Jump to content

ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி


BLUE BIRD

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்திற்கு நன்றி தோழர் புங்கையூரான்..

தோழர் தப்புலி விடுங்க நம்ம உறவுகள்தானே .. அவருக்கு பார்வை கோளாறு சிறுத்தைய குரங்கா தெரிந்து இருக்கு..

டிஸ்கி:

ஆனால் உதவாத டாப்பிக்கை ஒம்பெத்தெட்டு தரம் ஆராய்ந்து சுய அரிப்பை சொறிந்து கொள்ளுபவர்களுக்கு இனிமெதான் இருக்கு டிஸ்கி.. கூழுக்கு(குறிக்கோள்) என்ன வழி அதைத்தான் ஆலோசிக்கணும் ஆக்க பூர்வமான வழிமுறைகளில் இறங்கோணும்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் புரட்சி

ஏற்கனவே இந்தத் திரி தீப்பற்றி நாலு பக்கம் நீண்டு விட்டது. நீர் வேறு வந்து திருமூலர் திருமந்திரத்திற்கு அர்த்தம் கேட்பது மாதிரி எண்ணையை ஊற்றுகிரீர். :D

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை நல்லா திரிக்கிறார்கள். ராஜேஸ் பாலா என்றவர் பற்றி யாழ் களத்தில் பதியப்பட்ட பயோடேட்டாவை ஒருக்காக நிழலி பார்க்க வேண்டும். அதுமட்டுமன்றி மீண்டும் குறிப்பிடுகிறேன்.. அவர் மேடையில் பேசியதைத் தான் நான் அப்படியே சொல்லி இருக்கிறேன். அது ஆபாசம் என்றால் அது எனது கருத்தின் அடிப்படையிலானதல்ல. ராஜேஸ் என்ற அந்தப் பெண்மணியின் பிரச்சனை. அவரிடம் போய் கேளுங்கள்.. ஏன் இப்படி ஆபாசமா பேசுறாய் என்று..!!

மாங்கனிகள்.. தொட்டிலில் என்ற வரிகளுடன் அமைந்த பாடல்.. பேசாப் பொருளில்.. அதில் ஆபாசம் தொனிக்கிறதா... அல்லது ரசனை இருக்கிறதா.. என்ற வினவலுடன் தான்.. இடப்பட்டிருக்கிறது நிழலி. ஆனால் பொழுதுபோக்கில்.. காமம் ததும்பும் பாடல்களை இணைத்து ரசிக்கிறீங்களே.. அது எந்தக் கணக்கில் அடங்கும்..???! :lol::icon_idea::D

ரதி அக்கா: நீங்கள் எழுதியதில் எனக்குத் தவறு என்று பட்டதைச் சொல்லி இருக்கனே தவிர.. நீங்களா அதை உணர்ந்து கைவிடுதல்.. நன்று என்று சொல்லிருக்கனே தவிர.. என் புத்திமதியைக் கேட்கச் சொல்லி உங்களுக்கு நான் சொல்லேல்ல. உங்களுக்கு மட்டுமல்ல எவருக்குமே புத்திமதி சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஆனால் என்னால் உணரப்படும் குறைகளை நிறைகளை நான் சுட்டிக்காட்டுவேன்.. அதையும் யாரும் தடுக்க முடியாது. அதில் தவறிருந்தால் கள நிர்வாகம் களவிதிக்கமைய தடுக்கலாம். அது அவர்களின் தெரிவு. ஒரு சக கருத்துக்கள நபராக நான் உணரும் தவறுகளை.. சுட்டிக்காட்ட எனக்கு உரிமை இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். மற்றும்படி.. ஏற்பதும் விடுவதும்... உங்க உங்க உரிமை.. பிரச்சனை..!

தங்கா: மார்புக் கச்சு என்ற பதம் நளவெண்பாவிலும் இடம்பெற்றிருக்கப் பொழிப்புரையில் படித்த ஞாபகம். அதற்கு புகழேந்திப் புலவர்.. வார் என்ற பதத்தை உபயோகித்திருக்கக் காணலாம். ஆனால் அது பலர் அறிந்த பதமல்ல. புலவர்களும்.. கவிஞர்களும் அறிந்த பதம். மார்ப்புக் கச்சு.. வார்.. என்று சொல்லி எங்காவது விளம்பரம் செய்யினமா..???! இல்லைத் தானே. பிரா என்று தானே சொல்லி விற்கினம்..!

