Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

yarlhouse.jpg

யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வருகிறேன்.

இப்போ.. இளையோர் பாராளுமன்றம் போல.. இது யாழ் களத்திற்கு. இந்த மன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும்.

இதில்..

கள நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும்.. ஆளும் கட்சி சார்ந்த பிரதமர் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் மட்டுமே அமைய முடியும். எந்தப் பதவியும் சுழற்சி முறைக்கமைய அதே பதவிக் காலத்தில் ஆளும் கட்சியினர் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

ஆளும் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற.. தனது கட்சியில் இருந்து குறைந்தது 60% ஆதரவையும்.. எதிர்கட்சியிடம் இருந்து குறைந்தது 50% ஆதரவையும் பெற்றாக வேண்டும். இன்றேல் அந்த தீர்மானம் நிறைவேறியதாகக் கொள்ள முடியாது.

இதுபோன்ற பல மறுசீரமைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம் என்ற தொனிப்பொருளோடு.. இந்த மன்றத்தை அமைக்கலாம்.

மேலும்.. ஆளும் கட்சிக்கான விதிமுறைகள்.. எதிர்க் கட்சிகளுக்கான விதிமுறைகள்.. களமாளுமன்ற விதிமுறைகள்.. களமாளுமன்ற கலைப்பு.. இவை அனைத்தும் களவிதிக்கு உட்பட்டவை. இந்த விதிமுறைகள் இத்தலைப்பு கள உறுப்பினர்களின் அங்கீகாரம் பெறப்பட்ட பின் தீர்மானிக்கப்படும்.

இது ஒரு சிநேகித பூர்வ முயற்சியே அன்றி.. பகைமை பாராட்டலுக்கானதல்ல..! அந்த வகையில்..

உங்களிடம் இருந்து.. கூடியது 5 கட்சிகளை பிரேரிக்க கேட்பதோடு.. (ஊரில் உள்ள கட்சிகள் போன்றதல்ல. நியாயமான.. மறுசீரமைப்பை வெளிக் கொணரக் கூடிய கட்சிப் பெயர்கள்) அந்தக் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்க விரும்புவர்கள் தங்களின் பெயர்களை (களப் பெயர் மட்டும்) இணைக்கலாம். அந்தக் கட்சிகளுக்கு உறுப்பினர்களையும் சேரக் கேட்கலாம்.

அதுமட்டுமன்றி இத்திட்டத்தை மேற்கொண்டு செல்ல.. குறைந்தது 10 பச்சைப் புள்ளிகள் இந்தத் தலைப்பிற்கு அவசியம். கள்ள வாக்குகள் செல்லுபடியாகா. கள நிர்வாகம் இதனை சரி பார்த்துச் சொன்னால் நன்று. அதாவது கள்ள வாக்கு போட்டிருக்கா இல்லையா என்று சொன்னால் மட்டும் போதும். கள்ள வாக்குப் போட்டிருந்தால்.. அதன் தொகையை குறிப்பிட்டால்.. அது மொத்த வாக்கில் இருந்து கழித்து நோக்கப்படும்.

இத்திட்டம் முற்றிலும் களவிதிக்கு உட்பட்டது. (எனவே இத்திட்டம் எதிர்பார்ப்பை மீறிச் சென்றால் கள நிர்வாகத்தால் தடை செய்யப்படலாம்). ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தில் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு இது வரையப்பட்டுள்ளது.

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.

இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

Link to comment
Share on other sites

 • Replies 1.3k
 • Created
 • Last Reply

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

ஆமா...

களமாளுமன்றத்தின் ஆளுனர் (அவரையா சாபாநாயகர் என்று சொல்வது?) யார்?

பிரதமர் யார்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன். :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? :icon_mrgreen:

ஆமா...

களமாளுமன்றத்தின் ஆளுனர் (அவரையா சாபாநாயகர் என்று சொல்வது?) யார்?

பிரதமர் யார்? :icon_mrgreen:

முதலில் கட்சிகளைப் பிரேரியுங்கோ.. அங்கத்துவர்களை உள்வாங்குங்கோ.. மறுசீரமைக்கப்பட்ட அதி கூடிய ஜனநாயக பண்புகளை உட்புகுத்திய ஒரு தேர்தல் மூலம்.. களமாளுமன்றம் அமைக்க விதிகளை சமர்ப்பிக்கிறேன். அவ்விதிகளும் உங்களால் பச்சைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பின் தேர்தல் நடக்கும்..! தேர்தலின் பின் ஆட்சி அமையும்.

ஆளும் கட்சி.. எதிர்க்கட்சி என்ற நிலைக்கு அப்பால்.. கொள்கை செயற்படுத்து கட்சியாக ஆளும் கட்சியும்.. கொள்கை பரிந்துரை.. கண்காணிப்பு கட்சிகளாக.. எதிர்கட்சிகளும் இருக்க.. விதிகளில் வகை செய்யப்படும்..!

