nedukkalapoovan

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Recommended Posts

கூட்டிக்கழித்துப்பார்த்தால் அனைத்துக் கட்சிக்காரருக்கும் கடைசியில் ஏக்கம் மட்டுமே. ஆகவே போலிகளைக்கண்டு எமாறாதீர்கள் எமது கட்சியின் ஆரம்பகால அடியாட்களாக வாருங்கள் யாழ்கள அனலேறுகளே. இங்கு ஒன்று வைத்திருந்தால் இன்னுமொன்று இலவசம் எனும் (எதை வைத்திருந்தால் எது இலவசம் என்பதை நீங்களே முடிவுபண்ணுங்கள்) சின்னத்தனம்மான கொள்கைகள் எம்மிடத்தில் இல்லை. முயற்சி செய்யுங்கள் கிடைக்கவில்லையெனில் ஏங்கிச் சாகுங்கள், இதுவே எமது உரத்தவசனம்.

Share this post


Link to post
Share on other sites

ஏக்கத்தைப் போக்க வாட்டத்தை நீக்க முதல் சேரும் மூன்று உறுப்பினர்களுக்கு இந்த கார் அன்பளிப்பாக வழங்கப்படும்.

ferrarif4301big.jpg

இதைவிட இணையும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரண்டு பச்சைப் புள்ளிகள் காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

தப்பிலி,

லைசென்ஸ் இல்லாத ஆட்களும், பிள்ளைகள் உள்ள ஆட்களும் இந்தக் காரை வைத்து என்ன செய்வததாம்.....? :D:lol::icon_mrgreen::icon_idea:

Share this post


Link to post
Share on other sites

தப்பிலி,

லைசென்ஸ் இல்லாத ஆட்களும், பிள்ளைகள் உள்ள ஆட்களும் இந்தக் காரை வைத்து என்ன செய்வததாம்.....? :D:lol::icon_mrgreen::icon_idea:

லைசன்ஸ் இல்லாத ஆட்களுக்கு இலவச இணைப்பாக ட்ரைவரும் வழங்கவுள்ளோம். பிள்ளைகள் உள்ள ஆட்களுக்கு இதைவிட பெரிய சொகுசுக் கார் இலவசம். :lol:

Share this post


Link to post
Share on other sites

லைசன்ஸ் இல்லாத ஆட்களுக்கு இலவச இணைப்பாக ட்ரைவரும் வழங்கவுள்ளோம். பிள்ளைகள் உள்ள ஆட்களுக்கு இதைவிட பெரிய சொகுசுக் கார் இலவசம். :lol:

நீங்கள், கொடுக்கும் ட்றைவரால்.. குடும்பத்துக்குள் பிரச்சினை வருமே....

Share this post


Link to post
Share on other sites

தமிழர்களுக்கு ஏக பிரதிநிதித்துவம் பிடிக்கும் என்பதால் ஏகபிரதிநிதித்துவத்தின் பண்புகளைக் கொண்ட கட்சியினை ஆரம்பித்து இருந்தேன். இதனை மேலும் வலுவாக்க தொழில்சார் நிபுணர்களை உறுப்பினர்களாக்கி இருந்தேன். எனது கட்சியில் இணையாது பிற கட்சியில் சேர்ந்துள்ள அல்லது பிற கட்சியைத் தொடங்கியவர்கள் அனைவரும் தாங்களாகவே தொழில்சார் நிபுணர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுவதால், எதிர்காலத்தில் வலதுசாரிச் சிந்தனையுள்ள, மதங்களை நியாயப்படுத்தும் கருத்துக்களை மற்றவர்கள் கவனத்தில் எடுக்கக்கூடாது என்று இத்தால் அறிவிக்கின்றேன்.

ஏகபிரதிநிதித்துவம், வலதுசாரிச் சிந்தனை யாழ்களத்தை மேன்மைப்படுத்தி செம்மையான வழியில் கொண்டு செல்லும் என்று என்னைப் போன்று நம்புவர்கள் காலம் தாழ்த்தாது நமது "யாழ்கள உயர் குழாம்" கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்!

Share this post


Link to post
Share on other sites

எனது ஆதரவு யாழ்கள காதலர் கட்சிக்குத் தான்.........

