-
Topics
-
Posts
-
வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளம் -கொழும்பு பிரதான வீதியில் தில்லையடிரயில்வேகடவைக்கு அருகில் உள்ள சிறிய கட்டடமொன்றின் சுவரில் புத்தளம் தம்பபண்ணி வரலாற்றைக்குறிக்கும் ஓவியமொன்று வரையப்பட்டுள்ளது.புத்தளம்,தில்லையடிப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.புத்தளம்பிரதேசத்தில் தம்பபண்ணி எனும் இடத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாற்றை பிரதிபலிக்கின்ற வகையில் குறித்த படம் வரையப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு வரையப்பட்டகுறித்த ஓவியம் செவ்வாயக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.இதன்போது இவற்றை வரைந்த பெரும்பான்மை இன இளைஞர்கள் இதனை திறந்து வைத்த தினம் பாதைகளில் கவனிப்பார் அற்று இருந்த முதியோர்கள் மற்றும் அனாதரவானவர்கள் சிலரை அழைத்து அவர்களை குளிப்பாட்டி, முடி வெட்டி , அவர்களுக்கு புது ஆடைகளை அணிவித்து அவர்களையும் அருகில் வைத்துக் கொண்டே அதனை திறந்து வைத்தது பிரதேச மக்களால் பாராட்டு பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.- Ilham - https://www.madawalaenews.com/2019/12/blog-post_786.html
-
சுவிஸ் தூதரக பணியாளரை சிஐடியில் முன்னிலையாகுமாறும் அறிவிப்பு 2019-12-12 12:05:22 வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் அல்லது சிறிலதாவை இன்று சிஐடியில் முன்னிலையாகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பயணத்தடை கோரி சிஐடியின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த 25ஆம் திகதி சுவிஸ் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 27ம் திகதி சுவிஸ் தூதர், இலங்கை அரசிடம் முறையிட்டிருந்தார். கடந்த 8,9,10ம் திகதிகளில் சுவிஸ் பணியாளரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தது. இதேவேளை, கடத்தப்பட்ட சுவிஸ் பணியாளரின் கணவனின் தந்தையான பெவன் பெரேரா கடந்த 2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். http://valampurii.lk/valampurii/content.php?id=20116&ctype=news
-
எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மையில்லை - டலஸ் (நா.தனுஜா) அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகும் செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவை என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அத்துடன் இந்த உடன்படிக்கையைக் கருத்திலெடுக்க வேண்டுமா என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு அதுகுறித்த முழுமையான மீளாய்வொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகும் செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவையாகும். எனினும் கடந்த காலத்தில் இவ்வுடன்படிக்கை தொடர்பில் இல்லாத அபாயமொன்றை நாமாகவே உருவாக்கி பிரசாரம் செய்யவில்லை. உண்மையிலேயே அதில் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பூதாகரமாகச் சித்தரித்துவிட்டு, தற்போது அந்த உடன்படிக்கையில் 30 சதவீதமானவையே நாட்டிற்குக் கேடானது என்று ஆளுந்தரப்பினர் கூறிவருவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/70917
-
மன்னார் இரணைஇலுப்பைக்குளம் பூசாரிக்குளம் பகுதியில் சட்டவிரோத 75 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் காடழிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த சம்பவமானது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்க்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து நேரடியாக சென்ற சிவமோகன் எம்பி குறித்த பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்வதை தடுத்து நிறுத்தியுள்ளார் பின்னர் மடுப்பிரதேச செயலாளர் மடுப்பிரதேச காணி அதிகாரி வரவழைக்கப்பட்டு அப்பகுதி மக்களுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட பூசாரி குளம் காணிகள் அனைத்தும் அப்பகுதி மக்களுக்கே வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் எதிர்தரப்பின் மதஸ்தலம் ஒன்றுக்கு வழங்க்கபடுவதாக இருந்த காணிக்கான வேண்டுகோள் இரத்து செய்யப்படுகிறது மீண்டும் அப்பகுதி கிராம மட்ட அமைப்புகளுடன் இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வினை பெறுவதற்கு கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது https://www.virakesari.lk/article/70913
-
சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல்: நாட்டையும் அரசாங்கத்தையும் அசௌகரித்திற்குள் தள்ளவே முயற்சி செ.தேன்மொழி) நாட்டையும் அரசாங்கத்தையும் அசௌகரித்திற்குள் தள்ளவே சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவிகாரம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த கூடிய விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார். களுத்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி சூழ்ச்சிகார தலைவர்களின் நிர்வாண நிலைமை தற்போது வெளிப்பட தொடங்கியுள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் வழங்கிய வாக்குமூலத்திலற்ற முற்றிலும் மாறுப்பட்ட கருத்தினையே தற்போது கூறி வருகின்றார். அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சுவிஸ்தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் குறித்து ஒரு கருத்தினை தெரிவித்திருக்கையில் தூதரகம் மாறுப்பட்ட கருத்தினை தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தையும் நாட்டையும் அசௌகரியத்திற்குள் தள்ளவே இவை அனைத்தினதும் நோக்கமாக காணப்படுகின்றன. எனவே கூடிய விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/70926
-