வல்வை சகாறா 1,446 Posted November 18, 2011 (edited) வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன். வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன். வருங்கால முதல்வர் வல்வை வாழ்க. தமிழ்சிறீ புல்லரிக்கிறது இதுவரை கொள்கை கோட்பாடு எதுவுமே தெரியாமல் கட்சி தொடங்க ஆள் வேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்க காமதேனுபோல முதலாவதாக இணைந்தது மட்டுமில்லாமல் சாம, பேத, தான, தண்ட..(ஓய் சிறியர் இது சனநாயகம் இங்கே இதெல்லாம் அடக்கி வாசிக்கோணும்) வேலைகளைச்செய்தாகிலும் என்பதைப்பார்க்கும்போது நம்பி கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது... எங்களுடைய கட்சியின் பெயர் "படிக்காத மேதைகள்" எங்கள் கட்சியின் கொள்கையாவன இடக்கு மடக்காக கேள்வி கேட்பது குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கணக்காக சில நேரங்களில் சரியாகச் சுட்டிக்காட்டுவது கவனிக்கவும் சிலநேரங்களில் மட்டுமே.. இன்னும் சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம் இப்போது படிக்காத மேதைகள் கட்சியைப்பதிவு செய்கிறேன் இத்தோடு படிக்காத மேதைகள் கட்சியில் இணைய விரும்பும் மகா சனங்களை இங்கு பதிவிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்...எங்களிடம் தலைவர் பதவியிலிருந்து அனைத்தும் வெற்றிடமாக இருக்கிறது முந்துபவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை இத்தால் அறியத் தருகிறோம் Edited November 18, 2011 by valvaizagara Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 (edited) இதுவரை இத்திட்ட முன்மொழிவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவிற்கும்.. பிற ஆலோசனைகள்.. கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள். திட்டம் முன்மொழியப்பட்டு 24 மணி நேரத்துக்குள் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரத்தில் ஒன்றை கள உறவுகள் தந்திருப்பதில் இருந்து.. இதில் அவர்களின் ஈடுபாட்டை உணர முடிவதோடு.. அவற்றிற்கு மதிப்பளித்து வரவேற்கின்றோம். கட்சிப் பதிவுகள் மட்டும் கொஞ்சம் தாமதமாகியுள்ளன: இதுவரை பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம்: (கட்சிப் பெயரும்.. பிரேரித்தவர்களும்.) 1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு) 2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா) இக்கட்சிகளில் இணைந்து கொண்டு பணி செய்ய விரும்புறவங்க.. கட்சிப் பெயர்களை குறிப்பிட்டு.. அங்கு.. உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல்.. இன்னும் 3 கட்சிகளை பிரேரித்து.. அதற்கும்.. அங்கத்தவர்களைத் திரட்டிக் கொண்டு விட்டால்.. களமாளுமன்றதுக்கான.. பொதுவிதிகளை சமர்ப்பித்து உங்கள் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு.. அவற்றின் அடிப்படையில் இறுதி வடிவம் செய்யப்பட்டு.. அதன் பின்.. தேர்தல் நடத்தலாம். தேர்தல் பிரச்சாரங்களுக்கும் வாய்ப்புண்டு. மேலும்.. சொந்தக் கட்சி விதிகளுக்கு மேலாக.. களமாளுமன்ற விதிகளை.. சமர்ப்பிக்க விரும்பிறவங்க.. அதனை தாராளமாக முன் வையுங்கள். உங்கள் விதிமுறைகள் அதிக கள உறவுகளால் வரவேற்கப்பட்டால்.. அவை களமாளுமன்ற யாப்பில் இடம்பெறும். அந்த வகையில்... ஒரு யாப்பை வகுத்த பெருமையை நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள். Edited November 18, 2011 by nedukkalapoovan Quote Share this post Link to post Share on other sites
