Jump to content

ஈழ போராட்டமும் இரு தலைமுறைகளும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

by Livin Annushyan on Saturday, 05 November 2011 at 13:08

.

தூக்கில் தொங்கும் மனிதன் சரணடையவில்லை.. மக்டாரா உட்ஸ்..(இம்மாத தீராந‌தி யின் இந்திரன் கட்டுரையிலிருந்து)

"போருக்குப் பின்னான இலங்கைச் சூழலும் தமிழ் ஊடகங்களும்" என்னும் தலைப்பில் ஈழத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திர்க்கையின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் அவர்களுடனான உரையாடல் சென்னை இக்சா ஹாலில் அ.மார்க்ஸால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிய மாற்றங்களுடன் தீராநதியில் இம்மாதம் அவருடைய நேர்காணலும் வந்திருக்கிறது. இங்கு தரவுகளும் நேரடி கலந்துரையாடல்களையும் பதிவு செய்யப் போவதில்லை. ஈழம் பற்றி கணக்கத் தெரிந்தாக சொல்லிக் கொள்ளும் தமிழ் அறிவுஜீவியின் முகமூடி மூலம் அபத்தமாக நடத்தப் பட்ட நாடகத்தை பற்றியே சொல்ல வேண்டும்.

கலந்துரையாடலுக்கு முன்னதாக பத்திரிக்கையாளார்கள் தொலைகாட்சிகளை சந்தித்தார் தனபாலசிங்கம்.வீ.தனபாலசிங்கத்தின் குற்றச்சாட்டு இதுவாகவே இருந்தது. "இங்கு தமிழகத்தில் இயங்கும் ஊடகங்களுக்கு ஈழம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. போருக்குப் பின்னான சூழலில் எங்கள் மக்கள் சொல்லண்ணாத் துயரத்தில் இருக்கின்றனர். எங்களுடைய மக்கள் பாரிய இழப்புக்குப்பின் உணவு இல்லாமல் நிலங்களை இழந்து வாழ்வாதார‌மற்று போயிருக்கிறார்கள்.ஆனால் இதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் தமிழக‌ ஊடகங்கள் இன்னொரு ஈழம் போர் வெடிக்கும் என்று எழுதாதீர்கள். அங்கிருக்கும் சிங்கள் ஆட்சியாளர்களை கோபப் படுத்தாதீர்கள். இன்று அவர்களைச் சார்ந்து தான் எங்கள் வாழ்வு இருக்கிறது. தமிழ‌க ஊடகங்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை. அதைப் பற்றி எந்த செய்தியும் இங்கே வெளியிடுவதில்லை. ஆனால் பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி தினக்குரலில் உடனே செய்தி வெளியிட்டிருந்தோம். எந்தவொரு பொறுப்புமில்லாமல் தமிழக ஊடகங்கள் செயல்படுகின்றன". இதையேதான் கலந்துரையாடலுக்கு முன்னான சொற்பொழிவிலும் கூறினார். இதுவரை நடந்தது யாவும் நன்றாகவே நடந்தது.

உரையாட‌லுக‌ளின் ஊடாக‌ வீ.தனபாலசிங்கம் சொன்ன‌ இன்னுமொரு த‌க‌வ‌ல் அவ‌ரின் அர‌சிய‌ல் நிலைப்பாட்டைச் சொல்லிவிடும். ஈழ‌ம் வ‌ந்திருந்த‌ ஹிந்து ராம் "த‌மிழ் தேசியக் கூட்ட‌மைப்பு ந‌ம்ப‌த்த‌குந்த‌ ச‌க்தியாக வளர்ந்து வ‌ருவ‌தாக‌ ச‌ர்டிபிக்கேட் கொடுக்கிறார்" என்றார். ஆக‌ ஹிந்து ராம் ஈழ‌ம் ப‌ற்றி தெளிவாக‌ அறிந்திருக்கிறார். இதே ஹிந்து ராம் தாம் போருக்குப் பின் சிங்க‌ள் அர‌சு த‌மிழ‌ர்க‌ளின் மீள் குடிய‌ம‌ர்வை சிற‌ப்பாக‌ செய்து வ‌ருகிற‌து என்று ஆன‌ந்த‌ விக‌ட‌னுக்கும் பேட்டி கொடுத்தார். ஹிந்து ராமின் அர‌சிய‌லை விர‌ல் ச‌ப்பும் குழ‌ந்தை கூட‌ ந‌ம்பாது. ஆனான‌ப் ப‌ட்ட‌து ஈழ‌ம் என்ற‌ ஒற்றைச் சொல் காணாம‌ல் போக‌வும் நிக‌ழ்கால‌ ம‌ற்றும் வ‌ருங்கால‌ ச‌ந்த‌திக‌ளின் போராட்ட‌ அர‌சிய‌லை ம‌ழுங்க‌டிப்ப‌து ம‌ட்டுமே இன்றைய‌ இவ‌ர்க‌ளின் தேவைக‌ளாக‌ இருப்ப‌து.

