Jump to content

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே

Recommended Posts

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்த என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டுமென இந்தியா பெரிதும் விரும்பியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நோர்வே மத்தியஸ்தத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர், தமிழர் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட போதிலும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியா எவ்வித ஆர்வமும் காட்டவில்லை என நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் படையினர் ராடார்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியிருந்தது.

நோர்வேயுடனான தனிப்பட்ட சந்திப்புக்களின் போது புலிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு நேரடியாக இந்தியா உதவிகளை வழங்காத போதிலும் வேறும் நாடுகளிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் புலிகள் மீதான எதிர்ப்பலை இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் பலமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக இந்தியா அறிவித்திருந்தது.

2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது ராஜீவின் மனைவி சோனியா கட்சியின் முக்கிய பொறுப்பை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் நோர்வே அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முனைப்புக்கள் குறித்து 202 பக்கங்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதனை இலங்கையும் இந்தியாவும் அதிகமாக விரும்பவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருந்தால் இலங்கைக்கு அது தலையிடியாக அமைந்திருக்கும் எனவும் இந்திய தேர்தல் குறித்து இலங்கை கூடுதல் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாரதீய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புலிகளை காப்பற்ற முடியும் என வை.கோ கருதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.globaltamilnews.net

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply

---- May 2009, when the entire LTTE leadership including its founder chief Velupillai Prabhakaran was wiped out, also coincided with the last round of Indian elections that saw the Congress retain power.

The report says that Sri Lanka was worried that if the Congress was voted out, "someone will come to the insurgents' aid." The report says that Indian cabinet minister P. Chidambaram contacted Prabhakaran towards the end of the conflict -- it does not say how -- and suggested that "the LTTE agree to a pre-drafted statement that they will lay down their weapons".......

.......... "But this move, it says, leaked to pro-LTTE Tamil Nadu politician Vaiko "who rejects it as a Congress trick and assures the LTTE that the BJP (Bharatiya Janata Party) will win the elections and come to the Tigers' rescue". That never happened, and Prabhakaran was killed just when the Lok Sabha election results were announced in India." ..................

From http://ibnlive.in.com/news/india-wanted-ltte-put-in-place-norway-report/201460-3.html

இன்றைய கேள்வி வைக்கேவுக்கு இந்த திட்டத்தை லிக் பண்ணியது யார்? இதை லீக் பண்ணியது ஐரோப்பாவில் இருந்து என்பது மட்டும் உறுதி....

சிதம்பரம் ஊடாக புலிகள் தலைமை தப்பிச்செல்ல கேபியால் எடுக்கப்பட்ட முயற்சி தடுத்தமைக்கு யார் காரணம் என்பது இப்போ தெரிய வருகிறது. இன்று புலிகளின் தலைமை மற்றாக அழித்தொழித்தமைக்கு யாருடைய அரை வேக்காடு அரசியல் காரணம் என்பது புரிகிறது. இன்னும் நாம் இவர்களை நம்பகிறோம்.... புலிகளின் தலைவருக்கு வைகோ உறுதியாக அடித்துக் கூறிய ஒரு வசனம் காங்கிரஸ் கவிழ்கிறது கொஞ்சம் பொறுங்கள்... பொறுத்தது மரணம் பொறியாகி விட்டது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூரியன் காலையில் உதிக்கும். - நோர்வே கண்டுபிடிப்பு.

கொஞ்சம் பொறுமையாக இருப்போம், வைக்கோ அவர்கள் பதில் அளிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் ஊடாக புலிகள் தலைமை தப்பிச்செல்ல கேபியால் எடுக்கப்பட்ட முயற்சி தடுத்தமைக்கு யார் காரணம் என்பது இப்போ தெரிய வருகிறது. இன்று புலிகளின் தலைமை மற்றாக அழித்தொழித்தமைக்கு யாருடைய அரை வேக்காடு அரசியல் காரணம் என்பது புரிகிறது. இன்னும் நாம் இவர்களை நம்பகிறோம்.... புலிகளின் தலைவருக்கு வைகோ உறுதியாக அடித்துக் கூறிய ஒரு வசனம் காங்கிரஸ் கவிழ்கிறது கொஞ்சம் பொறுங்கள்... பொறுத்தது மரணம் பொறியாகி விட்டது...

