• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nedukkalapoovan

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

ஹலோ.. :wub:

பமேகவினரின் பாம்பு எல்லாம் பல்லுப் புடுங்கினது எண்டு நீங்கள் எழுதினதை நாங்கள் வாசிச்சிட்டம்..! :lol: இப்ப மாத்திப் பிரியோசனமில்லை..! :icon_mrgreen:

பி.கு: மன்னர்கள் சபையில் சேர்ந்தால் இப்பிடிப் போட்டுக் குடுக்க மாட்டமல்லோ..! :lol:

அறியாப் பிள்ளை தெரியாமல் எழுதியதை வைத்து ப்ளெக் மெயில் பன்னி ஆள் எடுப்பத்தை தேர்தல் ஆணையாளர் கண்டிக்க வேண்டும்...

அரிசியலிலும் பன்பையும் அன்பையும் விட்டுக் கொடுக்காத கட்சி பமேக

Share this post


Link to post
Share on other sites

இளைஞர் அனித் தலைவர் வடிவேல் கட்சி நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார் இது பாரட்டுதலுக்குரியது

Share this post


Link to post
Share on other sites

அறியாப் பிள்ளை தெரியாமல் எழுதியதை வைத்து ப்ளெக் மெயில் பன்னி ஆள் எடுப்பத்தை தேர்தல் ஆணையாளர் கண்டிக்க வேண்டும்...

அரிசியலிலும் பன்பையும் அன்பையும் விட்டுக் கொடுக்காத கட்சி பமேக

கட்சிக்கு ஆட்பிடிக்கும் நடைமுறைகளை தேர்தல் ஆணையகம் கட்டுப்படுத்தாது. யாழ் களமாளுமன்றில்.. கட்சி சம்பந்தப்பட்ட விடயங்களில்.. கட்சிகள்.. கட்சி நடவடிக்கைகள் குறித்து மட்டுமே தேர்தல் ஆணையகம் கண்காணிக்கும்.. பரிந்துரைக்கும்..!

மேலும்.. யா.ம.ச வின் கட்சிக்கு ஆளெடுக்கும் வழிமுறைகளில் பாரிய குறைபாடுகள் இருப்பதாக தேர்தல் ஆணையகம் கருதவில்லை.

இருந்தாலும்.. ப.மே.க வின் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையகம்.. யா.ம.ச வின் கவனத்திற்கு கொண்டு வருகிறதை மட்டும் இப்பதிவினூடு செய்ய விளைகிறது.

நன்றி. :):lol:

Share this post


Link to post
Share on other sites

யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் மார்கழி 25. 2011

(கட்சிகளுக்கானதும்.. மக்கள் சபைக்கானதுமான பொது அறிவிப்பு.)

தேர்தலுக்கு இன்னும் இருக்கும் கால எல்லை: வெறும் 5 தினங்கள் மட்டுமே.

பிரச்சார முடிவுத் திகதி: 23-12.2011 (நள்ளிரவு)

வாக்களிப்பு இடம்: உப திரி

(யாழ் கள களமாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமானது.) (இதர விடயங்கள் இதே திரியில் அமைய வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் அங்கு பதியப்பட வேண்டும்.)

வாக்களிப்பு நேரம்: 25-12-2011 முன்னிரவு 12 முதல் பின்னிரவு 12 வரை. (24 மணி நேரங்கள்.)

(இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத அல்லது அதற்குப் பின் பதியப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)

தேர்தல் முடிவு உத்தியோக பூர்வ அறிவிப்பு: 26-12-2011

ஆட்சி ஏற்பும் களமாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமும்: 01.01.2012

தகவல்:

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

(இவ்வறிப்புக்களில் எந்த மாற்றங்களையும் தேர்தல் ஆணையகம் செய்ய முடியாது. இந்த அறிவிப்பை கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொள்ள கோரப்படுகின்றனர். நன்றி.)

Share this post


Link to post
Share on other sites

 • "ஏக்கமுள்ளோர் கட்சி"தப்பிலியின்
  உடன்பிறவாச் சகோதரியாக அறியப் பட்ட தப்பிலியின்
  நெருங்கியத் தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது அண்ணன் திவாகரன், அக்கா வனிதா மணியின் மகன்கள் பாஸ்கரன், டி.டி.வி தினகரன், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் மற்றும் மிடாஸ் மோகன் ஆகிய 12 பேரை"ஏக்கமுள்ளோர் கட்சி"அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்தப்பிலி. நீக்கப் பட்ட 12 பேருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஏக்கமுள்ளோர் கட்சி எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

ப மே க வின் நத்தார் பரிசு.விளையாடும் அனைவருமே வெற்றியாளர்கள். வாருங்கள்! விளையாடுங்கள்! பரிசுகளை அள்ளிச்செல்லுங்கள்!

http://www.fugly.com..._Maze_Game.html

Edited by BLUE BIRD

Share this post


Link to post
Share on other sites

இங்கு கூடியிருக்கும் அன்பர்களே நண்பர்களே நல்ல உள்ளம் கொண்ட யாழ்கள உறவுகளே......... :)

உங்கள் அனைவருக்கும் யாழ்கள மன்னர் கட்சி சார்பில் முதல் கண் வணக்கங்கள்.

