Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

எதில இணையலாம்.. ?..

இப்போதைக்கு என் தெரிவு ஏதும் இல்லை... கடைசி நேரத்தில யாருமே என்னை ஏற்காமல் விடினமோ தெரியல

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சிக்கு அனைத்து செல்லங்களும் வந்து இணையுங்கள் அச்சாப்பிள்ளையள். :rolleyes:

காதலை வாழவைக்க வேண்டியது உங்கள் கடமை

(கொய்யாலை யாரோ ஒருத்தன் குசுகுசுக்கிறது கேட்குது) :icon_mrgreen:

அதனால் உங்கள் கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். :icon_idea:

யா.கா.க வினருக்கு அரசியல் அனுபவம் போதாது.

இப்பிடிச் சொன்னால்... எவன் கட்சிக்கு வருவான். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுப்பினராக விரும்புகிறவர்கள்,

தயவு செய்து

தனிமடலில் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து, இந்தத் திரியில் பதியவும்.

நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும்

இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும்

ஏக்கமுள்ளோர் கட்சியினருக்கு இதுவரை ஒருவரும் தனிமடல் அனுப்பவில்லை என்று, எமது புலனாய்வுத்துறைdog_walking.gif அறிவிப்பதால்...

ஏ.மு.க. வினரின் பொய்ப்பிராச்சாரத்தை நம்பாதீர்கள். :D

Link to comment
Share on other sites

சர்வதேச யாழ் கள புலநாய்வுத் தலமைச் செயலளார் இடம் இருந்து பெற்ற புலநாய்வு அறிக்கைகளின் படி , பல ஒட்டுக் குழுக்களும் , பிற எதிரி நாட்டு புலநாய்வுத் துறைகளும் , இத்திட்டத்தில் ஊடுருவியிருப்பதால் , இந்த யாழ் கள களமாளுமன்றத்திற்கான பிரேரணைகளையும் , கட்சிப்பதிவுகளில் இருந்தும் , பிரான்ஸ் வாக்காளர்கள் முற்று முழுதாக விலகிக் கொள்கின்றார்கள் !!!!!!!!!!!!! . அத்துடன் , இந்த சதி வலையில் விழாதிருக்க கள உறவுகளைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் <_< <_< <_< .

இங்கனம்

பிரான்ஸ் வாக்களர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யா.கா.க வினருக்கு அரசியல் அனுபவம் போதாது.

இப்பிடிச் சொன்னால்... எவன் கட்சிக்கு வருவான். :D:lol:

சிறி அண்ணா இது தான் அரசியல் அண்ணா.

வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாது விடும் ஏ.க கட்சி, ப.மே.க கட்சி , யா.க.ம.ச கட்சி,யா.உ.கு கட்சிகள் போல அல்லாமல் உண்மையை பேசும் யா.க.கா வில் இணையுமாறு வேண்டுகிறேன்.

(இது எல்லம் எதிர்க்கட்சிகள் செய்யும் சதி) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதில இணையலாம்.. ?..

இப்போதைக்கு என் தெரிவு ஏதும் இல்லை... கடைசி நேரத்தில யாருமே என்னை ஏற்காமல் விடினமோ தெரியல

ப.மே.க.வுக்கு வாங்கோ... பிரசான். :rolleyes:

உங்களை எதிர்பார்த்து... எமது கட்சியின் கதவுகளை, அகலத் திறந்து வைத்திருக்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச யாழ் கள புலநாய்வுத் தலமைச் செயலளார் இடம் இருந்து பெற்ற புலநாய்வு அறிக்கைகளின் படி , பல ஒட்டுக் குழுக்களும் , பிற எதிரி நாட்டு புலநாய்வுத் துறைகளும் , இத்திட்டத்தில் ஊடுருவியிருப்பதால் , இந்த யாழ் கள களமாளுமன்றத்திற்கான பிரேரணைகளையும் , கட்சிப்பதிவுகளில் இருந்தும் , பிரான்ஸ் வாக்காளர்கள் முற்று முழுதாக விலகிக் கொள்கின்றார்கள் !!!!!!!!!!!!! . அத்துடன் , இந்த சதி வலையில் விழாதிருக்க கள உறவுகளைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் <_< <_< <_< .