தலைவன் என்பவருக்கு ஒன்றினை பற்றி செல்ல உறுதியான வழிமுறை கிடையாது... ஒன்றுக்கு மாற்று பத்து வழி இருக்கும்... அந்த வகையில் ஏற்கனவே கழுத்தறுத்த கிந்தியாவை பற்றி தெளிவான சிந்தனை தலைவனுக்கு இருக்கும்..

டிஸ்கி:

வைக்கோவை தீவிர ஆதரவாளர் என்றாலும் களநிலமை என்ன என்று இங்கிட்டு உள்ள ஈழ தமிழர்களை வைத்து தானை தலைவர் "பல்ஸ்" பார்த்தே இருப்பார் ...

Link to comment
Share on other sites

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே

இங்கே நோர்வே தமிழர்களை பொறுத்தவரையில் நயவஞ்சக நாய்கள். இதுவே உண்மை ஆனாலும் மதிப்பீட்டில் இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்பட்டது என்ற பெரிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. இது சனல் 4 உடன் இதையும் இணைத்து எமது விடிவுக்காய் குரல் கொடுக்கும் நல்ல சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவர்களுக்கு தான் தண்டனை அதிகம் என நினைக்கிறேன், இந்த பொதுவான சட்டம் இந்த போர் குற்ற விவகாரத்திற்கும் பொருந்துமா?

Link to comment
Share on other sites

பொதுவாக சிறிலங்கா காப்பாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

சிறிலங்கா எங்கே காப்பாற்றபட்டுள்ளது? இந்தியாவை இப்போது தான் நோர்வே அடையாளம் காட்டி உள்ளது, இதில் உங்களுக்கு என்ன வருத்தம் இறைவன்? ஏன் இவ்வாறு இந்திய விசுவாசசியாக இருக்கிறீர்கள். இன்னுமா இந்தியாவை நம்பி இருப்பீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதனை இலங்கையும் இந்தியாவும் அதிகமாக விரும்பவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருந்தால் இலங்கைக்கு அது தலையிடியாக அமைந்திருக்கும் எனவும் இந்திய தேர்தல் குறித்து இலங்கை கூடுதல் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது."

ஐநாவில் பான் கி மூனின் உதவி செயலாளர் விஜய் நம்பியார் இதில் பெரும் பங்கு ஆற்றியது உறுதி படுத்த பட்டுள்ளது. நோர்வேயின் இத அறிக்கையை வைத்து அடுத்த நகர்வுகளை தந்திரமாக கவனமாக செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

நல்ல அறிக்கை. கொமிசன் தலைவர் சொலெகிமை தன்னை தான் பாதுகாக்க வாதாட வைத்து விட்டார். சொலெகிம் தனது கூட்டாளிகளான நம்பியார் , சிதம்பரம் போன்றவர்களை காக்கவும் கொமிசன் முன் கஸ்டபட்டு வக்கு மூலம் கொடுத்திருகிறார்.

தெரிந்த மனித அமைப்பு நிறுவனங்களுக்கு கொப்பி அனுப்பி விடலாம். விக்கிபீடியாவிலும் ஒரு தலைப்பு தொடக்கி ஏற்றி விடலாம். (விக்கிபீடியாவில் நான் தேடிய போது இலங்கை கொலைக்களம் கூட ஒரு தலைப்பாக வரவில்லை. தெரிந்தவர்கள் எல்லாவற்றிக்கும் ஒவ்வொரு தலப்பு தொடக்கி விடுங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் என்றுமே... ஈழத்தமிழர் நலன் குறித்து அக்கறை கொண்டதில்லை.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே... தனது நரிக்குணத்தை காட்டியதாக, அன்ரன் பாலசிங்கம் எழுதிய ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நோர்வே தமிழர்களை பொறுத்தவரையில் நயவஞ்சக நாய்கள். இதுவே உண்மை ஆனாலும் மதிப்பீட்டில் இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்பட்டது என்ற பெரிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. இது சனல் 4 உடன் இதையும் இணைத்து எமது விடிவுக்காய் குரல் கொடுக்கும் நல்ல சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன்.