வாத்தியார் 1,465 Posted November 18, 2011 இங்கு நான் "யாழ் கள மன்னர்கள் சபை" என்ற கட்சியைப் பதிவு செய்கின்றேன். கொள்கை: களம் வாழ நாம் உழைப்போம் கள மக்கள் நலன் காப்போம் கள மக்கள் மொழியைக் காப்போம் கள மக்கள் பிழைகள் விட்டால் தட்டிக் கேட்போம் மொத்தத்தில் களத்திற்காகவும் கள மக்களுக்காகவுமே இக்கட்சி. அங்கத்தவர்கள் அனைவரும் உடனடியாக இணைந்து கொள்ளவும் அங்கத்தவர்கள் மேற்குறிய கொள்கையை ஏற்றுக்கொண்டவராக இருப்பது அவசியம். கொள்கைகள் அங்கத்தவர்களின் ஆலோசனைப்படி மெருகூட்டப்படும் எந்தக் காரணத்திற்காகவும் கொள்கைகள் கைவிடப்பட மாட்டாது. அப்படியொரு நிலை வந்தால் யா க ம ச கலைக்கப்படும். அங்கத்தவர்கள் உள்வாங்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி அறியத்தரப்படும் யா க ம ச யின் 5 பேர் கொண்ட மன்னாதி மன்னர் சபை ஒன்றை இப்போதே நான் பிரேரிக்கின்றேன். குறிப்பு: என்னை மட்டும் விட்டு விடுங்கள் நான் எப்போதும் தொண்டனாகவே இருக்க விரும்புகின்றேன் வாருங்கள் களம் காப்போம் கள மக்கள் நலன் காப்போம் 1 Quote Share this post Link to post Share on other sites
இசைக்கலைஞன் 3,012 Posted November 18, 2011 ஐந்து கட்சிகளையும் பதிந்தாப்பில எந்தக் கட்சியில சேரலாம் எண்டு யோசிப்பம்..! Quote Share this post Link to post Share on other sites
கிருபன் 3,264 Posted November 18, 2011 எனக்கு ஜனநாயகத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஏனெனில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படும் அமைப்புக்கள்/அரசாங்கங்கள் எல்லாம் சரியான கொள்கைகளைக் கடைப்பிடித்து சாதாரண மக்களில் நல்வாழ்வுக்கு உதவுவதில்லை. உதாரணமாக கிரேக்க, இத்தாலி அரசாங்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தவறான கொள்கைகளால் நாட்டையும் மக்களையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர். அழிவுப்பாதையில் இருந்து மீட்க அந்நாடுகள் தற்போது technocrat களைத்தான் நாடியுள்ளது. இவ்வாறான technocrat கள் elite சமூகத்தில் இருந்து வருகின்றார்கள். எனவே யாழ்களத்திற்கு ஒரு புதிய பாதையைச் சரியாகச் செப்பனிட்டு நெடுங்காலத்திற்கும் தளைத்தோங்கிச் செழித்து நிற்க தொழில்சார் நிபுணர்கள் அவசியம். இத்தகைய நிபுணர்கள் கொண்ட உயர் குழாம் ஒன்றே போதும் என மிகவும் திடமாக நம்புவதால் "யாழ்கள உயர் குழாம்" என்ற பெயரில் கட்சி ஒன்றைப் பதிவு செய்ய விழைகின்றேன். கொள்கைகள்: 1) தேர்தலில் வென்றால் முதல் வேலையாக தேர்தல்முறையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் முறையை இரத்துச் செய்தல் 2) சுழற்சி முறையில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து தேக்கம், ஊழல் இல்லாத யாழ் களத்தைக் கொண்டு நடாத்துதல் 3) பிரதிநிதிகள் மாறினாலும், அவர்களைத் தெரிவு செய்யும் உரிமையை யாருடைய ஒப்புதலும் இன்றித் தலைவரே கொண்டிருத்தல். 4) ஆயுட்காலத் தலைவராக நானே தொடர்ந்தும் இருக்கத் தேவையான வழிவகைகளைச் செய்துகொள்ளுதல் 5) தேர்தல் முறை இல்லாததால் கட்சி அங்கத்தினர் தாமாக பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தும் தனிப்பட்ட வாழ்விற்காகப் பிரிந்து செல்ல முயல்பவர்கள், வேறு கட்சி அமைக்க அனுமதிக்கப் படமாட்டார்கள். மேற்குறித்த கொள்கைகளுடன் ஒத்துப் போவதில் யாழ்களத்தில் உள்ள தொழில்சார் நிபுணர்களுக்கு எதுவித பிரச்சினைகளும் இல்லையென்பதால் அவர்கள் உடனடியாகவே "யாழ்கள உயர் குழாம்" அமைப்பின் ஆயுட்கால அங்கத்தினராக ஆகிவிட்டார்கள். Quote Share this post Link to post Share on other sites
ஜீவா 681 Posted November 18, 2011 என்ன நெடுக்கரே இருக்கிற பச்சைப்புள்ளிகளை பறிக்கிற பிளானோ? மனுசன் ரொம்ப தெளிவா தான் அக்கா இருக்கார்.. Quote Share this post Link to post Share on other sites
