• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

ஓராயிரம் கதை சொல்லும் பள்ளிக்காலம்.(இசையும் கதையும் போல)

Recommended Posts

அந்தச் சின்னஞ் சிறு கிராமம் ........காலை யில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ..... பட்டணத்துக்கு போக பஸ் வண்டிக்கு விரைவோர்....காலை,ஆலயமணியின் பக்தி மிகு எழுப்புதல்கள் .. பள்ளிச் சிறார்கள் ..என்று வீதி ...போக்குவரத்தால் நிறைந்து இருக்கும்..

கலைவாணி அந்த ஊரின் பாட்டு வாத்தியார் பொண்ணு ...கல்லூரியின் இறுதி யாண்டு படித்துக் கொண்டிருந்தாள் ......பெணகள் கல்லூரி அது .எந்நேரமும் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை .....பெண்கள் என்றாலே மகிழ்ச்சி தானகவே வரும்.

ஆண்டு இறுதிகளில் ...வகுப்பேற்றம் நிகழும்..பன்னிரண்டாம்வகுப்பு, முடிவில் ( பிளஸ் டூ போன்று ) . பல்கலை யின் நுழைவு தேர்வு இருக்கும். பாட்டுவாத்தி யாரின் மகள் என்பதாலோ என்னவோ

கலைவாணிக்கு நன்றாக பாட்டு வந்தது .மேடைகளில் கல்லூரியின் விசேடங்களில் பாடுவாள். .கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி ...சினிமா பாடல்களையும் வகுப்பு பெண்கள் பாடச் சொல்லி கேட்பார்கள். வாழ்வை சினிமா ஆட்கொண்டிருந்த காலம்.உயர்கல்லூரி மாணவிகளுக்கு வருட முடிவிலே பிரியாவிடை நடைபெறும் .

அயலிலுள்ள சகோதர பாட சாலையும் அழைக்க படுவர்.விழா முடிவில் விருந்துபசாரம் நடக்கும்.ஆசிரியைகள் தலைமை யாசிரியர் தம்பதியர் .சகிதம் .அயல்பாடசாலை அதிபர் குடும்ப ..சகிதம் விழா களை கட்டும். இதற்காகவே உள்ளவற்றில் நல்ல ஆடை உடுத்து ......அன்று பெண்களை சேலையிலும் பையன்கள் கோட் சூட் ஆங்கில உடையிலும் காணப்படுவர் .

கேசவன் அந்த ஊரின் ஆண்கள் கல்லூரி அதிபரின் மகன் .ஒரே ஒருபையன் ..இரு வருடங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப் படிப்புக்காக சென்றவன் . தலை நகரில் படித்துக் கொண்டிருந்தான் ....தந்தையின் விருப்புக்காக ...விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தான் ....

கடந்த காலங்களில் ...பள்ளிமாணவி களால் . கலைவாணியோடு இணைத்து பேசப்பட்டவன் . இருவருக்கும் ஈர்ப்பு இருந்தாலும் ........கேசவனின் தந்தையின் கண்டிப்புக் கருதி ......இலை மறை காயாக..இருந்தது.காதல் ...விழாவின் இடையே ....கலை வாணி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி மேடையில் நிறைவடைந்ததும் ..மேடையில் ஒரே கூச்சல் .கலைவாணியை ...சினிமா பாடல் பாடும் படி ....அன்று கலை வாணி அழகான பொன் மஞ்சள் சேலையில் தேவதையாக காட்சியளித்தாள். கல்லூரியின் இறுதி நாள் சக .மாணவிகளின் அன்புக் கட்டளையை தட்ட முடியவில்லை ...

...என்ன பாடல் பாடுவது என்பது தான் அவளது உள்ளக் குமுறல் ....கரவொலி மத்தியில் ..ஒலி வாங்கியை பிடித்து .....மேடையில் ..பாடினாள் ........

" நீ..........தானே நாள் தோறும் நான் பாடக் காரணம் .".....

....

..

............பாடலையும் கேட்டுப்பாருங்கள் ............