சமாதான காலத்தில்... புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, டெல்லிக்குப் போய் செய்தியை சொல்லி விட்டுத்தான்..... ஒஸ்லோவுக்குப் போவார் சோல்ஹைம். இறுதி யுத்தம் மும்முரமாக நடந்த போது கூட.... வாய் திறக்காத பச்சப்பிள்ளை.

அதிலை கலந்து கொண்ட யப்பான் யசூசி அகாசி இப்ப எங்கை எண்டே... தெரியேல்லை. சுனாமி அள்ளிப் போட்டுது, போலை கிடக்குது.

Link to comment
Share on other sites

நோர்வேயின் அறிக்கை என்று சொல்லப்படும் இந்த அறிக்கையில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

சொல்லப்பட்ட உண்மைகள் சில:

(1) இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக அரச பயங்கரவாதிகளே சமாதானத்தை குழப்புவதில் முன்னின்ற ஓநாய்கள்.

(2) இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக அரச பயங்கரவாதிகளே தமிழின அழிப்பின் பின்னணியில் இருந்த முக்கிய பங்காளிகள்.

(3) ராஜிவைக் கொலை செய்த சோனியா கும்பல் தாம் எக்காலத்திலும் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக புலிகள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டை உண்மையாக்க முனைந்துள்ளது

மறைக்கப்பட்ட உண்மைகள் சில:

(1) சிங்களப் பயங்கரவாதிகளுக்கு இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக அரச பயங்கரவாதிகள் பெருமளவு ஆயுதங்களை நேரடியாக வழங்கியது.

(2) சிங்களப் பயங்கரவாதிகளுக்கு இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக அரச பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை நேரடியாக வழங்கியது.

(3) சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளை மேற்கொள்ள 20,000 மேற்பட்ட இந்திய ராணுவப் பயங்கரவாதிகளை நேரடியாக அனுப்பியது.

(4) சிங்களப் பயங்கரவாதிகள் பெருமளவு தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை ரஷ்யாவிலும் இரானிலும் இருந்து பெற இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக அரச பயங்கரவாதிகள் உதவியது.

(5) இடம்பெறும் தமிழினப் படுகொலைகளை மறைக்க பெருமளவு முயற்சிகளை மேற்கொண்டது.

(6) தமிழின விரோத இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக அரச பயங்கரவாதிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தை பற்றிய விபரங்களைக் கூறி பேச்சுவார்த்தையை குழப்ப ஏதுவான சூழலை நோர்வே ஏற்படுத்தியது.

(7) தமிழின விரோத இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக அரச பயங்கரவாதிகளை சமாதான பேச்சுவார்த்தைகளில் ஒரு பங்காளியாக நோர்வே ஏற்படுத்தியது. இதுவும் சமாதான பேச்சுவார்த்தையை குழப்ப ஏதுவான சூழலை ஏற்படுத்தியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவமுதன் சொன்னால்.... சரியாய்த்தானிருக்கும். :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரிக் இதைச் சொல்ல ஏன் இவ்வளவு காலம் எடுத்தது. எல்லோரும் தெரிந்து கொண்ட உண்மை என்று எரிக்குக்கு ஏற்கனவெ தெரிந்திரிந்தும் இதுவும் ஒரு குள்ளநரி விளையாட்டுத்தான். சிலவேளை இந்தச்சமாச்சாரம் எங்கோ திசை திரும்புகின்றது என்பது தான் அர்த்தம். இலங்கையைப்பாதுகாத்து இந்தியாவை மாட்டும் திட்டமா? அல்லது ஐ. நா வில் இந்தியாவை இலங்கைக்கு எதிராகத்திருப்பும் திட்டமா?

இந்தியாவையும் மீறி மேற்குலகத்திற்கு சிங்களம் மீது சில காத்திரனமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலம் வரலாம். இந்தியாவின் பலவீனத்தை சிங்களமும் சீனாவும் அளவுக்கு அதிகமாகவே தமக்கு சாதகமாக பாவித்து வருகின்றன.

மேற்குலகின் ராசதந்திர வேலைகளுடன், இந்தியாவின் குள்ள நரித்தனத்தனமும்....

தாக்குப்பிடிக்குமளவுக்கு ஈழத்தமிழன் இல்லை என்பதே.... உண்மை.

அதற்குள், ஈழத்தில் தமிழன் வாழ்ந்தான்.... என்னும் அடையாளமே இல்லாது போய் விடச் செய்து விடுவார்கள்.

