Nirupans

ஈழத்தில் ஆழம் அறிய முடியாத காலப் பெரு வேர்கள்!

Recommended Posts

இப்போது கார்த்திகை மாதம்!

கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி

எம் கண்ணீரில் வறண்டு போன

தேசத்திற்கு மழை பொழிந்து

காலப் பெரு வெளியில்

தமிழர் தம் வாழ்விற்காய்

கல்லறையுள் துயில் கொள்ளும்

ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை

நினைவு கூர்ந்து

குளிர்விக்கும் நன் நாள் இது!

karthigai-poo.jpg

அடிமைத்தளையுள் சிக்கி

தமிழன் உணர்வை தொலைத்து

வம்சம் தனை இழந்து

வாழ்வை பறி கொடுத்து

வந்தேறு குடி என சிங்களரால்

வழங்கப்படும் நாமத்தை பெற்று

வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து

உலகறியா இனமாக ஈழத் தமிழன்

உருமாறிச் சிதைந்திடுவான்

என இறுமாப்போடு

எமை அழிக்க வந்தோர்க்கு

தமிழர் தம் வீரம் உணர்த்தி

துயில் கொள்ளும்

குழந்தைகளை

நினைவு கூறும் நன் நாள் இது!

பேசும் தெய்வங்களும்

காவல் தெய்வங்களும்

எங்கே என அடி முடி தேடிய

தமிழர் தலை முறைக்கு

நும் அருகே இருக்கிறார்கள்

காவல் தெய்வங்கள்-

உமை(க்) காக்க வந்த தெய்வங்களாய்

கல்லறையினுள் துயில்கிறார்கள்

என சேதி சொல்லி எமை நிமிர்ந்து

நிற்கச் செய்த மழைக் கால மாவீரர் மாதமிது!

வீழும் தமிழர் இனம்;

தமைக் காக்க வழி தெரியாது

தம் எதிர் கால வாழ்வை

தொலைத்து சாகும் தமிழர் இனம்

என இனவழிப்பு நடனம் ஆடிய

இனவாதப் பேய்களுக்கு

ஆளப் பிறந்தவர்கள் தமிழர்கள் என

உணர்த்த ஒரு தானைத் தலைவனை

தந்ததும் இந்த மாதம் தான்!

கல்லறையை அழித்தோம்;

கருமமே கண் எனவாகி

தமிழர் தம் உணர்வுகளை

நீறாக்கி பொசுக்கி விட்டோம்;

போரில் பின்னடையை வைத்தோம்;

ஊரில் இருந்த உணர்வுள்ள

மனிதர்களையும் உருத் தெரியாதோர்

ஊடாக உருவம் அழித்தோம் - என

இறுமாப்பு கொண்டு நிற்கும்

இனவாத சித்தாந்தப் பேய்களுக்கு

மக்கள் தம் மனதில்

இன்றும் இவர்கள் இருக்கிறார்கள்

எனும் உண்மை தெரியாது போய் விட்டதே!!

Kallarai.jpg

நீங்கள் வாழும் தெய்வங்கள்!

எம் வாசல் வந்த பகையை

அழித்து எமை காத்து நின்ற

நடமாடும் செல்வங்கள்!

கண் முன்னே தரிசித்தோம்!

பகை கண்டு அஞ்சற்க

எனச் சொல்லி நின்றவர்கள்!

என மண் முன்னே நிற்கையிலும்

மன்னவனின் மொழியினை

மனதில் நிறுத்தி

தாயகம் ஒன்றே கனவெனக் கொண்டு - இன்று

வேரென எம்மோடு தொடரும்

பெரு விருட்சங்கள் நீவிர்!

கார்த்திகைப் பூவும்

கதிரவன் ஒளியும்

பார்த்திருக்கப் புலியானோர்

சேதிகளும்

உம் பாதம் தொடர்ந்தனவே!

வார்த்தைகள் கொண்டு உமை

எப்படிப் பாடி

கவிப் பா ஆக்கிடலாம் என

எண்ணினாலும் தமிழில்

ஏதும் சிக்கலையே எம் தேவரீரே!

நும் நினைவுகள்

எம் மனக் கனவுகள்!

கல்லறையை அழித்தோம்

என கூப்பாடு போடுவோர்

மனக் கல்லறையை

திறந்து பார்க்கா

இனத்துவேச மனிதர்களுக்கு

இன்றும் மக்கள் மனங்களில்

வாழ்கிறோம் யாம் என

சேதி உரைத்து நிற்கிறீர்களே!

