Jump to content

பப்பாளிப்பழம்

Recommended Posts

papaya.jpg

பழ வகைகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் எல்லாம் சிறந்தது பப்பாளிப்பழம் தான் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

இது உடல் ஆரோக்கியத்தை மீட்டு புத்துயிர் அளிப்பதால் இத்தகைய சிறப்புப் பெற்றுள்ளது. பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு. இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன.

அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது. எனவே தான் இதை நைட்ப்ளைண்ட்னஸ் எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு அவுன்ஸ் பப்பாளி சுமார் 513 மில்லி கிராம் வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளது. அதே போல பி1, 11 மில்லி கிராமும், பி2, 2.72 மில்லி கிராமும், சி, 13 மில்லி கிராமும், இரும்புச்சத்து 0.1 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 0.3 மில்லிகிராமும் அடங்கி உள்ளன.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், வசதி படைத்தவர்களால் மட்டுமே பெரும்பாலும் உண்ணப்படும் ஆப்பிள் பழத்தை விட இதில் உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கி உள்ளன.

பப்பாளி ரத்த உற்பத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதால் பெரும்பாலான நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலைத் தடுக்கவும், பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல் தொடர்பான நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது. நரம்பு மண்டலத்துக்கு உரமேற்றும் தன்மை இதற்கு உண்டு என்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். :):(

Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி. ஆஹா இவ்வளவு விடயம் இருக்கா. ஊருல வீட்டை நிறைய நின்றது இதை கணக்கே எடுக்கிறதில்லை. ம்ம் இப்ப பார்க்க ஆசையாக இருக்கு. :oops:

Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி. ஆஹா இவ்வளவு விடயம் இருக்கா. ஊருல வீட்டை நிறைய நின்றது இதை கணக்கே எடுக்கிறதில்லை. ம்ம் இப்ப பார்க்க ஆசையாக இருக்கு. :oops:

சரிதான்..முன்பெல்லாம் கிராமங்களில் நிறைய பப்பாளி மரங்கள் இருக்கும் ஆனால் இப்பொழுது அவைகள் அழிந்துவருகின்றன. பப்பாளி மரங்கள் வளர்க்கும் பழக்கமும் தற்போது குறைந்துவிட்டது. தற்போது பப்பாளி பழம் சாப்பிட ஆசையாக இருந்தாலும் உடனடியாக கிடைப்பது என்பது சற்று அரிதுதான். :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ இவ்ளோ விடயம் இருக்கா ?எனக்கு பப்பாளி எண்டால்..பிடிக்காதே.. :?

அதுசரி ஸ்டார் விஜய்..எங்கே இப்படியான தகவல்கள் எல்லாம் எடுக்கின்றீர்கள்? ஒரே பழ மயமாக இருக்கிறது...தொடர்ந்தும் போடுங்கள்.. :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ இவ்ளோ விடயம் இருக்கா ?எனக்கு பப்பாளி எண்டால்..பிடிக்காதே.. :?

:lol:

இதை இப்ப யார் உங்களிட்டை கேட்டது இன்னொரு விசயம் தெரியுமா அழகான பெண்கள் பப்பாளியை விரும்பிச் சாப்பிடுவார்களாம்.....அப்ப பிரியசகி.....(என்ன கல் எடுக்கிற மாதிரி தெரியுது முகத்தானுக்கு எறியிறத்துக்கு.........)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

:lol::(:lol::lol:

ஏன் முகத்தார் தாத்தா இந்த வயசில வாயவைச்சுக்கொண்டு சும்மா இருக்காமா இப்ப பாருங்க கல்லு வரப்போகுது. வீட்டிலயும் ........ இப்படி போற இடங்களிலும் .........

தாத்தாட நிலமை கஷ்டம்தான் :(:(

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பப்பாளி தக்காளியில் இவ்வளவு விடயங்கள் இருப்பது இப்ப தான் தெரியும். தகவலுக்கு நன்றி ஸ்டார் விஐய்.

ஆமாம் அங்கிள் ப்ரியசகி நாய் கலைக்க எல்லோ கல்லு எடுக்கின்றா? உங்களுக்கு எல்லாம் பயம் தான்.

Link to post
Share on other sites

கர்ப்பிணி தாய்மார்கள் பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்து விடும் என்று என் பாட்டி சொன்னார்....

அது உண்மையா? வதந்தியா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை இப்ப யார் உங்களிட்டை கேட்டது இன்னொரு விசயம் தெரியுமா அழகான பெண்கள் பப்பாளியை விரும்பிச் சாப்பிடுவார்களாம்.....அப்ப பிரியசகி.....(என்ன கல் எடுக்கிற மாதிரி தெரியுது முகத்தானுக்கு எறியிறத்துக்கு.........)

நான் ஏதோ என் பாட்டுக்கு ரசி அக்கா, சொன்னேன் ..

நீங்கள் வந்து அடிக்கடி மூக்கை நுழைக்கின்றீர்களே.. :evil:

நானும் எவ்ளோ சொல்லிப்பார்த்து விட்டேன்.கூட ரமாக்கா, அருவி எண்டு நிறையப்பேர் சொல்லியும் நீங்கள் கேட்கல..இனி..முடிவு என் கையில் இல்லை.. :roll: :roll: :evil: :idea: :arrow:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மு.அங்கிள் மேல உள்ள கோவத்துல..ரண்டு தரம் கிளிக் பண்ணி விட்டேன்.. :evil:

Link to post
Share on other sites

மு.அங்கிள் மேல உள்ள கோவத்துல..ரண்டு தரம் கிளிக் பண்ணி விட்டேன்.. :evil:

சரி சரி கூல்டவுண் சகி தாத்தாக்கு வயது போட்டுதுதான் அதுதான் சிலவேளை இப்படிச்சொல்லுறவர் பட் உங்கள்ல நல்ல பாசம் :wink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கர்ப்பிணி தாய்மார்கள் பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்து விடும் என்று என் பாட்டி சொன்னார்....

அது உண்மையா? வதந்தியா?

அது உண்மைதான்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.