கருணாநிதி அடிக்காத தந்தியா, இந்தியா தெரிவிக்காத கண்டனமா இனி ஸ்ரீலங்காவை யோசிக்க வைக்கப் போகுது.

நாம் அதிகளவில் எமக்குள் உள்ள பிரிவுகளையும் பலவீனத்தையுமே அதிகளவில் அலசுவதன் மூலம் எமக்கு முன்னால் உள்ள சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் தவற விட்டுவிடுகிறோம்.

Link to comment
Share on other sites

சமாதான காலத்தில்... புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, டெல்லிக்குப் போய் செய்தியை சொல்லி விட்டுத்தான்..... ஒஸ்லோவுக்குப் போவார் சோல்ஹைம். இறுதி யுத்தம் மும்முரமாக நடந்த போது கூட.... வாய் திறக்காத பச்சப்பிள்ளை.

அதிலை கலந்து கொண்ட யப்பான் யசூசி அகாசி இப்ப எங்கை எண்டே... தெரியேல்லை. சுனாமி அள்ளிப் போட்டுது, போலை கிடக்குது.

தமிழ் சிறி: அக்காசிக்கு என்ன நடந்திருக்கலாம் என்பதை ஔவை 2000 அண்டுகளுக்கு முன் எதிர்வு கூறியிருக்கிறா. அதையேதான் நீங்கள் சொல்ல முயற்சிக்கிறீர்கள். ஒரு பச்சை

"நெல்லுக்கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடி

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லோர்க்கும் பெய்யும் மழை"

வனாமீதிலிருந்து வைத்தகண் வாங்காது, அந்த வெள்ளை முகில் கூட்டமெல்லாம் ஒவ்வோரு ஊர் ஊராய்த்தேடி ஒவ்வொரு வீட்டும் படிகள்தேடி அந்த படிகள் மீது வந்து-போகும் ஒவ்வொரு முகத்திலும் விழுந்து விழுந்து எதை தேடுகின்றன?

.

எங்கே அந்த நல்லான்?

குளிர்ந்த தண்ணீரை அள்ளிக்கட்டிக்கொண்டு தள்ளாது ஆடும் வானம், நல்லானை தேடி அலைகிறது ஏன் எனில் அவன் பொருட்டு அந்த ஊரே குளிர அள்ளி வந்த தண்ணீரைசொரிந்து விட்டுப் போக. அதாவது நல்லவன் ஒருவன் ஒரு ஊரில் வாழ்ந்தால் அவனுக்காக பெய்ய வரும் முகில் தன் பாதையெல்லாம் இருக்கும் கெட்டவன், கயவன், கொடியன், தீயவன், உலுத்தலன், உலோபி எல்லோருக்கும் தான் பெய்துவிட்டுப் போகிறது.

இது ஔவை வகுத்துவிட்டு போன நீதி.

சட்டம்.

இது உண்மையாய் இருந்தால் அதன் மறுதலையும் (inverse) உண்மையாகத்தான் இருக்குமல்லவா?

ஆத்திரதோடு பாய்ந்துவந்த ஆழிப்பேரலை உண்மையில் தேடிதிரிந்தது அக்காசியைத்தான். அதனால்த்தான் ஆயிரம் ஆயிரம் அப்பாவிகளும் அதன் வாயில் விழுந்து அள்ளூண்டு போனார்கள்.

ஆராவமுதன் சொன்னால்.... சரியாய்த்தானிருக்கும். :rolleyes::D

அதுவும் உண்மைதான். எனவே ஒரு பச்சை ஆரவமுதனுக்கு

Link to comment
Share on other sites

சிறிலங்கா எங்கே காப்பாற்றபட்டுள்ளது? இந்தியாவை இப்போது தான்  நோர்வே அடையாளம் காட்டி உள்ளது, இதில் உங்களுக்கு என்ன வருத்தம் இறைவன்? ஏன் இவ்வாறு இந்திய விசுவாசசியாக இருக்கிறீர்கள். இன்னுமா இந்தியாவை நம்பி இருப்பீர்கள்?

