கள் 45 வயசுப் பெண் 25 வயதான ஆணை திருமணம் செய்வதை ஏற்பீர்களா?

யாரைப் பாத்துக் கேக்கிறியள் றதி அக்கா..நெடுக்கைப் பாத்தா..?இல்லை இந்த அரை அவியல் சமூகத்தையா..., அரை அவியல் சமூகம் எண்டால் நிச்சயமா இல்லை எண்டுதான் பதில் சொல்லும்... :D இந்த அரைஅவியல் சமூகத்தின்ர வறட்டு நியாயங்களை விட்டிட்டுப் பாத்தா அதில எந்த தப்புமே இல்லை..உங்கட உங்கட மனசுக்குப் புடிச்சிருந்த கட்டிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்..அப்பிடிக்கட்டுறதிலை எந்தத் தப்புமே இல்லை..

Link to post
Share on other sites

நான் என்னுடைய கருத்தினை மட்டும் சொன்னேன். அது என் மனதுக்குள் உறுத்திய விடயம். அதைத்தான் சொல்லியிருந்தேன். அதில் தவறுகள் இருக்கலாம்.... இல்லாமல் விடலாம். அது வேறு விடயம்! ஆனால், இதைப்பற்றி தங்களுடன் "வீண்விவாதம்" பண்ண நான் தயாராக இல்லை.

நன்றி வணக்கம் (.)

என்ன கவிதை இதுக்கெல்லாம் மாட்டன் எண்டு சொல்லிட்டுப் போறதா..,இது நல்ல ஒரு விடயம்தான..இப்பிடியான விவாதங்கள்தான் யாழில இடம்பெறவேண்டும்..சமூகப் பிரச்சினையள்,தேசியப் பிரச்சினையள் போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் யாழிழ இடம்பெறவேண்டும்..அதை விட்டிட்டு நெடுக்கைப்பற்றியோ இல்லை கவிதையைப் பற்றியோ இல்லை..அப்பிடியான தனிமனித விசயங்கள் யாழிழ இடம்பெறத்தேவை இல்லை..யாழ் அதுக்கான இடமும் இல்லை..ஏன் ஒருவரின் மேல்க் கோவித்துக் கொண்டு எழுதாமல் விடுகிறீர்கள் நல்ல விடயங்களுக்கு..இது தெருக்கோடி அல்ல அடுத்தவன் வீட்டுக் கோடியைப் பற்றி அலச..என்னைப் பொறுத்தளவில் யார் எழுதியிருக்கிறார்கள் என்று ஒருபோதும் பார்த்ததே இல்லை..என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு தேவையானது...நெடுக்கு யாராகவாவது இருந்திட்டுப் போகட்டும் இல்லைக் கவிதை யாராகவாவது இருந்திட்டுப் போகட்டும்..நான் எழுதியது ஆரோக்கியமான விவாதமா என்பதுதான் மேற்றர்..இதை எல்லாம் வீண்விவாதம் எண்டு சொல்லாதீர்கள்..வீண்வீவாதங்கள் பல இங்கு நடந்திருக்கின்றன்..நடக்கின்றன..நல்ல ஒரு விவாதம் இது..எமது பிற்போக்குச் சமூகத்தின் அடிமடியில் கைவைத்து உலுப்பிப் பார்ப்பது..தொடர்ந்து உங்கள் கருத்தை வையுங்கள்..நானும் ரெடி இந்த விவாதத்த்தில் கலந்து கொள்ள..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96006&view=getnewpost&hl=&fromsearch=1

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

25 வயதுப் பெண் 50 வயசான ஆணை கட்டுவதை ஏற்கும் நீங்கள் 45 வயசுப் பெண் 25 வயதான ஆணை திருமணம் செய்வதை ஏற்பீர்களா?

திருமணம் என்பது அவர‌வர் விருப்பம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் தற்போது அந்தப் பெண் ஒரு பிடியும் இல்லாமல் தத்தளிக்கிறார் இவரை கட்டியாவது வெளிநாடு வந்தால் போதும் என்ட‌ நிலையில் இருக்கிறார்.வெளி நாட்டிக்கு வந்து கொஞ்ச‌ நாளில் வாழ்க்கை புரிய தொட‌ங்கின பின்னர் தான் தான் அவச‌ர‌ப்பட்டு விட்டோம் என்பது அவருக்கு புரியும்

தனுசும் ரஜனியின் மகளை அப்படித்தான் மணம் முடித்தவர்.பணம் பத்தும் செய்யும்.வண்டியும் மாடும் ஒத்துழைத்தால் எல்லாம் சாத்தியம்.மாட்டைவிட வண்டி கெதியாக பழுதடைவதால் மாட்டை வேறு வண்டியில் பூட்டும் அபாயமும் உண்டு.எப்போதும் ஏட்டு சுரக்காய் கறிக்குதவாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் முடித்தால் அவருடன் தான் வாழ வேண்டுமா? அவர் புலம் வரலாம் வந்து அவருக்கு பிடிக்காவிட்டால் அல்லது ஒருவர் எழுதியதைப் போல் கூப்பிட்டவர் இறந்தால் அவர் ஏன் மறுமணம் செய்ய முடியாது? எதோ திருமணம் என்பது புனிதமானது அது ஒருவருடம் மட்டுமே என்பதெல்லாம் காலவதியான கருத்து.