இந்த யாழ்களமாளுமன்றத்தில் இணைந்திருக்கும் கட்சிகளை பாத்தீர்களானால் உங்களுக்கே புரிந்திருக்கும் மன்னர்கள் கட்சியின் மகிமை பற்றி. எம் மன்னர் சபையில் இருப்போர்களின் அருமை பெருமைகளை நாம் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமென்றில்லை. நகைச்சுவைக்கு பெயர் போன பல மன்னர்கள் எம் சபையில் வீற்றிருக்க நீங்கள் மட்டும் இன்னமும் மன்னர்களாகாமல் தயங்கிநிற்பது ஏனோ? :rolleyes: எம் கட்சியில் வந்து இணைந்து பாருங்கள் அப்போது புரியும் உங்களுக்கு கிடைக்கவுள்ள அரச மரியாதையை எவ்வளவு சிறந்தது என்று. மிகுதி இருக்கும் 5 நாட்களில் எம் கட்சியில் இணைபவர்களுக்கு பலவிதமான சலுகைகள் வழங்கப்படும் என்பதை இந்த இளவரசி உறுதிப்படுத்திக்கொள்கின்றாள் :). இந்த இளவரசி சார்பாக எம் கட்சியில் இணைபவர்களுக்கு நீங்கள் விரும்பும் பாடல்கள் இனாமாக வழங்கப்படும் அத்துடன் பல பணப்பொதிகள் நத்தார் புதுவருட அன்பளிப்பாக யாழ்கள மன்னர்கள் கட்சியின் தலைவராகிய விசுகு மன்னரால் பரிசளிக்கப்படும். :icon_idea: எம் இனிய உறவுகளே இன்னும் 5 நாட்களே உள்ளன எனவே விரைந்து செயல்படுங்கள் இன்றே இப்போதே எம் கட்சியில் இணைந்து மன்னராகுங்கள்.

இந்த உரையை உரையாற்ற எனக்கு வாய்பளித்த என் அருமை அண்ணர்களாம் மன்னர்களுக்கு நன்றி கூறி இதை இந்த குளிருக்குள்ளும் பனிக்குள்ளும் குந்தியிருந்து செவிமடுத்த அனைத்து யாழ் உறுப்பினர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி நன்றி நன்றி. :D

என்றும் அன்புடன்

இளவரசி :)

Share this post


Link to post
Share on other sites

அதுதானே ! இப்ப பாம்புகள் எல்லாம் எம்மைப் பார்த்துச் சீறுவது கூடக் கிடையாது. சமர்த்தாக பாலை குடிச்சிட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துக் கிடக்கு.

இரண்டு நாள் இடைவேளையின் பின் புதிய பாம்புகளுடன்

http://animal.discovery.com/videos/wild-recon-rinkhals-cobra-spits-venom.html

Share this post


Link to post
Share on other sites

 • "ஏக்கமுள்ளோர் கட்சி"தப்பிலியின்
  உடன்பிறவாச் சகோதரியாக அறியப் பட்ட தப்பிலியின்
  நெருங்கியத் தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது அண்ணன் திவாகரன், அக்கா வனிதா மணியின் மகன்கள் பாஸ்கரன், டி.டி.வி தினகரன், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் மற்றும் மிடாஸ் மோகன் ஆகிய 12 பேரை"ஏக்கமுள்ளோர் கட்சி"அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்தப்பிலி. நீக்கப் பட்ட 12 பேருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஏக்கமுள்ளோர் கட்சி எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

இப்பவாவது ப.மே.க வினர் எங்கள் கட்சியின் பலத்தையும் கண்ணியத்தையும் புரிந்து கொண்டதிற்கு நன்றி. கட்சி விதிகளை மீறினால் யாரையும் தூக்கியெறியத் தயங்க மாட்டோம். கொள்கை முக்கியம்.

கட்சிக்குள் ஊடுருவி 'பொலிட்பீறோ' வின் அரசியல் நடவடிக்கைகளை வேவு பார்த்தும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த ப.மே.க, யா.ம.க கட்சிகளின் உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு கட்சியை விட்டு விலக்கப்பட்டுள்ளார்கள்.

சிறு பாம்புகளும் கீரிகளும் கழுகை சீண்டிப் பார்க்க நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

:D

Share this post


Link to post
Share on other sites

 • மன்னர்கள் கட்சியின் இளவரசி "யின்
  உடன்பிறவாச் சகோதரியாக அறியப் பட்ட இளவரசி யின்
  நெருங்கியத் தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது அண்ணன் திவாகரன், அக்கா வனிதா மணியின் மகன்கள் பாஸ்கரன், டி.டி.வி தினகரன், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் மற்றும் மிடாஸ் மோகன் ஆகிய 12 பேரை" மன்னர்கள் கட்சியின் "அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார் இளவரசி . நீக்கப் பட்ட 12 பேருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மன்னர்கள் கட்சியின் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

அதிரடியாயாக இளவரசி கட்சியிலிருந்து 12 பேரை நீக்கியுள்ளார்.இவரின் இந்த நடவடிக்கையால் மன்னர் குழாத்தில் பெரிய குழப்பங்கள் தோன்றியுள்ளது. நிலைமை முடிவிற்கு வரும் வரை ப மே கா வினரை அமைதிகாக்கும்படி அம்மா வஸா அவர்கள் கேட்டுகொண்டுள்ளார்.இருகட்சிகளில் ஏற்பட்ட குழப்பமானது மக்களை விசனடைய செய்துள்ளது.இச்சம்பவம் வெளி நாடொன்றின் சதியாகவிருக்கலாமென நம்பப்படுகிறது.