ஜீவா 681 Posted November 18, 2011 யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம் Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 (edited) இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை 4 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே ஒரு கட்சி பதியப்பட இன்னும் வாய்ப்புள்ளது. பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு.. கட்சி + ஸ்தாபகர். 1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) 2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) 3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) 4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) இறுதி கட்சிக்கான பதிவையும்.. கட்சிகளில் உங்கள் அங்கத்துவங்களையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்திட்டம் கோரி நின்ற.. தேவையான அடிப்படை அங்கீகாரம் பெறப்பட்டதும் களமாளுமன்ற விதிமுறைகள் உங்கள் முன் வைக்கப்படும். அதற்கும்.. உங்களின் பங்களிப்பு எதிர்பார்க்கபடுகிறது. விதிமுறைகளில் அடக்க வேண்டிய விடயங்களை விரும்பமுள்ள கள உறவுகள் முன் வைக்கலாம். அவை சரியான வகையில் உள்வாங்கப்படவும்.. சம மதிப்பளிக்கவும் செய்யப்படும். கட்சிகளில் இடம்பெறாதவர்கள் எல்லோரும் ஒரே ஒரு சுயேட்சை அமைப்புக்குள் வைத்துக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் உரிமை.. வாக்குரிமை.. கருத்துரிமை.. எல்லாம் வழங்கப்படும். ஆனால் களமாளுமன்றில்.. அடிப்படை உரிமைகளைத் தவிர இதர பதவி நிலைகளை அடைய முடியாது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆனால் குறித்த பதவிக் காலத்தில் தேர்தல் நடக்க முன்னரே.. தாம் விரும்பும் ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தேர்தலின் பின் கூட்டணி அமைக்க முடியாது. தேர்தலின் பின் குறித்த பதவிக்காலம் முடியும் வரை.. கூட்டணியில் இருந்து விலகவோ.. கட்சி தாவவோ.. முடியாது. சுயேட்சைகள்.. கூட்டணியில் இடம்பெற்றாலும் பதவிகளைப் பெற முடியாது. 5 பிரதான கட்சிகளும் தமக்குள்.. கூட்டணி அமைக்க அனுமதியில்லை. இவை அடிப்படை அம்சங்கள். இதற்கு கட்டுப்படுவது அனைவரினதும் கடமை. நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு.. முன் வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்குள் மாற்றங்கள் அவசியம் என்றால் இப்போதே அதனை தெரிவித்து திருத்திக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றேல்.. இவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு.. அடிப்படை விதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும். அடைப்படை விதிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். Edited November 18, 2011 by nedukkalapoovan Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 யாழ்கள காதலர் கட்சி என்று ஒன்றை ஆரம்பிச்சால் என்ன???? :D சில கொள்கைப்பிரகடனம் இருக்கு அதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கிறோம் இன்னும் ஒரே ஒரு கட்சி தான் அமைக்கலாம். முடிவை துரிதமாக எடுங்கோ..! Quote Share this post Link to post Share on other sites
வாத்தியார் 1,465 Posted November 18, 2011 ஐந்து கட்சிகளையும் பதிந்தாப்பில எந்தக் கட்சியில சேரலாம் எண்டு யோசிப்பம்..! எலோரும் இன் நாட்டு மன்னர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட எங்கள் கட்சியில் அங்கத்தவராவதற்கு ஏன் தயக்கம் .மாய வார்த்தைகளையும் உறுதி மொழிகளையும் நம்பி ஏமாறாமல் உடனே எங்கள் கட்சியில் உறுப்பினராகுங்கள் .முதலில் உறுப்பினராகும் 5 பேரைக் கொண்டு எங்கள் மன்னாதி மன்னர்கள் சபை அமைக்கப்படும்.அதன் பின்னர் சேரும் உறுப்பினர்களின் வேண்டுகோள்கள் ஆராயப்பட்டு தேவையேற்படின் மன்னாதி மன்னர்கள் சபை மீளமைக்கப்படும் யா க ம ச வில் உறுப்பினர்களே இன்னும் சேரவில்லை அதற்குள் இக்கட்சியின் மீது சிலர் கல்லேறிகின்றனர்.அதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதில்லை சீனாவிலிருந்து ய்ங் மங் சிங் ,சிங் மங் ய்ங் என்பவர்கள் இக்கட்சியில் சேர விண்ணப்பித்து உள்ளார்கள் அவர்களுக்கு யா க ம ச வில் என்ன வேலை இது எதிரிகளின் சதித் திட்டம். இவையெல்லாவற்றையும் முறியடிப்போம் . வாருங்கள் களம் காப்போம் கள மக்கள் நலன் காப்போம் Quote Share this post Link to post Share on other sites