விசுவாசிப்பதற்கு ஏன் வருத்தப்படுவான்.? நாரதர் இந்தியாவை இப்போதுதான் நோர்வே அடையாளம் காட்டியுள்ளதா? இது என்ன விசித்திரமான எண்ணம். எத்தனை தடவைகள் யுத்த நிறுத்தக் குழுவினர் இந்தியாவிற்கு அக் காலகட்டத்தில் விஜயம் செய்தனர். அவைகள் எல்லாம் எதற்கு? இங்கு நடப்பதை இந்தியாவிற்குச் சொல்வதற்காகவா? அதற்கெல்லாம் இவர்கள் தேவையில்லை.இந்தியாவைச் சுட்டிக்காட்டியதன் மூலம் இலங்கை தப்புவிக்கப்பட்டுள்ளது. என்பதுதான் உண்மை. இந்த வெளிப்படையான இரகசியம் உலகத்தில் எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றுதான். இவ்வளவு காலம் காத்திருந்து இந்த விடயத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை இவர்களுக்கு என்ன வந்தது. யுத்தகாலத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டிருக்குமானால் அது இந்தியப் பிராந்தியம் சார்ந்த தேவையாக இருந்தது, அதனால் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்கச் செய்ய முடியவில்லை என நோர்வே எண்ணுகிறது எனக் கொள்ளலாம்.இப்போதய தேவையென்ன? ஒன்று தனது தோல்வியை நோர்வே மறைக்க வேண்டியதேவை. மற்றயது அங்கு ஏற்பட்ட அழிவு பிராந்திய நலனை நாடியதால் என்பது இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதே. அதைக் கவனிக்கவில்லையா?இந்தியாவை இவ்வாறு வெளிப்படுத்தியதன் மூலம் இலங்கைக்கான சங்கடங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என்றுதான் நான் கருதுகிறேன். இனிவரும் செயற்பாடுகள் அதனை உறுதிப்படுத்தும் என்றும் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி: அக்காசிக்கு என்ன நடந்திருக்கலாம் என்பதை ஔவை 2000 அண்டுகளுக்கு முன் எதிர்வு கூறியிருக்கிறா. அதையேதான் நீங்கள் சொல்ல முயற்சிக்கிறீர்கள். ஒரு பச்சை

"நெல்லுக்கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடி

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லோர்க்கும் பெய்யும் மழை"

----

இது ஔவை வகுத்துவிட்டு போன நீதி.

இது உண்மையாய் இருந்தால் அதன் மறுதலையும் (inverse) உண்மையாகத்தான் இருக்குமல்லவா?

ஆத்திரதோடு பாய்ந்துவந்த ஆழிப்பேரலை உண்மையில் தேடிதிரிந்தது அக்காசியைத்தான். அதனால்த்தான் ஆயிரம் ஆயிரம் அப்பாவிகளும் அதன் வாயில் விழுந்து அள்ளூண்டு போனார்கள்.

மல்லையூரான்,

எமது இனத்தை அழித்த பாவத்துக்கு.... யப்பானுக்கு சுனாமியோடு அணுக்கசிவும் வந்து... பொத்திக் கொண்டிருக்கிறாங்கள்.

இந்தியாவுக்கு என்ன... அழிவு, வரப் போகுதோ...

இந்தியாவுக்கு பொருத்தமான பழமொழிகள் சில....

முற்பகல் செய்யின்... பிற்பகல் விளையும்.

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் என்ன அறுப்பான்?

ஊரோடு ஒத்து வாழ்.

Link to comment
Share on other sites

எங்கள் இராசதந்திர அணுகுமுறையின் அடிப்படை தவறே Black and white ஒன்றில் வெள்ளை அல்லது கறுப்பு என்கிற பார்வைதான். உண்மையில் மஙகல் gray பகுதிகளுக்குள்தான் இராசதந்திரம் செயல் படுகிறது. ஆனால் எங்கள் வரலாற்று அரசியல் அணுகுமுறையில் உலகம் ஒன்றில் வெள்ளையாக அல்லது கறுப்பாகவே இருக்கிறது.