இங்கனம்

பிரான்ஸ் வாக்களர்கள்

இது தவறான பரப்புரை. யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயக வழியை தேர்ந்தெடுத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத பாரம்பரிய லிங்கன் ஜனநாயகக் குழுவினரின்.. தூண்டுதலின் பெயரில் நிகழும் பொய்ப் பிரச்சாரமே இது ஆகும்.

கொள்கைகள்.. செயற்திட்டங்கள் அடிப்படையில் எவரும்.. இங்கு மக்களின் முன் பிரதிநிதிகளாக நிற்க முடியும். மக்களே தங்கள் வாக்குரிமை மூலம்.. இறுதித் தீர்வை மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்குள் எந்த விதமான ஊடுருவல்களுக்கும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள். எனவே நம்பிக்கையோடு நீங்கள்.. இந்த களமாளுமன்ற அமைப்பை நம்பலாம். யாரும் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களின் எதிர்கால அரசியல் சிந்தனைகளுக்கு.. செயற்திட்டங்களுக்கான ஒரு பயிற்சிக் களமாகக் கூட அமையலாம்.

நன்றி. (களமாளுமன்ற திட்ட அமுலாக்கல் பிரிவு.) :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள காதலர் கட்சியில் இணையும் முதல் இருவருக்கும்

"காதல் சுகமானது" Ramiy Audio CD இலவசமாக வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள காதலர் கட்சியில் இணையும் முதல் இருவருக்கும்

"காதல் சுகமானது" Ramiy Audio CD இலவசமாக வழங்கப்படும்.

யா.கா.க தரும் அந்த சீடியை போட்டுப் பார்க்க.....

CD player ம் இலவச தொலைக்காட்சியும் ப.மே.க. வினாரால் வழங்கப் படும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சியின் கொடியை முதன் முதலாக அறிமுகப் படுத்துவதில் ப.மே.க. பெருமையடைகின்றது.

red_and_yellow_flag.jpg

எங்கள் "படிக்காத மேதைகள்" கட்சியே... வரும் தேர்தலில் ஆட்சியமைக்க இருப்பதால்...

கட்சியில் உடனடியாக சேர்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்.

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்"

யாழ் கள இனிய பொழுது மேட்டுக்குடி அமைச்சர் பதவி தருவீர்கள் என்ற உறுதி தந்தால் கட்சியில் சேரமுடியும்.

காமம் காமரசம் கலந்த பாடல்களை தணிக்கை செய்வது அமைச்சரின் நேரடி கண்காணிப்புக்குள் வரவேண்டும்.

இணைக்கும் நேயர்கள் வாசகர்கள் எதை வேண்டுமானாலும் இணைக்கலாம் ............. தணிக்கை குழு அதை வெட்டி ஓட்டும் என்ற சட்டத்தை உடனடியாகவே அமுல் படுத்தவேண்டும்.

ப மே க .

"படிக்காத" இதில் சேருவதற்கான அணைத்து தகுதியும் அடியேனுக்கு உள்ளது என்பதையும் தெரிய படுத்த விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள இனிய பொழுது மேட்டுக்குடி அமைச்சர் பதவி தருவீர்கள் என்ற உறுதி தந்தால் கட்சியில் சேரமுடியும்.

காமம் காமரசம் கலந்த பாடல்களை தணிக்கை செய்வது அமைச்சரின் நேரடி கண்காணிப்புக்குள் வரவேண்டும்.

இணைக்கும் நேயர்கள் வாசகர்கள் எதை வேண்டுமானாலும் இணைக்கலாம் ............. தணிக்கை குழு அதை வெட்டி ஓட்டும் என்ற சட்டத்தை உடனடியாகவே அமுல் படுத்தவேண்டும்.

ப மே க .