ஜீவா 681 Posted November 18, 2011 இன்னும் ஒரே ஒரு கட்சி தான் அமைக்கலாம். முடிவை துரிதமாக எடுங்கோ..! யாழ்கள காதலர் கட்சி கொள்கைகள்: யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல் (சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்) பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல் (அப்படி நடித்தல்) மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்.. திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல். காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்... காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது.. பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. Quote Share this post Link to post Share on other sites
நிழலி 4,775 Posted November 18, 2011 இதோ என்னால் ஆரம்பிக்கப்படும் கட்சி கட்சி பெயர்: வாழ்க்கை வாழ்வதற்கே கொள்கை: வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை. துன்பம் வரும் போகும், ஆனால் அதையெல்லாம் கனக்க மண்டைக்குள் எடுக்காமல் "இந்த நிமிடம் இனி வராது" என்று எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் கொள்கை கொண்டவர்களை கொண்டது இந்தக் கட்சி "வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் வந்த தூரம் கொஞ்ச தூரம் சொந்தமில்லை எந்த ஊரும் தேவையில்லை ஆரவாரம் தோளில் உள்ள பாரம் போதும் நெஞ்சில் ஏன் பாரம் வேண்டு?" "நேற்று மீண்டும் வருவதில்லை நாளை என்றோ தெரிவதில்லை இன்று மட்டும் உங்களின் கையில் வந்து உள்ளது வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்கச் சொல்லுது" இதில் இணைய விரும்புவர்கள் வரிசைகட்டிக் கொண்டு வரவும். முதல் பத்து ஆட்களுக்கு பரிசு உண்டு 3 Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 (edited) யாழ்கள காதலர் கட்சி கொள்கைகள்: யாழில் காதலிப்போரை ஊக்கப்படுத்துதல் (சட்டரீதியான பிரச்சனைகளில் எஸ்கேப் ஆகுதல்) பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்தல் (அப்படி நடித்தல்) மன்மதர்களாய் கனவில் பறப்பதற்கான பயிற்சிகள்,ஜடியாக்கள் குடுத்தல்.. திண்ணையில் பெண்களுடன் அரட்டை அடிப்பதை தேசியநோக்கமாய் கருதி அதை சட்ட ரீதியாக பதிவு பண்ணுதல். காதல் சம்பந்தப்பட்ட கவிதை,கதைகளை எழுதித்தொலைத்தல்.. வாசகர்களை காதல் பித்து பிடிக்க வைத்தல்... காதலில் ஜெயிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிட்டு காசு பார்த்தல் முக்கியமாக பெண்பெயரில் வந்தாவது ஆண்களை கடுப்பேத்துவது.. பி.கு கட்சி பதிவு செய்தால் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இன்னும் கொள்கைகள் வளரும்.. இறுதியாக உங்களின் கட்சியினையும் பதிவுச் செய்து கொள்கின்றோம். இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு எட்டிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு.. கட்சி + ஸ்தாபகர். 1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) 2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) 3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) 4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) 5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. Edited November 18, 2011 by nedukkalapoovan Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 (edited) இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு.. கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) 1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1) 2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (1) 3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0) 4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0) 5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (0) ----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு) 6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0) கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. Edited November 18, 2011 by nedukkalapoovan Quote Share this post Link to post Share on other sites