Edited by BLUE BIRD

Share this post


Link to post
Share on other sites

மிகுதி இருக்கும் 5 நாட்களில் எம் கட்சியில் இணைபவர்களுக்கு பலவிதமான சலுகைகள் வழங்கப்படும் என்பதை இந்த இளவரசி உறுதிப்படுத்திக்கொள்கின்றாள் :). இந்த இளவரசி சார்பாக எம் கட்சியில் இணைபவர்களுக்கு நீங்கள் விரும்பும் பாடல்கள் இனாமாக வழங்கப்படும் அத்துடன் பல பணப்பொதிகள் நத்தார் புதுவருட அன்பளிப்பாக யாழ்கள மன்னர்கள் கட்சியின் தலைவராகிய விசுகு மன்னரால் பரிசளிக்கப்படும். :icon_idea: எம் இனிய உறவுகளே இன்னும் 5 நாட்களே உள்ளன எனவே விரைந்து செயல்படுங்கள் இன்றே இப்போதே எம் கட்சியில் இணைந்து மன்னராகுங்கள்.

உறவுகளே

கொள்கை விளக்கம் ஏதுமின்றி, அன்பளிப்புக்களைத் தந்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். பாட்டிற்கும் நோட்டிற்கும் ஆசைப்பட்டு உங்கள் எதிர்காலத்தை அடகு வைக்காதீர்கள். :icon_idea:

அது சரி இளவரசி அந்தப் பணப் பொதியில் எவ்வளவு வைத்துள்ளீர்கள்? :unsure:

Edited by தப்பிலி

Share this post


Link to post
Share on other sites

உறவுகளே

கொள்கை விளக்கம் ஏதுமின்றி, அன்பளிப்புக்களைத் தந்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். பாட்டிற்கும் நோட்டிற்கும் ஆசைப்பட்டு உங்கள் எதிர்காலத்தை அடகு வைக்காதீர்கள். :icon_idea:

அது சரி இளவரசி அந்தப் பணப் பொதியில் எவ்வளவு வைத்துள்ளீர்கள்? :unsure:

தப்பிலி அண்ணா என் அண்ணர்கள் தான் எம் கட்சியின் கொள்கைகளை முன்வைத்துவிட்டார்களே..நான் திரும்பவும் அவற்றை கூறி என் உரையை கேட்போரை சோந்துபோகவிடவிரும்பவில்லை :icon_idea:

நீங்கள் எம் கட்சியில் வந்து முதலில் இணையுங்கள் பின்பு சொல்கின்றேன் அந்த பணப்பொதியில் எவ்வளவு உள்ளது என்று :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

எமது கட்சி நலனுக்காக பாம்புகளை பயிற்று விற்பதற்காக உத்தரபிதேஷில் இருந்து இந்த பயிற்றுனரை வரவழைத்துள்ளோம் இதில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ராஜ நாக பாம்புகளை பயன்படுத்தி எமது கட்சிக்கு எதிராக செயற்படுவோரை வழிக்கு கொண்டுவருவதற்க்கான முதல் கட்ட வேலைகள் என்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கின்றது .......

இவர்தான் பாம்பு பயிற்றுனர்.

snake_girl_003.jpg

snake_girl_005.jpg

பயிர்ச்சின் போது பாம்புகளுடன் மாஸ்ரர்

http://youtu.be/H1onSluxdZ4

இதனை மொழிபெயர்ப்பு செய்வதற்கு UP இல் இருந்து வரவிருக்கின்றார்.

Share this post


Link to post
Share on other sites

யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் மார்கழி 25. 2011

(கட்சிகளுக்கானதும்.. மக்கள் சபைக்கானதுமான பொது அறிவிப்பு.)

தேர்தலுக்கு இன்னும் இருக்கும் கால எல்லை: வெறும் 5 தினங்கள் மட்டுமே.

பிரச்சார முடிவுத் திகதி: 23-12.2011 (நள்ளிரவு)

வாக்களிப்பு இடம்: உப திரி

(யாழ் கள களமாளுமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமானது.) (இதர விடயங்கள் இதே திரியில் அமைய வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் அங்கு பதியப்பட வேண்டும்.)

வாக்களிப்பு நேரம்: 25-12-2011 முன்னிரவு 12 முதல் பின்னிரவு 12 வரை. (24 மணி நேரங்கள்.)

(இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத அல்லது அதற்குப் பின் பதியப்பட்ட வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)

தேர்தல் முடிவு உத்தியோக பூர்வ அறிவிப்பு: 26-12-2011

ஆட்சி ஏற்பும் களமாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமும்: 01.01.2012

தகவல்:

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

(இவ்வறிப்புக்களில் எந்த மாற்றங்களையும் தேர்தல் ஆணையகம் செய்ய முடியாது. இந்த அறிவிப்பை கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொள்ள கோரப்படுகின்றனர். நன்றி.)