உங்கள் கனவும் ஒரு நாள் பலிக்கும்

எனும் உணர்வோடு

நாமும் நடக்கிறோம்!

http://www.thamilnattu.com/2011/11/blog-post_03.html

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிருபன் பகிர்வுக்கு, எங்களை தாங்கிய வேர்கள் அவர்கள், தமிழன் என்ற ஒர் இனம் இருக்கும் வரை காவல் தெய்வங்களின் நினைவுநாள் நினைவு கூரப்படும்

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிருபன்! உணர்வு பூர்வமான கவி வரிகளுக்கு!

மாவீரர்கள் எங்கள் வீரத்தின் விதைகள்....!

எங்கள் மனத்தினில்தான் அவர்களைச் சுமக்கின்றோம்............ உணர்வுகளுடன்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற என்னுடைய கவிதை ஒன்றுக்கு தொடர்ச்சியாக புலி எதிர்ப்பாளர்களிடமிருந்து கவிதையை எதிர்கொள்ள முடியாத காழ்ப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது. அக் கவிதை பெரும்பாலும் மாவீரர் தினம், மே – இன அழிப்பு நினைவுநாள், இலங்கை சுதந்திர தினம் முதலிய நாட்களில் ஏராளமான தமிழ் இளையவர்களால் அதிகம் பகிரப்படுகிறது. ‘நீ ஸ்ரீலங்கன் இல்லை என்றால் எதற்காக ஆசிரியர் உத்தியோகம் செய்கிறாய்?’ என்பது தொடங்கி, ‘எந்த நாட்டின் அடையாள அட்டையை பயன்படுத்துகிறாய்’ என்பது வரை கேள்விகள் நீளும். அந்தக் கவிதையே யாவற்றுக்குமான பதிலை சொல்லி விடுகிறது. அண்மைய காலத்தில், கொரோனா பேரிடர் காலத்தில் சிங்கள இராணுவத்தை வைத்து அரசு செய்கிற அரசியலையும் வடக்கு கிழக்கில் அதனால் ஏற்படுகிற அச்சுறுத்தலையும் பற்றி ‘உரிமை’யில் எழுதிய போதும்கூட சிலர் இதிலும் இராணுவத்தை எதிர்க்கக்கூடாது என்று அறிவுரைத்தார்கள். சவேந்திர சில்வாவை கொரோனா தடுப்பு தலைவராக நியமித்தது முதல், கொரோனா தடுப்பில் இராணுவத்தை பயன்படுத்தியது வரையில் கோத்தபாயவின் தந்திரமான அரசியலே என்பது குழந்தையும் அறிந்த காரியம்தான். ஆனாலும் நம்பவர்கள், இது அரசியல் பேசும் காலமில்லை, அரசுக்கு ஒத்துழைக்கும் காலம் என்றார்கள். வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த காலங்களிலும் இதுபோன்ற கொரோனா பேரிடர் காலங்களிலும் நமது வெகு சில தமிழர்கள் ஸ்ரீலங்கன் ஆகிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். தமிழ் மக்களை நிர்வாணமாக்கி மனிதத் தன்மையின்றி இன அழிப்பு செய்த இராணுவத்தின் கொடுமைகளை மறந்து அவர்களை போற்றுவதையும் பார்த்திருக்கிறேன். கதைகளில் படித்திராத, பெரும் சாதனைகளை செய்த பெரு நாயகர்களை சந்தித்த ஈழ மண்ணில் இருந்து கொண்டு சோதனைச்சாவடியில் நிற்கும் இராணுவத்தை ஹீரோ என்பது நகைப்பானதல்லவா? அப்படிப்பட்ட தமிழ் மக்களுக்கு இதே கொரோனா காலத்திலேயே “தமிழர்கள் யார்?” என்பதை குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச தெளிவான பதிலை தன் பாணியிலேயே சொல்லியிருக்கிறார். இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தை ஒரு போர்க் காலமாக சிங்கள அரச படைகள் மாற்றியிருந்தன. வழமைக்கு மாறான இராணுவ ரோந்துகள்கூட முல்லைத்தீவு வீதியில் நடந்து கொண்டிருந்தன. கடுமையான கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட இல்லாத இராணுவ சோதனைச்சாவடிகள் திறக்கப்பட்டன. தமிழர்களின் நினைவேந்தலை தடுப்பதற்கு கிருமியை துணையாக்கிக் கொண்டது இலங்கை அரசு. நினைவேந்தல் நிகழ்வுக்காக மே 18 அன்று கிளிநொச்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் புறப்பட்டேன். அன்றைக்கு காலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பட்ட செய்தியும் வந்திருந்தது. அதைப்போல யாழிலிருந்து வந்த பலரும் ஆனையிறவிலும் சங்குப்பிட்டியிலும் வைத்து திருப்பி விடப்பட்டனர். தருமபுரத்தில் இருந்த சோதனைச்சாவடியில் வைத்து நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டோம். அந்த சோதனைச்சாவடி வழமைக்கு மாறான கடும் இராணுவப் பிடியில் இருந்தது. சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் எம்.