கிருபன் 3,264 Posted November 18, 2011 யாழ் கள உயர்குழாம் கட்சியின் விதிகளுக்கு அமைய தொழில் சார் நிபுணர்களாகக் தங்களைக் கருதிக்கொள்ளும் நெடுக்ஸ், நிழலி, இசைக்கலைஞன் இன்னும் பலர் எனது கட்சியில் நிரந்தரமாகவே ஆயுட்கால உறுப்பினராகிவிட்டனர். எனவே கட்சியின் குறைந்தபட்ச அங்கத்தினர்கள் இரண்டு என்ற தகுதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றாயிற்று. எனினும் கட்சி உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதால் அவர்கள் இத்திரியில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்! Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 (edited) யாழ் கள உயர்குழாம் கட்சியின் விதிகளுக்கு அமைய தொழில் சார் நிபுணர்களாகக் தங்களைக் கருதிக்கொள்ளும் நெடுக்ஸ், நிழலி, இசைக்கலைஞன் இன்னும் பலர் எனது கட்சியில் நிரந்தரமாகவே ஆயுட்கால உறுப்பினராகிவிட்டனர். எனவே கட்சியின் குறைந்தபட்ச அங்கத்தினர்கள் இரண்டு என்ற தகுதி ஏற்கனவே கிடைக்கப்பெற்றாயிற்று. எனினும் கட்சி உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதால் அவர்கள் இத்திரியில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்! நான் சுயேட்சையாக பொதுமக்கள் உரிமையோட இருக்கப் போறன்... கிருபண்ணா. நிழலி அண்ணர்.. ஏலவே ஒரு கட்சியை ஸ்தாபித்து விட்டதால்.. அவரை நீங்கள் கட்சிக்குள் சேர்க்க முடியாது. இருந்தாலும்.. நிரந்தரப் பதிவுக்கு முன்னர் நிழலி அண்ணரோ.. எவருமோ.. தங்கள் கட்சியை கலைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். தற்காலிக பதிவில் உள்ள (கட்சி நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ள கட்சிகள்) கட்சியைக் கலைத்துவிட்டு இதர கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால் நிரந்தரப் பதிவின் பின் அப்படிச் செய்ய இயலாது. Edited November 18, 2011 by nedukkalapoovan Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 (edited) இதுவரை யாழ் களமாளுமன்றத்துக்காக பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரங்கள். (எல்லைகளற்ற... எண்ணங்கள் செயற்பட முடியாத.. கட்சி எண்ணிக்கையை தகர்த்து.. அதிக பட்சமாக 5 கட்சிகளும் அவற்றிற்குள் மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கொள்கை வடிமைப்பும்.. என்ற தொனிப் பொருள் இங்கு கையாளப்படுகிறது.). அந்த வகையில் கோரப்பட்ட அதிக பட்சமாக 5 கட்சிகள் என்ற நிலையில்.. இதுவரை எல்லா கட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும்.. கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற இலக்கை இக் கட்சிகள் இன்னும் எட்டவில்லை என்பதால்.. அந்த இலக்கு விரைந்து எட்டக் கூடிய நிலையில்.. பதியப்படும் புதிய கட்சிகள்.. இன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு.. கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) 1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (1) 2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2) 3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (0) 4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0) 5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (0) ----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு) 6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (0) கோரப்பட்ட எண்ணிக்கைக்கு ஏற்ப.. கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டாயிற்று. இருந்தாலும்.. பிற உறவுகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் நோக்கில்.. இந்த ஐந்து கட்சிகளும்.. குறைந்தது தலா இரண்டு உறுப்பினர்களை கொண்டிராத