சார் என்னை உங்கள் ஆணயகத்தில் உதவியாளராக சேருங்கள் தேர்தலில் முறைகேடுகள் வராமல் பார்துகொள்ள உங்களுக்கு உதவுகிறேன்

Share this post


Link to post
Share on other sites

யாரங்கே! மீண்டும் பாம்புகளைப் பிடித்து சீனா, சிங்கப்பூர் என்று ஏற்றி விடுங்கள்!

வெட்டி முரசு:

ஒரு மன்னர்: மன்னா என்ன குறவர்கள் எல்லாம் குதூகலமாய் திரிகின்றார்களே என்ன விடயம்!

மற்ற மன்னர்: உமக்குத் தெரியாதா, "சத்திர சிகிச்சை சர்ப்பம்" (ஒப்பிரேசன் சினேக் ) மீண்டும் ஆரம்பம்!

ஒ.மன்னர்: ஒ ஒ , அப்ப அவர்கள் கையில் ஒரு கருவி இருக்குதே என்ன அது.

ம.மன்னர்: அதுவா அது கடலில் மீனவர்கள் மீன்கள் இருக்கும் இடத்தை காட்டும் கருவி போல் இது தரையில் நூறு கி. மீ. தூரத்தில் இருக்கும் சகல பாம்புகளையும் துல்லியமாகக் காட்டிக் கொடுத்து விடும்!

Share this post


Link to post
Share on other sites

சார் என்னை உங்கள் ஆணயகத்தில் உதவியாளராக சேருங்கள் தேர்தலில் முறைகேடுகள் வராமல் பார்துகொள்ள உங்களுக்கு உதவுகிறேன்

யாழ் கள களமாளுமன்றுக்கான யாப்பின் கீழ்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்/ஆணையம்.. மக்கள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மட்டுமே கொண்ட அமைப்பாக இருக்கும். சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு.. புதிய நிஜமனங்களை செய்யும் அதிகாரமோ.. வசதியோ அளிக்கப்படவில்லை. இருந்தாலும்.. சிறிய யாப்புத் திருந்தம் ஒன்றினூடாக.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க.. தேர்தல் ஆணையகம் விரும்புகிறது. இதில் ஆகக் கூடியது இருவர் அங்கத்துவம் வகிக்க முடியும். அதற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலோ.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில்.. கட்சிகள்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. தொடர்ச்சியாக தவறு கண்டாலோ.. இந்த சுயாதீன அமைப்பின் செயற்பாடுகளை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கள மாளுமன்றிற்கான பரிந்துரைக்கு அமைய.. கட்டுப்படுத்த அல்லது இல்லாமல் செய்ய முடியும்.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் அமைக்க அனுமதிப்பதன் மூலம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் பக்கச் சார்பாக செயற்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும். தேர்தல்களில் கட்சிச் செயற்பாடுகள்.. மக்கள் சபை செயற்பாடுகள்.. என்பவற்றையும்.. தேர்தல் கூடிய சுதந்திரமாகவும் சனநாயகத் தன்மையோடு நிகழ்த்தப்படுகிறதா என்பதையும் அறிய வழி பிறக்கும்.

அந்த வகையில் யாழ் கள களமாளுமன்ற யாப்பிற்கு கீழ் வரும் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை குண்டன் ஆரம்பிக்க முன் அனுமதியும் அளிக்கப்படுகிறது.

யாழ் கள களமாளுமன்றம்..

யாப்பு திருத்தம் பகுதி அ.1 இன் கீழ்...

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு உட்படாத ஆனால் சுயாதீன தேர்தல் ஆணையத்தால் விளக்கம் கோரப்படக் கூடிய.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட தேர்தல் ஆணையகம் பரிந்துரைக்கிறது.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றச் செயற்பாடுகளில் நேரிடையாக தலையிட முடியாது. ஆனால் அது தேர்தல்கள் தொடர்பான நடுநிலையான கண்காணிப்பை நல்கி அதை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றிற்கு சமர்ப்பிக்கலாம்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. யாழ் கள களமாளுமன்றதிற்குரிய கட்டமைப்பு அல்ல. அது அதற்கு வெளியில் இருந்து செயற்படக் கூடிய அமைப்பு ஆகும். அந்த வகையில் அதற்கு ஊடக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அது தனது அறிக்கைகளை.. பரிந்துரைகளை நேரடியாகவோ.. ஊடகங்களூடாகவோ இங்கு முன்வைக்கலாம். அதற்கு களமாளுமன்றத்தினதோ.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தினதோ முன் அனுமதிகளைப் பெறத் தேவையில்லை.

பரிந்துரைகளில் நியாயத்தன்மை காணப்படின்.. அவை சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் அல்லது கட்சிகளால் யாழ் கள களமாளுமன்றில்.. விவாதிக்கப்பட்டு.. வாக்கெடுப்பின் மூலமோ.. அல்லது உறுப்பினர்களின் மக்கள் சபையின் பொதுவிருப்புக்கு அமையவோ அவை சட்டமாக்கப்படலாம். மற்றும்படி பரிந்துரைகளை வேறு எந்த விதத்திலும் யாரும் அமுலாக்க முடியாது.