க‌லந்துரையாட‌லில் பெரிதும் கேள்விக‌ள் கேட்ப‌து போல் வி.தனபாலசிங்கத்தின் அர‌சியலை விம‌ர்சிக்க‌ அங்கு இருந்த‌வ‌ர்க‌ள் வேறுயாருமில்லை ஈழம் சார்ந்தோர் தான். புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் இட‌துசாரி அர‌சிய‌லைத் தன‌தாக‌க் கொண்டு ஈழ‌ப் போராட‌த்தை முன்னெடுக்கும் சேன‌ன். ஈழ‌ப் பிர‌ச்சனை குறித்து "எரியும் நினைவுகள் " திரைப்ப‌ட‌ம் எடுத்த‌ சோமித்ர‌ன். வன்முறையை நாங்களாக தேர்வு செய்யவில்லை ஆனால் தேர்தெடுக்க நிர்பந்திக்கப் படுகிறோம் என்பது சோமித்ரன் கூற்று. புலி சார் அர‌சிய‌ல் என்று த‌ன்னை அறிவித்துக் கொண்டு த‌ன்னைச் சுடுவேன் என்று ராணுவ‌ம் எழுதி ஒட்டிய நோட்டீசுக்கு பிற‌கும் "சுட்டால் சுடுடா" என்கிற‌ தீப‌ச்செல்வ‌ன்.தீப‌ச்செல்வன் இன்று உயிர்மை காலச்சுவடு முதலிய சிற்றிதழ்களில் சமகால ஈழ அரசியில் அவலங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

சேனனின் கேள்வியில் இருந்து வீ.தனபாலசிங்கத்தின் முகம் கறுக்கத் தொடங்கியது. சேனன் முன்வைத்த கேள்வி இதுதான் "சிங்கள் அரசுக்கு கோபம் ஏற்படாமல் செயலாற்ற வேண்டும் என்றால் ராஜபக்சேவின் மிரட்டலுக்கு( black mail)பயந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களா". இரண்டாவது கேள்வி இது "எந்த முற்போக்கு சக்தியும் இல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறதே?" சோமித்ரன் கேள்வி "இந்தியா அளித்திருந்த சலுகைகள் எதுவும் முறையாகத் தமிழர்களுக்கு சென்று சேரவில்லை" என்பது பற்றி இருந்தது. இதற்கு முன்பு அரசியல் பதில் சொல்லிக் கொண்டிருந்த தனபாலசிங்கம் "தான் ஒரு அரசியல்வாதி இல்லை என்றும் தான் ஒரு பத்திரிக்கையாளனாகவே பதில் சொல்ல முடியும்" என்றார். பின் எதற்கு இந்த சால்ஜாப்பு இவ்வளவு நேரத்திற்கும்?. பிறகு பதில் சொல்லி களைத்தவராக இருந்தார் வீ.தனபாலசிங்கம் . அப்படியே அண்ணாந்து மேற்கூரையை பார்க்கத் தொடங்கினார். அவ‌ரை பார்த்து சிரிக்கத் தான் தோன்றியது . தீபச்செல்வன் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

கலந்துரையாடலுக்குப் பின் தீபச்செல்வன்,சேனன், சோமித்ரனை ஒரு சேர சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வளவு ஒடுக்கு முறைக்குப் பிற‌கும் அறிவார்ந்த சமூகம் தன்னை எவ்வாறு படிபினைகளுடன் கட்டமைத்துக் கொள்கிறது என்பது புரிந்தது. 'வீ.தனபாலசிங்கம் சொல்வது போல் வருங்கால சந்ததிக்கு தாம் எத்தனை இழந்தோம் பறிகொடுத்தோம் என்பது நினைவில் இருக்காது. தன்னை ஒடுக்கும் சக்திக்கு எதிராக போராட மட்டுமே விளையும். இவர்கள் முன்னிறுத்துவது தோற்றுப் போன‌ முந்தைய தலைமுறையை. எனக்கு இடதுசாரி அரசியல் என்றாலும் தீபச் செல்வனுடன் முரண் பட்டாலும் போராட்டக் களத்தில் நாங்கள் ஒன்றாக இருப்போம். ஆனால் அ.மார்க்ஸ் போன்ற முந்தைய தலைமுறையால் அதை எதிர் கொள்ளமுடியாது. அ.மார்கஸ் தன‌க்குத் தெரிந்த ஈழ அரசியலை முன்னிறுவுவதற்காகவே வீ.தனபாலசிங்கம் முன்னால் நிறுத்தி பின்னால் செயல்படுகிறார்' என்றார் சேனன்.

தீபச்செல்வன் சற்று சிந்தனையில் இருந்தவராக இருந்தார். என்ன யோசனை? என்று கேட்பதற்கு பதில் சொன்னார். 'சேனன் கேள்விகள் கேட்கும் போது தீபச்செல்வன் பெயரை குறிப்பிட்டார். பின்னர் மார்க்ஸ் தனியாக அவன் பெயரை எல்லாம் ஏன் சொல்கிறாய் என்று கடிந்து கொண்டாராம். அ.மார்க்ஸுகு புலிகள் என்றால் பாசிஸ்ட். பாசிஸ்டுகள் கொல்லப் பட தான் வேண்டும் என்று நினக்கிறார். அ.மார்க்ஸ் போன்று அரசியல் தெரிந்தவர்களுக்கு இது வடிவா? எவ்வளவு பிழையான அரசியல் அவருக்கு இருக்கு பாருங்கோ' என்றார்.

கூட்டம் நிறைவு பெறுவதற்கு முன் அ.மார்க்ஸ் சொன்னவைகளே ஞாபகத்திற்கு வந்தது." இங்கு யாருக்கும் இலங்கை பற்றிய முழுமையான புரிதல் இல்லை". எங்களுக்கும் தெரியும் மார்க்ஸ் ஈழம் பற்றிய புரிதல் உங்களுக்கு இல்லை என்பது.

முக நூற் குறிப்பில் இருந்து.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.