வாரணியுங் கொங்கை மடவாள் நுடங்கிடைக்குப்

பேருவமை யாகப் பிறந்துடையீர்;- வாரீர்

கொடியார்!’ எனச்செங்கை கூப்பினான் நெஞ்சம்

துடியா நெடிதுயிராச் சோர்ந்து.

( வார் = கச்சு, ஆர் = சிறப்பு விகுதி, நெடிது உயிரா = பெருமூச்சு விட்டு. )

நளன் மனந்துடித்து, பெருமூச்சு விட்டு, ” பூங்கொடிகளே , கச்சினை அணிந்த முலையினையுடைய இளமை பொருந்திய தமயந்தியின் துவளும் இடைக்குச் சிறந்த உவமைப் பொருளாகத் தோன்றி அதன் பயனைப் பெற்றுள்ளீர்கள்; ஆகலின், உங்களுடைய அழகு அவளுடைய இடையழகு போன்றதா என்பதைக் காண வேண்டும்! வாருங்கள்!” என்று கூறித் தன் சிவந்த கைகளைக் குவித்துக் கொடிகளைத் தொழுதான்.

(சாறி நிழலி.. நீங்க கண்ண மூடிக்குங்க.. நளவெண்பா படிக்கும் போது நீங்க பார்க்கக் கூடாது. ஏன்னா அது ஆபாசம். எத்தனையோ.. மனிதக் காம உணர்வை எத்தனையோ புலவர்கள்.. கவிஞர்கள் அழகுற வர்ணிக்கிறாங்க.. ஆனால்.. அதை படு கேவலமாக.. படுவுக்குள் அடக்கிறது கூடவா.. தங்களின் புலனுக்கு பரிதாபமாக உணரப்படவில்லை. காமம் ஒரு மனித உணர்வு. அதை நாங்கள் அடக்கச் சொல்லேல்ல. அதையும் நாகரிகமாக சொல்ல முடியும் என்று தான் சொல்லுறோம். நீங்களும்.. இன்னும் சிலரும்.. இதை உணர்ந்தாலே போதும்.. ரதி அக்கா போன்றவர்கள் தன்பாட்டில் திருந்திக் கொள்வார்கள்.

:):lol: )

இந்தத் தலைப்பு.. தலைப்புக்கு வெளில அதிகம் போயும்.. ஏன் இன்னும் மூடல்ல. முன்னர் பல தலைப்புக்கள் கருத்துக்கள் தலைப்பை விட்டு போயிட்டு என்று மூடினவை. நெடுக்காலபோவனுக்கு இன்னும் கொஞ்சம் விழட்டும் ரசிச்சிட்டு.. மூடுவம் என்று நினைச்சிட்டீங்கள் போல. அது வழமையான ஒன்று தான் இருந்தாலும் அதையும் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். என்னைப் பொறுத்தவரை.. நான்.. கருமத்திற்கு உதவாத எதையும் கருத்தாக உள்வாங்கிக் கொள்வதில்லை. வாசிப்பதோடே அவற்றை விட்டுவிடுவேன். அதனால்.. நீங்கள் என்னை வைச்சு.. என்ன தான் சந்நிதி ஆடினும்.. அது என்னை எந்த வகையிலும் பாதிக்கா. என் எண்ணங்களுக்கு கருத்துக்களுக்கு தடையிடா.

:):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஷைகள் பித்தளையாகும்..............

மௌனமே தங்கம் ஆகும்!

முன்பு இது சரியாய் விளங்கவில்லை.............. இப்போதான் நல்ல புரியுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பூன் என்றால் என்ன ஈழ தோழர்கள் அறிய தருவீர்களா? உங்கட பாசை புரியாது என்றாலும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன.. ? :)

தேவையில்லா விடயங்களை பற்றி அறிவதில் ஒரு பிரயோசனமும் இல்லை இது ஒரு கெட்ட வார்த்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்புக்கு, திரிக்கு எப்போ இராஜினாமா.....?நான்கு பக்கங்கள் தாண்டு மட்டும் பேசுவதற்கு இதில் என்ன விசேசமாக இருக்கிறது....? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழுத்து மூடினா இந்த திரியை நல்லது

யார் பெரியவர்?