மாற்றுக் கருத்து என்ற சொல்லாடலுக்கு இடமில்லை. எவரும் தம்முள் உள்ள கொள்கையை பரிந்துரைக்கலாம்.. அதனை மற்றவர்களின் உணர்வுக்கு அமைய ஏற்கச் செய்யவும் நிராகரிக்கச் செய்யவும் அவரவருக்குள் உள்ள கருத்துக்களை களமாளுமன்றில் சமர்ப்பித்து.. பொதுத் தீர்மானங்களை எட்டலாம். அத்தீர்மானங்கள் எட்டப்பட ஆளும் தரப்பு குறைந்தது அதன் மொத்த உறுப்பினர்களின் 60% வாக்குகளையும் எதிர்த்தரப்பின் 50% வாக்குகளையும் அதற்கு பெற வேண்டும். ஆக எதிர்த்தரப்பின் ஆதரவைப் பெறாது எதனையும் மக்கள் மீது திணிக்க முடியாது. :):icon_idea:

Link to comment
Share on other sites

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

உங்களின் கட்சியின் பெயர் கொள்கையை சிறிய குறிப்பாக வரைஞ்சு எழுதுங்கோ. அதில் ஈர்க்கப்படுபவர்கள்.. உங்கள் கட்சியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள்.

இப்போ உதாரணத்திற்கு.. எக்காரணம் கொண்டும்.. இத்திட்டத்தை முன்மொழிந்த நான் கட்சி அமைக்கவோ.. ஆட்பிடிக்கவோ முடியாது. களமாளுமன்ற விதிக்குள் அதுவும் அடங்கும். :):lol:

Link to comment
Share on other sites

கொள்கையா?

அது...வந்து... யோசித்து சொல்கிறேன்.. :icon_mrgreen:

கொள்கையே தெரியாமல் யார் கட்சிக்குள் சேரத்தயார்? :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

இதைமாதிரி ஒன்றை நானும் நினைச்சு வச்சிருந்தன்.. நீங்கள் முந்திட்டீங்கள்..! :wub: இந்தத் திரி நல்லபடியாகப் போக வாழ்த்துக்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

நான் ஒரு anarchist. எந்த அமைப்பும் ஆட்சி என்ற பெயரில் களத்தைக் கட்டுப் படுத்த முனைவதை எதிர்க்கிறேன். களம் எந்த அமைப்பியலுக்குள்ளும் வராமல் காட்டாறு போல இயங்க வேண்டும் என நினைக்கிறேன். இக்கருத்துக்கு ஆதரவு தருவோர் பச்சை குத்தலாம்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது களத்தைக் கட்டுப்படுத்துவதற்கானதல்ல. அதை நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ.. நிர்வாகம் என்ற கட்டமைப்பு செய்தே தீரும். இது...

ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. (இது களச் செயற்பாட்டாளர்களின் கருத்தொருமிப்பு கொண்ட பயனுள்ள பரிந்துரைகள் சமூகத்தளத்தை அடைய என்று உருவாக்கப்படலாம்.). மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகப் பண்புகளை மதிக்கும்.. தன்மைகளை அதிகம் உருவாக்கலாம். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மாவீரர்நினைவுகள் தடுமாற்றத்தில் இருக்கும் போது......இங்கேயும் பல பிளவுகளை ஏற்படுத்தமுயற்சிகளா??? அனைவரையும் ஒருங்கிணைக்க யாழ்களம் ஒரு பாலமாக இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புவது...

இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.

எதற்கு எடுத்தாலும்.. மாவீரர்களை வைச்சு.. பிழைப்புவாதங்களையும்.. அரசியல்வாதங்களையும்.. ஏன் அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளையும் வகுப்பதென்பது.. மாவீரர்களின் உன்னத இலட்சியத்தை பலவீனமான ஒரு காரணியாக இனங்காட்டுவது போன்றே அமைகிறது.

யாழ் களம் 1998 இல் இருந்து செயற்படுகின்ற ஒரு களம். அதன் தமிழ் தேசியப் பங்களிப்பு.. இணைப்புப் பாலப் பங்களிப்பு எதுவுமே இன்றைய நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம்.. நடப்பவை எல்லாம் யாழ் களத்திற்கு வெளியிலேயே தீர்மானமாகி அங்கேயே நடந்தும் கொண்டிருக்கின்றன. பிரதிபலிப்புக்களை மட்டும் யாழும் பிம்பமாக்க வேண்டிய காலச் சூழல். அதற்கும்.. இதற்கும் முடிச்சுப் போடுவது.. ஒரு விசமத்தனத்தின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம். ஆனால் அது அல்ல இத்தலைப்பின் நோக்கம். :):icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்குக்கும் ஒரு பச்சை

ஜஸ்ரினுக்கும் ஒரு பச்சை

கு.சா வுக்கும் ஒரு பச்சை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வினையாகக்கூடாது என்பதற்காகவே எனது கருத்தை சொன்னேன். :icon_idea:

அடுத்தது எதெற்கெடுத்தாலும்............என்பதற்கு????அடையாளம் காண்பதற்க்காகவது இக்களம் இருக்கட்டும்.