"படிக்காத" இதில் சேருவதற்கான அணைத்து தகுதியும் அடியேனுக்கு உள்ளது என்பதையும் தெரிய படுத்த விரும்புகிறேன்.

மருதங்கேணிக்கு அமைச்சர் பதவி வழங்க கட்சித்தலைமை சம்மதித்துள்ளது.

எமது கட்சியில் இணைந்த வருங்கால அமைச்சர் மருதங்கேணிக்கு பொன்னாடை போர்த்து வரவேற்கின்றோம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

வெளியில் இருந்து ஆதரவு தரும் வாதவூரானை பா.மே.க. வரவேற்கின்றது.

இதனை பா.மே.க. வின் கட்சித் தலைவி சகாராவின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றே... கருதுகின்றோம்.

யா.கா.க.வுக்கும் ப.மே.க. வுக்கும் உறவுப் பாலமாக வாதாவூரான் இருப்பார் என்று நம்புகின்றோம். :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) :)

பையனின் சிரிப்பை பார்க்க.... ப.மே.க. வில் இணையப் போறார் போலை கிடக்குது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உத்தியோக பூர்வமாக "ப மே க" சேருகிறேன்.

கடந்த சில நாட்களாக கட்சி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை வெற்றியாக முடிந்ததை அடுத்து என்னால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது என்பதை எனது வாக்களர் சமூகத்திற்கு தெரியபடுத்துகிறேன்.

இந்த இன்டெர் நெட்டு வந்ததில் இருந்து எங்கு பார்த்தாலும் ஒரே சமூக கேடு நிகழ்வுகள் சாதரணமாகி போய்விட்டது. எல்லாவற்றையும் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற வெறி எனக்குள் எப்போதோ இருந்தது. அதற்கும் இதற்கும் என்று தடைகள் போடாது எல்லாவற்றிற்கும் அனுமதி கொடுத்து சமூகத்திற்கு தேவையானதை பார்வைக்கு விடும் அரிய பொறுப்பை எனது கட்சி இனிவரும் காலத்தில் மிக பொறுப்புடன் செய்யும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்துகிறேன்.

எனது கட்சி சமூகத்திற்காக எந்த களைப்பும் இன்றி உழைக்கும் என்பதையும் சொல்லிகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இது தவறான பரப்புரை. யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயக வழியை தேர்ந்தெடுத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத பாரம்பரிய லிங்கன் ஜனநாயகக் குழுவினரின்.. தூண்டுதலின் பெயரில் நிகழும் பொய்ப் பிரச்சாரமே இது ஆகும்.

கொள்கைகள்.. செயற்திட்டங்கள் அடிப்படையில் எவரும்.. இங்கு மக்களின் முன் பிரதிநிதிகளாக நிற்க முடியும். மக்களே தங்கள் வாக்குரிமை மூலம்.. இறுதித் தீர்வை மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்குள் எந்த விதமான ஊடுருவல்களுக்கும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள். எனவே நம்பிக்கையோடு நீங்கள்.. இந்த களமாளுமன்ற அமைப்பை நம்பலாம். யாரும் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களின் எதிர்கால அரசியல் சிந்தனைகளுக்கு.. செயற்திட்டங்களுக்கான ஒரு பயிற்சிக் களமாகக் கூட அமையலாம்.

நன்றி. (களமாளுமன்ற திட்ட அமுலாக்கல் பிரிவு.) :):D

பிரான்ஸ் வாக்காளர்களாகிய எங்களுக்கு , ஏற்கனவே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் , ஒரு பிரதமரும் , துணைப்பிரதமரும் உள்ளனர் . இவர்களின் பதவிய பறிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கமாட்டோம் . " புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் " என்றல் என்ன ???????? இதில் தான் இவர்களது சூழ்ச்சி உள்ளது . இவர்களது பசப்பு வார்தைகளை நம்பாதீர்கள் கள உறவுகளே !!!!!!!!!!! <_< <_< <_< .