ஒருநாள் ஒரு பெரிய கேள்வி பிறந்தது,

உறுப்புகளில் எல்லாம் யார் பெரியவர்?

கண்களா, காதுகளா, நாசியா, நாவா?

கால்களா , கரங்களா, வயிரா, வாயா?

உடல் நலம் பேணுவதில் இவர்களில்

உண்மையில் யார் தான் பெரியவர்?

விடை தெரியவில்லை ஒருவருக்கும்,

உடன் தொடங்கியது வேலை நிறுத்தம்!

“எங்கள் உதவியின்றி, எப்படி உண்ணுவீர்கள்?”

என்று தங்கள் பெருமை பேசின கரங்கள்!

“எங்கள் உதவி இன்றி ஓடி, ஆடிப் பொருள்

எப்படித் தேடுவீர்” என்று கேட்டன கால்கள் .

” நான் தான் உணவை விழுங்கி உடலுக்கு

நன்மை புரிகின்றேன்”, பெருமை பேசியது வாய் .

” எங்கள் உதவி இன்றி எப்படி ஜீரணம் செய்வீர்”?

என்று வழக்காடின வயிறும், இரு குடல்களும் .

காதுகளும், கண்களும், மற்ற உறுப்புக்களும்,

கலகம் செய்யத் தொடங்கின ஒரே நேரத்தில்.

முடிவு காண முடியாமல் போனதால், அவைகள்

முழுவதுமாகப் ஆக போராட்டத்தில் இறங்கின.

உணவு உள்ளே செல்ல வில்லை; உடல் சக்தி இழந்தது.

கண்கள் மங்கி விட்டன; காதுகள் பஞ்சடைத்தன;

மூளை மழுங்கி விட்டது; குரல் கூட எழும்பவில்லை.

மூலையில் சுருண்டு விழுந்து விட்டது உடல்.

புரிந்தது அப்போதுதான் அதற்கு ஒரு உண்மை.

பெரியவர் சிறியவர் என்கின்ற பேதம் இல்லை.

சரிவர அனைவரும் தத்தம் பணிகளை,

புரிந்தால் மட்டுமே உடல் வாழ முடியும் .

புத்தி வந்தது; போராட்டாம் முடிந்தது!

சக்தி வந்தது; உடல் பணிகள் நடந்தன!

வேற்றுமை மறந்த உடல் உறுப்புகளும்,

ஒற்றுமையாக தம் பணிகளை செய்தன.

வாழ்க வளமுடன்,

விசாலாக்ஷி ரமணி

Link to comment
Share on other sites

அவர் பதவியைத் துறந்த பிறகும் நினைத்த மங்கையுடன் பாலியல் உறவு கொள்வதற்குத் தடையா? ^_^

இப்பிடிக் கேட்டிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமே..! :icon_idea:

...

இசை எழுதியதை விட, ரதி எழுதியதை வாசிக்கும் போது... கிக்கா இருக்கு. :D

எனக்கு என்னவோ இசை எழுதினதை வாசிக்கும் போது '23 ஆம் புலிக்கேசி' படம் பார்த்த எபெக்ற் தெரிகிறது... :D

இசைக்கு அடுத்த ஆண்டுக்குரிய யாழ்கள '24 ஆம் புலிக்கேசி' என்ற விருதை இந்த நேரத்தில் பரிந்துரை செய்கிறேன் :lol:^_^

Link to comment
Share on other sites

இந்தத் தலைப்பு.. தலைப்புக்கு வெளில அதிகம் போயும்.. ஏன் இன்னும் மூடல்ல. முன்னர் பல தலைப்புக்கள் கருத்துக்கள் தலைப்பை விட்டு போயிட்டு என்று மூடினவை. நெடுக்காலபோவனுக்கு இன்னும் கொஞ்சம் விழட்டும் ரசிச்சிட்டு.. மூடுவம் என்று நினைச்சிட்டீங்கள் போல.

...சரி மூடியாச்சு !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.