யாழ்களம் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்? :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

நான் ஒரு கட்சிக்கு வரலாம் என்றால் இரண்டாம் ஆளுக்கு எங்கு போவது? :blink:

என்னுடைய கட்சியில் அங்கம் வகிக்க யார் வருகிறீர்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"ஏக்கமுள்ளோர் கட்சி" அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

நல்ல முயற்சி சிறியண்ணா. தொடருங்கள்... உங்கள் பிரேரணைகள் வரவேற்கப்பட்டால்.. அது இத்தலைப்பிற்கு சிறப்பாக இருக்கும்.

என்ன இத்திட்டத்தை முன்மொழித்தவர் என்ற வகையில் நான் கட்சி அமைக்க முடியாது. இதில் கூடிய அளவு மக்கள் மயப்படுத்தல் அவசியம் என்று நினைக்கிறன். இதன் மூலம்.. தனியாள் செல்வாக்கை நீக்குவது.. கூட்டுச் செயற்பாடு.. கருத்தொருமிப்பு.. போன்ற அம்சங்களையும் நாங்கள் இந்தத் தலைப்பில் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன்.

இந்த களமாளுமன்றில்.. நாங்கள் சீரியஸான விசயங்கள் மட்டும் பேசப் போறதில்ல. மனதிற்கு இதமான விடயங்களையும் பேசலாம். யாழ் களத்தின் விருத்திக்கு அவசியமான விசயங்களையும் பேசலாம்.. அறிவியல் பேசலாம்.. நடப்பு உலக நிலைப்பாடுகள் குறித்துப் பேசலாம்.. எது அந்த காலத்திற்கு பேசப்பட வேண்டும் என்று அன்றைய தேவை.. உணர்த்துவதற்கு அமைய பேசலாம்.. குறிப்பாக தாயக உறவுகளுக்கான உதவிகள் செல்ல வேண்டிய பாதைகள் குறித்தும்.. இப்படிப் பலவும் பேசலாம். பேசப்படும் விடயங்கள் அதனை நோக்கி உறுப்பினர்களைக் கவர்ந்திருப்பது ஆளும் கட்சியின் திறமைகளைப் பறைசாற்றுவதாகக் கொள்ளலாம்.

இவை எனது பக்க முன்மொழிவுகள் மட்டுமே. எவையும் இறுதி வடிவமாக இங்கு முன்வைக்கப்பட்டு.. கள உறவுகளின் கருத்தும் அங்கீகாரமும் கோரப்பட்ட பின் தான் செயலுரு வடிவுக்கு மாற்றப்பட முடியும். :):icon_idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரேரிக்கப்பட்டுள்ள முதற்கட்சி: "ஏக்கமுள்ளோர் கட்சி."

கட்சியின் அடிப்படை நோக்கு: "அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ."

கட்சி பிரேரிப்பு: எழுஞாயிறு.

கட்சித் தலைவர்: அறிவிக்கப்படவில்லை

(கட்டாயம் கட்சித் தலைவர் அறிவிக்கப்பட வேண்டும் என்றில்லை. கட்சியின் தலைமைத்துவத்தை.. எல்லா உறுப்பினர்களிடையேயும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்.. பொதுத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு நடத்தலாம். எல்லோருக்கும் எல்லா உரிமையும்.. அங்கு அளிக்கப்படலாம். இவை கட்சிகள் சார்ந்த தனிப்பட்ட முடிவுகள் சார்ந்தவை. திணித்தல் இருக்கக் கூடாது. களமாளுமன்றத்துக்கு வெளியில் கட்சிகள் பாராட்டக் கூடாது. அங்கு எல்லோரும் சக சம மதிப்புள்ள கள உறவுகள் என்பதை எல்லாக் கட்சிகளும் உள்வாங்கிக் கொள்வது அவசியம். ) :)

கட்சி உறுப்பினர்கள்: எழுஞாயிறு,

கட்சியின் சின்னம்/படம்: தரப்படவில்லை.