பி. அந்த மாவட்ட வேட்பாளர். சிறீதரனை அனுமதிக்க முடியாது என்று கடும் பிடியில் சொன்னார் காவல்துறை பொறுப்பதிகாரி. ஆனாலும் முள்ளிவாய்க்கால் சென்ற பலரும் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டனர். முன்னாள் எம்.பி சாள்ஸ்சும் திருப்பி அனுப்பட்டார். சாதாரண மக்கள் முதல் ஊடகவியலாளர்கள் வரை தடையே. கடுமையான மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. கொரோனாவின் பெயரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கிற முனைப்பில் கடுமையாய் இருந்தது இராணுவம். மிக அருகில் இருந்து பல நூறு கிலோமீற்றர்கள் ஓடி ஒருவாறு முள்ளிவாய்க்காலை அடைந்தோம். உரிமைக்கும் விடுதலைக்கும் போராடிய ஈழத் தமிழ் இனம், அறமற்ற போரின்மூலம் இன அழிப்பு செய்யப்பட்ட நிலம் முள்ளிவாய்க்கால். ஈழத் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை சொல்வதும் அந்த நிலம்தான். ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்வதும் அந்த நிலம்தான். முள்ளிவாய்க்கால் முடியவில்லை என்பதையும் தமிழர்கள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் இன்றும் உரைப்பதும் அந்த நிலம்தான். முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழ் இனம் அழிக்கப்பட்ட சாட்சி மாத்திரமல்ல. வாழ்தலின் குரலையும் கொண்ட நிலம். கொரோனா பேரிடர் காலத்திற்கு ஏற்ப, சுகாதார முறைகளுடன் உரிய வகையில் மக்கள் அஞ்சலியை செலுத்தினர். எதற்காக இன்றைக்கு இந்த வீதிகளை மூடி மக்களை தடுத்தனர்? எம் மக்கள் ஆயுதங்களை ஏந்தியா வந்தனர்? முள்ளிவாய்க்கால் நிலத்தில்தான் எங்கள் சீருடைகளையும் ஆயுதங்களையும் துறந்துவிட்டோமே? எல்லாவற்றையும் துறந்து எல்லாவற்றையும் இழந்தல்லவா எம் மக்கள் முள்வேலிச் சிறைகளுக்குச் சென்றனர்? இப்போது எங்களிடம் கண்ணீர் மாத்திரம்தானே இருக்கிறது. எங்கள் மக்கள் ஒரு தீபம் ஏற்றவும் ஒரு சொட்டு கண்ணீர் விடவுமே முள்ளிவாய்க்காலுக்கு செல்லுகின்றனர். அதற்கும் தடையா? தமிழ் மக்கள் ஏற்றும் தீபமும் சிந்தும் கண்ணீரும் இலங்கையை இரண்டாக்கி விடுமா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் புலிகளின் அஞ்சலியாக அரசு பார்க்கிறதென்றால், அழிக்கப்பட்ட மக்களையும் புலிகளாகவே அரசு கருதுகிறதா? அல்லது எஞ்சி இன்று வாழ்கிற மக்களையும் புலிகளாக அரசு கருதுகிறதா? இந்த தீவில் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வரலாறு முழுதும் ஒரு முக்கியமான நாளாகவே இருக்கும். வரும் தலைமுறைகள் யாவும் நினைவுகூரும். இதனை தொடர்ந்தும் தடுக்க அரசு முனைந்தால் வரலாறு முழுதும் தமிழினத்துடனான முரண்பாடு ஒரு போராகத் தொடரத்தான் போகிறது. முள்ளிவாய்க்கால் போருக்கும் அமைதிக்குமான புள்ளி. இறந்தவர்களை நினைவுகூர முடியாதென தடுப்பது எத்தகைய மனித உரிமை மீறல்? இறந்தவர்கள்மீதே இத்தகைய வன்மத்தை செலுத்துகிற அரசு உயிரோடு இருப்பவர்கள்மீது எப்படி வன்மத்தை