பின் இணைப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/திணைக்களத்தின் செயற்பாடுகள்.

சுயாதீன தேர்தல் திணைக்களம்.

தேர்தல் சுயாதீன தேர்தல் திணைக்களத்தால் மட்டுமே நடத்தப்படும். இதில் ஆளும் கட்சியோ.. எதிர்க்கட்சியோ செல்வாக்குச் செய்ய முடியாது. மக்கள் சபை அதன் கருத்துக்களை சுயாதீன தேர்தல் திணைக்களம் முன் கூறலாம். அதேபோல்.. உறுப்பினர்கள் சபையும் தங்கள் கோரிக்கைகளை சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் முன் வைக்கலாம்.

சுயாதீன தேர்தல் திணைக்களப் பணிகள்: பதவிக்கால நிறைவுத் திகதி.. தேர்தல் திகதி.. அறிவித்தல். ஆட்சிக்குரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தல்.. களமாளுமன்ற உறுப்பினர் சபையின் பதவி நிலைகளை உறுதி செய்தல்.. களமாளுமன்ற விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணித்தல்.. சரியான நேரத்தில்... தேவையின் பொருட்டு செய்யப்படும்.. களமாளுமன்ற ஆட்சிக் கலைப்பை உறுதி செய்தல்...போன்ற செயற்பாடுகள் அமையும். சுயாதீன தேர்தல் திணைக்களம்.. உறுதி செய்யாமல்.. இவை எதுவும் நிகழ்ந்துவிட்டதாக எவருமே கருத முடியாது. சுயாதீன தேர்தல் திணைக்களப் பணியாளராக ஒருவர் மட்டுமே இடம்பெற முடியும். மக்கள் சபையின் ஓர் உறுப்பினராக.. நெடுக்காலபோவன் ஆகிய நான் என் முதற் கடமை செய்வேன். இது ஓராண்டு காலம் வரை நீடிக்கலாம். அதன் பின் இப்பதவிக்கான வெற்றிடம் குறித்து மக்கள் சபைக்கு அறியத்தரப்பட்டு.. அந்தப் பதவிக்கு வர விரும்புவோர் பற்றிய விபரம் அறியப்பட்டு.. அது களமாளுமன்றில்.. மக்கள் சபை.. உறுப்பினர் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு.. அங்கு பெரும்பான்மை பெறும் ஒருவர்.. மக்கள் சபையில் இருந்து அந்தப் பதவிக்கு வர தேர்ந்தெடுக்கப்படுவார்.

இப்பதிவு யாப்புத் திருத்தங்களை உள்ளடக்கி இருப்பதால் கட்சிகளும் மக்கள் சபையும் கவனமாக படிப்பதோடு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் நிறுவப்படுவதை தெரிந்து கொண்டு அதனை ஸ்தாபிக்கும் உரித்தை குண்டன் என்ற கள உறவு பெற்றுள்ளதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குவதும் அவசியம். குண்டன் தனித்தோ அல்லது இன்னொரு உதவியாளருடன் சேர்ந்தோ அந்த அமைப்பை கொண்டு செல்ல சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இந்த யாப்புத் திருத்தம் மூலம் அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த யாப்புத் திருத்தம் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

1. இந்த யாப்புத் திருத்தத்தை.. களமாளுமன்றில் விவாதித்து ரத்துச் செய்ய களமாளுமன்றிற்கு (உறுப்பினர் சபை + மக்கள் சபை) உரிமை உண்டு.

2. இந்தப் பதிவில் திருத்தங்கள் செய்தது காண்பிக்கப்படின்.. இந்த யாப்புத் திருத்தம் செல்லுபடியற்றதாக கொள்ளப்பட வேண்டும்.

நன்றி. :)

Share this post


Link to post
Share on other sites

இதைப் பார்த்தால் தலை சுத்துது. ஆரம்பத்தில இருந்து ஆயிரத்தெட்டுத்தடவை வாசிச்சிட்டன். ஒரு இழவும் விளங்கேல.யாராச்சும் விளக்கம் கொடுங்கோ சுளுக்கா.

நாடுகடந்த அரசே கொஞ்சம் பிரண்டு போய்க் கிடக்கு இப்ப. இந்த களமாளுமன்றம் எப்பிடி? கொள்கை விளக்கம் குடுங்கோ யாராவது. :)

தேர்தல் எப்ப? அதில பிரதமரா வாறவருக்கு, எம்பியா வாறவருக்கு சம்பளம் கிம்பளம் ஏதாவது இருக்கே?

:rolleyes: ஏனென்டால் நானும் இதுக்கிள்ள பூந்தால் ஏதாவது கிடைக்கும் எண்டுதான் கேக்கிறன். சொல்லுவியளோ இல்லாட்டி இது தொழில் ரகசியம் எண்டு எஸ்கேப் ஆயிடுவியளோ? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தோழ தோழியரே.