பிரான்ஸ் வாக்காளர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ் கள காதலர் கட்சியில் இணையும் அதேவேளை சிறி அண்ணாவின் படிக்காத மேதைகள் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறேன்

நன்றி வாதவூரன் அண்ணா. யூத் என்பதை நிரூபிச்சிட்டிங்கள். உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம். :)

உங்கள் விலாசத்தை தனிமடலில் அனுப்பி வையுங்கள். உங்கள் CD வீடுவந்து சேரும். :)

பையனின் சிரிப்பை பார்க்க.... ப.மே.க. வில் இணையப் போறார் போலை கிடக்குது. :D

சிறி அண்ணை,

பையன் என்னொட "நண்பேன்டா" எங்க கட்சியிலை தான் இணைவான். :rolleyes:

Link to comment
Share on other sites

என்னுடைய 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் எவரும் இன்னமும் சேராமையால், சுயேட்சையாக நிற்கப்போகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் வாக்காளர்களாகிய எங்களுக்கு , ஏற்கனவே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் , ஒரு பிரதமரும் , துணைப்பிரதமரும் உள்ளனர் . இவர்களின் பதவிய பறிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கமாட்டோம் . " புதிய மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் " என்றல் என்ன ???????? இதில் தான் இவர்களது சூழ்ச்சி உள்ளது . இவர்களது பசப்பு வார்தைகளை நம்பாதீர்கள் கள உறவுகளே !!!!!!!!!!! <_< <_< <_< .

பிரான்ஸ் வாக்காளர்கள்

உங்களின் சுயாதிபத்திய ஜனாதிபதி.. உட்பட்டவர்களின் பதவி பறிப்புக்காக உருவாக்கப்பட்டதல்ல.. களமாளுமன்றம். இது புதிய சீரமைக்கப்பட்ட (தற்போதுள்ள ஜனநாயக முறைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கி.. 21ம் நூற்றாண்டின் தேவைக்கும் பெருகி வரும் மக்களின் நவீன அறிவிற்கும் ஏற்ப மறுசீரமைத்த ஜனநாயகம்..!) ஜனநாயக வழியில்.. மக்களின் விருப்புக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும்.. ஒரு முறைமையில் அமையும் மக்கள் மன்றமாகவே இருக்கும். இது ஒரு வெளிப்படையான அமைப்பு. ஒளிச்சு மறைச்சு நாங்கள் எதனையும் செய்யமாட்டோம். எனவே பிரான்ஸ் வாக்காளர்கள்.. வழமை போல.. குறுக்கால இழுக்காமல்.. மற்ற மக்களோடு கூடி வாழக் கற்றுக் கொண்டு.. இதற்கு ஒத்துழைப்பு நல்குதல் வரவேற்கப்படும்..! :):lol::icon_idea:

------------------------------------------------------------------------------------------------------------------------------

சிறீ அண்ணரின் புயல் பிரச்சாரம்.. ப.மே.க கட்சிக்கு பெருமளவு தொண்டர்களை இழுத்துக் கொண்டிருக்கிறது. ம்ம்ம்.. சிறீண்ணா.. நீங்க அரசியல் எங்கேயோ போய்ட்டீங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் எவரும் இன்னமும் சேராமையால், சுயேட்சையாக நிற்கப்போகின்றேன்

நிழலி அண்ணர்.. பொறுமை அவசியம். இப்ப தானே கட்சி தொடங்கி இருக்கீங்க. நாள் இருக்குது.. மக்கள் நிச்சயம்.. உங்களின் கட்சியில் சேர்வார்கள். கட்சியை தொடங்கின உடனேயே கலைப்பது ஒரு அரசியல்வாதிக்கு அழகல்ல. சவால்களை சந்திக்கனும்..! ப.மே.கவின் அசுர வளர்ச்சி.. மற்றைய கட்சிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருந்தாலும்.. நிச்சயம்.. கொள்கை அளவில் அவர்களை விட சிறப்பாக செயற்படக் கூடிய வகைக்கு மற்றைய கட்சிகள் மெருகேறக் கூடும். அந்த வகையில் உங்கள் கட்சியும் மக்களின் மனதை வெல்ல.. கொஞ்சம் கால தாமதம் ஆகலாம். கட்சிக்கு ஆட் சேர்க்க.. 14 நாட்கள் தந்திருக்கிறம். அதற்குள்ளாக.. ஏன் ஒரு அதிருப்தி.! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புதிதாய் கட்சி தொடங்கப் போறன்.கட்சியின் பெயர் "வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி"...சொந்த வாழ்க்கையில் விரக்தியடைந்தோர்,தொடர்ந்து ஏமாற்றங்களையே சந்திப்போர்,வாழ்க்கையில் உருப்படியாய் எதையும் சாதிக்க முடியாத போன்றோர் யாழிலாவது எதையாவது சாதிக்கும் நோக்குடன் எங்கள் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் கட்சியின் சில கொள்கைகள்;