செலுத்தும்? அதற்கும் சாட்சியாகிறது முள்ளிவாய்க்கால். அப்படினெயில் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வது எப்படி? இந்த இன ஒடுக்குமுறையும் பாரபட்சமும் எவ்வளவு கொடியது? இதே காலத்தில் போர் வெற்றி விழாவை அரசாங்கம் கொழும்பில் முன்னெடுத்தது. வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது நீதிமன்றம் பாய்ந்து தனிமைப்படுத்தல் தீர்பபை வழங்கியது. ஆனால் சுகாதார முறைகளுக்கு பொருத்தமில்லாமல் போர் வெற்றி விழாவில் கலந்து கொண்டவர்கள் அமர்ந்திருந்தனர். அப்படியா நிலையில் போர் வெற்றி விழாவை செய்த எந்த தடையும் இல்லை. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவுகூரத்தான் தடை என்பது, இந்த தீவில் காலம் காலமாய் தொடரும் இன ஒடுக்குமுறையின் தொடர்ச்சியான அணுகுமுறைதான். தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்ற அதே பழைய அணுகுமுறைதான். தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதி என்ற மாகாவம்ச மனநிலையின் வெளிப்பாடுதான் இது. தமது போர் வீரர்கள்மீது அழுத்தங்களை பிரயோகித்தால், உறுப்புரிமையை விலக்கிக்கொள்ள நேரிடும் என்று இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையை கடுமையாக எச்சரித்துள்ளார். மனித குலமே நடுங்கும் இனவழிப்புக்களை செய்துவிட்டு தமிழர்கள் கண்ணீர் விடுவதற்கும் நினைப்பதற்கும் தடை விதித்துக் கொண்டுதான் இதை சொல்லியிருக்கிறது அரசு. நீங்கள் போர் வீரர்களை காப்பாற்ற ஐ.நாவை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்றால், நாம் அப்போரில் இறந்தவர்களை நினைத்து கண்ணீர் விடவும் நினைவுக்கவும் பிரிந்து தனிநாடு செல்வது நியாயமானதல்வா? இத் தீவில் ஒரு தினம், தமிழ் மக்களுக்கு கண்ணீருக்கு உரிய நாளாகவும் சிங்கள மக்களுக்கு கொண்டாட்டத்திற்குரிய நாளாகவும் இருக்கிறது என்றால் நாம் ஒரு நாட்டு மக்களாக இருக்க முடியாது. எங்கள் மனங்கள் மிகவும் கனத்துபோகிறது. “என் குருதி உனக்கு கொண்டாட்டமாகவும் எனக்கு கண்ணீராகவும் உள்ளவரையில் நீயும் நானும் வெவ்வேறு நாட்டினரே. என் துயரம் உன் மண்ணில் வெற்றிக் கொடியாகவும் என் மண்ணில் தலை கவிழ்ந்த தோரணமாகவும் உள்ளவரையில் இத் தீவில் இரு நாடுகளே.” ‘தமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை’ என்பதை முள்ளிவாய்க்கால் மாத்திரமல்ல, முள்ளிவாய்க்காலை நினைவுகூற மறுக்கும் தென்னிலங்கையும் அழுத்தமாகவே சொல்கிறது. கவிஞர் தீபச்செல்வன் https://thamilkural.net/thesathinkural/views/40587/
    • ஆபிரிக்காவிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இவற்றையெல்லாம் வறுத்து இறால் வறுவல் போல விரும்பி உண்கிறார்கள். இவற்றுள் சில புரதம் நிறைந்த உணவு வகைகள். உலகின் உணவுப்பற்றக்குறையை நீக்க இந்த உணவுகளை உலகமயமாக்க ஐ.நா.வின் உணவுப்பிரிவு முயற்சி செய்து வந்தது. கரப்பொத்தான், ஈசல் போன்றவையும் இந்த உணவு வகைகளுள் அடங்கும். பிலிப்பீன்ஸிலும் சிங்கப்பூரிலும் கரப்பொத்தானை விரும்பி உண்பார்கள். சிங்கப்பூர் சட்டம் போட்டு அதை தடை செய்திருக்கிறது. மற்றவர்கள் கரப்பொத்தான் சாப்பிடுவதை வெறுக்கிறார்கள் என்பதே அதற்கு காரணம். இந்தியாவின் சில பகுதிகளில், ஈசல், எறும்பு வறுவல் விரும்பி உண்ணப்படுகிறது.
    • அட்டை உள்ள ஊரில் தானே பிறந்து வளர்ந்தோம்...... வீட்டை சுற்றி கல்லு பதித்தால் அட்டை பூச்சிகள் போன்றன வீட்டுற்குள் வருவதை குறைக்கலாம்.