( கட்சி பற்றிய விபரங்கள்.. இது போன்ற மாதிரி வடிவில் இடம்பெற்றால் கள உறவுகளுக்கு கட்சிகள் பற்றிய அறிமுகமும்.. நோக்கமும்.. அறிந்துகொண்டு.. அங்கத்துவத்தை தெரிவிக்க உதவியாக இருக்கும். மாதிரி வடிவம்.. இதே அடிப்படைகளைக் கொண்டதாக.. உங்களால் வரையப்பட்டதாகக் கூட அமையலாம். இது உங்களின் செயற்பாட்டுக்குரியது. இதனை ஒரு உதாரணத்திற்கு பதிகிறேன். அவ்வளவே.) :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்சி விஷயம் எல்லாம் நமக்கு சரிவராது

அப்படி இருக்க முடியாது கறுப்பி. இந்த உலகில் சனநாயகம் என்பதன் பெயரால்.. எம்மை ஆள எம்மைக் கொண்டே ஒருவனை தெரிவு செய்ய வைச்சு.. அவனைக் கொண்டே எம்மை அடக்கவும் செய்கின்றனர். அந்த நிலையில் இருந்து நாங்க விடுபட்டு.. எங்கள் எண்ணங்களோடு.. நாங்களும்.. அவன் எண்ணங்களோடு அவனும் சம மதிப்புடன்.. சம உரிமையுடன் வாழனுன்னா.. நாங்கள் கட்சி அமைக்கனும்.. எங்க எண்ணங்களை மக்கள் மயப்படுத்தனும்.. அதை மக்கள் உணரச் செய்து.. மாற்றங்களை வரப்பண்ண வேண்டும்.

இன்னும் எத்தனை காலம் தான்.. அவன் வாறான்.. இவன் வாறான்.. என்று எங்கள் ஏக்கங்கள் மனசுக்க குவிஞ்சு கிடக்க.. அதைக் கிடப்பில் போட்டிட்டு... அங்கலாய்ப்பது. இந்த யாழ் கள களமாளுமன்றம்.. எங்களிலும் ஒருவருக்கு இந்த கட்சி ஜனநாயக ஆளுமையை அளித்து அவர் நாளை நிஜமாகவே ஒரு தேர்தலில் நின்று உறுப்பினரானால்.. அவருக்கு மக்களின் எண்ணங்கள் என்ன என்பதை இலகுவாக கண்டுணர்ந்து செயற்பட வழி இருக்குமா இல்லையா. எம்மில் இருந்து நல்ல ஒரு அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய ஒருவர்.. நிஜ அரசியல் களத்தை அடைய இது வழிகாட்டலாம்.. இல்லையா..??!

எல்லாத்தையும் அறியுறம்.. ஆனால் எங்கள் வாக்குகளைப் பெற்று எங்களை ஆளப் போறவனைப் பற்றி.. ஏன் நாங்க அக்கறை செய்வதில்லை.

ஏன் நாங்க.. எங்கள் விருப்பங்களை இழந்து மற்றவரின் விருப்பத்தோடு மட்டும்.. பயணிக்க வேண்டும் என்ற விதிப்பு. இது தற்போதைய ஜனநாயகத்தின் பலவீனமான பக்கமும் கூட. இதைக் களையனும் என்றால்.. மக்கள் மயப்படுத்திய ஜனநாயக மாற்றங்கள் அவசியம். மக்கள்.. கூடிய பங்களிப்புச் செய்யும்.. அவர்களின் விருப்பை வெளிப்படுத்தும்.. அடைந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கனும். அந்த வகையில்.. இது ஒரு நல்ல அடிப்படை அறிவூட்டலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு இருக்க வேண்டும்.

ஜோக்ஸ் என்று சொல்லி ஆரம்பித்த பல விடயங்களே பின்னாளில்.. பல மாற்றங்களுக்கு வித்திட்டும் உள்ளன. மக்களின் பங்களிப்பு இல்லாமல்.. அவர்களை அதில் ஈடுபட வைக்காமல்.. அதை அவர்களுக்கு உணர்த்துவது கடினம்..! மக்கள் ஒதுங்கி இருப்பது.. மக்களில் தீயவர்களின் வளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது.. இது அரசியலுக்கும் பொருந்தும்.. சமூகத்திற்கும் பொருந்தும். :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

10வது பச்சைப் புள்ளி என்னுடையது .

நல்ல முயற்சி. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி.

"ஏக்கமுள்ளோர் கட்சி" அந்தக்காலத்து ஏக்கம் இந்தக்காலத்து ஏக்கம் அனைத்தும் இருக்கும் அனைவரையும் இக்கட்சி அன்புடன் உறுப்பினராக வரவேற்கிறது. வாருங்கோ வந்து பழகிப்பாருருங்கோ.

"ஏக்கமுள்ளோர் கட்சி" யின் அடிமட்ட உறுப்பினராக என்னைப் பதிவு செய்து கொள்கிறேன்.

நேற்று நடக்காததை நினைத்து ஏக்கம். இன்று விரும்பியது கிடைக்குதில்லையே என்ற ஏக்கம். நாளை நினைப்பது நடக்குமா என்ற ஏக்கம்.

'ஏக்கம்தானே வாழ்க்கை'

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.