நம்ம குரு ஜீவா ஒரு காதல் கிறுக்கன்...ஆன படியா நான் யாழ் கள காதலர் கச்சில இனைவதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடையிறேன்.........அத்தோடு நின்று விடாமல் காதலர் கச்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வேன் என்று நம்ம கச்சி மேல சத்தியம் செய்து கொள்ளுறேன்

நமது கட்சியை பதிவு செய்ய தோழோடு தோள் நின்ற நண்பேன் டா பையனையும்,சபேசன் அண்ணாவையும் கட்டி அணைத்து முத்தம் குடுத்து வரவேற்கிறோம். (லிப் டூ லிப் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.) :icon_mrgreen:

அத்தோடு பையனை ஊடகத்துறை பொறுப்பாளராகவும் நியமிக்கிறோம். :)

எமது கட்சியின் அஞ்சா நெஞ்சன் அண்ணன் வாதவூரன் அவர்கள் எமது கட்சி கொள்கைபரப்பு செயலாளர் ஆகிறார். :)

தலைவர் பதவிக்கு சபேசன் அண்ணாவை முன்மொழிகிறேன். :)

எனது ஆதரவு யாழ்கள காதலர் கட்சிக்குத் தான்.........

நம்ம குரு ஜீவா ஒரு காதல் கிறுக்கன்...

ஏன்டா மச்சி இந்த கொலைவெறி????? பச்சை புள்ளைடா நான். :lol::wub:

யுத் யுத்தோடு சேர வேண்டும் என்ற நோக்குடனும், எப்படி காதலிப்பது என்பதை அண்ணன் ஜீவாவிடம் இருந்து கற்பதற்காகவும், மிகவும் மகிழ்சியாக என்னை "யாழ்க காதலர் கட்சி"யில் இணைத்து கொள்கிறேன். காதல் கற்றலுக்கு பிறக்டிக்கல் ஒண்டும் கிடையாதோ?

அடபாவிங்களா .. என்ன என்ன ஒரு கொலைவெறி???? :rolleyes:

பிரக்டிக்கல் வேறையா??????? போறபோக்கை பார்த்தால் கட்சியை கலைச்சிடவேணும் போல இருக்கே???? :lol::icon_idea:

வாதவூரன் அண்ணா,சபேசன் அண்ணா; பையன் உங்கள் முகவரியை தனிமடலில்

அனுப்புங்கள் உங்களுக்குரிய CD வீடு வந்து சேரும். :)

டிஸ்கி:‍‍‍‍‍‍

(இரகசியம் 100% பேணப்படும்)

Share this post


Link to post
Share on other sites

தும்பளையான், எமது கட்சியான ப.மே.க.வின் கொள்கையே...

"சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்" என்பதே, ஆகவே பொய் வாக்குறுதி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

எம்மால் வழங்கபட உள்ள இலவச தொலைக்காட்சியும், CD Playerம் இரண்டு மொடலில் உள்ளது.

ப.மே.க. வில் இணைய விரும்புகின்றவர்கள் எந்த மொடல் வேணும் என்று குறிப்பிட்டால்.. மூன்று நாளில் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கையிருப்பு கொஞ்சம் இருப்பதால்.... உடனடியாக எமது கட்சியில் இணைந்து, இலவச தொலைக்காட்சியை பெற முந்துங்கள்.

4691680.jpg4351073.jpg

சிறி அண்ணா நீங்கள்,எதிர்க்கட்சிகள் படம் தான் போட்டுக்காட்டுவார்கள் நாங்கள்

உண்மையாகவே குடுப்போம். :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் படிக்காத மேதைகள் கழகத்தின் கண்மணிகளே... மன்னிக்கவேண்டும் தோழர்களே... இங்கு நாங்கள் கண்மணிகளாக அழைப்பதைத் தவிர்த்து தோழர்களாக அழைப்பதன் மூலம் எல்லோரும் சமநிலைத்தொண்டர்களாக இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகின்றேன்.

முதற்கண் எங்களுக்கென்று இதுவரை உருப்படியான கொள்கைகளை வகுக்காத போதும் நாங்களும் ஒரு கழகமாகலாம் என்பதை உணர்த்திய பேரன்புக்குரிய தமிழ் சிறீ, அண்டத்தை அளக்கும் நீலப்பறவை மற்றும் மருதங்கேணிப்பெருமகனார் ஆகியோருக்கு கரம் கூப்பிய வணக்கத்துடன் அல்ல கரங்கள் குலுக்கிய நட்புடன் நன்றியுரைக்கின்றேன்.

ப.மே.க

எங்கள் கொள்கைகள் என்ன? என்பதை

தோழர்களான "சித்திரநகைச்செம்மல்" தமிழ்சிறீ, "ஆழநோக்கான்" நீலப்பறவை, மற்றும் "கருத்துக்காட்டான் " மருதங்கேணி ஆகியோர் இங்கு வந்து பதிவிடுவார்கள்.

வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் தோழர்களே.... நாங்கள் படிக்காத மேதைகளை எல்லாம் இந்த களமாளுமன்றத்தின் வாயிலாக வெளிக்கொணர உள்ளோம் ஆகவே... கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பதற்கிணங்க நாங்கள் இந்தக்களமாளுமன்றில் செயலாற்ற உள்ளோம்... எங்கள் கழகத்தை மென்மேலும் பலப்படுத்த உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்.

lighbult%20people%20circle_thumb.jpg

நாங்கள்தான் இவர்கள்.. இவர்கள்தான் நாங்கள்

Share this post


Link to post
Share on other sites

மன்னர்கள் சபையில் இணைந்து கொண்ட எங்கள் மன்னர்களில் ஒருவரான இசைக்கலைஞன்

அவர்களை வருக வருக என் வரவேற்றுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றேன்.

