அண்மையில் மறைந்த ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான ஈரோஸ் அருளர் (பாடகி MIA இன் தந்தை) கூட சாதிரீதியாக கீழ்த்தரமான முகநூல் பதிவுகளை (முகநூல் பெயர்: Richard Arudpragasam) பதிந்துள்ளார். இத்தனைக்கும் சமதர்மத்தை வலியுறுத்தி அவரது “லங்கா ராணி” நாவலில் எழுதியவர்தான் அவர்.
எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்து மறைந்த நாவலரின் அன்றைய கால கருத்தியல் அவருக்குச் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அவரது கருத்தியலை அருளர் போன்றவர்களும் 21 ஆம் நூற்றாண்டிலும் வைத்திருந்ததுதான் முரண்நகை.
நினைத்துப் பார்த்தால், இப்படி தாம் மிகவும் பாதுகாப்பாக இருந்தபடி ஊரில் உள்ளவர்களை உசுப்பேற்றுபவகளை பார்க்க கடும் கோவம் வரும்.
முகம் தெரியா விடினும் பையன் மீது எனக்கு ஒரு இனம் புரியாத அக்கறை உண்டு. அவர் வயதை ஒத்தவர்கள், குறும்படம், இன்ன பிற விடயங்களில் ஈடுபட, சொந்த செலவில் அவர் இனத்துக்காக என நினைத்துச் செய்யும் செயல்களை பாராட்ட முடியாவிட்டாலும், அவரின் உணர்சியை மெச்சவாவது முடிகிறது.
ஆனாலும் அவர் ஒன்றும் பபபா இல்லை. ஒரு இளந்தாரி.
சும்மா பென்சன் எடுத்து விட்டு, யாழில் பொழுது போக நீட்டி முழக்குபவர்களுக்கும் சம்பந்தன், சுமந்திரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இதை பையன் உணர வேண்டும்.
இங்கே எழுதும் ஐயாமார் பலரது செயல்பாடெல்லாம் மறைமுகமாக இருக்குமாம். ஊரிலேயே இருப்பவன் காயடிக்க படவேண்டுமாம்.
வெளிநாட்டில் புலி - ஊருக்கு போகும் போது எலி. இங்கே இன விடுதலை மாய்மாலம் போடும் பலரின் வேசம் இதுதான்.
இதை பையன் இனம் காண வேண்டும். கூடவே யதார்த்தையும் புரிய வேண்டும்.
உதாரணதுக்கு - அண்மையில் ஊருக்கு போய் வந்துள்ளார். ஊரில் நிண்ட போது வெளிப்படையாக புலிகள், ஈழ ஆதரவு பற்றி ஒரு கூட்டம் போட்டிருக்கலாம்தானே?
குறைந்த பட்சம் யாழில் ஒரு நாம் தமிழர் ஆதரவுக் கூட்டமாவது போட்டிருக்கலாம்?ஏதுமில்லை. முடியாது.
ஆனால் இந்த ஆபத்துக்களை சதா எதிர் கொள்ளும், அங்கேயே வாழும் தனி போன்றவர்கள் எழுதும் போது - அவர்களை ஏதோ துரோகி ரேஞ்சில் திட்டுகிறார்.
இதை சொல்லிக் கொடுக்க வேண்டிய பெரியவர்களோ - ”விடாதயடா தம்பி பிடி” என்கிறார்கள்.