1980பதுகளின் ஆரம்பத்தில் சில மலையாள அதிகாகள் முரண்பட்டபோது அதை இந்தியா எதிர்ப்பதாக போராளிகள் புரிந்துகொண்டார்கள்.. 1986ல் TELO மீதான தாக்குதலுக்குமுன் இலங்கையில் பகீரங்கமாகவே இந்திய எதிர்ப்பு பிரசாரங்களில் ஈடுபட்டுகிற அறிக்கைகள் பரவலாக இந்திய தரப்புக்கு கிடைத்தது.புலிகள் மட்டுமல்ல PLOT சந்ததியார் உட்பட EPRLF TELO தவிர்ந்த வேறு இயக்க தீவிரவாதிகளும் தங்களுக்கும் சில அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாட்டை தங்களுக்கும் இந்தியாவுக்குமான முரண்பாடாக்கி இந்திய எதிர் இயக்கங்களோடு பயிற்ச்சி கொடுக்கும் அளவுக்கு உறவாடவும் முனைந்தனர். பொலிஸ்காரர் உட்பட இந்திய மக்கள் பின் இந்திய பாதுகாப்பில் இந்திய மண்ணில் இருந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இப்படித்தான் எல்லாம் ஆரம்பமானது.

எமது தவறான இராசதந்திரம் எம்மையும் இந்தியாவையும் பகமைப் படுத்த் முனைந்த இந்திய அதிகார்கள் சிலருக்கும் சிங்கள இராசதந்தரிகளுக்குமே சாதகமாக இருந்தது. எமக்கு எதிரான ஒரு சில அதிகாரிகளை நாமே பலப்படுத்தி வெல்ல வைத்தோம். எம்மீது அனுதாபங்கொண்டிருந்த பார்த்தசாரதி, வெங்கட்ராமன் போன்ற பல இராசதந்தரிகலையும் அதிகாரிகலையும் ஜார்ஜ் பெணாண்டஸ போன்ற அரசியல் வாதிகலையும் நாங்கள் தோற்கடித்தோம்.

இந்த இராசதந்திரத் தவறு நம் நட்ப்புச் சக்திகளை வெறுப்பேற்றியது.

நீண்ட கட்டுரை எழுத அவகாசமில்லை.நெடும்காலமாக இந்தியா என்றால் காங்கிரஸ் என்கிற தவறான அணுகுமுறையே உள்ளது. எங்கள் அறிஞர்கள் பலரும் இந்த நிலைபாடு எடுத்ததுதான் துர் அதிஸ்ட்டம். தயவு செய்து சிந்திக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

நீண்ட கட்டுரை எழுத அவகாசமில்லை.நெடும்காலமாக இந்தியா என்றால் காங்கிரஸ் என்கிற தவறான அணுகுமுறையே உள்ளது. எங்கள் அறிஞர்கள் பலரும் இந்த நிலைபாடு எடுத்ததுதான் துர் அதிஸ்ட்டம். தயவு செய்து சிந்திக்கவும்

உங்களது மேற் குறிப்பிட்ட கருத்தைப் பார்த்த பின்.... எமக்கு உங்களது நீண்ட கட்டுரை தேள்வையில்லை.

மகாத்மாகாந்தி தொடக்கம் சோனியா காந்தி வரைக்கும் வந்து நிண்டு......

அடுத்து... ராகுல் காந்தியா?, பிரியங்கா காந்தியின் புருசனா? மகனா? மகளா?

ஆர் காந்திப் பெயர் வைத்திருந்தாலும்.... இந்தியாவை ஆளாலாம் என்னும் முட்டாள் கூட்டங்களை திருத்தவே.... முடியாது.

Link to comment
Share on other sites

நன்றி தமிழ்சிறி நீங்கள் “நீண்ட கட்டுரை எழுத அவகாசமில்லை.நெடும்காலமாக இந்தியா என்றால் காங்கிரஸ் என்கிற தவறான அணுகுமுறையே உள்ளது. எங்கள் அறிஞர்கள் பலரும் இந்த நிலைபாடு எடுத்ததுதான் துர் அதிஸ்ட்டம். தயவு செய்து சிந்திக்கவும்

உங்களது மேற் குறிப்பிட்ட கருத்தைப் பார்த்த பின்.... எமக்கு உங்களது நீண்ட கட்டுரை தேள்வையில்லை.” என்று எழுதினீங்க. எமக்கு என்றாய் யாழ்கலத்தில் வருகிற அனைவருக்கும் என்றுதானே அர்த்தம் நண்பரே? யாழ்கள உறவுகள் அனைவருக்கும் உங்கள் கருத்து சம்மதம் என்று நினைக்கிறீர்களா நண்பரே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.