Jump to content

"கணினியுலக கொள்ளைக்காரர்கள்" எதிராக நடவடிக்கை


Recommended Posts

"கணினியுலக கொள்ளைக்காரர்கள்" எதிராக நடவடிக்கை

நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் சட்டவிரோத மென்பொருட்களை பதியச் செய்தார்கள் என ஏழு பேர் மீது நியூயார்க் நகர சட்டநடவடிக்கை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அமெஸான் இணைய விற்பனை நிறுவனம், நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்தின் வரித்துறை சேவைகள் அலுவலகமான ஐ.ஆர்.எஸ். போன்றவற்றின் இணையதளங்களையும் இலக்குவைத்து சட்டவிரோத மென்பொருட்களை இவர்கள் அனுப்பியிருந்தனர்.

எஸ்டோனியர்கள் ஆறு பேர், ரஷ்யர் ஒருவர் அடங்கிய இந்தக் கும்பலை "சைபர் பாண்டிட்ஸ்" அதாவது "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" என்று சட்டநடவடிக்கை அதிகாரிகள் வருணித்துள்ளனர்.

நூதன சைபர் தாக்குதல்

இணையதளங்களில் தெரியும் வேறொரு பொருளுக்கான விளம்பரங்களை பாவனையாளர்கள் சொடுக்கும்போது அது அவர்களை குறிப்பிட்ட அந்தப் பொருளுக்கான இணையதளத்துக்கு இட்டுச் செல்லாமல், இவர்களுடைய சட்டவிரோத கணினி சர்வர்களினால் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கு கொண்டு சென்று விட்டிருந்தன.

இவர்கள் வழியாக எத்தனை பேர் தமது விளம்பரங்களைப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த பொருளின் விற்பனையாளர்கள் இவர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்கள்.

இந்த ஏமாற்று வேலையின் மூலம் இந்தக் கும்பல் 14 மில்லியன் டாலர்களை சம்பாதித்திருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது குற்றத்தை விளக்குவதற்கான உதாரணம் ஒன்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வால் ஸ்டிரீட் பத்திரிகையின் இணையதளத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்ட் விளம்பரம் ஒன்று தெரிகிறது. அதனை ஒரு பாவனையாளர் சொடுக்கும்போது அவரது திரையில் "ஃபாஷன் கர்ல் எல்.ஏ." என்ற இணையதளத்தின் விளம்பரம் தோன்றுமாம்.

பாவனையாளரின் கணினியில் அண்டி வைரஸ் மென்பொருள் இருந்தாலும். இவற்றை அடையாளம் கண்டு தடுக்க முடியாத வகையில் இந்தக் கும்பலின் சட்டவிரோத மென்பொருள் அதிநவீனமாக வடிவகைக்கப்பட்டிருந்தது.

http://www.bbc.co.uk/tamil/global/2011/11/111110_cyberbandits.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.