அத்துடன் போருக்குச் சென்று அண்டை நாடுகளில் வெற்றிக் களிப்பில் மக்களுடன் தங்கி நிற்கும்

அத்தனை மன்னர்களையும் எங்களுடன் வந்து சேருமாறு வேண்டிக்கொள்கின்றேன்

றோயல் பரம்பரையின் தளபதிகளான டண்,கந்தப்பு மற்றும் எங்கள் கட்டப் பொம்மன் விசுகு

அவர்களையும் எங்களுக்குப் பலம் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன் .

இன்னும் பல மன்னர்கள் இணையும் வரை மன்னர்கள் சபைக்கான அனைத்து உரிமைகளையும்

இசைக்கலைஞன் அவர்களிடம் அளித்து தொடர்ந்து மன்னர்கள் சபைக்கு உழைக்குமாறு வேண்டுகின்றேன் :unsure:

Share this post


Link to post
Share on other sites

இன்னும் பல மன்னர்கள் இணையும் வரை மன்னர்கள் சபைக்கான அனைத்து உரிமைகளையும்

இசைக்கலைஞன் அவர்களிடம் அளித்து தொடர்ந்து மன்னர்கள் சபைக்கு உழைக்குமாறு வேண்டுகின்றேன் :unsure:

ஆகா.. வாத்தியார்.. நீங்கள் தலைமைப்பதவிக்குரிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறீர்கள்..! :lol:

இப்போது கட்சியின் முதல் அறிக்கை. :huh:

அறிக்கை 1:

கார்த்திகை 19, 2011

(உடனடி பிரசுரத்திற்காக)

எம் அன்புக்குரிய தமிழ்மக்களே..

யாழ் மன்னர்கள் சபையில் நீங்கள் ஏன் இணைய வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.

தன்மானமுள்ள கட்சி யாமச..! எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் உன்னதமான கொள்கையுடன் செயற்படுவது..! :rolleyes:

எங்களை நாங்களே தாழ்த்திக்கொள்ள மாட்டோம்..! :wub:

தன்மானமே தமிழன் பண்பு..! அதைப் போற்றி வளர்க்க அரும்பாடு படுவோம்..!

தன்மானமிக்க தமிழர்களெல்லாம் யாமசவில் இணையுங்கள்..! :wub:

அந்த வகையில் சிறப்பு அழைப்புக்களை இரு யாழ்கள உறவுகளுக்கு விடுக்கிறேன்..!

விசுகு அண்ணா மற்றும் தமிழினி..! :rolleyes:

எங்கிருந்தாலும் ஓடி வந்து எமது கட்சியில் பதிந்துகொள்ளுங்கள்..! :wub:

Share this post


Link to post
Share on other sites

"வாழ்க்கை வாழ்வதற்கே" என்ற உயரிய கொள்கைகளைக் கொண்ட கட்சியில் முதன் முதலாக இணைந்து கொண்ட உடையாரையும், இரண்டாவதாக இணைந்து கொண்ட தும்பளையானையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்

தன்னைப் போலவே எல்லாரும் வாழவேண்டும் என்ற உயரிய நோக்குடைய உடையாரை கட்சியின் நிதிப் பொறுப்பாளராகவும், வந்தவுடனேயே கொள்கையை விளக்கி தமிழ் சிறிக்கு சவாலாக கூவும் தும்பளையானை கொள்கை பரப்பு செயலாளராகவும் நியமிக்கின்றேன்.

வாழ்வை ரசிக்கும் இரு இளம் புலிக்குட்டிகள் எம் கட்சியில் இணைந்ததை பார்த்து தமிழ் சிறி பதைபதைத்து பக்கத்தில் இருந்த ஆச்சியின் காலை மிதித்து விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன...

அப்பாடா இனி என் காட்டில் காசு மழைதான், புது கல்லாப் பெட்டி வாங்க வேண்டியதுதான்

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.

வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.

வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்

வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.

வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.

வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.

வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்

வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்

வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.

வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.

வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.

http://tn2016.blogspot.com/2011/07/vaazkkai-vaalvatharke.html

Edited by உடையார்

Share this post


Link to post
Share on other sites

folder.jpg

வாழ்க்கை அனுபவித்த காதல் மன்னன் ஜெமினி, உங்கள் வாழ்கையை அர்த்தமாக்க எங்களுடன் இணைத்து கை கோருங்கள், உங்களுக்கு கொக்கோ கோ கோவில் செய்த பல அற்பு சுவீட் செய்முறைகள் அனுப்பி வைக்கப்படும்

Share this post


Link to post
Share on other sites

யாழ் காதலர் கச்சில‌ இனைய்ந்து பாருங்கள்

உங்களின் வாழ்க்கை சந்தோசமாய் இருக்கும்..........நீங்கள் கலியாணம் செய்து பள்ளையள் குட்டியளோட இருந்தாலும் நீங்கள காதலர் கச்சில இனைந்தா மீண்டும் உங்களுக்கு உங்கள் மனைவி புருஷன் மேல் மீண்டும் காதல் வரும்...அப்படியே நீங்கள் 65 வருசம் ஆளை ஆள் பிரியாமல் ஒற்றுமையாய் வாழுவிங்கள்....

வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போர் , நீங்கள் காதலர் கச்சில இனைந்து பாருங்கள் அடுத்த கனமே உங்களின் வாழ்க்கை சந்தோச‌ வாழ்க்கையாய் மாரிப் போய் விடும் , அப்படியே உங்களின் வாழ்க்கையில் நின்மதியான தூக்கம் வரும் , கவலை யோசனை என்ரது உங்கட வாழ்க்கேல இல்லாமல் போய் விடும் நீங்கள் இந்த கச்சில இனைந்தா........

Share this post


Link to post
Share on other sites

மனோகரி மந்திரம் உங்களுக்கு எங்களில் தகுதியானவர்களால் கற்ப்பிக்கப்படும்

அதற்கு நீங்க எங்கள் கட்சி உறுப்பினராகி மனோகரி மன்றத்திற்கு வரவும்

http://www.manoharimandram.com/index.php?option=com_k2&view=item&id=617&Itemid=16&lang=en

Share this post


Link to post
Share on other sites

நான் வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியில் இந்த நிமிடத்திலிருந்து இணைந்து கொள்கிறேன். இதோ எங்கள் கட்சியின் கொள்கைகள்.

http://www.youtube.com/watch?v=1fDKgXd-I6o

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

Share this post


Link to post
Share on other sites

பேசாமல் நீங்களும் எங்கள் கட்சிக்கே வந்து விடுங்கள் ரதி

Share this post


Link to post
Share on other sites

எமது உயிருக்கு இனிப்பான தம்ழ் உடன்பிறப்புக்களே.. :wub:

வாழ்க்கையை வாழவேண்டுமென்றால் பணம் முக்கியம்..! :rolleyes:

அத்தகைய பணத்தை பொற்காசுகள் வடிவில் வைத்திருப்பவர்கள் மன்னர்கள்..! :lol:

ஆகவே மன்னர்கள் கட்சியில் இணைந்து வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க விழையுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்..! :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

இப்படியான துணிவுள்ள பெண்கள் தான் மன்னர்கள் சபைக்கு வேண்டியவர்கள்.

ஏற்கனவே வாத்தியார் ஆரம்பித்த கட்சியில் கோ.ப.செயாக

இருந்தவர் இப்பொது நாட்டையே ஆளுகின்றார். :wub:

விரைந்து வந்து எங்கள் கட்சியில் உங்களுக்கான இடத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் ரதி

இசைக்கலைஞன் உங்கள் புயலான பிரச்சாரத்திற்கு என் வாழ்த்துகள் :lol:

Share this post


Link to post
Share on other sites

உறவுகளே, இவர்களின் பசப்பு வார்த்தைகளே நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்கள் பணத்தை நீங்களே அனுபவியுங்கள். எங்கள் கட்சியில் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.

வாழ்க வாழ்க்கை. வளர்க வளமுடன்.

Share this post


Link to post
Share on other sites

க‌

♥♥ த‌

♥♥♥ ல‌

♥♥♥♥ ர்

♥♥♥♥♥ க‌

♥♥♥♥♥♥ ட்

♥♥♥♥♥♥♥ ச்

♥♥♥♥♥♥♥♥ சி

உங்களை வருக வருக என்று வர வேற்கிறது

Share this post


Link to post
Share on other sites

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

Share this post


Link to post
Share on other sites

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

சிந்தனை கொள்கைகளா? அப்பிடி ஒண்டும் அங்கை இல்லை..! :lol:

நிலா அக்கா.. நாங்கள் (மன்னர் கட்சியினர்) மிகவும் மதிக்கிற ஒரு உறவு நீங்கள்..! யாழ்மன்னர்கள் சபை உங்களை இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறது..! :wub:

Share this post


Link to post
Share on other sites

நான் சேரல 1-7 வாசித்து தலைக்குள்ள ஏதோ செய்யுது அதல நான் பொது மகனாக இருந்து உங்கள் எல்லோரினதும் லொள்ளுகள பார்க்கபோகிறன்....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.