போது.. அவற்றின் பதிவு தானாக ரத்தாகும் நிலை இருப்பதால்.. இந்த 5 கட்சிகளையும் விட மேலதிகமாக பதியப்படும் கட்சிகளுக்கு அவற்றின் கொள்கை.. அங்கத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பதிவில் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே உங்களின் எண்ணத்திற்கு ஏற்ப கட்சிக்கு இடமில்லையே என்ற வருத்தம் கொள்ளாது.. தொடர்ந்து கட்சிகளைப் பதிவு செய்ய நாம் இடமளிக்கின்றோம். இன்னும் உங்களின் கட்சிக்கு.. இந்த பிரதான 5 கட்சிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. காரணம் பதியப்பட்டுள்ள கட்சிகளில் ஓரிரு கட்சிகளைத் தவிர இதர.. இன்னும் பதிவை உறுதி செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்தது கட்சிக்கு இரண்டு உறுப்பினர் என்ற நிலையை இன்னும் பூர்த்தி செய்து கொள்ளவில்லை. Edited November 18, 2011 by nedukkalapoovan Quote Share this post Link to post Share on other sites
BLUE BIRD 255 Posted November 18, 2011 1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) 2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) 3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) 4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) 5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) ஸாகிறாவின் இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றே என்பதால் அவவுடன் தான் சேர வேண்டும் Quote Share this post Link to post Share on other sites
கிருபன் 3,264 Posted November 18, 2011 நான் சுயேட்சையாக பொதுமக்கள் உரிமையோட இருக்கப் போறன்... கிருபண்ணா. நிழலி அண்ணர்.. ஏலவே ஒரு கட்சியை ஸ்தாபித்து விட்டதால்.. அவரை நீங்கள் கட்சிக்குள் சேர்க்க முடியாது. இருந்தாலும்.. நிரந்தரப் பதிவுக்கு முன்னர் நிழலி அண்ணரோ.. எவருமோ.. தங்கள் கட்சியை கலைக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். தற்காலிக பதிவில் உள்ள (கட்சி நிபந்தனைகளை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ள கட்சிகள்) கட்சியைக் கலைத்துவிட்டு இதர கட்சிகளில் சேர அனுமதி உண்டு. ஆனால் நிரந்தரப் பதிவின் பின் அப்படிச் செய்ய இயலாது. யாழ்கள உயர் குழாம் கட்சியின் விதி ஐந்தின்படி தொழில்சார் நிபுணர்களாக உள்ளவர்களும் தொழில்சார் நிபுணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்களும் பிரிந்து சென்று இன்னுமொரு கட்சி ஆரம்பிக்க அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். பார்க்க விதி 5: தேர்தல் முறை இல்லாததால் கட்சி அங்கத்தினர் தாமாக பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள். இருந்தும் தனிப்பட்ட வாழ்விற்காகப் பிரிந்து செல்ல முயல்பவர்கள், வேறு கட்சி அமைக்க அனுமதிக்கப் படமாட்டார்கள். Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 (edited) கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) 2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2 - சிறி அண்ணர், நீலப் பறவை) வல்லை அக்காவின் கட்சி வேண்டப்பட்ட ஆகக்குறைந்த தகுதிகளைப் பெற்று முதல் நிரந்தரப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனி அவர்கள் களமாளுமன்றிற்கான அவர்களின் கொள்கைகள்.. தேர்தல்களை சந்தித்ததல் குறித்தும்.. தமது கட்சி அமைப்பு.. விரிவாக்கம் குறித்தும் சிந்திக்கலாம். வாழ்த்துக்கள் சகாரா அக்கா. Edited November 18, 2011 by nedukkalapoovan Quote Share this post Link to post Share on other sites