யாழில் எங்கு,என்ன அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பது

புதுக் கலைஞர்களை ஊக்குவிப்பது

எதிராளிகளை கேள்விகளால் திக்கு,முக்காட‌ச் செய்வது. இன்னும் பல கொள்கைகள் இருக்கு எங்கள் கட்சியை மக்க‌ளாகிய நீங்கள் அங்கீகரித்தால் அதை அடுத்த,அடுத்த பதிவுகளிலே தொட‌ர்ந்து சொல்லுவோம்.

ஜந்துக்கும் மேற்பட்ட கட்சி களத்தில் நிற்பதால் கூடுதல் வாக்கு பெறும் கட்சியை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.அப்படி ஒருதரும் எனக்கு வாக்களிக்கா விட்டால் வாழ்க்கையில் தோல்வி ர‌திக்கு சகஜம் என போய் கிட்டே இருப்பன்.

யாழ்கள வாச‌க பெருமக்களே தமிழ்சிறீயின் பொய் வார்த்தைகளுக்கு மயங்காமல் யாருக்கு வாக்களித்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் எனப் பார்த்து வாக்களியுங்கள் :D

Link to comment
Share on other sites

வேலையில்லாத நெடுக்கர் யாழ் கள களமாளுமன்றம் அமைத்தாராம்!

அதுக்கு வெள்ளைமாளிகையில் ஒபாமாவுக்கு ,, காரியதரிசியா ,,, இருபத்திநாலுமணிநேரம்,, பிஸியா இருக்கும் ...அலைமகள் பதில் சொன்னாவாம்! :)

Link to comment
Share on other sites

நெடுக்கு ஏனிந்த கொலைவெறி? என்னாது மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகமா?

அப்போ ஆல்ரெடி இங்க இருந்த ஜனநாயகம்...Out of order ஆவா இருந்திச்சு? <_<

பைதவே.. சுதந்திரமான வாக்களிப்பு மூலம் , தெரிவு செய்யப்படும் , மந்திரிங்க, சனாதிபதி,,

எதுக்கு கள நிர்வாகம் கீழ இயங்கணும்?

அப்புறம் அதெப்படி ஜனநாயகம்னு ஆவும்? சர்வாதிகாரம்னு ஆயிடுமே! <_< (டமாசு)

எது எப்டியோ... நெடுக்கு ஆரம்பிச்ச தலைப்பு ,,, சூப்பராதான் இருக்கு!

எல்லாரையும் எழுத வைக்குற உங்க முயற்சி,,, யாழை சுறுசுறுப்பாக்குமா இல்லியா?

சரி மேட்டருக்கு வந்தோம்னா.....

அரசமைப்பு ஒண்ணை உருவாக்கணும்னா,,,

பெரும்பான்மை ஜனங்க ஆதரவு பெற்ற கட்சி ஒண்ணு இருக்கணுமா.. இல்லியா?

யாழ்ல எப்பவுமே இருக்குறது எதிர்க்கட்சிகள் மட்டும்தானே!! <_<

நானு ஒரு கட்சி உங்க திரில ஆரம்பிக்கணும்னு நெனைச்சா..........

ஆரம்பிக்கபோறது... எப்பவுமே எதிரிகள் எம்மை நெருங்கா....

“வெறும் பார்வையாளர் கட்சி” ! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.