இந்தச் சமூகம் அதற்காகப் போராடியவர்களைப் பாதுகாக்க வலு வற்ற நிலையில் அவர்கள் தங்களுக்குக்குக் கிடைக்கும் ஒரு சிறு சந்தர்ப்பத்தையும் பயன் படுத்துவது சரியானதே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. தம்பின்னு வந்தாப் பிறகு எனி அடிபட்டு பிரயோசனம் இல்ல. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டமில்ல. அதுதான் இந்தக் கருத்துச் சண்டையின் நோக்கம். வேற ஒன்றும் இல்ல. அக்கா கேட்டு நடப்பீங்க அல்லது நடக்கக் கூடிய சூழல் வந்தா மாற்றி யோசிப்பிங்க என்று நம்புறம்.

உங்களுக்கு என் நத்தார் பரிசில 30% தாறன். இதுவரைக்கும் 100 பவுன் வரை தான் நத்தார் பரிசா வந்திருக்குது. அதில் 30 % தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் அதிகம் பங்களிப்பு வந்தா.. பங்களிப்பு தொகை கூடும். ஆனால் டன் வந்து எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டால் அன்றி வேறு வழியில என்னால் உங்களுக்கு பணம் தர வாய்ப்பில்லை. டன்னின் கணக்கிற்கு அனுப்புவதற்கு அவரின் உத்தரவாதம் அவசியம்.

மனிதாபிமானத்தின் முன் மற்றவை உடனடியாக மறக்கப்பட வேண்டும்.

நன்றி.. அக்கா. :):icon_idea:

யோவ் நெடுக்கு குறுக்கால யோசிக்கிறியள் நல்லா எண்டு மட்டும் புரியுது. உங்கட ரெண்டு நேசக்கரத்தாலயும் கொடுத்தாலும் அது டன்னின்ர கிளாசுக்குள்ள வாங்க மாட்டார் என நல்லாத் தெரிந்த உஷார் பார்ட்டி நீதானப்பா. :lol:

நான் உண்மைக்குந்தான் கேக்குறன் யாரோ ஒரு நாட்டுக்காரன் நீங்கள் கூட்டினீங்கள் பெருக்கினீங்கள் எண்டதுக்காக 100 பவுண்ட்ஸ் பரிசாக் குடுக்குறானே, உங்களுக்காக கஷ்டப்பட்ட அந்த பாவப்பட்ட மக்களுக்காக போராளிகளுக்காக அதிலயும் 30% மட்டுந்தானா முடியுது உங்களால? :rolleyes::icon_idea:

அறிவுள்ள உயிரினம்தான் நீர். முடியல சாமி :lol: :lol:

சும்மா உட்காந்துகிட்டு கருத்தெழுதும் நீங்கள்.. உங்கள் வருவாயின் 100% கொடுத்திட்டு இதைச் சொல்லனும். சும்மா நீட்டி முழக்கினால் போல.. உலகம் என்னால தான் உருளுது என்னு நீங்களை உங்களைப் பற்றி கற்பனை பண்ணிக்கப்படாது.. அது உடம்புக்கு ஆகாது சாமி..! :lol::D:icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களோட கருத்தில என்ன நியாயம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு பிதற்றுகின்றீர்கள்? உங்களுக்கு பரிசா வந்த 100 பவுண்ட்ஸ் விஷயத்தைச் சொன்னா நீங்கள் என்னோட மாத வருவாய்க் கணக்குக்கு வாறீங்கள். நாங்கள் எல்லாம் உங்களை மாதிரி பப்புளிக்கில விளம்பர நோட்டீஸ் ஒட்டுற ஆட்கள் கிடையாது. என் மனச்சாட்சிக்கு தெரியும் , நான் என்ன செய்தனான். என்ன செய்யுறன். என்ன செய்வன் என்று.

உங்களால முடிந்தால் பண்ணும். ஆனா, இப்புடி டன்னிட்டத்தான் கொடுப்பன் பாதி பண்னுதான் கொடுப்பன் என அறிக்கை மட்டும் விடாதீர்கள். ^_^

ஒரு கை செய்யுறத மற்றக் கை அறியாமல் செய்யுறதுதான் உண்மையான உதவி.

உங்கட தையல் மெஷின் கவிதையில சொல்லுறது ஒண்ணு செய்யுறது ஒண்ணா? ஊருக்கு உபதேசம் தனக்கில்லையடி என்ற மாதியல்லோ கிடக்கு. :lol:

எதுவும் உங்கட கப்பாசிட்டிக்கு ஆகாதுன்னா உதவி செய்யுறவனக் குழப்பாமல் அமைதியா இருக்குறது உடம்புக்கு நல்லது. :lol::lol::icon_idea::lol: :lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.