மருத்துவர். வடிவேலு

இளைஞர் அனித் தலைவர்.( ப.மே.கட்சி)

இளைஞர் அணித்தலைவர்

முக்கிய வேண்டுகோள் எமது கொள்கையின் படி முதலில் எம்மை திருத்தி அமைக்கவேண்டிய முன்னுதாரணர்களாக நாம் உள்ளோம் அந்தவகையில் எமது இளைஞர் அணித்தலைவர் சினெக் வடிவு அவர்கள் தனது சிறுதவறை இந்த மக்கள் களத்தில் இப்பார்வையாளர்கள் மத்தியில் திருத்தி நாம் செயலாற்றுவீரர்கள் என்பதனை உறுதி செய்வார். அதாவது எமது கொள்கையில் ஒன்றான எழுத்துப்பிழைகளைத் திருத்துதல்... இந்த அரங்கத்தில் மிகவும் பவ்வியமாக சினெக் வடிவு தனது எழுத்துப்பிழையை திருத்தி இனி எமது கழகம் பயணிக்கும் எதிர்காலப்பாதையின் ஒளிவிளக்காய் விளங்குவார் கழகத்தின் இத்தகவல் கிடைத்ததும் தோழர் இங்கு வந்து கொள்கைவீரனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வார்.

யாழ்க்களகளமாளுமன்றின் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் இந்நாளில்.

எங்கள் கழகத்தோழர்களான

சித்திரநகைச்செம்மல்

ஆழநோக்கான்

கருத்துக்காட்டான்

முத்து நகை

சீற்றச்சிறுத்தை

கொள்கைக் கொம்பன்

சினெக் வடிவு

ஆகியோர் பரபரப்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு எங்கள் கழக வெற்றிக்காக ஊண், உடல், பொருள், ஆவி என பலவகையாகவும் தம்மை வருத்தி இதோ இன்னும் சில நாட்களில் வெற்றிக்கான முடிவுகளை அறிய ஆவலாக இருக்கும் இத்தருணத்தில் எமது கழகத்தின் 6 அம்சக்கொள்கைகளை உத்தியோக பூர்வமாக தேர்தல் ஆணையகத்திற்கும் யாழ்க்கருத்துக்கள மக்கள் அனைவருக்கும் அறியத் தருகிறோம்.

6 அம்சக்கொள்கைகள்

1. கலகலப்பு

( யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்களை வாசிக்கும் வாசகப் பெருந்தகைகள் அலட்டல் என்று நினைக்காதவாறு களத்தின் மூலை முடுக்கெல்லாம் எமது கழகத்தோழர் தோழியர் கலகலப்பாக்குவார்கள்}

2. காத்திரம்

( ஒரு விடயத்தை எடுத்து விவாதிக்கும் கருத்தாளர்களுக்கும் அதற்கு மாற்றுக்கருத்தெழுதும் கருத்தாளர்களுக்கும் காத்திரமான கருத்துக்களை எழுதுவதற்கு ஊக்குவித்தல்)

3. பண்பு

( அநாகரீகமான சொல்லாடல்களை தவிர்த்தல், தனிமனிதத்தாக்குதல்களை தடை செய்தல்)

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

5. வரவேற்பு

(புதிதாய் யாழ்க்கருத்தக்களத்திற்குள் அறிமுகமாகும் தோழர்களுக்கு வரவேற்பு அளித்தல் அதேபோல் வித்தியாசமாக புதியகோணத்தில் சிந்திக்கும் கருத்தாளர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களையும் வரவேற்றல்)

6, தட்டிக் கொடுத்தல்

(யாழ்க் கருத்துக்களத்தின் படைப்புக் களத்தில் சொந்தப்படைப்புகளுடன் புதிதாய் தோன்றும் எழுத்தாளர்களை தட்டிக் கொடுத்தல்.)

இவ்வகையான 6 அம்சக் கொள்கைகளை எமது படிக்காதமேதைகள் கழகம் இந்தக்களமாளுமன்றில் முன்வைக்கிறது.

எதிர்காலத்தில் மேலதிகமாக பல நல்ல கொள்கைகள் அவற்றோடு இணைப்போம்.

எதிர்வரும் காலங்களில் எமது கழகத்தினர் இவ் 6 அம்சக் கொள்கைகளை முன்னெடுப்பார்கள்.

இதுதான் படிக்காத மேதைகள் கழகத்தின் கொள்கைகள். இக்கொள்கைகளை விரும்பும் கருத்தாளத் தோழர்கள் எம்முடன் டிசம்பர் 24ந்தேதி வரை தம்மை இணைத்துக் கொள்ளலாம்.

எமது கழகத்தின் சார்பில் எந்தப் எந்தப்பகுதிகளுக்கு எவரெவர் வேட்பாளர்களாக நிற்கப்போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறதா காத்திருங்கள் அறியத் தருகிறோம்.

Share this post


Link to post
Share on other sites

உலக நாடுகளே...... வியக்கும் வண்ணம், முதன் முதலாக ஆறு அம்சக் கொள்கைகளை ... சமர்ப்பித்த ப.மே.க.வின் கட்சித்தலைவி கவிதாயினி சகாராவின் கொள்கைகளை செயல்படுத்த... இது நல்ல தருணம். உடனடியாக எமது கட்சியில் வந்து, இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே....