nedukkalapoovan 5,101 Posted November 18, 2011 யாழ் கள உயர் குழாம் கட்சியின் விதி ஐந்தின்படி தொழில்சார் நிபுணர்களாக உள்ளவர்களும் தொழில்சார் நிபுணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்களும் பிரிந்து சென்று இன்னுமொரு கட்சி ஆரம்பிக்க அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். பார்க்க விதி 5: இதென்ன அடாத்தான முறையா இருக்குது கிருபண்ணா. நாங்கள் கட்சி சாராமல் இருக்க விரும்பிற மக்களுக்கு சுயேட்சை அமைப்பு என்ற நிலை வழங்கி இருக்கிறம். சுயேட்சை அமைப்புக்குள் இருந்தாலும்.. தேர்தலுக்கு முந்திய கட்சிகளின் நிலைப்பாடுகள்.. விஞ்ஞாபனங்கள் குறித்து கூட்டணி பற்றி சிந்திப்போம். கட்சிகளில் இடம்பெறாதவர்கள் எல்லோரும் ஒரே ஒரு சுயேட்சை அமைப்புக்குள் வைத்துக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு பொதுமக்கள் உரிமை.. வாக்குரிமை.. கருத்துரிமை.. எல்லாம் வழங்கப்படும். ஆனால் களமாளுமன்றில்.. அடிப்படை உரிமைகளைத் தவிர இதர பதவி நிலைகளை அடைய முடியாது. தேர்தலில் தனித்து நிற்க முடியாது. ஆனால் குறித்த பதவிக் காலத்தில் தேர்தல் நடக்க முன்னரே.. தாம் விரும்பும் ஒரே ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். தேர்தலின் பின் கூட்டணி அமைக்க முடியாது. தேர்தலின் பின் குறித்த பதவிக்காலம் முடியும் வரை.. கூட்டணியில் இருந்து விலகவோ.. கட்சி தாவவோ.. முடியாது. சுயேட்சைகள்.. கூட்டணியில் இடம்பெற்றாலும் பதவிகளைப் பெற முடியாது. 5 பிரதான கட்சிகளும் தமக்குள்.. கூட்டணி அமைக்க அனுமதியில்லை. இவை அடிப்படை அம்சங்கள். இதற்கு கட்டுப்படுவது அனைவரினதும் கடமை. நடைமுறை சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு.. முன் வைக்கப்பட்டுள்ள இந்த அடிப்படைகளுக்குள் மாற்றங்கள் அவசியம் என்றால் இப்போதே அதனை தெரிவித்து திருத்திக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றேல்.. இவை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்பட்டு.. அடிப்படை விதிகளுக்குள் அடக்கப்பட்டு விடும். அடைப்படை விதிகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,653 Posted November 18, 2011 எமது கட்சியின் கொடியை முதன் முதலாக அறிமுகப் படுத்துவதில் ப.மே.க. பெருமையடைகின்றது. எங்கள் "படிக்காத மேதைகள்" கட்சியே... வரும் தேர்தலில் ஆட்சியமைக்க இருப்பதால்... கட்சியில் உடனடியாக சேர்பவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். "சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்" Quote Share this post Link to post Share on other sites
ஜீவா 681 Posted November 18, 2011 யாழ்கள காதலர் கட்சிக்கு அனைத்து செல்லங்களும் வந்து இணையுங்கள் அச்சாப்பிள்ளையள். காதலை வாழவைக்க வேண்டியது உங்கள் கடமை (கொய்யாலை யாரோ ஒருத்தன் குசுகுசுக்கிறது கேட்குது) அதனால் உங்கள் கடமையை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். Quote Share this post Link to post Share on other sites
தமிழ் சிறி 11,653 Posted November 18, 2011 1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) 2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) 3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) 4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) 5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) ஸாகிறாவின் இலட்சியமும் என்னுடைய இலட்சியமும் ஒன்றே என்பதால் அவவுடன் தான் சேர வேண்டும் எமது கட்சியில் இணைந்து கொண்ட நீலப்பறவையை ஆரத்தழுவி வரவேற்கின்றேன். நீலப்பறவை இணைந்ததன் மூலம், எமது கட்சி பதிவு செய்யப் பட்டு விட்டது. வேறு கட்சியில் இருந்து தாவி... ப.மே.க. வுக்கு வருபவர்களுக்கு, ஐந்துநட்சத்திர ஓட்டலில் விசேட விருந்து அளிக்க கட்சி தீர்மானிதுள்ளது. Quote Share this post Link to post Share on other sites
தப்பிலி 285 Posted November 18, 2011 (edited) உறுப்பினராக விரும்புகிறவர்கள், தயவு செய்து தனிமடலில் தொடர்பு கொள்வதைத் தவிர்த்து, இந்தத் திரியில் பதியவும். நேற்றைய ஏக்கங்கள் இன்று கனவுகள் ஆகும் இன்றைய கனவுகள் நாளைய வெற்றிகள் ஆகும் Edited November 18, 2011 by தப்பிலி Quote Share this post Link to post Share on other sites