இதன் அர்த்தங்கள் ஆயிரம். இது கேசவனுக்கு சொல்லும் காதலா

.......கேசவனுக்கே புரியும். காலம் கை கூடினால் காதல் கை கூடும். .விழா இனிதே முடிவடைந்தது ...

....கேசவனுக்கு அன்றிரவு நித்திரையே இன்றி புரண்டு கொண்டிருந்தான் .......

பள்ளி நினைவுகள் ஓராயிரம் கதை சொல்லும் . பள்ளிக்காலம் கடந்த பின் நினைவுகள் தரும் சுகமே

தனியானது . பாடலின் சுவைக்காக பதியப்பட்ட் சிறு பதிவு.

உங்கள் நினைவுகளும் பள்ளிக் காலம் சென்றனவா ?

.

Share this post


Link to post
Share on other sites

இசையும் கதையும் நன்றாக இருக்கிறது அக்கா..சின்ன,சின்னக் குறைகளையும் சொல்வதில் தப்பில்லைத் தானே.வசனங்களை முறிச்சு,முறிச்சு எழுதுவதை சற்று குறைத்தால் நன்று என்று நினைக்கிறன்..கலை வாணி.இந்தப் பெயரே தொடராக வராமல் இருக்கிறது பாருங்கள்..எழுத்துப் பிழைகள் இப்போ எவ்வளவோ திருத்தி விட்டீர்கள் அதே போல் வசன முறிவுகளையும் கால கிரமத்தில் திருத்திக் கொள்ளவும் என்ற அன்பு வேண்டுதலுடன் முடிக்கிறன்.

Share this post


Link to post
Share on other sites

என் நண்பியின் கருத்துக்கு ,நன்றி :lol:

Share this post


Link to post
Share on other sites

ம்..ரமணிசந்திரன் கதைகள் போல வசதி, கல்வி, எதிர்காலம் எல்லாம் ஒருங்கே இணைந்த நாயகனும் நாயகியும். என் பள்ளி நாட்களில் இப்படி எந்தக் கதையும் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனாலேயே இது "யாவும் கற்பனை" என்று இறுதியில் போடப் போகிறீர்கள் என விளங்குது.

Share this post


Link to post
Share on other sites

நன்றாக இருக்கு . ஆனால் , சிறு சிறு திருத்தங்கள் தேவைப்படுகின்றது . நன்றாக இருக்கின்றது தொடருங்குள் . வாழ்துக்கள் :) :) :) .

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் அக்கா...ஒரு சந்தேகம் இது உங்கள் சொந்தக் கதையா :unsure:

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்கா இந்தக்கதை தொடருமா? தொடரும் என்று போடவில்லை அதுதான் கேட்டேன் .

Share this post


Link to post
Share on other sites

இந்த போர்மல் நடக்கும் போது, மேசைகளுக்கு அடிபடுகின்ற கூட்டம் தான் நினைவுக்கு வருகின்றது!

புறத்தின் அழகை மட்டுமே பார்த்த காலம் அது!

புறமும், அகமும் வேறு வேறு வேறானவை என்றும், அவை இணைந்திருப்பது மிகவும் அருமை என்றும் புரிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுத்தது!!!

பழைய நினைவுகளை மீடியமைக்கு நன்றிகள், நிலாமதி அக்கா!

Share this post


Link to post
Share on other sites

நன்றி அக்கா பகிர்வுக்கு, நன்றாக இருக்கிறது, தொடருங்கள். மறக்க முடியுமா பள்ளி வாழ்கை.........

Share this post


Link to post
Share on other sites

நிலா அக்கா! இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!

அத்தோடு... பல நண்பர்களின் பால்யக் காதல்கள் இப்படியான பாடல்களுடன்தான்.... தொடர்பாடி உறவாடும்! அவற்றை நினைக்கும் போதெல்லாம்... இப்பொழுதும் இனிமையாய் அந்தக் காலத்துக்குள் போய்விடுவேன்!

நன்றி அக்கா! :)

Share this post


Link to post
Share on other sites