கட்சிப் பிரச்சாரம் செய்ய 23.12.11 வரை மட்டுமே... என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள படியால், ப.மே.க. வால்.. பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட தேர்தல் பிரச்சார வண்டியை... ஆளுக்கொன்று எடுத்துக் கொண்டு, மூலை முடுக்கு, பட்டி தொட்டி எங்கும் சென்று.. எமது கட்சிக் கொள்கைகளை மக்களிடம் பரப்புங்கள்.

forbesnri.jpg

தமிழ் வளர, தம்மையே... அர்ப்பணித்த கட்சி. ப.மே.க.

Share this post


Link to post
Share on other sites

வெற்றி வெற்றி . எங்கள் கட்சியின் பிரச்சார பீரங்கியும் ஊடக பேச்சாளருமான சிறி அண்ணையின் பிரச்சாரத்தில் யாழ்கள உறவு ஒருவர் தானும் தனது மனைவி பிள்ளை குட்டியுடன் எமது பமேக வில் வெகு விரவில் தலைவி புரச்சிக் கவி சகாரா அக்காவின் தலமையில் இணையவுள்ளார்..

ஸ்நேக் வடிவு குறிப்பிட்டபடி... கட்சியில் இணையவிருக்கும் யாழ்கள உறவு இன்று மாலை... கட்சிக்காரியாலத்தில் இணைந்து கொள்வார். அப்போது கட்சித் தலைவியும் சமூகமளிப்பார் என்பதால்... கட்சிக்காரியலயத்தைச் சுற்றி... பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சிக்காரியாலய வெளியரங்கில் நடக்க இருக்கும், மாபெரும் கூட்டத்தில் கருத்துக்காட்டான் மருதங்கேணி, கொள்கைக்கொம்பன் தமிழரசு, ஆழநோக்கான் நீலப்பறவை, முத்துநகை நிலாமதி, சீற்றச்சிறுத்தை புலிக்குரல், இளைஞர் அணித்தலைவர் ஸ்நேக் வடிவு ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள்.

வாக்காளப் பெருமக்களே... அலைகடலென ப.மே.க. காரியாலத்திற்கு திரண்டு வாருங்கள்.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

ப மே க வில் இணைவோர் கவனத்திற்கு!

புதிதாக இணைவோரை அஞ்சலி அவர்கள் தனித்தனியே அழைத்து சென்று தரமான உடு புடவைகள் (அமைச்சர்களுக்கேற்றவிதத்தில்) மற்றும் இரத்தபரிசோதனை கோப்பிகடையில் மொட்டைமாடியில் காப்பிகூட உங்களுடனிருந்தருந்துவார்.சந்தர்பத்தை தவறவிடாதீர்கள்!பா மே கா வில் இணையுங்கள்.

shoping with Anjali!

coffee with Anjali! http://t2.gstatic.co...219JPySSq3PY5MP

blood test with Anjali!

dont miss your chance!

every one well come!

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

Edited by BLUE BIRD

Share this post


Link to post
Share on other sites

unp_19122011_2.jpg

unp_19122011_3.jpg

unp_19122011_1.jpg

கழக உறவுகளே! மற்றும் மாற்றுகட்சிதோழர்களே! போட்டியிருக்கலாம் ஆனால் பொறாமை உண்டாகி வன்முறையாக கூடாது

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

Share this post


Link to post
Share on other sites

unp_19122011_2.jpg

unp_19122011_3.jpg

unp_19122011_1.jpg

கழக உறவுகளே! மற்றும் மாற்றுகட்சிதோழர்களே! போட்டியிருக்கலாம் ஆனால் பொறாமை உண்டாகி வன்முறையாக கூடாது

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

ப மே க ஒரு பண்பான கட்சி, அங்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற போட்டி இருக்குமே ஒழிய கட்சியை கவுக்கனும் என்ற பொறாமை இருக்காது. நாம் ஒன்றும் மன்னர் கட்சியில்லை அண்ணை எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருப்பவர்களும் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

விசேட அறிவித்தல் - யாழ் கள களமாளுமன்றத் தேர்தல். 2011

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் கீழ் வரும் செயற்பாடுகளை உடனடியாகச் செய்யக் கோரப்படுகின்றன.

1. கட்சிக் கொள்கைகளை பகிரப்படுத்தல்.

2.பிரதான வேட்பாளர்கள் பட்டியலை அவர்களின் யாழ் கள களமாளுமன்றுக்கான எதிர்கால பதவி நிலைகளோடு வெளியிடுதல். (கட்சி.. உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும் பதவி நிலைகளை கட்சித் தலைமைகள் அவரவர் கட்சி விதிகளுக்கு அமைய தமது விருப்பிற்கு ஏற்ப தேர்தலின் பின் அவசியம் இருப்பின் மட்டும் மாற்றி அமைக்கலாம். ஆனால் அவை களமாளுமன்ற யாப்பிற்கு இணங்க அமைய வேண்டும். அத்தோடு அந்த மாற்றங்கள் நியாயமானதா என்பதை சுயாதீன தேர்தல் ஆணையகம் கண்காணித்து.. மாற்றங்களை கட்சித் தலைமைகள் நியாயமாக கையாளதாவிடத்து.. அவற்றை ரத்துச் செய்யலாம். மேலும் யாப்புக்குள் அமையாத பதவி நிலைகளை கட்சிகள் தன்னிச்சிசையாக களமாளுமன்றில் முன்னிறுத்த முடியாது. கட்சி மட்டத்தில் அதனை வைத்துக் கொள்ளலாம். இவற்றை தீவிரமாக தேர்தல் ஆணையகம் கண்காணித்து அமுல்படுத்தும்.)

3. இன்னும் நிரந்தரப் பதிவு நிலையை எட்டாத கட்சிகள் விரைந்து அதனை எட்டிக் கொள்ளக் கேட்கப்படுகின்றன. அவ்வாறு எட்டாத கட்சிகள் தேர்தலில் நிற்க முடியாது.

தேர்தலில் நிற்க தகுதி பெற்றுள்ள கட்சிகள் விபரம்:

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) () பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) () பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) () பதியப்பட்டுள்ளது.

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) () பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) () பதியப்பட்டுள்ளது.

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) () பதியப்பட்டுள்ளது.

4. அமைதியாகவும் சிறப்பாகவும் சிந்திக்கவும் சிரிக்கவும்.. மக்கள் சபை விருப்பக் கூடிய அளவிலும் தேர்தல் பரப்புரைகளை செய்வது வலியுறுத்தப்படுவதோடு.. அவ்வாறு செயற்படும் கட்சிகளுக்கு கட்சி உறுப்பினர்களுக்கு விசேட ஊக்குவிப்பு பரிசில்களை தேர்தலின் பின் சுயாதீன தேர்தல் ஆணையகம் வழங்கும்.

பின் இணைப்புக்கள்:

யாழ் கள களமாளுமன்றிற்கான.. பொது விதிகள்.. யாப்புக்கள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள இணைப்புகளில் உண்டு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94465&st=200

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94465&st=300

தேர்தல் அறிவிப்பு பற்றிய இணைப்பு:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94465&st=420

நன்றி:

தொடர்புகட்கு:

ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணைய உட்சந்து .

யாழ் களம்.

இணைய வெளி.

பூலோகம்.

Share this post


Link to post
Share on other sites

ஸ்நேக் வடிவு குறிப்பிட்டபடி... கட்சியில் இணையவிருக்கும் யாழ்கள உறவு இன்று மாலை... கட்சிக்காரியாலத்தில் இணைந்து கொள்வார். அப்போது கட்சித் தலைவியும் சமூகமளிப்பார் என்பதால்... கட்சிக்காரியலயத்தைச் சுற்றி... பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சிக்காரியாலய வெளியரங்கில் நடக்க இருக்கும், மாபெரும் கூட்டத்தில் ஆழநோக்கான் மருதங்கேணி, கொள்கைக்கொம்பன் தமிழரசு, கருத்துக்காட்டான் நீலப்பறவை,முத்துநகை நிலாமதி, சீற்றச்சிறுத்தை புலிக்குரல், இளைஞர் அணித்தலைவர் ஸ்நேக் வடிவு ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள்.

வாக்காளப் பெருமக்களே... அலைகடலென ப.மே.க. காரியாலத்திற்கு திரண்டு வாருங்கள்.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

ப மேதைகள் மேதைகள் தான். இப்படி ஒரு வரவேற்பை எந்த ஒரு கட்சியும் சுயமாக சிந்தித்து நடைமுறை படுத்த முடியாது....

விசேட அறிவித்தல் - யாழ் கள களமாளுமன்றத் தேர்தல். 2011

தேர்தலில் நிற்க தகுதி பெற்றுள்ள கட்சிகள் விபரம்:

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) () பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) () பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) () பதியப்பட்டுள்ளது.

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) () பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) () பதியப்பட்டுள்ளது.

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) () பதியப்பட்டுள்ளது.

4. அமைதியாகவும் சிறப்பாகவும் சிந்திக்கவும் சிரிக்கவும்.. மக்கள் சபை விருப்பக் கூடிய அளவிலும் தேர்தல் பரப்புரைகளை செய்வது வலியுறுத்தப்படுவதோடு.. அவ்வாறு செயற்படும் கட்சிகளுக்கு கட்சி உறுப்பினர்களுக்கு விசேட ஊக்குவிப்பு பரிசில்களை தேர்தலின் பின் சுயாதீன தேர்தல் ஆணையகம் வழங்கும்.

பின் இணைப்புக்கள்:

யாழ் கள களமாளுமன்றிற்கான.. பொது விதிகள்.. யாப்புக்கள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள இணைப்புகளில் உண்டு.

http://www.yarl.com/...ic=94465&st=200

http://www.yarl.com/...ic=94465&st=300

தேர்தல் அறிவிப்பு பற்றிய இணைப்பு:

http://www.yarl.com/...ic=94465&st=420

நன்றி:

தொடர்புகட்கு:

ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணைய உட்சந்து .

யாழ் களம்.

இணைய வெளி.

பூலோகம்.

சில கட்சிகள் பெயருக்கு தான் பதியப்பட்டுள்ளனா ஆனால் அவர்களுக்கே அப்படி ஒரு கட்சி ஆரம்பித்ததை மறுந்து விட்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.